Friday, October 28, 2011

அத்து மீறும் பிள்ளைகள்.. ஆபத்தான விபத்துக்கள்! கலந்துரையாடலாக ஒரு ரிப்போர்ட்!


சம காலச் சூழல்களை பற்றிய எமது பார்வையை எமது குழும தோழமைகள் (மகளிர்), தங்களின் பார்வையில் அலசும் புதியதொரு பகுதியை எமது மரியாதைக்குரிய வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆழமான, தேவையான விடயங்களை இயல்பாய் பகிரப் போகும்.....இந்த உரையாடலுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்...!






மகேஷ்: வாங்க கௌசல்யா எப்டி இருக்கீங்க? முகத்தை பார்த்தா ஏதோ கவலை ரேகை ஓடுற மாதிரி இருக்கே! ஏதும் பிரச்சனையா? 

கௌசல்யா: ஆமா மகேஷ்... இந்த ஸ்கூல்ல படிக்குற பிள்ளைங்கள நெனச்சுத்தான்.., நெல்லையில் என் பையன் கூட படிக்கும் பதினைந்து வயதே பையன் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்து விட்டான்பா. 

மஹா: அச்சோ! கவலையான விசயம் தான்...சாலை விபத்து எப்படி நடந்தது...? அதைப் பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..  

கௌசல்யா: அந்த பையன் பைக் ஓட்டிட்டு போனபோது விபத்து நடந்திருக்கு... 

மகேஷ்: என்ன 15 வயசு பையன் பைக் ஓட்டிட்டு போனானா ? என்னங்க இது அநியாயம்...? அவங்க வீட்ல இதுக்கு எப்படி அனுமதிச்சாங்க...?! விரிவா சொல்லுங்க...  நம்ம கழுகு வாசகர்களும் தெரிஞ்சுக்கட்டும்.. 


வாங்க...கௌசல்யா என்ன சொல்றாங்கனு கேட்போம்........ 

கௌசல்யா: ம்ம்ம்...இப்ப நினைச்சாலும் வருத்தமாக இருக்கு...! தன்னோட நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்திருக்கிறான். அப்போ மத்த பசங்க கொஞ்ச நேரம் ஜாலியா நான்கு வழிப்பாதை வரை போயிட்டு வருவோம்னு கூப்பிட்டு இருக்காங்க. இவனும் தன் நண்பர்கள் எதிரில் தன் திறமையை காட்டனும்னு போய் இருக்கிறான்.  முதல்ல சாதாரணமா வண்டியை ஒட்டியவன் நண்பர்களின் உற்சாக கூச்சலில் வெகு தூரம் சென்று சட்டென்று ஹிட் (?) அடித்து திரும்பி இருக்கிறான். 

அந்த நேரம் எதிர்புறத்தில் வந்த லாரியில் மோதி தூக்கி எறியப்பட்டு அதேஇடத்தில இறந்து விட்டான். பின்னால் அமர்ந்து வந்த நண்பனும் அடிபட்டு துடிதுடித்து கொண்டிருந்திருக்கிறான். அது ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வேற. ரொம்ப நேரமா யாரும் கவனிக்கவில்லை. அப்புறம் ஒருத்தர் மூலமா தகவல் போய் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இறந்த பையனை அப்படியே போட்டுவிட்டு,(இறந்துவிட்டால் கொண்டுபோக மாட்டார்களாம்?!) உயிருக்கு போராடிகொண்டிருக்கிற பையனை மட்டும் தூக்கி கொண்டு போய்ட்டாங்க. இரண்டு மணி நேரம் கழிச்சுதான் இறந்த பையனை வீட்டிற்கு தூக்கிட்டு போனாங்க. 

கல்பனா: அப்டியா! கடவுளே!!!....... ம்ம்... 108 பற்றிய இந்த விசயம் எனக்குப் புதுசு.. ம்ம்ம் அப்புறம்... 

ஆனந்தி: ஆமாம்பா..இதை ஒரு சம்பவம் என்ற விதத்தில் நாம் சுலபமாக கடந்து விடுவோம். ஆனால் நாளை நம்ம வீட்ல இது போல நடந்தா நினைக்கவே பயமா இருக்கு ??!!

ஏன் இப்படி மனதை பிசையவைக்கிற சம்பவம் எல்லாம் நடக்குதோ ? இதை தடுக்கவே முடியாதா? 

மகேஷ்: ஏன் முடியாது?  நம்ம கழுகுல கூட எத்தனவாட்டி இதைப் பத்தி படிச்சு படிச்சு சொல்லிருக்கோம்.. இந்த மாதிரிலாம் நடக்குது எச்சரிக்கையா இருங்கன்னு. கொஞ்சம் ரூல்ஸ்லாம் ஸ்ட்ரிக்ட் பண்ணும்னு... அதோட நெறய ஐடியாஸ் கூட பகிர்ந்துக்கிட்டோமே...கல்பனா...  அந்த லிங்க் எடுத்துக் குடுடாம்மா.. இங்க மறுபடியும் பகிர்ந்துப்போம்... 

கல்பனா: இந்தாங்கக்கா அந்த லிங்க்  http://www.kazhuku.com/2011/03/blog-post_30.html 

மஹா: நம்ம பிள்ளைகள குறை சொல்றோமே.. இந்த பேரண்ட்ஸ்லாம் எப்டி பிஹேவ் பண்றாங்க இந்த விசயத்துல...? 

கௌசல்யா:  அதை ஏன் கேக்குறீங்க!!  பிள்ளைகளின் வரம்பு மீறிய அத்தனை செயல்களுக்கும் ஒருவிதத்தில் பெற்றோர்கள் தான் ஒரு முக்கிய காரணம்னு நான் சொல்வேன். 13, 14 வயசில  இருசக்கர வாகனம் அவசியமா ? லைசென்ஸ் 18 வயதிற்கு பிறகு என்று இருக்கிறபோ அதற்கு முன்னாடி என்ன அவசரம். என் பொண்ணு என்னமா ரைம்ஸ் சொல்றா பாருங்க என்று ஆரம்பிக்கிற பெற்றோர்களின் ஆர்வம், என் பையன் இப்பவே பைக் ஓட்டுறான் என்பதில் வந்து நிற்கிறது. 

நம்ம பிள்ளைகள் ஒழுங்கா போனாலும் எதிர்ல வர்றவங்க தாறுமாறாக வண்டியோட்டி வந்தால் என்ன செய்வது ?  கூடுமான வரை இருசக்கர வாகனங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் போட்டி போட்டு ஓட்டுகிறேன் என்று சாலையில் செல்வோரை கதிகலங்க வைக்கிறார்கள் சிலர். போட்டிகளையும் அவர்களுக்குள் வைத்துக்கொண்டு (உயிருடன்!) விளையாடுகிறார்கள். 

கல்பனா: நீங்க சொல்றதும் சரிதான்.. எங்க பார்த்தாலும்.. இந்த சின்ன சின்ன பசங்களாம் வண்டி ஓட்டிட்டு அலையுதுங்க.. கஷ்டமாதான் இருக்கு..., ஹெல்மெட் போடுறது பத்தியும் ஒரு விழிப்புணர்வு கிடையாது, வண்டி ஓட்டுறது பத்தியும் ஒரு விழிப்புணர்வும் கிடையாது

மகேஷ்: சரி...மற்ற நாட்டுலலாம் எப்டி ரூல்ஸ் இருக்குனு நம்ம ஆனந்திட்ட கேட்போம்... ஆனந்தி அங்க அமெரிக்கால எல்லாம் எப்டி? இந்த மாதிரி ஸ்டூடண்ட்ஸ்/ சிறு பிள்ளைகள் வண்டி ஓட்றது அங்க சுலபமா? கொஞ்சம் இதப் பத்தி சொல்லுங்க ஆனந்தி.. 

ஆனந்தி: ஆனா இங்கலாம் அப்டி இல்லப்பா!! நெடுஞ்சாலையில் இருபுறமும்.. Maximum speed.. Minimum Speed குறிப்பிடப் பட்டு இருக்கும். உதாரணத்திற்கு 45 மைல் வேக அளவென்றால்.. நீங்க 50 இல் போனால் கூட.. பிடிக்க வாய்ப்பு இருக்கு,.

மாணவர்கள்.. 15 வயதை நெருக்கும் போதே.. வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ள தொடங்கலாம்... அப்படி அவர்கள் 100 மணி நேரம் பாதுகாப்பாய் வண்டி ஒட்டியதாக அவர்கள் பெற்றோர் (certify) குறிப்பிடும் போது... Learner's license வழங்கப் படும். அப்போதும்.. யாராவது ஒரு அடல்ட் (adult) கூட இருந்தால் மட்டுமே வண்டி ஓட்டலாம்.16 வயது நிரம்பினால்... கூடுதல் தகுதி கிடைக்கும்.. அப்போதும் night curfew... அதாவது ராத்திரி வண்டி ஓட்டுவதற்கான விதிமுறை.. இரவு 10 மணி -முதல்- அதிகாலை 5 மணி வரை... அவர்கள் வண்டி ஓட்டக் கூடாது. மீறினால் தக்க தண்டனை கிடைக்கும்.  18 வயது வரை.. வண்டி ஓட்டும் போது தன்னுடன் ஒரே ஒரு நபர் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். கும்பலாக வண்டியில் ஏற்றி செல்லக் கூடாது. 



18 வயது நிரம்பினால் அவர்கள்.. Gratuated license... எல்லா உரிமையும் பெற்று.. வண்டி ஓட்ட முடியும். அப்போதும் .. காப்பீடு அவசியம்.. இல்லை என்றால், வண்டி ஓட்ட இயலாது.இங்கே அமெரிக்காவில்... பொதுவாக.. மாணவர் பருவத்தில் எனக்கு தெரிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்ததில்லை...  அவர்களின் பாதுகாப்பு கருதியே இப்படி இருக்கலாம்..! பெரும்பாலும், நான் பார்த்த வரையில்.. Adults / Grown ups... தான் இரு சக்கர வாகனம் ஓட்டி பார்த்திருக்கிறேன்.



மகேஷ்: ஆஹா!!! ஆனந்தி கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.. எவ்ளோ விசயம் கடகடனு உங்க ஸ்டைல்லயே சொல்லிட்டீங்க... மஹா கடைசியா இந்த கெட் டூ கெதர் மூலமா நாம என்ன சொல்லப் போறோம் அப்டின்றத தெளிவா சொல்லிடுங்க..அதுக்கு முன்னாடி நானும் ஒரு விசயம் சொல்லிடுறேன்.. 

ஆனந்தி: ம்ம் சொல்லுங்க மகேஷ்... உங்க காலேஜ்ல கூட சைக்கிள் மட்டும் தான் அலவ்ட்னு கேள்விப்பட்ருக்கேன்.. நல்ல விசயம்... 

மகேஷ்: ஆமாங்க ஆனந்தி.. அது மாசுக்கட்டுப்பாடுக்காக... அப்புறம் இங்கயும் கூட சில நேரங்களில் பெண் பிள்ளைகள் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, கவனமின்றி துப்பட்டாவை காற்றில் பறக்க விட்டுக் கொண்டும், வெயிலில் இருந்து தப்புவதற்காக துப்பட்டாவை ஏதோ தீவிரவாதிகள் போல் முகத்தைச் சுற்றிக் கொண்டும் செல்வதை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். இதுவும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். நன்றாக பின்(pin) போட்டோ, முடிச்சு போட்டோ செல்வது தான் நல்லது 

மஹா: பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல் வேண்டும், கண்காணிக்கவேண்டும். சென்ற வருடம் சாலைவிதிகளை அவசியம் பின்பற்றவேண்டும் என்பதை பற்றிய ஒரு பாடத்திட்டத்தை கொண்டுவர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிடப்பட்டதாக சொன்னார்கள் இப்போது வரை அறிவிப்பு கிடப்பில் தான் கிடக்குது...!


ஓட்டுனர் உரிமம் பெறும் விதிகளை இன்னும் கடுமையாக்கணும். பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் வண்டி ஓட்டினால் அபராதத் தொகை அதிகமாக்கப் படணும். எச்சரிக்கை கடுமையாக இருக்கவேண்டும்.


அமெரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக செல்வதற்கும் குறைவான வேகத்தில் செல்வதற்கும் தனிதனி வழித்தடம் உள்ளதாம். இதற்கென்று டோல்கேட் மூலம் தனியாக கட்டணம் வசூலிக்க படுகிறது. கூடுதல் தகவல் என்னவென்றால், வேகமாக செல்லும் சாலையில் மெதுவாக சென்றால் அபராதம் வசூலிக்கபடுகிறது. அதுபோல குறைவான வேகத்தில் செல்லும் சாலைகளில் வேகமாக சென்றால் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அபராதம் வசூலிக்க படுகிறது. என்ன ஆனந்தி நான் சொல்றது சரிதானே ??


ஆனந்தி: ஆமாம் மகா சரிதான். 

கல்பனா: கடைசியா நானும் ஒன்னு சொல்லி முடிக்குறேன்.. உதாரணமா சிக்னலில் நிற்க வேண்டிய இடத்தில் நின்று செல்வது போன்ற விடயங்களை நாம் செய்யும் பொழுது நம் பிள்ளைகள் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள். சாலை விதிகளை மதிக்கவும், அதைப் பின்பற்றவும் பிள்ளைகளுக்கு கற்பிப்பதோடு நாம் நின்றுவிடாமல், நாமும் அதைக் கவனமாக பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொள்வோம்.



அடுத்த கெட் டு கதர்ல மீட் பண்ணுவோம்... அதுவரைக்கும் பை டூ ஆல்...


ஆல்: ஓ.கேபா.. அடுத்த மீட்டிங்கல சந்த்திப்போம்...நன்றி வணக்கம்.




Friday, October 21, 2011

வாருங்கள் பதிவர்களே சரித்திரம் படைப்போம்....!


அன்பு சொந்தங்களே ....



பொதுவாக காலையில் எழுந்தவுடன் டிவி பேப்பர் என நாம எந்த ஊடகத்தை பார்த்தாலும் ,,,ஒரே விபத்து செய்திதான்......ரயில் விபத்து ..விமான விபத்து ...கப்பல் விபத்து,,இப்படி எத்துனையோ விபத்துக்கள் ....ஆனாமுக்கியமானது சாலை விபத்து...




முக்கியமாக இந்த சாலை விபத்துனால நம்மள்ள நிறைய பேர் ,,,எவ்வளவோ பாதிப்பு அடைந்திருப்போம் .....(நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ) இந்த விஷயத்தை சொல்லி மாளாது .....ஒவ்வொருவருக்கும் அவ்வளவு சோகம் இந்த விஷயத்தில் இருக்கும் .... 


நாம நேரடியா விஷயத்துக்கு வருவோம் .....



நாட்ல நடக்கிற விபத்துல 90 % விபத்து வாகனத்தால் நடக்குது, அதுவும் அதிலையும் இரவு நடக்கும் விபத்துக்கள் தான் மிக அதிகம் ...



Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.



இந்த விபத்துக்கு என்ன காரணம் என்று பார்த்தால்வாகனங்களில் உள்ள மிக பிரகாசமான முகப்பு விளக்குகளே (HEAD LIGHTS)..!!! அந்தந்த வாகனங்கள் தாங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள்  தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...





முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???





"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
 
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். ஒரே ஒரு அரசு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும் சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?
பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 
இந்திய அரசாங்கம்,, National Automotive Testing and R AND D Infrastructure Project,,    Ministry of Road Transport & Highways:,,,  Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009,,,Transport Secretaries OF Government of Tamil Nadu,,, 
இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய முடியும்.
அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம். (மின்னஞ்சல் பார்மேட் வேண்டுவோர் கழுகு மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யவும்)




இந்திய அரசாங்கம்:-
National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
Ministry of Road Transport & Highways:-
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in
Transport Secretaries OF Government of Tamil Nadu:-transec@tn.gov.in







 அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...




நம்மால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.
1.GOVT OF INDIA,, NEW DELHI


2.Ministry of Road Transport & Highways,NEW DELHI

3.Transport Secretaries,,  Government of Tamil Nadu,CHENNAI, 600 009.

மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள் ,,தேவையான மெயில் ID-கள் ,,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ..

நன்றி !!!

கழுகிற்கா

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

Wednesday, October 19, 2011

மனமென்பது மாயமா? மனித உள்ளுணர்வு சீரமைப்பு பற்றிய பார்வை...!





கழுகு தோழமைகளே.. வணக்கம். நம் மனதில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும் தீபாவளி பக்கமா வந்திட்டுது..நம்மில் பலர் வேலை செய்கிறோம்,கை நிறைய போனஸ் வரலாம். சுய தொழில் புரிபவர்க்கும் ஓய்வு என்ற வகையில் குடும்பத்தோடு உறவாட ஒதுக்கப்போகிற மகிழ்ச்சியான தருணங்கள் நமக்காக காத்திருக்கின்றன. இந்த வேளையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் உண்மையாகவே மகிழ்வாக இருக்கிறோமா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அதன்பின் வரும் நாட்களில் ஏன் அதுபோல் மகிழ்வாக உணர்வதில்லை என்பதையும் சற்று உள்நோக்கிப்பார்ப்பது அவசியமாகத்தான் தெரிகிறது..:)

நமது மனதில் வரும் சஞ்சலங்களுக்கு, துன்பங்களுக்கு பல்வேறு காரணம் இருக்கலாம்.பணம், உறவுகள், நட்புகள் குடும்பம் வேலை என காரணம் பலவாக இருந்தாலும் அத்தனையிலும் அடிநாதமாக மறைந்து இருக்கும் முக்கிய காரணத்தைப்பற்றிப் பார்ப்போம்.

அதாவது நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம், என்ன உணர்கிறோம் என்கிற விழிப்புணர்வு இல்லாததே நமது இத்தகைய துன்பங்களுக்கு காரணம்.அதாவது எந்த பிரச்சினையின்போதும் நாம் போதுமான விழிப்புணர்வுடன் இருப்பதில்லை என்பதை உணராததே முக்கிய காரணம். இதனால்தான் நம்முடனே நாம் முரண்பட்டுக்கொண்டே இருக்கிறோம்:(

 நமது செயல் ஒரு திசையில் செல்கிறது. சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது. உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது.இந்த சூழ்நிலையில் நாம் இயங்கும்போதுதான் எல்லா பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. இதை ஒருங்கிணைக்க தேவை விழிப்புணர்வு. இது இல்லாததே எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை ஆகும். இந்த புரிதல் நமக்குள் முதலில் வரவேண்டும்.

விழிப்புணர்வின்மையை சரிசெய்தால் நாம் எளிதில் பிரச்சினைகளில் பாதிப்புகளில் இருந்து நாம் வெளிவர இயலும். இதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு விசயம். கவனம் நிறைந்திருத்தல், சுயபிரக்ஞையோடு இருத்தல்தான், அப்படி என்றால் என்ன? அதை நாம் எப்படி செயலுக்கு கொண்டு வருவது?

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள்.மிகச்சிறிய அசைவுகளைக்கூட அதாவது நடத்தல் பேசுதல் சாப்பிடுதல் குளித்தல் ஆகிய எந்த ஒரு சிறிய செயல்/அசைவுகளைக் கூட கவனியுங்கள். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருங்கள்...

சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிடுங்கள். கவனம் நிறைந்து சாப்பிடுங்கள். இது அபரிதமான திருப்தியைக் கொடுக்கும்.ருசியும் அற்புதமாக இருப்பதும் தெரியும். அதேபோல் நுகர்தல், தொடுதல், காற்றை உணர்தல் என கவனித்தலோடு இருங்கள்.

உங்கள் மனதில் கடந்து செல்லும் ஒவ்வொரு எண்ணத்தையும் கவனியுங்கள்.

உங்களை ஆட்கொள்கிற ஒவ்வொரு ஆசையையும் கவனியுங்கள்.அந்த , ஆசைகள் எண்ணங்கள் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நாம் செய்ய வேண்டியது கவனித்தல் மட்டுமே.,

இதை மீண்டும் மீண்டும் நீங்கள் மறக்கலாம். கவனித்தல் அற்றுப்போய் மனம் எங்கோயோ ஓடிவிடலாம். அதற்காக துளிகூட மனம் வருந்தாதீர்கள். அது இயல்பானது. உங்களுக்கு மீண்டும் தவறிவிட்ட உணர்வு வந்தவுடன் மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள். மறந்துபோனோம் என்ற கடந்தகாலத்தை நினைத்து அதை மீண்டும் உருவாக்கி மனம் வருந்தாதீர்கள். எத்தனை முறை தவறினும் மறுபடியும் கவனித்தலைத் தொடர்வதே நீங்கள் செய்ய வேண்டியது:)

இந்த நொடிப்பொழுதில் வாழுங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு கவனித்தலோடு இருக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களது செயல்,சிந்தனை,உணர்வுகள் ஒருங்கிணைய ஆரம்பித்துவிடும். உங்களது அவசரத்தனம் குறையும். நீங்கள் அப்படி கவனிக்கும்போது எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்ற உங்களது மனம் தனது பேச்சைக் குறைத்துவிடும்.ஏனெனில் பேச்சாக மாறிவந்த அதே சக்தி இப்போது கவனித்தலுக்கான சக்தியாக, நிறைகவனமாக மாறிவிடும்.

நீங்கள் உங்கள் உடல் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதோடு செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடல் குறித்த நிறைகவனம்தான் முதல்படி. இதேவிதமாக நாம் நமது ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும்.

பின்னர் உங்களது எண்ணங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள் உங்கள் உடல்மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்கள் எணணங்கள் மீது செலுத்த தொடங்குங்கள். இதை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களின் அனுபவங்களை கொஞ்ச நாள் கழித்து பகிர்ந்து கொள்ளுங்கள்...


       
      கழுகிற்கா


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்) 

 

Monday, October 17, 2011

இந்தியர்களுக்கான 12 இலக்க அடையாளம்...! ஆதார் எண் பற்றிய ஒரு பார்வை!






ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்.அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும். 


இந்த எண் உங்களுடைய முகவரிக்கான அடையாளமாக இந்தியா முழுவதும் செல்லுபடியாகக்கூடியது.



ஆதார் பெயர்க்காரணம்: 


அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் 


உருவானதுதான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம்.   



ஆதாரில் அடங்கியுள்ளவை:

இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு, இடது கை மற்றும் வலது  கை விரல்களின் ரேகை,  போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து
வைக்கப்படும்.



தனித்துவம்:

இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது உங்களுடையதே வேறு எவருக்கும் இந்த எண் வழங்கபட மாட்டா.

இது ஒரு ரேண்டம் எண், இந்த எண் நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தரப்படும் .



எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்:

இந்த ஆதாரை பயன்படுத்தி வங்கியில் கணக்கு துவங்கலாம்.புதிய தொலைப்பேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளைப் பெறுவதற்காகவும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். 


எப்படி வாங்குவது:

கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் முகாம் உள்ளது. எனவே தத்தம் மாவட்ட முகாம்களுக்கு ஆதார் அட்டை தேவைப்படுவோர் கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.புகைப்பட அடையாள சான்று ( பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)

2.முகவரிக்கான சான்று (மின்  கட்டண ரசீது ,தொலைபேசி ரசீது, குடும்ப
அட்டை,வீட்டு வரி ரசீது போன்றவை )

 

அங்கு சென்றவுடன் உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதியப்படும். பின்பு உங்களின் விழி அமைப்பு, கைரேகை,புகைப்படம் போன்றவை பதியப்படும் அவ்வளவுதான். உங்களுக்கான தற்காலிக எண் வழங்கப்படும் (ஒரு அத்தாட்சி சான்று).

நமது வங்கி கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களும் தரவேண்டும் (அவரவர் விருப்பத்தை பொருத்து).



தற்காலிக எண் :

அதாவது நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 60 -90 நாட்களுக்குள் ஆதார் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

இல்லையெனில் இந்த தற்காலிக எண்ணை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த எண் 28 இலக்கங்களை கொண்டது . முதல் 14 இலக்கம் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் நீங்கள் பதிந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பதாகும்.      

வயது வரம்பு உண்டா:

இந்த திட்டதிற்கு வயது வரம்பே கிடயாது . பிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம் .

இன்னாப்பா காமெடி பண்ற ? பொறந்த குழந்தைக்கு எதுயா டிரைவிங் லைசென்ஸ் ?

பொறுங்கள்... குடும்பத்தில் ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும். அனைவரும் அதை வைத்து பதியலாம். (கைரேகை,விழியமைப்பு,புகைப்படம் போன்றவை போலிகளை அண்டவிடாது என்பதால் தான் இந்த வசதி)

குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே? அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.



செலவு :

இந்த திட்டதிற்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே இது ஒரு இலவச திட்டம்.



ஆதார் சந்தேகங்களுக்கு :

அழையுங்கள் =             1800-180-1947      
ஃபேக்ஸ் = 080-2353 1947
கடிதங்களுக்கு = தபால் பெட்டி எண் 1947, GPO பெங்களூர்-560001
மின்னஞ்சல் = help@uidai.gov.in



நிறுவனங்கள்:

ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலைமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கார்வி என்ற நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. நம்முடைய விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலதில் பெறப்படுகின்றன.



ஆதார் பற்றிய பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:

*ஆதார் என்பது குடும்ப அட்டையை போல்,வாக்காளர் அடையாள அட்டையை போல் மற்றுமொரு அட்டையா? .

கிடையவே கிடையாது ஆதார் என்பது 12 இலக்க எண்.மற்றவற்றில் எளிதாக போலி என்று ஒன்று உருவாக்கலாம் இதில் முடியாது.

* குடும்பத்திற்கு ஒன்று இருந்தால் போதுமா? இது ஒவ்வொரு தனி     மனிதருக்கும் வாங்க வேண்டும்.

* இது இந்திய குடிமகன்/மகள் என்பதற்கா சான்றா? கிடையவே கிடையாது இது உங்களுக்கான அடையாளம். பிறநாட்டவரும் பெறலாம்(நிபந்தனைகளுக்கு உட்பட்டு )

* கண்டிப்பாக வாங்கவேண்டுமா?. இல்லை, விருப்பப்படுபவர்களுக்கு மட்டும்.

* ஒருவர் பல ஆதார் வாங்கலாமா? ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே .

* எனக்கு ஃபேன்சி நம்பர் வேணும். இது செல்போன் இணைப்பு எண் கிடயாது.

* பாஸ்போர்ட்,குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். அவற்றை வாங்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். மாற்றாக பயன்படுத்த இயலாது.
       
       
சர்ச்சைகள்:

1. இந்த திட்டதிற்கான செலவு 3ஆயிரம் கோடி என்றார்கள் ! ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே!  இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த 15 ஆயிரம் கோடி தேவைப்படும் 2017-ல் தான் முடியும்( ஒரு வேல அடுத்த 2g யோ?)

2. நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு!

3. இந்த திட்டத்தின் மூலம் போலிகளை முழுமையாக ஒழிக்க முடியாது என மான்டெக் சிங் அலுவாலியா கருத்து தெரிவிதுள்ளாரே.

4. இதற்கான மென்பொருள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும் நம்முடைய தகவல்களை அவர்கள் எளிதில் பயன்படுத்தலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.          
ஆதார் பற்றிய மேலும் சில விவரங்களுக்கு http://naalroad.blogspot.com/
 
 

கழுகிற்காக
  சூர்யா

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes