Saturday, March 05, 2011

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!


 தனித்தனியாய் மனிதன் இருந்து எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு உதராணமாய் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தே உணர்ந்து கொள்ளலம். சிறுவயது முதலே.. நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் பற்றிய கதை போதிப்பதும் இந்த டீம் ஒர்க் என்னும் கூட்டுப் முயற்சியைப் பற்றித்தான்....

கூட்டு உழைப்பு என்பதைப் பற்றிய ஒரு விரிவான பார்வை இதோ.....
 
தலைப்பை நினைத்தாலே ஒரு தெம்பு வருகிறது. எந்த ஒரு வேலையிலும் பலதரப்பட்ட நுணுக்கங்கள், சிரமங்கள் இருக்கலாம். ஒருவர் போல மற்றொருவர் சிந்திப்பதில்லை. பலதரப்பட்ட மக்களுக்கு, பலவித சிந்தனை இருப்பது இயற்கை அல்லவா? எனவே எந்த ஒரு வேலையானாலும், பலரின் ஆலோசனைகளை அறிந்து, அவற்றுள் சிறந்தவற்றை செயல் படுத்தினால் அச்செயலில் வெற்றி பெறுவது எளிதாகுமல்லவா?


பலர் சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடுவதே டீம் வொர்க் (team work) என்பது. அதனை நம் இனிய தமிழில் 'கூட்டு முயற்சி' எனச் சொல்லலாமென நான் நினைக்கிறேன். 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது நம்மில் பலருக்கு தெரிந்த பழமொழி. பின்வரும் படம், அதனை நன்கு வெளிப்படுத்துகிறது. இப்படம் சிரிக்க மற்றும் சிந்திக்கவும் வைக்கிறதல்லவா? மூவர் சேர்ந்து செய்தால், நன்மை மூவருக்கும் கிடைக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது. இவ்வாறு நடைமுறையில் ஒரு பள்ளத்தை தாண்டலாமா எனக் கேட்காமல், அந்த படம் உணர்த்தும் பொருளை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாமே !
கீழ்வரும் படத்தில் பறவைகளைப் பாருங்கள். கூட்டு முயற்சியால் விளையும் பயன், சிறகடித்து பறக்கும் (வலமிருந்து இடப்புறமாக), இந்த பறவைகளுக்குக் கூட தெரிந்திருக்கிறது. இதனை தெரிந்து கொள்வதற்கு இப்பறவைகள் பள்ளிக்கூடம் ஏதும் செல்லவில்லை என்பது யாவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாகும். 'பட்டறிவு' (படித்து வாங்கும் பட்டம் தரும் அறிவு அல்ல) என்பது வாழ்க்கையில் 'பட்டு' தெரிந்து கொள்ளும் அறிவு ஆகும். இதனை ஆங்கிலத்தில் 'Experience' என்று கூறுவர். அந்த 'பட்டறிவு' தான் இந்த பறவைகளுக்கு, கூட்டு முயற்சியின் பலனை உணரச் செய்ததோ ?

இதனுள் ஒரு இயற்கை நுணுக்கம் இருக்கிறது. பறவைகள் இவ்வாறு 'V' போன்ற வடிவத்தில் பறப்பதினால், அப்பறவைகள் எதிர் கொள்ளும் காற்றின் எதிர்ப்பு குறையும்.  'Aero-dynamics'  என்ற இயற்பியல் பிரிவு இதை பற்றி விரிவாக விளக்கமளிக்கிறது. 'Aero-dynamics' தந்த மாபெரும் பரிசு, 'ஆகாய விமானம்' ஆகும். இப்படி பறக்கும் பறவைகளுள், முன்னால் பறக்கும் பறவை காற்றின் எதிப்பை அதிகமாக சந்திக்க வேண்டும் (அதாவது 'V' வடிவின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பறவை).  பின்னால் வரும் பறவைகள் சற்று குறைந்த எதிப்பை எதிகொள்ளும். இப்படியாக கடைசியின் வரும் பறவைகள் (கோடியில் இருக்கும் இரண்டு பறவைகள்) மிக மிகக் குறைந்த எதிப்பை எதிர்கொள்ளும்.
கதை இத்துடன் முடிந்த பாடில்லை. முதலில் பறக்கும் பறவை என்ன பாவம் செய்தது என நீங்கள் சிந்திக்கவில்லையா? அந்த பறவை ஏன் அதிக எதிர்ப்பை சந்திக்க வேண்டும்? அத்தகைய கேள்விக்கு விடை தான், 'பட்டறிவு' மற்றும் 'கூட்டுமுயற்சி'(அல்லது கூட்டுறவு). சிறிது தூரம் சென்றபின், முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும், மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் 'V' போன்ற நிலைக்கு மாறிவிடும்.  இவ்வாறு சுலபம் மற்றும் கடின விஷயங்களை தங்களுக்குள் கூட்டாக பகிர்ந்து கொண்டு வாழ இப்பறவைகளுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்? இது  வியக்கத்தக்க விஷயம் அல்லவா? இந்த செய்தியை எனது அண்ணன் சொல்லியே நான் தெரிந்து கொண்டேன். பின்னர் இதனை பற்றி 'Internet'ன் வாயிலாக படித்திருக்கிறேன். என் அண்ணனுக்கும், 'Internet'க்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெருவிக்க கடமை பட்டுள்ளேன்.

நன்றிக்குப் பெயர் போன 'நாய்கள்' கூட கூட்டாக சேர்ந்து செய்யும் வேலையை கீழ்வரும் படம் சொல்கிறதே! இப்படம் சொல்லும் கருத்தினை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.. ஏனென்றால், இப்படம் எனக்கு இயற்கையாகத் தெரியவில்லை. ஒரு 'Refrigirator' மற்றும் மூன்று 'நாய்களைக்' கொண்டு ஒட்டு  வித்தை செய்து உருவாக்கியது போலத் தெரிகிறது. 
கூட்டு முயற்சி என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் நான் வீட்டின் வாசற்புறம் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். தெருவில், ஒருவன் வரிசையாக குழிகள் பறித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர் ஒருவன் ஒவ்வொரு குழிக்குள்ளும் தண்ணீர் ஊற்றிய படியே சென்றான். பின்னர் மூன்றாமவன் அந்த குழியை மூடிவிட்டு அடுத்த  குழியை நோக்கி சென்றான்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்றாமவனிடம்  சென்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டேன். நால்வர் சேர்ந்து மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ், 'செடி-நடும்' கடமைகளைச் செய்து கொண்டு செல்வதாகச் சொன்னான்.  அவன் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் அவனிடம் கேட்டேன் "செடி இல்லாமல் இது எப்படி சாத்தியம்?" என்றேன். அதற்கு அவன் சொல்லிய பதில், "ஐயா, நாங்கள் மொத்தம் நால்வர் இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். முதலில் சென்றவர், குழி வெட்டுவார், பிறகு இரண்டாமவர் செடிகளை  நடுவார், மூன்றாமவர், தண்ணீர் ஊற்றிக்கொண்டு செல்வார். பிறகு அந்த குழியை மூடுவது என் கடமை ஆகும்.  எங்களில் இரண்டாமவருக்கு இன்று உடம்பு சரியில்லை, ஆதலால் அவர் வர இயலவில்லை. அவர் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமலிருக்கலாமா?" என்றானே பார்க்கலாம், நான் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தேன்.  இது 'கூட்டு முயற்சிக்கு' ஒரு தவறான உதாரணம் அல்லவா? 
    
'கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.
 
கூட்டுறவே நாட்டுயர்வு.  கூடி வாழ்வோம், பயன் பெறுவோம் !

(நினைவிற்கு....  கூட்டுறவு வங்கி, கூட்டுறவு பால் சங்கம், கூட்டுறவு பட்டு சொசைட்டி)கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)  
 

10 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

present

ரஹீம் கஸ்ஸாலி said...

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி

Kousalya Raj said...

ஒற்றுமை பற்றி கதையுடன் விளக்கிய விதம் அருமை...

கட்டமைப்புடன் கூடிய கூட்டு முயற்சிக்கு என்றும் வெற்றி தான்.

பகிர்வுக்கு நன்றி.

Kousalya Raj said...

நகைசுவை சில நேரம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கும் !!

:))

MANO நாஞ்சில் மனோ said...

//'கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.//

பொருத்தமான படம்....

எஸ்.கே said...

நல்ல கருத்தை நகைச்சுவை கலந்து சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்!

இம்சைஅரசன் பாபு.. said...

மாதவன் சார் உங்க பாணியில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ....

Unknown said...

”காக்கா கூட்டததை பாருங்க! அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க” அப்படின்னு பாடினான் பட்டுக்கோட்டை.. ஆனால் ஆறறிவு மனிதர்கள்??????

Asiya Omar said...

ஓ.கே.பகிர்வு நல்லாயிருக்கு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

கூட்டு-முயற்சி' என்பது மேலே உள்ள படம் போலவும் இருக்கக் கூடாது.//

:))

நல்ல படம்..

நல்ல கருத்து..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes