Monday, February 27, 2012

சினிமாத்தனமான போலிஸும் என்கவுண்டர் கொலைகளும்...! ஒரு அலசல்!
மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்கும் ஒரு சுற்றுப் புற சூழலில் தமிழத்தின் மிக முக்கிய பிரச்சினையாக சட்டென்ற மழைக்காளான்கள் போல ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கி இருந்த துணிகர கொள்ளைச் செயல்கள் தமிழக மக்களை திடுக்கிடத்தான் செய்தன. விலைவாசி ஏற்றம், மற்றும் கடுமையான மின்வெட்டு , இன்னபிற பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வாழும் சூழலும் மக்களைத் தொற்றிக் கொள்ள ஒரு அசாதரண நிலைக்கு சட்டென்று தமிழகம் தள்ளப்பட்டது.

இப்படியான ஒரு சூழலில் அரங்கேறியதுதான் வேளச் சேரியில் நடந்த என்கவுண்டர் என்று காவல்துறையால் வர்ணிக்கப்படும் 5 கொலைகள். பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் இருப்பிடத்தை காவல் துறை புலனறிந்து, நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் தங்கிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்து அவர்களைச் சரணடையச் சொல்லியதாகவும், கொள்ளையர்கள் சரணடைய மறுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவல்துறையினர் மீது குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்டதாகவும், தங்களின் தற்காப்பிற்காகவும், சுற்றி இருந்த மக்களின் பாதுகாப்பிற்காகவும்..........கொள்ளையர்களை சுட்டுக் கொன்றோம் என்று காவல்துறை கூறுகிறது.

 எந்த ஒரு என்கவுண்டரையும் காவல்துறை நியாயப்படுத்த கூறும் அதே வார்த்தைகள் இந்த கொலைகளுக்கும் பயன்பட்டிருப்பதோடு கூடுதலாய் மக்களை பாதுகாக்கவும் சுட்டோம் என்று அலங்காரமும் செய்யபட்டிருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் காவல்துறையினர் மிகப்பெரிய கதாநாயகர்கள் போலவும், அவர்கள் உயிரினைத் துச்சமாக நினைத்து கொள்ளையர்களைக் கொன்றது போலவும் ஒரு போலித்தோற்றம் இருப்பினும்...

 என்கவுண்டர் கொலைகள் சுத்த வன்முறை என்பதையும் அது மனித உரிமை மீறல் மற்றும் காவல்துறை தனது கையில் வைத்திருக்கும் துப்பாக்கியின் தோட்டக்களை வெடிக்கச் செய்தது மூலம் சட்டத்தை  கையிலெடுத்துக் கொண்டது என்பதைவிட காவல்துறையின் திட்டமிடும்திறன்., வியூகம் அமைத்து செயல்படும் திறன் எந்த அளவு மழுங்கிப்போயிருக்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 கையில் இயந்திரத் துப்பாக்கியோடு கொலை வெறித்தாக்குதலை எதிர்பாரத நேரத்தில் மும்பை ரயில் நிலையத்தில் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் திருப்பிச் சுட்டதும், கொன்றதும் தேவையின் அடிப்படையில் என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அப்படியான சூழலில் கூட இயன்றவரை போராடி அஜ்மல் கசாப்பினை உயிரோடு பிடித்து இன்று வரை எந்த சிறையில் வைத்து பாலூட்டி சீராட்டி வருகிறோம். கண்ணெதிரே பலபேரைக் கொன்றதை பல பேர் கண்ட சாட்சிகளாகவும், காணொளிக் காட்சிகளின் சாட்சிகளாகவும் இருந்தும்....
    
சட்டம் இன்னும் விசாரித்துக் கொண்டிருப்பதும் இதே தேசத்தில்தான் நிகழ்ந்தேறி இருக்கிறது என்பதை அறிக எம் மக்களே...!

 கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டினை சுற்றி இருக்கும் மக்கள் ஊடகங்களில் தொடர்ச்சியாக தெரிவிக்கும் எதார்த்தமான விவரணைகள் காவல்துறையின் ஜோடனை விவரணைகளோடு ஒத்துப் போகாமல் இருக்கும் இடத்தில் மெல்ல தலை நீட்டி தன் கோரப்பற்களை காட்டிச் சிரிக்கிறது இந்த திட்ட மிட்ட கொலைகளின் கோரவடிவம்.

 சுமார் இரவு பத்தரை மணிக்கே அந்த பகுதிக்கு வந்து விட்டிருந்த காவலர்கள், வெகு சுலபமாக அந்த தெருவில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி அந்த பகுதிக்கே முத்திரை வைத்து மிக பாதுகாப்பாக கொள்ளையர்களை மிரட்டியோ, அல்லது, காத்திருந்து கை கால்களில் சுட்டோ பிடித்திருக்க முடியும். கொள்ளையர்கள் அந்த வீட்டின் சிறிய ஜன்னலின் வழியே சுட்டு காவல்துறையினரைக் காயப்படுத்தி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சொல்வது சிரிப்பைத்தான் வரவேற்கிறது.

 ஒரு இரவு முழுதும் சாதாரண உடையில் அந்த வீட்டினைச் சுற்றி காவல்துறையினர் விழித்திருந்து மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு காலையில் அவர்கள் வெளியே வரும் போது கோழியைப் பிடிப்பது போல பிடித்து அமுக்கி இருக்க முடியும். ஏனெனில் கொள்ளையர்களுக்கு காவல்துறையினர் தங்களை நெருங்கி விட்டனர் என்று தெரியாதுதானே....

 கொடும் காட்டு விலங்குகளை எல்லாம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் மிருக நேயம் கொண்டவர்களும் வாழும் இந்த பூமியில் மனிதர்களைக் கொன்றுதான் பிடிக்க முடியும் என்பது பல முறைகளில், முயன்று வேறு வழியில்லாமல்  எடுத்த கடைசி ஆயுதமாய் இருந்திருக்க வேண்டும்,  ஆனால் வேளச்சேரியில் காவல்துறை எடுத்த முதல் ஆயுதமே....கடைசி ஆயுதமாய் இருப்பதால் தான் இது மனித உரிமை மீறல் மற்றும் திட்டமிட்டு நியாயம் என்னும் வேடமிட்ட கொலை என்று நாம் கூறுகிறோம்.
  
தொடர்ச்சியான கொள்ளைகளை தடுத்து நிறுத்த கொள்ளையர்களைச் சுட்டாவது பிடித்து விடுங்கள் அது மற்ற கொள்ளையர்களுக்கு ஒரு பாடமாய் இருக்கவும் வேண்டும் மற்றும் மக்களுக்கும் காவல்துறையினர் மீது மரியாதையும் வருவதோடு, இது போன்ற துணிர கொள்ளைகளை இந்த அரசு எப்படி எதிர்கொள்ளும் என்னும் அச்சுறுத்துலை அரங்கேற்றும் விதமாக  இருக்க வேண்டும் என்று சினிமானத்தனமாய் திட்டமிட்ட மூளையின் செயல்பாட்டு விளைவே இந்த என்கவுண்டர் என்னும் கொலைகள்...

இதன் பின்னணியில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பை காவல்துறை தன் கையாலேயே அழித்துவிட்டது...வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கேட்க ஆளில்லை என்ற நினைப்பில் செய்தது போலத்தான் தெரிகிறது. சம்பந்தபட்ட மாநிலமும் எந்த அக்கறையும் கொண்டதாக தெரியவில்லை.  உள் நாட்டிலேயே இப்படி என்றால் வெளிநாட்டில் அந்நாட்டு போலீஸ் நம்மவர்களைக் கொன்றால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பது? நல்லவேளை அப்படி நடப்பதில்லை...

சட்டத்தை யாதொரு தனி மனிதனும் கையில் எடுக்ககூடாது என்பதற்காகவே இந்திய தேசத்தின் சட்ட வடிவமைப்புக்களில் விசாரணைகள், சாட்சிகள் என்ற் இழுத்தடித்து கால அவகாசங்கள் கொடுத்து நீதியை வழங்கும் ஒரு இயல்பான அமைப்பு கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வேளச்சேரி என்கவுண்டர் மக்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைத்தான் கொடுத்திருக்கிறது என்பதை அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

காவல்துறையினர் நினைத்தால் என்கவுண்டர் என்னும் அடையாளத்தோடு யாரை வேண்டுமானலும் சுட்டு விட்டு அந்த சூழலை விவரிக்க எப்படியான கதைகளை வேண்டுமானலும் கட்டலாம் என்ற அசாதரணப் போக்கிற்கு இது போன்ற் சம்பவங்கள் ஒரு முன்னுதரணமாய் அமைந்து விடக் கூடாது.

 அரசியல் விளையாட்டுக்களை நிறைவேற்றிக் கொள்ள ஓராயிரம் வழிமுறைகள் இருக்கும் போது இது போன்ற மனித உயிர்களோடு விளையாடும் அதிகார துஷ்பிரயோக ஸ்டண்ட்களை ஒருகாலமும் மக்கள் ஏற்கப்போவது கிடையாது.

 பரமக்குடியில் நடந்த அரச வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இன்னும் பதில்  தெரியாமல் கையைக் கட்டிக் கொண்டு பயந்து கிடக்கும் மக்களுக்கு இந்த வேளச்சேரி என்கவுண்டர் இன்னும் பயத்தை அதிகரித்திருக்கிறது. ஆட்சிப் பொறுபேற்று இன்னும் இரண்டு வருடங்களைக் கடந்திராத அதிமுக அரசின் நிர்வாகச் சறுக்கல்களில்
    
பரமக்குடி துப்பாக்கிச் சூடும்....
 வேளச்சேரி என்கவுண்டர் கொலைகளும்

 சர்வ நிச்சயமாய் நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, தவிர்க்க முடியதா சூழலில்தான் காவல்துறையால் அவை நடத்தப்பட்டது என்ற நேர்மையான விளக்கத்தை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது.
 
காவல்துறையினர் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் உயிர் இருக்கிறதுதானே அவர்களும் மனிதர்கள்தானே என்பன போன்ற வாதங்கள் மேலோட்டமாய் வாதிட அழகானவை, ஆனால் கொள்ளையர்களும், வன்முறையாளர்களும், மக்களை காக்க உறுதி பூண்டவர்கள் அல்ல...! காவல்துறையினர் இயன்றவரை மக்களை காத்து, குற்றவாளிகளைக் சட்டத்தின் முன் பிடித்து நிறுத்தி சட்டத்தின் மூலம் தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டிய ஒரு நெறிமுறையைக் கொண்டவரக்ள். 

நேர்மையாய் இந்த வழக்கினை விசாரித்து, இந்த ஐந்து கொள்ளையர்களையும் சுட்டுக் கொன்றுதான் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை தெளிவாக மக்களுக்கு  அரசு விளக்க வேண்டும்.
 
இல்லையெனில்.....
 
காவல்துறையினரை வைத்துக் கொண்டு அதிகாரவர்க்கம் எப்போது வேண்டுமானலும் யாரை வேண்டுமானலும் கொன்று விட்டு அதற்கு என்கவுண்டர் சாயமடித்து நியாயப்படுத்தும் ஒரு புதுவழிமுறைக்கு இந்த சம்பவம் நமது சமூகத்தை கூட்டிச் சென்று விடும் என்ற நடுக்கமான உண்மையை அறிவிப்பதோடு இந்தக்கட்டுரை தற்காலிகமாக் வாய்மூடிக் கொள்கிறது.


கழுகு 

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)66 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

//அந்த வீட்டின் சிறிய ஜன்னலின் வழியே சுட்டு காவல்துறையினரைக் காயப்படுத்தி இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சொல்வது சிரிப்பைத்தான் வரவேற்கிறது.//

ஜென்னல் வழியாக சுட முடியாதா?? அல்லது அந்த ஜென்னலின் அமைப்பு அப்படியா?

இம்சைஅரசன் பாபு.. said...

பாஸ் நேற்று மனித உரிமை ல இருந்து ஒரு பத்து பேர் போய் விசாரிக்க போன இடத்துல ..அந்த பகுதி மக்களாலே அடித்து விரட்ட பட்டனர் ..அப்பகுதி மக்களுக்கு உமை தெரிந்து இருக்கும் போல .இது இன்று தொல்லை காட்சியிலும் நாளிதழ்களிலும் வந்திருக்கு ..கொள்ளை காரன் தானே போனான் ..எதோ அண்ணா ஹசரேவ சுட்ட மாதிரி சொல்லுறீங்க ..பிக்காளி பய இன்னைக்கு துப்பாக்கி காட்டி மிரடினவன் ..நாளைக்கு இன்னொரு பேங்க் ல போய் நாலு பெற சுட்டா ..இதே தளத்துல போலிஸ் தூங்குகிறதா ன்னு ஒரு போஸ்ட் போட வசதியா இருந்திருக்கும்

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

// பார்த்தால் காவல்துறையினர் மிகப்பெரிய கதாநாயகர்கள் போலவும், அவர்கள் உயிரினைத் துச்சமாக நினைத்து கொள்ளையர்களைக் கொன்றது போலவும் ஒரு போலித்தோற்றம் இருப்பினும்... //

ஆமா ...ஆமா ..இதே ரெண்டு போலிஸ் ..ரெண்டு பொது மக்கள் செத்து இருந்தா இதே கழுகு தளத்துல .. போலிசுக்கு என்ன ^%^$^ துப்பாக்கி கொடுத்து இருக்காங்க ன்னு எழுதவும் செய்வீங்க .

இம்சைஅரசன் பாபு.. said...

@டெரர்
டேய் டெரர் மைனஸ் ஒட்டு போட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு ..ஒன்னே ஒன்னு நான் போட்டுகிடுறேன் ...என்னை யாரும் பின் தொடர வேண்டாம்

நிகழ்காலத்தில்... said...

பாபு., கொல்லப்பட்டவர்கள் திருடர்களே என தகவல்கள் வருகின்றன. திருடர்களுக்காக இந்த கட்டுரை பரிந்து பேசவில்லை.,

இவ்வளவு அவசரம் ஏன் என்பதே கேள்வி., டிஸ்கவரி சேனலில் இரண்டுநாளைக்கு முன் ஒரு நிகழ்ச்சி பின்பாதிதான் பார்த்தேன்.

ஜெயிலுக்கு பார்வையாளராகவோ அல்லது ஆராய்ச்சி அல்லது பணிக்கு போனவர்கள் போல் இருக்கிறது. ஐந்தாறுபேர் இருக்கும். கைதிகளே இவர்களை பிடித்துவைத்துக்கொண்டு சில கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

காவல்துறை 10 நாள் பேச்சு வார்த்தை நடத்திப்பார்த்தது. வயர்லஸில்....முடியல 10 வது நாள் இரவு 3 மணி அளவில் சிறைக்கதவை வெடிவைத்து பிளந்து சரியாக 90 விநாடிகளில் பயணக்கைதிகளை மீட்டனர். இதில் ஒரு துப்பாக்கி குண்டுகூட வீணாகவில்லை.,

கைதிகள்தானே மிரட்டியது என ஒரு கைதியைக் கூட காயப்படுத்தவில்லை. இதை காவல்துறையின் திறமைக்கு சான்றாக பார்க்கிறேன். மனிதத்தன்மை என்பதெல்லாம் அப்பறம் :))

நமது போலீஸ் குற்றவாளிகளை உயிரோடு பிடிக்கும் அல்லது 5வரில் ஒருவரையாவது உயிரோடு பிடித்திருக்கலாம் அல்லவா., அப்படி இல்லை என்கிற போது மனதில் எழும் பலகோணங்களும் கட்டுரையாளரால் இங்கு தரப்பட்டு இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

நன்றி

நிகழ்காலத்தில்... said...

என்கவுண்டர் சரி என்று சொல்லும் ஒரு அனுபவவாதியின் கட்டுரை இதோ அனைவருக்காகவும்....

http://anindianviews.blogspot.in/2012/02/blog-post_27.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்கவுண்டர் சரியா தவறா, அவர்கள் திருடர்கள்தானா இல்லையா என்பதற்குள் நான் போகவில்லை,

ஆனால் துப்பாக்கிகள் வைத்து சுட தயாராக இருக்கும் எதிரியை எப்படி பிடிப்பது?

1. அவர்கள் துப்பாக்கியைக் கீழே போடவேண்டும்,

2. அல்லது செயலற்று போக வேண்டும்

இவை எப்படி சாத்தியம்? கையிலோ காலிலோ சுடப்பட்டால் அவர்கள் திருப்பி சுடாமல் இருப்பார்களா?
கடைசி எதிரி செல்பாட்டுடன் இருக்கும் வரையில் எதிரியை நெருங்க வாய்ப்பில்லை அல்லவா?

மயக்க மருந்து என்பதும் அவ்வளவு எளிதல்ல. தவிர அது இதுவரை இங்கே செயல்முறையிலும் கொண்டு வரப்படவில்லை. எனவே ஓரிரவுக்குள் அதை பயன்படுத்த முயற்சிப்பதும் சாத்தியமல்ல.

marimuthu said...

முடிந்தால் இன்னும் பத்து பக்கம் கூட மனிதநேயத்தைப்பற்றி விலாவாரியாக எழுதலாம்..நீங்கள் அந்த கொள்ளையர்களை சுட்டது சரிஇல்லை என்கிறீர்களா..?அப்படியே நீங்கள் சொல்வது போல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் போது கொள்ளையர்கள் திருப்பி தாக்கும்பட்சத்தில் காவல் துறையினருக்கோ பொதுமக்களுக்கோ உயிர்சேதம் ஏற்ப்பட்டிருக்குமாயின் அதன் பொறுப்பு காவல்துறைக்கே பொய் சேரும் அல்லவா..அப்பொழுது என்ன கூறி இருப்பீர்கள்..?

வெங்கட் said...

மாற்றுக்கருத்து சொல்ல வேண்டும் என்
முன்னுக்கு பின் முரணான பல கருத்துக்களை
கொண்டு ஸ்டண்டுக்காக எழுதப்பட்ட கட்டுரை..!

// அஜ்மல் கசாப்பினை உயிரோடு பிடித்து
இன்று வரை எந்த சிறையில் வைத்து
பாலூட்டி சீராட்டி வருகிறோம். //

இதுவும் தப்புன்னு சொல்றீங்க..
என்கவுண்டர் பண்ணினா அது தப்புன்னு
பதிவு போடறீங்க.. என்னதான் பண்ணும்
போலீஸ் பாவம்..!

// என்கவுண்டர் கொலைகள் சுத்த வன்முறை
என்பதையும் அது மனித உரிமை மீறல் //

பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளன. இந்த குழுவைச் சேர்ந்தோர் மார்க்ஸ் தலைமையில், நேற்று வேளச்சேரியில் என்கவுண்டர் நடந்த வீட்டைப் பார்க்க வந்தனர். ஆனால் அவர்களைப் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்தனர் மனித உரிமை அமைப்பினர்.

ஆனால் மக்களிடமிருந்து வந்த கேள்விகளை மனித உரிமைக் குழுவினர் எதிர்பார்க்கவில்லை. விசாரணைக்கு வந்த மனித உரிமைக் குழுவினரை நோக்கி, கொள்ளையர்கள் வங்கியில் அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்த போது மனித உரிமை மீறப்படவில்லையா? கொள்ளையர்கள் தான் மனிதர்களா? இத்தாலி கப்பலில் வந்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் மனிதர்கள் இல்லையா? தமிழக மீனவர்களை தினமும் இலங்கை சுட்டு கொல்கிறதே? அதை தட்டி கேட்கமனித உரிமைகள் அமைப்பு முன்வரவில்லை? வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை தாக்கும்போது மவுனமாக இருந்துவிட்டு கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது மட்டும் மனித உரிமைகள் வருவதா?

நாங்கள் உயிருக்கு பயந்து இருந்தோம். போலீசார் கொள்ளையர்களை சுடாமல் இருந்தால் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள்? அப்போது மனித உரிமைகள் அமைப்பு என்ன செய்யும்? என்று கேட்டு அனைவரும் வெளியேற வேண்டும் என்று கூறினர். அத்தோடு நில்லாமல் தெரு முனை வரை அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் குறுக்கிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் பாதிக்கப்படும் போது மனித உரிமைகள் அமைப்பு வருவதில்லை. இவர்களை விரட்டிவிட்டதால் எங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கவலைப்படமாட்டோம். கொள்ளையர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை நியாயமானது. நாங்கள் போலீசாருக்கு ஆதரவாக செயல்படுவோம். 5 பேர் மட்டுமின்றி பெண்களிடம் வழிப்பறி செய்பவர்கள் மீதும் என்கவுன்டர் நடத்த வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

http://tamil.oneindia.in/news/2012/02/27/tamilnadu-people-oppose-human-rights-team-inquiry-on-encounter-aid0091.html

வெங்கட் said...

// காலையில் அவர்கள் வெளியே வரும்
போது கோழியைப் பிடிப்பது போல பிடித்து
அமுக்கி இருக்க முடியும். //

பேங்க்ல கொள்ளை அடிக்கலாம்..
Workout ஆச்சுன்னா.. கோடி கோடியா
கிடைக்கும்..

மாட்னா.. ஜெயில்ல தானே போடுவாங்க..

இப்படி ஒரு எண்ணம் பல பேருக்கு
வந்து.. இது மாதிரி பல கொள்ளைகள்
நடக்க காரணமா அமைஞ்சிடும்..

வைகை said...

////////சுமார் இரவு பத்தரை மணிக்கே அந்த பகுதிக்கு வந்து விட்டிருந்த காவலர்கள், வெகு சுலபமாக அந்த தெருவில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி அந்த பகுதிக்கே முத்திரை வைத்து மிக பாதுகாப்பாக கொள்ளையர்களை மிரட்டியோ, அல்லது, காத்திருந்து கை கால்களில் சுட்டோ பிடித்திருக்க முடியும்////////////

//////// ஒரு இரவு முழுதும் சாதாரண உடையில் அந்த வீட்டினைச் சுற்றி காவல்துறையினர் விழித்திருந்து மக்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு காலையில் அவர்கள் வெளியே வரும் போது கோழியைப் பிடிப்பது போல பிடித்து அமுக்கி இருக்க முடியும்.//////////////////////

கட்டுரை ஆசிரியரின் இந்த யோசனைகளை எல்லாம் போலிஸ் ஹெட் குவாட்ரஸ்ல கல்வெட்டுல பொறிச்சு வைக்கணும்... :-)) வருங்காலத்துல இதெல்லாம் அவங்க பாடத்துல படிப்பாங்க.... அப்பிடியே ஆசிரியரின் மெயில் ஐடியும் கொடுத்துவைங்க.. ஏதாவது சந்தேகம்னா மெயில் பண்ணி கேக்க வசதியா இருக்கும் :-))))

Unknown said...

குற்றவாளிகள் எத்தகையவர்களோ என்கவுன்டர் என்பது அதீத பாரிய நாட்டுக்குக்கும் மக்களுக்கும் கேடு விளைவிப்பவர்களை கைது செய்ய முடியாது போகும் பட்சத்தில் இடம் பெறுவது (மகிந்தவை என்கவுண்டர் பண்ணினா அது நிச்சயம் என்கவுண்டர்தாங்க)

Unknown said...

எல்லாரும் ஒரு விஷயத்தை வசதியா மறந்துட்டு பேசுறீங்க..
அது என்னன்னா .. என்கவுண்டர் அப்படின்னா .. நேருக்கு நேர் சந்தித்தால் தான் பொருள்.

அதாவது யாரவது ஆயுதத்துடன், தாக்கும் நோக்கத்துடன் இருக்கும்போது / தாக்கும்போது
நேருக்கு நேர் எதிர்கொண்டு தாக்குதல் நடத்துதல்.

உண்மையை சொல்லுங்க .. இப்ப அப்படியா நடக்குது...?

சம்பந்தபட்டவங்க எல்லாரும் சரணடஞ்சுட்டாங்க ...
அப்புறம் மேலிட உத்தரவு படி சுட்டு கொல்லபட்டு இருக்காங்க..
சட்டப்படி இப்படி கொலை பண்ண முடியாது . அதனால
இதுக்கு கதை பின்னல் வேற.. ஜன்னல் வழியா சுட்டங்களம் வெட்டினங்கலம்..

போலீஸ் நடந்து சட்டப்படி தான.. இதுதான் மேட்டர்.

இதில் இன்னொரு விஷயம் இருக்கு.
என்னன்னா .. போலீஸ் தப்பு பண்ணி இருந்தாலும் அதை தெரிவிக்கும் சாட்சி
கொல்லபவர்கள் தான் இப்போ போலீஸ் என்ன பண்ணினங்கனு தெரிஞ்சுக்கவே முடியாம போயிடுது.
இது தான் போலீஸ் எதிர் பார்த்தது.

உண்மையாகவே திருட்டு கொலைன்னு எந்த தப்பும் சமுதாயத்தில் நடக்க கூடதுனு போலீஸ் வேலை செய்யுரங்கலன்னு உங்கக்க்குகே தெரியும். திருடன் யாருக்கும் கட்டுபட்டவன் இல்லை. போலீஸ் சமுதயத்க்கு மக்கள்கு பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கு.

ஒரே ஒரு நிமிஷம் யோசிங்க.. இறந்த பேரில் எல்லாரும் திருடன் தான்னு யார்ரும் உறுதியா சொல்ல முடியுமா?
பக்கத்துக்கு வீட்டில், இருப்பவர்களுக்கே அவர்கள் யார்ர்னு தெரியாது. நண்பர் இல்ல உறவினர்னு யாராவது அன்றைக்கு அந்த அறையில் தங்கி இருந்தால் அவர்களும் திருடர்னு கொல்லப்பட்டு இருப்பர்கள இல்லயலய..?

திருட்டு , கொலை கொள்ளை எல்லாவற்றிகும் தண்டனை கொடுக்கவேண்டும் தான்.
ஆனால் தீர விசாரித்து கொடுக்க வேண்டும்...

போலீஸ் என்கவுண்டர்னு பண்ணும் கொலையை ஆதரிக்கும் பதிவர்கள் எல்லாம்.. ஒரு கேள்வி..
திருடன்ன்னு சந்தேகப்பட்டவுடன் கொள்ளபடவேண்டுன்னா ...
குற்றம் நிருபணம் ஆகி.. சிறையில் இருக்கும் கைதிகளுக்கு
அரசு சிக்கன் விருந்து கொடுகிறதே அதை ஏற்று கொள்கிறீர்களா ?
தண்டனை காலம் முடியும் முன்னரே ஏதாவது காரணம் சொல்லி விடுதலை செய்கிறார்களே அதை ஏற்று கொள்கிறீர்களா ?

மதுரை லீலாவதி கொலையில் சம்பந்தபட்டவன்க்க கட்சிகாறாக்கள் என்பதால் .. எலக்சன் வேலை செய்ய அவர்கள் வேண்டும் என்பதால்
7 வருஷம் உள்ள இருந்தா விடுதலை செய்யவேண்டும்னு செய்தார்களே .. அதை ?
நிங்கள் நினைப்பது போல் இல்லை .. போலிசும் அரசும் , அரசு மக்களுக்காக இல்லை..
மக்கள் பெயரளவில் தேவைப்படும்போது பயன்படுத்த மட்டும் தான்.

TERROR-PANDIYAN(VAS) said...

@Vinoth Kumar

//சம்பந்தபட்டவங்க எல்லாரும் சரணடஞ்சுட்டாங்க ...
அப்புறம் மேலிட உத்தரவு படி சுட்டு கொல்லபட்டு இருக்காங்க..//

அப்படியா? சுட சொல்லி உத்தரவு கொடுத்தது யாரு? இல்லை இது உங்கள் யுகமா?

இம்சைஅரசன் பாபு.. said...

@vinoth kumar
நீங்க அடுத்து எந்த பேங்க்ல கொள்ளை அடிக்க போறீங்க ....
திருடுரவங்க தாங்க பயப்படனும் என்கௌண்டர் பற்றி .. அடுத்தவன் உழைப்பை திருடி தின்கிரவங்க &*(&(*& இப்படி தான் சுட்டு கொல்லனும் .

Unknown said...

TERROR-PANDIYAN(VAS)

இம்சைஅரசன் பாபு..

refer
http://savukku.net/home1/1475-------5----.html

போலீஸ், அரசு நிங்க நினைப்பது போல இல்லை.
பாபு ..நான் கொள்ளை அடிக்கவோ இல்லை கொள்ளை அடிப்பவரை பாதுகாகவோ சொல்லவில்லை.
அதை ஏற்கனவே போலீஸ் செய்யுறாங்க .. நிங்க தன பர்கமட்டேன்கிறீங்க
போலீஸ்நா விஜயகாந்து படம்னு நெனைக்கறீங்க ..
இன்னம் வளரனும் தம்பி..

அடுத்தவன் உழைப்பை திருடுறவன தண்டிக்கணும் தான் அதில் கருத்து வேறுபாடு இல்லை..
பாபு அதே பாங்க்குக்கு நிங்களும் சும்மாபோய் பார்த்து வந்து இருந்தகூட .உங்களையும் சந்தேக பட முடியும்..
உங்கள நிக்க வச்சு விசாரிக்காம சுட்ட ..சரிதானா...
இங்க குற்றம் நிருபணம் ஆகல .. வெறும் சந்தேகம் தான்... விசாரிச்சு தண்டனை கொடுங்கன்னு தான் ஸொல்ல்ருஎந்..

அப்ப ஊழல் நடந்து நிருபணம் ஆகி தான அம்மா உள்ள போனாங்க .. அங்க பண்ணவேண்டியது தானே என்கவுன்டர..
ஊழல் நடந்து நிருபணம் ஆகி தான ராசா உள்ள இருக்கார் லைசன்சு ரத்து ஆகி இருக்கு...கனி உள்ள போனாங்க
அங்க பண்ண வேண்டியது தான என்கவுன்டர ?

இதே போலீஸ் தான் அவங்களுக்கு காவல் இருக்காங்க அதனை கவனீங்க..

ஏன்னு யோசிங்க ...

TERROR-PANDIYAN(VAS) said...

@vinoth Kumar

//refer
http://savukku.net/home1/1475-------5----.html//

REFER :

http://tamil.oneindia.in/news/2012/02/27/tamilnadu-vinodh-kumar-an-accused-many-crimes-twin-murder-aid0091.html

http://tamil.oneindia.in/news/2012/02/26/tamilnadu-robbery-gang-leader-was-the-hit-list-aid0091.html

http://tamil.oneindia.in/news/2012/02/28/tamilnadu-one-more-robber-identified-aid0091.html

லிங்க் எவ்வளவு வேணும்னா கொடுக்கலாம் வினோத். நீங்க கொடுத்த லிங்க்ல இருப்பது மட்டும் உண்மைன்னு என்னா நிச்சையம்? இவங்கள ஏன் சுடவில்லை அவங்களை ஏன் சுடவில்லை கேக்காதிங்க. ஊழல் பண்றவனையும் சுட்டு தள்ளுங்க யார் வேண்டாம் சொன்னா? இதில் எல்லாம் மனித உரிமைன்னு காமடி பண்ண கூடது.

இம்சைஅரசன் பாபு.. said...

கொள்ளையர்கள் & கொலைகாரர்கள் என்ன இந்த நாட்டின் தியாகிகளா....இவர்கள் நோகாமல் அடுத்தவர்களின் உழைப்பை பிடுங்கி சாப்பிட்டு விட்டு ஜாலியாக இருப்பார்கள். ஆனால் நாம் நம் குடும்பத்தை விட்டுவிட்டு இவர்களுக்காக உழைத்துக் கொட்டவேண்டும் இல்லையா ?... என்ன நியாயம் இது....கண் பார்வை இல்லாதவர்கள், கை,கால் இல்லாதவர்கள் கூட திருட்டு தொழில் செய்வதில்லை...அவர்களால் முயன்ற வரை வேலை செய்து தினமும் வாழ்கை நடத்துகின்றனர். அவர்களுக்கு இருக்கும் அறிவு, நேர்மையாக உழைக்கும் எண்ணம் இவர்களுக்கு ஏன் இல்லை...கொள்ளைக்காரர்கள் மட்டும் தான் மனிதர்களா........ஏன் இவர்களும் இல்லையா.........இதே ஒரு கொள்ளை சம்பவம் உங்கள் வீட்டில் நடந்து இருந்தால்....சாதரணமாக இருந்துவிடுவிர்களா ????......ஏதோ உழைக்க தெரியாத, அடுத்தவர்களிடம் திருடி திங்கும் பன்னாடைகளுக்கு ஆதரித்து ஏன் இந்த பதிவு ?

Unknown said...

தவறு செய்பவர் தண்டிக்க பட வேண்டும் சரி தான் இதில் கருத்து வேறு படு இல்லை.
மனித உரிமை பற்றி நான் பேசலை. தவறு செய்பவர் மனிதர்ன .. பாதிக்க பட்டவரும் மனிதர் தான்.

ஆனா ஒருத்தர் செய்யும் தவறுக்கு விசாரனையே இல்லாமல் தண்டனை..
இன்னொருதர்க்கு சிக்கன் பிரியாணி..
இன்னொருத்தருக்கு போலீஸ் பாதுகாபுன்னு வச்ச சரியா இது தன நான் கேட்பது
ஒரு வேளை விசாரணையில் கொல்லபட்டவர் மேல் தவறு இல்லைன்னு நிருபணம் ஆகின ..
அவர் உயிரை வாழ்க்கைய யாரும் திருப்பி தர முடியுமா ?

தீர விசாரித்து தண்டனை கொடுங்க .. அதுவும் தப்பு செய்த எல்லாருக்கும் கொடுங்க ..

பத்து லட்சம் கொள்ளையடிச்ச என்கவுண்டர் ... ஆயிரம் கோடி கொள்ளையடிச்ச அரச பதவியா ?
பதில் சொல்லுங்க பாபு

இம்சைஅரசன் பாபு.. said...

அப்போ கோவைல இப்ப சின்ன குழைந்தைகள ரேப் அட்டம் பண்ணினவங்களை ..சுட்டு கொன்னதும் தப்பா பாஸ் ... ??

இம்சைஅரசன் பாபு.. said...

தப்பு செயுரோம்ம்ன்னு தெரிஞ்சே தான் செய்யுறான் ..அடுத்தவன் உழைச்சு ராப்பகலா சம்பாதிக்கிறோம் ..அதை பின் கதவை உடைச்சு தூக்கிட்டு போயிடுறான் ...
சரி போலீஸ்ல பிடிச்சு என்ன செய்வாங்க ..அதுக்குள்ளே அவன் பாதிய செலவு அளிச்சிடுறான் ..மீதி வச்சு என்ன பண்ணுறது ...பத்துவருசமா வாய்யா கட்டி வயித்த கட்டி சம்பாதிச்ச நகைகள் அவன் பத்து நாள தீத்துடுறான்.இவன் தான் குற்றவாளி என்று தெரிந்த பின் சுடலாம் ..தப்பே இல்ல

இம்சைஅரசன் பாபு.. said...

//தீர விசாரித்து தண்டனை கொடுங்க .. அதுவும் தப்பு செய்த எல்லாருக்கும் கொடுங்க .. //
தீர விசாரிச்சிட்டு தான் சுட்டு இருப்பாங்க ..சுட்டது சரி தான் ..சரி தான் ..சரி தான் ..வீட்டுல கொள்ளை அடிச்ச பணம் 14 லட்சம் இருந்திருக்கே (இதையும் வெளில கடன் வாங்கி போலிஸ் வீட்டுல வச்சி இருப்பாங்களோ ..)

இம்சைஅரசன் பாபு.. said...

//பத்து லட்சம் கொள்ளையடிச்ச என்கவுண்டர் ... ஆயிரம் கோடி கொள்ளையடிச்ச அரச பதவியா ?
பதில் சொல்லுங்க பாபு//

பாஸ் எனக்கும் ஆசை தான் அந்த பன்னாடைய ஜெயல வச்சே போடணும்ன்னு .. பய புள்ள வெளில வந்தா நம்ம கலிங்கர் ஆள் வச்சாவது போட்டு தள்ளிருவாரு ..
ச்சே என் கிட்ட துப்பாக்கி இல்ல .. உங்க கிட்ட ஒன்னு இருக்குமே ..துப்பாக்கி தான் இருந்தா ஒன்னு கொடுங்க பாஸ் ... போட்டுருவோம்

இம்சைஅரசன் பாபு.. said...

//ஒரு வேளை விசாரணையில் கொல்லபட்டவர் மேல் தவறு இல்லைன்னு நிருபணம் ஆகின ..
அவர் உயிரை வாழ்க்கைய யாரும் திருப்பி தர முடியுமா ?//

ஒரு வேளை கொள்ளையர்கள் சுட்டு பொதுமக்கள் அல்லது போலீஸ் இறந்து இருந்தால்? அந்த உயிரை யார் கொடுப்பா?? தப்பு செஞ்சவனை விசாரிச்சி தண்டனை கொடுக்கனும் சொல்லி அப்பாவிங்க சாகனுமா? என்னா சார் உங்க நியாயம்? அவன் பாதுகாப்பா உள்ள உக்காந்து சுட்டுகிட்டே இருந்தா அவன் குண்டு தீரும் வரை நீங்க ஆள் அனுப்பி சாக சொல்லுவிங்க போல..

இம்சைஅரசன் பாபு.. said...

// பத்து லட்சம் கொள்ளையடிச்ச என்கவுண்டர் ... ஆயிரம் கோடி கொள்ளையடிச்ச அரச பதவியா ?//

அதிகாரவர்கத்தில் இருக்கவன் தப்பிச்சி போரான் சொல்லி எல்லாரையும் தப்பிக்க விட்டா நாடு முழுவதும் குற்றவாளி மட்டும் தான் இருப்பான். அப்படி மட்டும் சட்டம் வந்தா நாளைக்கே உங்க வீட்டை கொள்ளை அடிக்க நான் ரெடி..

Unknown said...

ஒரு உண்மையா தெரிஞ்சுகோங்க பாபு ..
இந்த நாட்டில் அரசோ , போலிசோ , மக்களின் நலனுக்காக இல்லை.

உழைத்து சம்பாதித்த திருடுன தண்டனை கொடுக்கணும் தான்..
அதை சட்டப்படி கொடுங்க ... திருட்டுக்கு அஞ்சு பத்து வருஷம் சிறை எல்லாம் வேண்டாம் ,
நேர தூக்கு தண்டனை கொடுங்க ... சரி தான். ஆனா விசாரித்து கொடுங்க...

நிங்க நேனைக்ற மாதிரி போலீஸ் விசாரித்து , அப்புறம் தான் சுடுவங்கனு கிடையாது.
போலீஸ் இயங்கும் முறை உங்க கற்பனைக்கு அப்பாற்பட்டது.


ஆவங்க கொள்ளை அடிக்கலை மளிகை வியாபரம் பண்ணி சேர்த்த பணம்னு நான் சொன்னனா ?

// அப்போ கோவைல இப்ப சின்ன குழைந்தைகள ரேப் அட்டம் பண்ணினவங்களை ..சுட்டு கொன்னதும் தப்பா பாஸ் ... ??//
கோவை என்கவுண்டரில் கொல்லப்பட மோகன் மீது இன்னமம் குற்றசாட்டு நிருபிக்க படவில்லை.
ஒருவேளை வேறு யாராவது செய்தன்க்கன்னு இப்ப தெரிய வந்தா என்ன செய்வீங்க..?

இம்சைஅரசன் பாபு.. said...

//// அப்போ கோவைல இப்ப சின்ன குழைந்தைகள ரேப் அட்டம் பண்ணினவங்களை ..சுட்டு கொன்னதும் தப்பா பாஸ் ... ??//
கோவை என்கவுண்டரில் கொல்லப்பட மோகன் மீது இன்னமம் குற்றசாட்டு நிருபிக்க படவில்லை.
ஒருவேளை வேறு யாராவது செய்தன்க்கன்னு இப்ப தெரிய வந்தா என்ன செய்வீங்க..? //

ஹ ..ஹா ..டேய் டெரர் அந்த ஆளு குழந்தைங்கள கடத்தேவே இல்லையாம் ..சி பி ஐ சொல்லிட்டாங்க....

பாஸ் நீங்க யூகமாவே பதில் சொல்லிட்டு இருக்கீங்க .. அவரு செய்யலைன்னா ? இவங்க கொள்ளை அடிகலைன்னா? இவரு கைய புடிச்சு இழுக்கலைன்னா ? ..

போலிஸ் சுடவே இல்லை பாஸ் ..தானா துப்பாகில இருந்து
தோட்ட போய்டுச்சு பாஸ் ...
கற்பனையான யூகமாக பதில் தான் ...என்ன செய்ய பாஸ்

Unknown said...

அரசு நினைத்தல் எந்த வழக்கையும் ரெண்டு மாதத்தில் முடித்து தண்டனை தர முடியும்.
அதை செய்ய மாட்டார்கள் .. என்னா அப்படி செய்தால் அவங்க கட்சி கார்கள் தான் அதிகம் பேர் உள்ள போக வேண்டி இருக்கும்.
இல்லை தூக்கில் தொங்க வேண்டி இருக்கும்... இன்னக்கு பார்லிமென்ட் உறுபினர்களில் எத்தனை பேர் மேல கேஸ் இருக்கு தெரியுமா ?

தப்பு செய்தவர் அனைவரும் தண்டிக்க பட வேண்டும் அது தான் சரி. அப்படி ஆரம்பித்தல் அரச பதவில் இப்போ இருக்கஈரவங்க பெரும்பாலனோர் இருக்க மட்டங்க.. இந்த மாதிரி கேட்க ஆளில்லாத ரெண்டுபேர கொன்னுட்டு நீதி நிலைநாட்டபட்டதா சீன் போடுறாங்க பாருங்க அத யாரும் புரிஞ்சுகலையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிரங்கலன்னு தெரில

Unknown said...

///..அதிகாரவர்கத்தில் இருக்கவன் தப்பிச்சி போரான் சொல்லி எல்லாரையும் தப்பிக்க விட்டா நாடு முழுவதும் குற்றவாளி மட்டும் தான் இருப்பான். அப்படி மட்டும் சட்டம் வந்தா நாளைக்கே உங்க வீட்டை கொள்ளை அடிக்க நான் ரெடி..//

சட்டம் வந்து தான் நீங்க கொள்ளை அடிக்கணும்னு இல்லை..இப்பவே அடிங்க ஆனா ஒரு கண்டிசன்..
ஆயிரம் லட்சம் எல்லாம் கூடாது மினியும் ஆயிரம் கோடியாவது அடிங்க.. அது தான் உங்களுக்கு தெரிஞ்ச தொழில் ஆச்சே
தாரளமா ஆரம்பியுங்க

Barari said...

காவல் துறையும் வூடகங்களும் தரும் செய்திகளை நூறு சதம் உண்மை என்று நம்பும் (அதி ) மேதாவிகள் உள்ள வரை காவல் துரையின் காட்டு தர்பார் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

வெங்கட் said...

// காவல் துறையும் வூடகங்களும் தரும்
செய்திகளை நூறு சதம் உண்மை என்று
நம்பும் (அதி ) மேதாவிகள் உள்ள வரை
காவல் துரையின் காட்டு தர்பார் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கும். //

ரொம்ப சரியா சொன்னீங்க..

இனிமே இப்படி நடக்காம இருக்க
ஒவ்வொரு தடவை போலீஸ்
ரவுடிகளை பிடிக்க போகும் போதும்
சில ( வாய் சொல் ) வீரர்களையும்
கூடவே அனுப்பலாம்..

அவங்க உண்மையான தகவலை
நமக்கு தருவாங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//இனிமே இப்படி நடக்காம இருக்க
ஒவ்வொரு தடவை போலீஸ்
ரவுடிகளை பிடிக்க போகும் போதும்
சில ( வாய் சொல் ) வீரர்களையும்
கூடவே அனுப்பலாம்.. //

ஐ!! அது எப்படி? நாங்க போய் அந்த் நேரம் பார்த்து போலீஸ் சுடாம அமைதி காத்து ஒரு வேளை குற்றவாளி சுட்டு எங்க மேல அந்த குண்டு பட்டு.. எவ்வளவு ரிஸ்க். அதனால போலீஸை மட்டும் போக சொல்லுங்க. நாங்க இங்க இருந்தே எல்லா உண்மையும் சொல்லுவோம்... :)

இந்தியை எல்லையில் கூட தேவையில்லாம நிறைய ஆட்களை இந்த இராணுவம் சுடுதாம். மனித உரிமை என்னா ஆகரது.. :)

Unknown said...

இல்ல இல்ல போலிசு யாரயும் சுடும் ... கேள்வியல்லாம எல்லாரும் வாய் மூடி இருக்கணும்...
ஏன்டா இப்படின்னு கேட்டா வாய் சொல் வீரரா ?
கேள்வி கேட்குரவண வாய் சொல் வீரனு பட்டம் கட்ட மட்டும் தெரியுதா...


மானை , யானை சுட்ட கூட கேஸ் போட கேள்வி கேட்க முடியும்.
அனா மனுசனை என்கவுண்டர்கிற பேரில் கேள்வியல்லாம கொலை பண்ணலாம் ..

அட தண்டனை கொடு அத சட்டப்படி கொடுன்ன .. அதுக்கு துப்பில்லை..
சட்டம் சரியில்லன்ன சட்டத மாத்து சொல்ல திராணிஇல்ல..


எதாவது ஒரு பிரச்சனைக்கு போலீஸ் ஸ்டேஷன் போன தன போலீஸ்ன்ன என்னனு தெரியும்...
கேட்ட கேள்வி ஒன்னுக்கு கூட உருப்படியா பதில் சொல்ல முடியல
அரசுக்கும் போலீசுக்கும் இப்படி சொம்படிக்கிறங்கன்ன ஒருவேளை இவங்களே போலீஸ் தான ?

வெங்கட் said...

// எதாவது ஒரு பிரச்சனைக்கு
போலீஸ் ஸ்டேஷன் போன தன
போலீஸ்ன்ன என்னனு தெரியும்... //

எதாவது நோய்க்கு ஆஸ்பத்திரி
போனா தான் டாக்டர்னா என்னான்னு
தெரியும்..

எதாவது கேஸ்க்கு கோர்ட்டுக்கு
போனா தான் வக்கீல்னா என்னான்னு
தெரியும்..

அவ்வ்வ்வ்...

// கேட்ட கேள்வி ஒன்னுக்கு கூட உருப்படியா
பதில் சொல்ல முடியல அரசுக்கும் போலீசுக்கும்
இப்படி சொம்படிக்கிறங்கன்ன ஒருவேளை
இவங்களே போலீஸ் தான ? //

உருப்படியா ஒரு கேள்வி கூட கேக்காம
இப்படி போலீஸ் மேல காண்டா இருக்கறீங்களே
ஒருவேளை... ஹி., ஹி., ஹி...

TERROR-PANDIYAN(VAS) said...

// அரசுக்கும் போலீசுக்கும் இப்படி சொம்படிக்கிறங்கன்ன ஒருவேளை இவங்களே போலீஸ் தான ? //

அண்ணே!! உங்க லாஜிக்படி திருடனுக்கு சொம்படிக்கிறவங்க???

வெங்கட் said...

// இல்ல இல்ல போலிசு யாரயும் சுடும்.
கேள்வியல்லாம எல்லாரும் வாய் மூடி
இருக்கணும்... //

அதானே நல்லா கேளுங்க சார்..

கையில துப்பாக்கி இருந்தா..
பாங்க் கொள்ளைக்காரன்.,
தாதா, ரவுடி, இப்படிபட்ட அப்பாவிகளை
எல்லாம் சுடுவாங்களாமாம்..

நம்மள என்ன கேனப்பசங்கன்னு
நினைச்சிட்டாங்களா..?

வெங்கட் said...

// அண்ணே!! உங்க லாஜிக்படி திருடனுக்கு
சொம்படிக்கிறவங்க???//

உஷ்.. இப்படி குறுக்க குறுக்க பேசப்படாது..
அப்புறம் தம்பி சம்பந்தமே இல்லாம
மூச்சு விடாம பேசுவாரு..

இம்சைஅரசன் பாபு.. said...

// சொம்படிக்கிறங்கன்ன ஒருவேளை இவங்களே போலீஸ் தான ? //

சொம்பு நசுங்கிரபோகுது ... ஆமா இங்க எதிரா கமெண்ட்ஸ் போட்டவங்க எல்லோரும் சிரிப்பு போலிஸ் ..
இவுக மட்டும் விறைப்ப இருக்காங்க ...

நாராயணா அந்த கொசு மருந்த எடுத்துக்கிட்டு வா ..கொசு தொல்ல தாங்க முடியலை ......

வைகை said...

Vinoth Kumar கூறியது..
///////////////////இல்ல இல்ல போலிசு யாரயும் சுடும் ... கேள்வியல்லாம எல்லாரும் வாய் மூடி இருக்கணும்...
ஏன்டா இப்படின்னு கேட்டா வாய் சொல் வீரரா ?
கேள்வி கேட்குரவண வாய் சொல் வீரனு பட்டம் கட்ட மட்டும் தெரியுதா..//////

நீங்க கணக்கு சொல்லுங்க பாஸ்.. இதுவரைக்கும் யாரையெல்லாம் சுட்ருக்கு? கேட்டா பரமக்குடின்னு சொல்லாதிங்க... அதோட சம்பவமே வேற... ஏதோ போலிஸ் எல்லோருமே பொதுமக்கள சுடறதுக்கு மட்டுமே துப்பாக்கி வச்சிக்கிட்டு திரியிற மாதிரி உங்க வாதம் :-))

////////////////மானை , யானை சுட்ட கூட கேஸ் போட கேள்வி கேட்க முடியும்.
அனா மனுசனை என்கவுண்டர்கிற பேரில் கேள்வியல்லாம கொலை பண்ணலாம் ../////

கூல் பாஸ்... மான் யானையெல்லாம் உங்க பணத்தையும் கொள்ளை அடிக்கல..உங்க வீட்டு குழந்தையும் கடத்தல... ஆறறிவு உள்ள மனுசந்தான் இதையெல்லாம் செய்யுறான்... வேணா எல்லா கொள்ளைக்காரர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஒரு கட்டுரை எழுதுங்களேன்.... அப்பிடியெல்லாம் பண்ணாதிங்கன்னு :-))

////////////அட தண்டனை கொடு அத சட்டப்படி கொடுன்ன .. அதுக்கு துப்பில்லை..
சட்டம் சரியில்லன்ன சட்டத மாத்து சொல்ல திராணிஇல்ல..///////////////

இப்பதான் பாய்ன்ட்டுக்கு வர்றீங்க... போலிச இவ்ளோ வறுத்தெடுக்கிற நீங்களே அத முதல்ல செய்யலாமே? தலை வலியும் வாயிற்று வலியும் தனக்கு வர்ற வரை நல்லா அட்வைஸ் பண்ணுவீங்க பாஸ்... உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. அவன சுட்டு தள்ளுங்கன்னு நீங்களே சொல்லுவீங்க :-))

////////////////எதாவது ஒரு பிரச்சனைக்கு போலீஸ் ஸ்டேஷன் போன தன போலீஸ்ன்ன என்னனு தெரியும்.../////

இததான் நானும் சொல்றேன்... நெருப்புன்னா சுடாது..இருந்தாலும் சொல்றேன்... ஒருதடவையாவது உங்க பணத்தை கொள்ளைகாரநிடமோ அல்லது குழந்தையை கடத்தல் காரனிடமோ பரிகொடுதுபாருங்க.. அப்புறம் வந்து இதே கமெண்ட் உங்களால போடமுடியுமா பாருங்க :-))


///////////////கேட்ட கேள்வி ஒன்னுக்கு கூட உருப்படியா பதில் சொல்ல முடியல ///////////

நான் இப்பதான் வர்றேன்.. இருங்க உங்க கேள்வியை படிக்கிறேன் :-))

//////////////////அரசுக்கும் போலீசுக்கும் இப்படி சொம்படிக்கிறங்கன்ன ஒருவேளை இவங்களே போலீஸ் தான ?///

நீங்க சொம்பு அடிக்கிறத வச்சு நீங்க கொள்ளைக்காரன்னு எவ்ளோ அபத்தமா இருக்கும்? :-)))

வெங்கட் said...

// சட்டம் சரியில்லன்ன சட்டத மாத்து
சொல்ல திராணிஇல்ல..//

நீங்க எங்க எங்க சார். இதுக்காக
போராட்டம் நடத்தி இருக்கீங்க..?!?!

அட்லீஸ்ட் உங்க ப்ளாக்லயாச்சும்
ஒரு போஸ்ட். வேணா.. ஒரு கமெண்ட்டாச்சும்
போட்டு இருக்கீங்களா..?

மாற்றம்கிறது அடுத்தவங்ககிட்ட இருந்து
வர்றது இல்ல.. முதல்ல உங்ககிட்ட
இருந்து ஆரம்பிக்கணும்..

இம்சைஅரசன் பாபு.. said...

போச்சு ஆள் காணாம போயிட்டாரு ..வாங்க போவோம் இனி நாளைக்கு தான் கமெண்ட்ஸ் போடுவாரு

Unknown said...

//கூல் பாஸ்... மான் யானையெல்லாம் உங்க பணத்தையும் கொள்ளை அடிக்கல..உங்க வீட்டு குழந்தையும் கடத்தல...//
திருடன இல்ல அப்பாவியான்னு கூட பார்காம யாராவது சுட்டு கேச முடிக்கணும்னு பண்ணலாம் இல்ல..


//அட்லீஸ்ட் உங்க ப்ளாக்லயாச்சும்
ஒரு போஸ்ட். வேணா.. ஒரு கமெண்ட்டாச்சும்
போட்டு இருக்கீங்களா..? //
அது சரி தன் பிலாகில கமண்டு போட மற்றம் வருமா ?

// மாற்றம்கிறது அடுத்தவங்ககிட்ட இருந்து
வர்றது இல்ல.. முதல்ல உங்ககிட்ட
இருந்து ஆரம்பிக்கணும்..//

சரி அதன் நீங்க கூட ஆரம்பிக்கலாமே ?

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் வாங்க .......பாஸ் வந்து ஒரு கமெண்ட்ஸ் போட்டு இருக்காரு எல்லோரும் எண்ணி ரெண்டு ரெண்டு கமெண்ட்ஸ் போடுங்க .அப்புறம் நாளைக்கு தான் வருவாரு ..
http://tamil.oneindia.in/news/2012/02/29/tamilnadu-tn-police-proves-its-brilliance-once-again-aid0091.html
முடிஞ்சா இதையும் படிங்க பாஸ் ...ஆனா இவுக எல்லாம் சிரிப்பு போலிஸ் நீங்க தான் ஒரிஜினல் விறைப்பு போலிஸ்

TERROR-PANDIYAN(VAS) said...

//முடிஞ்சா இதையும் படிங்க பாஸ் ...ஆனா இவுக எல்லாம் சிரிப்பு போலிஸ் நீங்க தான் ஒரிஜினல் விறைப்பு போலிஸ்//

ஹலோ மிஸ்டர் அதிமேதாவி பாபு. பத்திரிக்கை சொல்வது எல்லாம் பொய். அங்க வசிக்கும் மக்கள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு சொம்படிக்கராங்க. நான் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி சொல்ரேன் அவங்க எல்லாம் அப்பாவிங்க. போலீஸ் லஞ்சம் கேட்டுச்சி கொடுக்கவில்லை அதனால சுட்டுடாங்க.. ஹி.. ஹி.. ஹி.. :)

அருண் பிரசாத் said...

மச்சி... அப்போ போலீஸ்தான் தப்பு செய்துட்டாங்கனு சொன்ன வினோத்தையும் சுட்டுருவாங்களா மச்சி?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

என்ன பிரச்சன இங்க?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

ஓகே... நோ ரெஸ்பான்ஸ்..... அப்போ இனி ஒன்லி எனகவுன்ட்டர்தான்...

வெங்கட் said...

// சரி அதன் நீங்க கூட ஆரம்பிக்கலாமே ? //

நான் தான் அப்பவே சொன்னேன்ல..
இவரு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்னு..

மாற்றம் வேணும்னு இவர் கேப்பாராம்..
ஆனா அதை நாம தான் ஆரம்பிச்சி
வெக்கணுமாம்..

வெங்கட் said...

// அப்போ போலீஸ்தான் தப்பு செய்துட்டாங்கனு
சொன்ன வினோத்தையும் சுட்டுருவாங்களா மச்சி? //

அதெப்படி சுடுவாங்க.. அவர் என்ன
நம்மளாட்டம் போட்டோ போட்டா
கமெண்ட் போட்டு இருக்காரு..?!!

ஐ... 50 :)

( ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு..)
:-)

Unknown said...

@பாபு
/// ஹலோ மிஸ்டர் அதிமேதாவி பாபு. பத்திரிக்கை சொல்வது எல்லாம் பொய்.
அங்க வசிக்கும் மக்கள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு சொம்படிக்கராங்க.///
ஆரம்பத்தில் நானும் உங்கள போல தன பத்திரிகையில் வருவது உண்மைநினு நெனச்சேன்.
போலிசும் மக்கள் உறவு எப்படின்னு பார்த்த பல சம்பவங்கள பார்த்து இருக்கேன்.

பத்திரிக்கையில அத பற்றி படிக்காது வேற... நேர்ல பார்த்தது வேற.

ஒரு நாள் நான்கு நாளிதழ்கள் படிச்சேன். ஒரே சம்பவத்த நாலு முறையில் போட்டு இருக்காங்க..
ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாமல் .

இப்படி பல அனுபங்களில் பத்திரகை சொல்லுறது எது உண்மையா இருக்கலாம்னு அனுமானிக்க முடியுது.

திரும்பவும் சொல்லுறேன் நான் குற்றவாளி பேசலை இல்ல குற்றம் சாடடபட்டவரின் வக்கில் கிடையாது
அப்படி ஒரு குற்றமே நடக்கலானோ , இல்ல குற்றவாளி தண்டிக்கப்பட கூடதுனொ சொல்லலை.
இந்த குற்றத்தில் மக்கள் பணம் சம்பந்த பட்டு இருக்கு, திருடினவர்களுக்கு உழைத்து வாழ மனசில்லை
மற்றவர்களின் உழைப்பை உண்டு வாழும் எண்ணம் இருக்கு.

கண்டிப்பா குற்றவளிகல்க்கு தண்டனை தரவேண்டும். கொலை செய்தாவது பணத்தை அபகரிக்கும் எண்ணம் இருந்து இருக்கு.
வங்கி காஷியர் லாக்கர் ரூக் கி இல்லைன்னு சொன்னவுடன் அவர தாக்கி இருக்காங்க.
ஒருவேளை பணம் தர மறுத்து இருந்த கொலை பண்ணி கூட இருக்கலாம்.
அப்படி நடந்து இருந்த சட்டப்படியே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரலாம்.

நான் சொலுறது இந்த மாதிரி திருட்டு குற்றங்களுக்கு மரண தண்டனை தரவேண்டும்னு நினைச்ச .. அதுக்கேத்தபடி சட்டத மாற்றி
அத சட்டப்படி கொடுங்க

இப்போ போலீஸ் சுட்டது சரின்னு நீங்க சொல்லலாம் . பக்கத்துக்கு விட்டில் குடியிருந்தவங்க சொல்லலாம்
ஏன் செத்துபோன முதல் குற்றவாளி /குற்றம் சாடபடவர் வினோத் குமாரின் தாய் தந்தை கூட சொல்லலாம்.
மகனால் இடை விடாத தொல்லை போலீஸ் கேஸ்னு அலைஞ்ச சொல்லத்தான் செய்வாங்க.

Unknown said...

நடந்து என்கவுண்டர் இல்லை. மும்பை தாக்குதல் நடந்ததே .. போலிசெசும் ரானுவமும் தீவிரவாதிகளுடன்
நேர்க்கு நேர் சண்டயிட்டங்கன்ன அது தன என்கௌன்டர். இப்ப நடந்தது கொலை.
கொலை செய்யும் உரிமை போலிசெசுக்கும் இல்லை மிளிடரிக்கும் இல்லை
இதனால் தன் என்கௌன்டர் , சன்னல சுட்டாங்க கதவ உடைச்சொம்னு கத சொல்லுறாங்க.

போலீஸ் சுட்டது சட்டப்படி தப்பு , இந்த விஷயம் போலீசுக்கும் தெரியும். எந்த குற்றவிளயையும் போலீஸ் சுட்டு கொல்லலாமன்னு சட்டம் இருந்தா கோர்ட் இந்த என்கௌன்டர் பற்றி விசாரிக்க கொடுத்த வழக்க தள்ளுபடி பண்ணி இருப்பாங்க. அப்படி பன்னால. போலீஸ் அதிகாரிகளுக்கு
சம்மன் அனுப்பி இருக்காங்க. ..

கோர்டே விசாரிக்க விஷயம் இருக்குங்கிற மேட்டர் தான் நீங்க சரி தன் சரி தன் சரி தன்னுநு சொலிகிட்டு இருக்கறீங்க.

எப்படியோ போலீஸ் சுட்டு திருடன் செத்த சரிதானா .. இத என்ன தப்புன்னு தான் கேட்குறீங்க.
அப்படி இல்லை. இதில் பல விஷயம் இருக்கு. எப்படின்னா ..இப்ப போலீஸ் சுடுவது சரின்னு ஒத்துகிட்ட
நாளை இதே போலீஸ் வேற எந்த கேஸ் ஆனாலும் உண்மை குற்றவாளிய தேடி பிடிக்க மட்டங்க.
கேட்க ஆளில்லாத யாராவது கொன்னுட்டு ... நாங்க குற்றவாளிய பிடிச்சோம் தப்பிக்ம்போது சுட்டோம்னு சொல்லுவாங்க.
இதில் இன்னெரு விஷயம் என்னன்னா உண்மை குற்றவாளி வெளிய இருந்து திரும்பவும் குற்றம் செய்வன்.

உண்மை குற்றவாளி கிடைச்சாலும் சுடத்தான் பார்ப்பாங்க என்ன ஒரு , லஞ்சம் வாங்கிகிட்டு பல குற்றவாளிகளை வளர்கிறதே போலீஸ் தன்.
குற்றவாளியை விசாரிச்சா இவங்கள பற்றிய தகவலும் வெளிய வரும் எனவே என்கௌண்டேர்னு சொல்லிக்கிட்டு அவங்க சைடு தப்பையும்
மறைசுடலம் பெரும் வாங்கிக்கலாம்ன்னு பாரபங்க.

ஒரு வேலை இப்படி அப்பாவி செத்த .. அதுக்கு என்ன பதில் ?

வைகை சொன்ன மாதிரி நெருப்புன வாய் வெந்துடது.. எதாவது சுழ்நியைல் நீங்களோ உங்க உறவினரோ வேலை செய்ற அல்லது குடியிருக்க்ம் இடத்துக்கு பக்கத்தில் ஒரு குற்றம் நடந்தா உங்களையும் தாரளம போலீஸ் சந்தேக படலம் . சந்தேக படுவது விசாரிப்பது கண்டுபிடிப்பது தன் அவங்க வேலை விசாரித்து உண்மை குற்றவாளிய கண்டுபிடிச்சு அவங்கள சட்டப்படி தண்டிச்ச எனக்கு சரி தன்.

அத விட்டுட்டு உங்கள என்கௌண்டர்ல போட்டுட்டு .. குற்றவல்ல தப்பிக பார்க்கும்போது கொன்னுடோம்னு பேர் வாங்கிட்டு வழக்க முடிச்சுட சரி தான ?

இப்படி நிறைய விஷயம் இருக்கு.

Unknown said...

/// மாற்றம் வேணும்னு இவர் கேப்பாராம்.. ஆனா அதை நாம தான் ஆரம்பிச்சி வெக்கணுமாம்... //
மாற்றத்த நீங்க ஆரம்பிக்கலாம் இல்ல நான் ஏன் சொன்னென .. அத நிங்களும் ஆரம்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான்.
@வெங்கட் சட்டத்தை மாற்ற நாம் சட்டம் இயற்றும் பதவியில இல்லை . இன்னைக்கு தேதிக்கு அங்க போகவும் முடியாது . என்ன நம்ம சாதகம் அப்படி.ஆணி பிடுங்கிறத உருபடிய பார்த்த சோத்துகவது வழி இருக்கும் எனக்காக இல்லவிலவிட்டலும் புள்ளை குட்டிககவாவது பிழைப்பை பார்த்து தான் ஆகணும். ஆனா எனக்கு சரின்னு தெரிஞ்சத ஆர்வம் இருக்குற மற்றவங்களுக்கு சொல்லலாம். இப்படி விஷயம் பரவுன நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர் காலத்தில் நாம சந்தியே யவது இந்த பிரசனைகள் பாதிக்காம இருக்கும்@அருண் பிரசாத்
//...மச்சி... அப்போ போலீஸ்தான் தப்பு செய்துட்டாங்கனு சொன்ன வினோத்தையும் சுட்டுருவாங்களா மச்சி?..//
கண்டிப்பா வாய்ப்பு இருக்கு ... இது இப்படியே வளர்ந்தா ... எதிர் காலத்தில் ஒரு வேளை நான் முன்னல சொன்ன மாதிரி உங்களோ உங்க உறவினரையோ இல்ல நண்பரையோ கூட அவங்க குற்றம் பண்ணாவிட்டாலும் போலீஸ் சுட்டு கேச முடுச்ச நீங்க எதிர் கேள்வி கேட்க முடியாது ..
கேட்டிங்கன நீங்களும் ஒரு நாள் இரவு விசாரிக்கும்போது தப்பிச்சு போக முயற்சி பண்ணி பொலிசிய தாக்கிட்டு இறந்து போய் இருப்பீங்க நான் பேசுவது எல்லருக்கவும் தன் . உங்களுக்கும் சேர்த்து தன். ...
நான் எங்கயும் போகல. டெஸ்ட் கேஷ் தயார் பண்ணவேண்டியதால உடனே பதில் சொல்ல முடியல

Unknown said...

@வெங்கட்
//..அதெப்படி சுடுவாங்க.. அவர் என்ன
நம்மளாட்டம் போட்டோ போட்டா
கமெண்ட் போட்டு இருக்காரு..?!!..//

சுடனும் நினைச்ச போடோ வச்சு இருந்தா தான் சுடுவாங்க இல்லன சுட மட்டங்கள ?

போலி ஈமெயில் ஐடி முலம் ஜனாதிபதி, முதல்வருக்கு குண்டு மிரட்டல் அனுப்புரவங்கள கைது பண்றன்களே
அந்த போலி ஈமெயில் ஐடி தயார் பண்ணுறவங்க எல்லாரும் போலி ஈமெயில் ஐடியில் போடோ அட்ரசு போன் நம்பர் கொடுத்து வச்சு இருப்பங்கள ?

அப்படி போடோ வச்சு தன் சுடணும்ன நான் உங்க போட்டோவை கோப்பி பண்ணி வேற ஐடியில் எதாவது பண்ணின உங்கள சுட்ட ஓகேய ?

ஐடியல இருக்கிற உங்களுக்கு சர்வர் லாக் , ஐபி டிரசு பற்றி தெரிந்து இருக்கும்.
உங்கள என்னமோன்னு நினைச்சேன் ..என்னமோ போங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@Vinoth Kumar

பாஸ் பாஸ்! இது உங்க சொந்த ஐ.டி தனே நீங்க யாருன்னு தெரிய கூடாது அப்படினு கஷ்டபட்டு நடையை மாத்திகிட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் சேர்த்து எழுதவில்லைதானே... :)

Unknown said...

அப்படி உங்க போடோவை யாரும் மாற்றி எதாவது குற்றம் பண்ணினாலும் போலீஸ் தீர விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிச்சு தண்டனை வாங்கி தரணும்னு தான் நான் சொல்லுறேன் ... அதன் குற்றவாளி போடோ இருக்கு இல்ல சுட்டு கேச முடின்னு போலீஸ் செஞ்ச அது சரிதான்னு நீங்க சொல்லுறீங்க ..
இப்ப சொல்லுங்க .. இப்ப சொல்லுங்க .. உங்க போடோவையோ மொபைல் , அட்ரஸ் எதையாவது வைத்து யாரவது குற்றம் பண்ணின .. நீங்க விசாரிக்க சொல்லுவீகள இல்ல என்கொண்டேர்ல சாக தயாரா ?
@வெங்கட் , பாபு , வைகை பதில் சொல்லுங்க

Unknown said...

பாபு நன் தன சொன்னனே ... உங்க கிட்ட பிரச்சனயே இது தன.
கருத்துக்கு பதில் சோழ மாட்டீங்க .. தேவை இல்லாத அடுத்த கேள்விதான் உங்க கிட்ட இருந்து வரும்

இம்சைஅரசன் பாபு.. said...

ஆபிசர் நீங்க மண்டை மேல இருக்க கொண்டையை மறைங்க ... என்ன தான் மாற்றி கம்மேந்த்ஸ் போட்டாலும் .யாருன்னு யூகிக்க முடியுது ..

அதான் மரியாதையா ஆபிசர்ன்னு போட்டு இருக்கேன் .....

Unknown said...

நீங்க யார்னு யூகிக்கவெல்லம் நான் நினைகலை அதனால நீங்க என பேர் சொன்னிங்களோ அதக்கு தன பதில் சொன்னேன்.
வினோத் என்னோட பேர் தன் புனை பெயர் வைக்க நான் எழுத்தாளர் இல்லை. போலி ஐடி வைக்க நான் கிரிமினலும் இல்லை.

பாபு ..கருத்துக்கு பதில் இதே பேர்ல சொல்லுங்க .. அனா பதில் சொல்லுங்க ..

இம்சைஅரசன் பாபு.. said...

மிக்க நன்றி ...
நாளைக்கு சொல்லுறேன் ... இன்னைக்கு அண்ணனுக்கு வேலை இருக்கு ... சோ பெட்டெர் வி வில் கண்டினியூ டுமாரோ ..அப்போ வர்ர்ர் றேன் .........
இப்பவாது புரியும்ன்னு நினைக்கிறேன் ..விடுங்க பாஸ் மண்டை மேல இருக்க கொண்டைய மறைக்க ரொம்ப கஷ்ட்ட படுறீங்க

வைகை said...

இன்றைய ஆனந்தவிகடனின் தலையங்கம் உங்கள் கட்டுரைக்கு பதிலாகவும் எங்கள் கருத்துக்களின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது :-)) அந்த கடைசி பாராவை கொஞ்சம் சத்தமாக படிக்கவும்.. உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கும் கேட்கட்டும் :-)


'வங்கியில் கொள்ளை அடித்த ஐவர் போலீஸாரால் சுட்டுக் கொலை!' என்னும் செய்தி பொதுமக்களிடையே வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்று இருக்கிறது. காவல் துறையினர் இவ்வளவு துரிதமாகச் செயல்பட்டதை அனைவருமே பாராட்டும் சூழலில், 'ஐவருமே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்தானா?; அவர்களை உயிரோடு பிடித்திருக்கக் கூடாதா?' என்பது விவாதமாகி இருக்கிறது!
பொதுவாகவே என்கவுன்டர் சம்பவங்களின்போது, மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக் குரல்கள் உரத்து ஒலிப்பது வழக்கம்தான். இந்த முறை கூடுதலாகச் சற்று மாறுதலான ஒரு காட்சியையும் காண முடிந்தது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தைப் பார்வையிட்டு, தகவல் திரட்டச் சென்ற மனித உரிமைக் குழுவினருக்கு அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைக்க மறுத்ததோடு, அவர்களைத் திரும்பிச் செல்லும்படி வற்புறுத்தியும் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் பெருகிவரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, 'போலீஸாருக்கு குறுக்கீடற்ற அதிகாரங்களை அளிக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளுக்கு அச்சம் பிறக்கும்; குற்றங்கள் குறையும்’ என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன!

இந்தக் குரல்கள் நியாயமானவைதான். சமூகத்தில் தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் இருந்தால்தான் குற்றங்கள் குறையும். போலீஸாரைக் குற்றவாளிகள் துப்பாக்கிகளால் எதிர்கொள்ளும்போது போலீஸார் மட்டும் லத்திகளால் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. அதேசமயம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அத்துமீறும் கறுப்பு ஆடுகள் எங்கே இருந்தாலும் அவை களையப்பட வேண்டியவை. காவல் துறைக்குள் அப்படி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் கறுப்பு ஆடுகளைத் தண்டிக்கும் பொறுப்பு நீதித் துறையைச் சேர்ந்தது.

இந்தத் தருணத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. மனித உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிப்பது நிச்சயம் ஆபத்துதான். அதேநேரம், காவல் துறை எதைச் செய்தாலும் முன்முடிவோடு அவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது காவல் துறையினரை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்திவிடும். இது அதைவிட பெரிய ஆபத்து!

Unknown said...

@வைகை .. உண்மைதன்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

அப்படி நல்லவிதமா பேசி பழகுங்க தம்பி.....

Unknown said...

பாருங்க பாஸ் ... போலீஸ் செஞ்சது என்கொன்ட்டர் இல்லை கொலயனு...
http://bit.ly/xZEPOw

Unknown said...

பாருங்க பாஸ் ... போலீஸ் செஞ்சது என்கொன்ட்டர் இல்லை கொலயனு.

http://tamil.oneindia.in/news/2012/03/01/tamilnadu-velachery-encounter-woes-chennai-police-aid0091.html

Unknown said...

அட என்னபா எல்லாரும் எஸ்கேப்பா .. ஒரு பதில் கூட இல்லையா.......
கோர்ட் விசாரித்து போலீஸ் பண்ணியது தப்புன்னு தண்டனை கொடுத்த கூட .. போலீஸ் பண்ணியது சரின்னு தன் பெசுவங்கனு நெனச்சேன் .... இல்ல உண்மை தெரிஞ்சுடுதோ...?
என்னமோ போங்க...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes