Wednesday, February 08, 2012

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (8.2.2012)


கனகு நடந்து வர டீ கடை அண்ணாச்சியும் ரெங்குவும் பாட்டை போட...

'ஏலே இமயமலை! எங்க ஊரு சாமி மலை! எட்டு தெச நடுங்க எட்டு வச்சு வாராரு!

கனகு : என்னய்யா ரெங்கு... பாட்டெல்லாம் பலமா இருக்கு... நான் என்ன விசயகாந்தா...?

ரெங்கு : ஆமா கனகு... நீ நாக்கை கடிச்சிட்டே வந்தியா... அதான் டைமிங்க்கு ஏத்த பாட்டு. அவர் நாக்கை கடிச்சதுதான் தமிழ்நாடே பேசிட்டு இருக்கு....என்னா தில்லு... இதே மாதிரி எப்பயும் தெளிவா போனா சரிதான்..

கனகு : என்ன தெளிவா... அவர் அப்படி இருக்க மாட்டாரே...அதெல்லாம் சரி. ஏன் இந்த பழைய நியூஸ சொல்ற...?? 

ரெங்கு : செய்தி பழசு தான். ஆனா அந்த விஷயத்தை வைச்சே நம்ம தலைவர்கள் எல்லாம் அரசியல் பண்றாங்க... எங்க மக்கள் பார்வை விசயகாந்த மேல திரும்பிடுமோன்னு நினைக்குறாங்க போல... 

கனகு : அது என்னமோ சரிதான்... எல்லா அரசியல்வியாதிகளும் அத பத்தியே பேசிட்டு இருக்காங்க... ஒரு எதிர்க்கட்சி தலைவரை பார்த்து மரியாதை இல்லாம பேசினா இப்படிதானே செய்வார் ரெங்கு...  இல்லனா முடிய விரிச்சு போட்டுட்டு வெளிய போகணும்... ஆனா அது அவருக்கு தெரியல... 

ரெங்கு : அட பாவி.. முடிய விரிச்சிட்டு போனது நான் சொன்னதை விட பழைய நியூஸ்ய்யா..  நாலு தேமுதிக எம் எல் ஏகளை தன் பக்கம் இழுத்து எதிர் கட்சி தலைவர் பதவியை பறிச்சு அம்மா கொடுத்த ஆட்டை காத அறுத்த மாதரி விஜயகாந்த காதை அறுக்க போறதா தொண்டர்கள் எல்லாம் பேசிக்கிறாங்க...

கனகு : என்ன அம்மா கொடுத்த ஆட்டை காதை அறுக்குறாங்களா..?? 

ரெங்கு : ஆமா... அம்மா இலவசமா... இல்ல.. இல்ல...விலையில்லாம கொடுத்த ஆட்டை மக்கள் காத அறுத்து வித்துடுறாங்களாம்...

கனகு : ஆமா... மனுஷன் சாப்பிடவே இங்க சாப்பாடு இல்ல... இதுல ஆட்டுக்கு எங்க சாப்பாட்டு போடுறதுன்னு வித்து இருப்பாங்க... விலைவாசி ஏறி போச்சேன்னு சொன்னா அது உலக பொருளாதார மாற்றத்தால வந்த விளைவுன்னு சொல்றாங்க... அதையேதானே அய்யாவும் சொன்னார்... 

ரெங்கு : எல்லாரும் அப்படிதான் கனகு சொல்லுவாங்க... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு... அரசியல்வாதி பேச்சு மேடையோட போச்சு கனகு... இதெல்லாம் நம்ம முட்டாள் ஜனங்களுக்கு தெரியாது.மாத்தி மாத்தி ஓட்டை போட்டுட்டு புலம்புவாங்க என்ன மாதிரி...

கனகு : உனக்கு என்னய்யா புலம்பல்.. ??

ரெங்கு : என்னத்த சொல்றது..? இவங்க வந்து மின்வெட்டு பிரச்சனையை சரி பண்றேன்னு சொன்னாங்க... ஆனா அதை கொஞ்சம் கூட சரி பண்ணல... கொழந்தைங்க படிப்பு எல்லாம் வீணாப் போவுது...

கனகு : ஹா.. ஹா... இதைச் சொல்றியா..? போன தடவை மின்வெட்டு, விலைவாசி உயர்வுன்னு சொல்லி பேசுன ஆளுங்க எங்கய்யா போனாங்க..? ஒரு வேள கரண்ட் இல்லாததாலே ஆளுங்க இருக்குறதே தெரியலையோ..?? இன்னும் ஐஞ்சு வருசத்துக்கு மின்வெட்டு பிரச்சனை பிரச்சனையாவேதான் இருக்கும்.. நீ புலம்பிட்டே இரு... 

ரெங்கு : ராமதாஸ் தாலியை அறுத்தாராம்..

கனகு : என்னய்யா சொல்ற..? நகைய அறுக்குறவங்க எல்லாம் ஆந்திரா பக்கம் போய்ட்டாங்கன்னு சொன்னாங்களே..?! அந்த வேலைய இவர் பாக்க ஆரம்பிச்சிட்டாரா...??

ரெங்கு : யோவ்.. ஏன்ய்யா.. அவனுங்க கொள்ளை அடிக்குறது போதாதா...? இன்னும் இது வேற வேணுமா..?உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் வருமானம் மூன்றரை கோடியாம்... 16 ஆயிரம் பேர் தாலிய அறுத்து இம்புட்டு வருமானம் வந்துச்சாம்..

கனகு : என்னய்யா இவர் இம்புட்டு கொள்ளையா அடிக்குறார்..?!

ரெங்கு : அது மட்டும் இல்லாம மரம் வைக்குறேன்னு சொல்லி ஐ.நா சபையிலே ஆட்டைய போட்டு இருக்காங்களாம்... 

கனகு : அட பாவிங்களா... இவனுங்க இத்தனை வருஷமா பசுமை ஆக்குறேன்.. ஆக்குறேன் சொல்லி இவனுங்க மட்டும் பசுமையா ஆகுறானுங்க போல...!!

ரெங்கு : இப்படியே பதவி ஆசை இல்ல இல்லன்னு சொல்லியே.... நம்மளை ஓட்டையாண்டியாக்கிடுறாங்க.. என்னத்த சொல்ல..?! இதுல ஒருத்தருக்கு பிரதமர் ஆசையே இல்லையாம்.

கனகு :  அது யாருய்யா இன்னொரு ராமதாஸ்..??

ரெங்கு : எல்லாம் நம்ம ராகுல்தான்... இவருக்கு மத்தவங்களை மாதிரி பிரதமர் ஆசை இல்லையாம்.

கனகு : மத்தவங்களை மாதிரியா...?? அது என்ன இவர் வேற எதாவது ஐடியா வைச்சு இருக்காரா என்ன..?! இனி நான்தான் நாட்டுக்கு மகாராஜான்னு சொல்வாரோ...??

ரெங்கு : ராஜா சொன்னாலே இவங்க பாட்டி தான் நியாபகம் வருது ..பதவி வேணும் வேணும் சொல்லிதான் தரல... பதவி வேணாம்ன்னு சொல்லி பார்ப்போம்ன்னு சொல்றார் போல....

கனகு : பதவி வேணாம்னா ஏன் தேர்தல்ல எல்லாம் நிக்குறார்...? எங்க பார்த்தாலும் பதவிக்கு சண்டை. என்னய்யா உலகம் இது...?! 

ரெங்கு : வெற்றிகரமா பொது குழுவை கூட்டி முடிச்சு குடும்பத்தோட கோலாலம்பூர் போயிட்டாராம் அஞ்சா நெஞ்சன்...

கனகு : ஆமா.. ஆமா.. பொது குழுவை அவர் நினைச்சா மாதிரி வெற்றிகரமா நடத்தி முடிச்சிட்டார்தான்...
ஆமா.. என்னதான் நடந்தது பொது குழுவில்..?! ஏன் இப்போ பொது குழுவை கூட்டினாங்க..?!

ரெங்கு : தலைவர் பதவி தேர்ந்தெடுக்க இருக்குமோன்னு சொல்லிக்குறாங்க கனகு... இதை கண்டுகிட்ட யாரோ நடுவுல புகுந்து ஆட்டத்தை கலைச்சுட்டாங்க...

கனகு : ஏன் என்ன ஆச்சு..?! அழகிரி ஏதாவது சொல்லிட்டாரா என்ன...??

ரெங்கு :  அவர் எதுவும் சொல்லல கனகு... சாதாரண பிரச்சனை. ஸ்டாலின் பேர சொல்லாம விட்டுட்டாங்க... அதுக்கு பொதுக்குழு கூட்டத்துல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க... 

கனகு :  அடப்பாவமே... அதுக்கு தலைவர் என்னய்யா சொன்னார்...?!

ரெங்கு : முடிஞ்சா நான் தேர்தல்ல நிக்குறேன். என்னை எதிர்த்து நின்னு தலைவரா ஆகுங்கற மாதரி சொல்லிட்டார்... அவர் அப்படி சொன்னதுல ஸ்டாலினுக்கு கவலையாம்..

கனகு : பாருய்யா... இவருக்கும் பதவி ஆசை இருந்து இருக்கும் போல... இவருக்கு அடுத்து தி.மு.க-வுக்கு தலைவர் பதவி எதுக்கு.... அதுக்கு ஒரு பொது குழுவை கூட்டுங்கப்பா... சரி.. சரி.. ஸ்டாலின்கிட்ட போய் சொல்லுங்க... அடுத்த பொதுக்குழுவுல பேசிக்கலாம்ன்னு... 

ரெங்கு : இப்படிதானேய்யா போன பொதுக்குழு முடியும் போதும் சொன்னாங்க... பாவம்ய்யா அவரு...அதுக்குள்ளயே இன்னொரு பொதுக்குழுவா..?! அப்போ அடுத்த வாரம் அங்கயே போய்டலாம். ஹி..ஹி... டீ அங்கேயே கிடைக்கும். 

அண்ணாச்சி : கனகு அண்ணே... என் பொழப்புல மண்ணை போட்டுடாதீங்க... 
இந்தாங்க "டீ

கழுகு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes