Monday, December 06, 2010

கை பேசிகள் உபயோகிப்பவரா?..ஒரு நிமிசம் இதை படிச்சுட்டு போங்க...





தகவல் தொழில் நுட்பம் விரிந்து பரந்து விட்டது அதுவும் இன்று கை பேசிகள் நமது ஆறாம் விரலாகவே மாறிவிட்டது. ஒரு வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் எல்லாம் நம்மைச் சுற்றி வந்துவிடுகிறது... ஆனால் ஒவ்வொரு நவீன பொருட்களின் உபயோகத்தில் ஏராளமான ஏமாற்றுகளும் மயக்கும் வியாபார உத்திகளும் வந்துவிடுகின்றன...



அறிவியல் வளர்ச்சியில் நமக்கு கிடைக்கும் சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா ? அதுவும் கை பேசிகள் பற்றி நமக்கு எல்லாம் என்ன தெரியும்? கைபேசி நிறுவனங்கள் எந்த மாதிரி யுத்திகளை நம் மீது பிரயோகம் செய்கின்றன...

இதோ பேசுகிறார் பதிவுலகில் பாபு நமக்காக...

தகவல் தொடர்பு நிறுவனங்களும்.. ஏமாறும் மக்களும்..


1990கள் வரைக்கும் நம்ம வீட்ல யாராவது வெளியூர் போயிட்டாலோ அல்லது சும்மா வெளியே போயிருந்தாலோ அவங்களை நாம நினைக்கற நேரத்துல தொடர்பு கொள்றதுங்கறது முடியாத ஒரு காரியமாக இருந்தது.. அவங்களே நம்மைத் தொடர்பு கொண்டாத்தான் உண்டுங்கற நிலைமையே இருந்தது.. அதுவும் வெளியூர்ல இருக்கறவங்களுக்கு ஏதாவது கடிதம் எழுதி அனுப்பினோம்னா அவங்க அதுக்கு ரிப்ளை அனுப்பினாலோ அல்லது அவங்களை சந்திக்கற சந்தர்ப்பம் வந்தாலோதான் நம்முடைய கடிதம் அவங்களுக்கு கரெக்டா போய் ரீச்சாயிருக்குன்னு நமக்குத் தெரியும்..


ஏதாவது ஒரு அவசரத்தகவலை ரொம்ப தூரத்துல இருக்கறவங்களுக்கு அனுப்பனும்னா தந்திதான்.. அதுக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காசு வாங்குவாங்க..


தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்ததுக்கு அப்புறம் இப்போ அந்தத் தொல்லைகள் எதுவுமே இல்ல.. 10 வயசு பையன்ல இருந்து முதியவர்கள் வரை மொபைல் கையில வைச்சிருக்காங்க.. இந்தியாவுல நிறையப் பேர் முதன்முதலா மொபைல் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணமே ரிலையன்ஸ் மொபைல்தான்.. அவங்க அப்போ விற்பனை பண்ணின 500 ரூபாய் மொபைல்ல வரம்பில்லாம போஸ்ட்பெய்டு கனெக்சன் மாதிரி பேசிக்கிட்டே இருக்கலாம்.. மொபைல் இந்தியாவுல வந்த புதுசுல ரொம்ப லோயர்எண்ட் மொபைலே 5000 ரூபாய்கிட்ட வித்தது.. பெரும்பாலான ஜனங்களால அவ்வளவு செலவு பண்ணி மொபைலை வாங்க முடியாதுங்கற காரணத்தால ரொம்ப காலத்துக்கு பணக்காரங்களும் கொஞ்சம் வெல்த்தியானவங்களுமே யூஸ் பண்ற டிவைசாகவே மொபைல்ஸ் இருந்தது.. ரிலையன்ஸோட அந்த விலை மலிவான அந்த சர்வீஸாலதான் மொபைல் பத்தின பயம், சந்தேகம் எல்லாம் பெரும்பாலானவங்களுக்கு நீங்குச்சு..


பிசினஸ்ல ஒரு கம்பெனி இப்படி ரொம்ப மலிவா இப்படி விற்பனை செய்ய ஆரம்பிச்சவுடனே மற்ற செல்போன் கம்பெனிகாரங்களும் தானாகவே கால்ரேட்டுகளை குறைச்சிட்டு மொபைல் விலைகளையும் குறைக்க ஆரம்பிச்சாங்க.. அதன்மூலமா நுகர்வோர் நிறைய பயனடைஞ்சாங்க..


மொபைல்களை இப்போ நம்ம வீடுகள்ல இருக்கற பெரியவங்களும் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால வெளியூர்கள்லையும் வெளிநாடுகள்லையும் வேலை செய்ற நம்மளைப் போல ஆளுங்க எப்போது வேணும்னாலும் நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட பேசிக்க முடியுது.. ரொம்ப சந்தோசமான ஒரு விசயம் இது..


கால்ரேட்டுகளைக் குறைக்கற இந்தமாதிரி செல்போன் நிறுவனங்கள் மறைமுகமா நம்மகிட்டயிருந்து பணத்தைப் புடுங்கறாங்க.. அதுவும் அதிகமாகப் படிக்கத் தெரியாதவங்களும்.. மொபைல்களை யூஸ் பண்ணத் தெரியாதவங்களும்தான் அதிகமா அவங்களோட வலையில விழறாங்க..


இந்த அவேர்னெஸ் இல்லாதவங்க அப்போதான் ரீசார்ஜ் பண்ணியிருப்பாங்க.. ஆனால் உடனே பேலன்ஸ் கட்டாயிடும்.. சில நேரங்கள்ல பேலன்ஸ் கட்டானதே தெரியாமப் போயிடும் அவங்களுக்கு.. அப்புறம் தொடர்ந்து இப்படி நடக்கறதை நோட் பண்ணீட்டு என்னடான்னு நாம போய் ஆராய்ச்சி பண்ணினோம்னா.. ஏதாவது வேல்யூ ஆடடு சர்வீசஸ் சப்ஸ்கிரைப் ஆகியிருக்கும்.. இது எப்படி ஆச்சுன்னு கேட்டா நம்ம வீட்டு ஆளுங்களுக்குத் தெரியாது..


செல்போன் நிறுவனங்கள் என்ன பண்றாங்கன்னா.. மெசேஜ் மாதிரியே ஏதாவது ஒரு அப்ளிகேசனை மொபைல்களுக்கு அனுப்பிடறாங்க.. சும்மா செல்போன்ல இருந்து கால் மட்டுமே பண்ணிப் பழகினவங்களுக்கு அந்த மாதிரி அப்ளிகேசன்ஸ் வந்து நின்னா என்ன பண்ணுவாங்க.. எப்பவும் போல என்னடா இதுன்னு ஒரு கிளிக் பண்ணிட்டாங்கன்னா முடிஞ்ச்சது கதை.. உடனே 15 ரூபாய் அல்லது 30 ரூபாயை சுட்டுடுவாங்க அந்தத் திருட்டுப் பசங்க..


அதேமாதிரி நிறையபேர் இன்னும் லோஎண்ட் மொபைல்ஸ் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.. அவங்களோட செல்போன் ஆப்பரேட்டர்கிட்டயிருந்து ஏதாவது இப்படி ஒரு மெசேஜ் வரும்.. ஆக்சுவலா அந்த மெசேஜ் மல்டிமீடியா மொபைல்கள்ல டவுன்லோட் பண்ற ஏதாவது ஒரு விசயமாக இருக்கும்.. ஆனால் ஜஸ்ட் ப்ரெஸ் பண்ணினதுக்காகவே காசு பிடிச்சிடுவாங்க..


இன்னொரு விசயம் காலர்டியூன்.. அது நாமளே விரும்பி செட் பண்ணிக்கறது.. காலர்டியூன் வச்சிருக்கற யாராவது ஒருத்தருக்கு கால் பண்ணினோம்னா.. நமக்கு முதல்ல பாட்டு கேக்காது "இந்தப் பாட்டு உங்களுக்கு பிடிச்சிருந்தா ஸ்டார் ப்ரெஸ் பண்ணுங்க.." அப்படி இப்படின்னு ஒரு 20 செகண்டுக்கு மொக்கை போடுங்க.. பாட்டு வர்றதுக்குள்ளவே நம்ம நண்பர் போனை எடுத்துடுவார்.. இதைக் கேக்கற நமக்கும் எரிச்சலாக இருக்கும்.. நண்பரோட பணமும் வீண்தான் இல்லையா..


நமக்கு பாட்டு புடிச்சிருந்தா ஸ்டார் அமுக்கி காப்பி பண்றதுலயும் நிறைய சூட்சுமம் இருக்கு.. நண்பருக்கு கால் பண்றப்போ நமக்குத் தெரியாமலே ஸ்டார் மேல நம்ம கைபட்டுட்டா போச்சு.. 30+15 ரூபாயை உருவிடுவாங்க.. நம்ம வீட்ல பெரும்பாலும் இப்போல்லாம் குழந்தைகளுக்கு மொபைலைத்தான் விளையாடக் குடுக்க வேண்டியிருக்கு.. இல்லைனா அழுகைய நிப்பாட்ட மாட்டேங்குதுங்க.. அப்படி குடுக்கறப்போ யாருக்காவது தெரியாம டயல் பண்ணி ஸ்டார் அழுத்திடுங்க.. உடனே பாட்டு காப்பியாயிடும்.. பேலன்ஸ் கோயிந்தா..


பெரும்பாலனவங்க தங்களோட உடல் உறுப்புகள்ல ஒன்னாகவே செல்போனையும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால செல்போன் நிறுவனங்கள் மக்கள்கிட்டயிருந்து எவ்வளவு சம்பாதிக்கறாங்க.. அப்புறம் ஏன் இப்படி ஒன்னும் தெரியாத ஜனங்களை ஏமாத்தி இப்படி காசுபுடுங்கறாங்கன்னு தெரியல.. கஸ்டமர்கேர்ல கம்ப்ளைன் பண்ணினாலோ அல்லது நேர்ல போய் திட்டினாலோ.. அடுத்த முறை இப்படி நடக்காது சார்னு சொல்வாங்க.. இல்லைனா உங்க எண்ட்ல இருந்துதான் சார் ஆக்டிவேசன் பண்ணியிருக்கீங்கன்னு கூலா சொல்லுவாங்க.. நாமளும் ஒரு நெட்வொர்க்கை கோவிச்சிட்டு இன்னொரு நெட்வொர்க் போனாலும் அதேகதைதான் நடக்கும்..


எல்லாம் கூட்டுக் களவானிங்க..


டிஸ்கி: மொபைலைப் பத்தி இந்தப் பதிவுல பேசினதால ஒரு லேட்டஸ்ட் நியூசும் சொல்றேன்.. நாம யூஸ் பண்ற ஒரு நம்பரை எந்த ஆபரேட்டருக்கும் சேஞ்ச் பண்ற ஆப்சன் வர்றதா இருந்தது.. டிசம்பர் ஒன்னாம் தேதியில இருந்து ஹரியானாவுல அத வசதியை தொடங்கி உள்ளனர்கள் சீக்கிரம் நமக்கும் அந்த வசதி கிடைக்கும்னு நினைக்கிறேன்..


கழுகிற்காக

பதிவுலகில் பாபு



(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

10 comments:

செல்வா said...

படிச்சிட்டு வரேங்க .! வடை .!

எல் கே said...

இதே ப்ரீ பெய்டில் உள்ள பிரச்சனைகள். போஸ்ட் பெய்ட் மொபைலில் இன்னும் பிரச்சனை ஜாஸ்தி. நீங்க சரியா பார்த்த "value added service " அப்படின்னு போட்டு அதுக்கு ஒரு காசு போற்றுபாங்க. நாம எதுவும் அந்த மாதிரி சேர்க்க சொல்லி சொல்லி இருக்க மாட்டோம்.

வினோ said...

இந்த மாதிரி நிறைய விசயங்களில் காசு எடுக்கிறாங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

ஐயோ girlfriend கூட சாட் பண்ணனுமா கேட்டு நச்சு எடுக்குறாங்க ...........நம்ம கேக்காமலேயே மாசம் 30 ரூபாய் எடுக்குறாங்க .............

செல்வா said...

//மொபைல் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு முக்கிய காரணமே ரிலையன்ஸ் மொபைல்தான்.. அவங்க அப்போ விற்பனை பண்ணின 500 ரூபாய் மொபைல்ல வரம்பில்லாம போஸ்ட்பெய்டு கனெக்சன் மாதிரி பேசிக்கிட்டே இருக்கலாம்.//

கண்டிப்பா ரிலைன்யன்ஸ் நிறுவனத்தை பாராட்டியே ஆகணும் ..!!

செல்வா said...

நீங்க சொல்லுறது சரிதான் . நிறைய ஏமாற்று வேலைகள் இருக்கு ..!!
நாமதான் கொஞ்சம் பாதுகாப்ப இருக்கணும் .. எங்க பக்கத்துக்கு வீட்டுல இருக்குறவர் ஒருத்தர் அடிக்கடி கிரிகெட் pack அது இதுன்னு எதாவது activate ஆகிடும் ..! அத சொல்லி சொல்லி புலம்புவர் ..

அன்பரசன் said...

நல்ல அலசல்

Chitra said...

விழிப்புணர்வு தரும் பதிவுதான். நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளாமலே, அதன் மாயைக்குள் விழுந்து விடுகிறோமே.

எஸ்.கே said...

மிக நல்ல பதிவு!

Ramesh said...

சரியா சொல்லியிருக்கீங்க... நான் வாராவாரம் ஊருக்கு போகும் போதெல்லாம்... அம்மா, அப்பா ரெண்டு பேரோட மொபைல்லயும் எதாவது சர்வீஸ் அல்லது பல சர்வீஸ்கள் ஆக்டிவேட் ஆகி வெட்டியா காசு பிடிச்சுக்கிட்டு இருப்பாங்க.. அதை நான் கேன்சல் பண்ணி விட்டுட்டு வருவேன்... ஜஸ்ட் ஒன் கிளிக்ல ஆக்டிவேட் ஆகற அந்தக் கருமம் எல்லாம்.. டீஆக்டிவேட் பண்ணனும்னா நாளஞ்சு தடவ கன்ஃபர்மேசன் மெசேஜ் அனுப்பனும் ஒவ்வொரு சர்வீசுக்கும்... அதுல கடைசி மெசெஜ் அனுப்பாம விட்டம்னா கூட அந்த சர்வீஸ் கண்டினியூ ஆயிட்டே இருக்கும் தொடர்ந்து காசு பிடிச்சிட்டே இருப்பானுங்க... அப்ப இது ஏமாத்தி பணம் புடுங்கனும்னே பன்ற வேலைதான.. யார்கிட்டயும் போய் நியாயம் கேக்க முடியாது இதுக்கெல்லாம்... எல்லா கார்ப்பரேட் கம்பெனிகளும் பொறுக்கிகளா மாறி ரொம்ப வருசம் ஆச்சு...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes