கல்வி என்பதன் சாரத்தை விளங்கிக் கொள்ளவே முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களை நிறுத்தி...கற்கும் கல்வி வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன் தந்தது அல்லது வாழ்க்கையை எதிர்கொள்ள எப்படி எல்லாம் கல்வி உதவியது என்ற கேள்வி கேட்டால்....ஒரு கணம் ஸ்தம்பித்து மழுப்பலாய் எதேதோ பதில்கள்தான் வரும்.
ஒரு கிராமப்புற கல்லூரியில் ப்ரக்டிகள் கிளாஸையே தியரியாக திணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு எதார்த்த உலகில் அவனின் கல்வி எப்படி அவனுக்கு உதவும்....? தம்பி அருண் பிரசாத் மருத்துவ துறையில் தொழில் நுட்ப பொறியாளராய் இருக்கிறார்.. மொரிஷியஷில் இருக்கும் தம்பியின் கல்வி முறை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.....இதோ உங்களுக்காக தருகிறோம்...!
சில வாரங்களுக்கு முன் நம் கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரு பதிவு போட்டிருந்தார்.அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்அறையப்படுகிறது...!!
கழுகுக்காக
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்அறையப்படுகிறது...!!
என்ற வைரமுத்து கவிதையில் “ஆணி” என்பது “கடப்பாரை” என மாற்றப் பட வேண்டும் என்று. அன்று இரவு அவருடன் கதைத்த போது பல சிந்தனைகள் கல்விமுறை குறித்து எழுந்தது. எம்முடைய ஆதங்கங்கள் இதுதான்.
நாம் குழந்தைகளுக்குத் தேவையானதை கற்றுதருகிறோமா? உண்மையிலேயே அவர்கள் அதை புரிந்துப் படிக்கிறார்களா?
குழந்தைகளை ஒரு கற்கும் மனிதர்களாக பார்க்காமல், ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாறிவிட்டார்கள். உதாரணமாக ஒரு கம்பியூட்டர் புரொகிராமை எடுத்துக் கொண்டால் எத்தனைப் பேர் அதைப் புரிந்து எழுதுகிறார்கள். ஒரு அவுட்புட்டை பல விதங்களில் கொண்டு வரலாம். செய்கிறார்களா? இல்லையே, ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களின் விடையும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அப்படி இருக்கவே ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களை அவுட் ஆப் பாக்ஸ் யோசிக்கவிடுவதில்லை.
பள்ளிகள்:
நம்ம பிங்கி ரோஸ் தன் பதிவில் சொன்னது போல மாரல் சயின்ஸ், ஸ்போர்ட்ஸ், கிராமர் கிளாஸ் போன்றவை தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் குறிக்கோள் பரிட்சை ரிசல்ட் மட்டுமே, நியூஸ் பேப்பரில் தங்கள் பள்ளி 100% தேர்ச்சி என விளம்பரப்படுத்துவதில் தான் இருக்கிறது. கல்வி, மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று தான் சொல்லவேண்டும்.
ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் தங்கள் கடமைக்காக கற்று கொடுப்பதாக நினைப்பதை விடுத்து ஒரு எதிர்கால தூணை செதுக்குவதாக நினைக்க வேண்டும். ஆனால், பாவம் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். பல தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்திற்குக் கத்துக்குட்டிகளை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்களும் பெரியதாய் எதுவும் நடத்த விரும்பிவது இல்லை. அரசாங்க ஆசிரியர்களை சொல்லவே வேண்டாம், சில நல்லாசிரியர்களை தவிர பிறர் வீட்டில் டியூஷன் எடுத்து சம்பாதிக்கிறார்கள். பள்ளியை மறந்து விடுகிறார்கள். மொரிசியஸில் எந்த பள்ளிக்கு ஆசிரியராக செல்ல வேண்டுமானாலும் அரசாங்க லைசன்ஸ் பெற வேண்டும். தகுதி உள்ளவர்கள் மட்டுமே பெற்று போதிக்க முடியும்.
பெற்றோர்: மற்றவர்களை குறை சொல்வதை விட நம்மை பற்றி யோசிப்போம். எத்தனை பேர் தன் பிள்ளைகளுடன் அமர்ந்து பாடம் சொல்லி கொடுக்கிறோம்? எத்தனை முறை பள்ளிக்கு சென்று அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என கேட்டு இருக்கிறோம்? பிள்ளைகளை சொந்தமாக பதில் எழுத சொன்னது உண்டா? புத்தகங்களை படிக்க சொன்னது உண்டா? உடன் அமர்ந்து படித்தது உண்டா? பிள்ளைகளுடன் பள்ளி, பாடம், நண்பர்கள் பற்றி பேசியது உண்டா? நேரம் இல்லை என்று சொல்வது தவறு, நம் பிள்ளைக்கு நாம் நேரம் ஒதுக்காமல் யார் ஒதுக்குவார்கள்.
அரசாங்கம்:
நம் நாட்டில்தான் CBSE, Matric, State என கல்வியிலும் பிரிவுகளை வைத்து உள்ளோம். ஏன் இந்த நிலை? நல்ல Backgroundல் இருந்து வரும் பையன் CBSE படிப்பதும், கிராமத்து மாணவன் State Board ல் படிப்பது ஏன்? State board ல் 8 வது வகுப்பில் படிப்பதை CBSE ல் 3 வதிலேயே கற்றுகொடுக்கிறார்கள். Right for Education இப்பதான் கொண்டுவந்துருக்காங்க, இதுக்கு மேல ஒவ்வொன்றாக மாற்றவேண்டும்.
நம் நாட்டில்தான் CBSE, Matric, State என கல்வியிலும் பிரிவுகளை வைத்து உள்ளோம். ஏன் இந்த நிலை? நல்ல Backgroundல் இருந்து வரும் பையன் CBSE படிப்பதும், கிராமத்து மாணவன் State Board ல் படிப்பது ஏன்? State board ல் 8 வது வகுப்பில் படிப்பதை CBSE ல் 3 வதிலேயே கற்றுகொடுக்கிறார்கள். Right for Education இப்பதான் கொண்டுவந்துருக்காங்க, இதுக்கு மேல ஒவ்வொன்றாக மாற்றவேண்டும்.
நல்ல கல்வி பெற வேண்டும் என்பதற்காக CBSE யில் அனைவராலும் சேர்க்கமுடியாது. செலவும் அதிகம், சேர்த்துக்கொள்ள அவர்கள் போடும் ரூல்ஸும் கொடுமை. ஒரு நாள் நம்ம ஜெயக்குமார் கூட பேசியபோது சில விஷயங்கள் தெரியவந்துச்சு, LKG சேர்க்க குழந்தைக்கு இண்டர்வியு, வீடு 2 கிலோமீட்டருக்குள்ள இருக்கணும், அட்ரஸ் புரூப் கொடுக்கனும், 4 மணிக்கு க்யூல நின்னு அப்ளிகேஷன் வாங்கனும், இப்படி பல. அது இல்லாம, சேர்த்த பிறகு LKG குழந்தைக்கு டிசிப்பிளின் இருக்கனுமாம், சொன்ன பேச்சை கேட்கலைனா வீட்டுக்கு ஆஜர் நோட்டீஸ் அனுப்புறாங்கலாம்
12வது படித்து வெளியில்வரும் மாணவன், அவனுக்கு வயசு 18. ரயில் டிக்கெட் புக் செய்ய தெரியாது, பாங்க செலான் எழுத தெரியாது. ஆனா, ஓட்டு மட்டும் போடலாம். அரசியல் மட்டும் அவனுக்கு என்ன தெரியும்.
என்ன நடக்கிறது நம்ம நாட்டில்? கண்டிப்பாய் கல்விமுறை மாறவேண்டும்.கழுகுக்காக
27 comments:
//12வது படித்து வெளியில்வரும் மாணவன், அவனுக்கு வயசு 18. ரயில் டிக்கெட் புக் செய்ய தெரியாது, பாங்க் சலாம் எழுத தெரியாது. ஆனா, ஓட்டு மட்டும் போடலாம். அரசியல் மட்டும் அவனுக்கு என்ன தெரியும்.//
சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்....கன்னத்தில் அறைகிறது ஒவ்வொரு வார்த்தையும்...
நல்ல பதிவு அருண். வாழ்த்துக்கள். இந்தியாவின் கல்வி முறை மாற வேண்டும். நீங்கள் சொல்லும் கொடுமைகள் அதிகம் நடப்பதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில்தான். அதுவும் LKG வகுப்பிற்கு நுழைவு தேர்வு.. கொடுமையிலும் கொடுமை
பெற்றோர்களின் மனப்பான்மை மாற வேண்டும் நூற்றுக்கு நூறு எடுத்தால் தான் புத்திசாலி என்ற நிலை மாற வேண்டும்
என்னைப் பொறுத்த வரை பெற்றோர்களின் மன நிலை மாற வேண்டும்.!
தங்களது பிள்ளைகள் அதிகள் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக சில தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். அந்த பள்ளிகளில் குறிப்பாக 12 ஆம் வகுப்பு பாடங்களை 11 ஆம் வகுப்பு ஆரம்பத்திலேயே எடுக்க ஆரம்பிப்பதுடன் இதுதான் உனது எதிர்காலம் , வாழ்க்கை என்றெல்லாம் பயமுறுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்களிடம் தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது.
அருமையான பதிவு அண்ணா ..!!
கல்வி முறை மாற வேண்டும் எனில் நிறைய மாற வேண்டும்...... அப்புறம் தான் கல்வி முறை மாறும்....
முற்றிலுமாக மாறவேண்டும் இது
பனிரெண்டாம் வகுப்புக்கு வரும் போது தான் பிராக்டிகல் என்ற ஒன்று இருப்பது தெரிய வருது(அதுவும் அரசுத் தேர்வு இருப்பதால தான்)
இத்தன வருசமா எதையும் கண்ணுளேயே காட்டாம அப்ப காட்டி எக்ஸ்பெரிமெண்ட் செய்யுனா என்ன வரும் பயம் தான் வரும்
அரசு பள்ளிகள் முதற்கொண்டு செய்முறை பயிற்சியை அதிகரிக்க வேண்டும்,அடித்தளத்திலிருந்து அதை நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும்
பார்போம் மாறுமா நம் கல்விமுறை :)
அருண், நமது கல்விமுறையில், என்ன படிக்கிறோம் என்று புரிந்து படிப்பதை காட்டிலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கமே முதல் குறிக்கோளாக இருக்கிறது. இது கல்லூரியுலும் தொடர்வதுதான் வேதனை. இதிலும் கலைக்கள்ளுர்ரியில் படிக்கும் அரிவியல் படிப்புகள்கூட எதற்கு படிக்கிறோம், இங்கு படிப்பதை எங்க செயல்படுத்த போகிறோம் என்ற தெளிவுகள் இல்லை. தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் இந்த நிலைமை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
சமீபத்தில் பொறியியல் முடித்த ஒருவர் வேலைக்கா இண்டெர்வியூவுக்க் வந்தபோது, அவர் பயோ-டேட்டாவில் தெரியும் என்ரு போட்டிருந்த, ஒண்ரை பற்றி கேள்வியாக கேட்ட போது, அது 3-வது செமஸ்டரில் படித்தது சார், இப்ப அது மரந்து போச்சு என்று பதில் வந்தது. ஆக எதற்கு படிக்கிறோம் என்பதை விட, தேர்வில் பாஸாக வேண்டும் என்ற முனைப்பே அவரிடம் இருந்துள்ளது.....( எனது பதிவைப் போலவே பின்னூட்டமும் நீளமாகிவிட்டது:))
வரிக்கு வரி உடன்படுகிறேன்.
சிந்திக்க வைக்கும் பதிவு..
கண்டிப்பாக மாறியே ஆகவேண்டும் ...
@ kousalyaa & lk
நன்றி
@ செல்வா
ஆமாம், அதனால் தான் இதில் மாணவர்களை குறை சொல்லவில்லை
திறனாய்வு செய்து பாராட்ட தெரியவில்லை...... நல்ல சமுக சிந்தனை உள்ள பதிவு.... நன்றி அருண்...
@ சங்கவி
எவை மாற வேண்டும் என விளக்கினால் நன்றாக இருக்கும். உங்கள் கருத்துக்கு நன்றி
@ ஜில்தண்ணி
உண்மை
சில மாதங்களுக்குப்பின் இதே கல்வி முறை பிரச்னை இந்தியாவில் நடந்தது . நானும் விரைவில் சில புதிய மாற்றங்கள் வரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் . ஆனால் அதுவோ முதல்வன் படத்தில் சொல்வதுபோல் நான் உக்காந்திருக்கும் நாற்காலியின் நான்கு காலங்களும் எனக்கு சொந்தமில்லை . ஒன்று சாதி கட்சிக் காரனுடையது . மற்றொன்று நாம் ஆட்சி நடத்த பணம் தரும் பணக்காரகளுடையது என்பதுபோல ஆகிப்போனதுதான் மிச்சம் . நண்பர் சங்கவி சொன்னதுபோல் கல்வியில் மாற்றம் வரவேண்டும் என்றால் இன்னும் பல துறைகளில் பல மாற்றங்கள் வேண்டும் என்பதுதான் உண்மை . சமூக அக்கறை உள்ள பதிவுதான் . அடிக்கிற மணியை அடித்துவைப்போம் . பகிர்வுக்கு நன்றி
@ ஜெய்
ஆமாம், பல பாடங்கள் வாழ்க்கைக்கு உபயோகப்படுவதில்லைதான் ஆனால் அவற்றை புரிந்து படித்தால் மனதில் நிற்கும்.
@ வெங்கட் & கே ஆர் பி
நன்றி
@ Terror
சிந்திச்சா சரி
@ பனித்துளி சங்கர்
ஆமாம் உண்மைதான், கல்விதான் மனிதனை மேம்படுத்துகிறது. அதை சரியான முறையில் கொடுக்கவேண்டும் என்றால் எதையும் மாற்றலாம். மாற்றவேண்டும்.
@ பெ. சொ. வி
நன்றி
மாறணும்.. ஆனா மாறாது :((((
சிந்திக்க வைக்கும் பதிவு..
அருமையான பதிவு அருண்...சிந்திக்க வேண்டிய ஒன்று, அடித்தளம் சரியாக அமைந்தால் நிச்சயம் மேல் தளம் சரியாக அமையும்.இப்பொழுது தான் இது போன்ற அக்கினி குஞ்சுகள் பிறக்க ஆரம்பித்திருக்கின்றன, நிச்சயம் இவைகள் தீ மூட்டும் ஒரு நாள் என உறுதியாய் சொல்கிறேன்..
அருமையான பதிவு அருண். வாழ்த்துக்கள் ...
நீங்க சொல்லுறது கசப்பான உண்மை நமது அரசாங்கம் எப்பொழுது இதை உணருமோ தெரியவில்லை...ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை. பேசாம அந்த கால குருகுல கல்வி முறையே இருந்து இருக்கலாம்...
எனக்கு இன்னி வரை அந்த பேங்க் பத்தி ஒண்ணுமே தெரியாது...சில விஷயங்கள் அன்றாட வாழ்க்கை கல்வி ஒன்று கண்டிப்பாக வர வேன்டும்...
சிந்திக்க வைத்தது..நன்றி தோழரே..
correct thoughts :)
நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே. இப்போ சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்திருக்காங்க பார்ப்போம்.
//12வது படித்து வெளியில்வரும் மாணவன், அவனுக்கு வயசு 18. ரயில் டிக்கெட் புக் செய்ய தெரியாது, பாங்க செலான் எழுத தெரியாது. ஆனா, ஓட்டு மட்டும் போடலாம். அரசியல் மட்டும் அவனுக்கு என்ன தெரியும்.//
இந்த கோபம் ரொம்ப நாளா உண்டு. இதெல்லாம் பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும். வாழ்த்துக்கள் அருண்...
நல்ல பதிவு சார்!
ஆமாமா... மாறணும்... வேற என்னாத்த சொல்றது??!!
hai arun am madhan chandran vijay tv program producer...kalvi kalam nu oru program start panrom athuku unga la interview pannanum...any time u pls call me 8939086764
Post a Comment