கழுகு என்றால் கழுகுதானே என்றா நினைத்தாய் மானுடா....! அஷ்டமா சித்திகள் கற்று ரூபங்கள் மாற்றி அவதாரங்கள் எடுக்கத்தெரியாத ஐந்தறிவு பறவை என்று எண்ணி விட்டாயா? ஆறாம் அறிவில் ஆறவதின் பயன்பாடு தெரியாத உமக்கு.....! உயிரும் மெய்யும் உள்ளடக்கி.. மூச்சுக்காற்றில் உஷ்ணம் பரப்பி தமிழ்கற்று தன்மானமும் கற்று... மிடுக்காய் எம்மை சிம்மாவதாரம் எடுக்க வைக்கும் உமது பகீர முயற்சிக்குப் பின்னால் இருக்கும் அறியாமையை எண்ணி கழுகு உமக்காக பரிதாபப்படுகிறது.
உமக்கு எதற்கு சிம்மாவதாரம்.. கழுகின் சிறகின் ஒரு பிசிறிலிருந்து வரும் வெம்மையை தாங்க உமது சக்தி இடம் தருமா என்பது எமக்கு சந்தேகமே...!
கட்டுரை இடுவதும், பேட்டிகள் எடுப்பதும் சமுதாய நன்னோக்கில் எமது பிரிய தோழா! உமக்கு சினம் இருக்குமெனில் அதை தீர்க்க ஏராளமான மதில் சுவர்கள் இருக்குமே வசிக்கும் ஊரில் .... அதிபோய் முட்டிக் கொள்வதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை ஆனால் வேங்கைகளை சொறி நாய் என்று கணித்த உமது பார்வையிலும் அப்படி சொல்ல தூண்டிய எண்ணத்தையும் பார்த்துக் கோண்டு போக பலிங்கி விளையாடும் சிறார்களல்ல நாம்...!
ஜாக்கி சேகரின் பேட்டியை வெளியிட்டது சர்வதேச குற்றமா? எமது பதிவுலக தோழர்களே மனம் திறந்து சொல்லுங்கள்? ஒரு ஒப்பற்ற ஜன நாயக நாட்டில், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரைமுறையற்று பரவிக்கிடக்குமொரு தேசத்தில்.. ஜாக்கியின் பேட்டி எடுக்க ஊரில் இருக்கும் பைரவர்களிடம் நாங்கள் அனுமதி பெற வேண்டுமா?
உமது தலை அறித்தால் அதை வாரிக்கொள்ள சீப்பு வேண்டும் என்று அறியாத சிறுவனாய் கழுகு என்னும் கொள்ளிக்கட்டையை எடுத்து தேய்த்துக் கொண்டது உமது அறியாமை என்று சொல்லமாட்டோம் நண்பா.. ! இது நீ பிரபலமாக செய்த ஒரு துணிகர வேடிக்கை. உமது எழுத்திலே ஈர்ப்பு இருந்தால் உம்மை தேடி சொல்லாமல் கொள்ளாமலேயெ கூட்டம் வரும்.. ஏனிந்த தனிமனித தாக்குதல்...? அதன் மூலம் உம்மை பிரபலமாக்க இப்படி ஒரு கோழை முயற்சி.
சாந்தாமாய் ஒரு மின்னஞ்சல் அனுப்பி.. உம்மிடம் தயைகூர்ந்து விண்ணப்பம் வைத்தால் அது ஏளனாமா சகோதரா? பணிதல் அன்பு செலுத்துதல், தீய சொற்கள் பேசாதிருத்தல் தாண்டி....கடுமையான ரெளத்ரத்தையும் நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ள உண்மை உமக்கு தெரியாமலா இருக்கும். உன்னை எந்த வகையிலும் துன்புறுத்தாத மனிதர்களை....
" சொறி நாய் " என்று குறிப்பிட்டு கூறியிருக்கும் உமது வக்கிரத்தினை உலகம் அறியட்டும். எமக்கு எவரிடமும் இருந்து பெறும் எதையும் வைத்துக் கொள்ள எப்போதும் விருப்பமில்லை.. உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.
கழுகு விழிப்புணர்வு ஊட்டும் நோக்குடன் களத்தில் இருக்கிறது...உமக்கு சக்தி இருந்தால் .... மூளையின் செழுமையில் நம்பிக்கை இருந்தால்.... நீ கற்ற கல்வி உம்மை சரியாக வழி நடத்துகிறது என்றால்.....வானம் உமக்கு நிஜமாகவே ஒரு போதிமரமென்றால்....
"எல்லா மானுடர்க்கும் பயன் தரும் வகையில் ஒரு கட்டுரை எழுதி கழுகுக்கு கொடுங்கள்..." நாங்கள் பிரசுரிகிறோம்.....! நாங்கள் உலகின் முன்னனி இதழ்கள் என்று எப்போதும் சொல்லிக் கொள்ளவதும் இல்லை சொல்லிக் கொள்ள போவதும் இல்லை......ஆனால்....
" எல்லா முன்னனி பத்திரிக்கைகளுக்கும், தொலைக்கட்சிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், நடிகனுக்கும், ..........ஆரம்பம் என்ற ஒன்று இருக்கிறது...."
இது... எமது ஆரம்பம்......!
(கழுகு இன்னும் உயர பறகும்)