Thursday, August 18, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (18.8.2011)


பஞ்ச் : 1

ஊழல எதிக்கிறவனுக்கும் ஊழல் செஞ்சவனுக்கும் ஒரே சிறையான்னு மத்திய அரச பாத்து சூடா கேள்வி கேட்டு இருக்காரு எதிர்க்கட்சி தலைவர்  விஜயகாந்த். சட்டத்துக்கு முன்னாடி குற்றம் அப்படீன்னு சில திட்ட வரையறைகளும் பார்வைகளும் இருக்கு, அதற்கு முரண்பட்டுப் போற எல்லோரையும் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இருக்கு, அன்னா ஹாசாரே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாதுன்னு சொன்னது சட்டம்தான் அதை அவர் கேக்கல அப்டீன்னா அவர் சட்டத்தை மீறினவர் ஆகுறாரு

பச்சப் புள்ளைக்கு தெரிஞ்சது கூட இந்த மனுசனுக்குத் தெரியலேன்னு வேதனைப்படுவீங்களா? இல்லை மக்கள் இப்படி ஏக போகமா இவர ஜெயிக்க வச்சுட்டாங்கன்னு சந்தோசோப்படுவீங்களா?  ஒரு மண்ணாங்கட்டியும் புரிஞ்சு தொலைய மாட்டேங்குது போங்க!

பஞ்ச் : 2


சமீப காலமா கருணாநிதியோட கடந்து போன அரசை கிண்டலடிச்சு நிறைய விமர்சனங்கள் வந்துகிட்டு  இருக்கு. செத்த பாம்ப போட்டு எத்தன தடவதான் அடிக்கிறது. ஊழல், அராஜகம், குடும்ப அரசியல் இன்னும் என்ன என்ன கருமமோ அது எல்லாத்தையும் காரணம் காட்டி சொற்ப சீட்ட மட்டும் கொடுத்து ஆட்சியில இருந்து இறக்கியாச்சு....! தப்பு செஞ்சு இருக்கவங்கள ஆளும் அதிமுக அரசு சட்டம் தன் கடமையைச் செய்யும்ன்ற ரேஞ்ச்சுக்கு பழிவாங்காத (அப்டிதானே சொல்லணும்) அரசியலையும் பண்ணிகிட்டு இருக்கு., இதுல பொதுமக்கள்ன்ற பேர்ல நாமளும் சேந்துகிட்டு மறுபடியும் முடிஞ்சு போன கதைய பேசுறதுல என்ன அர்த்தம் இருக்குதுன்னு வெளங்க மாட்டேங்குது...!

அம்மா ஆட்சி பீடத்துல முழு மெஜாரிட்டில ஏறிட்டாங்க, தமிழகத்துக்கு என்ன பண்ணிகிட்டு இருக்காங்க, என்னப் பண்ணப் போறாங்க, கடந்த ஆட்சிய விட எவ்ளோ பெஸ்ட்டா செய்வாங்கன்னு...யோசிச்சுப் பாத்து நடக்காமா, ஒவ்வொரு வாட்டியும் ஒரு கட்சிய ஆட்சில ஒக்கார வெச்சிட்டு பழைய ஆட்சிய இழுத்துப் போட்டு பேசுறதே நம்ம பொழப்பா  போச்சி...! இப்படியே இருந்தா எப்படி சாமி விடியும் தமிழ் நாட்டு பொழப்பு தலப்பு..?

பஞ்ச் : 3

இத்தன வருசம் அரசியல் நடத்தி அந்த பக்கம் இந்த பக்கம் பாஞ்சு பாஞ்சு கூட்டணி வச்சு இப்பத்தான் தெளிவு வந்திருக்கு போல ராமாதாஸ் ஐயாவுக்கு, இது நாள் வரைக்கும் திராவிடக் கட்சிகள் கூட கூட்டணி வச்சு அவுங்கள வளர்த்து விட்டதுக்காக (என்னாது.......நீங்க வளத்தீங்களா???!!!) தமிழ் நாட்டு சனங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறாராம். இனிமே திராவிட கட்சிக கூட கூட்டணி வைக்காம, ஒதுங்கி இருப்பாராம். தனியா தமிழகத்தை பிடிக்க திட்டம் தீட்டுறாங்க போல இருக்கு.

மன்னிப்பு மட்டும் கேட்டா லேசுல விட முடியுமாங்க டாக்டர் சார்? மகனுக்கு சென்ட்ரல் மினிஸ்டர் போஸ்ட் வாங்கிக் கொடுத்து அப்போ சம்பாரிச்சது, அப்புறம் நீங்க டாக்டரா  இருந்து (ஹி ஹி ஹி) சம்பாரிச்சது எல்லாத்தையும் மக்கள்கிட்ட திருப்பிக் கொடுத்துருங்க சார் (நியாயம்னு ஒண்னு இருக்குல்ல, மன்னிப்ப வச்சு மக்கள் என்ன பண்ணுவாங்க பாவம்)

பஞ்ச் : 4

ஒரு பிரச்சினை அதற்காக ஒரு உண்ணாவிரதப் போராட்டம். அந்த போராட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை. போலிசார் கைது பண்ணி சிறையில அடைக்கிறாங்க. சிறையிலயே உண்ணாவிரதம் இருக்க சம்பந்தப்பட்ட நபர் முடிவு பண்றார். வெளிலயும் போராட்டம் வலுக்குது. இப்ப உண்ணா விரதம் இருக்கவரு என்ன பண்ணணும்? இந்த சூழல சாதகமா வச்சிகிட்டு மக்களை கிளர்ந்தெழச் செய்து சிறைக்குள்ளயே...தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து தன்னோட வேண்டுகோள் நிறைவேற போராடணும்...வெளில விட்டாலும் வரமுடியாதுன்னு ஸ்ட்ராங்கா உள்ள உக்காரணும்...! 

இதுதான நார்மலான நடைமுறை....! அன்னா ஹசாரே போராட்டத்த அறிவிப்பாராம். போலிஸ் முடியாதுன்னு கைது பண்ணி சிறையில அடைக்குமாம். வெளில போராட்டம் அதிகமாகுதுன்னு பேச்சுவார்த்தை நடத்துவாங்களாம்....அப்ப சரின்னு சொல்லிட்டு 14 நாள் மட்டும் போராட்டம் நடத்த கொடுக்குற அனுமதிய வாங்கிக்கிட்டு போராடுவாங்களாம். இப்ப கேள்வி என்னனு கேட்டீங்கன்னா 14 நாள்ல பிரச்சினை முடிஞ்சு போயிடுமா? அரசு ஒத்துக்கிடுமா? அப்டீ இல்லனா என்ன பண்ணுவீங்க...? 

போராட்டத்துக்கு நாள் குறிக்கலாம் ஆனா  இத்தனை நாள்தான் போராடுவோம்னு யாராச்சும் நாள் குறிப்பாங்களா மக்கள்ஸ்???? யோசிங்க!

பஞ்ச் : 5


இலவசங்களை உதவின்னு சொல்லுவீங்க, இலஞ்சத்தை அன்பளிப்புன்னு சொல்லுவீங்க, அவரு அசையா சொத்தா கொடுத்தாரு நாங்க அசையிற சொத்தா (கிரண்டர், மிக்ஸி, ஆடு, மாடு எல்லாம்தான்) சொத்த கொடுக்கறோம்னு நியாயம் சொல்லுவீங்க! அவரு 400  கோடில கட்டிட்டுப் போவாரு, அத சரி இல்லன்னா சரி பண்ணியாச்சும் வச்சிக்கணும்னு  உங்களுக்குத் தோணாது...

அந்த கட்சிக்காரன் இவங்கள கொற சொல்லுவாங்க,  இந்த கட்சிக்காரன் அவுங்கள கொற சொல்லுவாங்க, அவரு வந்து ஒங்க ஆட்சில கஜானா  காலின்னு டப்பாவ தட்டிக்காட்டுவாரு....! நீங்க வந்து அவரு கஜானா காலியாக்கிட்டாருன்னு வரிகள கூட்டுவீங்க! இப்படி மாத்தி மாத்தி கேம் ஆடி மக்களுக்கு நடுவுல ரெண்டு கட்சிக்காரங்களையும் விட்டு கொழப்பத்த உண்டு பண்ணி அடிக்கடி சண்டை போட்டு தெளிவா குழம்ப வைப்பீங்க...?

ஒங்க ரெண்டு பேரு கொடியும் ஏறி, இறங்கி,  இறங்கி ஏறி கோட்டையில் பறந்துகிட்டே இருக்கும்....! எங்கள மாறி பொதுமக்களும் ஆன்னு வேடிக்கை பாத்துகிட்டே இருக்கும்....! நாடு வெளங்கிரும்!
கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Unknown said...

நல்ல கண்ணோட்டம் கழுகிற்கு. பதிவு நன்று.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes