
வெகு நேரமாய் ரெங்குவின் வருகைக்காக காத்திருந்து, காத்திருந்து,டீ கடைக்கு தனியே சென்றார் கனகு. டீக்கடைவாசலில் நின்று கொண்டு செல்பேசியை எடுத்து நம்பரை தட்டினார்.. கனகு.. அவள் வருவாளா, அவள் வருவாளா.. ரிங் டோன் ஒலிக்க..
கனகு : ஹலோ ரெங்கு.. என்னய்யா கழுகுக்காக விழுந்து விழுந்து வேலை செய்றீயா..?? இன்னும் ஆளயே காணோம்
ரெங்கு : யோவ் இதோ தெரு முனைக்கு வந்துட்டேன் அங்கேயே இரு...
வண்டியை விட்டு முனங்கிக் கொண்டே வர ...
கனகு : அட என்ன ரெங்கு முனங்கிட்டே வரே என்ன ஆச்சு..? ரெங்கு : ஒரே ட்ராபிக்.. நம்ம மக்கள் செய்ற போராட்டத்தால் தான்
கனகு : ஆமாப்பா பேரறிவாளன் நியூஸ் ஏதாவது கரண்ட் நியூஸ் சொல்லுப்பா...
ரெங்கு : இந்த விஷயத்தில் வாயே திறக்காத அம்மா இப்போ தான் வாய்திறந்து இருக்காங்க, மேதகு...