Friday, August 12, 2011

அவதூறு என்னும் அத்து மீறல்...!


கற்பனா சக்தி எப்படியெல்லாம் ஆக்கப்பூர்வமாக மானுட சமுதாயத்திற்கு உதவியிருக்கிறது என்று கருத்தில் கொள்ளும் அதே நேரத்தில் அதே கற்பனையைக் கொண்டு தீய எண்ணங்களை அதுவும் மனிதர்களுக்கு எதிரான அவதூறுகளாக மாற்றும் போது ஏற்படும் எதிர் மறை உணர்வுகள் சமுதாயத்தை சீரழித்தும் இருக்கிறது என்றும் அறிக;


அறியாமல், ஆராயாமல், தெளியாமல், தேவையில்லாமல் வெளியிடும் எல்லாம் செய்திகளுமே நடக்காத செய்தியாய் இருக்கலாம். இந்தக் கட்டுரையினை வாசித்து முடிக்கும் போது அவதூறு என்னும் பொய்ச் செய்திகளால் என்னவெல்லாம் விளையும் என்று அறிந்தவர்களாவீர்கள்...



மனிதன் தான் எண்ணுகிற விசயங்களையும்கற்பனைகளையும் எடுத்து சொல்ல உதவுவது அவர்களின் மொழிதான்.  ஒரு மனிதனை நல்லவனாகவும்மோசமானவனாகவும் எடுத்து காட்டுவது அவர்கள் நாவில் இருந்து வரும் வார்த்தைகளே!! இந்த நாவின் மூலம் பல பாவங்களும் செய்யபடுகின்றன. அதில் முக்கியமாக பிற மனிதர்களை பற்றிய அவதூறு செய்திகள். இதுதான் நம் சமூகத்தில் முதன்மையாக இருக்கிறது. புறங்கூறுதல் போன்றதே இது.

 ஒருவன் அவ்விடத்தில் இல்லாத போது அவனது குறைகளை பிறரிடம் பேசுவது. அதில் அந்த குறைகள் அவனிடத்தில் இல்லை என்றால் அது அவதூறு என்றாகிவிடுகிறது. ஒரு நல்ல மனிதரை பற்றி குறைகளை சொல்லும் போதுஅவர் கூறிய சிறந்த கருத்துக்கள் மதிப்பிழந்து மக்களிடம் எடுபடாமல் போய்விடகூடிய ஆபத்து இருக்கிறது. அவதூறு பேசுவதால் ஏற்படக்கூடிய விபரீதங்களுக்கு நாம் ஒரு போதும் துணைபோக கூடாது. 

ஒரு விஷயத்தை பற்றிய தெளிவும்அறிவும் இல்லாமல் போகிற போக்கில் முற்றும் சம்பந்தம் இல்லாதவர்களை பற்றி பேசிவிட்டு செல்வது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்ற சுய சிந்தனை அற்றவர்கள் அதிகம் உலவும் ஒரு இடம் நம் சமூகம். தன்னை பற்றியும்தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்காமல் எப்போதும் பிறர் முதுகையே வெறித்து பார்த்துக்கொண்டு வசை பாடும் கேவலங்கள் தனக்கு நேரும் போதே உணருவான்அதன் வலி எத்தகையது என்பதை !! 

நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை பற்றி வதந்திகளாக பரப்புவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அவசியம் தவிர்க்க வேண்டிய ஒரு வார்த்தை 'அவன் அப்படி சொன்னான்...!?' 

ஊடகங்களில் அவதூறு - இணையம்

இணையத்தை பொறுத்தவரை இது எல்லோருக்குமான பொது வெளி.இங்கே யாரும் யார் மீதும் சேற்றை வாரி வீசலாம் என்கிற படு கேவலமான நிலையே நிலவுகிறது.  இத்தகைய தனி நபர் தாக்குதல்கள் கண்டிக்கபட வேண்டியவை! ஒருவரின் எழுத்துக்கு எதிர்கருத்து வந்தது என்றால் உடனே கூறியவர் மீது வசைகளை வாரி போடுவதுடன்அவரது குடும்பத்தையும் இழுத்து வைத்து பேசி அசிங்க படுத்துவது என்கிற மனோபாவம் மிக மலிந்துவிட்டது. 

சொல்லபோனால் இது ஒரு மனநோய் போன்றது. பிடிக்காத பதிவர்களின் பதிவில் அவதூறான வார்த்தைகளை அள்ளிவீசி தங்களின் மனம் எப்படி பட்டது என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் ஒரு சிலர். இதில் சில பெண்களும் இருப்பதுதான் வருந்தகூடிய விசயம். சம்பந்தப்பட்டவரின் மனதை குத்தி கிழித்து அந்த ரணத்தை சுவைத்து பசியாறும் இத்தகையோர் பெருகி விட்டார்கள். 

அதிலும் பாலியல் ரீதியாக காரணங்கள் கண்டுபிடித்தோ அல்லது புதிதாக உருவாக்கியோ ஒருவரை இழிவு படுத்துவது என்பது இணையத்தில் சாதாரணமாகி போய்விட்டது. இதனால் பெரிதும் பாதிக்கபடுபவர்கள் பெண்கள். அவதூறு பேசும்போது அந்த செய்தியின் உண்மை தன்மை எத்தகையது என்று பார்க்கிறவர்கள் மிக குறைவுஅதுவும் பெண்கள் சம்பந்தப்பட்டது என்றால் மிக மோசமாக கற்பனைக்கு அளவின்றி திரித்து பேசப்படுகிறது... மேலும் பலருக்கும் பரப்பப்படுகிறது. 

இப்படி பாலியல் ரீதியாக ஒருவரை தூற்றுவதின் மூலம் தன்னை உத்தமர் என்று காட்டிக்கொள்ள முனையும் ஒரு தன்முனைப்பு இது. இவர்களை போன்றவர்களால் இந்த சமூகத்திற்கு என்ன விழிப்புணர்வை கொண்டுவந்துவிட முடியும் ?? பெரும்பாலும் ஈகோ காரணமாக ஒருவரை பற்றி கண்டபடி செய்திகளை வெளியிட்டு சம்பந்தப்பட்டவரின் மனதை காயபடுத்தி அதன் மூலம் கிடைக்க பெறுவது என்ன 

அவதூறு பரப்பியவரின் மனம் மகிழ்கிறது அவ்வளவே.!! சக மனிதரை துன்புறுத்தி இன்பம் காணுவதை மிருகங்கள் கூட செய்யாது. ஆறறிவு படைத்த மனிதன் செய்கிறான் ! 

 வெட்டெனப் பேசேல்      
 ஓரஞ் சொல்லேல் 
 ஔவை 

பத்திரிகைகளில் அவதூறு

'பத்திரிகை தர்மம்என்று ஒன்று இருந்த காலம் மலையேறி விட்டது பத்திரிகைகள் தங்களுக்கு விளம்பரம் ,சர்குலேஷன் பெருக சாதாரண செய்தியை கூட இட்டுக்கட்டி எழுதி வெளியிடுகிறது. இதை படிக்கும் பொதுமக்கள் எத்தகைய மனநிலைக்கு செல்வார்கள் என்கிற அக்கறைபொறுப்பு பத்திரிக்கைகளுக்கு இன்றைய காலத்தில் 
இல்லை. 

குறிப்பாக கள்ளக்காதல் செய்திகள்...உண்மையை விட்டு வெகுதூரம் 
சென்று 'இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ ?' என்ற அனுமானத்தின் மீது எழுதப்படும் செய்திகள்பரபரப்பிற்காக வலிந்து எழுதபடுபவை அதிகம். இப்படி பட்ட செய்திகளை பார்க்கும் போது சமூகத்தில் இத்தகைய உறவுகள் அதிகரித்து விட்டன என ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவது பத்திரிகைகளின் வெற்றிஆனால் இதனால் மக்களின் மனநிலை...?!! 

பரபரப்புக்காக மட்டுமே எழுதி பழக்கப்பட்ட அவர்கள் கைகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வகையில் கட்டூரைக்கு தலைப்பு வைக்கிறேன் என்னும் போக்கில் அவர்கள் செய்யும் செய்கைகளை பத்திரிக்கை துறையின் மீது வைத்திருக்கும் மரியாதையை தூரத்தில் இருக்கும் பாமரன் கூட ஏளனம் செய்ய தொடங்கிடுவான். 

அரசியல் 

ஒருவர் ஒரு கட்சியின் பால் ஈடுபாடு கொண்டவர் என்றால் பிற கட்சியை பற்றி தனது கருத்துக்கள்விமர்சனங்கள் பதியலாம்...மாறாக தனி நபர் தூற்றுதல் என்பது தன்னை முன்னிலை படுத்தி தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்  என்பதாக இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் தொடர்புடைய பத்திரிகைகள் இருக்கிறதுஅதன்  மூலம் தங்களுக்கு சாதகமாகவும் எதிர்கட்சியினருக்கு பாதகமாகவும் கருத்துகள் பேசப்படுகின்றன...ஆனால் இதை படிக்கும் சாமானிய மக்களின் புரிதல் எந்த விதத்தில் இருக்கும் என்பதை பற்றி எல்லாம் இங்கே யார் கவலை படுகிறார்கள் ...?! 

மேலும் ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார் என்பதற்காக அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி மோசமான தகவல்களை பரப்புவது எந்த விதத்தில் சரி என்றும் தெரியவில்லை. இது போன்ற செய்திகளால் மக்களுக்கு என்ன பகுத்தறிவு வளரப்போகிறது...?! 

பெண்களின் மீதான அவதூறு

ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தி பரவியதும் முதலில் சொல்லபடுவது 'காதல் தோல்வியா இருக்கும்'?! அதுவே திருமணமான பெண்ணாக இருந்தால் 'கள்ள காதலா இருக்கும்கணவனுக்கு தெரிந்திருக்கும் அதுதான் அவமானம் தாங்க முடியாமல் தூக்கில தொங்கிட்டா' ?!

இந்த சம்பவத்தின் பின்னணியில் உண்மையான காரணம் வேறு ஒன்றாக இருக்கலாம் . ஆனால் அதை பற்றி எல்லாம் இந்த சமூகத்திற்கு அக்கறை இல்லை. இவர்களுக்கு தேவை வாய்க்கு 'அவல்', அதுவே 'அவள்என்றால் மிக சுவாரசியம்...!!?  இது போன்ற அவதூறுகளால் இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் எவ்வளவு மன வேதனை அடைந்திருப்பார்கள்...?! 

ஒரு தாய் இறந்து அவளுக்கு இப்படி பட்ட கதைகள் பின்னப்பட்டு இருந்தால் அவளது குழந்தைகள் மனநிலை மற்றும் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். மனைவியை பற்றி கூறப்படும் அவதூறுகளை கேட்கும் கணவன் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ளகூடிய விபரீதங்களும் ஏற்படுகின்றன. 

பெண்ணை பற்றி பெண்ணே !?

பெண்ணை பற்றிய தவறான செய்திகளை அதிகம் பேசுவது பெண்களே என்பது சொல்ல வருத்தமாக இருந்தாலும் அதுதான் உண்மை. தன் வீட்டுபெண்ணுக்கு ஒரு பிரச்சனை என்றால் வாய் மூடி கொள்கிற அதே பெண்அடுத்தவீட்டு பெண்கள் என்றால் பின் விளைவைபற்றி  சிறிதும் யோசிக்காமல் கண்டபடி கதைகளை புனைந்து அசூர வேகத்தில் பரப்பி விடுகிறார்கள்.  சமூகத்திலும்குடும்பத்திலும் இது போன்ற ஒரு சில பெண்களால் அதிக தலைகுனிவுக்கு ஆளாகுவது பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும்தான். 

திருமணம் ஆன பெண்ணை பற்றி பேசபடுகிற அவதூறுகளால் அவளது மொத்த குடும்ப வாழ்க்கையே சிதறி சின்னாபின்னமாக போய்விடகூடும். திருமணம் முடியாத பெண்ணாக இருந்தால் அவளுக்கு திருமணம் என்பது கேள்விகுறி(?)..!  எதை பற்றியும் யாரை பற்றியும் அக்கறையின்றி வசைபாடுகிறது இந்த மனித கூட்டம்...!! 

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ,மன்னும் உயிர்க்கு? 

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். நல்ல மாற்றங்கள் மிக அவசிய தேவை இப்போது..யோசிக்க வேண்டும் நாம்..!!

கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 




12 comments:

kalil said...

தற்போதைக்கு தேவையான பதிவு

settaikkaran said...

சற்றும் யோசிக்காமல் பிறர் குறித்த அவதூறைப் பரப்புபவர்கள் தூக்குக்குத் தப்பிய குற்றவாளிகள் என்பது தான் நிஜம். உண்மைகளை பாசாங்கின்றி எழுதியிருக்கிறீர்கள். நன்று!

Anonymous said...

அருமையான‌ க‌ட்டுரை. இத‌ ப‌டிச்சாவ‌து சில‌ ஜென்ம‌ங்க‌ள் திருந்த‌ட்டும்...சில‌ர் அடுத்த‌வ‌ர்க‌ளை ஏவி விட்டு ஒளிந்து கொண்டு என்ன‌ ந‌ட‌க்குதுன்னு வேடிக்கை பார்க்கும் ர‌க‌ங்க‌ளை என்ன‌ன்னு சொல்ற‌து?

Unknown said...

பெண்ணை பற்றிய தவறான செய்திகளை அதிகம் பேசுவது பெண்களே என்பது சொல்ல வருத்தமாக இருந்தாலும் அதுதான் உண்மை//
இந்த விஷயத்தில் பெண்ணிற்க்கு நிகர் பெண்களே. நான்கு பெண்கள் சேர்ந்துவிட்டால் அங்கு கண்டிப்பாக யார் தலையாவது உருளும்.அதனால் பாதிக்கப்படும் நபரும் பெண்கள் தான் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது பெண்களுக்கு அடிப்படை குணமாக மாறிவிட்டதைப்போல் தெரிகிறது. அருமையான பதிவு ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க வழியில்லை”. அருமையான பதிவு . வாழ்த்துக்கள்.

Prabu Krishna said...

அடுத்தவர் பற்றி முழுமையாக தெரியாமல் பேசுவதும் தவறு, தெரிந்த பின் அதை அடுத்தவர்களிடம் பேசுவதும் தவறு.

Anonymous said...

ஒரு மனிதனின் மிக மோசமான குணம் எது?

கோள் சொல்லுதல். பிறரைப் பற்றி புறம் பேசுதல். நேரே இனிமையாக பேசிக் கொண்டு, மிக அன்பானவர் போல, நட்பானவர் போல நடித்துக் கொண்டு பின்னால், வேறு விதமாக பேசுகிற குணம்தான் உலகத்திலேயே மிக மோசமான குணமானது. களவோ, கற்பழித்தலோ, பொய் சொல்லுதலோ கூட பொறுத்துக் கொள்ளலாம். பிறரைப் புறம் சொல்லுகிற புத்தி ஒரு சாபம். இந்த சாபம் இன்னும் பல சாபங்களை உருவாக்கும். நீங்கள் எதிரே இனிமையாக பேசி பின்னால் புறம் சொல்லுகிறீர்கள் என்பது சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்து விட்டால், அவர் வயிறு எரிந்து உங்களை நோகிற போது, அது நிச்சயம் பலிக்கும். வாழ்க்கையில் ஒரு காலும் புறம் பேசாதீர்கள். பேச வேண்டியவற்றை முகத்துக்கு நேரே பேசி முறித்துக் கொள்ளுங்கள். இது பல நூறு முறை நல்லது.

# ஒரு கேள்வி பதிலில் திரு. பாலகுமாரன் அவர்கள் கூறியது.
கிட்டத்தட்ட இதும் கூட அப்படித்தான் போல...

@கௌசல்யா மேம்

கட்டுரை சூப்பர்பா வந்திருக்கு.
நல்லா எழுதிருக்கீங்க மேம்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்

By
மகேஷ்வரி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Anonymous said...

பேரறிவாளனைக் காக்க, களம் காண விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள: 9884877487, 9094817952 #Join4Justice

Thiruneelakandan said...

nalla sol nadai
sirantha karuthugal
;

nalla padivu

Kousalya Raj said...

@@ kalil...

வருகைக்கு நன்றி.



@@ சேட்டைக்காரன் கூறியது...

கருத்திற்கு மிக்க நன்றிகள்.



@@ MAHA கூறியது...

//சில‌ர் அடுத்த‌வ‌ர்க‌ளை ஏவி விட்டு ஒளிந்து கொண்டு என்ன‌ ந‌ட‌க்குதுன்னு வேடிக்கை பார்க்கும் ர‌க‌ங்க‌ளை என்ன‌ன்னு சொல்ற‌து?//

ரொம்ப புத்திசாலிங்க போல :)) இயன்றவரை அடுத்தவரை பற்றி தவறாக பேசாமல் இருப்பது முதலில் நம் மனதிற்கு நல்லது.

வருகைக்கு நன்றி மகா !

Kousalya Raj said...

@@ கே.ஆர்.விஜயன்...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி விஜயன்.



@@ பலே பிரபு...

நன்றி பிரபு



@@ நன்றி மகேஸ்வரி


@@ Rathnavel...

நன்றிங்க



@@ Thiruneelakandan...

நன்றி

Robin said...

Good post!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes