சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு படு ஜோராக ரெங்குவும் கனகுவும் கழுகு ஆபிஸ்க்கு வந்துகொண்டிருந்தனர். வழியில் இருவரும் பார்த்துகொண்டதால் ஆபிஸ் மறந்து நம்ம அண்ணாச்சி டீக்கடையில் ரெண்டு ஸ்ட்ராங் டீயை போடசொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டனர்..!
கனகு: என்னயா ரெங்கு சுதந்திர தினம் என்சாய்மெண்ட்லாம் எப்படி.? வேலையே செய்யாம படுஜோரா கொண்டாடுனியா.?
ரெங்கு: யோவ்.. ஐ ஆம் ஸ்பெஷல் ரிப்போர்டர்.. எல்லா நாளும் ஒர்க்கிங் டே தான் எனக்கு..!
கனகு: என்னயா சுதந்திர நாளப்பவும் நீ சுதந்திரமா இல்லயா.? சோ பேட்...
ரெங்கு: நான் மட்டும் இல்லயா.. நேத்தியோட சமச்சீர் கல்வி புத்தகங்கள கொடுக்க கடைசி தேதினு கோர்ட் சொல்லுச்சுல.. அத முடிக்க முடியாம நிறைய டீச்சருங்க சுதந்திர தினத்திலும் ஸ்டிக்கர ஒட்டி ஒட்டி கிழிச்சு கிழிச்சு நொந்துட்டாங்க..
கனகு: என்னயா அப்பவாச்சும் முழுசா கொடுத்தாங்களா இல்லையா.?
ரெங்கு: அப்படியே கொடுத்திட்டாலும்...! கொஞ்சம் மேலோட்டமா பல இடத்தில கொடுத்திருந்தாலும் உள்ளடங்கிய பல ஊர்கள்ல இன்னும் கொடுத்தபாடில்லனு எனக்கு நியூஸ் வந்துச்சு..!
கனகு: நல்லா வந்துச்சு உனக்கு நியூஸூ..! சீக்கிரமே கொடுத்திடுவாங்கயா.. சரி.. நம்ம கொடியேத்தத்துக்கு போயிருந்தியாமே... அம்மா என்னயா சொன்னாங்க?
ரெங்கு: எங்கம்மா ஒண்ணும் சொல்லல.. ஜெயலலிதா தான் அவுங்க தர்ற இலவசத்தை எல்லாம் இலவசம்னு சொல்லி கொச்சை படுத்த வேணாம்னு சொல்லுறாங்க..
கனகு: என்னயா சொல்லுற..? இலவசமா கொடுக்கிறத இலவசம்னு சொல்லாம வேற எப்படி சொல்லுறது..??!!
ரெங்கு: சத்தமா பேசாதயா..! ஏழை எளியோருக்கு இப்படி விலையில்லாம கொடுக்கிறது அரசின் கடமையாம்.. தெரியாதா.?
கனகு: யோவ்.. அசிங்கமா ஏதாச்சும் சொல்லிட போறேன்யா..! போனவாட்டி நாம பேசும் போது வறுமைகோட்டுக்கு கீழ இருக்கிறவங்க பட்டியல் தயாரிக்க தேவையில்ல எல்லாருக்கும் ஒரே மாதிரி சலுகை தான் தர்றேன்னு சொன்னதா சொல்லுறாங்க.. அப்புறம் இங்க ஏழை எளியோருக்கு உதவுறதா சொல்லுறாங்களே!! என்னயா குழப்புற??
ரெங்கு: நான் சொன்னத கேட்டுட்டு தலையாட்டிட்டு அப்படியா.! சரி.. ஓ.. இப்படி சொல்லுறது தானே உன் வேல எதுக்கு தேவையில்லாம கேக்குற.?
கனகு: என்னய என்னயா அதிமுக தொண்டன்னு நினச்சியா...? சரி வேணாம் விடு... அன்னைக்கு ஜெ., வேற என்ன ஸ்பெஷல்லா செஞ்சாங்கோ.?
ரெங்கு: வழக்கமா இந்த மாதிரி சுதந்திர தினத்துக்கு பிறகும் குடியரசு தினத்துக்கு பிறகும் கவர்னர் மாளிகையில விஐபி.,களுக்கு டீ பார்ட்டி வைப்பாங்க யா.. அதுல முதல்வரும் இன்னும் சில முக்கியமானவங்களும் கலந்துப்பாங்க..! இந்த முறை கவர்னர் அழைப்பை ஒத்துகிட்டு ஜெ., டீ பார்ட்டிக்கு போகல..
கனகு: போய்.. ஒரு டீய மடக்கு மடக்குனு குடிச்சுட்டு வர்றதுக்கு என்னயா இந்தம்மாவுக்கு ப்ராப்ளமு.?
ரெங்கு: ஏதோ நம்ம அண்ணாச்சி கடை டீ மாதிரி பேசுறியே யா..!! ஒவ்வொரு வருசமும் இந்த டீ பார்ட்டிக்கு பல லட்ச ரூபாய் வேஸ்ட்டா போகுதுயா..
கனகு: அப்ப அம்மா.. அதனால தான் டீ பார்ட்டிய ஒதுக்கி வச்சாங்கனு சொல்லுறியா.?
ரெங்கு: எனக்கு இப்ப தான் உன் மேல மைல்டா டவுட்டு வருது..!! நீ அதிமுக., தொண்டனோன்னு...!
கனகு: சரி சரி...! நாம வேற பேசுவோம்... நீ அம்மாவ விட்டு வேற சுதந்திர தின ஸ்பெஷல் நியூஸ் ஏதாச்சும் சொல்லு..
ரெங்கு: ஸ்பெஷல் தானே.. சொல்றேன்..! நம்ம கனிமொழி, ராசா, கல்மாடி எல்லாம் சுதந்திர தினத்த திஹார் செயில்ல கொண்டாடினாங்களாம்...!
கனகு: எப்படியா கொண்டாடினாங்க.? ‘’எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு’’ வரும்னு பாடிகிட்டே கொண்டாடுனாங்களா.?
ரெங்கு: நீ சரியே இல்லயா...! உன்மேல டவுட்டு அதிகமாயிட்டே போகுது..! ஜெ., பத்தி பேசினா பம்புற, திமுக பத்தி பேசினாலே நக்கல உடுற...
கனகு: தோணுறத தானே பேச முடியும்.. சரி இந்த ரெண்டு கட்சியையும் கொஞ்சம் விட்டு வெளிய வந்திடேன்.. ப்ளீஸ்...!
ரெங்கு: அழுகாத அழுகாத..! நம்ப உள்துறை அமைச்சர் இருக்காருல ப.சிதம்பரம் அவரோட கண்டனூரு வீட்டுல கொள்ளை நடந்திருக்காம் தெரியுமா?
கனகு: ஹா ஹா.. செம காமெடி யா..! இந்தியாவின் பாதுகாப்பை பாக்க வேண்டியவர் வீட்டுக்கே பாதுகாப்பு இல்லயா.? சூப்பர் சூப்பர்..
ரெங்கு: அந்த வீட்டுல 6 அறையில கொள்ளை நடந்திருக்கு.. அதுல மூணு சிதம்பரத்தோட பொருட்கள் இருந்த அறை... எல்லாம் புஸ்ஸ்ஸ்...!
கனகு: அதெப்படியா மொக்கை நியூஸையே சொல்லுற.? ஏதாச்சும் காமெடி நியூஸ் சொல்லு...!
ரெங்கு: அந்த உண்ணாவிரதம் மேட்டரு தெரியுமாயா உனக்கு.?
கனகு: நீயெல்லாம் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்டரு.. அது இந்தியா முழுக்க தெரியும்.. அன்னா ஹசாரே தானே!!
ரெங்கு: அது இல்லயா.. முல்லை பெரியாறு அணை மட்டத்தை உயர்த்தவும் கேரள அரசு கட்டுற அணைய தடுக்கவும் வைகோ தலைமையில உண்ணாவிரதம் இன்னைக்கு நடக்குது..
கனகு: என்னயா.. ஆ.. ஊ.. னா எல்லாம் உண்ணாவிரதம்னு கிளம்பிடுறாங்க...! ஒரே குஷ்டம்ப்பா...! எல்லாத்துக்கும் காரணம்.. அந்த அன்னா...
ரெங்கு: யோ.. நிறுத்து நிறுத்து.. நீ திரும்ப அந்த பக்கம் போயி என்னய பிரச்சனையில இழுத்து விட்டுடாத.. (ஒரு டீ கூட வாங்கி கொடுக்காம பிரச்சனையில கொண்டாந்துவிட்டுடுவான் போலிருக்கே...!!) நான் கிளம்புறேன்.. என்னய விடு..!!!
2 comments:
தொடருங்கள். அருமை
டீக்கடைப் பெஞ்சு ரொம்ப நல்லாயிருக்கு...
தொடருங்கள்.
Post a Comment