கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான்.
தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின் அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி விட முடியாது. அந்த செல்வாக்கும் அவரது அப்பாவான கலைஞர் என்பவரால் ஊதி பெரிதாக்கப்பட்ட செல்வாக்குதான்.
அழகிரி எந்த சூழலிலும் தன்னை ஸ்டாலினோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. ஸ்டாலின் தன்னை திமுகழகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்த்திக் கொண்டவர். தமிழக மக்களிடையே கலைஞரின் மகன் என்ற ஒரு உறவுத்தொடர்பையும் கடந்து அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியிலும் அறிமுகமாகி இருப்பவர். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டு அழகிரி பெருந்தன்மையோடு கட்சியில் தொடர்வாராயின் திமுகவிற்கு அது இன்னும் பலத்தைக் கூட்டும் என்றாலும் அழகிரி இல்லாவிட்டால் மிகப்பெரிய இழப்பு ஒன்றையும் அந்தக் கட்சி அடைந்து விடாது.
இன்னமும் கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஒரே தவறு ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவிக்காததுதான். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்து அவரின் கையில் கட்சியை முழுமையாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதிரடியாக பாரளுமன்றத்தில் நினைத்ததை விட அதிக இடங்களை பெற திமுகவால் முடியும். ஏனெனில் சமகால மக்களின் தெளிவான விருப்பங்களை புரிந்தவராய் ஸ்டாலின் இருக்கிறார். காங்கிரஸ் கூட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் நின்றவர் ஸ்டாலின்....அதே போல தேமுதிக என்னும் ஓட்டைப் பிரிக்கும் கட்சியை சாதுர்யமாய் பாரளுமன்றத் தேர்தலில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக இடங்களை ஜெயிக்கலாம் என்ற எதார்த்த கணக்கை போட்டவரும் ஸ்டாலின் தான்....
ஸ்டாலினின் திட்டமிடுதலில் இப்போது ஓரளவிற்கு இயங்க ஆரம்பித்திருக்கும் திமுகழகம் முழுமையா ஸ்டாலினின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது.... மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆகும் கண்கொள்ளா காட்சிகள் தமிழகத்தில் நடந்தேறும் என்பதே உண்மை...!
நாடகமாயிருந்தாலும் அரசியல் சூழ்ச்சியாய் இருந்தாலும்....அழகிரி நீக்கம் அதிரடிதான்...!
கழுகு
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
0 comments:
Post a Comment