Thursday, September 22, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (22.9.2011)

 
 
 
 
பஞ்ச் : 1
 
சிதம்பரம் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுத்திருக்கலாம் என்று தற்போதைய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார். ஏலம் விட்டு அதிக விலைக்கு கேட்பவர்க்ளுக்கு டென்டரைக் கொடுக்காமல் பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் என்ற முறையில் 2001 ஆண்டு விலைக்கே ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்க ராஜாவுக்கு ஒப்புதல் கொடுத்தது அப்போதைய நிதியமைச்சர் திருவாளர் ப.சிதம்பரம் என்று தற்போதைய நிதியமைச்சகம் கூறியிருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ப.சி?



மக்களை மடையர்களாக்கும் இது போன்ற புரட்டு அரசியல்வாதிகளை துடைத்தெறிய ஏதும்  சட்டம் இல்லையா இந்த தேசத்தில்? தன் சொந்தப் பாக்கெட்டில் இருந்து ஐந்து காசு எடுத்துக் கொடுக்காத சிதம்பரம் போன்றோர், தத்தமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் வீரியத்தை மறந்து விட்டு இப்படி கேலிக்கூத்து ஆடுவதும் அதை பிரதமர் பார்த்துக் கொண்டு இருப்பதும் ஏற்க முடியாத விடயம்.



மத்திய அமைச்சர் பதவி மட்டுமின்றி, நேர்மையில்லாமல் ஜெயித்த தனது எம்பி பதவியையும் விட்டு விலகி தன்னை சரியானாவர் என்று நிரூபித்து விட்டு பின் தேர்தலில் நிற்கட்டும்...? 



தழிழன் என்று சொல்லடா....! தலை...????????


பஞ்ச் : 2

வழக்கம் போல மாண்பு மிகு அம்மா அவர்கள் தன்னின் சுய முகத்தை காட்டி நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன் என்று காட்டியிருப்பது அவரோடு கூட்டணி வைத்தவர்களுக்கு மட்டும் பகீர் என்று இல்லை, தமிழக மக்களும்தான்...! ஏனென்றால் நீங்கள் வீட்டில் நல்லவரயும் அலுவலகத்தில் கெட்டவராய் இருக்கமுடியாது, குணம் என்பது ஒன்றுதான்... அது எப்போதும் ஒரே மாதிரிதன இருக்கும்.

சட்டசபை தேர்தலில் வக்கனையாக கை கோர்த்து ஜெயித்து விட்டு, சி.எம். சீட்டில் உட்கார்ந்து விட்டு, கூட்டணி கட்சிகளை துச்சமாக மதித்து விட்டு எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது உச்ச பட்ச கேவல அரசியல்.

ஒருக்கால் கூட்டணி வைக்கப்போவது இல்லை என்று நினைத்திருந்தால், முறைப்படி கூட்டணி கிடையாது என்று அறிவித்து விட்டு பின் தனது நிலையை அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அதிமுக தலைமையின் முடிவு அதிரடியானது என்று  கூறுவதை விட எதேச்சதிகரமான அசிங்கமானது என்றுதான் சொல்லவேண்டும்.

மக்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் கூற வேண்டும்....

" ஏய் உசாரய்யா உசாரு.... ஓரஞ்சார உசாரு....ஏய் உசாரய்யா உசாரு..." 

பஞ்ச் : 3

குஜாரத்தின் காவலர் திருவாளர் மோடிக்கு உண்ணாவிரத மேடையில் ஒரு இஸ்லாமிய இமாம் தொப்பி ஒன்றை கொடுத்தார் ஆனால் திருவாளர் மோடி அதை அணியவில்லை. அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கு சிவசேனா மோடி சாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து இருக்கிறார்.

தொப்பியை போட்டிருந்தா என்னவாயிருக்கும்? மோடியின் குடியே கெட்டுப் போயிருக்கும் அல்லவா? அதனால்தான் பாராட்டு...! மேலும் ஒரு பேச்சுக்கு கூட நாங்கள் மதத்தை எல்லாம் மதிப்பவர்கள் இல்லை.. எல்லா  மதமும் ஒன்றே என்று நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்...ஏனென்றால் மோடி மற்றும், சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் பிறக்க்கும் போதே முதுகில் பெரிதாய் பச்சைக் குத்தப்பட்டிருக்கிறது இவர்கள்  இந்து என்று....

ஒரு மாநிலத்தின் முதல்வர், மதச்சார்பற்ற ஸ்டேட் என்று வர்ணிக்கும் ஒரு தலைவர் ஒரு குல்லாவைக் கூட வாங்கிக் கொள்ள முடியாத இந்து மத நேசர், இவரைப் பாரட்ட சிவசேனான்னு ஒரு கட்சி....

என்னிகுத்தான் இந்த சாதி மதம் அரசியல்ல விட்டு தேசம் வெளிய வருமோ? அன்னிகுத்தான் எல்லா கருமாதியும் ஒழியும்...!

பஞ்ச் : 4

இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் இதுதான் பிரச்சினைன்னு கிடையாது....! எல்லா பிரச்சினையையும் எம் மக்கள் எளிதில் மறந்து விடுவார்கள் ஆனால் என்ன ஒன்று அடுத்த பிரச்சினை ஒன்று கிளம்பி வெடிக்க வேண்டும்...அவ்வள்வுதான்...

அன்னா ஹசரேயின் உண்ணா விரதத்துக்குப்  பிறகு தூக்கு தண்டனையை நிறுத்தச் சொல்லி எல்லோரும் போராடி அணி திரண்டு ஒரே பேச்சாயிருந்தது... 8 வாரம் கோர்ட் தூக்கினை நிறுத்தியவுடன், மறுபடியும் கொஞ்ச நாள் இருக்கவே இருக்கார் நம்ம ராசாவும் ஸ்பெக்ட்ரமும், அதன் பிறகு அம்மாவின் அதிரடி கைதுகள் பிரச்சினையா இருந்துச்சு.., ரீசண்டா கூடங்குளம் பிரச்சினை பற்றி பொங்கி எழுந்தோம்..., உள்ளாட்சி தேர்த்தல் வேட்பாளர் பட்டியல் எல்லாம் ஒண்ணும் சுவாரஸ்யமா இல்லாததால...

எல்லா பத்திரிக்கைகளும் நடிகை சோனாவின் மானப்பிரச்சினையை பூதகரமாக்கி டிவி ரேடியோ நியூஸ் பேப்பர்னு கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். ஏனென்றால் தமிழ் நாட்டின் தலையாய பிரச்சினை தானே இது....! அவருக்கு நீதி வேண்டும் என்று கேட்டு ஒரு பத்து பேர் உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... என்ன கொடுமை சார்.. இது...? இது எல்லாம் ஒரு நியூஸ்னு ப்ளாஸ் பண்ற மீடியாக்களுக்கு, மீடியாவா இருக்குற அங்கீகரத்தையே ரத்து செய்தால்தான் சரியாயிருக்கும்...?

பி.எஸ். வீரப்பா ஒரு படத்தில் கூறிய டயலாக்தான் நினைவுக்கு வருகிறது...

" இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் " 

பஞ்ச் : 5

தேர்தல் தோல்வி, ஸ்பெக்ட்ரமில் திமுகவினரை சிக்க வைக்க செய்யப்பட்ட சூழ்ச்சி, என்று எல்லாவற்றையும் கவனித்து தன் அரசியல் காய் நகர்த்தலை திமுக அட்டகாசமாய் துவக்கி இருக்கிறது. காங்கிரசுக்கு கல்தா கொடுத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்டாலினை முன் வைத்து எல்லா செயல்களையும் செய்யத் தொடங்கி இருப்பது பாராட்டுதற்குரியது.

திமுகவிற்கு உதவும் வகையில் அதிமுக தலைமை தனது தான் தோன்றித்தனமான கான்வெண்ட் கேர்ள் மனோபாவ முடிவுகளை எடுப்பதும், அம்மாவைத் தவிர வேறு சரியான ஸ்ட்ராங்க் பர்சனாலிட்டி அதிமுகவில் இல்லாதிருப்பதும் திமுகவிற்கு எப்போதுமே பலம்தான் என்றாலும், விஜயகாந்தை அம்மாவை விட்டு பிரிக்க பிரத்தியோகமா தாங்கள் ஏதேனும் அரசியல் செய்யும் முன்பே அம்மாவே கூட்டணி கட்சிகளுக்கு பாம் வைத்திருப்பது திமுக பக்கத்தில் ஒரு உற்சாக்த்தை அள்ளித்  தெறித்திருக்கிறது.

அடுத்த அடுத்த நகர்வுகளில் தானைத் தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பாரென்றும், காங்கிரஸோடு இனி கூட்டே வேண்டாம் என்று ஸ்டாலின் பிடிவாதமாக சொல்லிவிட்டதாகவும் கட்சிக்குள் இருந்து கசியும் செய்திகள் வலுவாக தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் தலைமையில் திமுக தனது அடுத்த இன்னிங்ஸை ஆட தயாராகிவிட்டது.... எது எப்படி இருந்தால் என்ன......தமிழகத்துக்கு நல்ல தலைவர்களும் வழிக்காட்டுதலும் கிடைத்தால் சரிதான்...!



கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 
 

7 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

'பரிவை' சே.குமார் said...

பஞ்ச் ரொம்ப அருமை

IlayaDhasan said...


சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

IlayaDhasan said...

சுவையான பஞ்சமிர்தம்

இம்சைஅரசன் பாபு.. said...

//ஸ்டாலின் தலைமையில் திமுக தனது அடுத்த இன்னிங்ஸை ஆட தயாராகிவிட்டது.... எது எப்படி இருந்தால் என்ன......தமிழகத்துக்கு நல்ல தலைவர்களும் வழிக்காட்டுதலும் கிடைத்தால் சரிதான்...!//

ஹி ..ஹி ..அப்போ நான் அழகிரி ஆள் நான் தி மு க வுக்கு வோட்டு போட கூடாதா பாஸ் ..

ஆமா ஸ்டாலின் யார் பாஸ் ...?

ஏன் பாஸ் இப்படி அடிகடி காமெடி யாக எழுதுறீங்க ..

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

// அம்மாவைத் தவிர வேறு சரியான ஸ்ட்ராங்க் பர்சனாலிட்டி அதிமுகவில் இல்லாதிருப்பதும் திமுகவிற்கு எப்போதுமே பலம்தான் என்றாலும்,//

ஆமா பாஸ் செம பலம் ..
ஆ .ராசா (கொள்கை பரப்பு செயலாளர் )-திகார் ஜெயிலில் தி மு கவின் கொள்கைகளை பரப்புகிறார் ..

கனிமொழி (கவிதாயினி )- திகாரில் களி தின்னு கவிதை எழுதுகிறார்

அழகரி -ஹார்லிக்ஸ் பாட்டில் திருடன் பாராளுமன்றத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் ..
இப்படி பல தலிவர்கள் ..இருக்கிறார்கள் ஜெயிலில் ..

உங்கள மாதிரி ஆட்கள் சொம்பு தூக்கி ஆமா போட்டு ..இப்படி அரை வேக்காடாக எழுதி எழுதி ஒரு கட்சிய சோலி முடிச்சிடீன்களே ...சாமிகளா ?

எந்த மூஞ்சிய வச்சு ஒட்டு கேப்பாங்க .செருப்பால அடிக்க மாட்டாங்க ..

போன உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்துச்சு ?அதுக்கு திரும்ப கொடுக்க வேண்டாமா ?கொடுப்பாங்க அப்பவும் இதே மாதிரி தி மு க சப்போர்ட் ஆக பதிவு எழுதாதீங்க ..

அப்படியே எழுதினாலும் ..போன வாட் டி நடந்ததை சீர் தூக்கி பார்த்து பதிவு எழுதவும் ..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes