Monday, January 17, 2011

'பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும்...(17.01.2010)பஞ்ச் 1: எந்திரன் படம் நல்லாதான் வசூல் பண்ணி இருக்கு...படத்தால சூப்பர் ஸ்டாரும் நல்ல சந்தோசமாத்தான் இருக்காரு....! போதுமே ரஜினி சார்........கொஞ்சம் வரப்போற தலைமுறைகள் படம் பண்ணட்டும்...அவுங்களும் மேல வரட்டும். அதையும் மீறி நீங்க படம் பண்ண ஆசைப்பட்டா யாரச்சும் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுங்க சார்....!

எப்பவுமே ரஜினி பிடிக்கும்னு ஏன் எல்லோரும் தன்னைத்தானே ஏமாத்திக்கிட்டெ அவரு தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கணும்னு ஆசப்படுறாங்கனு புரியலை...! 

நடிங்க.. ஆனா கதையோட தன்மைல இருக்கட்டும் ஹீரோத்தனம்....ஏன்னா .. நிறைய விசயங்கள் ஏத்துக்க முடியலை சார்...!

தமிழ் நாட்டு சினிமாவிலும், அரசியலிலும் ரிட்டையர்மென்ட் சிஸ்டம் வந்தா நல்லாதான் இருக்கும் போல...!

பின்குறிப்பு: ஹி ஹி ஹி.. இது கமல் சாருக்கும்தான்..!

பஞ்ச் 2: சபரி மலைக்கு சாமிதானே கும்பிட போனிய எம் மக்கா? உசுர உட்டு புட்டு நிக்கிறீயளே.. உங்க குடும்பத்துக்கு, புள்ளை குட்டியளுக்கு யாரு மக்கா கஞ்சித்தண்ணி ஊத்துவா? வேண்டி வேண்டி விரதம் இருந்து உசுர போக்கிப்புட்டு விதின்னு ரெண்டெழுத்துல நின்னு போயிடுறீகளே....! 

புத்திய கொண்டு எப்ப மக்கா எங்கூட்டம் பொழைக்கும்...? என் நாடு செழிக்கும்?

பஞ்ச் 3: பொங்கல் நிகழ்ச்சிக்கு இந்த தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் எப்பதேன்..நடிகர் நடிகைகள விட்டுப்புட்டு.....வேறு துறையில சாதிச்சவுகளா பேட்டியும் விளம்பரமும் செய்யுமோ? ஏய்யா வடிவேலு தீவாளி கொண்டாடினாரு காட்டுனீக... பொங்கலு கொண்டாடினாரு காட்டுனீக...அவரு கொண்டாடுறதுதான் இப்போ முக்கியமா?..யாராச்சும் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விஞ்ஞானி, நாட்டைக் காப்பாத்துற இராணுவ வீரன்னு காட்டுங்களேன்...

விக்கிறத வாங்கிறவன் இருக்குற வரைக்கும் ஈவு இரக்கும் இல்லாம கல்லுக்கு கூட கலரடிச்சு வித்துப்புட்டு.. நீங்க எல்லாம் பெரியா நியாயவாதி மாதிரி காட்டிக்க போறிக?....அம்புட்டுதேன்.. ஊடகங்கள் திருத்தமா சொன்னாதானே அப்பு.....மக்களுக புரிஞ்சுக்குவாக............நமீதா இடுப்பையே காட்டுனா அதைத்தானே பாக்கும் என் சனம்...!

பஞ்ச் 4: மகாராஷ்ட்ர மாநிலத்துல ஒரு கிராமத்துல எந்த வீட்டுக்கும் பூட்டே இல்லையாம் மக்கா...இப்ப ஒரு பேங்கு கூட தொறந்து இருக்காகளாம்... பூட்டே இல்லாம.. சரி அம்புட்டு நல்லவய்ங்க இருக்க ஊரானு பாத்தா.. அந்த ஊர்ல இருக்குற சனி பகவான் எல்லாத்தையும் காக்குறாராம்.. (எப்டி இருக்கு நம்பிக்கைல இருந்தா பரவாயில்லை மூட நம்பிக்கைல இருந்த எப்டிங்கண்ணா? ) இதை நம்பி பேங்க வேற தொறந்து புட்டாக.. ! 

நம்ம கேள்வி எல்லாம் இதேன்..........ஏன் சாமி நாடு புல்லா ஒரு டீல் வச்சிக்கிட்டு காப்பாத்தகூடாது? (களவாணிப்பயலுக எல்லாம் படிச்சி இருப்பாய்ங்க.......கன்னம் வச்சி திருடப்போறாய்ங்க சாக்கிரதை மக்கா)

பஞ்ச் 5: தமிழ் மணம் அவார்ட் கொடுத்து இருக்காக.. பதிவர்களுக்காகா...! ரொம்ப நியாயமா.. இரண்டு சுற்றுகளை ஓட்டு மூலமா வச்சி...மூணாவது சுற்றை நடுவர்களை வச்சி ஆளுகளுக்கு அவார்ட் கொடுத்து இருக்க்காக...! தராசு புடிச்ச மாதிரி புடிச்சுதான் நிறுத்துப் போட்டு இருக்காக....! 

ரொம்ப கண்ணியமா... இதை நடத்தி.. தேர்வு செஞ்ச தமிழ் மண நிர்வாகத்தை பாராட்டறது மட்டும் இல்ல மக்கா...அவார்ட் வாங்குனவகளுக்கும்.......வாழ்த்துக்களை கழுகு தெரிவிச்சுக்குது........!

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

5 comments:

மாணவன் said...

பஞ்சாமிர்தம் நெசமாவே இனிக்குதுங்க கழுகாரே

சூப்பர்

இன்னும் எதிர்பார்ப்புடன்.......

அருண் பிரசாத் said...

ம்...ம்...

Kousalya Raj said...

//தமிழ் நாட்டு சினிமாவிலும், அரசியலிலும் ரிட்டையர்மென்ட் சிஸ்டம் வந்தா நல்லாதான் இருக்கும் போல...//

ரொம்ப பெரிய ஆசை இது...சிலர் சினிமாவில் ரிடையர் ஆகி அரசியலுக்கு வராங்க, அரசியலில் ரிடையர்ட் ஆகி எங்க போக...?!!

//ஊடகங்கள் திருத்தமா சொன்னாதானே//

சொல்லலாம் ஆனா காசு நிறைய பார்க்க முடியாதே !?

//ஏன் சாமி நாடு புல்லா ஒரு டீல் வச்சிக்கிட்டு காப்பாத்தகூடாது?//

இது சூப்பர் கேள்வி...?!

'பஞ்ச்' சாமிர்தம்' நல்லா இருக்கு.

இம்சைஅரசன் பாபு.. said...

பஞ்ச் 4 :நானும் போய் பார்த்து இருக்கிறேன் ......எவ்வளோ பெரிய வீடு என்றாலும் அங்கே கதவு இல்லை .....மேலும் அங்கே களவு போனதும் இல்லை என்கிறார்கள் .......உங்கள் ஏக்கம் சரி தான் களுக்கு அவர்களே .........

'பரிவை' சே.குமார் said...

பஞ்சாமிர்தம் நெசமாவே இனிக்குதுங்க.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes