Wednesday, August 24, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (24.8.2011)
மழையில் நனைந்து செய்திகளை சேகரித்து.. குளிரில் நடுங்கிய படி கழுகு ஆபிஸ் செல்லாமல் ரெங்கு டீ கடையை நோக்கி சென்றார், அண்ணாச்சி சூடா ஒரு டீ ய போடுங்க..கனகுக்கு குறுந்தகவலை பறக்க விட.. ரெங்கு குளிரில் இன்னும் நடுங்கி கொண்டிருந்தார்.  

கனகு : என்ன ரெங்கு யாரை பார்த்து உனக்கு பயம் இப்படி நடுங்குற..?? 
ரெங்கு : என்ன? எனக்கு பயமா? நான் என்ன ஜெயலலிதாவா..?? 

கனகு : என்னய்யா சொல்ற அப்போ ஜெயலலிதாவுக்கு பயமா..??? என்னய்யா சொல்ற கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு.

ரெங்கு : ஆமாய்யா பயம் தான், இத நான் சொல்லல நம்ம தளபதி சொல்றார், சமச்சீர் கல்வி இவங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்தா மாதிரி புது சட்டசபை விஷயத்திலும் தீர்ப்பு வந்திட போகுதுன்னு பயந்து மருத்துவமனையா மாத்த போறேன்னு சொல்றாங்களாம்...  

கனகு : அப்படியா..? அம்மாவுக்கு பயமா தான் இருக்கும் கோர்ட்ல கேள்வி கேப்பாங்கனு பயம் அதான், மக்கள் கோர்ட் ரெண்டு பேர் கிட்டவும் நல்ல பேரு வாங்கலாம்னு மருத்துவமனையா மாத்துறேன்னு சொல்றாங்க..போல. இனி எந்த அரசியல்வாதிக்காவது நெஞ்சு வலி வந்தா பக்கத்திலே படுக்க வைச்சிடலாம். 

ரெங்கு: இந்த வருஷம் எனக்கு ஒரு வட பாயாசம் சோறு எக்ஸ்ட்ரா கிடைக்க போகுது .

.கனகு : என்னய்யா சொல்ற..??  

ரெங்கு: ஆமாயா வரிசையா ஒண்ணு ஒண்ணா கை வச்சிட்டு வந்துகிட்டு இருக்காங்க, இனிமே தமிழ் புத்தாண்டை சித்திரையிலயே கொண்டாடலாம்னு இவுங்க சொல்லிட்டாங்க.. அய்யாவால எனக்கு புடவை காசு மிச்சமாச்சு.. இப்போ அம்மாவால அது இல்லை இப்போ நான் புடவை கடை வாசல போய் உட்காரணும் அம்மா வாழ்க...

ஐயா வந்தா தை 1ல கொண்டாடுவோம், அம்மா வந்தா சித்திரை 1ல கொண்டாடுவோம், இதெல்லாம் மக்களுக்கு சாதாரணம். மக்களுக்கு நல்லது செய்யறத விட இவுங்க சுயநலமான பார்வைகள்தான் இப்போ முதலா போச்சு..

கனகு: இருய்யா வீட்டுல புடவ மேட்டர சொல்லி மொத்த சாப்பாடும் இல்லாம பண்றேன்,  

ரெங்கு : என் சோத்துல ஏன்ய்யா மண்ண போடுற.. 

கனகு : யோவ் ரெங்கு நான் ஒரு விஷயம் சொல்றேன் கேளு... நேத்து குடும்பத்தோடு பீச்சுக்குப் போயிருந்தேன் அங்கே யூத்ங்க எல்லாம் அண்ணா ஹசாரே வாழ்கன்னு.... கோஷம் போட்டுட்டுப் போனாங்க.. மெழுகுவர்த்தி எல்லாம் ஏந்தி நின்னாங்க.. 


ரெங்கு : சரி இது தான் எல்லாருக்கும் தெரியுமே நீ என்ன சொல்ல வர..??


கனகு : இருய்யா இனி மேல் தான் விஷயமே இருக்கு நானும் தெரியாத மாதரி என் பக்கத்தில் இருந்த ஆள் கிட்ட "எதுக்குங்க இவங்க இப்படி போறாங்க" கேட்டேன் அவரு யாரோ அண்ணா ஹசாரேவாம் அவர் உண்ணா விரதத்திற்கு ஆதரவு தெரிவிக்குறாங்க சொன்னார் 


ரெங்கு : உனக்கு எதுக்குய்யா இந்த வேலை.. சரி வேற என்ன கேட்டே ? 

கனகு : நான் விடுவேனா அடுத்த கேள்விய கேட்டேன் சரி அவர் ஏன் உண்ணா விரதம் இருக்கார்..?? அந்த ஆளு சொன்னார் "லஞ்சத்தை ஒழிக்கணும்னு  போராடுறார்  அதுக்கு ஏதோ சட்டம் கொண்டு வரணும் சொல்றாராம்" நான் ரிப்போர்ட்டர்   ரெங்கு ஃபிரெண்ட் ஆச்சேனு அடுத்த கேள்விய கேட்டேன் 


ரெங்கு : யோவ் நான் உன் ஃபிரெண்ட் வெளிய சொல்லாத எவனாவது அடிக்க 
வருவான் 


கனகு : சரி சரி நான் சொல்றத கேளு.  அது என்னங்க சட்டம்... ? அந்த ஆளு என்னய்யே ஒரு மொற மொறச்சி எனக்கு அது தெரியாதுனு சொல்லிட்டுப் போய்ட்டார்.  

ரெங்கு : அந்த ஆளு அடிக்காமப் போயிட்டானே..!! 

கனகு : ஏன் ரெங்கு இப்படி அவருக்கு ஆதரவா போறவங்க அந்த சட்டம் பத்தி விழிப்புணர்வு செய்தா என்ன..?? ஏன் ரெங்கு இத பத்தி நீ ஒரு விழிப்புணர்வு நியூஸ் கொடுத்தா என்ன..எப்படி என் ஐடியா..??


ரெங்கு : ஆமா கனகு பல பேருக்கு அந்த சட்டம் பத்தி தெரியல அவருக்கு ஆதரவா ஊர்வலம் போறவங்க அதைப் பத்தி விழிப்புணர்வு செய்தா இன்னும் பல மக்களைப் போய்ச் சென்றடையும்...இத பத்தி நான் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டேன் அந்த எடிட்டர் , அதை எடிட் பண்ணிட்டார்.. எப்படியோ கனகு நீ பீச்சுக்குப் போயிட்டு வந்ததைப் பெருமையா சொல்லிக்கிட்டே.

கனகு : இது என்ன பெருமை இதை விட நாங்க இத விட பெரும பேசுவோம்... ராமதாஸ் மாதரி  

ரெங்கு : வரப் போற பொதுத் தேர்தல்ல கடலூர் தொகுதில நிக்க போறாராம் அன்புமணி  

கனகு : அட எப்போ இருந்து ராஜ்ய சபாவுக்கு பொது தேர்தல் வைச்சாங்க என்கிட்ட சொல்லவே இல்ல...  

ரெங்கு : இவர் மக்களவைத் தேர்தல்ல நிக்கப் போறாராம்..  

கனகு : ஆமா ஆமா ரெண்டு பேர் கிட்டயும் சீட் கேட்டாச்சி யாரும் தரல.. அதான் மக்கள் கிட்ட போய்ட்டார் ரோஷம் எல்லாம் பார்க்கக் கூடாதுனு மருத்துவர் அய்யாவே சொல்லி இருக்காரே... மக்களும் கை விரிச்சிட்டானா எங்கயா போவார்..??  

ரெங்கு :  கனகு இந்த நியூஸ் கேட்டியா இப்போவே உள்ளாட்சித் தேர்தல்க்குப் பிட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க  

கனகு : அது என்ன நியூஸ் ப்பா... வைகோ அம்மா கூட சேர போறாரா... ?


ரெங்கு : அட இது வேற ஆளுப்பா எதிர்க்கட்சி நியூஸ் ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை பிரிக்கவே முடியாதாம் அப்படின்னு  ஏ.கே.டி.ராஜா எம்.எல்.ஏ. சொல்றார்.. 

கனகு : எதிர்க்கட்சினு.......... அடிக்கடி சொல்லுய்யா அந்த வார்த்தையே மறந்திரும் போல், ஏன் ரெங்கு ஒரு வேளை fஎவிஃஉஇcக் போட்டு ஒட்டி இருப்பாங்களோ...?? தலைவர் தான் எதுவும் பேசுறது இல்லை MLA இவராவது ஏதாவது பேசிட்டுப் போகட்டும் விடுய்யா.. எல்லாம் உள்ளாட்சி வரைக்கும் தான் அப்பறம் அப்பறம் சைடிஸ் பத்தலேன்னு வெளிய வந்திருவாங்க... ஏதாவது ஹாட் நியூஸ் சொல்லுய்யான்னா இப்படிசொல்லிட்டு இரு.... போய்யா.. 

ரெங்கு : ஹாட்னு சொன்னவுடன் தான்யா ஞாபகம் வருது... அண்ணாச்சி டீ எங்க..?? என் வாயவே பார்த்திட்டு நிக்குறீங்க...  நீங்க நியூஸ் சொல்லுங்க ரெங்கு சார் நான் டீ போடுறேன். சரி சரி ஹாட் நியூஸ் சொல்றேன் ஆனா சிரிக்க கூடாது.. 

கனகு : யோவ் உன்ன நியூஸ் சொல்ல சொன்னேன் ஜோக் சொல்ல சொல்லல.. ஒழுங்கா சொல்லு  

ரெங்கு : ராமதாஸ் தனியா தேர்தல்ல நிக்க போறேன்னு சொன்னதை எல்லாம் கிண்டல் பண்றாங்கனு மருத்துவர் அய்யா ரொம்ப வருத்தப் படுறார்யா. போன வாரம் நாம கிண்டல் பண்ணது அவருக்கு தெரிஞ்சு போச்சு போல...  

கனகு : எனக்கு எதுவும் தெரியாதுப்பா எல்லாமே ரெங்கு தான்  

ரெங்கு : அடப் பாவி..  அவங்க வர உள்ளாட்சி தேர்தல்ல தனியா நிக்க போறாராம்.. அவங்க கட்சி தொடங்கிய போது தனியா தான் நின்னாங்களாம்.. இப்போவும் அதே மாதரி நிக்கப் போறாங்களாம்.. 

கனகு : அப்போ கட்சி ஆரம்ப நிலைக்கே வந்துடுச்சினு சிம்பாலிக்கா சொல்றாரா.. ?  இன்னும் கொஞ்ச நாள்ல கட்சி தொடங்குவதற்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படி போயிடுவாங்களோ...பாவம்யா ராமதாஸ் என்ன செய்றதுன்னே தெரியாம முழிச்சிட்டு இருக்கார்.

யோவ் ரெங்கு இந்த அண்ணாச்சி டீ போடுற மாதிரி தெரியல நான் கிளம்புறேன் பா... 


"அண்ணாச்சி டீ இந்தாங்க "


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


2 comments:

சே.குமார் said...

சூடான அரசியல் செய்திகளை சுவையாக பரிமாறியிருக்கிறீர்கள்.

Kannan said...

\\"டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்..."//

சூப்பர் தலைப்பு.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes