Wednesday, July 28, 2010

மனிதர்களும், மூடநம்பிக்கையும்!


கால காலமாக வேரூன்றி இருக்கும் ஒரு நச்சு விதைதான் மூட நம்பிக்கைகள். மூட நம்பிக்கைகளைக் கைக்கொண்டு மனிதர்கள் ஒரு ஆட்டோ சஜசன் என்று சொல்லக்கூடிய ஒரு தானியங்கி கருத்கு பதிவினை காலம் காலமாக மனதில் தேக்கிவைத்து அதன் படி செய்தால்தான் தங்களின் மனது நிறைவுறும் என்று ஒரு சைக்கோத்தனமான செய்கைகளை முன்னிலைப்படுத்தி செயப்பட்டும் வருகின்றனர்.
பரீட்சையில் பாஸ் பண்ன வேண்டுமானல் மனோதைரியமும் கடின உழைப்பும், விடா முயற்சியும் பாடங்களை நினைவில் இருந்த அமைதியான சூழ் நிலையும் தான் தேவை என்று அழுத்தமாக போதிக்காததால் ஏராளமான தேங்காய்கள் தெருவோரம் உடைக்கப்படுகின்றன.

இதோ நமது தோழர் வால்பையன் மனிதர்களும் மூட நம்பிக்கைகளும் பற்றி என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்.....
பிறந்த குழந்தைக்கு மூடநம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் தமிழ்நாடு என்றால் நம்ப போறிங்களா என்ன!?, கேட்டு பாருங்கள் வீட்டில் குழந்தைக்கு சேனை வைப்பது என்றால் என்னான்னு, பிறந்த குழந்தைக்கு பெருசுகள் கூடி சர்க்கரை தண்ணீர் கொடுப்பது தான் சேனை வைப்பது என்பார்கள், டாக்டர்கள் கொடுக்கக்கூடாது என்றாலும் கேட்பதில்லை, குழந்தை அழும்போது நர்ஸ் வந்து கவுத்திபோட்டு முதுகில் நாலு தட்டு தட்டிவிட்டு போவார்கள்!, சரி சேனை ஏன் கொடுக்குறாங்க தெரியுமா?, சேனை வைப்பவர்களின் குணம் குழந்தைக்கும் வருமாம்! டி.என்.ஏ, குரோம்சோம்கள் எல்லாம் தூக்கி போட்டு அறிவியலை அட்டாரியில் அடகு வைத்து ஆண்டாண்டு காலமாய் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் பெருமைகுறிய சமூகம் நமது சமூகம் தான்!


சரிப்பா, அறிவியல் உனக்கு தெரியும், எனக்கு தெரியும். வயசானவங்களுக்கு எப்படி தெரியும், அதெல்லாம் காலம் காலமா செஞ்சுகிட்டு இருக்குறது தானே என்பவர்களுக்கு மூடநம்பிக்கையின் வளர்ச்சி பற்றி ஒரு குட்டிகதை சொல்றேன்!


பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்தது, குரு சீடர்களிடன் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா!? அங்கே தான் இருக்கு கதையே, ஒருநாள் அந்த பூனை செந்துவிட்டது, விடுவார்களா சீடர்கள், ஒருபூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள்!


ஏன் செய்யுறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது, மேலை நாடுகளில் இருக்கும் பயமுறுத்தும் எண்களை விட மூணாம் நம்பர் அனைவரிடத்திலும் எதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியது, எதாவது ஒரு வகையில் செயலை மூன்று தடவை செய்வார்கள், அதற்கு உளவியலில் ஒரு பெயர் கூட இருக்கிறது, கிட்டதட்ட மூடநம்பிக்கை ஜீன்களோடு கலந்துவிட்டது என ஒரு உளவியல் மருத்துவர் என்னிடம் சொல்லி வருத்தபட்ட காரணம் இது!

”கேள் என்பது மந்திரம்” என ஒரு அறிவியல் அறிஞர் சொல்லியிருக்கிறார்!, கேள்வி கேள் என்பது அறிவு கதவை திறக்கு சாவி என்பதை தான் சுருக்க சொல்லியிருக்கிறார்!, எல்லாரும் செய்யுறாங்க, அதனல நானும் கேள்வி கேட்க செய்யுறேன் என்று சொல்வது மனிதனின் வேலை இல்லை, இயந்திரத்தின் வேலை. ஒரு மனிதனாக நமது செயலின் விளைவுகளையும்,தன்மையும் அறிவது நமது கடமை. வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் கேள்விகளுக்கு ஆதாரம் கேட்கக்கூட தயங்கக்கூடாது!, இது வரை இருந்த மூட நம்பிக்கைகளை நம் தலைமுறையோடு குழி தோண்டி புதைப்போம்!
கழுகிற்காக


வால் பையன்(கழுகு இன்னும்.... உயரபறக்கும்)

72 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naan 1st

எல் கே said...

வால் பய்யன் , எனக்குத் தெரிந்து குழந்தையின் குரல் வளத்திற்காக சிறிது சர்க்கரை தண்ணீரும், தேனும் குடுப்பார்கள். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது அனுபவப் பூர்வமாக நான் காண்டது., என் மகளுக்கு கொடுத்தப் பொழுது. கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காக கண்ட கேள்விகள் கேட்கக் கூடாது. பின்பு நான் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நீங்க வருத்தப் படுவீர்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கமெண்ட் போடும்போது பூனை குறுக்க போயிடுச்சே. இது நல்ல சகுனமா பாஸ்?

எல் கே said...

//பரீட்சையில் பாஸ் பண்ன வேண்டுமானல் மனோதைரியமும் கடின உழைப்பும், விடா முயற்சியும் பாடங்களை நினைவில் இருந்த அமைதியான சூழ் நிலையும் தான் தேவை என்று அழுத்தமாக போதிக்காததால் ஏராளமான தேங்காய்கள் தெருவோரம் உடைக்கப்படுகின்றன//

இது அவரவர் நம்பிக்கை. எப்படி கேள்வி கேப்பது உங்கள் உரிமையோ, அப்படி பிரார்த்தனை செய்வது அவர்களது உரிமை. இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை.

எல் கே said...

பிரார்த்தனை செய்வது அவர்கள் மனதிற்கு வலு சேர்க்கிறது. அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் பாஸ் ???

எல் கே said...

//ஏன் செய்யுறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது///

உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க ஒத்துகறோம். யாருக்கும் தெரியாதுன்னு சொல்லாதீங்க. நம் முன்னோர்கள் செயல் ஒவ்வொன்றிலும் அர்த்தம் உள்ளது. தெரிய விட்டால் தெரிந்தவர்களிடம் கற்றுக் கொள்ளுங்க. அதில் தவறில்லை. மற்றவர்களின் செயல்களை குறை சொல்லி பெயர் வாங்க வேண்டாம்

வால்பையன் said...

//குரல் வளத்திற்காக சிறிது சர்க்கரை தண்ணீரும், தேனும் குடுப்பார்கள். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது அனுபவப் பூர்வமாக நான் காண்டது.//

யாராவது டாக்டர்கள் சொன்னாங்களா தல!?

//நான் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நீங்க வருத்தப் படுவீர்கள். //


கேள்வி கேள் என்று தான் பதிவிலேயே எழுதியிருக்கேன், கேட்டா வருத்தபடுவிங்கன்னா என்ன அர்த்தம்!?

வால்பையன் said...

//இது அவரவர் நம்பிக்கை. எப்படி கேள்வி கேப்பது உங்கள் உரிமையோ, அப்படி பிரார்த்தனை செய்வது அவர்களது உரிமை. இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை. //


தேங்காய் உடைத்தால் பாஸ் பண்ணுவோம் என்றால் ஆசிரியர்கள் தேவையில்லை, தென்னை மரம் இருந்தால் போதும்!, தலையிட உரிமையில்லையென்றால் இன்றும் நரபலியும், உடன்கட்டையும் இருந்திருக்கும்! சரி உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கலாம்! நாங்க சும்மா இருக்க முடியுமா!?

வால்பையன் said...

//நம் முன்னோர்கள் செயல் ஒவ்வொன்றிலும் அர்த்தம் உள்ளது. தெரிய விட்டால் தெரிந்தவர்களிடம் கற்றுக் கொள்ளுங்க. அதில் தவறில்லை. மற்றவர்களின் செயல்களை குறை சொல்லி பெயர் வாங்க வேண்டாம் //


நம் முன்னோர்கள் மட்டும் 200 வருசம் வாழ்ந்த மாதிரியும், மத்தவனெல்லாம் 20 வருசத்துல செத்தா மாதியும் சொல்றிங்க, உங்கள் மூட நம்பிக்கைகள் உங்களுக்கு என்ன கொடுத்தது, மற்றவர்களை விட அதனால் நீங்கள் அடைந்தது என்ன!?

வால்பையன் said...

//பிரார்த்தனை செய்வது அவர்கள் மனதிற்கு வலு சேர்க்கிறது. அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் பாஸ் ??? //

தன்னம்பிக்கை இல்லாதவன் தான் பிரார்த்தனையே செய்யுறான், தன்னை நம்புறவனுக்கு தனியா எதுக்கு வலு, செய்யப்போறது அவன் தானே!, சரி உங்க மேட்டர் படி பிரார்த்தனை செய்பவன் அனைவரும் கலைக்டராக அல்லவா இருக்கனும், ஏன் இல்லை!?

எல் கே said...

//யாராவது டாக்டர்கள் சொன்னாங்களா தல!?//

சில விஷயங்கள் அனுபவப் பூர்வமாக உணர்த்து செய்வது. அதை சொல்ல எந்தக் கொம்பனும் தேவை இல்லை

//தலையிட உரிமையில்லையென்றால் இன்றும் நரபலியும், உடன்கட்டையும் இருந்திருக்கும்! //

அது சமூகப் பிரச்சனை. தேங்காய் உடைப்பது சமூகப் பிரச்சனை அல்ல. சம்பந்த சம்பந்தம் இல்லாமல் பேசுவது இந்த புரட்சியாளர்களின் வழக்கம். நீங்களும் அதை நிரூபிக்கிறீர்கள்

//கேள்வி கேள் என்று தான் பதிவிலேயே எழுதியிருக்கேன், கேட்டா வருத்தபடுவிங்கன்னா என்ன அர்த்தம்!?//

வேண்டாம் இது பொது இடம்.. தனிய நேர்ல பார்க்கும் சமயம் கேட்கிறேன்.

வால்பையன் said...

//சில விஷயங்கள் அனுபவப் பூர்வமாக உணர்த்து செய்வது. அதை சொல்ல எந்தக் கொம்பனும் தேவை இல்லை//

ஒருவருடய தற்செயல் அனுபவம் அனைவருக்கும் பொறுந்தும் மருத்துவம் ஆகாது!, குழந்தைக்கு அது சேராமல் போகலாம், கேட்டு பாருங்கள் டாக்டர்களிடம்!


//அது சமூகப் பிரச்சனை. தேங்காய் உடைப்பது சமூகப் பிரச்சனை அல்ல. சம்பந்த சம்பந்தம் இல்லாமல் பேசுவது இந்த புரட்சியாளர்களின் வழக்கம். நீங்களும் அதை நிரூபிக்கிறீர்கள் //


பேச்சு மூடநம்பிக்கையை பற்றி தான், நரபலி, உடன்கட்டை ஏறுதல் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை சார்ந்தது தான், எல்லா மூடநம்பிக்கைகளும் சமூகத்தில் நடப்பது தான்! ரெண்டுக்கும் தொடர்பு உண்டு!, புர்ட்சி என்ற கெட்ட வார்தைகெல்லாம் நான் தகுதியானவன் இல்ல தல!

//வேண்டாம் இது பொது இடம்.. தனிய நேர்ல பார்க்கும் சமயம் கேட்கிறேன். //


மெயில் அனுப்புங்க தல!

எல் கே said...

@vaalpayyan
sila visayangalai sonnal neengal etruk kolla maatteergal endru enakuth therium.. enave nan merkondu vivaathikka virumbavillai

அருண் பிரசாத் said...

@ வால் பையன்.

என் ஓட்டும் LKவிற்குதான். எந்த மருத்துவரும் சர்க்கரை தண்ணீரை கொடுப்பது தவறு என்று சொல்லவில்லை. அது குழந்தைக்கு தீங்கும் விளைவிக்காது. நான் மருத்துவதுறையில் இருக்கிறேன், இது பற்றி நன்றாக தெரியும்.

அதே போல் தேங்காய் உடைப்பது அவர்களின் மன தைரியத்தை உயர்த்துகிறது.

கண்மூடித்தனமாக சாடாதிர்கள், அவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் சரி , இந்த மூட நம்பிக்கை , மூடநம்பிக்கைன்னு சொல்ரிகளே அப்படின்னா என்னா பாஸ் ??? (இன்னும் அதெல்லாம் மூடனம்பிக்கைன்னே தெரியாதவுன்ங்க நிறையப்பேர் இருக்காங்க சார் )

வால்பையன் said...

//@vaalpayyan
sila visayangalai sonnal neengal etruk kolla maatteergal endru enakuth therium.. enave nan merkondu vivaathikka virumbavillai //


ஆதாரபூர்வமாக அனைவராலும் ஏற்றுகொள்ள பட்டது மூடநம்பிக்கை ஆகாது தான்!, அப்படி எதாவது சொல்லுங்க ஏத்துக்கலைனா என்னான்னு கேளுங்க!

ஆதாரபூர்வமாக என்று சொல்லிவிட்டேன், கடவுளை இதில் இழுக்க வேண்டாம்!

வால்பையன் said...

//எந்த மருத்துவரும் சர்க்கரை தண்ணீரை கொடுப்பது தவறு என்று சொல்லவில்லை. அது குழந்தைக்கு தீங்கும் விளைவிக்காது. நான் மருத்துவதுறையில் இருக்கிறேன், இது பற்றி நன்றாக தெரியும்.//


மருத்துவதுறையில் என்னவாக இருக்கிறீர்கள்!?
பிறந்தகுழந்தைக்கு பாலை கொடுக்காமல் சர்க்கரை தண்ணீரை கொடு என்று டாக்டர் சொன்னாரா!?
பாலை தவிர வேறு உணவே 3 மாசத்துக்கு கொடுங்க மாட்டுங்க, நீங்க டாக்டரா!?


//அதே போல் தேங்காய் உடைப்பது அவர்களின் மன தைரியத்தை உயர்த்துகிறது. //

மன தைரியம் உயர்ந்த ஒரு சாராருக்கு மட்டும் எப்படி தேங்காய் உதவுது! ஏன் எல்லா மனிதரும் அதை செய்யவில்லை, சும்மா மனதைரியம் என்ற பெயரில் மதவாதிகள் செய்யும் புரட்டுக்கு எப்படி பலியானீர்கள், மருத்துவதுறையில் தேங்காய் உடைத்து தான் ஆப்ரேஷன் ஆரம்பிக்கிறாங்களா இப்போ!?


//கண்மூடித்தனமாக சாடாதிர்கள், அவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள். //

அவர்களை மதிக்கிறேன், அதனால் தன் மனிதன் காக்க மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறேன்! உனர்வுக்கு மதிப்பு கொடுக்கனும்னா, நரபலி கொடுத்த முட்டாபயலையும் ஆதரிக்கனும் பரவாயில்லையா!?

செல்வா said...

நீங்க இதவிட கேவலமா சொன்னாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு ...! அதுக்காக உங்களை நம்ப சொல்ல மாட்டேன் .. உங்களை மாதிரி தான் நானும் .. அதான் நீங்க கடவுள காட்டுங்க நம்புறேன் அப்படிங்கிறீங்க .. நானும் அதையே தான் சொல்லுறேன் .. கடவுள் இல்லைன்னு நிரூபிங்க நம்புறேன்..
ஆனா அந்த கதை அருமை.. நீங்களும் அந்த மூட நம்பிக்கைதானே எதிர்க்குறீங்க ..!! ஒரு விசயத்த யோசித்தீங்களா ..? அந்தமாதிரி குரு இருந்த அப்படி சீடர்களும் இருக்கத்தானே செய்வாங்க .. ஏன்னா அந்த குரு சரியா சொல்லி கொடுத்திருந்தா அந்த பசங்க எதுக்கு மறுபடியும் இன்னொரு பூனைய பிடிசுக் கட்டுறாங்க ..!!

அருண் பிரசாத் said...

//தேங்காய் உடைத்தால் பாஸ் பண்ணுவோம் என்றால் ஆசிரியர்கள் தேவையில்லை, தென்னை மரம் இருந்தால் போதும்!, தலையிட உரிமையில்லையென்றால் இன்றும் நரபலியும், உடன்கட்டையும் இருந்திருக்கும்! சரி உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கலாம்! //

பாஸ், தேங்காய் உடைப்பதையும், நரபலியையும் முடிச்சி போடாதிங்க. அவர்களின் நம்பிக்கை அவர்கள் செய்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் செய்யாதீர்கள். சிம்பிள். அதற்க்காக குறைகூறுவது தப்பு பாஸ்

வால்பையன் said...

//பாஸ், தேங்காய் உடைப்பதையும், நரபலியையும் முடிச்சி போடாதிங்க. அவர்களின் நம்பிக்கை அவர்கள் செய்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் செய்யாதீர்கள். சிம்பிள். அதற்க்காக குறைகூறுவது தப்பு பாஸ் //


பாஸ் சின்ன தப்பு, பெரிய தப்புன்னு பிரிக்காதிங்க, யோசிச்சு சொல்லுங்க, தேங்காய் உடைப்பதால் பலன் இருக்கா!?

வால்பையன் said...

//அந்த குரு சரியா சொல்லி கொடுத்திருந்தா அந்த பசங்க எதுக்கு மறுபடியும் இன்னொரு பூனைய பிடிசுக் கட்டுறாங்க //

குரு நமது முன்னோர்கள், சீடர்கள் நாம்!

மனிதனா இருக்க விருப்பமா, முட்டாசீடனா இருக்க விருப்பமா!?

ஜில்தண்ணி said...

@வால் பையன்

சர்க்கரை தண்ணி கொடுப்பது சரியோ தவறோ எனக்கு தெரியல,ஆனாலும் அத மூட நம்பிக்கைனு என்னால ஒத்துக்க முடியல

அருண் பிரசாத் said...

//மருத்துவதுறையில் என்னவாக இருக்கிறீர்கள்!?
பிறந்தகுழந்தைக்கு பாலை கொடுக்காமல் சர்க்கரை தண்ணீரை கொடு என்று டாக்டர் சொன்னாரா!?
பாலை தவிர வேறு உணவே 3 மாசத்துக்கு கொடுங்க மாட்டுங்க, நீங்க டாக்டரா!?//

இது விதண்டாவாதம். அவர்கள் விருப்பபடி சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஒரு சில ml மட்டுமே. சாடுகிறேன் என்று அனைத்தையும் குறை கூறாதீர்.

//மருத்துவதுறையில் தேங்காய் உடைத்து தான் ஆப்ரேஷன் ஆரம்பிக்கிறாங்களா இப்போ!?//

ஆப்பரேஷன் ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ, நோயளிக்கு தைரியம் கொடுக்க திருநீரு பூச அனுமதிக்க படுகிறது.

//நரபலி கொடுத்த முட்டாபயலையும் ஆதரிக்கனும் பரவாயில்லையா!?//

LK சொன்னது போல சமூக பிரச்சனையையும் கடவுள் நம்பிக்கையையும் கலக்காதீர்

என் கருத்து சிம்பிள்:

எனக்கு கத்திரிக்காய் சாப்பிடுவது பிடிக்கும், நான் சாப்பிடுகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர். அதற்கு பதில் சாப்பிடுபவன் எல்லாம் முட்டாள் என சொல்லாதீர்

செல்வா said...

///குரு நமது முன்னோர்கள், சீடர்கள் நாம்!///
ஹய்யோ ஹய்யோ ..!!
அந்த குரு முன்னாடி தானே பசங்க மறுபடியும் ஒரு பூனைய புடிச்சுக் கட்டிருப்பாங்க ..அப்ப அந்த குரு ஏன் சொல்லித்தரலை அப்படின்னு கேட்டேன் ..!!!

வால்பையன் said...

//சர்க்கரை தண்ணி கொடுப்பது சரியோ தவறோ எனக்கு தெரியல,ஆனாலும் அத மூட நம்பிக்கைனு என்னால ஒத்துக்க முடியல //

சரி முட்டாநம்பிக்கைன்னு வச்சுகுவோமா!?
குழந்தைகளை கசகசன்னு எல்லாரும் தூக்க கூடாதுன்னு சொல்றாங்க, ஏன்னு தெரியுமா!?

அருண் பிரசாத் said...

//பாஸ் சின்ன தப்பு, பெரிய தப்புன்னு பிரிக்காதிங்க, யோசிச்சு சொல்லுங்க, தேங்காய் உடைப்பதால் பலன் இருக்கா!? //

சைக்காலஜிக்கலா யோசியுங்க, இது எனக்கு ஒரு விதத்தில் மன தைரியத்தை தருகிறது. அது போதும் எனக்கு

vasu balaji said...

வால். நான் பிறந்ததும் என் அம்மாவுக்கு ஜன்னி கண்டுவிட்டது. நான் பிறந்து 10 நாள் கழித்த பிறகே தாய்ப்பால் கொடுத்ததாக என் அம்மா சொல்லுவார். அந்தப் பத்து நாட்களும் என் சின்னப்பாட்டி (சித்தி என்று கேரக்டரில் எழுதியிருப்பேன்) அவர்கள்தான் வெறும் சக்கரைத் தண்ணீர் ஊட்டித்தான் வளர்த்தெடுத்தார்கள்.அது ஏனோ தெரியாது. மூடநம்பிக்கையானால் இருந்துவிட்டு போகட்டும். அவர்களிடம் நினைவு தெரிந்து நான் இருந்தது 10 நாட்கள் மட்டுமே. அதற்கு முன்பும் பின்னரும் கூட அவர்மேல் எனக்குத் தனிப்பாசம் உண்டு. என் அம்மா கூட சக்கரைத்தண்ணி பண்ணும் வேலை எனச் சிரிப்பார்கள். பிடிவாதமாக தனியாக இருந்தவரை 92வது வயதில் வல்லுக்கட்டாயமாய் என்னுடன் அழைத்து வந்து 98வயது வரை என்னோடு இருந்த காலங்கள் என் வரங்கள்.

ஆனாலும் உங்கள் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகும் விஷயம், ஒரு விஞ்ஞான பூர்வமான, மருத்துவ சம்பந்தமான விஷயத்தைக் கூட ஏதோ ஒரு கட்டுக்கதை அல்லது சாங்கியத்தோடு சம்பந்தப் படுத்தியே கொடுத்திருப்பது உண்மை. ஒருக்கால், கடவுளுக்கு அல்லது அமானுஷ்யத்துக்கு பயப்படுவார்கள் என்ற நம்பிக்கையாய் இருந்திருக்கலாம்.

வால்பையன் said...

//இது விதண்டாவாதம். அவர்கள் விருப்பபடி சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஒரு சில ml மட்டுமே. சாடுகிறேன் என்று அனைத்தையும் குறை கூறாதீர்./

அந்த சர்க்கரை தண்ணீரால் குழந்தைக்கு ஏதும் நன்மை உண்டா!?

//ஆப்பரேஷன் ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ, நோயளிக்கு தைரியம் கொடுக்க திருநீரு பூச அனுமதிக்க படுகிறது.//

தைரியம் டாக்டருக்கு வேணுமா, நோயாளிக்கு வேணுமா!?


//LK சொன்னது போல சமூக பிரச்சனையையும் கடவுள் நம்பிக்கையையும் கலக்காதீர்//

நரபலி கொடுத்தவன் ஒரு இஸ்லாமியன், அவன் சொன்னது காளி கனவில் வந்து சொன்னது என்று, என்ன இழவு காம்பினேஷன் இது!?

//எனக்கு கத்திரிக்காய் சாப்பிடுவது பிடிக்கும், நான் சாப்பிடுகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர். அதற்கு பதில் சாப்பிடுபவன் எல்லாம் முட்டாள் என சொல்லாதீர் //

பதிவை படித்தீர்களா!? ஏன் செய்கிறோம் என்று கேள்வி கேளுங்கள் என்று சொல்லியிருக்கேன், செய்பவனெல்லாம் முட்டாள் என்று சொல்லவில்லை!

வால்பையன் said...

//அந்த குரு முன்னாடி தானே பசங்க மறுபடியும் ஒரு பூனைய புடிச்சுக் கட்டிருப்பாங்க ..அப்ப அந்த குரு ஏன் சொல்லித்தரலை அப்படின்னு கேட்டேன் ..!!! //

குருவும் முட்டாலா இருந்தா அப்படி தான் நடக்கும்!
தட் மீன்ஸ் முன்னோர்கள்!

ஜில்தண்ணி said...

@செல்வகுமார்

//வ்ஹய்யோ ஹய்யோ ..!!
அந்த குரு முன்னாடி தானே பசங்க மறுபடியும் ஒரு பூனைய புடிச்சுக் கட்டிருப்பாங்க ..அப்ப அந்த குரு ஏன் சொல்லித்தரலை அப்படின்னு கேட்டேன் ..!!! //

இங்கு குரு பக்தியை பற்றியோ,குருவின் அறிவை பற்றியோ சொல்லவில்லை

நாம் ஒரு செயலை எதற்கென்றே தெரியாமல் தொடந்து செய்யும் போதுதான் அது மூட நம்பிக்கை ஆகிறது

வால்பையன் said...

//சைக்காலஜிக்கலா யோசியுங்க, இது எனக்கு ஒரு விதத்தில் மன தைரியத்தை தருகிறது. அது போதும் எனக்கு //

நம் தலைமுறையோடு போகட்டும், அடுத்த தலைமுறைக்கு தன்னம்பிக்கையை சொல்லி கொடுப்போம்!

வால்பையன் said...

//அந்தப் பத்து நாட்களும் என் சின்னப்பாட்டி (சித்தி என்று கேரக்டரில் எழுதியிருப்பேன்) அவர்கள்தான் வெறும் சக்கரைத் தண்ணீர் ஊட்டித்தான் வளர்த்தெடுத்தார்கள்.//

வெறும் சர்க்கரை தண்ணியா!?
பாலும் சேர்த்து கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்! குழந்தை வளர தேவையான புரோட்டீன் சர்க்கரை தண்ணீரில் தேவையான அளவு இல்லை! சாத்தியமில்லாத ஒன்றாக தெரியுதே தல!

வெறும் சர்க்கரை தண்ணீர் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டி ரத்தத்தை கெட்டியாக்கும், மூச்சு விட சிரமம் கூட ஏற்படும்!, மருத்துவரீதியாக கடினம் வெறும் சர்க்கரை தண்ணீர்!

சேனை வைப்பது மேட்டரிலை, சேனை என்பது மூடநம்பிக்கை என்பதே மேட்டர்!

நிகழ்காலத்தில்... said...

அப்ப சர்க்கரை கெடுதலா, அது தெரியாம இவ்வளவு நாளா பட்டயக் கெளப்பிட்டு இருக்கிறேன் . அவ்வ்..

அப்புறம் ஏன் இவ்வளவு சர்க்கரை பயன்பாட்டுல இருக்குது வால்...

ஜில்தண்ணி said...

//சரி முட்டாநம்பிக்கைன்னு வச்சுகுவோமா!?
குழந்தைகளை கசகசன்னு எல்லாரும் தூக்க கூடாதுன்னு சொல்றாங்க, ஏன்னு தெரியுமா!? //

என்னோட பிறந்த நாள் ஒவ்வொரு வருசமும் நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்

அதுல ஒரு மிட்டாய என் நண்பர்களோ உறவினர்களோ எனக்கு வாயில கொடுக்குறாங்க,இது வருசா வருசம் நடக்குறதுதான்

இது எனக்கு விவரம் தெரிந்தது முதல் நடந்து வரும் செயல் தான்,சின்ன புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா வாங்கிக் கொடுப்பாங்க,நான் கொடுப்பேன்,எதற்கு ஒரு சந்தோசத்துக்கு தான்

அது போலத் தான்,குழந்தை பிறக்கும் போது மத்தவங்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்கலாம்,குழந்தைக்கு.......அதான் சக்கரை தண்ணி

வால்பையன் said...

//அப்ப சர்க்கரை கெடுதலா, அது தெரியாம இவ்வளவு நாளா பட்டயக் கெளப்பிட்டு இருக்கிறேன் . அவ்வ்..

அப்புறம் ஏன் இவ்வளவு சர்க்கரை பயன்பாட்டுல இருக்குது வால்... //

பிறந்த குழந்தைக்கு சேனை என்ற பெயரில் சர்க்கரை தண்ணீரை கொடுப்பது பத்தி சொல்லிகிட்டு இருக்கேன்!, சாகும் வரைக்கும் தாய்பாலா தல குடிக்க முடியும்!

வால்பையன் said...

//அது போலத் தான்,குழந்தை பிறக்கும் போது மத்தவங்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்கலாம்,குழந்தைக்கு.......அதான் சக்கரை தண்ணி //


எதுக்கு சர்க்கரை தண்ணி,
பிறந்த குழந்தைக்கு ஒரு கிலோ கேக் வாங்கி ஊட்டி விடுங்க!

நிகழ்காலத்தில்... said...

//மருத்துவதுறையில் தேங்காய் உடைத்து தான் ஆப்ரேஷன் ஆரம்பிக்கிறாங்களா இப்போ!?//

தல, ஆனா ராக்கெட் உடும்போது மட்டும் பாலாஜிசார்கிட்ட போய் சின்ன மாடல் செஞ்சு பூசை பண்றாக்க இந்த முட்டாள் விஞ்ஞானிக..

என்ன பண்றது படிச்சி விஞ்ஞானி ஆனாலும்.. ஒருவேளை ஏதேனும் விசயமிருக்குமோ

வால்பையன் said...

//
தல, ஆனா ராக்கெட் உடும்போது மட்டும் பாலாஜிசார்கிட்ட போய் சின்ன மாடல் செஞ்சு பூசை பண்றாக்க இந்த முட்டாள் விஞ்ஞானிக..

என்ன பண்றது படிச்சி விஞ்ஞானி ஆனாலும்.. ஒருவேளை ஏதேனும் விசயமிருக்குமோ //


லாரிகுள்ளே இருக்குற 700 ஸ்பேர்பார்ட்ஸ் தேவையில்ல, முன்னாடி தொங்குற எலும்பிச்சம்பழத்துல தான் லாரி ஓடுது!

ஜில்தண்ணி said...

//எதுக்கு சர்க்கரை தண்ணி,
பிறந்த குழந்தைக்கு ஒரு கிலோ கேக் வாங்கி ஊட்டி விடுங்க! //

அது குழந்தையால சாப்பிட முடியாதுன்னுதானே தண்ணியா கொடுக்குறோம்(ஏன் தண்ணினா பீர் வாங்கிக் கொடுக்க கூடாதான்னு கேக்க கூடாது)

நிகழ்காலத்தில்... said...

//பிறந்த குழந்தைக்கு ஒரு கிலோ கேக் வாங்கி ஊட்டி விடுங்க! //

நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும் தல.. உடனே போய் வாங்கி ஊட்டிவிடறேன். ஆமா இத எந்த டாக்டரு சொன்னாரு :))

Unknown said...

எது கடவுள்? அல்லது யார் கடவுள்? எதனைக் கடவுள்கள்?..
இது யார் சொல்லித் தந்தது? எந்தக் கடவுள் உண்மையானது?
இப்படி கேள்வி கேட்பவன் தெளிகிறான்... மற்றவன் அடிமைகளாக இருக்கிறான்..

நமக்கு யாரவது அல்லது ஏதாவது ஒன்று தேவைபடுகிறது..நாம் அடிமையாகவே வாழப் பிரியப் படுகிறோம்...
யாரவது சித்திக்க சொல்லிவிட்டால் உங்களுக்கு கோவம்தான் வருகிறது...

அடிமைகளின் கோபம் முதலாளிகளுக்கு ஆகாது என்பதால்... உங்களை நீங்கள் சிந்திக்க துவங்கி விட்டீர்கள்..

தம்பி செல்வகுமார் இல்லை என்று நாங்கள் சொன்னால்.. இருக்கென்று நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்..

சீனிதண்ணி infection ஆகும்... அதனால்தான் மருத்துவர்கள் தவிர்க்க சொல்கிறார்கள்... இதனைபோல் நம் முன்னோர் செய்த நிறைய விசயங்கள் இப்போது தவிர்த்துக் கொண்டுதான் உள்ளோம்..

இந்த பரந்த பிரபஞ்சத்தில் கடவுள் இருந்துவிட்டுப் போகட்டும்... நித்தியானந்தம் பரமானந்தம் என்று பெண் பிள்ளைகள் பூஜை செய்யட்டும்...
எல்லோரும் நம்புங்கள்... கும்பிடுங்கள்... கொண்டாடுங்கள்... கூத்தாடுங்கள்...
அதற்கு முன் உங்களுக்கு ஆர்வம் இருந்தால்..

ராகுல சங்கிருத்யாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கைவரை" படியுங்கள்...

வால்பையன் said...

//அது குழந்தையால சாப்பிட முடியாதுன்னுதானே தண்ணியா கொடுக்குறோம்(ஏன் தண்ணினா பீர் வாங்கிக் கொடுக்க கூடாதான்னு கேக்க கூடாது) //


சேனை உடம்புக்கு ஏத்துகிர விசயமா இருந்தா டாக்டரே சிபாரிசு செய்வாங்க தல! அது பீரா இருந்தாலும்!

நிகழ்காலத்தில்... said...

//தன்னம்பிக்கை இல்லாதவன் தான் பிரார்த்தனையே செய்யுறான், தன்னை நம்புறவனுக்கு தனியா எதுக்கு வலு, செய்யப்போறது அவன் தானே!, சரி உங்க மேட்டர் படி பிரார்த்தனை செய்பவன் அனைவரும் கலைக்டராக அல்லவா இருக்கனும், ஏன் இல்லை!?//

அவ சரியா பிரார்த்தனை செய்யல தல..

ஆமா, உங்களுக்கு தன்னம்பிக்கை எவ்வளவு இருக்கிறது.. நீங்க ஏன் கலெக்டர் ஆகல..?

வால்பையன் said...

//ஆமா, உங்களுக்கு தன்னம்பிக்கை எவ்வளவு இருக்கிறது.. நீங்க ஏன் கலெக்டர் ஆகல..? //


ஒன்பதாவது வரை படிச்சவங்க கலைக்டர் வேலைக்கு போக முடியாதாம்!

நான் படிக்க பிடிக்காமதான் ஸ்கூலுக்கு போகல!
தன்னம்பிக்கை இல்லாம இல்ல!

ஜில்தண்ணி said...

இந்த சேனை என்ற சொல் எனக்கு புதிதான ஒன்று,எங்க ஊர்ல இதை பதினாராம் காப்புன்னுதான் சொல்வார்கள்

அப்ப நான் பிறந்த நாளை கொண்டாடுவது மூட நம்பிக்கையா ?

வால்பையன் said...

//இந்த சேனை என்ற சொல் எனக்கு புதிதான ஒன்று,எங்க ஊர்ல இதை பதினாராம் காப்புன்னுதான் சொல்வார்கள்//

இருக்கலாம்!

//அப்ப நான் பிறந்த நாளை கொண்டாடுவது மூட நம்பிக்கையா ? //

கொண்டாடுங்கள், குழந்தையை கொடுமை படுத்தாதீர்கள்!

நிகழ்காலத்தில்... said...

சரி அத விடுங்க தல.. உங்க தன்னம்பிக்கைய வச்சு நீங்க வாழ்க்கையில செஞ்ச, சாதிச்சத பட்டியல்போட்டிங்கன்னா மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்குமுல்ல..

இப்ப என்ன பிரச்சினைன்ன நம்ம மக்களுக்கு சாமி கும்பிடறத விடுன்னா யோசிக்காம விட்டுருவாங்க, ஆனா அதுக்கப்புறம் என்ன பண்றதுன்ன ஒரே பிரச்சினை, குழப்பம்..

கடவுள் டவுசர கழட்டுற நீங்க கொஞ்சம் மனுசன் பொழக்கிறதுக்கும் வழி சொல்லுங்க தல.

வால்பையன் said...

//உங்க தன்னம்பிக்கைய வச்சு நீங்க வாழ்க்கையில செஞ்ச, சாதிச்சத பட்டியல்போட்டிங்கன்னா மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்குமுல்ல..//

என் எழுத்து சொல்லும் தல,


//கடவுள் டவுசர கழட்டுற நீங்க கொஞ்சம் மனுசன் பொழக்கிறதுக்கும் வழி சொல்லுங்க தல. //

அவனவன் வேலையை செய்யுறதுக்கு எதுக்கு சாமி!, சாமியை வச்சு ஏமாத்தி பிழைக்கிறவனுக்கு மட்டும் தான் வேணும் சாமி!

ஜில்தண்ணி said...

மருத்துவ ரீதியில் பார்க்கப் போனா கண்டிப்பா இந்த சீனித்தண்ணிய ஏற்றுக் கொள்ள வேண்டாம்

அது என்னமோ தெரியல தல,அப்டி வளந்துட்டனா என்னன்னு தெரியல

இந்த தேங்காய் உடைக்கிறது,எலுமிச்சை பழம் வைப்பது இவையெல்லாம் மூட நம்பிக்கையாக ஏற்றுக் கொள்ளும் இந்த மனசு,சீனித்தண்ணி கொடுக்கறத மூட நம்பிக்கையா ஏற்றுக் கொள்ள முடியல

அதனால் அத நம்பிக்கையாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது,அது ஒரு சாதாரணமான செயலாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது

வால்பையன் said...

//அத நம்பிக்கையாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது,அது ஒரு சாதாரணமான செயலாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது//


செயல் தான், அதை ஏன் செய்கிறோம் என ஒரு தெளிவு வேண்டாமா தல!?

vasu balaji said...

இல்லை வால். வெறும் சக்கரைத் தண்ணீர்தான் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வேளை எனக்கு ஆயுசு கெட்டியோ:))

வால்பையன் said...

//இல்லை வால். வெறும் சக்கரைத் தண்ணீர்தான் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஒரு வேளை எனக்கு ஆயுசு கெட்டியோ:)) //

ஆயுசு கெட்டி என்பதெல்லாம் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது!

எனக்கு குழந்தை பிறந்த புதிதில் எனக்கு வேலை போயிருச்சு! ஒருநாள் பால் வாங்க கூட காசில்லை, தினம் பால் வாங்கி தரும் நண்பன் வெளியூரிலிருந்து வந்து கொண்டிருந்தான், லேட்டாகும். வர்ஷாவோஅழுது கொண்டிருக்கிறாள், வேறு வழியில்லாமால் சுடுநீரை ஆற வைத்து சர்க்கரை கலந்து கொடுத்தோம்! ஒரே ஒரு நாள், ஒரே ஒரு தடவை. என்னைகாவது ஒருநாள் சர்க்கரை தண்ணீரில் பொழச்சபுள்ளை என்று என் மனைவி அவளிடம் சொல்லி விட்டால், அவளும் ஒரு நாள் ப்ளாக் விவாதத்தில் சொல்லுக்கூடும் உங்களை போலவே!

நிகழ்காலத்தில்... said...

//செயல் தான், அதை ஏன் செய்கிறோம் என ஒரு தெளிவு வேண்டாமா தல!? //

தண்ணியடிக்கறது எந்தத் தெளிவில் தல.. அந்த செயல் ஏன் செய்கிறோம் அப்படின்னு கொஞ்சம் ’தெளிவா’ சொள்லுங்க தள..

ஜில்தண்ணி said...

//செயல் தான், அதை ஏன் செய்கிறோம் என ஒரு தெளிவு வேண்டாமா தல!//

இந்த விஷயத்தில் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியல

இந்த சர்க்கரை தண்ணி கொடுப்பதை அந்த கால முன்னோர்கள் எதற்கு கொண்டு வந்தார்கள் என்பதை நம்மால சொல்ல முடியாது

அது எதற்காகவும் இருக்கலாம்,யாருக்கு தெரியும்
யாராவது வயதானவர்கள் இருந்தால் கேட்டுப் பார்க்கிறேன் :)

வால்பையன் said...

//தண்ணியடிக்கறது எந்தத் தெளிவில் தல.. அந்த செயல் ஏன் செய்கிறோம் அப்படின்னு கொஞ்சம் ’தெளிவா’ சொள்லுங்க தள..//

தெரிந்தே தான் செய்கிறோம், என் தாத்தா சொன்னாரு, வாத்தியார் சொன்னாருன்னு செய்யுறதில்ல!

வால்பையன் said...

//இந்த சர்க்கரை தண்ணி கொடுப்பதை அந்த கால முன்னோர்கள் எதற்கு கொண்டு வந்தார்கள் என்பதை நம்மால சொல்ல முடியாது

அது எதற்காகவும் இருக்கலாம்,யாருக்கு தெரியும்
யாராவது வயதானவர்கள் இருந்தால் கேட்டுப் பார்க்கிறேன் :) //

நிச்சயம் கேளுங்க!
கேள்வி கேள் என்பது தான் அறிவு கதவின் வாசல்!

நிகழ்காலத்தில்... said...

ஹோமியோபதியில் சர்க்கரை உருண்டை என்பது மருந்தின் ஆற்றலை நோயாளிக்கு சேர்க்க ஊடகமாக,பயன்படுகிறது. அதாவது கண்ணுக்கு தெரியாத ஆற்றலை ஈர்த்து வைத்துக்கொள்ளும் என்ற அடிப்படையில்.

சர்க்கரைத்தண்ணி விவகாரமும் அப்படித்தான் :))

வால்பையன் said...

//ஹோமியோபதியில் சர்க்கரை உருண்டை என்பது மருந்தின் ஆற்றலை நோயாளிக்கு சேர்க்க ஊடகமாக,பயன்படுகிறது. அதாவது கண்ணுக்கு தெரியாத ஆற்றலை ஈர்த்து வைத்துக்கொள்ளும் என்ற அடிப்படையில்.//

சர்க்கரை உருண்டை சரி ஆற்றலை அதுவா இழுக்குது, நல்லா கேளுங்க, அது முழுக்க முழுக்க ஆல்ஹகாலில் முழுக வைத்து தான் மருந்தாக கொடுக்கபடுகிறது

நிகழ்காலத்தில்... said...

ஆங்கில மருத்துவம் ஹோமியோவை ஏற்றுக்கொள்ளாது. ஆனால் ஹோமியோ முறையை கண்டுபிடித்தவர் 1779ம் வருடம் படித்த ஆங்கில மருத்துவம் படித்து, பின்னர் அதை உதறிய திரு.சாமுவேல் ஹானிமென்.

ஜில்தண்ணி said...

//நிச்சயம் கேளுங்க!
கேள்வி கேள் என்பது தான் அறிவு கதவின் வாசல்//

ok வால்,நன்றி

நிகழ்காலத்தில்... said...

\\சர்க்கரை உருண்டை சரி ஆற்றலை அதுவா இழுக்குது, நல்லா கேளுங்க, அது முழுக்க முழுக்க ஆல்ஹகாலில் முழுக வைத்து தான் மருந்தாக கொடுக்கபடுகிறது//

தூய ஆல்கஹாலில் இருப்பதை சர்க்கரை எடுத்துக்கொண்டுதானே வருகிறது தல. பல மாதங்கள் ஆனாலும் சர்க்கரையில் மருந்தின் ஆற்றல் இருக்கும். ஆனா ஆல்கஹால் உடனே ஆவி ஆயிடும்.

நிகழ்காலத்தில்... said...

//தண்ணியடிக்கறது எந்தத் தெளிவில் தல.. அந்த செயல் ஏன் செய்கிறோம் அப்படின்னு கொஞ்சம் ’தெளிவா’ சொள்லுங்க தள..//

தெரிந்தே தான் செய்கிறோம், என் தாத்தா சொன்னாரு, வாத்தியார் சொன்னாருன்னு செய்யுறதில்ல! \\

ஒரு மரத்து கள்ளு குடிச்சா நல்லதுன்ன எங்க தாத்தா சொன்னத நா கண்ண மூடிக்கிட்டு கேள்வி கேட்காம பின்பற்றுகிறேன். அப்ப நிறுத்திரவா தல:))

dheva said...

மூட நம்பிக்கைகள் பற்றி விவாதம் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சீனித்தண்ணி கொடுப்பது தோழரின் பார்வையில் மூட நம்பிக்கையாக இருந்திருக்கிறது... நமக்கு அது மூட நம்பிக்கை இல்லை என்று தெரியும் பட்சத்தில் எப்படி மூட நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம்...

அப்படி இல்லாத பட்சத்தில் பழக்கத்தின் அடிப்படையில் நாம் பழிக்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். (என்ன வால் நான் சொல்றது சரிதானே...? அறிவியல் அடிப்படையில் அறிவுக்கு எட்டினால் அது நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்தானே?)

ஒரு உதாரணம் சீனித்தண்ணி என்று சொன்னார்... சரி அடுத்த கட்ட நகர்வை நான் துவக்கி வைக்கிறேன். நண்பர்களே இது ஆரோக்கியமான விவாதம்... நாம் அனைவரும் தோழர்கள் கருத்துக்கள் மோதலில் நமக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

" பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம்" என்கிறார்களே இது பற்றி யாரேனும் விளக்க முடியுமா?

நிகழ்காலத்தில்... said...

எளிது தேவா, பூனையோடு பழகிப்பாருங்கள். திடீரென வரும். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் காலுக்குள் புகுந்து புறப்படும். விழுந்தாலோ, திடுக்கிட்டாலோ நமக்கு நன்மையில்லை, எனவே பொறுமை தேவை. பூனையைக் கண்டாலே எச்சரிக்கையடைய சொல்லப்பட்டதாக நான் புரிந்து வைத்துள்ளேன்

Kousalya Raj said...

super...dheva arguments continues....

நடத்துங்க... இப்பதான் கழுகு ஒரு பாதையை சரியாக தேர்ந்து எடுத்து இருக்கிறது என்று நினைக்கிறேன், தொடரட்டும் பயணம்.... பல மன கதவுகள் திறக்கட்டும்....வெளிச்சம் வரட்டும்.....

அருண் பிரசாத் said...

யாருக்குண்ணா? பூனைக்கு கெட்ட சகுனமா இருக்கும்!

dheva said...

நிகழ் காலத்தில் @ நீங்க சொல்றதுல ஒரு லாஜிக் இருக்கிற மாதிரி தெரியுது இருந்தாலும் பூனை தூரத்தில் வந்தாலும் திரும்பிப் போய் தண்ணி குடிக்கிறாங்களே...? அது லாஜிக் இல்லையே...

அது போக வெளில போகும் போது வெறும் குடத்த பாத்த திரும்பி வர்றது....

அப்புறம் விதவைகளா பார்த்த திரும்பி வர்றதுன்னு....

நாம நம்ம மனச திருப்தி படுத்ததான் செய்றோமா?

ஜில்தண்ணி said...

பூனை குறுக்க போறதும்,விதவையை பார்த்தால் திரும்புவதும் ஒரு அபட்டமான மூட நம்பிக்கை தான்

ஜீவன்பென்னி said...

தெளிவான புரிதலுக்கான களமா கழுகு வளர்ந்துக்கிட்டு இருக்கு. சேனை அப்புடிங்குற பழக்கத்தையோ இல்ல வழக்கத்தையோ இப்போதான் கேள்விப்படுறேன். அத மூட நம்பிக்கையோட செஞ்சாங்கன்னா அத நாம கடுமையா சாடவேண்டியாது கட்டாயம். அதே நேரத்துல அது ஒரு சந்தோசத்துக்கான நிகழ்வா இருக்கக்கூடிய பட்சத்தில் தப்பில்ல. அப்புறம் பூனைக்குறுக்காலப்போகுறது அது செமக்காமெடியான விசயம்,

பனித்துளி சங்கர் said...

நான் தங்கி இருக்கும் ( அமீரகத்தில் )வீட்டின் அருகில் உள்ள தெருக்களில் தினமும் காலையில் மனிதர்களின் நடமாட்டத்தை விட பூனைகளின் நடமாட்டம்தான் அதிகம் ஒருவேளை
இது போல சகுனம் பார்த்து பூனை குறுக்க போகாத நேரங்களில்
என்னை போன்றவர்கள் வேலைக்கு போகவேண்டும் என்று முடிவெடுத்தால் .அவளவுதான் எங்க பொழப்பு . எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ !

அஷீதா said...
This comment has been removed by the author.
அஷீதா said...

நல்ல பதிவு .

நானும் யோசிப்பதுண்டு மூடநம்பிக்கை நம் அறிவை மழுங்கவைத்து முட்டாள்தனமான செயற்பாட்டில் ஈடுபட வைக்கின்றது என்று..ஆனால் ஒரு சில மூட நம்பிக்கைகளில் இருந்து நாம் தப்பிட முடிவதும் இல்லை. உதாரணம் இந்த ராகுகாலம் எமகண்டம். அந்த காலத்தில் மக்கள் சில வசக்கங்கள் நீண்ட காலமாகக் கடைபிடித்து வந்தனர் அவையே பிற்காலத்தில் எழுதப்படாத சட்டமாகி, அதனையே மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயமும் ஏற்ப்பட்டுவிட்டது.

சாதாரணமா நடக்க கூடிய விஷயங்கள் கூட நாம ஏதோ ஒரு மூடநம்பிக்கையின் பட்டியலில் சேர்த்து விட்டுடறோம். வீட்டுல பள்ளிகள் இருக்கறது சாதாரண விஷயம் தான் நானும் அம்மாவும் உட்க்காந்து பேசிட்டு இருக்குமோது பல்லி எழுப்பும் ஓசை கூட , "கௌளி சத்தம் போடுது" ன்னு சொல்லி ஏதோ நடக்க போகுதுன்னு கவலை பட ஆரம்பிச்சுடுவாங்க. நாய் அழுகிற சத்தம் கேட்டா அந்த வீட்டுல ஏதோ கெட்டது நடக்க போகுதுன்னு சொல்லி கவலை படுறாங்க. எனை பொறுத்தவரை பல்லி, நாய் , பூனை ஓசை எழுப்புவதோ சத்தம் போடுவதோ இயல்பான இயற்கையான ஓர் விஷயம் , நாம் எப்படி சத்தம் போடுகிறோமோ எப்படி அழுகிறோமோ சிரிக்கிறோமோ அப்படி தான் இவையும் செய்கின்றன.

இடதுகண் துடித்தால் நல்ல சகுனம் என்றும் தும்மல் வந்தால் நல்ல சகுனம் சுலபமா சொல்றோம். அப்படி துடிச்சு நல்லது நடந்த மாதிரியோ கெட்டது நடந்த மாதிரியோ இது வரை பார்த்தது இல்லை. "கண்ணு வலது கண்ணு துடிச்சா ஏதோ நடக்கும்ன்னு பேச்சு" ன்ற பாட்டு கூட வரும் 'சின்ன கவுண்டர்' படத்துல , வலது கண்ணு துடிச்சதால தான் சுகன்யா ஜெயிலுக்கு போக வேண்டியதா போச்சுன்னு ஒரு உருவகம் செய்திருப்பாங்க . மூடநம்பிக்கைகள் ஏராளமாக மலிந்து கிடக்கின்றன..

//எந்த மருத்துவரும் சர்க்கரை தண்ணீரை கொடுப்பது தவறு என்று சொல்லவில்லை. அது குழந்தைக்கு தீங்கும் விளைவிக்காது. நான் மருத்துவதுறையில் இருக்கிறேன், இது பற்றி நன்றாக தெரியும்.//

மருத்தவமனைகளில் சர்க்கரை தண்ணீர் குடுக்கவே கூடாது என்று தான் சொல்கிறார்கள்.குழந்தை பிறந்தவுடன் தாய் பால் தான் தர வேண்டும் , தாயிடம் இருந்து சுரக்கும் முதல் பால் தான் அருந்தவேண்டும் அதுல தான் நிறைய சத்துக்கள் இருக்கு , இதான் உண்மை.

எப்போ தான் நாம் திருந்துவோமோ தெரியல :(

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes