Thursday, September 15, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (15.9.2011)


பஞ்ச் : 1
 
காலம் கடந்த ஞானோதயம்தாங்க ஐயா உள்ளாட்சித் தேர்தல்ல காங்கிரசுக்கு கல்தா கொடுத்து இருக்கிறது. ஆனா ஏன் நாடளுமன்றத் தேர்தல்லையும், சட்டசபைத் தேர்தல்லயும் கூட்டணி வச்சோம்ன்றதுக்கு நீங்க சொல்லியிருக்குற காரணம் தென்னை மரத்துல எதுக்குடா ஏறுனன்னு கேட்டா புல்லு புடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு...! இதே நிலைப்பாட்டை வரப்போற பாராளுமன்றத் தேர்தல்லயும் எடுத்தீங்கன்னா பொழச்சீங்க இல்ல நீங்களே உங்களுக்கு குழிய வெட்டிகிட்ட மாறிதான்

திமுக அப்டீன்ற கட்சிகிட்ட தமிழ் நாட்டு சனங்க என்ன எதிர்பார்த்தாங்க? நாம என்ன என்ன தப்பு பண்ணி இருக்கோம்னு அலசி ஆராஞ்சு இனிமேயாச்சு அறிஞர் அண்ணாவால தொடங்கப்பட்ட திமுக வா சுய தன்மையோடு  நின்னு கடமை கண்ணியம் கட்டுப்பாட்ட காப்பத்துங்க!

கொசுறு: காங்கிரஸ்ங்க... தமிழ் நாட்ல நீங்க இனிமே சுபிட்சமா இருப்பீங்கங்க!

பஞ்ச் : 2


கலவரம் வரும்னு தெரிஞ்சேதான் கைது பண்ணினோம்னு அம்மா சொல்றாங்க! ஒத்துக்கிடுறோம். கைது பண்ணினதுக்கு அப்புறம் கலவரம் வராமலா போயிடுச்சு? அவசர அவசரமா அவரு போனாத்தான் கலவரம் வரும்னு கைது பண்ணி உள்ள தூக்கி வச்சதனால கலவரம் அதனால அத்து மீறல் அதனால சூட்டிங் ஆர்டர் அதனால 7 உசுறு போயிடுச்சு...

யாரோ ஒரு மாணவனை கொன்னுப்புட்டாங்க அப்டீன்னு அம்மா சட்டசபையில சொன்னாங்க? அது யாரும்மா கொன்னது? ஏன் கொன்னாங்க? கொன்னவங்கள கைது பண்ணியாச்சா? இப்டியெல்லாம் கேள்விக மனசுல வந்தாலும் ஸ்டாலின் ஐயா ஒரு 15 பேரோட சூடு பட்டு இறந்து போனவங்க குடும்பத்த பாத்து ஆறுதல் சொல்லப் போறான்ங்களாம்

இரண்டு சாதி, அந்த இரண்டு சாதிக்கும் பின் புலமா ரெண்டு பெரிய கட்சிங்க இப்படி ஒரு அரசியல்ல சுப்பிரமணியும், முருகானந்தமும் மாரிமுத்தும்  ஒண்ணு வெட்டு பட்டு சாவுறாங்க, இல்லை சூடு பட்டு சாவுறாங்க? சான் பாண்டியன் ஐயாவும், செயலலிதா அம்மாவும், இந்த ஆறுதல் சொல்லப் போறங்களே திமுக ஐயாங்க இவுங்க எல்லாம் ஏசி ரூமுலயும் ஏசி காருலயும் சுகமத்தான சுத்திகிட்டு இருக்காங்க..


ரோசிங்க மக்கள்ஸ்....! ரோசிங்க!!! 

பஞ்ச் : 3

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில பாகிஸ்தான ஜெயிச்சுட்டு வந்து இருக்கு இந்தியன் ஹாக்கி டீம். எங்க.. எங்க விளம்பர மீடியாக்கள்? எங்க கிரிக்கெட்டுக்கு கொடி பிடிக்கும் புண்ணியவான்கள்? எங்கே பிரதமர்? எங்கே சனாதிபதி?

என்னங்கய்யா நியாயம், ஒரு கிரிக்கெட் டீம்  ஜெயிச்சுட்டு வந்தா அது தேசத்தோட மானத்த காப்பத்துனது மாதிரி டாம் டூம்னு குதிக்கிற குண்டூசிங்க எல்லாம் இப்போ ஹாக்கில ஜெயிச்சவங்கள ஏன் சீராட்டல? ஜெயிச்சுட்டு வந்த ஆளுகளுக்கு தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகையா கொடுக்குறதா மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவிச்சு இருக்காரு.. என்ன கொடுமைங்க இது?

நம்மூரு தெருமுனையில் கபடி போட்டி நடத்துனாலே நல்ல நிறைய பரிசுகள் கொடுத்துகிட்டு இருக்கும் போது அரசாங்கம் இப்புடி நடந்துகிட்டா எப்படி மக்கள் விளையாட்டுல ஆர்வமா இருப்பாங்க? கிரிக்கெட்டு விளையாடினாத்தான் காசுன்னு தெரிஞ்சு போயி அவன் அவன் இப்ப கிரிக்கெட்டு மட்டையையும் பந்தையும், எடுத்துகிட்டு திரியுறாங்க.

ஒலிம்க்பிக்ல தங்கப் பதக்கம் ஏன் இந்தியா வாங்குறது இல்லன்னு இப்ப தெரியுதா? அரசாங்கம் அறிவோட இருந்தா மக்கள தெளிவா வழி நடத்தும்..! ஆனா....?

பஞ்ச் :4

இராமகோபாலன்னு ஒருத்தர் எப்பவுமே மக்களை மத ரீதியா பிரிக்கிற மாதிரியே அறிக்கைகள் விடுறதும், பேசுறதுமாவும் இருக்காரே இவர் மேல தேசிய பாதுகாப்புச்  சட்டம் இறையாண்மைக்கு எதிரா நடக்குறான்னு ஏன் பாயவே மாட்டேங்குது? 

அறிஞர் அண்ணா பிறந்த நாளில் கோவில்களில் சமபந்தி போஜனம் நடைபெறும்னு  அரசு அறிவித்திருப்பதை இவரு கண்டிக்கிறாராமா? ஏன்னா அண்ணா நாத்திகவாதியாமாம் அவரு பிறந்த நாள் அன்னிக்கு கோயில்ல எல்லாரையும் சமமா ஒக்கார வச்சு வயிறார சாப்பாடு போட்டு சந்தோசப்படுத்துனா இவரு குடி முழுகிப் போயிடுமாம்? கண்டிச்சு இருக்காரு ரொம்ப கோவமா?

நீங்க என்ன ஏக போக இந்து மதத்தோட பிரதிநிதியா? ஆ.. ஊன்னா குதிக்க மொதல்ல  எல்லோரையும் சமமா நேசிக்கணும், அப்புறம் அன்பா இருக்கணும்னு எல்லாம் நீங்க படிச்சதே இல்லையா? ஒரு வேளை நீங்க இந்து மதம்ன்ற சனாதான தருமத்துக்கு எதிரானவரோ?

பேசாமப் போயி சம பந்தி போஜனத்துல சாப்டுட்டு எல்லோரடையும் அன்பா இருந்து பாவத்த கழுவுங்க...!

பஞ்ச் :5

பாதுகாப்பு குறித்த மாநாட்ல பேசி இருக்க நம்ம பாதுகாப்பு அமைச்சர், டெல்லியில நடைபெற்ற் குண்டு வெடிப்புக்கு பின்னால பாகிஸ்தான் இருக்குன்னு துப்பு துலங்கி இருக்காரு. அட சிவகாசில குண்டு வெடிச்சாக் கூட இதத்தான் சொல்ல போறீங்க, இதுல என்ன பெரிய புலனாய்வு பண்ணி கிழிச்சுட்டீங்க?

நாட்டின் எல்லா பிரச்சினைகளையும் உள்துறை அமைச்சகம் மிக எளிதா பாகிஸ்தான் தலையில கட்டிட்டு உண்மையான பிரச்சினையின் வேர்களை மக்களிடம் மறைக்கின்றன அல்லது கண்டு பிடிக்கத் துப்பு இல்லை அப்டீன்றத நாம வெக்கத்தோட ஒத்துக்கிடணும்.

இப்போ சூழல் சகஜமா இருக்குனு காமெடி பண்ணி இருக்க ப.சி ஐயா கிட்ட ஒரே ஒரு பதில மட்டும் சொல்லிக்கிறோம்.. ஐயா சாமி அடுத்த குண்டு வெடிக்கிற வரைக்கும் சகசமாத்தான்யா இருக்கும்....ஒழுங்கா மருவாதையா அடுத்த குண்டு எங்கயும் வெடிக்காம பாத்துக்கோங்க!

கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

4 comments:

வைகை said...

என்னங்கய்யா நியாயம், ஒரு கிரிக்கெட் டீம் ஜெயிச்சுட்டு வந்தா அது தேசத்தோட மானத்த காப்பத்துனது மாதிரி டாம் டூம்னு குதிக்கிற குண்டூசிங்க எல்லாம் இப்போ ஹாக்கில ஜெயிச்சவங்கள ஏன் சீராட்டல? ஜெயிச்சுட்டு வந்த ஆளுகளுக்கு தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகையா கொடுக்குறதா மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவிச்சு இருக்காரு.. என்ன கொடுமைங்க இது?////

அரசாங்கத்த குறை சொல்ற அதே நேரத்துல... நாமளும் எந்த துரும்பையும் கிள்ளலையே? ஐ மீன்.. நம்மை போன்ற பதிவர்கள் கூட? கிரிக்கெட்ல ஜெயித்தபோது என்னவோ நாமலே ஜெயிச்ச மாதிரி கொண்டாடினோம்? இப்ப பாருங்க அரசாங்கத்த குறை சொல்லும்போதுதான் நீங்களே ஹாக்கில வின் பண்ணினதா சொல்றீங்க.. இதுக்கு முன்னாடி போட்ட பதிவுகள்ள ஒரு பாராட்டாவது கொடுத்துருக்கலாம்ல? இது உங்களை குறை சொல்ல சொல்லவில்லை.. நம்மளோட மைன்ட் செட் அப்பிடி ஆயிருச்சு.. அதிக பேர் கொண்டாடினாத்தான் நாமலே அதை கண்டுக்கிறோம்.. இப்போ வரை ஹாக்கி அணியின் கேப்டன் யாரு கோச் யாருன்னு யாருக்கு தெரியும்? அரசாங்கம் மட்டும் இல்லை.. நாமளுமே வெட்க்கப்படத்தான் வேண்டும் :((

இப்பவாது சொல்றேன்.. இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் :))

Unknown said...

ரோசிங்க மக்கள்ஸ்....! ரோசிங்க!!!

இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்!

நாய் நக்ஸ் said...

Good post !!!!

வெளங்காதவன்™ said...

தேவா அண்ணாச்சி...

அருமை.....

#யோசிக்க வைக்காதீங்க அப்பு.... அப்புறம் அரசியல் பண்ண முடியாது.....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes