Wednesday, August 10, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (10.8.2011)
கழுகு ஆபிஸ் வெளியே சில்லென சாரல் மழை பொழிய இந்த சாரலுக்கு சூடா ஒரு டீய போட்டா சூப்பரா இருக்குமென ரிப்போர்ட்டர் ரெங்கும், கனகும் டீக்கடை பக்கம் ஒதுங்குகின்றனர். டீயை வாங்கிய ரெங்கு படபடவென குடிக்க தொடங்கினார்.கனகு: ஏன் யா ரெங்கு.. காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பூந்த மாதிரி ஏன் யா இந்த வேலை உனக்கு... பொறுமையா டீய குடிச்சுகிட்டே ஏதாச்சும் மழைக்கு ஏத்த மாதிரி சூடா நியூஸ் சொல்லேன்...ரெங்கு: சூடா நியூஸ் சொல்லுறதுக்கு நான் என்ன ராமதாஸா.?கனகு: புரியுது யா.. நீ அந்த திராவிட கட்சிக்கு கூட ராமதாஸ் கூட்டு வச்சிக்கமாட்டேனு சொன்னத தானே சொல்லுற.? மழைக்கு ஏன் யா காமெடியான நியூஸ்லாம் சொல்லுற.?ரெங்கு: ராமதாஸ் காமெடியா? அவரு காதுல விழுந்திட போகுதுயா.. அப்பரம் நம்ம கழுகு ஆபிஸோட கூட்டு வச்சுக்க மாட்டேனு சொல்ல போறாரு.. கனகு: ஓ.. அப்படிவேற சொல்லுவாரோ.!! அப்படி சொன்னாலும பரவால சீக்கிரமே மறந்திடுவாரு..! நீ ஆறி போன நியூஸ போடாம வேற சூடான நியூஸ போடு..!ரெங்கு: இப்ப தமிழகத்தையே கலக்குற ஒரு முக்கியமான நியூஸ் வேணுமா.?

கனகு: அது என்னயா தமிழகத்தையே கலக்குறது.?

ரெங்கு: சமச்சீர் கல்விய................கனகு: நிறுத்து நிறுத்து.. நீ ஸ்பெஷல் ரிப்போர்ட்டரா இல்ல நஞ்சு போன ரிப்போர்ட்டரா.? ஜெ., சமச்சீர் கல்வி ஒத்துகிட்டாங்களே அதானே!! அந்த மேட்டரு முடிஞ்சு நேத்து சாயங்காலத்துல இருந்து புக் வினியோகமே ஆரம்பிச்சாச்சு யா..ரெங்கு: அதான்ல.. சட்டமன்றத்துல ஜெ., நான் ஏற்கனவே சொன்னமாதிரி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்ப ஏத்து சமச்சீர் கல்வி வரும்னு சொன்னாங்க...கனகு: என்னது ஜெயலலிதா ஒருத்தவங்க பேச்ச கேக்குறாங்களா.? ஒருத்தவங்க பேச்ச கேட்டு நடக்குறதுனா என்னன்னு தெரியுமா அவுங்களுக்கு.?ரெங்கு: யோ!! சத்தமா பேசாதயா.. உயிருக்கு உலை வச்சிடுவ போலிருக்கே! எனக்கும் இது கொஞ்சம் ஆச்சர்யமா தான் யா இருக்கு.. ஆனா இத முன்னாடியே செஞ்சிருந்தா இவ்வளவு சேதமும் இல்ல ஒரு பிரச்சனையும் இல்ல.கனகு: கேட்டதும் செஞ்சிட்டா அப்பரம் என்னயா அது தமிழக அரசியலு..!?ரெங்கு: இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்க போல.? வறுமை கோட்டுக்கு கீழனு தமிழகத்துல யாரும் இல்ல எல்லாருக்கும் பொதுவான சலுகை தான் இருக்குனு ஜெ., அப்பவே சொன்னாங்க. தெரியுமா.?கனகு: அட என்னயா சொல்லுற.? அப்ப எங்க தலைவர் சொன்னது Rich get richer poor get poorer நம்ம தமிழகத்துக்கு இல்லயா.?ரெங்கு: அது இல்லயா.. வறுமைகோட்டுக்கு கீழ இருக்கிறவங்க பட்டியல் தமிழகத்திலே கிடையாதாம். மத்திய அரசு ஒரு பட்டியல் தயாரிச்சுதாம் அதையும் ஏத்துக்க முடியாதுனு ஜெ., சொல்லிட்டாங்க.கனகு: அதானே பாத்தேன்.. என்னடா ஜெ., சொல்றவங்க பேச்செல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்களோனு பயந்துட்டன்..! இப்படி இருந்தா தான் ஜெ., ஆட்சி போலவே தெரியுது.ரெங்கு: எலே!! சத்தமா பேசாதேல.. கலைஞர் நேத்து பயங்கர டென்ஷன் ஆகிட்டாரு தெரியுமா?கனகு: என்னயா சொல்லுற.? கலைஞருக்கு என்ன ஆச்சு.? சமச்சீர் கல்வி வந்ததுல மனுசன் ரொம்ப சந்தோசமா தானே இருப்பாரு..ரெங்கு: அட அதுல அவருக்கு சந்தோசம் இல்லாம இருக்குமா.? இது வேற மேட்டரு.. கலைஞரு ஸ்விஸ் பேங்க்ல 35 ஆயிரம் கோடி வச்சிருக்கிறதா நியூஸ் வந்துச்சே!!கனகு: அட ஆமாம் ஆமாம்யா... ஒரு பெரிய பட்டியலே வந்துச்சே!!! அத இல்லனு சொல்றாரா.?ரெங்கு: பின்ன ஆமாம்னு சொல்லுவாங்களா.? யோ.! அது இல்லயா.. அத ஒரு வார பத்திரிக்கை வெளியிட்டாங்கல அவிங்கள உண்மையான ஆண்மகனா இருந்தா அத நிரூபிச்சு காட்டுனு சொல்லியிருக்காரு..

கனகு: என்னயா கலைஞரு இப்படிலாம் கூட பேசுவாரா.?ரெங்கு: நீ வேற யா.. அந்த பத்திரிக்கை காரங்கள பத்தி பேசும் போது பன்மையிலே பேசல..ஒருமையில தான் பேசியிருக்காரு.. அதான் யா.. அவன், இவன்.. அப்படீனு..!!கனகு: நல்ல வேள நாம வெளியிடல.. விட்டிருந்தோம் நம்மையும் நாரடிச்சிருப்பாரு.. சரி.. கொஞ்சம் வெளிய போவோம்..! தெலுங்கானா மேட்டரு என்ன ஆச்சு.?ரெங்கு: நம்ம தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி எம்.பி., விஜயசாந்தி இருக்காங்கல்ல.. அதான்யா பழைய ஆக்ஃஷன் ஹீரோயினு.. அவுங்க ஆக்ஷ்ன கட்சி ஆபிஸ்ல காட்டியிருக்காங்க..கனகு: என்னயா..? மைக்க புடுங்குறது, ‘ச்சேர தூக்கி போடுறதுனு ஏதாச்சும் பண்ணுறாங்களா.?ரெங்கு: அதெல்லாம் பண்ணிட்டுதான் இருந்தாங்க.. இப்போ தெலுங்கானாவுக்காக பசங்கலாம் சாகுறத பாத்துபுட்டு.. அம்மணி தனி தெலுங்கானாவுக்கு உயிர் தான் வேணும்னா நான் தற்கொலை பண்ணிக்கிறன் அப்பரம் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தற்கொலை பண்ணிப்பாருனு சொன்னாங்க..

கனகு: இது சந்திரசேகராவ்க்கு தெரியுமா.?ரெங்கு: ஹா ஹா..! வடிவேலு கையில மண்ணெணய கொடுத்து கொளுத்திக்க சொன்ன மாதிரி கொடுத்திருக்கணும்.. அப்பரம் தெரிஞ்சிருக்கும..!!கனகு: அப்ப இவுங்களுக்கு எல்லாம் நெஞ்சுவலி வருமே.. அம்னீஷியா அப்படி இப்படினு ஏதாச்சும் வந்திடும் யா.. சரி.. நீ அத விடு நம்ம திருப்பூர் திமுக மேயர் செல்வராஜ் ஏதோ சொல்லிபுட்டாருனு அந்த முக்குல கத்திட்டு கிடந்தியே அது என்னயா.?ரெங்கு: அது ஒண்ணும் இல்லயா.. அந்த நிலஅபகரிப்பு வழக்குல சிக்குன ஆளு யா அவரு.. ஆனா அப்படி எதுவுமே இல்ல இது பொய் வழக்குனு சொல்லி அவர் குழந்தைய கீழ போட்டு தாண்டுறேன் சொல்லுறாரு...கனகு: என்னயா சொல்லுற.? இதுக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்.. இந்த மாதிரி ஆட்களே இன்னும் குழந்தைய போட்டு சத்தியம் பண்ணுறேன் அது இதுனு திரியிறானுங்களா.? ஒரு பக்கம் கோபம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்பு தான்யா வருது..ரெங்கு: அங்க இருக்குற அதிமுக கவுன்சிலர்கள் அதிக தெய்வபக்தி இருக்கிறவங்களாம்.. அதுக்காக தான் அப்படி செய்யுறேனு சொல்லியிருக்காரு..கனகு: இந்த குழந்தைய போட்டு தாண்டுறன், கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணுறேன்னு சொல்லுறதுக்கு இது என்னா மாரியாத்தா கோவில் கூழ திருடின கேஸா.?ரெங்கு: எனக்கு என்னமோ தெரிலயா இந்த மாதிரி குழந்தைகள லைட்ட இம்ச பண்ணினாலே பிடிக்க மாட்டேங்குது.. ஐ காட் மை மைண்ட் டிசபாயின்டட்.. நான் கிளம்புறேன்..!!
(ரெங்கு போன பிறகு அவர் க்ளாஸை எட்டி பார்த்துவிட்டு கனகு...)கனகு: க்ளாஸில டீ தீந்துபோச்சு.. அதனால எந்திரிச்சு ஓடுது... இது என்ன டக்கால்டி வேலையெல்லாம் காட்டுது பாரு... இதுல இங்கிலீஸூ வேற...


கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes