Wednesday, November 23, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (23.11.2011)





என்ன கனகு டீ குடிக்க போகலாமா..?? என்னது "டீ" யா..?? என்கிட்ட அந்த அளவுக்கு வசதி இல்லையே ரெங்கு.. சரி.. சரி..வா. டீ கடை இருக்கா இல்ல.. டாஸ்மாக்கா  மாறி இருக்கான்னு பார்ப்போம்.

கனகு : என்ன அண்ணாச்சி கடை இன்னும் இருக்கா..???

அண்ணாச்சி : என்ன கனகு சார் கிண்டலா..??  என்ன பண்றது எங்க தலையெழுத்து. தண்ணி இருக்கற கிணத்துல விழுந்து இருந்தா நீந்தியாவது பொழச்சு இருக்கலாம். இப்படி மொட்ட கிணத்துல விழுந்துட்டோம்..!!

கனகு : அட.. என்ன அண்ணாச்சி... இதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்க..?? இன்னும் எவ்வளவு இருக்கே..!!

அண்ணாச்சி : ஆமா.. ஆமா.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.. என்ன ரெங்கு சார்... ரொம்ப அமைதியா இருக்கீங்க..??

ரெங்கு : நீங்க "டீ" விலைய எவ்வளவு சொல்லபோறீங்கன்ற பயத்துல இருக்கேன். அதான்... ஒரு "டீ" விலை எவ்வளவுன்னு சொல்லுங்க..

அண்ணாச்சி : ரொம்ப கம்மி தான் ரெங்கு சார். 8 ரூபாய்

ரெங்கு : என்ன அநியாயம்..?? எனக்கு டீ வேணாம். வெறும் தண்ணி மட்டும் தாங்க..!!

கனகு : யோவ்... உனக்கு அந்த அம்மா பண்ணது அநியாயமா தெரியலையா..?? அவ்வளவு பெரிய அரசாங்கம் அவங்களே விலையேத்தும் போது நம்ம அண்ணாச்சி சின்ன கடை வைச்சு இருக்கார். அவர்  விலையேத்த மாட்டாரா..?! ஓட்டு போட்ட இல்ல... ஒழுங்கா டீ வாங்கி கொடு..!!

ரெங்கு : ஆமா.. ஆமா.. மாற்றம் வரணும்ன்னு போட்டேன். நல்லா காட்டுறாங்க மாற்றம்..

கனகு : சரி வா ரெங்கு. டீ வேணாம். அரசு புதுசா எலைட் பார் தொறக்கப்போறாங்களாம். அங்க போகலாம்.. உள்ள போக செலவு 50 ரூபாய் தான். அதை நான் தரேன். மீதி செலவு நீ பாத்துக்கோ..

ரெங்கு : யோவ் கடுப்பேத்தாதே... என்ன மாதிரி நடுத்தர வர்க்கம் எல்லாம் டீ குடிக்க முடியாம இருக்கோம். உனக்கு ஜில்ஜில் ஜிகா ஜிகா கேக்குதா..?? உன்ன மாதிரி கம்பியூட்டர் வேலை செய்றவங்களுக்கு தான் அந்த வேலை.. போ..

கனகு : ஆமா எங்களுக்கு வேலை செய்யவே நேரம் பத்தல.. இதுல அங்க வேற போகணுமா..?? காலேஜ் போற பசங்களை எல்லாம் வாங்க பழகலாம்.. வாங்க பழகலாம்ன்னு சொல்ற மாதிரி வாங்க குடிக்கலாம்..வாங்க குடிக்கலாம்ன்னு அரசு சொல்லுது... 

ரெங்கு : அப்போ இனி யாரும்  காலேஜ் போக மாட்டாங்கன்னு சொல்றீயா..??

கனகு : பின்ன முதல்ல எல்லாம் பசங்க வாங்கிட்டு போய் மறைவா பயந்து பயந்து குடிப்பானுங்க... இப்போ இவிங்களே மறைவா இடம் தராங்க.. இது போதாது..?? 


ரெங்கு : இலவச மின்சாரத்தை அதிகமாக்குது இந்த அரசு. பாருய்யா.. நல்லது செய்ற அரச இப்படி குறை சொல்றியே..?? 

கனகு : என்னய்யா சொல்ற..?! மின்சாரத்துறை மரணப்படுக்கையில் இருக்குறதா பொரட்சி தலைவி சொன்னாங்க... நீ என்ன ஏதாவது கனவு கண்டியா..??

ரெங்கு : ஆமாய்யா... மொதல்ல குடிசைகளுக்கு ஒரே ஒரு பல்புக்கு மட்டும் இலவசமா மின்சாரம் கொடுத்தாங்க.அய்யா டிவி கொடுக்கவும், டிவிக்கும் இலவசமா மின்சாரம் கொடுத்தாங்க, இப்போ அம்மா மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் தரப்போறாங்க இல்லையா... அதுக்கு ஏத்த மாதிரி மின்சாரம் இலவசமா தரப்போறாங்களாம்.

கனகு : அட என்னய்யா... பேசாம நாமளும் ஒரு குடிசை போட்டுட்டு உட்காரணும் போல... அப்பப்ப கரென்ட் கட் பண்ண சொல்லு. அப்பதான் டாஸ்மாக் போக முடியும்.

ரெங்கு : நீ அங்க போறதுலே இருய்யா..
கனகு : எதிர்க்கட்சி தலைவர் என்ன சொல்றார் இந்த விலையேற்றதுக்கு...??

ரெங்கு : அவர் இப்போ எழுந்துட்டார்ல... நாளைக்கு உண்ணாவிரதம் இருக்க போறார்ல..?? இனி அதிரடி தான் போ..

கனகு : உண்ணாவிரதம்ன்னா என்ன சைட் டிஷ் மட்டும் சாப்பிட மாட்டாரா..?? பார்த்துய்யா... இவரும் கொஞ்ச நேரம் உண்ணாவிரதம் இருந்துட்டு அவர் மட்டும் கொஞ்சம் நேரம்தானே உண்ணாவிரதம் இருந்தார். அதே மாதிரிதான் நானும் இருப்பேன்னு சொல்லப்போறார்.

ரெங்கு : மக்கள் நல பணியாளர்களை உடனே வேலைக்கு சேர்க்கணும்ன்னு கோர்ட் சொல்லிடிச்சே கனகு உனக்கு தெரியுமா..?? ஏன் இந்த அம்மா அவங்கள வேலையிலிருந்து எடுக்குறாங்கன்னு தெரியலப்பா..?

கனகு :  நம்மதான் மக்கள் நலப்பணி எதுவும் செய்யப்போறதே இல்லையே... அப்பறம் ஏன் அதுக்கு இவ்வளவு பேர்ன்னு நினைச்சு எடுத்து இருப்பாங்க.... 


ரெங்கு : அய்யா சாமீ... என்ன அடி வாங்கி வைக்காம விடமாட்ட போல... என்ன விடு.

கனகு : இருய்யா.. டீ வாங்கி கொடுத்துட்டு போ..

ரெங்கு : டீயா..?!  இனி நான் டீ குடிக்குறதா இல்ல. 

கனகு : டீ போச்சே..!!


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 
 

Friday, November 18, 2011

ஆபத்தான உணவா இந்த பரோட்டா????? ஒரு திடுக் பகிர்வு!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                   


பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 


பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. 



பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளை கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயானம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமகுகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
  
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான சீரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China  இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நீரழிவு  போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.



இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.



நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்விறகு  ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .





 நன்றி: வலைத்தளங்கள்
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

Thursday, November 17, 2011

குடிகாரத் தந்தையே மகளின் கரம் கொய்த கொடூரம்...! ஒரு ரிப்போர்ட்...!

திடுக்கிட்டுத்தான் போனோம் செய்தித்தாளில் இந்த செய்தியை நாம் வாசித்த பிறகு.... எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்? இதன் வேரில் புரையோடிப் போயிருக்கும் குறைகளை யார் நிவர்த்தி செய்வார் என்ற வேதனையில் மனம் துடித்ததை இங்கே எழுத்தாக்கி இருக்கிறோம்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மாணவி தனலட்சுமிக்கு தற்போது முழங்கைக்கு கீழ் மணிக்கட்டோடு கை கிடையாது ...? ஏன் என்று யோசித்து ஒரு வேளை எதிரிகளால் ஏற்பட்ட ஆபத்தாயிருக்குமோ, அறியாமல் ஏற்பட்ட ஆபத்தாயிருக்குமோ, வாகனங்களில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தாயிருக்குமோ, அல்லது சிறுவயதிலேயே ஏற்பட்ட ஏதேனும் ஒரு நோயின் விளைவாயிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்...?!



கிடையாது. அவளின் கரம் துண்டாடப்பட்டது...அவளது சொந்த தந்தையால். ஓ ! தகப்பனே ஏன் கையை வெட்ட வேண்டும் என்ற உங்களின் ஆச்சர்யமும் புரிகிறது. சுய நினைவில் ஒரு மனிதன் இருக்கும் போதே கோபத்தின் உச்சத்தில் அவன் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் போது அதிலும் குடி போதையில் இருந்தால்   வேறு என்ன செய்யும்....தன் சொந்த மகளின் கரத்தை வெட்டும் மிருகச் செயலைச் செய்யத்தானே தூண்டும்.?

குடிபோதையில் தன் அம்மாவிடம் சண்டையிட்டு அவளை அரிவாளால் புஜத்திலும், தலையிலும் தோள் பட்டையிலும்  மாறிமாறி வெட்டிய வெறி பிடித்த மிருகத்தை தடுக்கச் சென்ற அந்தச் சிறுமி நினைத்திருப்பாள் தான் பெற்ற மகள்தானே தன்னை ஒன்றும் செய்யமாட்டார் அப்பா என்று....

அவளின் கணிப்பு தோற்றுப் போனது....! போதையின் உச்சத்தில் மனிதனுக்குள் செத்துக் கிடந்த மனித நேயம் தடுக்க வந்த மகளின் கரத்தினையும் கொய்து போட்டது. விளைவு இன்று தனலட்சுமி முழங்கையோடு துண்டு பட்டு நிற்கிறாள்.

மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதின் பின் புலத்தில் இருக்கும் வருமானம் எல்லாம் சரிதான்...! மூலைக்கு மூலை டாஸ்மார்க்குகளில் மதுவினை விற்று விடுவதோடு, தனது பணி முடிந்து விடுவதாக அரசும் நினைக்கிறது. அதே அரசு 'மது வேண்டாம், மது தீங்கானது' என்ற கொள்கையையும் கொண்டிருப்பதால்தான் குடி குடியைக் கெடுக்கும் என்ற மண்டை ஓட்டு அபாயத்தோடு மதுவினை விற்பனையும் செய்கிறது.

ஆனால்... மதுவின் பயன்பாடு பற்றி எந்த ஒரு விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த அரசோ, அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ அல்லது சமூக விழிப்புணர்வு இயக்கங்களோ முயல்வது இல்லை.  இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக மது வேண்டாம் என்றே சொல்கின்றன. மது தீயது என்று கூவி கூவி அறிவிக்கின்றன.

மது வேண்டாம் என்று சொன்னால், மது தீங்கு என்று சொன்னால் லாட்டரி சீட்டுக்களை ஒழித்தது போல கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து ஒட்டு மொத்த தேசத்திலும் மது என்னும் அரக்கனை ஒழிக்க வேண்டும். ஆனால் நடை முறையில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அது சாத்தியம் இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் தடை செய்தால் கேரளாவில் இருந்து கள்ள மார்க்கெட்டில் வரும், இந்தியா முழுதும் தடை செய்தால் இலங்கையிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ திருட்டுத்தனமாக மது கடத்தப்படும். ஆகவே முற்றிலும் ஒழித்தல் என்பது சமகாலத்தில் சாத்தியமாகாது என்று நாம் கூறும் அதே நேரத்தில்....

மேலே நாம் குறிப்பிட்டுள்ள் தனலட்சுமிக்கு நிகழ்ந்த கொடுமையைப் போல மேல் தட்ட வர்க்கத்தில் அதிகம் நடப்பது இல்லை. அப்படியே நடந்தாலும் சதவிகிதத்தில் குறைவு என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே....? காரணம் மது பற்றிய விழிப்புணர்வினை பெரும்பாலும் மேல் தட்டு வர்க்கம் அறிந்தே வைத்திருக்கிறது. ஓரளவிற்கு வெளித் தொடர்புகளும் மது பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களும் அதை சரியான விகிதத்தில் பயன் படுத்திக் கொள்கின்றனர்.

மது பற்றி விழிப்புணர்வின்றி அடித்தட்டு மக்களே பெரும்பாலும் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். மதுவினை தீர ஒழிக்க வேண்டும் என்று போர்கொடி தூக்கிக் கொண்டு நடைமுறையில் சாத்தியமில்லாத விடயங்களுக்காக போராடுவதை விட அடித்தட்டு மக்களுக்கு மதுவின் பயன்பாடுகளைப் பற்றி விளக்கவும், அதனை குறைவாக பயன்படுத்தினால் என்ன நிகழும்...?! அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கும், பொருளுக்கும் உறவுகளுக்கும் என்ன மாதிரியான கேடுகள் வரும் என்பதை விளக்கும் பிரச்சாரத்தை...அரசும், சமூக நல ஆர்வலர்களும் சொல்லலாம் என்பதோடு மட்டுமில்லாமல்...

தனி மனிதர்களாகிய நாம், நமது பகுதியில் இருக்கும் அல்லது நாம் அறிந்த தெரிந்த குடும்பங்களில் இருக்கும் மதுவினை முறையற்றுப் பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் இது பற்றிய விழிப்புணர்வை வாய்ப்பு கிடைக்கும்போது பண்போடு எடுத்துக் கூறலாம். இவையெல்லாம் உடனடி மாற்றத்தைக் கொடுக்கா விட்டாலும், முதலில் மதுவைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மது வேண்டாம் என்று ஒவ்வொரு மனிதனும் தானே முடிவெடுக்கும் நிலைமை ஏற்படும்....

அந்த பொன்னான நாளில் டாஸ்மார்க்குகள் போன்ற மதுக்கடைகள் வியாபாரமின்றி தன்னிச்சையாக தனது ஷட்டர்களை மூடிக்கொள்ளத்தான் வேண்டும்....! தனி மனித மாற்றம் இந்த சமுதாயத்தை செழுமையாக்கும் என்ற உண்மையை உணர்ந்தால் தனலெட்சுமிகளின் கரங்கள் வெட்டுப்படாமல் இருக்கும் என்பதையும் அறிக;

உதவி செய்யலாமே !

கரம் வெட்டுப் பட்ட தனலட்சுமி தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இராமநாத புரம் ஆஞ்சலோ விடுதியில் தங்கியிருக்கும் அவரது பள்ளியின் ஆசிரியர் ஜெபாஸ்டின் வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார். விறகு சுமக்கும் வேலை செய்யும் தனது தாயாராலும், மில்லில் வேலை செய்யும் தமது சகோதரியாலும் போதிய வருவாய் கிடைக்காமலிருக்கும் தனலட்சுமி தனக்கு நவீன செயற்கை கை கிடைக்க அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார். எதிர்காலத்தில் ஒரு போலிஸ் ஆபிசராகி குடிகாரர்களை திருத்துவதே தனது லட்சியம் என்று கூறும் தனலட்சுமியின் கனவு பலிக்கட்டும் என்றே நாமும் விரும்புகிறோம்.

சகோதரி தனலட்சுமிக்கு மேலதிக உதவிகள் செய்ய விரும்புவோர் கீழ்கண்ட அலைபேசிகளை தொடர்பு கொண்டு உங்களின் உதவிகளைச் செய்யவும்....!

சதானந்தம் - 97867 13264

ஜெபஸ்டின் - 94420 48565.

விழிப்புணவு பெற்ற ஒரு சமுதாயத்தில் மிருகங்களை ஒத்து மனிதர்கள் நடப்பது இல்லை.....! நாம் நிஜத்தில் விழிப்புணர்வு பெற்ற ஒரு சமுதாயத்தின் அங்கம்தானா என்று உங்களின் மனசாட்சியினை தொட்டு கேட்டுப் பாருங்கள்....என்ற வேண்டுகோளோடு கட்டுரையை நிறைவு செய்கிறோம்...!

கழுகிற்காக   
 தேவா 

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


Wednesday, November 16, 2011

விபத்தில்லா உலகம் படைப்போம்...!

அன்பர்களே !

நீங்கள் இந்த  கட்டுரைக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி ....நம்மால் விபத்து இல்லா உலகம் படைக்க எது எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதை மீண்டும் செய்வதில் சொல்லுவதில் தவறு இல்லை ....

இப்போது நடக்கும் விபத்துகளை எதிர்காலத்தில் அதாவது அடுத்த தலைமுறையில் இல்லாமல் பண்ணலாம் ....அது எப்படி?

பொதுவா நாம் நமது சந்ததியினரிடம் விபத்து பற்றி சொல்லித்தருவதில்லை ...அதிக பட்சம் நாம் நமது பசங்களிடம் அவர்களுடைய SAFETY-ய தான் சொல்லுவோம் ..."தம்பி பார்த்து போ"
"ஜாக்கிரதையா போ" ...இதைத்தான் சொல்லுவோம் ....

அதிகவேகம்,கவன குறைபாடு, விதிமுறை மீறல், ஓவர்டேக், ஓய்வின்றி ஓட்டுதல், திமிர்த்தனத்தால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அடுத்தவர்களால் ஏற்படும் விபத்துக்கள்....
இதை எல்லாம் அவர்களுக்கு நாம் சொல்லித்தருவதில்லை ....

நாம் ஒவ்வொருவரும் நமது சந்ததியினருக்கு அதாவது அவர்கள் சற்று விவரம் தெரிந்தவர்களாக மாறும்போது இதை பத்தி நாம் விளக்கமாக கூறி ..அவர்களை பண் படுத்த வேண்டும்.

சாதாரணமாக நாம் நம் குழந்தைகளை வெளியில் அழைத்துக்கொண்டு செல்லும்போது மற்றவர்கள் இரு சக்கர வாகனத்தையோ அல்லது மூன்று,நான்கு சக்கர வாகனத்தையோ மிக மோசமாக ஓட்டி வர நேர்தால் அதை குறிப்பிட்டு எப்படி தவறுதலாக வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதை எடுத்து கூறுங்கள்...



எப்படி எப்படி வாகனம் ஓட்ட கூடாது என்பதை சந்தர்ப்பம் வாய்க்கும்போது நேரடியாக கூற தயங்காதீர்கள் ....இதெல்லாம் இந்த வயதில் அவர்கள் மனதில் ஆழமாக பதியும். விதிமுறைகளை மதித்தல் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதோடு நாம் வாகனத்தை இயக்குபவர்களாக இருந்தால் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து சரியாக வாகனத்தை இயக்கிக் காட்ட வேண்டும்.

நீங்க சொல்லித்தரும் ஒவ்வொரு விபத்து மற்றும் முன்னெச்சரிக்கை பற்றிய விஷயமும் உங்க குழந்தைகள் பள்ளியில் தன் நண்பர்களிடம் பேசவும் விவாதிக்கவும்.வாய்ப்புகள் உண்டு . இந்த விஷயங்கள் மற்ற குழந்தைகளிடம் மிக எளிதாக ....சென்றடையும் ....

இது மட்டும் வரும் தலை முறையினரிடம் பதிந்து விட்டால் நிச்சயம் விபத்தின் எண்ணிக்கை வரும் காலங்களில் குறையும் ...

இங்கு தேவை நம்மிடம் உளவியல் ரீதியான மாற்றங்கள் மட்டுமே ...

ஆனால் அன்பர்களே ...ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் ...OVERDOSE---அந்த குழந்தைகளின் மனதை ரொம்ப பாதித்து விடும் ...இதை கருத்தில் கொண்டு விபத்தின் தாக்கம் அவர்களுக்கு புரியும் படி,,புரியும் வயதில் சொல்லித்தாருங்கள் .....

விபத்துகள் எண்ணிக்கை நம்மால் உயராமல் பார்த்துக்கொள்வதில் உறுதியாய் இருப்போம்.



டிரைவிங் டிப்ஸ் :- இது சில பேருக்கு தெரிந்திருக்கும்....தெரியாதவர்களுக்காக அன்பர்களே... நாம் கார்-ல் செல்லும்போது மழை,,,,கடும் பனி காலத்தில் கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு செல்வோம் ...அப்படி செல்லும்போது காரின் உள்பக்கம் முன் கண்ணாடி பனியினால் பூத்திருக்கும் .....அதை நாம் துணி வைத்து துடைத்துக்கொண்டே செல்வோம் ...மிகவும் சிரமத்துக்கு உரிய செயல் இது.....


இவ்வாறு செல்ல நேரிட்டால்...தாங்கள் காரில் A/C வசதி இருந்தால் A/C -யை ON செய்துவிட்டு (குறைந்த CHILLNESS-ல் ) சென்றால் கண்ணாடியின் உள்பக்கம் பனி பூக்காது.....

கழுகிற்கா

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes