Tuesday, November 16, 2010

கருத்துக்கள் என்பது எதற்காக......? ஒரு அறிவுசார் கண்ணோட்டம்....!




"எமக்கு தினவெடுத்த தோள்கள் இருக்கின்றன.....! எமது உச்சரிப்புகளின் தடிமன் மிகப் பெரியது.....எமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வோம்....எம்மை கேட்பதற்கும் விமர்சிக்கவும் அல்லது மாற்றுக் கருத்துக்கள் கூறவும் மானுடர் வந்தால்....வசை பாட எம்மிடம் மொழியும் அதை எடுத்துக் கொடுக்க மூளைகளும் இருக்கின்றன.....!


எங்களின் அறிவுகள் வேறு விதம் அதாவது இனம் நிறம் பற்றிப் பேசிக்கொண்டே அப்படி எல்லாமொன்றும் இல்லை என்று கூறிக் கொண்டே......அறிவில் சிறந்தவர் நாங்கள் எமக்கு மட்டும் மூளைகளும் உமக்கு எல்லாம் களிமண்ணும் வைத்து படைத்திருக்கிறான் இறைவன் என்று எண்னக்கூடிய திண்ணமும் எதேச்சதிகாரமும்..... எமது கருத்துக்கள் உறுதியானவை எதிர்த்து பேசினால் மூன்றாம் தர வார்த்தைகள் வந்து விழும் ஜாக்கிரதை......என்று மறைமுகமாய் எச்சரிக்கும் சர்வாதிகாரமும் எம்மிடம் உண்டு.....!"



ம்ம்ம்ம்ம்ம்ம்......உடல் வலு, பொருள் வலு எல்லாம் சேர்ந்து மனிதர்களைப் பேச வைக்கிறது. ஆமாம் பழக்கத்தின் அடிப்படையில் ஓடி வரும் வார்த்தைகளையும் சுபாவங்களையும் மாற்றல் மிகக்கடினம் என்பதை அறியாத மூடரா யாம்...........!!
வலைப்பக்கங்கள் தனி மனிதருக்கு சொந்தமானது எனினும்....அதை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கவும்.... வாசிப்பாளனுக்கு உரிமை இருக்கிறது தானே....????? எப்போதும் கைதட்டி ஆர்ப்பரித்து அடிவருடும் கூட்டமல்லவே நாம்....!


எம்மில் முரண் பட்ட கருத்துக்களை சபையில் வைத்து... எமக்கு பிடிக்கவில்லையெனில் எதிர் ஓட்டுக்கள் இட்டு போவது எப்படி கோபங்களை சமைக்கிறது உங்களது மூளையில்...! மூன்றாம் தர வார்த்தை பிரயோகங்களும்... ஏதோ வீட்டை விட்டு வெளியே போவென்று துரத்துவது போல் வலைப்பூவினை விட்டு ஓடு ஓடு என்று துரத்துவதும்...தர்ம சாஸ்திரத்தின் எத்தனாம் பக்கத்தில் வருகிறது.......?


வலைப்பக்கங்களை திரட்டிகளில் இணைக்கும் பொழுதும் பொதுவான கருத்துக்களை விவாதிக்கும் பொழுதும் அது பொது வெளியன்றோ...! அதிகாரத்தால் உலகை மறைமுகமாக ஆளும் அமெரிக்க அதிபரும் கூட.... விமர்சனத்திற்கு உட்பட்டவர் என்பதை அந்தோ பரிதாபம் சக மானுடர் அறிந்திடவில்லையே...ஐயகோ.....!!!!!


எதிர் வாக்களிப்பவனிடம் ஏதோ ஒரு முரண்பாடு இருக்கிறது என்பதால்தானே எதிர் வாக்குகள் அளிக்கிறான்.... திரட்டிகள் அதற்காகத்தானே அந்த ஒரு உபயோகத்தினை வைத்திருக்கின்றன.....???? இது எல்லாம் தாண்டி எதிர் வாக்களித்தவன் எப்படி அறிவற்ற ஆட்டு மந்தைகளின் கூட்டத்தை சேர்ந்தவன் ஆவான். உமது கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால் சிங்கக் கூட்டம்தான் ஆட்டு மந்தைகள் ஆகிடுமோ....? எப்படி பயில மறந்தீர்கள் இந்த சூத்திரத்தை........அடடே...எமக்கும் நேரமில்லையே உமக்கு பயிற்றுவிக்க.....!!


அநாகரீக வார்த்தை பிரயோகம் செய்து மனிதர்களை, சக வாசிப்பாளர்களை வார்த்தைகளால் நிந்திக்கும் மனிதர்களுக்காக அதை நிறுத்தச் செய்ய ஏதேனும் சட்டம் இருக்குமா என்று தொடர்புகளை முடுக்கிவிட்டு ஆராயும் சூழ் நிலையும் ஏற்பட்டு போயிருக்கிறது.


எதிர்வரும் காலத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு எதிர் வாக்களித்தாலோ அல்லது...எதிர் பின்னூட்டமிட்டாலோ விளக்கங்கள் ஆரோக்கியமாக விவாதிக்கப் படாமல்....தலை முடிக்கு வேறு பெயரிட்டு... இன்னும் கொச்சையான வார்த்தைகள் சேர்த்து ஓடி விடுங்கள் என்று விரட்டும் மாண்பு தொடர்ந்து ஒரு கெட்ட முன்னுதாரணம் ஆகி விடாதா?

வரிக்கு வரி கிண்டலும் கேலியும், தானும் தன்னை ஆதரிக்கும் மனிதர்களும் தவிர மிச்சமிருப்பவர்கள் எல்லாம் எச்சம் என்று நினைக்கும் போக்கும்...அவர்களின் கல்வியும், அறிவும், தகுதியும் ஆராயப்படாமலேயே.... உபயோகம் கொள்ளும் வார்த்தைகளும் கண்டு வெறுமனே போய் விட்டால் சர்வ நிச்சயமாய் யாம் ஆட்டு மந்தைகள்தான்.....!!


விவாதம்...விவாதம்...என்றும்....இது ஆரோக்கியமான களம் என்றும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அறிவான நகர்வு என்றும்.....ஆதரவு தெரிவித்து பேசும் அறிஞர்கள் அனைவரும்....தடிமனான வார்த்தைகளும், கடுமையான விமர்சனங்களும் கொண்டு தாங்கள் ஆதரிக்கும் தரப்பு பேசுகிறது என்று அறிந்தும் அதைக் கண்டிக்க திரணியற்றுப் போயிருப்பது.....நாகரீகமா....???????

விவாதிக்க வேண்டிய கருத்துக்களே மறந்து போய்...மறைந்துபோய்....எனக்குள் இருக்கும் எல்லா வலிமையையும் உம்மை மடக்குவதற்கும் மண்டியிடச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்பது எப்படி அறிவு சார் நிகழ்வாகும்?
இந்தக் கட்டுரையில் தனி மனித தாக்குதல் எங்கும் இல்லை....ஆனால் கற்றறிந்த அறிஞரும்.....நேர் நோக்கு கொண்ட மானுடரும்...கொஞ்சம் சிந்திக்கவும்....இது போன்ற வன் போக்குகள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் விழிப்புணர்வு செய்யும் விதமாகவும் இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.


கட்டுரையாளரின் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்கும் அதே நேரத்தில் எமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை காட்டியமைக்கு மனித உரிமை மீறலுக்கு சமமான வார்த்தை உபயோகம் நடந்தேறியுள்ளது என்பதை வலைப்பூ
வலைப்பூ சமூகத்திற்கும்....எதிர்வரும் காலங்களில் இப்படி மனிதன் சக மனிதனை எழுத்தின் மூலம்...வக்கிர தாக்குதல்கள் நடத்தா வண்ணம் சில கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் இந்தக் கட்டுரையின் நகல் மனித உரிமை ஆணையத்திற்கும்... செய்தி தொடர்புத்துறை அமைச்சகத்துக்கும் ஆதாரங்களுடன் அனுப்பப்படவுள்ளது
நன்றிகள்!


(நிகழ்வு: சமீபத்தில் ஒரு வலைப்பூவில் கூறியிருந்த கருத்துக்களுக்கு எதிர் வாக்குகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டதற்கு.....அடர்த்தியான வார்த்தை பிரயோகம் தனிமனிதரை புண்படுத்தும் படி நிகழ்ந்தேறியுள்ளது.

கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு கழுகு கண்டனங்களைத் தெரிவிப்பதோடு........ எல்லா பொது வெளிக்கருத்துக்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டவையே... என்ற கருத்தினை ஆணித்தரமாகவும் வலுவாகவும் இந்த தருணத்தில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது. எந்த தனிமனித அனுசரணைக்காகவும் இந்தக் கட்டுரை வெளியிடப்படவில்லை.. மாறாக விவாதங்கள் கோபங்களாக மாற வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையும் கூடுதலாக வலியுறுத்திக் கொள்கிறது.)


(கழுகு இன்னும் உயர பறக்கும்....)


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes