பெண்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டு அதைப்பற்றி விவாதித்து ஒரு வித விழிப்புணர்ச்சியை கொண்டுவரலாம் என்று கழுகு தீர்மானித்த போது சட்டென்று தோழி கெளசல்யா- நினைவில் வந்தார்.
பெண்ணின் உரிமைகளைப் பற்றியும் தாம்பத்தயம் பற்றியும் இன்னும் பிற விழிப்புணர்ச்சி கட்டுரைகளையும் எழுதி வரும் தோழி கெளசல்யா..... நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்தஞானச்செறுக்கு என்று இருப்பதுடன் சக பெண்களையும் இருக்கச் சொல்கிறார். முதுகலை மனோதத்துவம் பயின்று... இன்னும் சில பொறுப்புகளும் எடுத்துக் கொண்டு... சென்று கொண்டிருக்கும் தன் வாழ்க்கைக்கு இடையே....சமூக பணியாக மனோதத்துவ ரீதியான கவுன்லிங்களும் கொடுத்து வருகிறார்....
நாகரீக உலகில் பெண்கள்.. என்று எழுதுங்கள் என்று கேட்டோம்....! தயக்கமின்றி எரிமலையாய் வெடித்தவரின் கட்டுரையை.. நீங்களே படியுங்களேன்...!
எந்த காலத்திலும் பெண்கள் பெண்கள் தான், இருப்பினும் இன்றைய பெண்களின் மனதிலும், தோற்றதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன, அது நல்ல விதத்தில் அமையும் போது மாற்றங்கள் தேவைதான். ஆனால் இளம்பெண்களின் மனதை கெடுக்கும் அளவிலேயே இன்றைய புற சூழல்கள் இருக்கின்றன. யார் சொன்னாலும் கேட்ககூடாது, 'தன் மனம் போல்தான் வாழ்வேன்' என்ற மனபோக்கே பல பெண்களிடமும் காணபடுகிறது .
இன்றைய பெண்கள் சாமர்த்தியசாலிகள், இன்னும் விவரமானவர்கள், இன்னும் அதிகமான பொறுப்பானவர்கள், புத்திசாலிகள். படிப்பிலும் ஆண்களுக்கு முன்னால் நிற்பவர்கள். கால் வைக்காத துறையே இல்லை என்ற நல்ல நிலையே உள்ளது. தைரியம், தன்னம்பிக்கை, விவேகம், ஒழுங்கு அனைத்தும் ஒருங்கே பெற்ற பெண்கள்தான் இன்றைய பெண்கள். இருந்தும் ஒரு சில பெண்கள் நாகரீகம் என்ற பெயரிலும் புதுமை என்ற பெயரிலும் தங்கள் தோற்றத்தை மாற்றி மற்றவர்களின் கேள்விகுறி பார்வைகளை சந்திகிறார்கள்.
"நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?"
என்பதை கருத்தில் வைத்து கொண்டு நடந்தால் 'பாரதி கண்ட புதுமை பெண்கள்' தான் இன்றைய பெண்கள்.
ஆண், பெண் நட்பு
பாய்பிரண்ட் வைத்து கொள்வது 'பேஷன்' என்பதாக மாறி விட்டது. அப்படி நண்பர்கள் இல்லாதவர்களை மற்றவர்கள் ஏளன பார்வை பார்த்து, கிண்டல் செய்யும் நிலை இருக்கிறது. ஆண்,பெண் பேதம் இல்லாமல் நட்பு என்பதை மட்டுமே பார்க்கும் உறவு ஆரோக்கியமானதுதான். இருவரும் தங்கள் எல்லை என்ன என்பதை வரையறுத்து கொண்டு பழகுவது அவசியம்.
ஆனால் பலநேரம் இந்த உறவுகள் தான், எல்லை தாண்டி அவலத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது. இதனால் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள்தான். கண்மூடித்தனமாகவும் , அலட்சியமாகவும் இந்த விசயத்தில் நடந்து கொள்கின்றனர். ஆண் நண்பர்கள் கட்டாயம் இருந்துதான் ஆகவேண்டும் என்பதுதான் இன்றைய நாகரீகம் என்பதுபோன்ற தவறான கண்ணோட்டம் உள்ளது, அது நல்ல நட்பாக இல்லாத பட்சத்தில் நாகரீகம் அநாகரீகமாக மாறிவிடுகிறது .
காதல்
பல இளம்பெண்களும் 'காதல்' என்ற அற்புத உணர்வை just like that என்பது மாதிரி பாவிக்கிறார்கள். ஒன்று ஒத்து வரவில்லை என்றால் மற்றொன்று என்று alternatives வைத்துகொள்ள தொடங்கிவிட்டார்கள். காதலிக்கபடுபவன் தனக்கு ஏற்றவன்தானா என்று பார்ப்பதில் இருந்து , அவனை கல்யாணம் செய்து கொண்டால் பொருளாதார ரீதியாக எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியுமா என்று யோசித்து முடிவு செய்த பின்னரே காதலிக்க தொடங்குகிறார்கள். மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்பது நன்றே.
பெண்ணுரிமை
எங்களுக்கும் சரிசமமான உரிமை உள்ளது என்று கூறி கொண்டு தங்கள் நடவடிக்கையை அமைத்துகொள்வது சகஜமாகி விட்டது. ஆண்களை மட்டம்தட்டி பேசி அலட்சியமாக நடந்துகொள்வதுதான் தங்களது கவுரவம் என்றும் தாங்களே மேம்பட்ட புதுமை பெண்கள் என்று பேசுவதும் தான் இன்றைய நாகரீகம் என்றாகிவிட்டது.
செல்போன்
தேவைக்காக என்பது மாறி கட்டாயம் இருந்தே ஆகவேண்டும் என்பது போல் இருக்கிறது. இது சில நேரம் அவசியம் என்று இல்லாமல் அனாவசியமாக போய்விடுகிறது. இது கொண்டுவரும் பிரச்சனைகளும் ஏராளம்.
ஆடை அணிகலன்கள்
அழகை மறைப்பதற்காக வடிவமைக்க பட்ட ஆடைகள், இப்போது அழகை வெளிக்காட்டும் விதத்தில் அணிய படுகின்றன. இதில் யாரை சாடுவது, அணிபவர்களையா...? ஆடை வாங்கி கொடுப்பவர்களையா...? இல்லை அணிவதை ரசித்து ஊக்கபடுத்துபவர்களையா...?
ஆடை அணிவதை வைத்தே அவர்களின் அந்தஸ்த்து மதிப்பிடபடுவது வருந்த கூடிய அவலமான நிலைதான். நாகரீகம் உடையில் மட்டும் இல்லாமல் சொல், செயல் , நடத்தை அனைத்திலும் இருந்தால் நல்லது. அணியும் ஆடைகள் பிறரின், குறிப்பாக உங்களுக்கு எதிரில் இருப்பவர்களின் உணர்வுகளை தூண்டாமல் இருப்பது நலம், நாகரிக உடையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக அணியவேண்டும்.
நாகரீகம் என்று ஆண், பெண் கை குலுக்குவது ஒன்றும் தவறாகி விடாது, ஆனால் தேவை இல்லாமல் கை கொடுப்பதும் , தொட்டும் அல்லது அடித்து பேசுவதும் பெண்களின் கண்ணியத்தை தான் குறைக்கும் . தனது சுய கௌரவம் பாதிக்காத அளவில் நடப்பது நல்லது. தன்னிடம் அன்பாக பேசும் ஆண்கள் எல்லோரும் தன்னுடைய நலனில் அக்கறை உள்ளவர்கள் என்று எண்ணுவதும் தவறு, அதிகமா புகழ்கிற எந்த ஆணையும் நம்பாமல் இருப்பது நல்லது.
* எல்லாவற்றுக்கும் மேல் நம்மை பலர் உற்று நோக்குகிறார்கள் என்ற உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும், அவசியமானது கூட.
* நமது உடைகள் பிறர் கண்களை உறுத்தாமல் இருந்தாலே சில பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
* தமிழகத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறாள்... பாலியல் கொடுமையில் இந்தியாவில் தமிழகம் நான்காம் இடம் என்கிறது ' தேசிய குற்றபிரிவு ஆய்வறிக்கை '.....?!!
* இன்றைய நாகரிக உலகில் பெண்கள் கால் பெரு விரல் பார்த்து குனிந்து நடக்கவேண்டியது தேவை இல்லைதான் ஆனால் பெற்றவர்களின் தலை குனியாமல் பார்த்து நடந்து கொண்டாலே போதும்...!!??
கழுகுக்காக
கெளசல்யா
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
49 comments:
//ஆனால் பெற்றவர்களின் தலை குனியாமல் பார்த்து நடந்து கொண்டாலே போதும்...!!??//
இதுதான் மிக அவசியம் . நல்ல கட்டுரை .. கழுகு மற்றும் கௌசல்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்
//நமது உடைகள் பிறர் கண்களை உறுத்தாமல் இருந்தாலே சில பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.//
//பெற்றவர்களின் தலை குனியாமல் பார்த்து நடந்து கொண்டாலே போதும்...!!??//
அவசியமான கட்டுரை...
கழுகு மற்றும் கௌசல்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
//ஆடை அணிவதை வைத்தே அவர்களின் அந்தஸ்த்து மதிப்பிடபடுவது வருந்த கூடிய அவலமான நிலைதான். நாகரீகம் உடையில் மட்டும் இல்லாமல் சொல், செயல் , நடத்தை அனைத்திலும் இருந்தால் நல்லது. அணியும் ஆடைகள் பிறரின், குறிப்பாக உங்களுக்கு எதிரில் இருப்பவர்களின் உணர்வுகளை தூண்டாமல் இருப்பது நலம், நாகரிக உடையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக அணியவேண்டும்.//
நல்ல கருத்துக்கள்..
ஆண் நண்பர்கள் கட்டாயம் இருந்துதான் ஆகவேண்டும் என்பதுதான் இன்றைய நாகரீகம் என்பதுபோன்ற தவறான கண்ணோட்டம் உள்ளது, அது நல்ல நட்பாக இல்லாத பட்சத்தில் நாகரீகம் அநாகரீகமாக மாறிவிடுகிறது .
நல்ல கருத்துக்கள்..
நல்ல கருத்துக்கள்..
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு
அடுத்து ஆண்களுக்கும் ஒரு பதிவு வேண்டும் :)
அனைவரும் அறிய வேண்டிய கருத்துக்கள்....
பதிவில் கூறியிருக்கும் அனைத்தும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . இன்றைய நாகரிக வளர்ச்சியால் அனைவரும் இது போன்று இல்லை என்ற போதும் . நீங்கள் சொல்லி இருக்கும் நாகரிக ஆடைகள் என்ற பெயரில் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்துக்களை தடுப்பது மிகவும் அவசியமான ஒன்றுதான். சமூக அக்கறையுடன் கூடிய சிறந்த பதிவை சிந்தனைகளை தட்டி எழுப்பும் வகையில் தந்திருக்கும் தோழி கெளசல்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
இது போன்ற சிறந்த பதிவுகளையாவது முழுவதும் வாசித்துவிட்டு தங்களின் கருத்துக்களை அனைவரும் சொன்னால் நலமே !
புரிதலுக்கு நன்றி
இன்றைய காலத்தில் பால் வேறுபாடுகள் மாறி வருகின்றன.. ஆண் செய்தால் சரி.. பெண் செய்தால் சரியல்ல என்பன போய்விட்டது..
அயல்தேசங்களில் இருக்கும் இக்கலாச்சாரம் டெல்லி. மும்பை, பெங்களூரு, சென்னை என வந்துவிட்டது.. அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. இனி நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது பிற்போக்கு வாதம்..
தங்கள் சுயத்தில்தான் மானுடம் செழிக்கும்.. இந்தியா போன்ற பிற்போக்கான தேசத்தில் பெண்களே பெண்களுக்கு எதிரி....
நல்ல பதிவு.
// நம்மை பலர் உற்று நோக்குகிறார்கள் என்ற உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும், அவசியமானது கூட.//
இதை மனதில் எப்போதும் வைத்திருந்தாலே , சமுகத்தில் மதிக்கும்படி வாழ முடியும்.
பாராட்டுக்கள் கௌசல்யா.பெண்களின் அசாத்திய மனநிலையோடு சொன்ன அத்தனையும் உங்கள் துணிச்சல் !
* எல்லாவற்றுக்கும் மேல் நம்மை பலர் உற்று நோக்குகிறார்கள் என்ற உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும், அவசியமானது கூட.
* நமது உடைகள் பிறர் கண்களை உறுத்தாமல் இருந்தாலே சில பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
..... interesting...... Looks like, India hasn't changed much.
//Looks like, India hasn't changed much. /
எதற்காக மாற வேண்டும்
இன்றைய நாகரிக உலகில் பெண்கள் கால் பெரு விரல் பார்த்து குனிந்து நடக்கவேண்டியது தேவை இல்லைதான் ஆனால் பெற்றவர்களின் தலை குனியாமல் பார்த்து நடந்து கொண்டாலே போதும்...!!??
Still India lives ...
எதை வைத்து பிற்போக்கான தேசம் என்று சொல்கிறீர்கள் ???
//இனி நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது பிற்போக்கு வாதம்.. //
எப்படி வேணாலும் இருக்கலாம் என்பது சரியல்ல..
//வர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்//
சம்பாதிக்க ஆரம்பித்தால் ????
//ஆண் செய்தால் சரி.. பெண் செய்தால் சரியல்ல //
யார் செய்தாலும் தவறுதான்
முள் மேல் சேலை பட்டாலும், சேலை முள் பட்டாலும், சேதாரம் சேலைக்குத் தான்,... பெண்கள் எச்ச்சரிக்கயாகத்தான் இருக்க வேண்டும்..
நல்ல பகிர்வுக்கு, அறிவுரைகளுக்கு நன்றி கௌசல்யா
நல்ல கருத்துக்கள்.. நன்றி..
நல்ல பதிவு நன்றி கௌசல்யா
//அயல்தேசங்களில் இருக்கும் இக்கலாச்சாரம் டெல்லி. மும்பை, பெங்களூரு, சென்னை என வந்துவிட்டது.. அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. இனி நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது பிற்போக்கு வாதம்..//
பெண்ணை பற்றி பெண் சொன்னால் பிற்போக்கு வாதம்....சரி
பெண்ணை பற்றி ஒரு ஆண் சொன்னால் ஆணாதிக்க வாதமா...??
அப்ப யார்தான் சொல்வது ?
அமெரிக்க தேசத்தில் டீனேஜ் தாய்மார்களுக்கு என்று தனியாக பள்ளிகள் இருக்கின்றனவாம்......!!?? அந்த கலாசாரம் இங்கே வரும்வரை இந்தியா பிற்போக்கான தேசம் என்று சிலர் வேண்டுமானால் சொல்லிவிட்டு போகட்டும்
நன்றி செந்தில்.
இந்தியா பிற்போக்கான நாடு என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்திய கலாச்சாரத்தைதான் இன்று வெளி நாட்டவரும் பின்பற்ற முயலுகின்றனர் என்பது மிகைப்பட்ட இந்தியர்களுக்குத் தெரியாது.
மும்பையிலும், பெங்களூரிலும், சென்னையிலும் மாறிவரும் கலாச்சாரம் சற்றும் வரவேற்கப்படாத ஒன்றும்...ஆண்களைப் போல உடை உடுத்துவதிலும், மது அருந்துவதிலும், புகைப்பிடிப்பதிலும் தான் முன்னேறி இருக்கிறது.....
பெண்ணுக்கென்று சில இயல்புகள் இருக்கின்றன அது இயறைக் கொடுத்தது அதை மாற்றிக் கொள்வது மிகவும் வேதனையான விசயம்.......பிற்போக்கு என்று சொல்வதில்...மிகைப்பட்ட பெண்ணின் இயல்புகள் இருக்கின்றன...
கலாச்சாரம் மாறி வாழும் பெண்கள் எல்லாம் மன நலக் கோளாறுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்....
இப்படிப்பட்ட மாற்றம் நமக்குத்தேவையே இல்லை.... என்றுதான் நினைக்கிறேன்!
"நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?"
சரியான நேரத்தில், சரியான இடத்தில் உபயோகித்து உள்ளீர்கள்.
//கலாச்சாரம் மாறி வாழும் பெண்கள் எல்லாம் மன நலக் கோளாறுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்....//
தேவா, உங்களது கருத்து கண்ணோட்டம் வித்தியாசமாக தோன்றுகிறது, என்போன்ற பலருக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை என்று நினைக்கிறன் ....?
மாற்றம் என்று ஒன்று இல்லாத சமூகம்,... முன்னேற்றம் இல்லாத பிற்போக்கான நாகரீகமற்ற சமூகமாகத்தான் இருக்கும்.....? change is the development of life, development of society, development of the nation.!........! argument continues..................?
மாற்றத்தை ஏற்று கொள்ளாதவர்களே ,மனநல மருத்துவமனைக்கு செல்லவேண்டும்.....?
ஜோதி....@ பகிர்வுக்கு நன்றி நண்பரே...
மாற்றம் வரவேற்கக்கூடியதாய் இருந்தால்தான் அது நல்லது.... தொடை தெரியுமாறு நான் உடுத்துவேன் என்பது மாற்றமா? மேல் நாட்டு கலாச்சரம் என்று ஆணொடு கைகோர்த்து திரிவது மாற்றமா? ஆணும் பெண்ணும் ஒன்றாய் தங்கி பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்கின்றனறே இது மாற்றமா? பெண்களுக்கு மட்டும் நான் சொல்லவில்லை...
நீங்கள் சொல்லும் மாற்றங்கள் தாண்டி மனிதர்களின் இயல்புகள் என்று சில இருக்கின்றனவே...அது எப்படி மாறும்.....? எல்ல படைப்புகளுக்கும் இயற்கையிலேயே குணாதிசயங்கள் இருக்கின்றன....சிங்கம் என்றால் பிடறி முடியும் யானை என்றால் தந்தமும் குணமும் இயற்கையில் வந்தது.....இது எப்படி மாறும்....
எத்தனை மாற்றங்களை நாம் கொண்டு வந்தாலும் பெண் இனம் தான் கருத்தரிக்கிறது.....இதை மாற்றி ஏதாவது செய்தீர்களானால்..அது மாற்றம் அல்ல இயற்கைக்கு எதிரான செயல்...
அறிவியலையும் நவீனத்தையும் புது புது கண்ணோட்டங்களையும், புதிய யுத்திகளையும் தொழில் நுட்பங்களையும் புரட்சிகளையும் மாற்றமாய் கொண்டு வரவேற்கும் அதே நேரத்தில்....
மனிதனின் இயல்புகளும் மாறினால் வரவேற்றுத்தான் ஆக வேண்ணும் என்று கூறுவது விந்தையிலும் விந்தை....எது மாறினாலும் பூமி வலமிருந்து இடம் தான் சுற்றும்.... அது மாறினால்.....விளைவுகளும் மாறும்.....
இயல்புகள் இயற்கை கொடுத்தது....அது ஏன் மாறவேண்டும்....எல்லோரும் சந்தோசமாய் இருக்கும் ஒரு தருணத்தில் உங்களுக்குள் ஒரு சோகம் என்றால்.. நீங்கள் அழுவதுதான் இயல்பு..சிரித்தால் அது நடிப்பு....
நன்றி ஜோதி...பகிர்வுக்க்கு.......அப்போ...வர்ட்டா.....!
//change is the development of life, development of society, development of the nation.!........!//
Jothi.. @ I uderstand you quote.... but my concern is all the changes are not good....! for example tomorrow .. the terroist take over the country... you can say that all so the change but it't not in positive way...
We can not accept it.. right...?
We need a change in positive way with productivity....
tats all!
திரு ஜோதி நண்பர் அவர்களே,
///மாற்றம் என்று ஒன்று இல்லாத சமூகம்,... முன்னேற்றம் இல்லாத பிற்போக்கான நாகரீகமற்ற சமூகமாகத்தான் இருக்கும்.....? change is the development of life, development of society, development of the nation.!........! argument continues..................?///
நம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் , கவர்ச்சியற்ற, ஆபாசமற்ற, எந்தவகையான ஆடை மாற்றத்தையும் வரவேற்கிறோம்.அதே சமயத்தில் உடலை மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காமல்,வெளிக்காட்டும் விதமாக கவர்ச்சியான விதத்தில் ஆடை அணிவதும்,உடலின் அத்தனை மேடுபள்ளங்களையும், அப்பட்டமான வகையில் காட்டும் இறுக்கமான ஆடைகளை அணிவதும், மிகவும் குறைவான அளவில் ஆடை அணிவதும் நம் கலாச்சாரமல்ல.இவை எல்லாம், விரைவில் உணர்ச்சியை தூண்டாத குளிர் பிரதேசங்களான ஐரோப்பிய நாடுகளுக்கே பொருந்தும்.இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இந்த வெளிநாட்டு கலாச்சார உடை உகந்ததல்ல.இங்கே இருக்கும் ஆண்கள் அனைவரும் விவேகானந்தரோ,ஏசுவோ,புத்தரோ அல்ல.மூன்று வயது பெண் குழந்தையைக் கூட பலாத்காரம் செய்து கொல்லும் ஆண்களும் நடமாடும் உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தேவா சார்,
உங்கள் இரண்டு பதில்களுமே மிகவும் அருமை.
தேவா நீங்கள் நிறைய படிப்பவர் நல்ல புரிதல் உள்ளவர் என்று நினைத்தேன். எனக்கு சிறிது அதிர்ச்சிதான். பெண்கள் எப்போதும் சரியாகவே செயல்படுகிறார்கள். ஆதிகாலத்தில் பெண் உலகத்தை செலுத்தியபோதும் சரியாகவே தனது பணியைச் செய்தாள். பிறகு ஆண்களால் வீட்டிற்குள் முடக்கப்பட்டபோதும் அமைதியே காத்தாள். பிறகு ஆண்களே அவர்கள் திறமை வீணாகவேண்டாம் வெளியே விடலாம் என்று வெளியே அனுமதித்தபோதும் தனது பணியை சரியாகவே செய்கிறாள்.
நீங்கள் சொல்வது ஒருசில விதிவிலக்குகள். கோடானுகோடி பெண்களில் சில பெண்களை சுட்டிக்காட்டி எல்லோரையும் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. பெண்தான் உலகத்தைக் காப்பவள் எப்போதும்.
ஜெயந்தி....@ ஒரே ஒரு கேள்வி....
நான் என்ன சொல்லவருகிறேன் என்று உங்கள் புரிதலை விளக்குங்கள்...! உங்களின் புரிதலில் சிறு சறுக்கல் இருக்கிறது.....
@ஜெயந்தி
பெண்தான் உலகை காப்பவள். சக்தி இல்லாமல் சிவம் இல்லை .. அதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம்.. அதில் எந்த கருத்து வேறுப்படும் இல்லை
தேவா சொன்னதில் என்ன தப்பு என்று எனக்குப் புரிய வில்லை?? இங்கு யாரும் பெண்களை அடக்க முயலவில்லையே ? ஒரு சிலக் கட்டுபாடுகள் வேண்டும் என்றுதானே சொல்கிறார்கள் ?? அதில் என்ன தவறு??
ஒரு சில விஷயங்களில் கட்டுபாட்டுடன் இருப்பது தவறு இல்லை . முக்கியமாக உடை மற்றும் ஆண் நண்பர்கள் விஷயத்தில் . பழக வேண்டாம் என்று யாரும் சொலல் வில்லை, பழக்கம் எல்லையை மீறக் கூடாது என்பதே எங்கள் விருப்பம்
திரு ஜோதி அவர்களுக்கு
நண்பர் தேவா , நல்ல மாற்றங்கள் தேவையில்லை என்று சொல்லவில்லை. மோசமான சீர்கேடான கலாச்சார மாற்றம் தேவையில்லை என்பதே கருத்தாக சொல்லப்பட்டது. கருத்தை சரியாக உள்வாங்கி கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
தவிரவும் அனைத்து பெண்களையும் குறிப்பிடவில்லை.... ஒரு சில பெண்களை பற்றிய சில ஆதங்கம் (கள்) தான் முழு பதிவின் உள்ளடக்கமே .........
//நீங்கள் சொல்வது ஒருசில விதிவிலக்குகள். கோடானுகோடி பெண்களில் சில பெண்களை சுட்டிக்காட்டி எல்லோரையும் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. பெண்தான் உலகத்தைக் காப்பவள் எப்போதும்//
ஒரே ஒரு செய்தி...@ நான் சொல்வது பெண்களுக்கு மட்டுமல்ல....ஆண்களுக்கும் சேர்த்துதான்.....!
//மாற்றம் வரவேற்கக்கூடியதாய் இருந்தால்தான் அது நல்லது.... தொடை தெரியுமாறு நான் உடுத்துவேன் என்பது மாற்றமா? மேல் நாட்டு கலாச்சரம் என்று ஆணொடு கைகோர்த்து திரிவது மாற்றமா? ஆணும் பெண்ணும் ஒன்றாய் தங்கி பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்கின்றனறே இது மாற்றமா? பெண்களுக்கு மட்டும் நான் சொல்லவில்லை...//
ஒருசில பெண்கள் இப்படிச் செய்வதை சுட்டிக்காட்டி எல்லாப்பெண்களையும் வீட்டிற்குள் அடைக்கப்பார்ப்பதுபோல் தோன்றுகிறது.
dheva@@@@மாற்றம் வரவேற்கக்கூடியதாய் இருந்தால்தான் அது நல்லது.... தொடை தெரியுமாறு நான் உடுத்துவேன் என்பது மாற்றமா?//
இதையல்லாம் கேட்டால் ஆணாதிக்கம் சொல்வார்கள்
//ஒருசில பெண்கள் இப்படிச் செய்வதை சுட்டிக்காட்டி எல்லாப்பெண்களையும் வீட்டிற்குள் அடைக்கப்பார்ப்பதுபோல் தோன்றுகிறது//
appadi engaium kuripidavillai
ஜெயந்தி அக்கா,
என்ன அக்கா இப்படி கோபப்படுறீங்க, அவரோட பின்னூட்டத்துல தான் தெளிவா , பெரிசா
//பெண்களுக்கு மட்டும் நான் சொல்லவில்லை...//
அப்டின்னு போட்டு இருக்காரே, நீங்க ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுரீங்கன்னு தெரியலையே,
//தேவா நீங்கள் நிறைய படிப்பவர் நல்ல புரிதல் உள்ளவர் என்று நினைத்தேன். எனக்கு சிறிது அதிர்ச்சிதான்.//
ஏங்க அக்கா, ஒருவர் சொல்லும் கருத்து உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் அறிவில் சற்று பின் தங்கி உள்ளார் என்று நீங்க நினைப்பது,உங்க அறிவு இன்னும் ஒரு சிறு வட்டத்துக்குள்ள தான் இருக்கு என காட்டுகிறது,
மகனே விஜய்
நான் எங்க தேவாவ அறிவில் குறைந்தவர் என்று சொன்னேன். மகனே சண்ட மூட்டிவிடப்பாக்குறீங்களா? (சும்மா விளையாட்டுக்குத்தான்.) நீங்கதான் சந்தடி சாக்குல என்ன அறிவு குறைந்தவள் என்று சொன்னீர்கள் புரிகிறதா? (அதற்காகவும் நான் கோபப்படமாட்டேன். நான் சும்மா வந்து விழும் வார்த்தைகளை பெரிதுபடுத்துவதில்லை.) (கொஞ்சம் உண்மையும் அதுதானே.) நான் டென்ஷனாகவெல்லாம் பேசவில்லை. என் மனதில் பட்டதை கேட்டேன்.
அமைதி.. அமைதி...
புரிதலுக்காக...கொஞ்சம் எழுதுகிறேன்.......
பெண்கள் இன்று வெளியே வந்து ஆண்களுக்கு இணையாக எல்லாத்துறைகளிலும் பணிபுரிவதால் தான் இந்தியாவின் பொருளாதரம் முன்னேறி இருக்கிறது இது முற்றிலும் ஆய்வு செய்து பெறப்ப்பட்ட தகவல்.
கட்டுரையின் போக்கும் கருத்துக்களின் போக்கும் வேறு எங்கோ பயணித்து விடக்கூடாது என்பதற்காக சொல்கிறேன்....
ஆணாதிக்கம், பெண்ணுரிமை இரண்டுக்கும் அப்பாற்பட்டு பேசுவது ஒரு ஆரோக்கியமான அதி நவீன முற்போக்கு வாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மாற்றம் என்ற பெயரில் டேட்டிங் போகும், குடித்து சீரழியும், மனித உரிமைகளை மீறும், அத்துமீறலாய் பொதுவெளியில் உடையணியும், அகங்காரம் கொண்ட ஆண்களும் சரி....பெண்களும் சரி....ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவர்கள்.
நான் கெளரவமாய் உடை உடுத்தி நல்ல பையனாய் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று என் சகோதரி நினைப்பாள்....இது என்னை அடக்கும் செயல் அல்ல....அதே நேரத்தில் என் சகோதரியும் கெளரவமாய் தெளிவாய்... உறுதியாய்...வெளியில் செல்லவேண்டுமென்று நினைப்பேன்.....என் மகளும் அப்படி இருக்க வேண்டுமென்று நினைப்பேன்...இது ஆணாதிக்கம் இல்லை.
மற்றபடி அவர்களை உயர்கல்விகள் கற்க வைப்பேன்....! தற்காப்பு கலைகள் சொல்லிக் கொடுப்பேன்... பாரதி சொன்ன திமிர்ந்த ஞானச்செறுக்கு கொண்ட நிமிர்ந்த நேர் நடை கொண்ட....ரெளத்ரம் பழகிய புரட்சிப் பெண்களாக இருப்பதில்...எமக்கு சரிக்கு சமமாக உதவுவதி; அவகளி ஆலோசனைகள் கேட்பது என்று...எல்லாமே எதிர் பார்ப்பேன்....
அவர்களும் என்னிடம் அது போலவே எதிர்பார்ப்பார்கள்...ஆனால்...சீர்கேடான விசயங்களை ஒரு தாய் மகனிடமும் தந்தை மகளிடமும் அனுமதிக்கவே மாட்டார்கள்...
இது தான் ஜெயந்தி நான் சொல்ல வந்ததின் சாரம்.....! அறிவில் விளங்காதவெனினும் ஒரு நல்ல மனிதராய் வாழத்தான் எமது ஆசைகள் எல்லாம்....!
உங்களின் கருத்தை மதிக்கிறேன்.... மிக்க நன்றி தோழி... ! கண்டிப்பாய் பெண்ணடிமை பார்வை கொண்டவனல்ல.. நான்..
விடியும் திசைகள்
எல்லாம் மானுடம்
கூடிச் சமைத்தது..
ஆணெண்றும் பெண்ணென்றும்
பாகுபாடு சமைத்தாலும்
ஆத்மா ஒன்றன்றோ....?
அப்போ வர்ட்டா....!
மிக சரியான புரிதல்..... :)
இங்கு தோழி Kousalya அவர்கள், இங்கு பெண்களை பற்றி ஏதும் தவறாகச் சொல்லவில்லை, மேலை நட்டுகலாச்சாரம் என்கிற பேரிலும், நாகரீகம் என்கிற பேரிலும், சில பெண்கள் கடைபிடிக்கும் சில தவறுகளை சுட்டிகாட்டியுள்ளார்(ஆண்களுக்கும் இது பொருந்தும்), ஒரு பெண்ணாக இதை தைரியமாக எழுதியதற்கு என் நன்றிகள். அதனால் தான் இங்கு ஆரோக்யமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, இதில் சொல்லப்பட்டதில் பாதியை ஒரு ஆண் எழுதியிருந்தால், அது ஆணாதிக்கமாக கருதப்பட்டு இங்கு விவாதங்கள் திசைமாறிப்போயிருக்கும். யதார்த்தமன சில குறைகளை சுட்டிக்காட்டும்போது, அதுவும் பொதுவில் எல்லோரயும் சொல்லாமல், குறிப்பிட்ட சிலரைப்பற்றி கூறும்போது ஏற்றுக்கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது.
மாற்றம், தவிர்க்கமுடியாததுதான், அடிப்படையான நல்ல கலாச்சாரத்தை, மனிதாபிமனத்தை,முன்னேற்றத்தை பாதிக்காதவரயில் எந்த மாற்றத்தயும் ஏற்றுக் கொள்ளலாம்.
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
இன்றைய காலத்தில் பால் வேறுபாடுகள் மாறி வருகின்றன.. ஆண் செய்தால் சரி.. பெண் செய்தால் சரியல்ல என்பன போய்விட்டது..
அயல்தேசங்களில் இருக்கும் இக்கலாச்சாரம் டெல்லி. மும்பை, பெங்களூரு, சென்னை என வந்துவிட்டது.. அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.. இனி நீ இப்படிதான் இருக்க வேண்டும் என்பது பிற்போக்கு வாதம்...//
தோழரே, அயல்நாட்டிலிருந்து, மும்பை டூ சென்னை வரை ப்ரவியிக்கும் கலாச்சாரத்தில் பெரும்பாலானவை , அந்த அயல்நாட்டினரே வெறுப்பவைதான்... அவர்களிடமிருந்து கற்ற நல்ல விசங்களுக்கு இங்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நினைவில்லை. சம்பாதித்தால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதுதான் முற்போக்கா?!!!!!!( நான் ஆண்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்).
நண்பரே இதை, என்னுடைய எதிர்கருத்தாக மட்டும் எடுத்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் இப்பதான் மறுபடி வருகிறேன் அதுக்குள்ளே இவ்வளவு நடந்துவிட்டத??
மாற்றம் என்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்று என்பதே என்னுடைய கருத்து ....
வீட்டுக்குள்ளே முடங்கிக்கொண்டு இருந்தபெண்கள் இப்போது ஆண்களுக்கு சமமாக எல்லதுறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்...... நல்ல மாற்றத்தை மட்டுமே நான் குறிபிடுகிறேன் , சில அநாகரீகமான மாற்றத்தை நான் அல்ல, எந்த பெண்ணுமே விரும்ப மாட்டார்கள். நல்ல சிந்தனைகளை பரவ செய்வோம்...
தேவா நீங்கள் என்பதால் மட்டும்தான் தான் இங்கு தர்க்கம் செய்கிறேன். பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் எந்த விதத்திலும் பரிபோய்விடக்கூடாது என்பதின் பதற்றம்தான் நான் வாக்குவாதம் செய்தது. மற்றபடி உங்களை நிறைய புரிந்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் உங்கள் சிந்தனை அனைத்தும் நான் மதிக்கும் ஒன்று. நீங்கள் பெண்கள் மீதும் அவர்கள் வளர்ச்சி மீதும் மாற்றுக் கருத்துக்கொண்டவரில்லை என்பது எனக்கு தெரியும். சில விஷயங்களை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ள பயத்தாலேயே சொன்னேன். மற்றபடி நான் சொல்லியது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.
ஜெயந்தி...ஐயோ...என்னங்க..மன்னிப்பு அது இதுன்னு....
உங்களின் கேள்வி தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கு. நிறைய பேருக்கு ஒரு புரிதல் வந்து இருக்கும்.....! உங்களின் அன்பான தாயுள்ளம் நானறிவேன் தோழி....
உங்கள் ஊக்கம் எனக்கு எப்போதும் உண்டு...! நன்றி தோழி!
ஆமா மெட்ராஸ்ல அதிகமா விக்கிற மாத்திரையில ஐ-பில் லும் ஒண்ணுன்னு ஒரு மாகஸின்ல பாத்தேன்1 வாழ்க பெண்சுதந்திரம்!
Post a Comment