Friday, October 28, 2011

அத்து மீறும் பிள்ளைகள்.. ஆபத்தான விபத்துக்கள்! கலந்துரையாடலாக ஒரு ரிப்போர்ட்!


சம காலச் சூழல்களை பற்றிய எமது பார்வையை எமது குழும தோழமைகள் (மகளிர்), தங்களின் பார்வையில் அலசும் புதியதொரு பகுதியை எமது மரியாதைக்குரிய வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆழமான, தேவையான விடயங்களை இயல்பாய் பகிரப் போகும்.....இந்த உரையாடலுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்...!






மகேஷ்: வாங்க கௌசல்யா எப்டி இருக்கீங்க? முகத்தை பார்த்தா ஏதோ கவலை ரேகை ஓடுற மாதிரி இருக்கே! ஏதும் பிரச்சனையா? 

கௌசல்யா: ஆமா மகேஷ்... இந்த ஸ்கூல்ல படிக்குற பிள்ளைங்கள நெனச்சுத்தான்.., நெல்லையில் என் பையன் கூட படிக்கும் பதினைந்து வயதே பையன் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்து விட்டான்பா. 

மஹா: அச்சோ! கவலையான விசயம் தான்...சாலை விபத்து எப்படி நடந்தது...? அதைப் பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..  

கௌசல்யா: அந்த பையன் பைக் ஓட்டிட்டு போனபோது விபத்து நடந்திருக்கு... 

மகேஷ்: என்ன 15 வயசு பையன் பைக் ஓட்டிட்டு போனானா ? என்னங்க இது அநியாயம்...? அவங்க வீட்ல இதுக்கு எப்படி அனுமதிச்சாங்க...?! விரிவா சொல்லுங்க...  நம்ம கழுகு வாசகர்களும் தெரிஞ்சுக்கட்டும்.. 


வாங்க...கௌசல்யா என்ன சொல்றாங்கனு கேட்போம்........ 

கௌசல்யா: ம்ம்ம்...இப்ப நினைச்சாலும் வருத்தமாக இருக்கு...! தன்னோட நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்திருக்கிறான். அப்போ மத்த பசங்க கொஞ்ச நேரம் ஜாலியா நான்கு வழிப்பாதை வரை போயிட்டு வருவோம்னு கூப்பிட்டு இருக்காங்க. இவனும் தன் நண்பர்கள் எதிரில் தன் திறமையை காட்டனும்னு போய் இருக்கிறான்.  முதல்ல சாதாரணமா வண்டியை ஒட்டியவன் நண்பர்களின் உற்சாக கூச்சலில் வெகு தூரம் சென்று சட்டென்று ஹிட் (?) அடித்து திரும்பி இருக்கிறான். 

அந்த நேரம் எதிர்புறத்தில் வந்த லாரியில் மோதி தூக்கி எறியப்பட்டு அதேஇடத்தில இறந்து விட்டான். பின்னால் அமர்ந்து வந்த நண்பனும் அடிபட்டு துடிதுடித்து கொண்டிருந்திருக்கிறான். அது ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வேற. ரொம்ப நேரமா யாரும் கவனிக்கவில்லை. அப்புறம் ஒருத்தர் மூலமா தகவல் போய் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் இறந்த பையனை அப்படியே போட்டுவிட்டு,(இறந்துவிட்டால் கொண்டுபோக மாட்டார்களாம்?!) உயிருக்கு போராடிகொண்டிருக்கிற பையனை மட்டும் தூக்கி கொண்டு போய்ட்டாங்க. இரண்டு மணி நேரம் கழிச்சுதான் இறந்த பையனை வீட்டிற்கு தூக்கிட்டு போனாங்க. 

கல்பனா: அப்டியா! கடவுளே!!!....... ம்ம்... 108 பற்றிய இந்த விசயம் எனக்குப் புதுசு.. ம்ம்ம் அப்புறம்... 

ஆனந்தி: ஆமாம்பா..இதை ஒரு சம்பவம் என்ற விதத்தில் நாம் சுலபமாக கடந்து விடுவோம். ஆனால் நாளை நம்ம வீட்ல இது போல நடந்தா நினைக்கவே பயமா இருக்கு ??!!

ஏன் இப்படி மனதை பிசையவைக்கிற சம்பவம் எல்லாம் நடக்குதோ ? இதை தடுக்கவே முடியாதா? 

மகேஷ்: ஏன் முடியாது?  நம்ம கழுகுல கூட எத்தனவாட்டி இதைப் பத்தி படிச்சு படிச்சு சொல்லிருக்கோம்.. இந்த மாதிரிலாம் நடக்குது எச்சரிக்கையா இருங்கன்னு. கொஞ்சம் ரூல்ஸ்லாம் ஸ்ட்ரிக்ட் பண்ணும்னு... அதோட நெறய ஐடியாஸ் கூட பகிர்ந்துக்கிட்டோமே...கல்பனா...  அந்த லிங்க் எடுத்துக் குடுடாம்மா.. இங்க மறுபடியும் பகிர்ந்துப்போம்... 

கல்பனா: இந்தாங்கக்கா அந்த லிங்க்  http://www.kazhuku.com/2011/03/blog-post_30.html 

மஹா: நம்ம பிள்ளைகள குறை சொல்றோமே.. இந்த பேரண்ட்ஸ்லாம் எப்டி பிஹேவ் பண்றாங்க இந்த விசயத்துல...? 

கௌசல்யா:  அதை ஏன் கேக்குறீங்க!!  பிள்ளைகளின் வரம்பு மீறிய அத்தனை செயல்களுக்கும் ஒருவிதத்தில் பெற்றோர்கள் தான் ஒரு முக்கிய காரணம்னு நான் சொல்வேன். 13, 14 வயசில  இருசக்கர வாகனம் அவசியமா ? லைசென்ஸ் 18 வயதிற்கு பிறகு என்று இருக்கிறபோ அதற்கு முன்னாடி என்ன அவசரம். என் பொண்ணு என்னமா ரைம்ஸ் சொல்றா பாருங்க என்று ஆரம்பிக்கிற பெற்றோர்களின் ஆர்வம், என் பையன் இப்பவே பைக் ஓட்டுறான் என்பதில் வந்து நிற்கிறது. 

நம்ம பிள்ளைகள் ஒழுங்கா போனாலும் எதிர்ல வர்றவங்க தாறுமாறாக வண்டியோட்டி வந்தால் என்ன செய்வது ?  கூடுமான வரை இருசக்கர வாகனங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் போட்டி போட்டு ஓட்டுகிறேன் என்று சாலையில் செல்வோரை கதிகலங்க வைக்கிறார்கள் சிலர். போட்டிகளையும் அவர்களுக்குள் வைத்துக்கொண்டு (உயிருடன்!) விளையாடுகிறார்கள். 

கல்பனா: நீங்க சொல்றதும் சரிதான்.. எங்க பார்த்தாலும்.. இந்த சின்ன சின்ன பசங்களாம் வண்டி ஓட்டிட்டு அலையுதுங்க.. கஷ்டமாதான் இருக்கு..., ஹெல்மெட் போடுறது பத்தியும் ஒரு விழிப்புணர்வு கிடையாது, வண்டி ஓட்டுறது பத்தியும் ஒரு விழிப்புணர்வும் கிடையாது

மகேஷ்: சரி...மற்ற நாட்டுலலாம் எப்டி ரூல்ஸ் இருக்குனு நம்ம ஆனந்திட்ட கேட்போம்... ஆனந்தி அங்க அமெரிக்கால எல்லாம் எப்டி? இந்த மாதிரி ஸ்டூடண்ட்ஸ்/ சிறு பிள்ளைகள் வண்டி ஓட்றது அங்க சுலபமா? கொஞ்சம் இதப் பத்தி சொல்லுங்க ஆனந்தி.. 

ஆனந்தி: ஆனா இங்கலாம் அப்டி இல்லப்பா!! நெடுஞ்சாலையில் இருபுறமும்.. Maximum speed.. Minimum Speed குறிப்பிடப் பட்டு இருக்கும். உதாரணத்திற்கு 45 மைல் வேக அளவென்றால்.. நீங்க 50 இல் போனால் கூட.. பிடிக்க வாய்ப்பு இருக்கு,.

மாணவர்கள்.. 15 வயதை நெருக்கும் போதே.. வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ள தொடங்கலாம்... அப்படி அவர்கள் 100 மணி நேரம் பாதுகாப்பாய் வண்டி ஒட்டியதாக அவர்கள் பெற்றோர் (certify) குறிப்பிடும் போது... Learner's license வழங்கப் படும். அப்போதும்.. யாராவது ஒரு அடல்ட் (adult) கூட இருந்தால் மட்டுமே வண்டி ஓட்டலாம்.16 வயது நிரம்பினால்... கூடுதல் தகுதி கிடைக்கும்.. அப்போதும் night curfew... அதாவது ராத்திரி வண்டி ஓட்டுவதற்கான விதிமுறை.. இரவு 10 மணி -முதல்- அதிகாலை 5 மணி வரை... அவர்கள் வண்டி ஓட்டக் கூடாது. மீறினால் தக்க தண்டனை கிடைக்கும்.  18 வயது வரை.. வண்டி ஓட்டும் போது தன்னுடன் ஒரே ஒரு நபர் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். கும்பலாக வண்டியில் ஏற்றி செல்லக் கூடாது. 



18 வயது நிரம்பினால் அவர்கள்.. Gratuated license... எல்லா உரிமையும் பெற்று.. வண்டி ஓட்ட முடியும். அப்போதும் .. காப்பீடு அவசியம்.. இல்லை என்றால், வண்டி ஓட்ட இயலாது.இங்கே அமெரிக்காவில்... பொதுவாக.. மாணவர் பருவத்தில் எனக்கு தெரிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்ததில்லை...  அவர்களின் பாதுகாப்பு கருதியே இப்படி இருக்கலாம்..! பெரும்பாலும், நான் பார்த்த வரையில்.. Adults / Grown ups... தான் இரு சக்கர வாகனம் ஓட்டி பார்த்திருக்கிறேன்.



மகேஷ்: ஆஹா!!! ஆனந்தி கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.. எவ்ளோ விசயம் கடகடனு உங்க ஸ்டைல்லயே சொல்லிட்டீங்க... மஹா கடைசியா இந்த கெட் டூ கெதர் மூலமா நாம என்ன சொல்லப் போறோம் அப்டின்றத தெளிவா சொல்லிடுங்க..அதுக்கு முன்னாடி நானும் ஒரு விசயம் சொல்லிடுறேன்.. 

ஆனந்தி: ம்ம் சொல்லுங்க மகேஷ்... உங்க காலேஜ்ல கூட சைக்கிள் மட்டும் தான் அலவ்ட்னு கேள்விப்பட்ருக்கேன்.. நல்ல விசயம்... 

மகேஷ்: ஆமாங்க ஆனந்தி.. அது மாசுக்கட்டுப்பாடுக்காக... அப்புறம் இங்கயும் கூட சில நேரங்களில் பெண் பிள்ளைகள் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, கவனமின்றி துப்பட்டாவை காற்றில் பறக்க விட்டுக் கொண்டும், வெயிலில் இருந்து தப்புவதற்காக துப்பட்டாவை ஏதோ தீவிரவாதிகள் போல் முகத்தைச் சுற்றிக் கொண்டும் செல்வதை சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். இதுவும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். நன்றாக பின்(pin) போட்டோ, முடிச்சு போட்டோ செல்வது தான் நல்லது 

மஹா: பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல் வேண்டும், கண்காணிக்கவேண்டும். சென்ற வருடம் சாலைவிதிகளை அவசியம் பின்பற்றவேண்டும் என்பதை பற்றிய ஒரு பாடத்திட்டத்தை கொண்டுவர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிடப்பட்டதாக சொன்னார்கள் இப்போது வரை அறிவிப்பு கிடப்பில் தான் கிடக்குது...!


ஓட்டுனர் உரிமம் பெறும் விதிகளை இன்னும் கடுமையாக்கணும். பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்கள் வண்டி ஓட்டினால் அபராதத் தொகை அதிகமாக்கப் படணும். எச்சரிக்கை கடுமையாக இருக்கவேண்டும்.


அமெரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக செல்வதற்கும் குறைவான வேகத்தில் செல்வதற்கும் தனிதனி வழித்தடம் உள்ளதாம். இதற்கென்று டோல்கேட் மூலம் தனியாக கட்டணம் வசூலிக்க படுகிறது. கூடுதல் தகவல் என்னவென்றால், வேகமாக செல்லும் சாலையில் மெதுவாக சென்றால் அபராதம் வசூலிக்கபடுகிறது. அதுபோல குறைவான வேகத்தில் செல்லும் சாலைகளில் வேகமாக சென்றால் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் தராமல் அபராதம் வசூலிக்க படுகிறது. என்ன ஆனந்தி நான் சொல்றது சரிதானே ??


ஆனந்தி: ஆமாம் மகா சரிதான். 

கல்பனா: கடைசியா நானும் ஒன்னு சொல்லி முடிக்குறேன்.. உதாரணமா சிக்னலில் நிற்க வேண்டிய இடத்தில் நின்று செல்வது போன்ற விடயங்களை நாம் செய்யும் பொழுது நம் பிள்ளைகள் நம்மைக் கூர்ந்து கவனிப்பார்கள். சாலை விதிகளை மதிக்கவும், அதைப் பின்பற்றவும் பிள்ளைகளுக்கு கற்பிப்பதோடு நாம் நின்றுவிடாமல், நாமும் அதைக் கவனமாக பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொள்வோம்.



அடுத்த கெட் டு கதர்ல மீட் பண்ணுவோம்... அதுவரைக்கும் பை டூ ஆல்...


ஆல்: ஓ.கேபா.. அடுத்த மீட்டிங்கல சந்த்திப்போம்...நன்றி வணக்கம்.




5 comments:

ஜோசப் இஸ்ரேல் said...

நல்ல விடயத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள் . பெற்றோர்கள் உணர வேண்டிய தருணம் இது . மாத்திரமல்ல பெரியவர்களும் லைசென்ஸ் வாங்கும் போது ஒழுங்காக போக்குவரத்து விதிகளை படித்து தேறின பின் தான் லைசென்ஸ் கொடுக்க வேண்டும் . லைசென்ஸ் வாங்குவதற்கு ப்ரோக்கர் யாரும் இல்லாமல் பார்க்க வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்

SURYAJEEVA said...

//50cc வண்டிகளான சன்னி, ஸ்கூட்டி போன்றவை இவர்கள் ஓட்டலாம் என்றாலும்// தவறான தகவல், இந்த மாதிரி வண்டிகளை ஓட்டவும் லைசன்ஸ் அவசியம் நண்பரே... இந்த விஷயத்தில் பள்ளிகளும் பெற்றோர்களும் அலட்சியமாகவே இருக்கின்றனர்... battery வண்டிகளுக்கு லைசன்ஸ் இல்லை என்று கூறப் பட்டாலும் அவற்றிலும் அதி வேகமாக போகும் வண்டிகளுக்கு லைசன்ஸ் அவசியம் என்பது பலருக்கு தெரியாத விஷயம்... பள்ளி சிறுவர்கள் லைசன்ஸ் இல்லாத battery வண்டி வாங்கி கொடுத்தால் விபத்து குறையும்

Rathnavel Natarajan said...

அருமையான விழிப்புணர்வுப் பதிவு.
நாம் விபத்து நடந்த பிறகு பரிதாபப் படுகிறோம். மக்களும் அரசாங்கத்துடன் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். நம் மக்கள் - ஒன்று - கடுமையான சட்ட திட்டங்களுக்கு பயப்படுவார்கள் - அல்லது இலவசத்துக்கு ஒத்துழைப்பார்கள். எல்லா பள்ளி வாசல்களில் சிறு பிள்ளைகள் இரு சக்கரம் ஓட்ட வேண்டாம் என அறிவுப்பு பலகைகள் இருக்கின்றன. ஆனால் பெற்றோர் தானே வண்டி கொடுத்தனுப்புகிறார்கள்.
வேதனை தான்.
நல்ல பதிவுக்கு நன்றி. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

கழுகு said...

சூர்யா ஜீவா @ சுட்டியமைக்கு நன்றிகள் தோழமை. அந்த வரிகள் நீக்கப்பட்டது.

'பரிவை' சே.குமார் said...

அருமையான... அவசியமான பகிர்வு.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes