Thursday, August 25, 2011

பஞ்ச்' சாமிர்தம் 25.08.2011 (நூறு நாள் அதிமுக ஆட்சி, நேரு கைது.. இன்னும் நிறைய..!)




பஞ்ச் 1:

சினிமாவுல ஒவ்வொரு பிரேம்லயும் வந்து நின்னு மூச்சு விடாம பக்கம் பக்கமா வசனகர்த்தா எழுதி கொடுத்த வசனங்கள கண்ணு செவக்க பேசிட்டுப் போற விஜயகாந்த், அதிமுக ஆட்சி பற்றி ஒரு வருசத்துக்கு பேசமாட்டேன்னு சொல்லியிருக்கறது 2011 சூப்பர் காமெடியாவே அறிவிக்கலாம்.

எலக்சன் நேரத்துலயே முன்னுக்குப் பின் முரணா பிரச்சாரம் செஞ்சு, ஏகப்பட்ட குளறுபடிகள செஞ்சு இருந்தாலும், இத்தனை சீட்டுக்கள கொடுத்து மக்கள் ஜெயிக்க வச்சதுக்கு காரணம் புதுசா ஒருத்தன் வந்து ஏதாச்சும் செய்யமாட்டானா? அப்டீன்ற ஒரு எதிர்ப்பார்ப்பு +கடந்த ஆட்சி மேல இருந்த வெறுப்பு அப்டீன்றத விசய்காந்த் சார் புரிஞ்சுக்கணும். கேக்க வேண்டிய கேள்விகளை சரியான நேரத்துல கேக்காம இருக்கறதும் தப்புன்னு வெளங்கிகிட்டு, 

மக்கள் பிரச்சினைகளை பேசவும் ஆளுங்கட்சியோட முரண்களை சுட்டிக் காட்டவும் நேரம், நாளு குறிக்க வேண்டியதில்லைன்னும் உணரணும்..!

பஞ்ச் 2:

100 நாள் ஆட்சிய அம்மா நிறைவு செஞ்சு இருக்கும் இந்த வேளையில் சாமானியப் பார்வையாகப் பார்த்தால்  காவல்காரர்களை எல்லாம் சுதந்திரமா யாருக்கும் பயப்படாம அம்மாவுக்கு மட்டுமே பயந்து நடக்குறதால சட்டம் ஒழுங்கை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தது, அரசியல் ஸ்டண்ட் என்று எல்லோரும் வர்ணித்தாலும் கூட தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு மாத உதவியை ரூபாய் 400ல் இருந்து 1000 ஆக உயர்த்தியது, சட்ட சபையில் அரக்கன் ராஜ பக்சேக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது மேலும் பொருளாதரத் தடையை இந்தியா விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது, வாக்களித்த படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்று கொண்டிருப்பது, மற்றும் தனது கடந்த இரண்டு ஆட்சிகளை விட மிக எளிமையாய் தற்போது பவனி வருவது ....என்று மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் கை கொடுத்து பூங்கொத்துக்களை நாம் கொடுக்கும் அதே நேரத்தில்....

கடந்து போன ஆட்சியின் திட்டங்களை தேடித் தேடி மாற்ற முயலுவது, சமச்சீர் கல்வி விவகாரத்தில் தனது வழமையான பிடிவாதக் கொம்புகளை வெளிக்காட்டி சறுக்கி விழுந்தது, புதிய தலைமைச் செயலகத்தை சீர்படுத்தி அதை தலைமைச் செயலகமாகவே பயன்படுத்த முயலாமல், மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்து மற்றுமொரு வழக்கினை எதிர் கொண்டிருப்பது என்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருக்கும் சில விசயங்களுக்காக....

நறுக்...நறுக்..நறுக் என்று குட்டவும் நமக்கு உரிமையிருக்கிறது. 

பஞ்ச் 3:

மீடியாக்கள் எல்லாம் கொஞ்சமாச்சும் மாற்று சிந்தனையோட விசயங்களை ப்ளாஷ் பண்ணணும். எப்போ பாத்தாலும் ஒரு நடிகன், அரசியல்வாதி பத்திரிக்கையாளன் அல்லது செல்வாக்கு உள்ளவங்க சொல்ற கருத்தை மட்டும் அல்லது அவர்களின் செயல்களை மட்டும் கொட்டை கொட்டைஎழுத்துல பேப்பர்ல போட்டு மூஞ்சியை டிவில காட்டி தங்களோட வியாபாரத்தை பெருக்கிக்க மட்டும் சுயநலமா நடந்துக்க கூடாது.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவா வயல்ல கடும் வேலை செய்ற ஏழை விவசாயிகளும், தனியார், மற்றும் அரசு அலுவலர்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுபவர், காய்கறி விற்பவர் என்று எல்லா பொது மக்களும் ஆதரவு தெரிவிச்சு, உண்ணாவிரதம் இருந்து ஆக்ரோசமா பேசுறத எல்லாம் ப்ளாஸ் பண்ணாதா மீடியா....சினிமா நடிகர்கள் உண்ணாவிரத்தையும், அவுங்க சொன்ன கருத்துக்களையும், ப்ளாஷ் பண்ணி சமூக அக்கறை என்னமோ அவுங்களுக்கு மட்டும்தான் இருக்குற மாதிரி காட்டுறது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது.

சினிமா நடிகர்கள் உண்ணாவிரதமும், ரஜினி ஆதரவு தெரிவிச்சதும் விஜய் சார் டெல்லி போறதையும் ப்ளாஷ் பண்ணினா மட்டும் போதாது மீடியாஸ்....,சாமானிய மக்களையும் எடுத்துக் காட்டுங்க....!

நல்லாருக்கு உங்க பத்திரிக்கை தர்மம் எல்லாம்...!

பஞ்ச் 4:

முன்னாள் அமைச்சர் நேருவையும் நில அபகரிப்பு வழக்குல கைது பண்ணி இருக்காங்க. தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் கைது ஆகிட்டு இருக்கறத பாத்தா...சராசரியா சில கேள்விகள் மனசுல எழுறத தடுக்க முடியலை.

1) போன ஆட்சில இவர்கள் குற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்களா அல்லது அப்போது காவல்துறை ஆளும் கட்சிதானே என்று கண்டும் காணாமல் இருந்ததா?


2) முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் போது தற்போதைய ஆளும் அரசு நியாயத்தைதான்  கடைபிடிக்கிறது என்பதற்கு கொடுக்கும் அத்தாட்சிகளின் உண்மைத் தன்மையை நீதி மன்றங்கள் நடுநிலையோடு ஆராயுமா?



3) இப்போது அதிமுக பக்கம் அடிக்கும் நியாத்தின் ஒலி மீண்டும் ஆட்சி மாறினால் திமுக பக்கம் அடித்து அப்போது அதிமுக அமைச்சர்கள் எல்லாம் இப்படி வரிசையாக கைது செய்யப்படுவார்களா?

இப்படியெல்லாம் மனசுல தோனுற கேள்விகள் தோணும் போதே... யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு தெரிஞ்சுக்க முடியாம ஒரு குழப்ப நிலையிலயே மக்கள் இருப்பதுதான் அவலத்தின் உச்சமா இருக்கு!

பஞ்ச் 5:

நம்மை மாதிரியே மக்கள் வளம் அதிகமா இருக்குற ஒரு நாடு சீனா, ஒரு 20 வருசத்துக்கும் முன்னாடி மக்கள் தொகை பெருக்கத்த மைனஸா சொல்லி எல்லோரும் விமர்சனம் பண்ணிட்டு இருந்தாங்க, ஆனா அதே மக்கள் தொகையை மனிதவளத்தை வச்சே தன்னோட உற்பத்தியைப் பெருக்கி இன்னிக்கு ஆசிய பிராந்தியத்துல அசைக்க முடியாத சக்தியா நிக்கிறதோட பல வல்லரசு நாடுகளுக்கும் அச்சத்தை கொடுக்கும் பெரும் சக்தியா மாறி இருக்கு.

நம்ம நாட்லயும் மக்கள் வளம் இருக்கு, இயற்கைவளம் இருக்கு, இன்னும் சொல்லப் போனா சீனாவை விட, இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாடுகளையும் விட இளைஞர்களை அதிகமா கொண்டிருக்கிறோம் இருந்தாலும் கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளாலும், ஊழல் பெருச்சாளிகளாலும், சரியான பார்வையில் விடயங்களை விளங்கிக் கொள்ளாத மக்கள்களாலும் நாடு குட்டிச் சுவரா போய்க்கிட்டு இருக்கு...

மக்களின் பார்வைகள் தெளிவா மாறி, தான் திருந்தறதோட, தப்பு செய்றவங்களுக்கு சப்போர்ட் பண்ணாம விழிப்புணர்வு கொண்டவர்களா மாறவேண்டியது நம்ம நாட்டோட ஒரு உடனடி தேவை...!




கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 


3 comments:

Anonymous said...

சினிமாவுல ஒவ்வொரு பிரேம்லயும் வந்து நின்னு மூச்சு விடாம பக்கம் பக்கமா வசனகர்த்தா எழுதி கொடுத்த வசனங்கள கண்ணு செவக்க பேசிட்டுப் போற விஜயகாந்த், அதிமுக ஆட்சி பற்றி ஒரு வருசத்துக்கு பேசமாட்டேன்னு சொல்லியிருக்கறது 2011 சூப்பர் காமெடியாவே அறிவிக்கலாம்.

:)))))))))))

மக்கள் பிரச்சினைகளை பேசவும் ஆளுங்கட்சியோட முரண்களை சுட்டிக் காட்டவும் நேரம், நாளு குறிக்க வேண்டியதில்லைன்னும் உணரணும்..!

செம பஞ்ச்...

எதிர்க்கட்சித் தலைவர் சார் இதெல்லாம் கவனிப்பாரா?

by
மகேஷ்வரி

'பரிவை' சே.குமார் said...

பஞ்ச் ரொம்ப நல்லாயிருக்கு.

Anonymous said...

\\"நம்ம நாட்லயும் மக்கள் வளம் இருக்கு, இயற்கைவளம் இருக்கு, இன்னும் சொல்லப் போனா சீனாவை விட, இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாடுகளையும் விட இளைஞர்களை அதிகமா கொண்டிருக்கிறோம் இருந்தாலும் கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளாலும், ஊழல் பெருச்சாளிகளாலும், சரியான பார்வையில் விடயங்களை விளங்கிக் கொள்ளாத மக்கள்களாலும் நாடு குட்டிச் சுவரா போய்க்கிட்டு இருக்கு..."//

100% correct

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes