Saturday, January 22, 2011

வாக்காளர் நிறை குறைகளை உற்றுநோக்கும் கழுகு...II


நேற்றைய பதிவின் நீட்சியாக இன்றும் தொடர்கிறது...



கேள்வி: தமிழக வாக்காளர்களின் நிறை மற்றும் குறைகள் என்ன?




"இருக்குற புள்ளையில நல்ல புள்ளை எதுன்னு கேட்டா கூரையேறி கொள்ளி வைக்குற புள்ளையக் காட்டுனானாம்." இது எங்கள் பக்கத்தில் சொல்லப்படும் ஒரு சொலவடை. இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தமது பிரதிநிதியைத் தேர்வு செய்யும் உரிமை பெயரளவுக்குத்தான் இருக்கின்றது. "இதோ இருக்கின்றது ஒரு லிஸ்ட்! இதில் இருந்து ஒருவரைத்தான் உன்னால் தேர்வு செய்ய முடியும். நீ விரும்பும் வேறு தரமான மனிதர்களைத் தேர்வு செய்யும் உரிமை உனக்கு இல்லை" என்கிறது இந்தியத் தேர்தல் ஜனநாயகம். அதேபோலத் 'தேர்வு' செய்ய மட்டும்தான் உரிமை... தேர்வு செய்யப்பட்ட நபர் சரியில்லை என்றால் திரும்பப் பெறும் உரிமையெல்லாம் வாக்காளனுக்கு இல்லை. எனவே "எவன் வந்தாலும் அடிக்கப் போவது கொள்ளைதான்" என்கிற விரக்தி மனோபாவத்திலேயே தமது வாக்கினை விற்றிடவும் அவர்கள் தயாராகின்றனர். 

ஆனாலும் வாக்காளர்களின் நிறையாக நான் கருதுவது அவர்கள் சில தாங்கவியலா தருணங்களில் சத்தியாவேசம் வந்ததுபோல ஒரு கூட்டு மனோபாவத்தில் (Mass psychology ) ஒட்டுமொத்தமாக ஒரு அரசியல்கட்சியைத் தூக்கி எறியும் நிகழ்வுகளை...உதாரணமாக 1996 தமிழகச் சட்டமன்றத் தேர்தல். வாக்காளர்களின் குறையென நான் நினைப்பது போதுமான அரசியல் விழிப்புணர்வின்மை...ஆனால் அது அவர்கள் குறை மட்டுமல்ல...


நிறை : கஷ்டப்பட்டாவது ஓட்டு போட விரும்பும் பொது மக்கள்..
இளைஞர்கள் ஆர்வத்தோடு பங்கேற்பது..
நாட்டின் , மக்களின்  முன்னேற்றம் பற்றி அக்கறை கொள்கிறார்கள்.
தம் ஊர் நாட்டு முன்னேற்றத்தை முன்னிறுத்தி ஓட்டுக்கு விலைபோவதில்லை..

குறை..: பாமரனுக்கு போய் சேருவதில்லை உண்மை நிலை.. இலவச மயக்கம்.. மற்றும் பண பலம் பண புழக்கம் நேர்மையை மறைக்கிறது..

படித்தவர்களும் சிலர் புறக்கணிப்பது...கருத்து கணிப்பு செய்யும் ஊடகங்களின் நடுநிலைமை பற்றிய கேள்விக்குறி...
  

செல்வி ஷங்கர்
 ஒரு வாக்காளன் தன் வாக்குரிமையை நேர்மையாகப் பயன் படுத்த வேண்டும். பரிசுகளுக்கும் பணத்திற்கும் தன் வாக்கை விலை பேசாது - தகுதியான தலைவனுக்கு வாக்களிக்க வேண்டும். நாடு வளர வேண்டும் - நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமுடைய ஒரு குடிமகனைத் தலைவனாக்க,  தன் வாக்கு பயன் பட வேண்டுமென்று எண்ண வேண்டும். தவறுகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிக்காட்டவும் தயங்கக் கூடாது. 



சுற்றுச் சூழலையும், இயற்கை வளத்தையும் காக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். ஆற்று மணலை அள்ளி, நீர் வளத்தைப் பாழாக்குவதையும், குப்பைகளை ஆற்றிலே கொட்டி சுற்றுச் சூழலைக் கெடுப்பவர்களையும், சாயநீர்க் கழிவுகளை ஆற்றில் கலப்பவர்களையும் பார்த்துக் கொண்டிராமல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


மரங்களை வெட்டுவதையும், வயல் வெளிகளை வீட்டு மனைகளாய் ஆக்குவதையும் தடுக்க முற்பட வேண்டும். குடும்ப அட்டைகளைப் பயன் படுத்தி பொதுமக்களின் உணவுப் பொருட்களைக் கடத்துவதைக் கண்டிக்க வேண்டும். நலத் திட்டங்களில் முறை கேடுகள் புகுந்து பொது மக்களின் வரிப்பணம் பாழாய்ப் போவதை நிறுத்த வேண்டும். அதற்காகத் தன் போராட்ட உணர்வை வெளிப்படுத்தத் தயங்கக் கூடாது. 


வாக்காளனின் வறுமையையும், ஏழ்மையையும் பயன் படுத்தி அவனைச் செல்லாக் காசாக்கி விடுவதே குறை. சிந்தித்து வாக்களிக்கக் கூடிய நடுத்தர வர்க்க வாக்களனோ - வெறுப்புணர்ச்சியில் விட்டேறியாக இருந்து விடுகிறான். அடித்தட்டு வாக்காளனோ இலவசத்தில் சோம்பேறியாகி - மதுவில் மதி அழிந்து, மாடு போல் தலையாட்டி விடுகிறான். நிறைகள் எல்லாமே இங்கே குறைகளாகிக் கோலோச்சுகிறது. இதில் வாக்காளன் வக்கற்றவனாகித் தெருவிலே நிற்கிறான். 

நிறை : ஒவ்வொரு எலக்‌ஷன்லயும்  மாத்தி மாத்தி ஓட்டு போடரது பிளஸ் 
குறை : கடைசி நேரத்துல அனுதாப ஓட்டு போடரது மைனஸ். சினிமா மோகம் மைனஸ்தான்..


குறை : அதாவது சென்னையில் சாதாரணமாக 3000 ருபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் .தன சொந்த ஊரில் அதாவது எடுத்து காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து ஓட்டு போட வேண்டும் என்றால் குறைந்தது 1000 ரூபாய் செலவழித்து ஓட்டு போட வேண்டிய நிலை ..

ஓட்டு போடுவது கண்டிப்பு கட்டாயம் என்று கூறுவது எல்லாம் ஏற்று கொள்ள முடியாது .அதுக்கு வேற லெகுவான வழிகளை தேர்தல் ஆணையம் வகுக்க வேண்டும் .....
 

 
நிறை : இத்தனையும் கடந்து வந்து அவன் தன் ஜனநாயக கடமையை செய்கிறான் ....அவனுக்கு நம் அரசியல் வாதிகள் சாற்றும் பட்டை நாமம்  


 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

2 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

All the best

தினேஷ்குமார் said...

என்னைபொருத்தவரைக்கும் ஒருமுறை தேர்தலில் வெற்றிபெற்றவன் மறு தேர்தலில் நிற்க அனுமதி அளிக்க கூடாது தேர்தல் ஆணையம். சுரண்டுவது அறிந்தும் விட்டு வைக்காமல் பதவியை தூக்கும் அதிகாரம் மக்களிடம் இல்லை என்ற ஆணையம் அவர்களிடம் அந்த அதிகாரம் உள்ளதல்லவா அச்சமில்லாமல் அத்தகைய பதிவியாலர்களை பதவியிலிருந்து தூக்கி எரிய வேண்டும் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு அதிகாரம் உண்டல்லவா கூட்டணிகள் இல்லாது தனித்து நிக்கவேண்டும் எவ்வளவு இடங்களில் நிற்க முடிகிறதோ அவ்வளவு இடங்களில் நிற்கலாம் வெற்றி பெற்ற அணிகள் முழுபெரும்பான்மை பெற்றிருக்காது பெறவும் கூடாது அப்படியெனில் எப்படி ஆட்சி அமைக்கமுடியும் என்ற கேள்வி நிலவலாம் வெற்றிபெற்ற கூட்டமைப்பில் உள்ள அணிகளில் ஒவ்வொருத்தரை தேர்ந்தெடுத்து பத்து அணிகள் என்றால் பத்து நபர்கள் இதில் ஒருவர் தான் முதன்மை அமைக்க வேண்டும் ஆட்சி காலங்களை பகிர்ந்து அமைச்சரவை பதவிகளை பிரித்து கொடுப்பது கவர்னராக இருக்கவேண்டும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர் அனைவரின் சுயவிவரங்களை சூட்ச்சமமாக தனி ஆலோசனைகுழுக்கள் மூலம் அறிந்தே பதவி கொடுக்க கொடுக்க வேண்டும் சாத்தியமாகுமா இந்நிலை இங்கு சாத்தியமென்றால் வருங்காலமாவது பொற்காலமாக மாறட்டும்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes