Thursday, September 08, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (8.9.2011)



 
பஞ்ச் : 1

இந்தியா மிகப்பெரிய நாடுதான். இவ்வளவு மக்கள் தொகை இருக்குற நாட்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்டி இப்டி தான் இருக்கும்னு எத்தனை நாளுக்குத்தான் சப்பைக் கட்டு கட்டிக்கிட்டு இருப்பாங்களோ. குண்டு வைக்கிற தீவிரவாதி நீடாமங்கலம், மன்னார்குடி, அரியலூர், காரைக்குடி மாதிரி ஊர்கள்ளயா வைக்கிறான்? அவன் எப்பவுமே, டெல்லி, அகமதாபாத், மும்பை, இப்படி மக்கள் புழக்கம் அதிகமா இருக்குற சிட்டிலதான வைக்கிறான்.

குறைந்த பட்சம் இந்த மாதிரி முக்கிய நகரங்கள்லயாச்சும் பாதுகாப்புகள் ரொம்ப சென்ஸிட்டிவா இருக்கக் கூடாதா? தீவிரவாதிக்கு பெரும்பாலும் தென்னிந்தியா டார்கெட் கிடையாதுன்றது எல்லாருக்கும் தெரிஞ்சாலும், தென்னிந்திய முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்புகள் எப்பவுமே அலர்ட்டா வைக்கலாம். சாதாரண மனுசங்களுக்கே தோணுற விசயம் இது. ஆனா இதெல்லாம் திருவாளர் ப.சிக்கும், பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் ஏன் தோணலன்னுதான் புரியலை.

கவனிச்சுப் பாத்தீங்கன்னா,  எப்ப வெடிக்கணும்னாலும் மேலே நான் சொன்ன ஊர்கள்ல எல்லாம், தப்பாம தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிற மாதிரி ஆளுங்க வந்து வெடிச்சுட்டுப் போனா என்ன அர்த்தம்? உயர்நீதி மன்றம், பாராளுமன்றம் எல்லாம் பாதுகாப்பு எப்பவுமே அலர்ட்டா இருக்க வேண்டிய இடம் இல்லையா? அதுவும் நாட்டோட தலை நகர்ல? 

பஞ்ச் : 2

அரசு கேபிள் டி.வின்னு ஒண்ண,  தேர்தல் அறிக்கையில அறிவிக்கும்போதே தெரியும் அது சன் குழுமத்தையும், கலைஞர் குடும்ப தொலைகாட்சியையும் ஒழிச்சுக்கட்ட அம்மா எடுக்குற ஒரு ஆயுதம்னு. இப்ப அரசு கேபிள் கொடுக்குறேன் பேர்வழின்னு ஏதேதோ சானல்கள் கொடுத்து, காலமெல்லாம் பாத்து பாத்து தேஞ்சு போன சன் டிவி டிராமா எதுவும் வராம போனதால நிறைய சனங்க நேராவே  சன் டைரக்ட் வாங்கிகிட்டு இருக்காங்களாம்.

அரசு கேபிள் மூலமா சன் டைரக்ட்டுக்கு கூடுதல் வருமானம் கிடைச்சிருக்கதும் கிடைக்கப்போறதும் கண்டிப்பா யாராலயும் தவிர்க்க முடியாது. கூடுதல் விஜய் டிவி போன்ற மிகைப்பட்ட பேரு ரசிக்க கூடிய சானல்களும் வரலேன்னா மக்கள் எப்படி அரசு கேபிளால் ஈர்க்கப்படுவாங்க?

இன்னும் சொல்லப்போன, அரசு கேபிள் என்பது மக்களின் அத்தியாவசிய தேவையே இல்லை. எம்புட்டு கோடிமா செலவாச்சு இதுக்கு? 

பஞ்ச் : 3

திருத்தணில முருகன் கோவில் இருப்பதும், மேட்டூர்ல டேம் இருப்பதும் யாருக்குத் தெரியாது? இதையெல்லாம் சட்டசபையில பேசும் போது சொல்லி, பால பாடமா நடத்துறீங்க....நேனே.......சந்திரமுகின்ற டைப்ல அம்மா தேமுதிக எம்.எல்.ஏக்கள் கிட்ட சீறி இருக்காங்க..இல்லை இல்லை காமெடி பண்ணி இருக்காங்க.

ஏங்கம்மா ஒரு குறிப்புக்காக, சொல்றதுக்காக எடுத்துச் சொல்லி இருப்பாங்க அதுக்காக. பாலபாடம் நடத்த வேண்டாம்னு சொல்றீங்களே? சட்டசபைக்கு அனுபவமும் விபரங்களும் அதிகம் தெரியாம ஒரு புதிய கட்சியின் மூலம் நாற்காலில உட்கார்ந்து இருக்கவங்களுக்கு நல்லா சப்போர்ட் பண்றீங்க மேடம். இதுல கூட்டணி கட்சி வேற...

விஜயகாந்த் சார் ஏன் ஒரு வருசம் எல்லாம் வெயிட் பண்ணனும்...கருத்து சொல்ல, சீக்கிரமே அம்மாவே, உங்களைக் கருத்து சொல்ல வச்சிடுவாங்க...காத்திருங்க!

பஞ்ச் :4

இலங்கைக்கு இந்தியா உதவி செஞ்சாத்தான் சீனாவ கண்ட்ரோல் பண்ண முடியும்னு மாண்புமிகு ஐயா பிரதமர் சொல்லி இருந்தாங்க....! செவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டாண்டா அப்டீன்ற மாதிரி, ஒரு முரட்டு பைத்தியக்காரத்தனமான லாஜிக் பொய்யின்னு இப்ப நிருபணம் ஆகுற மாதிரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில இலங்கைக்கு எதிரா கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு எதிர்த்து  நாங்கள் வாக்களிப்போம். இலங்கை அரசுக்கு சப்போர்ட் பண்ணுவோம் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ சொல்லியிருக்காங்க... ஏன்னா இலங்கையோட இறையாண்மைய மதிக்கிறாங்களாமாம்...! கண்ணு சின்னதா இருக்குன்னா பாக்குற காட்சி கூடவா சரியா தெரியாது... கொடுமைக்காலம்...

மறுபடிக்கும் சீனாவே ஆதரிக்குது, நாம ஆதரிக்கலேன்னா நம்ம தலையில இடி விழுந்துடும்னு வல்லரசு (கனவுல இருக்குற) இந்தியாவும் இலங்கைய ஆதரிக்கத்தான் போகுது...

உண்மை என்னிக்கு சுகமா ஜெயிச்சு இருக்கு?

பஞ்ச் :5

நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைத்து மக்களிடம் பீதியை உண்டு பண்ணுவதே தீவிரவாதிகளின் நோக்கம்னு மாண்பு மிகு ப.சி ஐயா அரிய பல தகவல்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் ரொம்ப பொறுப்பா சொல்லிட்டு இருக்கறத நினைக்கும் போது எவ்வளவு வேதனையா இருக்கு...

தீவிரவாதியோட நோக்கம் என்னனு இவுங்க சொல்லித்தான் எல்லோருக்கும் தெரியணுமா என்ன? எவ்வளவு மேன்மையான அறிவிப்பு...! வேணும்னா தீவிரவாதிங்க கிட்ட போயி தீவிரவாதி சார் நீங்க அந்த வேலைய செய்ய வேண்டாம்... எங்க நாட்ல இருக்குற அரசியல்வாதிகளே நாட்டின் ஸ்திரத்தன்மைய குலைச்சு மக்களை அச்சமூட்டிக்கிட்டுதான் இருக்காங்க நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்கன்னு  பொதுமக்கள் சார்பா கோரிக்கை வேணா வச்சு பார்க்கலாம்.

குண்டு வைக்கிறதுக்கு முன்னாடி புடிங்கய்யான்னா...? எல்லாம் முடிஞ்சவுடனே அறிக்கை விடுறாகலாம் அறிக்கை...




கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

2 comments:

கழுகு said...

மறுமொழி பரிசோதனை.......

அம்பலத்தார் said...

பக்கா பஞ்சா கொடுத்திருக்கிறீர்கள்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes