கட்டுரையை துவங்குவதற்கு முன் ஏற்பட்ட கோர்வையான பல அனுபவங்களும், ஏற்றுக் கொள்ளமுடியாத பல விடயங்களையும் தேக்கிவைத்து பழக்கப்படாத சுபாவமும் ஒன்று சேர்ந்து வெளிப்பட்டதின் விளைவு இதோ இந்த வரிகளைக் கடந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஊடகங்கள் என்றால் என்னவென்றும் வெகு ஜன ஊடகங்களின் பொறுப்புணர்ச்சி என்னவென்றும் அறியமுடியாத ஒரு காலகட்டத்தில்தான் நாமும் வலைப்பூக்களின் மூலம் எழுத்து ஊர்வலங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகள் மக்களை கவர தொடர் நாடகங்கள் மூலம் மனிதர்களின் மூளையை இழுத்து பிடித்து கட்டி வைத்திருப்பதும், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை கொடுக்காமல் தங்களின் சாதக பாதகங்களுக்கு ஏற்றவாறு செய்திகள் வெளியிடுவதும், வியாபார யுத்திகளால் மனிதர்களின் புரிதலில் நங்கூரமிட்டு சிந்திக்கவிடாமல் நிறுத்தி வைத்திருப்பதும் என வெகு ஜன ஊடகங்கள் மக்களுக்கு தொடர்ந்து அநீதியை இழைத்துக் கொண்டிருக்கின்றன.
விழிப்புணர்வூட்டவேண்டிய பத்திரிக்கைகள் எல்லாம் மக்களின் உணர்ச்சியை உசுப்பேற்றி விட்டு பிரச்சினைகளின் வீரியத்தை படம் பிடித்து காட்டுகிறேன் பேர்வழி என்று எதிர்மறை சிந்தனைகளை தூண்டி விட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா இடத்திலும் நியாயவான்களின் கருத்துக்களுக்கு காதுகொடுக்க தயாரில்லாத மக்களினால்தான் மிகைப்பட்ட பிரச்சினைகள் கிளர்த்து எழுகின்றன.
செயற்கைகோள் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளுக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் இணையப் பத்திரிக்கைகளுக்கு இணையாக ஒரு மிகப்பெரிய சக்தியாய் விசுவரூபமெடுத்து வந்துகொண்டிருப்பது தான் வலைப்பக்கங்கள். இலவசமாய் உருவாகி எல்லா மனிதர்களின் கையிலும் சிக்கியிருக்கும் ஒரு வலுவான ஆயுதமாக இருக்கும் இந்த வலைப்பங்களில் மனிதனின் அன்றாட பிரச்சினைகள் முதல், நாம் சந்திக்கும் மனிதர்களின் முகங்கள் பற்றியும் வெளிப்படுத்தி ஒவ்வொரு மனிதனும் ஒரு சமுதாய நல்லெண்ணம் கொண்ட ஒரு அற்புத எழுத்தாளனாய், தன்னின் திறமைகளை வெளிக்கொணர இலவசமாய் கிடைத்த ஒரு வாய்ப்பு இது........
இலவசங்களில் பெரும்பாலும் உருவாக்கியவரின் வலியும், அருமையும் தெரிவதில்லை. இலவசமாய் வலைப்பூக்கள் கையில் கிடைத்து தாய் தமிழில் கருத்து பகிரும் வாய்ப்பும் பெற்று இருக்கும் நாம் அசுர பலத்தோடு மோதி முட்டி சமுதாய கொடுமைகளை பெயர்த்தெடுக்கலாம், மனிதர்களை சிரிக்கவைக்கவும், கவிதைகளில் கிறங்கடிக்கவும், கட்டுரைகளில் சமுதாய கொடுமைகளை பெயர்த்தெடுக்கவும் வலு கொண்ட ஒரு ஆயுதம்...இது....! எத்தனை வலைப்பூக்கள் நாம் வைத்திருக்கிறோம் என்பதை விட என்ன எழுதுறோம் என்பதுதானே முக்கியம்?
உனக்கு என்ன வேண்டும்? எதுவேண்டுமானலும் கேள் என்று கேட்ட கடவுளிடம் கேட்டானாம் " ஸ்ட்ராங்கா ஒரு டீ சொல்லுப்ப்பா"ன்னு....கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க, எல்லா ஆற்றலையும் தர கடவுள் ரெடி ஆனால் பக்தன் கேட்டது சிங்கிள் டீ.....! இதுதான் நடந்து கொண்டிருகிறது இன்றைய வலைப்பக்கங்களில் மிகுதியாக...! மிகைப்பட்டோரின் எதிர்பார்ப்பு சிங்கிள் " டீ " யோடு முடிந்து விடுகிறது...
ஆக்க பூர்வமான எழுத்துக்களும், பேச்சுகளும் வரலாற்றை மாற்றி அமைத்து இருக்கின்றன....அதிகார வர்க்கத்தை புரட்டிப் போட்டு இருக்கின்றன....! காரல் மார்க்ஸ் பொழுது போக்காய் எழுதுவோம் என்றும், சேகுவரா பொழுது போக்காய் வாழ்வோமென்றும் முடிவெடுத்து இருந்தால்...வரலாற்றில் எத்தனை விசயங்களை நாம் இழந்து இருப்போம் தெரியுமா....?
வாசிப்புத் திறன் கூடிப்போனால் விசால பார்வை கிடைக்கும்; விசால பார்வை கொண்டால் அநீதிகளின் வேர்கள் தெரியும். நான் எழுதி என்ன ஆகப் போகிறது என்ற கேள்வி மறையும். மிகைப்பட்ட பேருக்கு எழுத்தின் மீது அக்கறை குறைந்து தன்னை முன்னிலைப்படுத்தும், பிரபலமாக்கும் முயற்சிகளில் ஆர்வம் அதிகரித்து உள்ளது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையா?
மோடி மஸ்தான் காட்டும் வித்தைக்கு கூட கூட்டம் இருக்கும், மேஜிக் ஷோவிலும் கூட்டம் இருக்கும் ....ஆனால் அதில் அறிவு இருக்கிறதா....? பெரும்பாலும் அறிவும் கூட்டமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடம்தான் வசீகரிக்கும் எழுத்து.....! வலைப்பூக்களை சக பதிவர்கள் மட்டுமா வாசிக்கிறார்கள் ...இல்லையே....சாதாரண வாசிப்பாளர்களும் அதிகமாக வாசிப்பவர்களாக இருக்கிறார்களே....! வலைப்பூக்களின் தரம் உயர வேண்டாமா?
நான் எழுதுகிறேன்...என் எழுத்தில் தற்பெறுமை இருக்கிறதா? எழுதும் நகைச்சுவையில் வாசகன் தன்னை மறந்து சிரிப்பானா? என் கவிதை மனிதனை சிறகடிக்கச் செய்யுமா? எனது கட்டுரை சமுதாயச் சீர்திருத்தத்தில் வெளிச்சமாய் இருக்குமா.....? இப்படி கேள்வி கேட்டிருப்போமா ஒவ்வொரு பதிவெழுதும் போதும்.....! இதை விட நான் பிரபலமாவேனா என்ற கருத்து மிகுந்து இருக்குமெனில் அந்த கருத்தில் தவறு இல்லை.... எல்லோரும் விரும்பும் ஒரு சராசரியான ஒரு மனதின் யாக்கை அது....ஆனால்....
நல்ல எழுத்துக்களை கொடுத்து... நான் பிரபலமாவேன் என்ற சங்கல்பம இருக்கிறதா? எல்லா நேரமும் கருத்து சொல்லவேண்டும் என்றில்லை....கவலை மறந்துமனிதனை சிரிக்கவைக்க நம்முடைய பதிவில் பலம் இருக்கிறதா...? உணர்ச்சியை தூண்டும் பதிவுகள் எழுதுவதில் பிரச்சினை இல்லை .... ஆனால் நூறு பேர் சாதிக்கலவரத்தில் இறந்து விட்டார் என்று பதிவிடும் போது சாதி என்ற மாயையால் மடியும் மக்களுக்க்கு விழிப்புணர்வு ஊட்டவும் கூடுதல் விபரங்கள் தரலாமே...?
பத்திரிக்கைகளும் இன்று இதே போன்ற ஒரு மனோபாவத்துடன் செயல்படுவதால் நம்மை பிரபலபடுத்திக்கொள்ள அசிங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்....! வெளிச்சமிட்டு காட்டும் அதே நேரத்தில் அதற்கான தீர்வை எத்தனை பேர் சொல்கிறோம்? அந்த பதிவுக்கு வரும் பின்னூட்டங்களாவது அதற்கான தீர்வை சொல்கிறாதா என்றால்...இல்லை....மொத்தத்தில் நாமே நம்மை பெரிய ஆட்களாக கற்பனை செய்து கொள்கிறோம்.....அந்த கற்பனையில் நாம் வளரும் வாய்ப்பு பறிபோய்விடுகிறது.
ஆமாம்.... தோழர்களே...! நாம் எழுதுவதை எல்லாம் நாம் சேர்த்து வைத்திருக்கும் கூட்டம் ஆதரித்து 50 வோட்டுக்கள் போட்டு ஆகா...ஓஹோ என்று பின்னூட்டம் இட்டு வாழ்த்தி ஒரு மொய்விருந்து நடத்தி சென்று விடுகிறார்கள்....! மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனா? எப்படி நம்மை திருத்திக் கொள்வது அல்லது வளர்த்துக்கொள்வது? கட்டுரையை விமர்சித்து கருத்து சொன்னால் விவாதம் வருவதற்கு பதிலாக சண்டை வருகிறது....? அறிவுகளின் மோதலும், ஏன் என்ற கேள்வியும் இல்லாமல் வலைப்பக்கஙள் வறண்டு கொண்டிருப்பதில் யாருக்குமே லாபம் இல்லையே?
யாரும் மணி கட்ட தயாரில்லை...! நல்ல எழுத்தாளர்கள் எல்லாம் பதிவுலகை விட்டு மெல்ல நகர்ந்து நிற்பதாகவே எனக்குப் படுகிறது. பூனைக்கு நான் மணி கட்டினால்...என் பதிவுக்கு ஓட்டு போட கருத்து சொல்ல யாரும் வர மாட்டார்களே என்ற பயம் வேறு......எப்படி தீர்ப்பது இந்த பிரச்சினையை....? பதிவுலகில் நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லாம்...25 வோட்டை தாண்டுவதில்லை என்பதில் இருக்கும் ஒரு அ நியாயம் உறைக்கவில்லையா நமக்கு.... ! நாம் நமது பதிவுகளை வசீகரமாய் எழுதுவதில் காட்டும் ஆர்வத்தை வசீகரமாய் எழுதுபவர்களின் எழுத்தை வாசிப்பதிலும் கருத்து சொல்வதிலும் ஓட்டுகள் செய்வதிலும் என்ன சிக்கல் இருக்கிறது?
ஓட்டுக்கள் ஒருவரின் திறமையை தீர்மானிப்பதிலை ஆனால் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளியை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு படகு இந்த ஓட்டுக்கள்....!இதில் மாற்றுக் கருதுக்கள் யாருக்கும் இருக்க முடியாது.........தோழர்களே.... சிலிர்த்து எழ வேண்டிய நேரம் இது.....
இரண்டாம் உலகபோரின் போது ஃப்ரான்சுக்கு எதிரான போரில் இங்கிலாந்து வீரர்க்ள் சோர்ந்து போயிருந்த சமயம்...வின்ஸன்ட் சர்சில் படைவீரர்களிடம் ஆற்றிய உரையை மொழியாக்கம் செய்யாமலெயே தருகிறேன் (ஏனென்றால் மொழியாக்கம் செய்து பார்த்த பின் அதன் மூலத்தில் இருந்த வலுவில்லை.......) அவர் உரையாற்றியதற்கு பிறகு வீரர்கள் கிளர்ந்தெழுந்து படை நடுத்தி வென்றதுதான் வரலாறு..... அத்தனை வலிமை கொண்டது பேச்சும் எழுத்தும்......
" We shall go to the end; we shall fight in france; we shall fight on the seas and oceans; we shall fight with the growing confident and growing strength in the air; we shall defend our island, whatever the cost maybe. We shall fight on the beaches and We shall fight on the landing grounds; We shall fight on the fields and in the streets. We shall fight in the hills; We shall never surrender. "
ஒரே ஒரு கேள்வியை விட்டுச் செல்கிறது இந்த கட்டுரை....
ஆரோக்கியமான சூழ் நிலைகளால் நல்ல பதிவுகள் எழுதி பிரபலமடைவது முக்கியமா? இல்லை பொய்யான மாயையினால் பிரபலமடைவது முக்கியமா?
கழுகிற்காக,
தேவா.S
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
25 comments:
மிக அருமையான பதிவு அண்ணா,
இப்பொழுது இந்த பதிவுலகத்துக்கு தேவையான ஒன்று அண்ணா இது , வலைதளத்தை சரியான முறையில் கொண்டு சென்றால் நிச்சயம் நல்ல மாற்றங்கள் இதிலிருந்து கூட ஏற்பட நிச்சயம் வாய்ப்புள்ளது . தவறான முறைக்காக இந்த வலைதளத்தை உபயோகபடுத்து பவர்கள் படுத்தட்டும், சரியான பாதையில் போகிகொண்டு இருக்கும் நபர்கள் கூட கொஞ்சம் தடம் மாறுவதை உணருகிறேன், அவர்களுக்கான ஒரு படைப்பாய் இதை கருதுகிறேன்... தேவையான, அலசப்பட்ட அருமையா பதிவு ...
வாழ்த்துக்கள் அண்ணா
//ஓட்டுக்கள் ஒருவரின் திறமையை தீர்மானிப்பதிலை ஆனால் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளியை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு படகு இந்த ஓட்டுக்கள்....!இதில் மாற்றுக் கருதுக்கள் யாருக்கும் இருக்க முடியாது.........//
unmaithan.. indru niraya nalla pathivugal ottukal peramal palarudaya gavanthirku varamal mudangik kidakindrana. athe samayam odnrum illatha pathivugala pala publish panna sila mani nerathil 30 vottugal perugindrana .. evvaru ????
நிச்சயம் அவசியமான கட்டுரை. பதிவுலகம் சரியான பாதையில் செல்ல இந்த கட்டுரை நிச்சயம் துணை நிற்கும்..
//ஒரே ஒரு கேள்வியை விட்டுச் செல்கிறது இந்த கட்டுரை....ஆரோக்கியமான சூழ் நிலை முக்கியமா? இல்லை நாம் பிரபலம் அடைவது முக்கியமா?//
ரெண்டு கண்ணுல எது வேணும்னு கேட்டா என்ன சொல்றது...
உண்மை. ஆனால் ஓட்டுக்களை ஏன் கணக்கிடுகிறீர்கள். அவை வெறும் திரட்டிகளில் முன்னிலை படுத்தவே. ஓட்டு வாங்காத பல நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை படிக்கும் ரசிகர்கள் தொடர்ந்து படித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நல்ல பதிவுக்கு ஓட்டு விழவில்லையே என வருத்தப்பட்டு தடம் மாறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
என்னை பொருத்தவரை ஓட்டுக்கள் நல்ல பதிவை தீர்மானிப்பது இல்லை, பதிவின் கருத்துகளே தீர்மானிக்கிறது.
தம்பி சிரிப்பு போலிசின் கேள்வியில் இருந்த உண்மையின் பிண்ணணி உணர்ந்து அந்த வரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன!
நன்றிகள்!
"சரக்கும் முறுக்கா இருக்கணும்! செட்டியாரும் முறுக்கா இருக்கணும்"னு சொல்லுவாரு என் தாத்தா. சும்மா மொக்கை மட்டுமே பதிவுன்னு ஓடுறவங்ககிட்ட ரொம்ப நாளுக்கு மேட்டர் இருக்காது... விஷயம் இருந்தா தாமதமானாலும் காலவெள்ளத்துல மிதந்து மேலே வந்து நிற்போம். என்ன ரொம்ப பொறுமை, அர்ப்பணிப்பு வேணும்...
அறிவுரை சொல்லி மனுஷன் திருந்துனா இன்னிக்கு உலகத்துல ஆத்திச்சூடியும், திருக்குறளும் மட்டும்தான் வேதமா இருந்துருக்கும்... அதனால இவங்களை சொல்லி குத்தமில்ல.
எனக்குத் தெரிஞ்சி 'வினவு' பக்கத்தை ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பேரு வாசிக்கிறாங்க.. ஆனா... ஓட்டு (ப்ளஸ்ஸோ, மைனஸ்ஸோ), கமெண்ட் எத்தன பேரு போடுறாங்க?
ஆனா வருஷங்கள் செல்லும்போது வினவு நிச்சயமா இன்னும் பெரிய தளத்துக்குப் போயிருக்கும். மொக்கைப்பதிவர்கள்?!
எனக்கு இந்த பின்னூட்ட அரசியல்மேல ஒரு அருவருப்பே உண்டு... ஆனா பின்னூட்டம்ங்கிறது வலைப்பூக்களுக்கு மட்டுமேயான தனித்தன்மை. அது இப்டி பாழாப்போறதுல நிறைய வருத்தம் இருக்கு!
நானும் விளம்பரம் பண்றேன். மொக்கைங்ககிட்ட பொயி டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டு இல்ல... யார் யார்கிட்டல்லாம் சரக்கு இருக்கோ அவங்க கிட்ட போயி நான் இன்ன மாதிரி எழுதியிருக்கேன்.. பாத்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க அப்டீன்னு கேட்டுட்டுதான் இருக்கேன்.. ஆனா அவங்களோட கமெண்ட்ட நான் பின்னூட்டத்துலதான் போடணும்னு வற்புறுத்தறதில்ல.. சாட்டிலோ, மெயிலிலோ இல்லன்னா வாய்ப்பு இருந்தா ஃபோனிலோதான் எதிர்பாக்குறேன்........ விளம்பரம் முக்கியம்... ஆனா நம்ம டார்கெட் ஆடியன்ஸ் யாருன்னு தெளிவும் முக்கியம்... வழுக்கைத்தலைக் காரன்கிட்ட போயி ஷாம்பூ யாவாரத்துக்கு கேன்வாஸ் பண்ண முடியுமா?
அருமையான பதிவு அண்ணா... மிகவும் அவசியமான பதிவும் கூட...
இங்கு எல்லாமே மார்க்கெட்டிங் செய்தால்தான் எடுபடும்... ஆனாலும் சரக்கு தரமில்லை எனில் சந்தையில் விற்காது...
அதனால் சில பதிவுகள் முன்னணிக்கு கொண்டுவர முடியும் ஆனால் தொடர்ந்து தரம் இருந்தால் மட்டுமே முன்னணிக்கு வரமுடியும்..
அடுத்து இங்கு மொக்கை போடும் பதிவர்களுக்கானது... நான் அவர்களை தொடர்ந்து ரசிப்பவன்..வாழ்க்கை சீரியஸாக போகும்போது நகைச்சுவை உணர்வு மட்டுமே நம்மை இலகுவாக வைக்கும்..
அதனால் அது மொக்கையோ, சீரியசோ இரண்டிலும் நம்மை கட்டிபோடக் கூடிய விசயங்கள் இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஒருவரின் பதிவை ரசிக்க முடியும்..
அவசியம் படிக்க வேண்டிய பதிவர்களின் பதிவுகள் பற்றிய ஒரு பதிவை கூடிய விரைவில் பதிவேற்றுகிறேன்...
கே.ஆர்.பி . செந்தில்...@ உங்கள் பதிவுக்காகவும் காத்திருக்கிறேன் .....!
எதுக்கு பிரபலமாகனும் :)
படிக்கிறவங்க எல்லாம் ஓட்டு போடுறவங்க இல்லை. ஓட்டு போடுறவங்க எல்லாம் பின்னூட்டம் போடுறவங்களும் இல்லை. பின்னூட்டம் போடுறவங்க எல்லாருமே படிச்சிட்டு போடுறாங்கன்னும் இல்லை. இதில் பிரபலமும் இல்லை. தொடர்ச்சியா வாசகர்களைத் தக்கவைக்கும் எழுத்தில்லைன்னா மொக்கையோ, நல்ல விஷயமோ எதுவும் நிலைக்காது என்பது என் கருத்து.
///ஆரோக்கியமான சூழ் நிலைகளால் நல்ல பதிவுகள் எழுதி பிரபலமடைவது முக்கியமா? இல்லை பொய்யான மாயையினால் பிரபலமடைவது முக்கியமா?//
இங்க பிரபலம்னு எதை சொல்ரீங்க தேவா, என்னை பொருத்தவரையிலும் இது இங்கே காமெடிக்காக யூஸ் பண்ணுர வார்த்தை...
பிரபலம்னா என்ன தல?
அதை வச்சிகிட்டு என்ன செய்யுறது?
வானம்பாடிகள் ஐயாவின் பின்னூட்டத்திற்கு ஒரு மிகப் பெரிய ரிப்பீஈஈஈஈட்டு
மிகப் பெரிய கருத்தை தாங்கி நிற்கும் பதிவிது
இந்த பிரபலம்னா யாருன்னு எனக்கு தெரியல ????? சொல்லுங்கனா
அப்பரம் நான் நிறைய பேரை பின்தொடர்கிறேன்,அவர்கள் எல்லா பதிவையும் படிக்க ஆசை தான்
ஆனால் எனக்கென்று சில விருப்பங்கள் இருக்குல்ல,என்னவென்றே தெரியாத ஒன்றை பற்றிய பதிவை படிக்கவே முடியாம ,சும்மா பேருக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடும் எத்தனையோ பேர் இருக்காங்க
பதிவின் முழு கருத்தை படிக்காம போடும் பின்னூட்டங்களை எந்த லிஸ்டில் போய் சேர்ப்பது????
மொக்கையோ,என்னவோ தொடர்ந்து படிக்க தூண்டுமளவுக்கு அதற்கு சக்தி இருக்குமானால் அது என்னை பொருத்தவரை சிறந்த பதிவு தான்
////////ஓட்டுக்கள் ஒருவரின் திறமையை தீர்மானிப்பதிலை ஆனால் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளியை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு படகு இந்த ஓட்டுக்கள்....!இதில் மாற்றுக் கருதுக்கள் யாருக்கும் இருக்க முடியாது.........//////
மாற்றம் இல்லாத உண்மை . இந்த வரிகள் . புரிதலுக்கு நன்றி .
இன்றைய நிலையில் பதிவுலகம் பற்றி அய்யா வானம்பாடிகள் சொல்லி இருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று .
ஆரோக்கியமான சூழ் நிலைகளால் நல்ல பதிவுகள் எழுதி பிரபலமடைவது முக்கியமா? இல்லை பொய்யான மாயையினால் பிரபலமடைவது முக்கியமா?
...... ஒரு பதிவர் யோசித்து செய்ய வேண்டிய பல கருத்துக்களை முன்னே வைத்து இருக்கிறீர்கள். ம்ம்ம்ம்..... கோப சொற்கள் இல்லாமல், தவறுகளை சுட்டி காட்டி, உள்ளதை உள்ளபடி சொல்லும் பக்குவம் தெரிகிறது.
ப.செல்வக்குமார் கூறியது...
நிச்சயம் அவசியமான கட்டுரை. பதிவுலகம் சரியான பாதையில் செல்ல இந்த கட்டுரை நிச்சயம் துணை நிற்கும்..
..... correct!
@@@செந்தில்
////அதனால் அது மொக்கையோ, சீரியசோ இரண்டிலும் நம்மை கட்டிபோடக் கூடிய விசயங்கள் இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஒருவரின் பதிவை ரசிக்க முடியும்..////
100 % உண்மை.
சரியான நேரத்தில் கூர்மையான கழுகின் பார்வை பாராட்டிற்கு உரியது ...
தங்களை பிரபலபடுத்திகொள்ள பெண் பதிவர்களை அசிங்க படுத்திகொண்டு இருப்பதை கழுகில் உள்ள தோழர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டுகிறேன். .. தவிரவும் கழுகின் பதிவுகளை பலரும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன்... தொடரட்டும் கழுகின் பணி.
கெளசல்யா...@
விழிப்புணர்வூட்டி செல்லும் எமது பயணத்தில்...அ நீதிகளுக்கு எதிரான குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....! சத்தியத்துக்கும், உண்மைக்கும் நேர்மைக்கும் கழுகின் ஆதரவு எப்போதும் உண்டு...!
வாக்க எதிர்ப்பார்த்து எழுதினோம்னா அது நம்ம எழுத்தையே பாதிக்கும். நாம நினைச்சத சுதந்திரமாக எழுதுறதுக்கு மிகப்பெரிய வெளியா இந்த வலையுலகம் இருக்கு. ஒரு நல்ல பதிவுக்கு கருத்துரை மிக அவசியம். வாக்குகளை விட கருத்துரைகள்தான் பதிவ எழுதுறவங்களுக்கு மிக அதிக திருப்திய கொடுக்கும். இது என் எண்ணம். மற்றபடி பல நல்ல பதிவுகள் வாக்கு கிடைக்காமாக பலரோட கண்களுக்கு கிடைக்காமலேயே போவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
//மனிதன் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனா? எப்படி நம்மை திருத்திக் கொள்வது அல்லது வளர்த்துக்கொள்வது? கட்டுரையை விமர்சித்து கருத்து சொன்னால் விவாதம் வருவதற்கு பதிலாக சண்டை வருகிறது....? அறிவுகளின் மோதலும், ஏன் என்ற கேள்வியும் இல்லாமல் வலைப்பக்கஙள் வறண்டு கொண்டிருப்பதில் யாருக்குமே லாபம் இல்லையே?// சரியான வரிகள்.
பதிவுலகுக்கு தேவையான அவசியமான இடுகை தேவா.
பதிவுலகம் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. ஆக்க பூரவமான செயலை கழுகு செய்து வருவது மிகவும் பாரட்ட வேண்டிய ஒன்றாகும்.
///உனக்கு என்ன வேண்டும்? எதுவேண்டுமானலும் கேள் என்று கேட்ட கடவுளிடம் கேட்டானாம் " ஸ்ட்ராங்கா ஒரு டீ சொல்லுப்ப்பா"ன்னு....கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்க, எல்லா ஆற்றலையும் தர கடவுள் ரெடி ஆனால் பக்தன் கேட்டது சிங்கிள் டீ.....! இதுதான் நடந்து கொண்டிருகிறது இன்றைய வலைப்பக்கங்களில் மிகுதியாக...! மிகைப்பட்டோரின் எதிர்பார்ப்பு சிங்கிள் " டீ " யோடு முடிந்து விடுகிறது...///
இந்த வரிகள் நச்சுன்னு இருக்கு! ஆனாலும் சோர்வு அடைந்து வீடு திரும்பும் மனிதன் தன்னை தளர்த்தி கொள்ள நகைசுவையை நாடுகிறான்.
ஒரு சினிமாவில, ஹீரோவும் இருக்கிறார், காமெடியனும் இருக்கிறார். இந்த இரண்டு பேர்களின் சேவையும் நமக்கு தேவை தானே!!!
@@@வானம்பாடிகள் கூறியது...
படிக்கிறவங்க எல்லாம் ஓட்டு போடுறவங்க இல்லை. ஓட்டு போடுறவங்க எல்லாம் பின்னூட்டம் போடுறவங்களும் இல்லை. பின்னூட்டம் போடுறவங்க எல்லாருமே படிச்சிட்டு போடுறாங்கன்னும் இல்லை. இதில் பிரபலமும் இல்லை. தொடர்ச்சியா வாசகர்களைத் தக்கவைக்கும் எழுத்தில்லைன்னா மொக்கையோ, நல்ல விஷயமோ எதுவும் நிலைக்காது என்பது என் கருத்து//
பெரிய ரிப்பிட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
// நம்மை பிரபலபடுத்திக்கொள்ள அசிங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்....! வெளிச்சமிட்டு காட்டும் அதே நேரத்தில் அதற்கான தீர்வை எத்தனை பேர் சொல்கிறோம்?//
சரண்டர் பாஸ் ! இனி தீர்வுகள் மேல கான்சன்ட் ரேட் பண்றேன்
Post a Comment