Saturday, August 07, 2010

கழுகின்......அதிரடி அரசியல் பார்வை...!



பெரிய போராட்டங்கள் நடத்தினால்தான் அல்லது தெருவிற்கு தெரு சுற்றி மைக் பிடித்து மக்களை கவருமாறு கத்தி கத்தி பேசினால்தான் இல்லை ஊருக்கு காட்டுகிறேன் பேர்வழி என்று தெருவை இறங்கி சுத்தம் செய்வது என்பதெல்லாம் சமூக அக்கறையாக கொள்ளும் பட்சத்தில், மனிதனின் மனதில் இருக்கும் அறியாமைப் பேயை விரட்ட தீப்பந்தம் கொளுத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டம் செய்வதும் சமூக அக்கறைதானே...
சமகால அரசியல் பற்றி தம்பி செளந்தரிடம் விவாதித்துக் கொண்டிருந்த போது தம்பியின் சாட்டையடி வார்த்தைகளில் கொஞ்சம் சுறுசுறுப்பாகி....ஒரு கட்டுரை வடிவில் எழுதி கொடு என்று கேட்ட 30 நிமிடத்தில் கட்டுரை ரெடி....
செளந்தரின்..அரசியல் அதிரடி இதோ...உங்களுக்காக!






இன்னும் தேர்தல் வருவதற்கு சில மாதங்களே இருக்கிறது....இவர்களும் அறிக்கை சண்டை போய்.. இப்போது தெருவில் இறங்கி சண்டை போடுகிறார்கள்.. ஓரு நாள் தி.மு. க.. அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், மறுநாள் அ.தி.மு.க..திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களுக்கு மேலும் துன்பம் அளிப்பார்கள்...




ஜெயலலிதா செய்யும் தவறுகள்: பெட்ரோல் விலை ஏறும் போது இவர் எந்த போராட்டமும் நடத்தாமல் சும்மா மலை மீது உட்கார்ந்து கொண்டு அறிக்கை மட்டும் விடுவார் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அவரே வந்து தெருவில் போராட்டாம் நடத்தினார்..அவர் கைது செய்யப்பட்டார்.... ஓரு எதிர்க்கட்சி என்பது அப்படி தான் இருக்க வேண்டும்..சும்மா AC அறையில் உட்கார்ந்து கொண்டு கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று சொல்லிவிட்டு செல்லக்கூடாது...




எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஓரு முறை நல்லது செய்தாலும் சரி கெட்டது செய்தாலும் சரி ஆட்சியை மாற்ற போகிறார்கள் அதற்க்கு எதுக்கு போராட்டம் எல்லாம் செய்து கொண்டு...என்று உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்...காரணம், ஜெயலலிதா வந்து போராட்டம் செய்து அதிசயமாக பெட்ரோல் விலையை குறைத்து விட்டால், ஓட்டு கேட்கும் போது இவர்கள் பெட்ரோல் விலை உயர்த்திவிட்டார்கள் என்று சொல்லி ஓட்டு கேட்கமுடியாதே .


தி.மு.க 5 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தார்கள் என்று அ,தி,மு,க வை ஆட்சி செய்ய அனுப்பினால் அ,தி,மு,க 10 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கிறார்கள்.. தி.மு.க தலைவர் இவர்கள் ஆட்சியில் ஊழல் நடகிறது என்று அறிக்கை விடுவார் ...அதுக்கு இந்த அம்மா நீங்க அந்த திட்டத்தில் இவ்வளவு கொள்ளை அடித்தீர்கள் இந்த திட்டத்தில் கொள்ளை அடிதீர்கள் என்று பதில் அறிக்கை விடுவார்...இருவரும் கொள்ளை அடித்ததை மறுக்க மாட்டார்கள்



அடுத்த தேர்தல் வரும் இதுக்கு தி,மு,க,கட்சியே பரவயில்லை 5 ஆயிரம் கோடி தான் கொள்ளை அடித்தார்கள் என்று அவர்களுக்கு ஓட்டு போடுவோம்....அடுத்து அவர்கள் வந்து 20 ஆயிரம் கோடி கொள்ளை அடிப்பார்கள் ....அட இவர்கள் 20 ஆயிரம் கோடி என்றால், அவர்கள் 50 ஆயிரம் கோடி என்று ஏறி கொண்டே போகிறதே தவிர..ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... இதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் நிலையான ஓரு மூன்றாவது கட்சி இல்லை என்பது தான்...






அடுத்த கலைஞர் என்று சொல்லி கட்சி ஆரம்பித்தவர் இப்போது அம்மா காலடியில்....ஜாதி கலவரம் செய்து மாம்பழம் கட்சி தொடங்கியவர் சென்ற மாதம் வரை நாங்கள் தான் 2011 ஆட்சி அமைப்போம் என்று சொல்லி வந்தவர் இப்போது தன் மகனின் ஓரு சீட்டுக்காக கோபாலபுரம் வீட்டு வாசலில் உட்கார்ந்து உள்ளார்...


காங்கிரஸ்: இவர்களே காமராஜரை தோற்கடித்து விட்டு இப்போது நாங்கள் தான் காமராஜர் அரசு அமைப்போம் என்று சொல்லி வருகிறார்கள்...கட்சி பதவிக்கே வெட்டி கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்லவே வேண்டாம்...


தேர்தல் வரும்போது எல்லாம் ரஜினி பெயர் வராமல் இருக்காது இவரும் இப்போ, அப்போ என்று மேலே கை காட்டி கொண்டு இருக்கிறார்....இவர் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் ஆனால் வரமாட்டேன் என்று சொல்கிறார்..ரஜினி கட்சி தொடங்கினால் இந்த இரண்டு கட்சிக்கும் சிறிது அளவு பயம் வரும்...

கட்சி தொடங்க வேண்டாம் என்று நாம் சொல்லும் நடிகர் எல்லாம் கட்சி தொடங்கி 40 கோடி 50 கோடி என்று வாங்கி கொண்டு ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்...ரஜினியை யாரவது உசுப்பி விட வேண்டும் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது..முடிந்தால் மோதி பார்... இப்படி செய்தால் ஓரு வேளை அவர் அரசியலுக்கு வரலாம்...
ஆனால் இந்த அரசியல் சாணக்கியர் (கலைஞர்) அதை செய்யமாட்டார் ஏற்கனவே ஒருவரை உசுப்பி விட்டு அந்த கட்சி இது நாள் வரை குடைச்சல் கொடுத்து கொண்டு இருக்கிறது..என்ன செய்வது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த விசயத்தில் கொஞ்சம் யோசிப்பார்கள்...


ரஜினியோ, அஜித்தோ,விஜய்யோ, யாரோ கட்சி தொடங்கி நல்ல ஓரு மூன்றாவது கட்சியாக செயல் பட்டால் சரி உடனே சிலர் கேள்வி கேட்பார்கள் ஏன் நடிகர்கள் மட்டும் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமா என்று முடிந்தால் நீங்களும் கட்சி தொடங்கலாம், இவர்கள் வந்து நல்லது கூட செய்ய வேண்டாம் கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும்..நமக்கு தேவை புதிய ரத்தம் ஓடும் ஓரு கட்சி.... எதாவது மாற்றம் வராதா என்று ஏங்கும் நம் மக்கள்...




கழுகுக்காக

(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

28 comments:

எல் கே said...

இன்றைய அரசியலில் நேர்மை இல்லை. அதற்க்கு முக்கிய காரணம் மக்கிளடம் நேரமி குறைந்து விட்டது. மக்கள் ஒட்டு போட பணம் வாங்கக் கூடாது முதலில். அதை நிறுத்த வேண்டும். இலவசங்களை நிராகரிக்க வேண்டும். இதை செய்யத் துவங்கினாலே போதும் மற்ற மாற்றங்கள் தானாக நிகழும்

Kousalya Raj said...

ஒரு முக்கியமான அரசியல் நடிகர் சாரி சாரி அரசியலில் இருக்கும் நடிகரை விட்டுடீங்களே சௌந்தர் தம்பி.....!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சாட்டையடி...

அருண் பிரசாத் said...

தம்பி தி மு க வையும் காட்டமாக விமர்சித்து இருக்க வேண்டும்

சௌந்தர் said...

கட்சி தொடங்க வேண்டாம் என்று நாம் சொல்லும் நடிகர் எல்லாம் கட்சி தொடங்கி 40 கோடி 50 கோடி என்று வாங்கி கொண்டு ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்..

@@@Kousalya நீங்கள் சொல்லும் நடிகரை பற்றி எழுதி இருக்கேன் பாருங்கள்

Kousalya Raj said...

பெயரை தெளிவா போட்டாதானே என்னை மாதிரி அரசியல் புரியாதவங்களுக்கு தெரியும்....!!!!!

aavee said...

நல்ல கட்டுரை!!!

எல் கே said...

//பெயரை தெளிவா போட்டாதானே என்னை மாதிரி அரசியல் புரியாதவங்களுக்கு தெரியும்....!!!///

peryarai pottal soundar veetuku auto varum

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடைசி வரைக்கும் அந்த கருப்பு வைரத்த பற்றி எதுவுமே சொல்லலையே...

அவரும் இப்ப ஒரு அரசியல் வாதிதான்..

சௌந்தர் said...

கட்சி தொடங்க வேண்டாம் என்று நாம் சொல்லும் நடிகர் எல்லாம் கட்சி தொடங்கி 40 கோடி 50 கோடி என்று வாங்கி கொண்டு ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்..//

வெறும் பையன்: நீங்க சொல்லும் அந்த நடிகர் விஜயகாந்த் பற்றி போட்டு இருக்கேன்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலைஞர், ஜெயலலிதா, ரஜினி என எல்லோருடைய பெயரையும் சொல்லிவிட்டு அவரின் பெயரை மட்டும் போடாததை கண்டிக்கிறேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சமீபத்தில் ஒரு நாளிதழில் நான் படித்த செய்தி இது..

எழுத படிக்கத் தெரியாத மந்திரிகளுக்கு.. 3G வசதியுள்ள கைப்பேசி கொடுக்கப் போகிறார்களாம்.. அது மட்டுமில்லாமல் அவர்களின் சம்பளத்தை 18 ,000 ரூபாயிலிருந்து 80000 ரூபாயாக மாற்ற கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்..

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லலாம்..

செல்வா said...

//நமக்கு தேவை புதிய ரத்தம் ஓடும் ஓரு கட்சி...///
ரத்த ஆறு ஓடாமல் இருந்தால் போதும் ..!! இன்றைய அரசியல் நிலைமை குடும்பத்தகராறு மற்றும் ஊழல் குறைந்தாலொழிய இந்நிலை மாறாது ..!!

விஜய் said...

அழகாய் எழுதி இருக்கிறீர்கள் சௌந்தர்.


தமிழ் நாட்டின் தலைவிதி சீக்கிரமே மாறும் சௌந்தர்,

இந்த இளைஞர்களின் எழுத்து விரைவில் மாற்றும், தமிழகத்தின் கல்வியறிவு விழுக்காடு மாற மாற மாற்றங்கள் நிச்சயம் வளரும்,

ரெண்டு பேர் ஒன்று கூட, தகவல் தொடர்பு நேராய் பரிமாறிய அந்த காலத்திலே புரட்சி வெடித்து இருக்கிறது,

இப்பொழுது ஒரு நொடி போதும் தகவலை பரிமாறிக்கொள்ள, ஒரு நொடி போதும் புரட்சி வெடிக்க,

ஆனால் மனிதர்கள் வெவ்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களை ஒன்றாகக வேண்டும்,

அவர்களை ஒருமை படுத்த நாம் எடுத்து இருக்கிறோம் பதிவு எனும் முயற்சியால், இவைகள் பற்ற தாமதம் ஆகினாலும், கண்டிப்பாய் மிச்சமில்லாமல் எரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ...

விஜய் said...

எழுதுறவங்க வீட்டுக்கு எல்லாம் ஒரு ஆட்டோ வந்தா நல்லது தானே, வாங்கி வைச்சுப்போம், கை செலவுக்கு காசு இல்ல பாருங்க

Jeyamaran said...

*/காங்கிரஸ்: இவர்களே காமராஜரை தோற்கடித்து விட்டு இப்போது நாங்கள் தான் காமராஜர் அரசு அமைப்போம் என்று சொல்லி வருகிறார்கள்...கட்சி பதவிக்கே வெட்டி கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சொல்லவே வேண்டாம்... /*

அவங்களுக்கு காமராஜரை பத்தி பேசுறதுக்கு தகுதி கிடையாது நண்பா

Karthick Chidambaram said...

உங்களின் ஆதங்கம்தான் பலருக்கும் சௌந்தர்.
ஆமா , சூப்பர் ஸ்டார எப்படி உசுப்பலாம்னு நெனைக்குறீங்க ?

elamthenral said...

கண்டிப்பா இந்த அரசியல் மாற்றம் என்றுதான் நிகழப்போகிறதோ??? காத்திருப்போம், பொறுத்தார் பூமி ஆழ்வார்... யார் தான் வந்து என்னதான் செய்யபோகிறார்கள் என்று பார்ப்போம்.... அருமை சௌந்தர்...

'பரிவை' சே.குமார் said...

அழகாய் எழுதி இருக்கிறீர்கள் சௌந்தர்.

Rajasurian said...

@LK

Please visit
http://www.luckylookonline.com/2010/07/blog-post_28.html

Unknown said...

ஆட்சி மாற்றம் என்பது மக்களால் நிகழப்பட வேண்டும்...

இங்கு மன்னர்கள் ஆள்கிறார்கள், வாரிசுகளே பட்டம் சூடும்...

பனித்துளி சங்கர் said...

யாரு அரசியலுக்கு வந்தாலும் வந்துட்டு போறாங்க . நம்மக்கிட்ட இருக்குற வடையையும் தூக்கிகிட்டு போகாமல் இருந்தால் சரிதான் போங்க !

ஜீவன்பென்னி said...

கழுகின் அரசியல் பார்வை நல்லாருக்கு. தொடரட்டும்.

jothi said...

இப்போது அனைவரும் யோசித்து செயல்படவேண்டிய நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும் ...

Thomas Ruban said...

இப்போதைக்கு தேவை புதிய கட்சி இல்லை நல்ல நேர்மையான வாக்காளான்.கட்சி பார்த்து ஓட்டு விற்பது மாற வேண்டும் ஏன் நல்ல வேட்பாளர் உங்கள் தொகுதியில் போட்டியிடுவது இல்லையா!
நல்ல சுயேட்சை வேட்பாளராக இருந்தால் அவருக்கு
வாக்களியிங்கள்.

பகிர்வுக்கு நன்றி நண்பா..

ஸாதிகா said...

நன்றாக அலசி இருக்கின்றீரகள் சவுந்தர்.

vasan said...

2011 ல்ல‌ மு.கா ஆட்சி முடிஞ்சி, தேர்த‌ல்ல‌ இப்ப‌, ந‌ம்ம‌ யாருக்கு ஓட்டுப் போட்டு 'கீரீட‌ம்'
சூட்ட‌ற‌து? ம‌க்காளாட்சியில் ம‌க்க‌ளே ம‌ன்ன‌ர்க‌ள்,ஆனா, நாம் (மன்ன‌ர்க‌ள்)இவுங்க‌ளுக்கு
கிரீட‌ம் சூட்டிட்டு, பின்பு அவ‌ர்க‌ளுக்கே அடிமையாவோம்.

vinthaimanithan said...

//இதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் நிலையான ஓரு மூன்றாவது கட்சி இல்லை என்பது தான்...//
மூணாவதா வந்துட்டா மட்டும்??? ஏன் ஓய் வயத்தெரிச்சலக் கெளப்புறீர்? பூசாரி மாறிட்டாருன்னு ஆடு ஆனந்தப்பட்டா மாரி? எப்படியும் கத்தி கத்திதான்...வெட்டு வெட்டுதான்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes