Thursday, August 11, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (11.8.2011)


பஞ்ச் 1:

கோர்ட்டு சமச்சீருக்கு உத்தரவு கொடுத்தது எல்லாம் அப்பாலிக்கா நவுத்தி வை நைனா? இப்ப இன்னாத்துக்குக் தம் புடிச்சிகினு மொதலமைச்சர் அம்மா, மேல் கோர்ட் கீழ் கோர்ட்டுன்னு ஏறி எறங்கி உருண்டு உருண்டு சமச்சீரு வாண்டாம்னு சொல்லிச்சி...! நானும்ரோசிச்சு ரோசிச்சு பாக்குறேன் நைனா ஒண்ணியும் நம்ம மண்டைக்குள்ள ஏறவே மாட்டேங்குது...!

சீட்ல குந்தின உடனே சமச்சீரு கூட மல்லுக்கட்ட ஆரம்பிச்ச மகராசி புத்தில கலிஞர போட்டுத் தள்றத மட்டும்தான் ரோசிக்கும் போல...! தமிழ் நாட்ல தீக்க வேண்டிய பெரச்சினைகள் டன் டன்னா..இருக்கு, அதுக்கு ஏதாச்சும் செய்யமுடியுமான்னு இனிமேயாச்சும் ரோசிங்கமா.....5 வருசம் கப்புனு ஓடிடும்... ஒண்ணியும் செய்யாம இப்டியே ஒளிஞ்சு புடிச்சு வெளையாடினா மறுபடியும் வனவாசம் கன்பார்ம் தாயி!
பஞ்ச் 2:

தங்கம் விக்கிற வெலயுல பத்மநாப சாமி கோவில்ல இருந்த 5 ரூமையும் ஓப்பன் பண்ணி லட்சக்கணக்குல தங்க நகை எல்லாம் எடுத்தது ஆச்சர்யம் அதிசயம் எப்டீ வேண்ணா வெச்சுக்கோங்க...! இப்ப இன்னா மேட்டர்னா 6 வது இருக்க ஒரு ரூமை ஓப்பன் பண்ண முடியலைன்னு உச்ச நீதிமன்ற அனிப்பிச்ச டீம் சொல்லி இருந்துச்சு...(என்ன கொடும சார்... ஒரு பூட்டுத் தொறக்கத் தெரியாத அரசாங்கம்....நம்ம கபாலிய கூப்டா கபால்னு தொறக்க போறான்!!!!)

அல்லாத்துக்கு நடுவுல சோழிய குலுக்கிப் போட்டு பிரச்சன்னம் பாத்து ஜோசியக்காரங்க எல்லாம் இன்னா சொன்னாங்கனு தெர்யுமா ? சிக்ஸ்த் ரூம தொறந்தா.....நாட்டுகே ஆபத்து வருமாம்....அதனால தொறக்க கூடாதுன்னு சொன்னதோட மட்டும் இல்ல.. ஏற்கனவே இருந்த ரூம்ஸ் ஒப்பன் பண்ணியதால சாமி செம கோவத்துல இருக்குன்னும் சொல்லி இருக்காங்க....

ஆளும் ராஜாக்களே........நியாயவான்களே....இன்னும் என்ன வெயிட்டிங்க்..........கபால்னு தொறக்க ஏற்பாடு பண்ணுங்க.... உள்ள என்னமோ மேட்டர் இருக்குங்கோ!

பஞ்ச் 3:

நாட்ல இருக்குற நெலமைய வெலாவாரியா தெரிஞ்சுக்க ஒபாமா சாப் பஸ்ல போயி மக்களோட மக்களா கலந்து நின்னு எல்லாத்தையும் வேடிக்கை பாத்து தெரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருகாராம். ஒரு தலைவன்னா இப்டி இருக்கணும். நம்மாளுங்க வெளில போறதுக்க்கு முன்னாலயே முன்னால பத்து காரு (கம்மியா சொல்லியிருந்தா மனிச்சுக்கோங்க மக்கள்ஸ்) பின்னால பத்து காருன்னு ஒரே  பந்தாதான்...

மக்கள் பெரச்சினைகளை ஏ.சி கார்லயும், டெம்போ வேன்லயும் போயி தெரிஞ்சுக்க முடியுமா தலைவர்ஸ்...? ரேசன் கடை க்யூவ்ல நில்லுங்க, பஸ்ல போங்க...ஆட்டோல போங்க ட்ரெயின்ல போங்க.... முக்கியமா..இலவசம் கொடுக்குறத வாங்க பப்ளிக் மாறியே போய் நின்னு வேடிக்கைப் பாருங்க....(இப்டில்லாம் நடந்துடுமா என்ன.....தங்கத் தமிழ் நாட்ல ???)

பஞ்ச் 4:நாட்ல எல்லா பெரச்சினையும் தீத்துடலாம் போல இருக்கு இந்த காங்கிரஸ்காரங்க அதுவும் தமிழ் நாட்ல இருக்க காங்கிரஸ்காரங்க பெரச்சினைய தீக்கவே முடியாது போல இருக்கு.... ! சத்திய மூர்த்தி பவன்ல எந்த நேரத்துல கட்சி தலைமை ஆபிச வெச்சானுகளோ இல்லையோ எப்ப பாத்தாலும் அடிச்சிகினு கலீஜா ஆக்குறானுகப்பா..

இன்னாத்துக்கு அடிச்சிகினானுங்கோன்னு தெரிஞ்சக்க ஆசப்படாதீங்க மக்கள்ஸ்...அது எல்லாம் தெரிஞ்சுக்குற அளவுக்கு நாம ஒண்ணியும் வெட்டியா இல்ல....! 

சொம்மா சண்ட போட்டுகினு கூவிகினு பொது மக்கள பேஜார் படுத்தாம... சிட்டிய வுட்டெ வெளில எங்கனாச்சும் பொட்டக்காட்ல கெவர்மெண்ட் இடம் கொடுத்துச்சுனா...இவனுக அடிச்சிகிற கூத்த எல்லாம் பத்தி நாம பேசிக்க கூட தேவ இல்லை...! சொம்மா...எப்ப பாத்தலும் நொய்யி நொய்யின்னு.. தேசிய ஒற்றுமைனு பேசிக்குட்டு வந்தா காது மேலயே போட்டு வெறட்டுங்க மக்கள்ஸ்!


பஞ்ச் 5:

எலக்சன்ல தி.மு.கவுடனான கூட்டு அதுக்கப்புறம் படு பயங்கர தோல்வி  இது இல்லாம ஜெயிச்சு இருந்தா இப்டி எல்லாம் பேசுவாரா? ராமதாசு ஐயா. தமிழ் நாட்ல திராவிட கொடிகளே பறக்க கூடாது,திராவிட கட்சிகளாலதான் தமிழ்நாடு சீரழிஞ்சு போயிடுச்சுன்னு டாக்டர் சாருக்கு திடீர் ஞானாதோயம் வந்து இருக்கு. மாத்தி மாத்தி, திமுக அதிமுகன்னு பாஞ்சு பாஞ்சு கூட்டணிய வச்சிகிட்ட தலிவரு இப்ப தோத்து போயி மண்ண கவ்விட்டு குரங்கு ஆப்பு அசைச்சது கணக்கா என்ன பேசுறதுன்னு தெரியாம ஒரே புலம்பல்ஸ்.....

தமிழ்நாட்ல திராவிட கட்சிகள ஒழிச்சுக்கட்ட மக்கள்ஸ் கிட்ட நீங்க தொடை தட்றது எல்லாம் இருக்கட்டும்....அடுத்த எலக்சன்ல நீங்க கூட்டணி
வைக்காம இருந்த சரிதானுங்க ராமதாஸ் ஐயா! 


கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 

3 comments:

Priya said...

நல்ல பதிவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Faizal said...

ரொம்ப அருமை தேவா.....

Anonymous said...

ந‌ல்ல‌ ப‌திவு

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes