பொது பிரச்சினைகள் தாண்டி உடல் நலம் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே குறைவுதான். தோழி ஜெஸ்வந்தி அனுப்பிய இந்த கட்டுரை மருத்துவ அறிவியல் ரீதியாக எப்படிப் பட்ட மாற்றங்கள் ஆண் மற்றும் பெண் பாலாருக்கு இருக்கிறது மேலும் அது எப்படி ஆயுளை நிச்சயிக்கிறது, அதற்கான புறக்காரணிகள் என்ன? என்று தெளிவாக தெரிவிக்கிறது....
ஆண்களைவிடப் பெண்கள் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் ..
'' நீங்கள் இல்லையென்றால் என்னால் இதிலிருந்து மீள முடியாது '' உயிர்காக்கும் இயந்திரத்துடன் பொருத்தப் பட்டு அந்தக் கட்டிலில் கிடக்கும் பெண், தன் கணவரிடம் முனகுகிறாள். '' உன்னால் முடியும் . நம்பு'' அருகிலிருந்து தைரியம் தருகிறார் அவள் கணவர். ஆனால் மனைவியைத் தைரியப் படுத்திய அந்த நாற்பத்தி ஏழு வயதான அந்த மனிதர் மூன்றாம் நாள்மாரடைப்பினால் இறந்து விடுகிறார்.
அவர் மனைவி நலமடைந்து , அவரது கணவரதுமது பானக் கடையையும் நிர்வகித்து , தங்கள் நான்கு பெண்களையும் பராமரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் பெண்மணி அவரது கணவரை விட ௨0 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்வார் என்று டாக்டர்கள் கருதுகிறார்கள்.
இது ஒரு உண்மைக் கதை. நாமறிய இந்தக் கதை எல்லா நாடுகளிலும் , எல்லாக் கலாச்சாரங்களிலும் திரும்பத் திரும்ப நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.ஆண்களை
விட பெண்களின் ஆயுள் அதிகமாக இருக்கிறது. உண்மையில் ஆண்கள் உடலளவில்வலிமையுள்ளவர்களாகவும் உயரமானவர்களாகவும் இருந்தாலும் இந்த ஆயுள் விடயத்தில்பெண்களுக்குப் பின்னே தான் நிற்கிறார்கள். இது விவாதமல்ல. உலகறிந்த உண்மை. இந்த இடைவெளி பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அவதானிக்கப் பட்டு வந்திருக்கிறது.
விட பெண்களின் ஆயுள் அதிகமாக இருக்கிறது. உண்மையில் ஆண்கள் உடலளவில்வலிமையுள்ளவர்களாகவும் உயரமானவர்களாகவும் இருந்தாலும் இந்த ஆயுள் விடயத்தில்பெண்களுக்குப் பின்னே தான் நிற்கிறார்கள். இது விவாதமல்ல. உலகறிந்த உண்மை. இந்த இடைவெளி பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து அவதானிக்கப் பட்டு வந்திருக்கிறது.
படிப் படியாக இந்த இடை வெளி குறைந்து கொண்டு வருவதும் வரவேற்கப் பட வேண்டிய விடயமே. அது கூட , தற்போது சில பெண்கள் ஆண்கள் போல தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டதாலும், புகைத்தல் ,மது பானப் பழக்கம் , திருக் என்பவற்றுக்கு அடிமையானதாலும் , சமயுரிமை கேட்டு பல விதமான அபாயகரமான தொழில்களையும் செய்வதாலும் ,அவர்கள் ஆயுள் குறைவதாலேயே இந்த இடைவெளி குறைக்கப் பட்டு விட்டதாக ஆய்வாளர் கருதுகிறார்கள் .
இந்த அடிப்படை இடை வெளிக்குக் காரணம் என்பதையறிய பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. காரணி ,ஆண்களிலும் , பெண்களிலும் காணப் படும் வேறு பட்ட ஓமோன்களா? அல்லது ஆண்களில் மட்டும் காணப் படும் Y குரோமோசோம் ஆயுள் குறைவை உண்டு பண்ணுகிறதா? அல்லது ஆண்கள் தேர்ந்தெடுக்கும் சூழலும், பழக்க வழக்கங்களுமா ? அல்லது இவை யாவற்றினதும் கலவையா? இதுதான் காரணம் என்று சுட்டிக் காட்ட முடியாமல் ஆராய்ச்சியாளர்கள்திண்டாடுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் , எந்த வயதிலும் ஆண்களின் இறப்பு பெண்களை விடஅதிகமாகவே காணப் படுகிறது. இதனைக் கருவாக இருக்கும் போதே அவதானித்துள்ளார்கள்.
கருவிலேயே அழிந்து போகும் சிசுக்களில் அனேகமானவை ஆண் சிசுக்களாகவேஇருக்கின்றனவாம். இதனால் ஆண்களின் Y குரோமோசோம் தான் இதற்குக் காரணம் என்று ஊகித்தார்கள்.இதனை அண்மையில் ஊர்ஜிதம் செய்தும் இருக்கிறார்கள்.
எலிகளில் செய்த ஒருபரிசோதனையில் இரண்டு பெண் எலிகளிலிருந்து எடுக்கப் பட்ட கருவணுக்களை இணைத்து (mutations) ஒரு எலியை உண்டு பண்ணியிருக்கிறார்கள்.
இதன் ஆயுள் இயற்கை முறையால் உண்டாக்கப் படும் எலிகளைவிட அதிகமானதைஅவதானித்துள்ளார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே காணப்படும் வேறுபட்ட ஓமோன்கள் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் பல டாக்டர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் 40 வயதிற்குப் பின்னர் இதய சம்பந்தமான நோயினால் இறப்பது மிக அதிகமாயிருக்கிறது. அத்துடன் மிக அபாயகரமானநடவடிக்கைகளில் ஆண்கள் இறங்குவதும் அனைவரும் அறிந்ததே. இதன் காரணத்தால் விபத்துக்களில் இறக்கும் ஆண்கள் பெண்களை விட மிக அதிகமாக இருக்கிறார்கள்.
ஆண்கள் 40 வயதிற்குப் பின்னர் இதய சம்பந்தமான நோயினால் இறப்பது மிக அதிகமாயிருக்கிறது. அத்துடன் மிக அபாயகரமானநடவடிக்கைகளில் ஆண்கள் இறங்குவதும் அனைவரும் அறிந்ததே. இதன் காரணத்தால் விபத்துக்களில் இறக்கும் ஆண்கள் பெண்களை விட மிக அதிகமாக இருக்கிறார்கள்.
ஆண்களில் காணப்படும் ஓமோனே இவர்களின் இந்த விபரீத நடவடிக்கைகளுக்குக் காரணம் என்கிறார்கள். அதே சமயம் பெண்களின் ஓமோன்கள் அவர்களை சாந்தமாக உருவாக்கி, பல விபத்துகளில் இருந்து காத்து விடுகிறது. ஓமோன்கள் ஒரு கவசமாகக் காத்து மெனபோஸ் (menopause ) வரை இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது. ஆனாலும் கூட மிக வயதான காலத்திலேயே பெண்களை இதய நோய்கள் தாக்குகின்றன. ஆனால் இந்த ஓமோன் வயிற்றிலிருக்கும் சிசுக்களில் காணப் படாததால் , தாய் வயிற்றில் ஆண் சிசுக்களின் இறப்புக்கு காரணம் என்னவென்பதை அவர்களால் விளக்க முடியவில்லை.
பல ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆயுள் இடை வெளிக்குக் காரணம் உயிரியலும் ,சூழலும் என்று சொல்கிறார்கள். ''ஆண்களும், பெண்களும் சரி சமனாக சூழலிலுள்ள அசுத்தங்களைச் ( toxins) சந்திப்பதில்லை.'' என்று விளக்கம் தருகிறார் சிக்காகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சேரில் வூட்சொன் . பெண்கள் வீட்டுக்குள் இருந்த காலத்தில் இந்த இடைவெளி மிகப் பெரியதாக ( கிட்டத் தட்ட 12-15 வருடங்கள்) இருந்ததென்றும்
இப்போ அவர்கள் படிப் படியாக பல வெளி வேலைகளைச் செய்யத் தொடங்கிய பின்னர்
இப்போ அவர்கள் படிப் படியாக பல வெளி வேலைகளைச் செய்யத் தொடங்கிய பின்னர்
சூழலிலுள்ள மாசினால் நோய் வாய்ப் பட்டு இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் அதனால் இந்த இடைவெளி இப்போ குறைந்து விட்டதாகவும் ( 5-10 வருடங்கள்) அவர் விளக்கம் தருகிறார். பெண்கள் அதிக காலம் வாழ்ந்தாலும் நோயில்லாமல் வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.
பெண்களைத் தாக்கும் ஒஸ்தியோபெரொஸிஸ், ஆத்திறைரிஸ் போன்ற நோய்கள் அவர்களை நீண்ட கால உபாதைகளுக்கு ஆளாக்குகின்றன.
ஆண்களைத் தாக்கும் இதய நோய்கள் , புற்று நோய்கள் என்பன குறுகிய காலத்தில் இறப்பை உண்டு பண்ணுகின்றன
என்னைப் பொறுத்த வரை ஆண்கள் நோய் ஆரம்பிக்கும் போதே டாக்டரை அணுகாததும் ஒரு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது.
பெண்கள் சின்ன விடயத்துக்கும் டாக்டரின் அறிவுரையைகோருகிறார்கள். ஒருவேளை நோய் ஆரம்பிக்கும் போதே களைய மறப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
பெண்கள் சின்ன விடயத்துக்கும் டாக்டரின் அறிவுரையைகோருகிறார்கள். ஒருவேளை நோய் ஆரம்பிக்கும் போதே களைய மறப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
கழுகிற்காக
ஜெஸ்வந்தி
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
8 comments:
interesting article....... mmmm......
கடந்த 60 ஆண்டுகளாக ஆயுள் காப்பீடு செய்யும் நிறுவனங்கள் சேமிக்கும் தகவல்கள் புள்ளி விவரங்கள் அடிப்படையில்
ஒரு பெண்ணின் சராசரி வயது ஒரு ஆணின் சராசரி வயதை விட அதிகம் என்று சொல்ல இயலாது.
20 வயது முதல் 40 வயது வரை ஒப்பிட்டுப் பார்ப்பின் , பெண்கள் இறப்பு விகிதம் ஆண்கள் இறப்பு
விகிதத்தை விட சற்று அதிகமே. இதற்கு முக்கிய காரணம் பிள்ளைப்பேறு சமயத்தில் தகுந்த பாதுகாப்பு அல்லது
\ மருத்துவ வசதிகள் பெற இயலாத சூழ்னிலை, முக்கியமாக கிராமப்புறத்தில். கல்வியறிவு பெற்ற பெண்களுடன்
ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த விகிதம் ஆண்களை விட குறையவில்லை. ஆனால், ஏறத்தாழ் சரி சமமாக உள்ளது.
45 வயதைக் கடந்த பெண்களையும் ஆண்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆண்களின் எதிர்பார்க்கும் உயிர் வாழும் சராசரி வயது expected longevity period
பெண்களின் சராசரி வயதை விட கணிசமான அளவு குறைவாகவே இருக்கிறது.
In short, upto age 40, the female of the species carries greater risk upto age 40 , but once this milestone is crossed, the female on an average
lives longer than an average male.
இந்த அடிப்படையில் தான் ஆயுள் காப்பிடு நிறுவனங்கள் பொதுவாக செயல்படுகின்றன.
சுப்பு ரத்தினம்.
voice from my better half.
பின் குறிப்பு: அது சரி, நீங்கள் குறிப்பிட்டவாறு பெண்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடவில்லை என சொல்லுதல்
சரிதானா !! கேஸ் அடுப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் இருப்பது கணவனா மனைவியா ?
ஆண்களோ..பெண்களோ யாராக இருந்தால் என்ன..அந்த இணையில் ஒன்றன் இழப்பில்
வாழும் இன்னொரு நபர்.? நிச்சயம் ஆண் தான் கஷ்டப் படிகிறான்.முதுமையில் ஒரு பெண்(மனைவி) இல்லாமல் அவனால் வாழவே முடியாது! முதுமையில் பெண்மையை சாராத ஆண்மை ரொம்ப் ரொம்ப RARE!
தோழியின் கருத்து மிகவும் சரி! அதேப் போன்று நண்பர் Sury சொன்னவையும் சரியான தகவல்கள் தான்!
கட்டுரை அருமை! நன்றி!
எனது இந்தக் கட்டுரையை பிரசுரித்த கழுகாருக்கு என் அன்பும் நன்றியும்.
கட்டுரை அருமை! நன்றி!
article super!
உங்கள் கருத்துகளுக்கு என் நன்றி.
Post a Comment