Thursday, September 02, 2010

காந்திய சிந்தனை வெல்லுமா?
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யாருன்னு கேட்ட சின்ன குழந்தையும்
காந்திதாத்தானு சொல்லும் ஆனா...அவரின் சிந்தனைகள் என்ன என்பது இன்றையநிலையில் மிகைப்பட்ட பேருக்கு தெரியாது. காந்திய சிந்தனையில் முதுகலை பட்டம் பெற நண்பர் வசந்த் உங்க உறவுக்காரன் என்ற பெயரில் வலைப்பூ நடத்தி வருகிறார்...காந்திய சிந்தனைகள் பற்றி வசந்த் என்ன சொல்கிறார்.... இதோ...


காந்தியின் சிந்தனைகள் எல்லாம் நடைமுறை சாத்தியம் அற்றது; பயனற்றது; அவையெல்லாம் பழுப்பேறிய பக்கங்களை கொண்டபடி புத்தக வடிவில் மட்டுமே நூலகங்களில் தூசி படிந்து இருக்க வேண்டியவையே அன்றி வாழ்க்கைக்கு உபயோகப்படாது; இப்படி தானே நிறைய மக்கள் சொல்லி கொண்டு திரிந்துகொண்டிருக்கிறோம்.இன்றைய சூழ்நிலை என்ன? நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் 626. அதில் நக்ஸலைட் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் காணபடும் மாவட்டங்கள் 220. வன்முறை நிகழ்வுகள் வளர்ந்து கொண்டே போகின்றன.

கையறு நிலையில் மக்கள்! பட்டினி சாவுகள், விவசாயம் நொடித்து போனதால்,
விவசாயிகளின் தற்கொலைகள்! வறுமையை விரட்ட, பெற்ற மகள்களையே விபச்சார வியபாரிகளுக்கு விற்கும் கொடுமை! இரத்தம், சிறுநீரகம் என்று தன் அங்கங்களையே பணத்துக்காக விற்க வேண்டிய சூழ்நிலை! ஊர் விட்டு ஊர்; மாநிலம் விட்டு மாநிலம்; நாடு விட்டு நாடு என்று வேலைக்காக அலையும் அவலம்.


ஒரு இடத்தில் செல்வம் குவிவதும், மற்ற இடங்களில் எல்லாம் வறண்டிருப்பதும்! என்ன ஒரு ஜனநாயக நாடு! சுதந்திரத்திற்க்காக எத்தனை எத்தனை இன்னல்களை தாங்கி கொண்ட பாடுபட்டனர் நம் தேச தியாகிகள். அவர்கள் இந்த இழிநிலையை, நம் தேசம் அடவதை தான் காண கனவு கண்டனரா?

சரி காந்தியின் சிந்தனைகள் என்று சொல்கிறாயே, அவைகள் என்ன?

1 கிராமிய பொருளாதாரம்


2 தொழில்களில் தர்மகத்தா முறை


கிராமிய பொருளாதாரம்

இன்றும் கூட பெரும்பான்மை இந்தியா கிராமங்களில் தான் வாழ்கின்றது. ஆனால் அந்த பெரும்பான்மையினரின் வாழ்க்கை தள்ளாட்டம் நிறைந்ததாக உள்ளது. தன்னம்பிக்கை அற்று, பயமும் பீதியுடன், ஒவ்வொரு நாளும் நாளை கழிப்பதே பெரும் பாடாக உள்ளது. வருமை அவர்களின் வாழ்க்கையை விட்டு அகலாது உடன் இருந்தே கொல்லும் நோயாக உள்ளது

பின் மதிப்பு கூட்டி பல மடங்கு விலைக்கு விற்கபடுகிறது. விவசாயி நெல்லை
விற்கும்போது கிலோ ஒன்றுக்கு, 2 அல்லது 3 ரூபாய்க்கு விற்கிறான். ஆனால் அது அரிசியாகி சந்தைக்கு வரும்போது கிலோ 35, 40 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

கூடி வாழ்வோம் என்கின்ற சிந்தனை இல்லை. காந்தி சொன்னது கிராமங்களை வலுசேர்க்க வேண்டும் என்பது. கிராம சுயராஜ்ஜியம் என்பதே அவரின் மந்திர சொல்லாக இருந்தது


அவர் சொல்லுவது, இயந்திரமயம் என்பது மனித சமூகத்திற்கு சாபகேடு. இயந்திரமயம் இருக்குமானால், பொருட்களின் பெருக்கத்தால், அவைகளை சந்தைபடுத்துவதற்காக, பல நாடுகளின் சந்தைகளை அழிக்க வேண்டிய நிலை தான் வரும் என்பது தான்


உழைக்க கைகள் இருக்கிறது, பாடுபட நிலவளமும் நீர்வளமும் இருக்கிறது. ஆனால், அவர்கள் குழுக்களாக இயங்க ஒரு கட்டமைப்பு வசதியும், சிறிது முதலீடும், இல்லாமல் இருக்கிறது. 63 வருட காலமாக இந்த வசதிகளை செய்து கொடுக்க தவறிவிட்டதன் விளைவே மேற்சொன்ன பல அவலங்களுக்கும் காரணம்


பெரிய பெரிய தொழிற்சாலைகள், நிறுவணங்கள் என்று, பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து ஆரம்பிக்கபடுகின்றன. அவைகளில் எத்தனை பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க படுகிறது என்று பார்த்தால் நகைப்புக்கும் திகைப்புக்கும் உரிய செய்தியாக் இருக்கிறது. சில நூறு பேர் அல்லது சில ஆயிரம் பேர்கள் என்று சொற்ப எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.


ஆனால் கிராமங்களில் சில கோடி ரூபாய்களை கொண்டே பல ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பினை நல்கிட முடியும். சிறு குறுந்தொழில்கள், குடிசை தொழில்கள், மனித வளம் அதிகம் பயன்படும் தொழில்களென்று பார்த்து பார்த்து ஊக்கபடுத்த தவறிவிட்டனரே.இதை தான் காந்திய சிந்தனை சொன்னது. கேட்டார்களா அதிகாரத்தில் இருந்தோர்?


தொழில்களில் தர்மகத்தா முறை

இதில் தர்மகத்தாவாக முதலாளி இருப்பார். முதலாளிகள் தங்களின் தாழ்ந்த குணங்களான பேராசை, பொருள்பற்றை விட்டு அவரும் தொழிலாளர்களோடு, தோளோடு தோள் கொடுத்து செயல்படும் ஒரு உயர்ந்த ஆன்மீக நிலை.


இது கற்பனைக்கும் அப்பாற்பட்டது; நடைமுறையில் சாத்திய படாதது என்று சொல்வோர், நமது நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியை சிறிது திரும்பி பார்க்க வேண்டும். விலங்கோடு விலங்காக மனிதன் வாழ்ந்தான். அவனிடம் நீதி, நேர்மை எல்லாம் கிடையாது. விலங்குகள் தம்முள் என்ன நீதி நேர்மை கடைபிடித்தனவோ, அதை தான் அவனும் கடைபிடித்தான்


ஆனால் மெல்ல மெல்ல விலங்கு நிலையில் இருந்து மாறி, மனிதன் நாகரீக பாதையில் அடியெடுத்து செல்ல செல்ல, வலுபெற்றவன் வலுவற்றவனை துன்பபடுத்த கூடாது, அவனின் சுதந்திரம் பறிக்கபட கூடாது, அவனுக்கும் வாழும் உரிமை உண்டு என்கின்ற உயர்ந்த ஒரு நிலைக்கு வந்தான். இந்த வரலாற்றை கொண்டு பார்க்கும் போது, காந்தியின் தர்மகத்தா முறையை கூட செயல்படுத்தி இருந்திருக்க முடியும். அது உலகத்திற்கே புதுமையான ஒரு நாகரீகமாக இருந்திருக்கும்.


சில தொண்டு நிறுவனங்களில் இந்த அன்பு பிணைப்பு கொண்டு செயல்படும் நிலையை நான் கண்கூடாக பார்த்திருக்கின்றேன். அந்த நாகரீகம் எல்லா இடங்களிலும் பரவி இருக்குமானால் ஒட்டுமொத்தம் இந்தியாவே சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி இருந்திருக்க முடியுமே!


இப்போது சொல்லுங்கள்! காந்திய சிந்தனைகள் - குறிப்பாக அவரின் பொருளாதர
சிந்தனைகள், உண்மையான விடுதலையை மனித குலத்திற்கு நல்கி இருக்குமா, இருக்காதா?

அவரின் சிந்தனைகள் நிறைய இருக்கிறது. அவைகள் எல்லாம் மனிதனை தெயவ நிலைக்கு கொண்டு செல்லும் உயர்வு நிலையாகும். கழுகு திரும்பவும் சந்தர்ப்பம் கொடுக்குமானால் அவைகளை பற்றியும் எழுதுகின்றேன்.


கழுகிற்காக
என்னது நானு யாரா?
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்).
7 comments:

எல் கே said...

ubayogamana nalla pathivu

Karthick Chidambaram said...

thevayaana pathivu

Chitra said...

Ghandhiyan Thoughts பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அவசியமான பதிவு...

என்னது நானு யாரா? said...

என்னை கட்டுரை எழுத சொல்லி கேட்டு, பின் அதனை பதிவில் ஏற்றிய தேவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

உங்களின் ஆதரவை கோருகின்றேன்.

நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

அணில் said...

காந்திய சிந்தனை குறித்த கழுகுப் பார்வை நன்றாக உள்ளது. முடியும் என்றால் சாத்தியப்படலாம், முடியாது என்பது கவலைக்கிடம்தான்.

அன்பரசன் said...

சரியான பதிவுதான்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes