நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்டு எம் தேசத்தில் பெண்கள் திகழ வேண்டும் என்ரு விரும்பிய முண்டாசுக்கவிஞனின் கனவு இன்னமும் அவனின் கவிதை வரிகளுக்குள்ளேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆயிரம் உதாரணங்களைக் கூறி பெண்கள் எல்லாம் இன்றைய சமுதாயத்தில் சரி சமமாக எல்லா இடத்திலும் பங்கெடுக்கிறார்கள் என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் பெண்கள் பற்றிய சமுதாயப் பார்வை மேம்படவேண்டும்.
ஆயிரம் உதாரணங்களைக் கூறி பெண்கள் எல்லாம் இன்றைய சமுதாயத்தில் சரி சமமாக எல்லா இடத்திலும் பங்கெடுக்கிறார்கள் என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் பெண்கள் பற்றிய சமுதாயப் பார்வை மேம்படவேண்டும்.
நவீன மகளிரின் பிரச்சினைகளை எமது தோழமைகளிடமே கட்டுரைகளாய்ப் பகிரச் சொல்லி இதை ஒரு தொடர் போல கொடுக்கலாம் என்ற எமது உத்தேசத்தின் பின்னணியில் வீற்றிருப்பதும் விழிப்புணர்வே என்பதே அறிக
மகளிர் என்றாலே எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல். இதில் நவீன மகளிருக்கென்ன புதிதாய் பிரச்சினை இருந்திடப் போகிறது?? இருக்கிறது..!!
முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே பையன் என்ன வேலை செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று விசாரிப்பாங்க. இப்போது அப்படியே தலைகீழா மாறிவிட்டது.பெண் எங்கே வேலை செய்கிறாள் மாச சம்பளம் எவ்வளவு வருமென்று தான் முதல் கேள்வியே...! அதிலும் சில மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப சமத்து...! முதலிலேயே கட் அண்ட் ரைட்-ஆக பெண்ணிடம், " நீ வேலைக்கு போறதெல்லாம் சரி தான்.. அங்கே லோன், கீன் எதாச்சும் பாக்கி வச்சிருந்தா அதெல்லாம் கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்ன அடச்சு முடிச்சிரு.. ஏன் சொல்றேன்னா கல்யாணத்துக்கு அப்புறம் மொத்த சம்பளமும் என் கையில குடுத்தாகணும்."ன்னு பேசி விடுவார்கள்.!! என்ன ஒரு தெளிவு..!!? என்ன ஒரு அறிவு.!!? சும்மா சொல்லக் கூடாது.
இக்காலத்து பெண்கள், முதலில் சொந்தக் காலில் நின்றாக வேண்டும். இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போனால் ஒழிய தங்கள் குழந்தைகளுக்கு நினைத்த கல்வி தகுதி வழங்குவது பெரும்பாலும் சாத்தியம் இல்லை. அங்கே இங்கே நீங்கள் ஒரு சில விதி விலக்குகளை வேண்டுமானால் சுட்டி காட்டலாம். சில பள்ளிகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் குறைந்த பட்சம் இருவரும் பட்டதாரிகளாகவாவது (கல்வித் தகுதி உடையவராக) இருக்க வேண்டும் என்கிறார்கள்.
சரி ஒருவழியாக படித்து வேலைக்கும் சென்றாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். அங்கேயாவது நிம்மதி உண்டா?? சுயமாக வண்டி வைத்திருந்து விட்டால் அது வேறு விசயம். இல்லை என்றால், ஷேர் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்து ஆபீஸ் சென்று அடையும் முன்பு பாதி உயிர் போய் விடும். சரி.. ஒரு வழியாய் ஆபீஸ் போய் சென்று விட்டால் அங்கேயாவது நிம்மதியாய் வேலை செய்ய முடிகிறதா...?? அங்கேயும் 1008 பிரச்சனைகள்.. மேலதிகாரியிடம் திட்டு வாங்காமல் கவனமாக இருத்தல், வழிசல் கேஸ்-களிடம் இருந்து தப்பித்தல்... இத்யாதி விசயங்கள்.
திருமணமான பெண்களுக்கு இன்னுமொரு பிரச்சனை. குழந்தைகளை எங்கே யாரிடம் விடுவது.? முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது. இப்போதெல்லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்.?. அதையெல்லாம் இனி பள்ளி பாடத்தில் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டி வரும் போல இருக்கு நிலைமை..! வரும் காலத்தில் மாணவர்கள் பாடப் புத்தகத்தில் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பாடம் படிக்கும் போது,"முன்பொரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு அமைப்பு இருந்ததாம்........!!!!" என்று படிப்பார்கள் போலும்.
காலை முதல் மாலை வரை அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தால் அக்கடா என்று உட்காரத் தோன்றும்.! அப்போது தான் கணவனுக்கு காஃபி, குழந்தைக்கு சிற்றுண்டி, வீட்டுப் பாடம் செய்ய வைத்தல், ராத்திரி டிஃபன் இப்படி வரிசையாய் வேலைகள் வக்கிரமாய் புன்னகை செய்யும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் மனமும், உடலும் ஒத்துழைப்பதில்லை.. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தான் ஏதேனும் வாக்குவாதம் வந்து விடுகிறது.
வேலைக்கு போகாத பெண்களுக்கோ வேறு மாதிரி பிரச்சினைகள்..! விடிந்தது முதல் அடையும் வரை வீட்டு வேலைகள் விக்ரமாதித்தன் கதை போன்று விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது.
இன்னொரு பிரச்சனை பற்றி பார்ப்போம்.. கூட்டுக் கிளிகளாய் இருந்த பெண்கள், வெளி உலகத்தில் விமரிசையாய் வலம் வருவதால் எதிர் படும் பல்வேறு மனிதர்களில் உயரிய குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால் தனெக்கென்று வாய்த்த துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவதோடு ஏக்கங்களும்,வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு உள்ளது. இதனால் தான் என்னவோ விவாகரத்தும் இன்றைய நாட்களில் பெருகிக் கொண்டே வருகிறது.
இன்னொரு புறம் விளம்பர மாடல் பெண்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை. சில பெண்கள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் அப்படி இருந்தால் தான் மதிப்பென்று நினைத்து அதனை பின்பற்றுகிறார்கள்...! இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நடக்கும் பிரச்சினைகள் கடுகளவு..... கண்ணுக்குத் தப்பியவை காடளவு!!
முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே பையன் என்ன வேலை செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று விசாரிப்பாங்க. இப்போது அப்படியே தலைகீழா மாறிவிட்டது.பெண் எங்கே வேலை செய்கிறாள் மாச சம்பளம் எவ்வளவு வருமென்று தான் முதல் கேள்வியே...! அதிலும் சில மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப சமத்து...! முதலிலேயே கட் அண்ட் ரைட்-ஆக பெண்ணிடம், " நீ வேலைக்கு போறதெல்லாம் சரி தான்.. அங்கே லோன், கீன் எதாச்சும் பாக்கி வச்சிருந்தா அதெல்லாம் கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்ன அடச்சு முடிச்சிரு.. ஏன் சொல்றேன்னா கல்யாணத்துக்கு அப்புறம் மொத்த சம்பளமும் என் கையில குடுத்தாகணும்."ன்னு பேசி விடுவார்கள்.!! என்ன ஒரு தெளிவு..!!? என்ன ஒரு அறிவு.!!? சும்மா சொல்லக் கூடாது.
இக்காலத்து பெண்கள், முதலில் சொந்தக் காலில் நின்றாக வேண்டும். இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போனால் ஒழிய தங்கள் குழந்தைகளுக்கு நினைத்த கல்வி தகுதி வழங்குவது பெரும்பாலும் சாத்தியம் இல்லை. அங்கே இங்கே நீங்கள் ஒரு சில விதி விலக்குகளை வேண்டுமானால் சுட்டி காட்டலாம். சில பள்ளிகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் குறைந்த பட்சம் இருவரும் பட்டதாரிகளாகவாவது (கல்வித் தகுதி உடையவராக) இருக்க வேண்டும் என்கிறார்கள்.
சரி ஒருவழியாக படித்து வேலைக்கும் சென்றாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். அங்கேயாவது நிம்மதி உண்டா?? சுயமாக வண்டி வைத்திருந்து விட்டால் அது வேறு விசயம். இல்லை என்றால், ஷேர் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்து ஆபீஸ் சென்று அடையும் முன்பு பாதி உயிர் போய் விடும். சரி.. ஒரு வழியாய் ஆபீஸ் போய் சென்று விட்டால் அங்கேயாவது நிம்மதியாய் வேலை செய்ய முடிகிறதா...?? அங்கேயும் 1008 பிரச்சனைகள்.. மேலதிகாரியிடம் திட்டு வாங்காமல் கவனமாக இருத்தல், வழிசல் கேஸ்-களிடம் இருந்து தப்பித்தல்... இத்யாதி விசயங்கள்.
திருமணமான பெண்களுக்கு இன்னுமொரு பிரச்சனை. குழந்தைகளை எங்கே யாரிடம் விடுவது.? முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது. இப்போதெல்லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்.?. அதையெல்லாம் இனி பள்ளி பாடத்தில் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டி வரும் போல இருக்கு நிலைமை..! வரும் காலத்தில் மாணவர்கள் பாடப் புத்தகத்தில் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பாடம் படிக்கும் போது,"முன்பொரு காலத்தில் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு அமைப்பு இருந்ததாம்........!!!!" என்று படிப்பார்கள் போலும்.
காலை முதல் மாலை வரை அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தால் அக்கடா என்று உட்காரத் தோன்றும்.! அப்போது தான் கணவனுக்கு காஃபி, குழந்தைக்கு சிற்றுண்டி, வீட்டுப் பாடம் செய்ய வைத்தல், ராத்திரி டிஃபன் இப்படி வரிசையாய் வேலைகள் வக்கிரமாய் புன்னகை செய்யும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் மனமும், உடலும் ஒத்துழைப்பதில்லை.. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தான் ஏதேனும் வாக்குவாதம் வந்து விடுகிறது.
வேலைக்கு போகாத பெண்களுக்கோ வேறு மாதிரி பிரச்சினைகள்..! விடிந்தது முதல் அடையும் வரை வீட்டு வேலைகள் விக்ரமாதித்தன் கதை போன்று விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது.
இன்னொரு பிரச்சனை பற்றி பார்ப்போம்.. கூட்டுக் கிளிகளாய் இருந்த பெண்கள், வெளி உலகத்தில் விமரிசையாய் வலம் வருவதால் எதிர் படும் பல்வேறு மனிதர்களில் உயரிய குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால் தனெக்கென்று வாய்த்த துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவதோடு ஏக்கங்களும்,வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு உள்ளது. இதனால் தான் என்னவோ விவாகரத்தும் இன்றைய நாட்களில் பெருகிக் கொண்டே வருகிறது.
இன்னொரு புறம் விளம்பர மாடல் பெண்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை. சில பெண்கள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் அப்படி இருந்தால் தான் மதிப்பென்று நினைத்து அதனை பின்பற்றுகிறார்கள்...! இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நடக்கும் பிரச்சினைகள் கடுகளவு..... கண்ணுக்குத் தப்பியவை காடளவு!!
கழுகிற்காக
140 comments:
//இன்னொரு புறம் விளம்பர மாடல் பெண்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை. சில பெண்கள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் அப்படி இருந்தால் தான் மதிப்பென்று நினைத்து அதனை பின்பற்றுகிறார்கள்...! இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். //
உண்மை.
///// முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே பையன் என்ன வேலை செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று விசாரிப்பாங்க. இப்போது அப்படியே தலைகீழா மாறிவிட்டது.பெண் எங்கே வேலை செய்கிறாள் மாச சம்பளம் எவ்வளவு வருமென்று தான் முதல் கேள்வியே...! ///////
இது என்ன அநியாயமா இருக்கு ..,நாங்க வேலைக்கு போவும்போது நீங்க கேட்டா அது நியாயம் .,நீங்க வேளைக்கு போவும் போது நாங்க கேட்டா அது அநியாயம் .,
பெண்கள் மேல் அனுதாபம் வரவேண்டும் என்று வலுகட்டாயமாக திணிக்கபடுவது போல் இருக்கிறது இப்பதிவு..,பெண்கள் சுதந்திரம் பற்றி பேசும் போது பதிவில் ஆழ்ந்த உழைப்பும் ,அறிவார்ந்த விஷயங்களையும் சேர்க்க வேண்டும் .,என்னமோ போங்க நீங்க போட்டு இருக்குற பதிவுக்கு என்னால ஆயிரம் வாதம் செய்ய முடியும் .,எல்லா வரிகளையும் முரண்பாடு ..உங்களுக்கு தேவையான தரவுகளை நான் தரலாமா ? முடிஞ்சா அத படிச்சிட்டு அடுத்த பதிவ போடுங்க
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது. இப்போதெல்லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்.?. அதையெல்லாம் இனி பள்ளி பாடத்தில் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டி வரும் போல //
இதுக்கெல்லாம் காரணம்னு யாரை நினைக்கிறீங்க? அதையும் தெளிவா சொல்லுங்க? நீங்கள் சொல்லியதில் பாதிக்கும் மேல் உள்ளவை பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்தான் அதிகம்..
//////ஆயிரம் உதாரணங்களைக் கூறி பெண்கள் எல்லாம் இன்றைய சமுதாயத்தில் சரி சமமாக எல்லா இடத்திலும் பங்கெடுக்கிறார்கள் என்று நாம் கூறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் பெண்கள் பற்றிய சமுதாயப் பார்வை மேம்படவேண்டும்/////
சமுதாய்ம்கிறது யார்? நீங்களும் நானும்தானே? பெண்களுக்கு என்ன வேணும்னு பெண்களே தெளிவா இல்ல.. இந்த கட்டுரைலே பாருங்க.. சமுதாயம் அவர்களுக்கு கொடுக்கும் பிரச்சனைகளை விட அவர்களாகவே தேடிக்கொள்ளும் பிரச்சனைகள்தான் அதிகம்! இத நான் சொல்லல..உங்க கட்டுரை சொல்லுது! அவங்க கடமைய செய்ய மறுக்கும்போது பிரச்னை தலைதூக்குது! எந்த பெண்ணும் தன அம்மாவை கவனிப்பதுபோல் மாமியாரை கவனிப்பது இல்லை..எந்த மாமியாரும் தன் மகளை கவனிப்பதுபோல் மருமகளை கவனிப்பது இல்லை..இதையெல்லாம் வசதியாக மறந்து அல்லது மறைத்துவிட்டு பெண்ணுரிமை என்று சொல்லிக்கொண்டு ஆண்களை குறைசொல்வதுதான் பாதி பெண்களின் வேலையே!
கழுகு "சிங் சாங் " மறு மொழியை மட்டும் தான் அனுமதிக்குமா...?
என்னுடைய மறுமொழி நீக்க பட்டு விட்டதே ..??
அன்பின் கிருஷ்ணா,
தங்களின் கருத்துரைகள் மிகுதியாக இங்கே இடம்பெற்றிப்பதில் மகிழ்ச்சியே. பொத்தாம் பொதுவாக ஒரு வரியில் கட்டுரையை விமர்சித்தலை காட்டிலும் தாங்கள் கருத்துக்களில் இருக்கும் செம்மைகள் கட்டுரையின் பாகங்களை விமர்சித்தால் நலம் பயக்கும் என்ற காரணத்தினால் ஒற்றை வரியில் தாங்கள் விமர்சித்திருந்த கருத்தினை நீக்கினோம்.
தொடர்ந்து உங்களின் பார்வையினை பதியுங்கள். விளக்கம் தேவை என்ற் இடத்தில் விளக்கமளிக்கிறோம்...
உங்களின் கருத்தில் உண்மை இருக்குமெனில் அதை ஏற்றுப் போகிறோம்.....அவ்வளவு தானே...
தொடருங்கள் கிருஷ்ணா.. தங்களின் ஆழமான பார்வைக்கு நன்றிகள்!
//அன்பின் கிருஷ்ணா,//
தர்க்கம் பேச வந்தவன இப்படி கூல் பண்ணிடீங்களே ....
ஆங்...நான் சொல்ல வந்தது எல்லாம் மறந்து போச்சு...மறுபடியும் வரேன் :)
//பெண்கள் மேல் அனுதாபம் வரவேண்டும் என்று வலுகட்டாயமாக திணிக்கபடுவது போல் இருக்கிறது இப்பதிவு..,பெண்கள் சுதந்திரம் பற்றி பேசும் போது பதிவில் ஆழ்ந்த உழைப்பும் ,அறிவார்ந்த விஷயங்களையும் சேர்க்க வேண்டும் .,என்னமோ போங்க நீங்க போட்டு இருக்குற பதிவுக்கு என்னால ஆயிரம் வாதம் செய்ய முடியும் .,எல்லா வரிகளையும் முரண்பாடு ..//
என் கருத்தும் இதே இதே :)
பெண்ணுரிமை பெண்ணுரிமை என்ற பேர்ல இவங்களே தங்கள தாழ்த்திகிறாங்க ,,( எந்த வித ஆண்திமிரோடு இதை சொல்ல வில்லை )..,சுதந்திரமாக இருக்க அனைத்து பாதுகாப்புகளும் பெண்களுக்கு வந்துவிட்டது .,கல்வி ,வேலைவாய்ப்பு ,திருமணம் ,பாலியியல் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் ..,அனைத்தும் இவர்களுக்கு அரணாவகே இருக்கின்றன ,ஆனால் பெரும்பாலனவர்கள் இதை தவறான வழிக்காகவே பயன் படுத்துகிறார்கள் .,
உதாரணங்கள் : கல்வி சென்ற வருடம் பன்னிரெண்டாம் வகுப்பிலே மருத்துவ படிப்பு படிக்க போலி மதிப்பெண் சான்றிதழை தந்தவர்கள் அதிகளவில் தந்தவர்கள் பெண்களே ..,ஆதாரம் :http://www.hindu.com/2010/07/17/stories/2010071764201400.html
இதை பற்றி யாரவாது விவாதித்தல் தான் ஒரு வித தெளிவு கிடைக்கும் என்னக்கும் யாருமே வரமால் நான் மட்டும் என் கருத்தை சொல்லிவிட்டு போவது என்பது ..,என்னக்கு உடன்பாடில்லை
//
தனெக்கென்று வாய்த்த துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவதோடு ஏக்கங்களும்,வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு உள்ளது. இதனால் தான் என்னவோ விவாகரத்தும் இன்றைய நாட்களில் பெருகிக் கொண்டே வருகிறது.//
இதை நீங்க எப்படி எல்லா மகளிருக்குமான பிரச்சினை என்று சொல்லலாம்? இந்த மாதிரி நினைக்கும் மகளிர் மனநிலை கண்டிப்பாய் ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிக்கப் பட்டிருக்கும். முதலில் அதை சரி செய்தாலே, ஒப்பீடு செய்து வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறையும்.
அதை எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் எங்குமே சொல்லப் படவில்லை. நீங்கள் ,மேலே கூறியிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் யார்? ஆண்கள் மட்டுமா இல்லை பெண்களுமா? அப்படி பெண்களும் இருந்தால் ஏன் அதை சரி செய்வதைப் பற்றி இங்கே சொல்லவில்லை. அவசர கதியில் எழுதிய பதிவு போல இருக்கிறது.
நல்ல பதிவு.
////////முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே பையன் என்ன வேலை செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று விசாரிப்பாங்க. இப்போது அப்படியே தலைகீழா மாறிவிட்டது.பெண் எங்கே வேலை செய்கிறாள் மாச சம்பளம் எவ்வளவு வருமென்று தான் முதல் கேள்வியே...! ////////
அமெரிக்க மாப்பிளை, சாஃப்ட்வேர் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அலைகிறார்களே, அதெல்லாம் என்ன? மற்ற துறை வேலைகளில் இருக்கும் ஆண்கள் இன்று 30 வயது தாண்டியும் பெண் கிடைக்காமல் திணறுவது உங்களுக்கு தெரியாதா?
//// அப்படி பெண்களும் இருந்தால் ஏன் அதை சரி செய்வதைப் பற்றி இங்கே சொல்லவில்லை....///
இத தான் நானும் சொல்றேன் சார் ..,இவர்கள் எது சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்களோ அது ஆண்கள் சுமத்தி விடுகிறார்கள் ..,இலகுவாக
///அவசர கதியில் எழுதிய பதிவு போல இருக்கிறது /////
Yes .., i think so ..,ஒரு முக்கியாமான விடயம் பகிரப்படும் போது தெளிவான பார்வைகளை கொண்டு இருக்கவேண்டும் .,கழுகு அதை செய்யும் நம்புகிறேன்
///// பெண் எங்கே வேலை செய்கிறாள் மாச சம்பளம் எவ்வளவு வருமென்று தான் முதல் கேள்வியே...! ///////
Sorry ..,kazhugu...,
//////திருமணமான பெண்களுக்கு இன்னுமொரு பிரச்சனை. குழந்தைகளை எங்கே யாரிடம் விடுவது.? முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது. இப்போதெல்லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்.?. ////////
கூட்டுக்குடும்பங்கள் அழிந்து வருவதற்கு யார் காரணம்? எங்கே மனதை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்? இன்று எத்தனை பெண்கள் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள் தெரியுமா? அதுவும் திருமணமாகும் முன்பே இந்தக் கண்டிசனையும் பேசிவிடுகிறார்கள்.
அதிலும் தன் தாயார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கணவரையும் குடும்பத்தினரையும் ஆட்டிப் படைக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா? இன்று எத்தனை வீடுகளில், பெண்ணின் பெற்றோர் வந்து போவதற்கு இருக்கும் சவுகர்ய உணர்வு, கணவனின் பெற்றொர் வந்து போவதற்கு இருக்கிறது?
//////கூட்டுக் கிளிகளாய் இருந்த பெண்கள், வெளி உலகத்தில் விமரிசையாய் வலம் வருவதால் எதிர் படும் பல்வேறு மனிதர்களில் உயரிய குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால் தனெக்கென்று வாய்த்த துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவதோடு ஏக்கங்களும்,வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு உள்ளது. இதனால் தான் என்னவோ விவாகரத்தும் இன்றைய நாட்களில் பெருகிக் கொண்டே வருகிறது.
//////////
மிக மிக மிக அபத்தமான ஒரு வாதம். அப்படியென்றால், ஆண்கள் மற்ற பெண்களை பார்த்துவிட்டு தன் மனைவி அப்படி இல்லையே என்று கூறாமல் சகித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், பெண்களால் அப்படி சகிக்க முடியவில்லை என்று அர்த்தம் ஆகின்றதே? ஒருவேளை பெருகிவரும் கள்ளக்காதல்களுக்கு இதுதான் காரணமா?
சமூகத்தில் கள்ளக்காதல்கள் பெருகி,அதனால் அப்பாவி கணவர்கள் கொலையாவதும் கிட்டத்தட்ட தினசரி செய்திகளாகிவிட்டது. அதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும் போல!
பரதேசி தமிழன் : சரியான நேரத்துல சரியான பால் போடுறே ..,
@kazhugu : இது என்னை பொறுத்த அளவில் ABATHAMANA பதிவு ( சாரி கழுகு அண்ட் தோழி ஆனந்தி ) எதுக்கு இப்படி சொல்றேன்ன ..,நிறைய விஷயங்கள் இருக்கு ,,பெண் அடிமை பற்றி ..,இன்றும் ,தொடர்ந்து கொண்டிருக்கும்
அவல நிலை நிறைய இருக்கு ..,
///////இன்னொரு புறம் விளம்பர மாடல் பெண்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை. சில பெண்கள் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் அப்படி இருந்தால் தான் மதிப்பென்று நினைத்து அதனை பின்பற்றுகிறார்கள்...! ///////
வெறும் நடை உடை பாவனைகளை மட்டும் பின்பற்றினால் பரவாயில்லையே, தகாத உறவுகள் போன்ற விஷயங்களையும் அல்லவா சேர்த்து பின்பற்றுகிறார்கள்? அதுமட்டுமல்ல, இப்போதைய நவீன மகளிர் கள்ளக்காதலுக்காக கொலையும் செய்கிறார்கள், பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடுகிறார்கள்.... !
இதுதான் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட ஞானச்செருக்கின் லட்சணம்! (மன்னித்துகொள்ளப்பா பாரதி)
/////பனங்காட்டு நரி கூறியது...
பரதேசி தமிழன் : சரியான நேரத்துல சரியான பால் போடுறே ..,
///////
பால் போட இது விளையாட்டு அல்ல நண்பரே, சிந்திக்க வேண்டிய விஷயம்.
நிச்சயம் இது ஒரு அறைவேக்காடுதனமான பதிவு நண்பரே ..,அவசர கதியில் எழுதப்பட்ட பதிவு போல தான் தெரிகிறது .,
@ பனங்காட்டு நரி
@ பாஸ்கர்.கே
@ ட்ராக்டர் தமிழன்
நண்பர்களுக்கு நீங்கள் கொடுத்த அத்துனை விமர்சனங்களுக்கும் நன்றி...
உங்கள் பதில்களே சொல்லுகிறது இது ஆணாதிக்க உலகம் என்பதை. ஒவ்வொருவருக்கும் பதில் கூறுகிறேன்...
@ பனங்காட்டு நரி
// இது என்ன அநியாயமா இருக்கு ..,நாங்க வேலைக்கு போவும்போது நீங்க கேட்டா அது நியாயம் .,நீங்க வேளைக்கு போவும் போது நாங்க கேட்டா அது அநியாயம் .,//
பெண் என்பவள் திருமணத்துக்கு முன் வரை தன பெற்றோரை நம்பி இருக்கிறாள், அதே பெண் திருமணத்துக்கு பின் தன் கணவனை நம்பி. இன்றும் நம் சமுதாயம் ஆண்களை தானே தூக்கி கொண்டாடுகிறது. நீங்கள் கேட்பது பெண் என்பவள் உங்கள் குடும்பத்திற்கு பணம் பெற்று தருவதால். எந்த பெண்ணாவது திருமணத்துக்கு பின் கொஞ்சம் பணம் தன் பெற்றோருக்கு தர நீங்க ஒத்துப்பீங்களா?
சொல்லுங்கள் நண்பரே
பலே பிரபு சொன்னது…
@ பனங்காட்டு நரி
@ பாஸ்கர்.கே
@ ட்ராக்டர் தமிழன்
நண்பர்களுக்கு நீங்கள் கொடுத்த அத்துனை விமர்சனங்களுக்கும் நன்றி...
உங்கள் பதில்களே சொல்லுகிறது இது ஆணாதிக்க உலகம் என்பதை. ஒவ்வொருவருக்கும் பதில் கூறுகிறேன்... ////////
முதல்ல நான் எப்படி ஆணாதிக்க உலகம்னு சொல்றீங்க ..,தெரியல ..,ஒழுங்கா ஒரு பதிவ எழுத முடியல சரியான தரவுகள் எதுமே இல்ல ..,போங்க போய் பெரியார் ,பாரதியார் எல்லாரையும் படிச்சிட்டு வந்து எங்களுக்கு பதில சொல்லுங்க .,
பெண் என்பவள் திருமணத்துக்கு முன் வரை தன பெற்றோரை நம்பி இருக்கிறாள், ///
வேற எப்படி இருக்கணும் சொல்றீங்க தெரியல ? பெற்ற்றோர் கூடத்தானே இருக்கிறார் ??
@ பனங்காட்டு நரி
//நவீன மகளிரின் பிரச்சினைகளை எமது தோழமைகளிடமே கட்டுரைகளாய்ப் பகிரச் சொல்லி இதை ஒரு தொடர் போல கொடுக்கலாம் என்ற எமது உத்தேசத்தின் பின்னணியில் வீற்றிருப்பதும் விழிப்புணர்வே என்பதே அறிக//
இதை படித்தீரா? இது விதை நண்பரே கொஞ்சம் பொறுங்கள். பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் ஒரே கட்டுரையில் சொல்லி முடிக்க இயலாத விஷயம்..
பெற்ற்றோர் கூட இருப்பது பெண்ணடிமை தனம் என்று சொல்வது ....,ரொம்ப மோசமா இருக்கு பிரபு ..,விளக்கம் சொல்லணும் சொல்லாதீங்க ..,
////////பலே பிரபு கூறியது...
@ பனங்காட்டு நரி
// இது என்ன அநியாயமா இருக்கு ..,நாங்க வேலைக்கு போவும்போது நீங்க கேட்டா அது நியாயம் .,நீங்க வேளைக்கு போவும் போது நாங்க கேட்டா அது அநியாயம் .,//
பெண் என்பவள் திருமணத்துக்கு முன் வரை தன பெற்றோரை நம்பி இருக்கிறாள், அதே பெண் திருமணத்துக்கு பின் தன் கணவனை நம்பி. இன்றும் நம் சமுதாயம் ஆண்களை தானே தூக்கி கொண்டாடுகிறது. நீங்கள் கேட்பது பெண் என்பவள் உங்கள் குடும்பத்திற்கு பணம் பெற்று தருவதால். எந்த பெண்ணாவது திருமணத்துக்கு பின் கொஞ்சம் பணம் தன் பெற்றோருக்கு தர நீங்க ஒத்துப்பீங்களா?
சொல்லுங்கள் நண்பரே
//////////
வாதத்தை அழகாக திசை திருப்புகிறீர்கள். நன்றாக சம்பாதிக்கும் பெண்களும், அமெரிக்கா மாப்பிள்ளை, சாஃப்ட்வேர் மாப்பிள்ளைதானு வேணும் என அடம்பிடிப்பது ஏன்? திருமணத்திற்கு முன்பே தனிக்குடித்தனம் என்று கண்டிசன் போடுகிறார்களே, அப்புறம் இருவரின் சம்பளமும் அவர்கள் குடும்பத்திற்குத்தானே செலவாகும்?
அதிலும் மாதாந்திர செலவுகள் முழுக்க கணவனின் சம்பளத்திலும், பெண் தனக்கு வேண்டிய ஆடம்பர பொருள்களை தன் சம்பளத்திலும் வாங்கிக் கொள்ளும் நிலையை நான் பலதடவை பாத்திருக்கிறேன்.
அதே பெண் திருமணத்துக்கு பின் தன் கணவனை நம்பி.///
அதாங்க நானும் கேக்குறேன் ..,வேலைவாய்ப்பு மறுக்கபடுதா ,இல்ல போதிய பாதுகாப்பு மறுக்கபடுதா ,,இல்ல வேற எப்படி இருக்கணும் சொல்லுங்க பிரபு ?
@ பாஸ்கர்.கே
//பெண்களால் பெண்ணுக்கு உண்டாகும் பிரச்சினை....//
இதை ஒரு பெண்ணே சமாளித்து விடுவாள். ஆனால் ஆண்களால் வரும் பிரச்சினைகளை யார் சரி செய்ய இயலும்.
//// பெண் என்பவள் திருமணத்துக்கு முன் வரை தன பெற்றோரை நம்பி இருக்கிறாள், /////
//// எந்த பெண்ணாவது திருமணத்துக்கு பின் கொஞ்சம் பணம் தன் பெற்றோருக்கு தர நீங்க ஒத்துப்பீங்களா? ///////
இந்த ரெண்டுவாக்கியங்களுக்கும் உள்ள முரணை கவனித்தீர்களா பிரபு ..,
திருக்குறளையே நிர்தாட்சன்மையா ஒதுக்குறவன் நான் ..,நிலப்ரபுதுவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க கருத்துக்கள் நிறைந்திருக்கும் முடிந்தால் படித்து பாருங்கள் ..,என்னைய போய் ..ஆணாதிக்கவாதின்னு சொல்றீங்க .,சரி விடுங்க..,
//பெண்ணுரிமை பெண்ணுரிமை என்ற பேர்ல இவங்களே தங்கள தாழ்த்திகிறாங்க ,,( எந்த வித ஆண்திமிரோடு இதை சொல்ல வில்லை )..,சுதந்திரமாக இருக்க அனைத்து பாதுகாப்புகளும் பெண்களுக்கு வந்துவிட்டது .,கல்வி ,வேலைவாய்ப்பு ,திருமணம் ,பாலியியல் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் ..,அனைத்தும் இவர்களுக்கு அரணாவகே இருக்கின்றன ,ஆனால் பெரும்பாலனவர்கள் இதை தவறான வழிக்காகவே பயன் படுத்துகிறார்கள் .,//
பனங்காட்டு நரி @ பெண்ணுரிமை யாரும் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறும் அதே நேரத்தில் தமிழகம் போன்ற நமது மாநிலங்களில் பெண்ணடிமை இன்னு முழுமையாய் நீங்கவில்லை என்பதையும் தாங்கள் அறிக தோழர்!
@ பனங்காட்டு நரி
@ பரதேசித்தமிழன்
அனுதாபம் பெண்களுக்கு தேவைப்படுவதில்லை நாம் தான் உருவாக்கிவிட்டோம். எந்த பெற்றோர் இன்று ஒரு பெண்ணையும், ஆணையும் சமமாக நடத்துகிறார்கள்? அப்போது இது அடிமைத்தனம் இல்லையா?
/// இதை ஒரு பெண்ணே சமாளித்து விடுவாள்.///
Example please
//இதை நீங்க எப்படி எல்லா மகளிருக்குமான பிரச்சினை என்று சொல்லலாம்? இந்த மாதிரி நினைக்கும் மகளிர் மனநிலை கண்டிப்பாய் ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிக்கப் பட்டிருக்கும். முதலில் அதை சரி செய்தாலே, ஒப்பீடு செய்து வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறையும்.
அதை எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் எங்குமே சொல்லப் படவில்லை. நீங்கள் ,மேலே கூறியிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் யார்? ஆண்கள் மட்டுமா இல்லை பெண்களுமா? அப்படி பெண்களும் இருந்தால் ஏன் அதை சரி செய்வதைப் பற்றி இங்கே சொல்லவில்லை. அவசர கதியில் எழுதிய பதிவு போல இருக்கிறது//
ட்ராக்டர் தமிழன் @ ஆண் பெண் இருவர் சம்பந்தபட்ட பிரச்சினையே என்று கருதிக் கொண்டாலும் பெண் என்பவள் இன்னமும் நமது சமூகத்தில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியாகவே இருக்கிறாள் என்பதால் பிரச்சினையின் வீரியம் பெண்ணுக்கு அதிகம் என்று அறிக!
தீர்வுகள் அடுத்த அடுத்த பதிவுகளில் வரும்....தொடர்ந்து வந்து தங்களின் ஆதரவைத் தருக!
//// எந்த பெற்றோர் இன்று ஒரு பெண்ணையும், ஆணையும் சமமாக நடத்துகிறார்கள்? அப்போது இது அடிமைத்தனம் இல்லையா? ////
Unga kitta paesi Prayojanam illanu ninaikkiraen ..,neenga paper ,books ,
ellam padipeenga nu namburaen .,
@ பரதேசித்தமிழன்
நண்பர்களே விவாதிக்க நினையுங்கள் பெண்களை கேவலப்படுத்த நினையாதீர்கள். கள்ளகாதல் விஷயங்களை நான் பெண்களின் தவறு 10 % கூட இல்லை. அதற்கும் பின்னும் ஒரு ஆண் உள்ளான். நாய் கூட திருடன் யார் என்று தெரிந்து வைத்திருக்கும், ஆனால் நம் பெண்கள் தன்னிடம் அன்பாய் ஒருவர் பேசினாலே ஏமாந்து விடும் குணம் உள்ளவர்கள்(நிறைய பேர் இப்படி).
//அமெரிக்க மாப்பிளை, சாஃப்ட்வேர் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அலைகிறார்களே, அதெல்லாம் என்ன? மற்ற துறை வேலைகளில் இருக்கும் ஆண்கள் இன்று 30 வயது தாண்டியும் பெண் கிடைக்காமல் திணறுவது உங்களுக்கு தெரியாதா?//
பரதேசி தமிழன் @ முதல் கேள்வி ஒரிஜினல் ஐடியில் வந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்பதை உங்களுக்கு கூறி விட்டு.. பதிலுக்கு விரைகிறோம்...
ஆணாதிக சமுதாயத்தில் பெண்ணிற்கு எதிர்கால பாதுகாப்புக்கு நல்ல உத்தியோகத்தில் இருக்கும் கணவனைத் தேடுகிறார்கள். இங்கே ஆணாதிக்க சமுதாயம் இன்னும் மாறவில்லை என்று தாங்கள் ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்!
@ பனங்காட்டு நரி
Unga kitta paesi Prayojanam illanu ninaikkiraen ..,neenga paper ,books ,
ellam padipeenga nu namburaen .,
இதை செய்வதும் ஆண்தான் நண்பா. ஒரேடியாய் குறை கூறும் நீங்கள் இந்த கேள்விக்கு பதில் கூறலாமே
//கூட்டுக்குடும்பங்கள் அழிந்து வருவதற்கு யார் காரணம்? எங்கே மனதை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்? இன்று எத்தனை பெண்கள் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள் தெரியுமா? அதுவும் திருமணமாகும் முன்பே இந்தக் கண்டிசனையும் பேசிவிடுகிறார்கள்.
அதிலும் தன் தாயார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கணவரையும் குடும்பத்தினரையும் ஆட்டிப் படைக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா? இன்று எத்தனை வீடுகளில், பெண்ணின் பெற்றோர் வந்து போவதற்கு இருக்கும் சவுகர்ய உணர்வு, கணவனின் பெற்றொர் வந்து போவதற்கு இருக்கிறது//
பெண்ணின் பிரச்சினைகளுக்கும் இந்த பதிலுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. வேறு தலைப்பில் குடுமபத்தைப் பிரிப்பது யாரென்று யாரேனும் கட்டுரை போட்டிருந்தால் அங்கே உங்கள் கருத்து ஒரு வேலை எடுபடலாம். நன்றிகள்!
//பரதேசி தமிழன் : சரியான நேரத்துல சரியான பால் போடுறே ..,//
யாரின் வருகை என்று கழுகால் உணர முடிந்த இடம்..இது..!
அப்போ ஒரு ஆண் அந்த இடத்துல இருந்தா வீர்யம் குறைஞ்சிடுமா ..,கழுகு .,முதலில் ஒன்று.., பெண்ணடிமை உடைக்க நமது சமுககட்டமைப்பு முறையை மாற்ற வேண்டும் .,அந்த கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக உடையும் போது ஏற்படும் விபரீதங்களே ஏற்படும் .உதாரணம் ..,பரதேசி தமிழன் சொல்லிவிட்டார் .அதை நாம் எப்படி எதிர் கொண்டு நேர் கொண்ட வழியில் செல்வதை பற்றி ஆராய வேண்டும் அது தான் உண்மையான விழிப்புணர்வாக இருக்க முடியும் .,,இன்னும் பெண்ணடிமை பெண்ணடிமை பேசிக்கொண்டு இருப்பது .,அது ஒரு வித சுயகழிவிரக்கம் கொண்ட பதிவுகளாகவே தோன்றும் .,மற்றும் பலே பிரபு .,விவாதங்களை எடுத்து செல்வதில் ஒரு வித ஆற்றாமையை பெண்கள் மேல் திணிக்க படுவதாகவே தோன்றுகிறது .,
//இது என்னை பொறுத்த அளவில் ABATHAMANA பதிவு//
எது அபத்தம் என்று பட்டியலிட தோழர் நரியை இங்கே அழைக்கிறேன்....ஒன்று இரண்டு என்று பட்டியலிட்டு அபத்தங்களை விளக்குங்கள்....தவறெனில் மாற்றிக் கொள்கிறோம். எமது விளக்கம் சரியெனில் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள்!
@ பரதேசித்தமிழன்
30 வயதுள்ள ஆண் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொல்கிறீர்கள். எத்தனை பெண்கள் வரதட்சணை என்ற ஒரு வார்த்தையால் வாழ்க்கையினை தொலைத்து உள்ளார்கள். கொஞ்சம் எண்ணி பாருங்கள். நீங்கள் சொல்லுவதற்கு காரணம் இதுதான். படித்த பெண்கள் எல்லோரும் நீங்கள் சொல்லுவது போல பெரும் பணக்காரர்களை மட்டும் மணமகனாக எதிர்பார்க்கவில்லை, திருமணம் முடிந்தால் தன்னை வாழவைக்கும் ஒரு நல்ல மணமகனை எதிர் பார்க்கிறார்கள். இது தவறா?
//முதல்ல நான் எப்படி ஆணாதிக்க உலகம்னு சொல்றீங்க//
ஆணாதிக்க படிமாணம் இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதை அறிந்திராத தோழமையின் மின்னஞ்சலுக்கு தகுந்த மின்புத்தகங்களும் அறிக்கைகளும் அனுப்பி வைக்கப்படும். தெளிக;
பனங்காட்டு நரி @ எமது கட்டுரையை திருத்த சொல்லும் விமர்சனம் கொடுத்தமைக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தங்களால் எப்படியெல்லாம் உதவி நல்ல கட்டுரை வரவைக்க முடியுமோ அத்தனை கட்டுரைகளுக்கும் செவி சாய்க்க காத்திருக்கும். தங்களின் சமூகபங்களிப்புக்கு நன்றிகள்!
பனங்காட்டு நரி @ எமது கட்டுரையை திருத்த சொல்லும் விமர்சனம் கொடுத்தமைக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தங்களால் எப்படியெல்லாம் உதவி நல்ல கட்டுரை வரவைக்க முடியுமோ அத்தனை கட்டுரைகளுக்கும் செவி சாய்க்க காத்திருக்கும். தங்களின் சமூகபங்களிப்புக்கு நன்றிகள்!
@ பனங்காட்டு நரி
நண்பரே உங்கள் எண்ணத்துக்கு ஒரு சல்யூட்
பெண்ணடிமை பெண்ணடிமை என்று கூறுவதும் ஆண்கள் தான். பெண்கள் அதை உடைக்கவே போராடுகின்றனர்.
//பெரியார் ,பாரதியார் எல்லாரையும் படிச்சிட்டு வந்து எங்களுக்கு பதில சொல்லுங்க ., //
காந்தி கூறிய ஒன்று உங்கள் நினைவில் உள்ளதா நண்பரே?
"என்று ஒரு பெண் நள்ளிரவில் நகைகள் உடன் தைரியமாக நடந்து செல்கிறார்களோ அன்றுதான் இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாடு"
இன்னும் இது நிகழவில்லையே... சுதந்திரம் ஆணுக்கு மட்டும்தானா ??
பனங்காட்டு நரி @ ஆயிரம் கருத்துக்கள் எதற்கு...
உங்கள் கருத்தின் சாரம்சத்தை கூறுங்கள்.........அதை வாசித்து விட்டு தங்களிடம் இருந்து கற்று கொண்டோமா அல்லது கற்றுக் கொள்கிறோமா என்று அறிவோம்...
திருவாளர பரதேசி தமிழன் உங்களுக்கும் இதே வேண்டுகோள்!
பனங்காட்டு நரி...@ பெண்ணடிமைத்தனம் என்பது இன்னதென்று அறியவொண்ணா வண்ணம் நமது சமூகத்தில் புரையோடுப் போயிருக்கிறது உண்மை என்று நீங்கள் அறிவீர்கள்.
இப்படியாக பெண்களின் பார்வைகளை வாங்கி சமூகத்தில் பகிரத்தான் இப்படியான கட்டுரைகளை வெளியிடுகிறோம். நீங்கள் பெண்ணடிமைத்தனம் இல்லையென்று கூறும் இதே சமூகத்தில் தான் பெண்கள் தங்களின் மனோநிலையை இப்படி பகிர்கிறார்கள்....யோசிக்க வேண்டாமா தோழர்?
வேண்டுமென்று ஒரு அபாண்டத்தை யாரேனும் பகிர வேண்டிய அவசியமிருக்கிறதா? இது ஒரு பெண்ணின் பார்வை இது தவறென்று வாதிட எப்படி நீங்களும் வேறு பரதேசி தமிழன் ஐயாவும் கூற முடியும்.
இப்படி இருப்பதை எப்படி மாற்றலாம் என்று நீங்கள் கருத்து கூறினால் அது ஆக்கப்பூர்வம் நிறைந்தது
இல்லை என்று எப்படி கூற முடியும் .........ஒரு பெண்ணின் பார்வையாக இந்தக் கட்டுரை இருக்கும் போது?
"என்று ஒரு பெண் நள்ளிரவில் நகைகள் உடன் தைரியமாக நடந்து செல்கிறார்களோ அன்றுதான் இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாடு" //////
பிரபு ,,நீங்கள் சென்னையில் இருந்தால் .,கால் சென்டரில் பணிபுரியும் பெண் ஊழியர்களை பார்க்கலாம் ,நேரம் காலம் எல்லாம் கிடையாது ,இரவு ரெண்டு மணிக்கி ஷிப்ட் ஆரம்பிக்கும் ...,அதே போல் நோக்கியா ,பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் .,பெண்கள் இரவு நேர பணி முடிந்து .,பத்திரமாக வீடு திரும்புகிறார்கள் .,
பனங்காட்டு நரி @ தங்களின் ஒப்பற்ற கருத்துக்களும் சமூக அவலத்தை பற்றிய சீற்றமும் கண்டு மெய்சிலிர்க்கிறது...
நீங்கள் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வுத்தளத்திற்கு ஏன் கட்டுரைகள் கொடுக்கக் கூடாது. உங்களைப் போன்ற சக்தி மிகுந்தவர்களின் பார்வை இந்த சமுதாயத்திற்கு தேவை...! யோசிங்கள் தோழர்!
//"என்று ஒரு பெண் நள்ளிரவில் நகைகள் உடன் தைரியமாக நடந்து செல்கிறார்களோ அன்றுதான் இந்த நாடு சுதந்திரம் அடைந்த நாடு"//
தம்பி...இன்னைக்கு தங்கம் விக்குற விலைல .... முதல்ல ஒரு ஆண் ஒரு நகையை போட்டுக்கிட்டு (ப்ரசெலேட்,செய்ன்) நள்ளிரவில் நடந்து செல்ல முடியுமா ? :)
யாரோ சொன்னாங்க என்பதற்காக...அதையே புடிச்சுகிட்டு தொங்குனா எப்படி :)
//பிரபு ,,நீங்கள் சென்னையில் இருந்தால் .,கால் சென்டரில் பணிபுரியும் பெண் ஊழியர்களை பார்க்கலாம் ,நேரம் காலம் எல்லாம் கிடையாது ,இரவு ரெண்டு மணிக்கி ஷிப்ட் ஆரம்பிக்கும் ...,அதே போல் நோக்கியா ,பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகளில் .,பெண்கள் இரவு நேர பணி முடிந்து .,பத்திரமாக வீடு திரும்புகிறார்கள் .,
//
சென்னை மட்டுமா தமிழகம் தோழர்....! தமிழகமெங்கும் உங்கள் விசால பார்வையை பதியுங்கள்....!
//தம்பி...இன்னைக்கு தங்கம் விக்குற விலைல .... முதல்ல ஒரு ஆண் ஒரு நகையை போட்டுக்கிட்டு (ப்ரசெலேட்,செய்ன்) நள்ளிரவில் நடந்து செல்ல முடியுமா ? :)
யாரோ சொன்னாங்க என்பதற்காக...அதையே புடிச்சுகிட்டு தொங்குனா எப்படி :)//
கிருஷ்ணா @ வரவேற்கிறேன் தோழமை!!!!:-))))
புரட்சியாய் பேசுதல் எளிது..... ஆனால் நடை முறை சாத்தியக்கூறுகளையும் பெண் என்றால் பெண்ணடிமைப் பற்றி கூட பேசுதல் கூடாது மேலும்... தனது பிரச்சினைகளை கூறுதலே தவறு என்ற மனோபாவத்தில் வந்து விழும் கருத்துக்கள்.........சான்றாகிப் போகின்றன நாம் எப்படி இருக்கிறோம் என்று...
புரட்சியாய் பேசுதல் எளிது..... ஆனால் நடை முறை சாத்தியக்கூறுகளையும் பெண் என்றால் பெண்ணடிமைப் பற்றி கூட பேசுதல் கூடாது மேலும்... தனது பிரச்சினைகளை கூறுதலே தவறு என்ற மனோபாவத்தில் வந்து விழும் கருத்துக்கள்.........சான்றாகிப் போகின்றன நாம் எப்படி இருக்கிறோம் என்று...
புரட்சியாய் பேசுதல் எளிது..... ஆனால் நடை முறை சாத்தியக்கூறுகளையும் பெண் என்றால் பெண்ணடிமைப் பற்றி கூட பேசுதல் கூடாது மேலும்... தனது பிரச்சினைகளை கூறுதலே தவறு என்ற மனோபாவத்தில் வந்து விழும் கருத்துக்கள்.........சான்றாகிப் போகின்றன நாம் எப்படி இருக்கிறோம் என்று...
//வேண்டுமென்று ஒரு அபாண்டத்தை யாரேனும் பகிர வேண்டிய அவசியமிருக்கிறதா? இது ஒரு பெண்ணின் பார்வை இது தவறென்று வாதிட எப்படி நீங்களும் வேறு பரதேசி தமிழன் ஐயாவும் கூற முடியும்.//
கழுகு சாப் (சார் ),
பெண்ணின் பார்வை ,கழுகின் பார்வை மாதிரி...இது எங்க பார்வை....அவங்க பார்வை எங்களுக்கு தப்பா தெரியுதே.....எங்க பார்வை அவங்களுக்கு தப்பா தெரியுதே :)
@ கிருஷ்ணா
//யாரோ சொன்னாங்க என்பதற்காக...அதையே புடிச்சுகிட்டு தொங்குனா எப்படி//
அர்த்தம் நகை மட்டும் அல்ல, அந்த பெண்ணின் கற்பும் தான் நண்பரே.
உங்களின் பார்வை என்பதை மறுக்கவில்லை கிருஷ்ணா ...
இந்தக்கட்டுரை பெண்ணின் பார்வை என்பதை ஏற்க சொல்கிறோம்.. !
முடிஞ்சது பிரபு ..,பெண்ணடிமை தனத்திற்கு .,முதல் எதிரியே கற்பு தான்னு பெரியார் சொல்வார் ..,அப்புறம் தாலி ,மெட்டி ,இதெல்லாம் .நீங்க பெரியார் சொன்ன கூற்றை மருகீர்கள
என்னது பெண்கள் யாரும் ஒன்னும் சொல்லலை....நாம ஏன் தேவையில்லாம அடிச்சிக்கணும் :))
//இந்தியாவில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு பெண் ஏதோ ஒரு விதத்தில் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார் என்று தேசிய குற்ற ஆவண அமைப்பு ஆய்வுவெய்துள்ளது…
2006 – ம் ஆண்டில் 164765 குற்றங்கள் நடந்துள்ளன.
2007 – ம் ஆண்டில் 185312 குற்றங்கள் நடந்துள்ளன.
இதில் கணவன் மாமனார் மாமியார் மைத்துனர் மைத்துனிகள் செய்த கொடுமைகள் 75930.
பாலியல் கொடுமைகள் 20771 நடந்துள்ளன.
இந்த குற்றங்கள் அதிகம் இந்தியாவில் மத்திய பிரதேசத்திலும் பிற மாநிலங்களிலும் நடந்துள்ளன.
பெண்களுக்கு எதிராக பெண்களே கொடுமைகள் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை.
விஞ்ஞான அறிவு வளர்ந்த அளவிற்கு இன்னும் மனிதநேயம் வளரவில்லை.
வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு நடக்கக் கூடிய கொடுமைகளை பல பெண்கள் அதிகம் வெளியில் சொல்வதில்லை தங்கள் மனதிற்குள் வைத்து புலுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்தாலும் சட்டத்தின் சந்து பொந்துக்களில் அவர்கள் நுழைந்து தப்பித்து விடுவதாக பெண் உரிமைக்காக போராடும் ரஞ்சனாகுமாரி கூறுகிறார்.
//
இது ஒரு ஆய்வறிக்கை என்பதை இங்கே போராடிக் கொண்டு இருக்கும் என் அன்பின் தோழமைகள் அறிக;
இங்கே இது இத்தனை விமர்சிக்கப்பட காரணம் என்னவென்று தெரியவில்லையா கிருணா சாப்!
//அந்த பெண்ணின் கற்பும் தான் நண்பரே.//
இங்க இங்க தான் நீங்க நிக்குறீங்க :)
இதை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் விவாதிகளே....!
http://www.dinakaran.com/indiadetail.aspx?id=38636&id
தெளிவில்லாத பதிவு என்ற ஒரே காரணத்திற்காக தான் விமர்சிக்க பட்டது ..,போலவே நீங்கள் போட்ட முன் பதிவை விமர்சிதோமா ..,வித்யாசத்தை பாருங்கள் .,
@ பனங்காட்டு நரி
நண்பரே நீங்கள் கூறும் விஷயங்கள் தானே இன்று பெண்களை கட்டிப் போட்டு உள்ளது. பெரியாரை மறுக்கவில்லை, அவர் கருத்துக்களை வெறுக்கும் நண்பர்களை தான் மதிக்கவில்லை.
//இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பெங்களூரில் செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமர்ஸ் மற்றும் ஸ்ரீ ஜக்ருதி சமிதி என்ற பெண்கள் அமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமை: தீர்க்க வழிகள் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மனித உரிமை கல்வி மற்றும் கண்காணிப்பு அமைப்பின் தென்னிந்திய பிரிவு, பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்து ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம் என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக 26 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுகிறாள். இதுபோல் 34 நிமிடத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.
ஆண்டுக்கு 1.5 கோடி பெண் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களில் 4ல் ஒருவர் 15 வயதைத் தாண்டுவதற்கு முன்பே இறந்து விடுவதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிவதற்கான அல்ட்ராசவுண்ட் இயந்திரம் மட்டும் இருக்கின்றன. இதை வைத்து, பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டதிட்டங்கள் அனைத்தும் ஆண்களாலேயே இயற்றப்படுவதால் ஆண்களுக்கு சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளனதுது என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நக்மோகன் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை மட்டுமல்லாது, பாலியல் வேறுபாடு, அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு என பெண்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம். இதிலிருந்து விடுபட ஆண்களின் உதவி தேவைதுது என ஸ்ரீ ஜக்ருதி சமிதி செயலாளர் கீதா மேனன் தெரிவித்துள்ளார்//
உரக்க அறிவிக்கிறோம்........அறிக எம் இளைஞர்களே....!
link does not open KAZHUGU
//இது ஒரு ஆய்வறிக்கை என்பதை இங்கே போராடிக் கொண்டு இருக்கும் என் அன்பின் தோழமைகள் அறிக;//
2011 சட்ட மன்ற தேர்தலில் தி மு க 190 இடங்களை கைப்பற்றும் என்று கூட சொன்னது ஒரு ஆய்வறிக்கை என்பதை இங்கே போராடிக் கொண்டு இருக்கும் என் அன்பின் தோழமைகள் மற்றும் கழுகு அறிக; :))
//தெளிவில்லாத பதிவு என்ற ஒரே காரணத்திற்காக தான் விமர்சிக்க பட்டது ..,போலவே நீங்கள் போட்ட முன் பதிவை விமர்சிதோமா //
பனங்காட்டு நரி @ பதிவு தெளிவில்லாதது என்று கூற உங்களுக்கு சகலவிதமா உரிமைகளும் இருக்கிறது ஆனால் கருப்பொருள் தவறென்று பகிராதீர் என்பதே எமது வேண்டுகோள்!
@ பனங்காட்டு நரி
@ பனங்காட்டு நரி
எங்களுக்கும் விவாதங்கள் தேவை, எங்களின் தவறுகள், குறைகள் களைய. ஆனால் இங்கே கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் என் மனதையே புண்படுத்துகிறதே...
நரி @ இதனை முயன்று பாருங்கள் தோழமை...
http://www.dinakaran.com/indiadetail.aspx?id=38636&id1=1
//பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம் என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. //
இந்தியாவில் மக்கள் தொகை அனைத்து நாட்டையும் விட அதிகம் என்பதை உரக்க அறிவிக்கிறோம்........அறிக கழுகு :)
எல்லாவற்றையும் புள்ளி விவரம் கொண்டு பார்த்தால் அப்படி தான் தெரியும் ....
பலே பிரபு....@
பனங்காட்டு நரியும், கிருஷ்ணாவும் கழுகின் நல விரும்பிகள்..! நாம் ஆரோக்கியமான கருத்துக்களை விவாதிப்பவர்களாக இருக்கிறோம்.
கழுகு வலுவான சுட்டிக்காட்டும் தோழமைகளை வாசகர்களாக கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறது.
@ கிருஷ்ணா
உண்மை, கணிப்பு இரண்டையும் ஒப்பிடாதீர்கள்
@ கிருஷ்ணா
@ பனங்காட்டு நரி
இதை கொஞ்சம் பாருங்கள்
http://alltopten.blogspot.com/2011/06/top-5-worlds-most-dangerous-countries.html
கிருஷ்ணா @ நடக்கிறது என்று அறிக;
கழுகு : நான் எங்கே கருபொருளை தவறென்று கூறினேன் ..,திருக்குறள் போன்ற இறை நூல்களையே ஒதுக்குபவன் நான் .,பெண்ணாதிக்க மிக்க கருத்துக்கள் இருப்பதால் ,.எங்கே அவர்களுக்கு சுதந்திரம் மறுக்கபடுகிறது என்பதே என் கேள்வி .,குடும்பம் ,கல்வி ,வேலைவாய்ப்பு ,பதிவுலகத்தில் போன்ற விஷயங்களிலா அல்லது வேறு எங்கு மறுக்கபடுகிறது .,சொல்லுங்கள் .,
//உண்மை, கணிப்பு இரண்டையும் ஒப்பிடாதீர்கள் //
ம்... சத்திய சோதனை ..கொஞ்சம் சருக்கிடேன் :)
கூடுதலாக வாசிக்க...
http://www.eegarai.net/t55688-topic#503306
பலே பிரபு கூறியது...
@ பாஸ்கர்.கே
//பெண்களால் பெண்ணுக்கு உண்டாகும் பிரச்சினை....//
இதை ஒரு பெண்ணே சமாளித்து விடுவாள். ஆனால் ஆண்களால் வரும் பிரச்சினைகளை யார் சரி செய்ய இயலும்/////////
நண்பரே...நான் உங்கள் பதிவை பற்றி மட்டும்தான் கருது சொன்னேன்.. உங்கள் கட்டுரையில் சொல்லிய பிரச்சனைகள் எல்லாமே பெண்களுக்கு அவர்களாலே வருவது என்பதைத்தான் நான் அப்படி சொன்னேன்.. நீங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் என் கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கிறீர்கள்!
இன்னொன்று ஆண்களால் என்ன பிரச்னை என்று கூறுகிறீர்கள்? பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது சந்திக்கும் சின்ன பிரச்சனைகளைகூட ஆணாதிக்க சாயம் பூசாதீர்கள்! அது உங்கள் இயலாமையின் வெளிப்பாடு! அப்ப.. ஆண்கள் அனைவருமே பிரச்னை இல்லாமல் சுகமாக இருக்கிறார்களா? வீட்டை விட்டு வெளியில் வந்தால் அனைவருக்கும் பிரச்சனைகள் உள்ளது நண்பரே.. அதில் நீங்களும் நானும்கூட உண்டு!
நான் சொன்ன கருத்தை திரும்ப ஒருமுறை படியுங்கள்... பெண்களுக்கு பெண்கள்தான் அடிப்படை பிரச்னை.. மாமியார் மோசம் என்று தன் அம்மாவிடம் மகள் சொல்வார்..மருமகள் மோசம் என்று தன் மகளிடம் மாமியார் சொல்வார்.. வரதட்சணை பற்றி சொன்னீர்கள்.. எத்தனை வீட்டில் ஒரு ஆண்மகனின் யோசனைப்படி திருமணம் நடக்கிறது? பெண்கள் நாங்கள் அப்பிடிதான் கேட்ப்போம்..ஆண்கள் நீங்கள் மறுக்கவேண்டும்.. அப்படி மறுத்தால் மகன் அம்மா பேச்சை கேட்க்கவில்லை என்று வேறு வடிவில் ஆணாதிக்கம் என்பீர்கள்! முடியல.. சுதந்திரம் வேண்டும் என்று குரல் கொடுப்பதை விட்டு...சக பெண்களுக்கு அதை முதலில் கொடுங்கள்..பாதி பிரச்னை முடிந்தது!
@
பனங்காட்டு நரி
நான் கொடுத்துள்ள லிங்க் சென்று பாருங்கள்.
http://www.dinakaran.com/indiadetail.aspx?id=38636&id1=1
அதே அதே ....,
UAE la பெண்கள் கார் ஓட்ட முடியுமா ?
பனங்காட்டு நரி @ முடியும்.
பாஸ்கர் @ ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள்...
நமது சமுதாயம் முழுமையான ஆணாதிக்கம் இல்லாத சமுதாயாமா? இதற்கு பதில் சொல்லுங்கள்!
30 பேர் ஓட்டுனாங்க ...,4 அதுல பேர் கைது செய்யப்படாங்க ன்னு தொலைக்காட்சி செய்தி
@ பாஸ்கர்.கே
மாமியார், மருமகள் பிரச்சினைக்காக மற்ற பிரச்சினைகளை ஒதுக்கி விடாதீர்கள். கட்டுரையை மற்றொரு முறை படிக்கவும் அலுவலகம், சமையல், சம உரிமை, இதுவும் உள்ளது. கூறி உள்ளது குறைவு தான். ஆனால் கூறவே இல்லை என்று சொல்லுவது உண்மையல்ல நண்பா
தவறான செய்தி நண்பரே
அமீரகத்தில் பெண்கள் கார் ஓட்ட முடியும். ஓட்டுகிறார்கள்
http://www.eegarai.net/t65120-topic
Can women drive?
Absolutely! Women of all nationalities drive in the UAE.
http://www.alloexpat.com/abu_dhabi_expat_forum/abu-dhabi-driving-driving-in-abu-dhabi-uae-guide-t1656.html
//நமது சமுதாயம் முழுமையான ஆணாதிக்கம் இல்லாத சமுதாயாமா? இதற்கு பதில் சொல்லுங்கள்! //
நம்ம முதல்வர்(ஜெயலலிதா) காலில் விழும் ஆணாதிக்கம் உள்ள சமுதாயம் :)
கழுகு கூறியது...
பாஸ்கர் @ ஒற்றை வரியில் பதில் சொல்லுங்கள்...
நமது சமுதாயம் முழுமையான ஆணாதிக்கம் இல்லாத சமுதாயாமா? இதற்கு பதில் சொல்லுங்கள்//
நமது சமுதாயம் மட்டும் இல்லை நண்பரே...ஆதி முதலே உலக சமுதாயம் அப்பிடித்தான்.. அதையெல்லாம் ஏன் கட்டுரையில் சொல்லவில்லை என்றுதான் நான் கேட்டேன்..குறிப்பாக நான் சொன்னது இந்த பதிவை மட்டும்தான்... இதில் சொல்லியவை அனைத்துமே பெண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்தான் அதிகம் என்று கூறினேன்.. அதை ஏன் ஒப்புகொள்ள மறுக்கிறீர்கள்? ஒரு வேளை அடுத்த கட்டுரைகளில் இன்னும் தெளிவாக இதைப்பற்றி சொன்னால் அப்போது சொல்கிறேன் என் கருத்துக்களை! கட்டுரையை பற்றி மட்டுமே நான் இங்கு பேசினேன்! கட்டுரையில் இல்லாத விசயங்களை விவாதிக்க முடியாது :((
கழுகு : சவுதி அரேபியா ..,அது
@பனங்காட்டு நரி
in Eekarai
ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.//
இது காரணம் இல்லையா? இது போல நிறைய உள்ளது ஈகரை கட்டுரையில்
கழுகு சார், இந்த வரிகளுக்கு அர்த்தம சொல்லுங்க.
// வெளி உலகத்தில் விமரிசையாய் வலம் வருவதால் எதிர் படும் பல்வேறு மனிதர்களில் உயரிய குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால் தனெக்கென்று வாய்த்த துணை தன்னிடம் அப்படி இல்லையே..! இப்படி இல்லையே..! என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது.//
இது நிச்சயமாய் மகளிரின் பிரச்சனையா? அப்படின்னா எல்லாப் பெண்களுக்கும் இந்த மாதிரி எண்ணம் இருக்கா? இந்த வரிகள் தேவை தானா? இந்த வரிகள் கட்டுரையின் மொத்த குறிக்கோளையே மாற்றி விட்டதே?
நரி @ சவுதி அரேபியாவில் அப்படி அறிவிக்கப்பட்டு அதற்கான போராட்டங்களும் சர்வ தேச சமுதாயத்தின் பார்வையும் அந்த தேசத்தின் மீது விழுந்திருக்கிறது.
அப்போ ஒரு திருமணம் முறிய ஆண் ,பெண் இரண்டு பேரும் சமநிலையில் இருக்கிறார்கள் அப்படிதானே
//கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
//
நீக்கப்பட்டது எனது கருத்து, நீக்கியதும் நான்தான்.
@ ட்ராக்டர் தமிழன்
நீங்கள் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை பார்க்கிறீர்கள்?
//இது நிச்சயமாய் மகளிரின் பிரச்சனையா? அப்படின்னா எல்லாப் பெண்களுக்கும் இந்த மாதிரி எண்ணம் இருக்கா?//
அதானே....எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகணும்...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகணும்.. :)
ட்ராக்டர் தமிழன் @ ஆண் பெண் இருவர் சம்பந்தபட்ட பிரச்சினையே என்று கருதிக் கொண்டாலும் பெண் என்பவள் இன்னமும் நமது சமூகத்தில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியாகவே இருக்கிறாள் என்பதால் பிரச்சினையின் வீரியம் பெண்ணுக்கு அதிகம் என்று அறிக!
இது ஏற்கனவே பகிர்ந்தாயிற்றே...தாங்கள் வாசிக்கவில்லையோ?
@ பனங்காட்டு நரி
பெண்கள் கூறும் காரணம் தங்கள் ஆண்களின் குணம், குடும்பத்தை காக்கும் பொறுப்பின்மை, (இதன் காரணம் பெண் ஆணை சார்ந்து இருப்பது). ஆனால் ஆணின் காரணம் வரதட்சணை. எது சம நிலை ?
@ கிருஷ்ணா
உங்களுக்கு அதே கேள்வி
நீங்கள் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை பார்க்கிறீர்கள்?
//பெண்கள் கூறும் காரணம் தங்கள் ஆண்களின் குணம், குடும்பத்தை காக்கும் பொறுப்பின்மை, (இதன் காரணம் பெண் ஆணை சார்ந்து இருப்பது). ஆனால் ஆணின் காரணம் வரதட்சணை. எது சம நிலை ? //
தம்பி ...டீ இன்னும் வரல.... :)
அண்ணன் டீ குடிச்சிட்டு ....அப்படியே ஒரு தராசு தட்டு எடுத்துட்டு வரேன் ...நிறுத்தி பார்த்தரலாம்...எது சம நிலை என்று :)
//பலே பிரபு கூறியது...
@ ட்ராக்டர் தமிழன்
நீங்கள் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை பார்க்கிறீர்கள்?//
கழுகு & பிரபு,
அந்த வரிகளை திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள். ஒப்பீடு செய்தல், இது பெண்ணடிமை சம்பந்தப்பட்ட பிரச்சனையா? அது மகளிரே அவர்களாய் உருவாக்கிக் கொள்ளும் ஒரு மனநிலை தானே? இது எப்படி பொதுவில் சந்திக்கும் பிரச்சனை ஆகும்? இதில் பிரச்சினையின் வீரியம் என்பது எங்கும் இல்லை. இது உருவாக்கிக் கொள்வது. அடுத்தவர்களால் மகளிருக்கு திணிக்கப்படும் பிரச்சனை இல்லை.
வரதட்சணை. :இதற்க்கு என்னால் ஆதார பூர்வமாக பூர்வமாக பதில் அளிக்க முடியும் ..,
ட்ராக்டர் தமிழன்....@
பெண் வீட்டுக்குள் வைக்கப்படுவதாலும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாததாலும் இதன் வீரியம் அதிகமானது என்பதை உணருகிறீர்களா? வெளியில் செல்லக்க்கூடாது என்பது சமுதாயம் நிர்ப்பந்தம் என்பதை புரிகிறீர்களா?
இப்போது சொல்லுங்கள் பிரச்சினையின் வேர் எது?
பிரபு & கழுகு, பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகம் படித்திருக்கிறீர்களா? அப்படி இருப்பின் உங்களுக்கே தெரியும் பெண்களை அடிமைப் படுத்தும் காரணிகள் என்னவென்று!
@ கிருஷ்ணா
டீ தானே எடுத்துக் கொள்ளுங்கள்,. வீட்டில் இருந்தால் ஒரு "பெண்ணை" டீ போட்டுத் தர சொல்லுங்கள். ஏன் என்றால் நீங்கள் அவருக்கு தானே பேசுகிறீர்கள்
//கழுகு கூறியது...
ட்ராக்டர் தமிழன்....@
பெண் வீட்டுக்குள் வைக்கப்படுவதாலும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாததாலும் இதன் வீரியம் அதிகமானது என்பதை உணருகிறீர்களா? வெளியில் செல்லக்க்கூடாது என்பது சமுதாயம் நிர்ப்பந்தம் என்பதை புரிகிறீர்களா?
இப்போது சொல்லுங்கள் பிரச்சினையின் வேர் எது?//
கழுகு, நாம் இங்கே விவாதிப்பது நவீன மகளிருக்கான பிரச்சினைகள். நீங்கள் சொல்வது கடந்த கால மகளிரைப் பற்றி. நாம் விவாதிக்கும் களம் குறித்த என் அனுமானம் சரிதானே?
//நீங்கள் எந்த அர்த்தத்தில் அந்த கருத்தை பார்க்கிறீர்கள்?//
தம்பி...அண்ணனுக்கு விவாதம் பண்ணி தலை சூடு ஆகிருச்சு..... :)
எங்க வீட்டுல இருந்து என் அம்மா கூப்பிடுராங்க......ஆபீஸ்ல ஆணி புடுங்குனது போதும்னு வையுறாங்க
பெண் ஆதிக்கம் எனக்கு பிடிக்காது....ஆன அம்மா (எங்க அம்மாவை சொன்னேன் ) ஆதிக்கம் பண்ணுனா பிடிக்கும்...:)
அப்ப நான் வர்ட்டா.......... :)
@ பனங்காட்டு நரி
மாமியாரின் ஆசை என்பீர்கள். மாமியார் இல்லாத வீடுகள் கேட்பது இல்லையா?
ட்ராக்டர் தமிழன் @ அதை நீங்கள் வாசித்திருப்பீர்கள் போலும்.... நாங்கள் வாசிக்கவில்லை!
தற்போது கருத்துக்கும் இந்தக்கட்டுரைக்கும் வாருங்களேன்....!
மீண்டுமொரும் முறை இது விதாண்டாவதமாக போகாமல் இருக்க...
ஒவ்வொருவராக...உங்களின் நிலைப்பாட்டினை பகிருங்கள்!
ட்ராக்டர் @தங்களின் நிலைப்பாடு என்ன?
@
கிருஷ்ணா
நன்றி அண்ணா,,, உங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி. மேலும் இது போன்ற கருத்துக்களை தொடருங்கள்.
வேறு யாரும் குறுகீடு செய்து திசை மாற்ற வேண்டாம்....
முதலில் ட்ராக்டர்........!
பிரபு : உங்கள் சிந்தனை தட்டையானதகவே உள்ளது ..,98% நாட்டில் இது வரை போலி வரதட்சணை புகார்களே .,இது ஒரு வக்கீல் நண்பர் என்னிடம் சொல்லியது .,என் நண்பன் இதனால் தான் பாதிக்க பட்டான் ..,அவன் அம்மா சிறையில் ஆறு மாதம் இருந்து வழக்கு போலியானது என்று தெரிந்ததும் விடுவித்து விட்டார்கள் .,
கொஞ்சம் விரைவாக கலந்தாலோசிப்புகளை நிறுத்தி விட்டு வந்தால் தீர்வினை எட்டி விடலாம்.
@ பனங்காட்டு நரி
ஆக மொத்தத்தில் புகார் கொடுக்காத வீட்டில் வரதட்சணை வாங்கவில்லை, புகார் வந்தா அது பொய் என்று நீங்கள் சொல்கிறீர்கள?
நரி @ கொஞ்சம் பொறுமையாயிருங்கள். இப்போது ட்ராக்டர் தமது நிலைப்பட்டினை தெரிவிக்கப் போகிறார். அதற்கு பிறகு தாங்கள்!
//வேறு யாரும் குறுகீடு செய்து திசை மாற்ற வேண்டாம்....
முதலில் ட்ராக்டர்........!//
I am waitng For ட்ராக்டர்'s Reply
டிராக்டரின் தெளிவான நிலைப்பாட்டிற்காக காத்திருக்கிறோம். (கற்றுக் கொள்ள எமக்கும் எம் வாசகர்களுக்கும் ஒரு வாய்ப்பாய் இருக்காட்டும் தோழமை)
ட்ராக்டர் தயாராகி வரும் அதே நேரத்தில் அன்பின் நரி அவர்கள் தங்கள் கருத்தினையும் நிலைப்பாட்டினையும் பகிரலாம்!
யாரேனும்.......இருக்கிறீர்களா?
நன்றிகள் தோழமைகள் தங்களை நிர்ப்பந்தித்தல் எமது ஒழுக்க முறைகளுக்கு எதிரானது.
மிகுதியான கருத்துரைகள் வருகின்றன என்பதாலும் அவற்றுக்கு யாம் மறுபடிகள் பகிர வேண்டிய பொறுப்பு இருப்பதாலும் தற்காலிகமாக இந்த பதிவிற்கு வரும் கருத்துரைகளை மட்டறுக்கும் செயலியை செயற்படுத்துகிறோம்.
சர்வ நிச்சயமாய் உமது கருத்துரைகளும் அதற்கான பதிலுரைகளும் தெளிவாய் வரும் என்பதை அறுதியிட்டு தற்காலிகமாய் கழுகு இந்த இடம் விட்டு பறக்கிறது.
கருத்துக்களும் கேள்விகளும் வருமெனில் மீண்டும் யாம் களத்தில் இருப்போம் என்றும் அறிவிக்கிறோம்.
நன்றி நண்பர்களே நல்ல விவாதத்துக்கு....
நன்றி நண்பர்களே நல்ல விவாதத்துக்கு....
/////கழுகு கூறியது...
//பரதேசி தமிழன் : சரியான நேரத்துல சரியான பால் போடுறே ..,//
யாரின் வருகை என்று கழுகால் உணர முடிந்த இடம்..இது..!
///////
உணர்ந்த வரைக்கும் நன்றி, சில தனிப்பட்ட காரணங்களால் புனைப்பெயரில் இயங்குகிறேன். கட்டுரையின் சாராம்சத்தில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் கட்டுரையில் காணப்படும் சில கருத்துக்களில் உடன்பாடில்லை,அதையே சுட்டிக்காட்டினேன். பின்னூட்ட விவாதங்கள் கட்டுரையின் மையக்கருத்தில் இருந்து விலகுவதாக உணர்கிறேன். சில விமர்சனங்கள் கட்டுரை எழுதுபவரின் மனதை புண்படுத்தி இருக்கலாம், அதற்கு வருந்துகிறேன்.
" பொண்ணடிமைத்தனம் உள்ளதா.? இல்லையா.? "
என்று ஆண்களை அடித்துக்கொள்ள செய்து..
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்
புத்திசாலி பெண்களுக்கு என் சல்யூட்..!
பரதேசித் தமிழன் @ அறியமுடிந்தது தோழர். எம்மின் நல விரும்பி நீங்கள் என்பதை யாம் அறிவோம்.
கழுகும் தங்களின் நல விரும்பி என அறிக;
மிக்க நன்றிகள் தோழமை! தங்களின் தடம் தொடர்ந்து கழுகில் இருக்க வேண்டும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பகிர வேண்டும் என்ற வேண்டு கோளினையும் வைக்கிறோம் தோழமை.
நன்றிகள்!
@ கழுகு
பெண்களுக்கு முழு அளவு சுதந்திரம் இருக்கிறது ..,அதை அவர்கள் பயன்படுத்தும் முறையில் தான் எல்லாமும் அடங்கி இருக்கிறது
UPSC அண்ட் போட்டி தேர்வுகளில் அவர்களே முதன்மையாக இருந்து நாட்டை வலு சேர்கிறார்கள் ( உதாரணம் : திருச்சி வருவாய் துறை அதிகாரி )
சமையல் செய்வது ,குழந்தைகளை பராமரிப்பது போன்ற வேலைகள் பெண்ணடிமைத்தனம் என்று சொன்னால் நான் அந்த வேலையை செய்ய தயார் :))))))
நீங்கள் நினைக்கும் பெண்ணடிமைத்தனம் எதுவென்று அறிய ஆவலாய் உள்ளேன் ?
//
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்
புத்திசாலி பெண்களுக்கு என் சல்யூட்..!
//
வெங்கட் @ தங்களின் புரிதலை அனைவரும் வாசிக்கட்டும். மிக்க நன்றிகள் தோழமை!
அன்பின் நரி அவர்களை ஜீ டிவியில் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை பார்க்குமாறு கழுகு விரும்புகிறது. யாரேனும் உங்கள் நண்பர்களை பார்க்கச் சொல்லி விபரம் அறியுங்கள்.... தங்களின் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
கருத்துரை வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள்!
பெண்ணடிமை என்றால் என்ன என்று ஒரு கட்டுரை செய்ய எம்மை தீர்மானிக்க வைத்த அத்துனை பேருக்கும் மீண்டும் நன்றிகள்!
Post a Comment