Sunday, October 10, 2010

யார் இவர்கள்...?என்ன செய்துவிடப்போகிறது...இந்த வாழ்க்கை? ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமுதாயத்தில் பணக்காரர்கள் தங்களுக்கு இருக்கும் பணத்தினை வைத்துக் கொண்டு மேலும் மேலும் தங்களின் வலிமையை அதிகரித்துக்கொள்ளப் போகிறார்கள். நடுத்தர மக்கள் பயந்து பயந்து சேர்த்து சேர்த்து சேமிப்பிலும் சமுதாய சட்டதிட்டங்களுக்கும் தம்மை போல இருக்கும் அக்கம்பக்கத்து உறவுகளுக்கும் பயந்து வாழ்க்கை நடத்தப் போகிறார்கள். கீழ்தட்டு மக்கள் அன்றாட வேலையும், கூலியும் அரியும் கஞ்சியும் என்று அடித்து பிடித்து ஒரு பணக்கார வாழ்க்கை வாழும் கனவுடன் இருக்கப் போகிறார்கள்.....இந்த மூன்றுமில்லாத நான்காவது தரத்தினை பற்றி யாருக்கு கவலை....


இந்த நான்காம் தரப்பு பெரும்பாலும் தெருவில் வசிக்கிறது. உடமைகள் தெருவோரம் குவிக்கப்பட்டு இருக்கிறது. இச்சையின் உச்சம் காமத்திலிருந்து சீறி குழந்தைகள் பெற்றுப்போட வைக்கிறது. அன்றாட வாழ்க்கை வாழ இவர்களின் வறுமையும், சிக்குப்பிடித்த தலையும், கந்தலான துணியும் உதவி செய்கிறது. இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை ஏனென்றால் ரேசன் கார்டு இல்லை, வீடு இல்லை ஆனாலும் இந்திய தேசத்தில் வாழும் ஒரு வேற்று கிரகவாசிகள்தான் இவர்கள்.


ஒவ்வொரு சிக்னலிலும், தெருவோரங்களிலும் வாழும் மானுடர்கள்தான் இவர்கள்! வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எமது எண்ணத்தில் ஏறிப்பாய்ந்து நசுக்குகிறது அதிகார வர்க்கத்தின் புல்டோசர்கள்.


பஸ்டாண்டிலும் குப்பை மேட்டிலும் வாழும் ஒளவை சொன்ன அரியதொரு படைப்பை பற்றி சிந்திக் கொண்டிருந்த வேளையில் நண்பர் பாலாசி நேற்று எழுதியிருந்த கவிதை செவுட்டில் அடித்தது...சொல்லாமல் ஒராயிரம் விளக்கத்தையும், உணர்வையும் கொடுத்த அந்த கவிதையை....
இன்னும் மிகைப்பட்ட பேர்களுக்கு கொண்டு செல்வதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.அதற்கான சுட்டி இதோ: http://balasee.blogspot.com/2010/10/blog-post.html

    கழுகு 

(கழுகு இன்னும ....உயர பறக்கும்)8 comments:

எஸ்.கே said...

உண்மையான உண்மை! அந்த கவிதையும் அருமையாக இருந்தது! மனதை உருக்கும் பதிவு!

Kousalya Raj said...

அந்த கவிதை மிக அருமை...அதை எங்க முன் கொண்டு வந்ததுக்கு நன்றி....

//வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் //

யோசனை நல்லா இருக்கு ஆனால் இது சாத்தியமா....??

கழுகு said...

@@@Kousalya
சாத்தியமா இல்லையா என்று தெரியாது ஆனால் இது எங்கள் எதிர்பார்ப்பு தோழி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்//

athellaam seyya maattaanga

பத்மஹரி said...

////வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் //

யோசனை நல்லா இருக்கு ஆனால் இது சாத்தியமா....?? //

ஏன் சாத்தியமில்லை....அரசாங்கம் (சில அதிகாரிகளேனும்!) மனது வைத்தால் கண்டிப்பாக இது 100% சாத்தியமே! உதாரணமாக, ஜப்பான் நாட்டு அரசாங்கம் வீடில்லாதாவர்களுக்கு (Homeless people)மாதம் ஒரு தொகையை (10,000 யென்/ரூ.5000) வழங்கி அவர்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.மேலும் சில தனியார் நிறுவனங்கள், வீடில்லாதவர்களை தினசரி வேலைக்கு எடுத்துக்கொண்டு தினக்கூலி கொடுக்கிறது! ஆக,(தமிழக)இந்திய அரசாங்கத்தால் பண உதவி செய்யமுடியாவிட்டால்கூட, அவர்களுக்கு அரசாங்கம் அல்லது தனியார் மூலமாக வேலைவாய்ப்பை வழங்கி, வீடில்லாதவர்களின் வாழ்க்கையில் விளக்கையாவது ஏற்றிவைக்க வேண்டும்.

நல்லதொரு யோசனையை முன்வைத்த கழுகுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com

Kousalya Raj said...

பத்மஹரி சொன்னது…

//ஏன் சாத்தியமில்லை...??//

நான் கேள்வி எழுப்பியதே இதற்கான தீர்வை பலரும் சொல்லவேண்டும் அல்லது யோசிக்கவாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

உங்களின் வருகைக்கும் , கருத்திற்கும் மகிழ்வுடன்
நன்றி கூறி கொள்கிறேன்...

நிச்சயம் நம் அரசாங்கம் மனது வைத்தால் நல்லவை அனைத்தும் சாத்தியம் தான். அதற்கான வழி முறைகளை ஒழுங்கு படுத்த முயல வேண்டும். பிற நாட்டின் முன்னேற்றங்களை விழி விரிய பார்த்து கொண்டு மட்டும் இருக்காமல் அதை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றி அமைத்து நாட்டை வள படுத்தலாம் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்தித்து செயல் பட்டால் வறுமை, ஏழ்மை என்பது பழங்கதையாகிவிடும்.

கழுகிற்கு என் நன்றியும் பாராட்டுகளும்....!

Jay said...

/*வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எமது எண்ணத்தில் ஏறிப்பாய்ந்து நசுக்குகிறது அதிகார வர்க்கத்தின் புல்டோசர்கள்.*/

இன்றைய உலகத்தில் அடையாளம் கண்டு பின் வேலை வழங்குவதெல்லாம் சாத்தியமில்லை.

நான்காம் தர மக்கள் நல்ல கல்வியை பெற வேண்டும். அப்பொழுதான் அவர்கள் முன்னேறலாமே தவிர, தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தர முடியாது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வீட்டுக்கு ஒரு கலர் பெட்டி கொடுத்த அரசாங்கம் இவர்களை அடையாளம் கண்டு வேலை வாய்ப்பு வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எமது எண்ணத்தில் ஏறிப்பாய்ந்து நசுக்குகிறது அதிகார வர்க்கத்தின் புல்டோசர்கள்.///

வேலை செய்து பிழைப்பதற்கு பெரும்பாலான பிச்சைக்காரர்கள் தயாராக இல்லை என்பது தான் இன்றைய நிலை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் கூலி வேலை, கட்டிடவேலைகளுக்கு ஆள் கிடைப்பது மிகக் கடினமாகி விட்டது. தமிழகத்தின் பெருநகரங்களில், கட்டிடப் பணிபுரியும் தொழிலாளர்களைப் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலானோர், பீகார், ஒரிஸ்ஸாவில் இருந்து வந்தவர்கள்! ஏனென்றால் தமிழகத்தில் இருந்து கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. ஆனால் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையோ குறைந்தபாடில்லை. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மாற்றுத் திறனாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் நிலை வேறு. மற்ற பிச்சைக்கார்களிடம் அரசு கண்டிப்பு காட்ட வேண்டும், அப்போதுதான் கொஞ்சமாவது நிலை மாறும். உழைக்க முடிந்தவர்கள் உழைக்கத்தான் வேண்டும், எளிதில் பணம் கிடைக்கும் என்பதற்காக பிச்சை எடுத்தல்ல!
நன்றி!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes