Thursday, August 04, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (4.8.2011)



 
பஞ்ச் 1


அடிச்சு புடிச்சு அம்மா பட்ஜெட்வெளியிட்டு இருக்குன்னா அதுக்கு முன்னாலயே திமுக  எம்.எல்.ஏக்கள் எல்லாம் வெளிநடப்பு செஞ்சு போய்ட்டாங்க. அவுங்க அரசுல செஞ்ச நல்ல திட்டத்தை எல்லாம் அம்மா அபேஸ் செஞ்சுடுச்சுனு கடுப்பு இவுங்களுக்கு...

எது எப்படி இருந்தாலும் நாட்ல  வெளிவிடுற எல்லா பட்ஜெட் டீட்டெய்லும் சாமானிய மக்களுக்கு விவரமா எந்த காலத்துல தெரிஞ்சு இருக்கு? ஒரு பிட்நோட்டிஸ் மாதிரி அடிச்சு தெருக்கு தெரு ஒட்டினா நம்ம சனத்துக்கு எல்லா வெவரமும் தெரிய வாய்ப்பு இருக்கு ....ஆனா அப்படி எல்லாம் நடந்துருமா என்ன?

பஞ்ச் 2

போலீஸ்காரவங்களுக்கு 51 கோடிக்கு நிதி ஒதுக்கி இருக்காங்கன்றது நல்ல சேதிதான் ஆனா அதை சரியா கொண்டு சேப்பீகளா சாமிகளானு ஒரு கேள்வி நம்மள அறியாம வர்றத தடுக்கவும் முடியல...

நிதிய ஒதுக்கறதோட சேத்து போலிஸ் டேசனுக்கு கம்ளெய்ன்ட் கொடுக்கப் போற ஆளுகளயும் மருவாதயா நடத்த சொல்லுங்கம்மா..அப்டியே எந்த கட்சிக்காரனும் சப்போர்ட்டுனு வந்த அடிச்சு தொவச்சு உள்ள பிடிச்சு வக்க சொல்லுங்கம்மா புண்ணியமா போகும்.


பஞ்ச் 3:

சாமியார் நித்தியானந்தா ஜீவன் முக்தி தர்றேன்னு ஏமாத்திட்டு இருக்காருன்னு  இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் சார் ஒருத்தர் சொல்லி இருக்கார். ஆக்சுவலா ஜீவன் முக்தி பத்தி சாமியாருக்கு ஒண்ணியும் தெரியாதாம். அதனால கொடுக்க முடியாதாம் தெரிஞ்சு இருந்தா கொடுக்கலாம் அப்டீன்ற ரேஞ்சுக்கு இவர் ஒரு பிட் போட்டு இருக்கார்.

ஏன் சார்...? வெங்காயம், பேரிச்சம் பழம் மாதிரியா சார் ஜீவன் முக்தின்றது? யாரு வேணா டக்குனு எடுத்து யாருக்கு வேணா கொடுக்கறது....? சாமியார் மேட்டர் அம்பலமாயிடுச்சு... நீங்க இது பத்தி தெரிஞ்ச மாதிரி ஸ்டேண்ட்மென்ட் கொடுத்து மக்களை வேற எங்கயும் டைரக்ட் பண்ணிடாதீங்க... சாமி...!

கொசுறு:ஆகஸ்ட் 15 கச்சத்தீவுல தேசியக் கொடி ஏத்தப்போறீங்களாமே நெசமா?

பஞ்ச் 4:


சொந்த நாட்டவுட்டு சூழ்நிலை காரணமா நம்ம ஊர்ல தஞ்சம் அடைஞ்சிருக்கிற நம்ம  ஈழ உறவுகளுக்கு மாசாம் மாசம் ரூபாய் 1000 ஓய்வூதிய பணமா தரேன்னு அம்மா சொல்லியிருக்கிறது சூப்பர் மேட்டர்தான். அட அட நாம இதச் செய்யலையேன்னு ஐயா கலிஞர் கூட ரோசிச்சு உடனே இந்த திட்டத்தை ஆதரிச்சு அறிக்கையும் விட்டு இருக்காப்ல....

கொலைகாரப் பயலுகளோட காட்டு மிராண்டித்தனத்தால நாட்டை விட்டு ஓடியாந்து யாராச்சும் ஆதரிக்கமாட்டங்களானு பாத்துட்டு இருந்த ஈழ மக்களுக்கு கண்டிப்பா மன சந்தோசத்தை கொடுக்குற ஒரு திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு தைரியமா ஒரு ஜே.......போடுறதுல தப்பே இல்லங்க..!


பஞ்ச் 5:

நியூஸ்க்கு பஞ்சமா போற காலங்கள் எல்லாம் நியூஸே இல்லையேன்னு கவலை ஏற்படுவது ஒரு எதிர்மறையான மனோநிலைங்க...! இயன்றவரைக்கும் குற்றங்களும், வன்முறைகளும் தெளிவின்மைகளும் இல்லாத ஒரு சமுதாயத்துல எதையும் பகிரவேண்டிய அவசியமே இல்லைங்க...!

பரபரப்பு அரசியலையும், கொலை கொள்ளைகளையும், அத்துமீறல்களையும் எப்போதும் படம்பிடித்துக் காட்டணும் அப்டீன்ற மனோநிலைய விட்டு மீடியாக்களும், இதைப்பத்தி பேசியே சுவாரஸ்யப்பட்டு போற மனோநிலைய விட்டு மக்களும் வெளில வரணும். என்னிக்கு எந்த விசயத்தையும் பத்தி பேசவும், குற்றம் குறைகளை சொல்லாமால் செல்லும் நிலை வருகிறதோ...அன்னிக்கு கழுகு .....வெற்று வானத்தில் சந்தோசமாய் சிறகடிக்கும்......! பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்றத விட பிரச்சினையே இல்லாம இருக்குற தேசமா நாம மாறணும்...! மாற்றுவோம்..


கழுகிற்காக
 தேவா 



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

6 comments:

நிகழ்காலத்தில்... said...

பட்டைய கிளப்புற பஞ்ச்ஸ்...

நல்லா இருக்கு

ரேவா said...

எல்லா பட்ஜட் டீட்டெய்லும் சாமானிய மக்களுக்கு விவரமா எந்த காலத்துல தெரிஞ்சு இருக்கு?ஒரு பிட்நோட்டிஸ் மாதிரி அடிச்சு தெருக்கு தெரு ஒட்டினா நம்ம சனத்துக்கு எல்லா வெவரமும் தெரிய வாய்ப்பு இருக்கு ....

சாமானிய மக்கள் புரிஞ்சிக்கிற கூடாதுன்னு தான் பட்ஜெட்டே புரியாத மாதிரி போடுறாங்க...பிட் நோட்டீஸ் எல்லாம் தேர்தல் போது மக்களை ஏமாத்த கொடுப்பாங்க...ஆனா பட்ஜெட் பிட் நோட்டீஸ் அரசியல்ல இதெல்லாம்?! சதா"ரணம் "...


ஆனா அப்படி எல்லாம் நடந்துருமா என்ன?

நடந்த நல்லத்தான் இருக்கும்...ஆனா நடக்காதே

ரேவா said...

பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்றத விட பிரச்சினையே இல்லாம இருக்குற தேசமா நாம மாறணும்...! மாற்றுவோம்..


மாற்றம் முதலில் நம்மில் இருந்து வந்தால் ஆரோகியமான மாற்றமாய் இருக்கும் என்பதை அழகாய் சொல்லும் கடைசி பத்திஅருமை...வாழ்த்துக்கள் அண்ணா

Anonymous said...

பட்ஜெட் பற்றியும் அரசின் நலத் திட்டங்கள் பற்றியும்...கடை நிலையில் இருக்கின்ற ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும் கூட தெரியும் வகையில் இருந்தால் தானே.. ஓ.. இந்த அரசு நமக்காக இந்த மாதிரியான திட்டங்கள் எல்லாம் வைத்துள்ளதா எனவும் கிடைக்கவில்லை என்றால் குரல் எழுப்பவும் முடியும்.

அதான் டீவில அனைக்கு ஒரு நாள் மட்டும் சொல்றாங்களே அப்டினு சப்பைக்கட்டெல்லாம் கட்ட முடியாது.. எப்படி சில குறிப்பிட்ட விளம்பரங்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பதிய என்ன முனைப்புடன் செயல்படுகிறார்களோ அதே உத்திகளைக் கையாண்டால் எல்லாம் சாத்தியமே...

By
மகேஷ்வரி

Anonymous said...

நிதிய ஒதுக்கறதோட சேத்து போலிஸ் டேசனுக்கு கம்ளெய்ன்ட் கொடுக்கப் போற ஆளுகளயும் மருவாதயா நடத்த சொல்லுங்கம்மா..அப்டியே எந்த கட்சிக்காரனும் சப்போர்ட்டுனு வந்த அடிச்சு தொவச்சு உள்ள பிடிச்சு வக்க சொல்லுங்கம்மா புண்ணியமா போகும்/

இதெல்லாம் நடக்குமா? அம்மா நெனச்சா நடக்கும்... நடந்தா புண்ணியமா போகும்...

அப்டினாதான் போலிஸ் ஸ்டேசன் என்றாலே வருகிற அருவெருப்பு உணர்வு போகும்..

ஷர்புதீன் said...

:-)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes