Monday, April 21, 2014

வாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு !!!!
பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் மீது இன்னும் நமக்கு கூடுதல் வன்மம் உண்டு என்பதற்கு ஒரே ஒரு காரணம் ஈழம். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடுமையான போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி என்னும் போது காங்கிரசை ஒரு மானமுள்ள சுயமாரியதைக் கொண்ட எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான்.... ஆதரிக்கவும் கூடாது!!!!!

இப்படியான சூழலில் காங்கிரஸ் ஆளவில்லை எனில் வேறு யார் ஆள இருக்கிறார்கள் என்று பார்த்தால் இங்கே நமக்கு இருக்கும் ஒரே மாற்று மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி மட்டும்தான்....என்பதற்காக மோடியை ஆதரிக்க முடியுமா என்ன...?

காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று முடிவு செய்து பிஜேபியை ஆதரிக்க கூடாது தோழர்களே மோடி இந்துத்துவா அடிப்படையைக் கொண்டவர். இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு, இந்து மதம் என்பது எளிமையாய் சிக்கலில்லாமல் வாழ பயிற்றுவித்து ஒரு மிகப்பெரிய கலாச்சாரத்தின் புதல்வர்களை இந்த தேசம் முழுதும் காலம் காலமாய் நிம்மதியாய் வாழ வைத்திருந்துக்கிறது.

இந்து என்ற சனாதான தருமம் என்னும் வழிமுறையை அரசியலாக்கிப் பார்க்க,ஆதாயாப் பிழைப்பு நடத்த உருவாக்கப்பட ஒரு போலி வார்த்தைதான் இந்துத்துவா...

மோடியின் ஆட்சியின் கீழ் முழு மூச்சாய் இந்த இந்துத்துவா இந்த தேசம் முழுதும் பிரயோகம் செய்யப்படும். நீங்களும் நானும் இந்து என்று அடையாளத்துக்குள் சிக்க வைக்கப்பட்டு மாற்று மதத்தினரை எதிரியாய் பார்க்க வேண்டிய சூழல்கள் திட்டமிட்டே உருவாக்கப்படும். எல்லா விசயத்துக்கும் மனிதாபிமானத்தின் மூலமும் சட்டத்தின் மூலமும் முடிவெடுக்காமல் மதத்தின் பெயரால் பாகுபாடு அரசியல் வரைமுரையற்று நிகழும்.

இது எல்லாம் நிகழாது என்று நீங்கள் நம்பலாம் ஆனால் பல்லாயிரக்கணக்கான குஜராத் வாழ் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் கேட்டால் அவர்கள் சொல்வார்கள்...எந்த மாதிரியான பாகுபாடு ஆட்சி அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் எல்லாம் எவ்வளவு அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், சிறுபான்மையினரை விஸ்வ ஹிந்து பரீட்சீத், ஆர்.எஸ்.எஸ், ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்ற அமைப்புகள் எப்படி நிர்ப்பந்திக்கின்றன என்பதை எல்லாம் ஒரு ஆய்வு மனோநிலையில் நாம் அணுகிப் பார்த்தால்

மோடி இந்தியாவில் என்னவெல்லாம் செய்வார் என்று தெளிவாய் புரிந்து அதன் மூலம் ஒரு பேரச்சம் நமக்கு ஏற்படுகிறது.

வாஜ்பாய் வேறு மோடி வேறு இதை தெளிவாய் நாம் உணரவேண்டும்.

தமிழ்நாட்டில் நமது வாக்களர்கள் பாரதிய ஜனதா கூட்டணியை ஜெயிக்க வைக்காமல், அதிமுகவிற்கோ அல்லது திமுகவிற்கோ வாக்களிப்பதே நல்லது.

மத்தியில் மோடி வென்றாலும், காங்கிரஸ் வென்றாலும்...மானமுள்ள தமிழர்கள் காங்கிரசையும் பிஜேபியையும் தோற்கடித்தோம் என்றாவது மார்தட்டிக் கொள்ளவாவது செய்யலாம்...!

பின்குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பிஜேபியோடு திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி வைக்குமெனில்......வரப்போகும் எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் எழ முடியாத அளவுக்கு தோல்வியைக் கொடுக்கவேண்டியதும் நமது கடமையாகிறது.

- கழுகு

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்...)


4 comments:

Unknown said...

சூரிய ஒளியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்?!

Unknown said...

Udhayasuriyan

vijayan said...

எத்தனை கோடி எம்தமிழர் ஊழல் செய்தாலும் செந்தமிழன் வேறு யாருக்கும் வாக்களிக்கமாட்டான்.வெளங்கிடும் தேசம்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

நண்பர்க்கு வணக்கம். தங்கள் கட்டுரை சின்சியராக எழுதப்பட்டிருந்தது என்னைக் கவர்ந்தது. முடிவில் எனக்கு உடன்பாடில்லை எனவே, இதன் தொடர்ச்சியாகவும், இதன் முடிப்பாகவும நான் கருதியவற்றைத் தங்கள் வலைப்பக்க இணைப்பையும் தந்து எனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறேன். நன்றி - http://valarumkavithai.blogspot.in/

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes