Sunday, August 01, 2010

வால்பையன் vs கழுகு.... நேருக்கு நேர்...!



பதிவர் பேட்டி என்றாலே திருவிழா போலத்தான் கழுகிற்கு...! கழுகிற்கும் நிறைய நாளாய் வால்பையனிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்து கொண்டுதான் இருந்தது. கிடைத்த வாய்ப்பினை சராமாரி கேள்விகளாக்கி வால்பையனிடம் நீட்டிய போது ஒரு மெல்லிய புன்முறுவலுடன் இவ்வளவுதானா கேள்விகள் இன்னும் இருக்கிறதா என்பது போல பார்த்தார்.....
நிறைய பதிவுகள் எழுதியிருந்தாலும் எதையும் தலைக்கு எடுத்துக் கொள்வது இல்லை....! ரொம்ப எதார்த்தமாக புதிய பதிவர்கள் எல்லோரையும் மதிக்கத் தெரிந்த வராக இருக்கும் வால்பையன் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் மற்றும் அறிவுக்கு எட்டாத விசயங்களக்கும் சிம்ம சொப்பனாமாய்தானிருக்கிறார்.
அறிவியலோடு இணைந்து தன்னுடைய தேடலை கைகொண்டிருக்கும் வால்பையன் என்கிற அருண்....பேசுவார் இனி....





1உங்கள் முதல் பதிவு என்ன? ஏன் அதை எழுதினீர்கள்?

http://valpaiyan.blogspot.com/2007/11/blog-post.html

இது தான் என் முதல் பதிவு, என்ன எழுதப்போறேன்னு தெரியாம தான் ஆரம்பிச்சேன், அதற்கு முன்னரே பின்னூட்டங்கள் இட ஆரம்பித்து விட்டேன்!




2, 2007 முதல் பதிவு எழுதும் அனுபவம் எப்படி இருக்கு?

ஒன்றுமில்லை, பின்னூட்டம் இட எனக்கு ஒரு ப்ளாக் தேவைபட்டது, அதற்காக தான் ஆரம்பித்தேன்!


3 ,கடவுள் இல்லை என்று நீங்கள் மறுக்கத் தொடங்கியது எப்போது ஏன்?

ஏழு வயதில், என் பிறந்தநாளுக்கு என் தந்தை கோவிலில் அன்னதானம் கொடுக்கும் போது கேட்டேன், யார் கடவுள், எங்கே கடவுள்! எனக்கு கேள்வி கேட்பது பிடித்திருந்தது


4 யாரை பார்த்து பதிவு எழுத வந்தீர்கள்?

ஆனந்தவிகடன் வரவேற்பரை பார்த்து தான் வலையுலகம் ஆரம்பம், தருமி ஐயாவின் தளம் என் கொள்கையில் பெரிதும் ஒத்திருந்ததால் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன், ப்ளாக்கில் நானே எழுதுவேன் என எதிர்பார்க்கவில்லை


5 கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே....ஒருவேளை கடவுள் இருந்து விட்டால்...உங்கள் மனோ நிலை எப்படி இருக்கும்?

கடவுள் இதுவரை இல்லை என்பதால் இல்லை என்கிறேன், இருந்தால் அவரையும் நண்பணாக்கி கொள்ள வேண்டியது தான்!


6 வால் பையன் பெயர் வைக்க காரணம்?

உலகில் 99% உயிரினங்கள் வால் உள்ளது, உயிரின விந்தணுவில் வால் இல்லைனா அடுத்த குழந்தை பிறக்காதுன்னு சும்மா தத்துவம் வேணும்னா சொல்லிக்கலாம், உண்மையில் ரொம்ப சேட்டை பண்ணி வால்பையன் என்று வீட்டில் பேர் வாங்கியதால் வச்ச பட்டபெயர்!


7 இப்போது இருக்கும் அரசியல் பற்றி?

அவரவர் சுயநல நோக்கில் செயல்படுகிறார்கள்!


8 எல்லாவற்றையும் அறிவியல் மூலம் அறிந்துவிட அல்லது புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?

எந்த செயலுக்கும் அதற்கு எதிரான அல்லது சமமான செயல் ஒன்று இருக்கும் என்பது நிரூபிக்கபட்ட ஒன்று!, செயலுடன் கூடிய வினையையும், விளைவையும் சேர்ந்து சிந்திப்பதே அறிவியல்


9 மனிதன் இறப்புக்கு பின் என்ன ஆவன் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

இறப்பு என்பது மீளா துயில் அவ்வளவே, ஆவுறதுக்கு ஒண்ணுமில்லை!, உடல் மக்கி சிதையும்



10 விஞ்ஞானமே வளரச்சியடையாத காலத்தில் கோவில் கோவிலாக நவக்கிரங்கள் சிற்பங்கள் வந்தது எப்படி? அதாவது ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் கூட

இந்த உலகில் சாகாத மனிதனே கிடையாது, சாவை ஏமாற்ற முடியாது என தெரிந்தும் சாவுக்கு மனிதன் பயப்படுகிறான், இவ்வளவு விஞ்ஞான உலகத்திலேயே இப்படி இருக்கானே, அப்ப எப்படி இருந்திருப்பான், அந்த பயம் தான் கடவுளை உருவாக்கியது!


11 திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, அவர்களும் மனிதர்கள் என்று வேண்டுமானால் நினைக்க தோன்றுகிறது!


12 மூட நம்பிக்கை அற்ற ஒரு தேடல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதையும் கேள்வி கேள்! உணர்ந்து செய், செயலுக்கான அர்த்தம் விளக்கு, அது முடியுமானால் மூடநம்பிக்கை இருக்காது


13 உங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

எதையும் கேள்வி கேட்கும் தைரியம் பலம்,
பலவீனம்: குடும்பம்


14 சென்ற தேர்தலில் எந்த கட்சி வாக்களித்தீர்கள் ? ஏன்?

சுயேட்சைக்கு!, பல நேரங்களில் அப்படி தான் வாக்களித்து கொண்டிருக்கிறேன், சென்ற முறை ஒரு கல்லூரி மாணவனுக்கு


15 நிறைய புதிய பதிவர்கள் வருகிறார்கள்....அவர்களுக்கு சொல்ல விரும்புவது?

எழுதுங்க!


16 எதிர்காலத்தில் உங்கள் பதிவுலக பயணம் எப்படி இருக்கும்?

இன்று இப்படியிருக்கும் என்று நேற்று நினைக்கவில்லை


17. உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் கேள்வி என்ன?

அடுத்த என்ன கேள்வி கேட்பது!



(கழுகு இன்னும் உயர பறக்கும்)

56 comments:

எல் கே said...

nalla petti

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பேட்டி...

ஜெய்லானி said...

:-)

Unknown said...

தலயின் பேட்டி தனித்துவம்

School of Energy Sciences, MKU said...

வால்பையனின் பேட்டி மிகவும் அருமை. கழுகுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

அருண் பிரசாத் said...

கேள்வியின் நாயகனுக்கே கேள்விகளா? அருமையான பேட்டி, நல்லவேளை அவர் உங்களை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என கேட்கவில்லை ;)

Prathap Kumar S. said...

சிரிப்பு பேட்டி...

Jey said...

நேரடியான பதில்கள் :)

Karthick Chidambaram said...

நல்ல பேட்டி...

தமிழ் அமுதன் said...

யாரிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என அறிந்து கேட்க பட்ட கேள்விகளுக்கு ஒரு சபாஷ்...!

வாலின் பதில்கள் மிக நேர்த்தி...!

////எதையும் கேள்வி கேட்கும் தைரியம் பலம்,
பலவீனம்: குடும்பம்///

உண்மை...! அருமை..!

க ரா said...

நச் கேள்விகள்.. நறுக் பதில்கள் ....

ஜில்தண்ணி said...

அண்ணன் வாலின் நறுக் பதில்கள்

வாலிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது
எதையும் கேள்வி கேட்டு தெளிவு பெறுவது

கழுகிற்கு நன்றிகள் பல

ஜீவன்பென்னி said...

பேட்டி நல்லாருக்கு. சூடு கொஞ்சம் குறைவு.

Chitra said...

17. உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் கேள்வி என்ன?

அடுத்த என்ன கேள்வி கேட்பது!


...... "என் கேள்விக்கு என்ன பதில்?" கேள்வியே பதில். சூப்பர்!

http://rkguru.blogspot.com/ said...

Good post....

Unknown said...

கேள்வி கேட்டால் வரும் அறிவு.. மூட நம்பிக்கைகளை உடைக்கும்..
பட்டினத்தார், வள்ளலார், திருமூலர் சாதாரண மனிதர்கள் என்பதே தெளிவான பார்வை..

ஜோதிஜி said...

சுயேட்சைக்கு!, பல நேரங்களில் அப்படி தான் வாக்களித்து கொண்டிருக்கிறேன், சென்ற முறை ஒரு கல்லூரி மாணவனுக்கு

ஒத்த சிந்தனை. நானும் இப்படித்தான் அளித்துக் கொண்டுருக்கின்றேன் அருண்.

சிந்திப்பவன் said...

///10 விஞ்ஞானமே வளரச்சியடையாத காலத்தில் கோவில் கோவிலாக நவக்கிரங்கள் சிற்பங்கள் வந்தது எப்படி? அதாவது ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் கூட///

ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் நவக்கிரக சிற்ப்பங்கள் இருந்ததா?ஆம் எனில் அதற்க்கான இணைய முகவரி தாருங்கள்

ஜெயந்தி said...

பேட்டி நல்லா வந்திருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

வால்பையன் said...

நன்றி நண்பர்களே!

உமர் | Umar said...

பகடி பேட்டி வரும்போது, மறக்காம அதுக்கும் லிங்க் கொடுங்க. :-)

கிருஷ்ண மூர்த்தி S said...

எங்க வால்சை வெய்யிலில் நிறுத்திக் கேள்விகள் கேட்டிருக்கிறீர்களே....!

தமிழ்ப் பதிவுகளில், சக பதிவர்களைப் பேட்டி எடுக்க ஆரம்பித்துத் தான் புனைவு, ஆணாதிக்க வக்கிரம் என்றெல்லாம் அதுவரை உலகத்தில் இல்;லாத விஷயங்கள் எல்லாம் தெரிய வந்தன. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த மாதிரி!

ஆல் இன் ஆல் ராஜனோடு சேர்த்துப் பேட்டி எடுத்திருந்தால், அல்லது ராஜனையே பேட்டி எடுக்க விட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் பூமிப் பந்து தன் அச்சில் சுழல்வது கொஞ்சம் வித்தியாசப் பட்டிருக்குமோ!

:-))

TechShankar said...

Cool Yaar

கழுகு said...

//ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் நவக்கிரக சிற்ப்பங்கள் இருந்ததா?ஆம் எனில் அதற்க்கான இணைய முகவரி தாருங்கள் //

சிந்திப்பவன் @ நண்பரே... ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் மட்டுமல்ல அதற்கு முன்பே....இந்த நவக்கிரக சிற்பங்கள் இருந்திருக்கின்றன....மேலும் துல்லியமாக ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் சிவலிங்கங்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டு எடுக்கப்பட்டும் இருக்கின்றன... சுட்டிகளை அழுத்தி படிக்கலாம்...மேலும்.... நீங்களே இணையப்பக்கங்களில் தேடியும் படிக்கலாம்....

http://veda.wikidot.com/glimpse:do-you-know

http://www.mahavidya.ca/vedic-religion/navagrahas-the-nine-planetary-system/


ஆர்யபட்டர் தான் வானசாஸ்திரம் எழுதினார்...கோள்களின் இருப்புகள் பற்றி பேசினார்....சாட்டிலைட்டும் நுண்ணோக்கு ஆடிகளும் இல்லாத காலத்தில் எப்படி கணித்தார்கள்? மேலும் சனி, ஞாயிறு என்றூ நாம் கொள்ளும் கிழமைகளும் கோள்களின் பெயர்களும் எப்படி ஒத்துப் போகின்றன.....

வெள்ளி.. வெண்மையான கிரகம் என்று இப்போது சொல்கிறார்கள்...அதை சுக்கிரன் என்று ஒளி பொருந்தியவன் என்றும் சனி கிரகம் இருண்ட கிரகம் என்றும் மேலும் அதன் சுழலும் தன்மை மிகவும் குறைவாகவே இருக்கிறது ஒரு மந்த கிரகம் என்று இன்று அறிவியல் கூறுகிறது. ஆனால் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் வெள்ளியை சுக்கிரன் என்றும் வெண்மையான ஒளி பொருந்தியவன் என்றும் சனியை கருமை நிறமானவன் என்றும் அதை இன்னும் விளக்க காகத்தை சிம்பலாக்கியும் மேலும் சனியின் ஒரு கால ஊனம் என்பது போலவும் அந்தக்கால மனிதர்களுக்கு மெட்டிரியலாக சித்தரித்தார்களே....அது எப்படி.....?

இது தான் கேள்வி....? ஒரு வேளை இவர்கள் கிரங்களை எல்லாம் கண்டு ...லே மேன் என்று சொல்லக்கூடிய மக்களுக்கு விளக்க வேண்டி மெட்டிரியலாக கற்பித்தார்களா? அப்படி என்றால்....இவர்கள் கண்டார்கள் என்றால் எப்படி கண்டார்கள்....?

சரியான விடை மூளைகளில் இருந்து கேள்வியை அகற்றும்....தெளிவு பிறக்கும் என்பதால்தான்..கேள்வி கேட்டோம்....யரேனும் அறிவுத்த முடியுமா...ப்ளீஸ்?

dheva said...

வால்பையன்....@

தல யாருமே ஆரம்பிச்சு வைக்க மாட்டேங்கிறாங்க...அதனால நானே ஸ்டார்ட் பண்றேன்...சரியா?


//திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, அவர்களும் மனிதர்கள் என்று வேண்டுமானால் நினைக்க தோன்றுகிறது!//


இவர்கள் பற்றி ஒன்றும் தெரியாதுன்னு ஏன் தலை சொல்றீங்க? எல்லாத்தையும் கேள்வி கேட்டு ஆராய்ந்து பார்த்த நீங்க... இவுங்களை மட்டும் ஏன் விட்டுட்டீங்க.... மேலே சொன்ன எல்லோரும் ஏதேதோ எழுதி இருக்காங்கள்ள? சும்மா இவுங்களும் சாதரணமான மனிதர்கள்னு சொல்றதுக்கு கூடவா நீங்க இவுங்கள பத்தி தெரிஞ்சுக்கல?

எப்டியோ ஆரம்பிச்சு வச்சுட்டேன்.... ஸ்டார்ட்..ம்யூசிக்....

virutcham said...

//திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, //

இவர்களை எல்லாம் வால் இன்னும் படிக்கலை. இது மாதிரி நிறைய படிக்க வேண்டி இருக்கு. இதற்கு எதிமறை விஷயங்களையே தொடர்ந்து படித்துக் கொண்டே இந்தப் பக்கம் கேள்விகளை மட்டும் வீசிக் கொண்டு இருப்பதால் இந்த இடைவெளி.

சௌந்தர் said...

திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?//

எனக்கு இவர்களை பற்றி தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்....

dheva said...

ஏம்பா ப.மு.க...மற்றும்..... எம்.பி.ஏ மொக்கைச் சக்கரவர்த்திகளே....


எங்க போய்டீங்க எல்லாம் ..மொக்கைகளுக்கு மட்டும்தான் கமெண்ட் போடுவிங்களா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன கேள்வி இது .. அது தான் வந்துட்டமில்ல...

ஜில்தண்ணி said...

////////எனக்கு இவர்களை பற்றி தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.... ///

எனக்கும் அவர்களை பற்றி ஒன்றும் தெரியாது

வால் பையனுக்கு ஒரு கேள்வி

கடவுளை மறுக்கும் தாங்கள் கோவிலுக்கு சென்றதுண்டா ?

ரோகிணிசிவா said...

smart interview

வால்பையன் said...

கோவிலுக்கு போயிருக்கேன், சாமி கும்பிடுவதில்லை

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் சொன்னது…

திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?//

எனக்கு இவர்களை பற்றி தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.... ///

என்ன நண்பா இப்படி கேட்டுட்ட...

நமக்கு தான் பள்ளிக்கூடத்திலேயே சொல்லி குடுத்தாங்களே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வால்பையன் சொன்னது…

கோவிலுக்கு போயிருக்கேன், சாமி கும்பிடுவதில்லை ///

கோயிலுக்கு செல்வது எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா..

விஜய் said...

ஆணி அதிகம் அண்ணா அதான் இந்த பக்கம் வரமுடியல...இதோ நமக்கான ஒரு கேள்வியை விட்டுட்டு போறேன்


//
இப்போது இருக்கும் அரசியல் பற்றி?
அவரவர் சுயநல நோக்கில் செயல்படுகிறார்கள்!
//



இதை மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?

எப்படி?

வால்பையன் said...

//கோயிலுக்கு செல்வது எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா..//

வீட்டில் போகம்போது கூட போவேன், நானாக போனதில்லை! நான் போறது சும்மா துணைக்கு

ஜில்தண்ணி said...

வால்

பழங்கால மன்னர்கள் எக்காரணத்திற்காக பிரம்மாண்ட கோவில்களை கட்டியிருக்க வேண்டும்

தங்கள் கடவுள் நம்பிக்கையை வெளிக்காட்டவா இல்லை சிற்பக் கலைகளின் வெளிப்பாடா

செல்வா said...

///ரொம்ப எதார்த்தமாக புதிய பதிவர்கள் எல்லோரையும் மதிக்கத் தெரிந்த வராக////

நிச்சயம் உண்மை..!!

//உண்மையில் ரொம்ப சேட்டை பண்ணி வால்பையன் என்று வீட்டில் பேர் வாங்கியதால் வச்ச பட்டபெயர்! ///
நிறைய பேர் அந்த பட்டப் பெயர் வாங்கிருக்காங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?//

பட்டினத்தார் படம் பாத்திருக்கேன். பொதிகைல அடிக்கடி போடுவாங்க. ஆனா திருமூலர், வள்ளலார் படம் வந்ததா?

செல்வா said...

// எங்க போய்டீங்க எல்லாம் ..மொக்கைகளுக்கு மட்டும்தான் கமெண்ட் போடுவிங்களா? //
இப்பத்தான் அண்ணா வந்தேன் .. கொஞ்சம் Tension ஆக இருக்கிறேன் .. பிறகு வரேன் ..!!
என்னை பொறுத்த வரை நான் கடவுளை நம்புகிறேன் .. அவர் எங்க இருக்கார் ..? காட்டு அப்படின்னு கேட்டா என்கிட்டே அதுக்கு இப்ப பதில் இல்ல .. அதுக்காக கண்ணுல பார்ப்பது மட்டும் தான் உண்மைனா அதுக்கு நான் பொறுப்பு இல்லை .. அப்புறம் ஏன் நம்ம வால் அண்ணா வந்தா எல்லோரும் கடவுளைப் பத்தியே கேக்குறீங்க .. அவர் எத்தனை அறிவியல் கட்டுரை எழுதியிருக்கார் .. பரிணாமம் பற்றின தொடர் ரொம்ப அருமை ..!! அத பத்தி கூட கேக்கலாமே ..!!

ஜில்தண்ணி said...

///அப்புறம் ஏன் நம்ம வால் அண்ணா வந்தா எல்லோரும் கடவுளைப் பத்தியே கேக்குறீங்க ..///

எனக்க தெரியல கேக்குறேன் அவ்வளவுதான்

சௌந்தர் said...

வெறும்பய@@என்ன நண்பா இப்படி கேட்டுட்ட...

நமக்கு தான் பள்ளிக்கூடத்திலேயே சொல்லி குடுத்தாங்களே//

அப்போ உனக்கு தெரியுமா எனக்கு சொல்லு நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய@@என்ன நண்பா இப்படி கேட்டுட்ட...

நமக்கு தான் பள்ளிக்கூடத்திலேயே சொல்லி குடுத்தாங்களே//

அப்போ உனக்கு தெரியுமா எனக்கு சொல்லு நண்பா...

//

சின்ன வயசில படிச்சதெல்லாம் ஞாபகம் இருந்தா இன்னைக்கு நான் கலக்டரா இருந்திருப்பேன்.

வால்பையன் said...

//பழங்கால மன்னர்கள் எக்காரணத்திற்காக பிரம்மாண்ட கோவில்களை கட்டியிருக்க வேண்டும்//


கட்டிடகலையின் வெளிப்பாடு தான் அது!

அமைதி அப்பா said...

நல்ல பதில்கள்.

'பரிவை' சே.குமார் said...

வால்பையனின் பேட்டி மிகவும் அருமை. கழுகுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

சிந்திப்பவன் said...

நன்றி திரு கழுகு நண்பரே,

நானும் நம் இந்திய ரிஷிகள் உருவாகிய இந்த நவகிரகங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.நவகிரகங்களின் தொன்மையை அறியும் ஆவலில் தான் நான் அவ்வாறு கேட்டேன்.

///இது தான் கேள்வி....? ஒரு வேளை இவர்கள் கிரங்களை எல்லாம் கண்டு ...லே மேன் என்று சொல்லக்கூடிய மக்களுக்கு விளக்க வேண்டி மெட்டிரியலாக கற்பித்தார்களா? அப்படி என்றால்....இவர்கள் கண்டார்கள் என்றால் எப்படி கண்டார்கள்....?///

நம் ரிஷிகள் தவத்தின் மூலம் கண்டார்கள்.

சிந்திப்பவன் said...

திரு கழுகு சார்,


///http://veda.wikidot.com/glimpse:do-you-know

http://www.mahavidya.ca/vedic-religion/navagrahas-the-nine-planetary-system///

நீங்கள் தந்த சுட்டிகள் மிகவும் அருமை.இந்த நவகிரகங்களைப் பற்றி நானே தெரிந்து வைத்திருந்ததை மேற்கண்ட சுட்டிகளில் பார்த்து அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் வருகிறது.அதிர்ச்சி கலந்த என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால் நானே இந்த நவகிரகங்களில் உள்ள உண்மைகளைப் பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணத்தில் இருந்தேன்.அதனால் தான் நான் தங்களிடம் //ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்தில் நவக்கிரக சிற்ப்பங்கள் இருந்ததா?ஆம் எனில் அதற்க்கான இணைய முகவரி தாருங்கள் // என்று கேட்டேன்.

ஜெயந்தி said...

திருமூலர்,பட்டினத்தார், வள்ளலார்....உங்கள் பார்வையில்....என்ன நினைக்கிறீர்கள்?//
இவர்கள் மூவரும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர்கள். அனைத்து மதம், மற்றும் ஜாதி அனைத்தையும் சமமாக மதிக்க வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று சொன்னவர்கள்.

dheva said...

சிந்திப்பவன்....@ மிக்க நன்றி உங்களின் புரிதலுக்கு....தொடர்ந்து வாருங்கள்...! கழுகிற்கு மின்னஞ்சல் செய்து கழுகின் அங்கமாகுங்கள்...! வாழ்த்துக்கள்!

dheva said...

ஜெயந்தி...@ அட்டகாசமான எளிமையான விளக்கம் தோழி!

veeramanikandan said...

என்னுடைய தற்போதைய ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி... வால்பைய்யனின் வெறித்தனமான ரசிகன் நான்... விஜய் பதிவை எந்த அளவிற்கு உருகி படிகின்றேனோ அதே போல் வாழ் பையனின் எழுத்துக்களை குறிப்பாக நகைச்சுவை சேர்ந்த கருத்துக்களை படித்து பல முறை என் தனி அறையில் சிரித்து பக்கத்துக்கு அறையுனரையும் தொந்தரவு செய்து இருக்கிறேன்... நல்ல கருத்துக்கள்... கழுகுக்கு நன்றி... பனி நிமித்தம் காரணமாக சிறிது விலகி இருக்கின்றேன்... விரைவில் வீரா கழுகுக்காக...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கேள்விகளும் பதில்களும் சிறப்பு கழுகாருக்கும் அருணுக்கும் பாராட்டுக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

அருமை....

cheena (சீனா) said...

அன்பின் கழுகு, வால்

நலல் தொரு நேர்முகத் தேர்வு - கேள்விகளும் பதில்களும் அருமை

நல்வாழ்த்துகள் அருண் , கழுகு
நட்புடன் சீனா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes