சென்ற பகுதியில் இந்தியாவில் இதழ்களின் தோற்றம் பற்றிப் பார்த்தோம் . இந்தப் பகுதியில் தமிழகத்தில் தோன்றிய இதழ்கள் பற்றியும் அதன் விளைவுகளையும் காணலாம்.
சென்னையில் இதழ்கள் :
1785 அக்டோபர் 12 -இல் சென்னையில் இருந்து ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் " சென்னை கூரியர் " என்னும் ஆங்கில வார இதழை அரசின் ஆதரவோடு வெளியிட்டார். இதுவே முதல் இதழ். அடுத்து 1791 இல் ஹார்கரு என்ற இதழ் ஹ்யூக்பைடு என்பவரால் வெளியிடப்பட்டது. அடுத்த நிலையில் 1795 -இல் வில்லியம்ஸ் என்பவர் " சென்னை கெசட்டு " எனும் இதழை நடத்தினார்.
தொடக்ககால இதழ்களுக்கான ஒழுங்கு முறைகள்
1799 - இல் தலைமை ஆளுநராகப் பொறுப்பு வகித்த லார்டு வெல்லெஸலி இதழ்களுக்கானஒழுங்கு முறைகளைக் கொண்டுவந்தார்.
*.ஒவ்வொரு இதழிலும் அதனை அச்சிடுவோர் , ஆசிரியர் , உரிமையாளர் பெயர்களை வெளியிட வேண்டும்.
*.இதழாசிரியர் , உரிமையாளர் தங்கள் முகவரிகளை அரசின் தலைமைச் செயலரிடம் தெரிவிக்க வேண்டும்.
*.எல்லாச் செய்திகளையும் தலைமைச் செயலரிடம் காட்டி முன் ஒப்புதல் பெற்றே வெளியிட வேண்டும்.
*.இதழ்களை ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிடக்கூடாது.
*.அரசின் செயலாளர்தான் இதழ்களின் கட்டுப்பாட்டாளர். இவ்விதிகளை மீறுவோர் நாடுகடத்தப்படுவர்.
வெல்லெஸ்லியின் இத்தகைய அடக்குமுறை விதிகளால் இந்திய இதழ்கள் சுமார் 17 ஆண்டுகளுக்குத் தட்டுத் தடுமாறின. 1813 இல் ஹேஸ்டிங்ஸ் தலைமை ஆளுநராக வந்த பொழுது இதழ்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். அதற்குப் பிறகு இந்திய இதழ்கள் வளரத் தொடங்கின.
ஹிந்து இதழ் :
இந்திய தேசியக் காங்கிரசு இயக்கத்தின் பிரச்சார ஏடாக இந்து சென்னையில் வெளிவரத் தொடங்கியது. 1876 செப்டெம்பர் 20 ஆம் நாள் விசயராகவாச்சாரியார் என்பவர் தம் நண்பர்களுடன் சேர்ந்து வாரம் ஒருமுறை வெளிவரும் சாதாரண இதழாக இந்துவை தொடங்கினார். பின்பு ஜி.சுப்ரமணிய ஐயரும் இணைந்துகொண்டார். 1883 இல் வாரத்தில் மூன்று நாட்கள் வெளிவந்த இந்து 1889 இல் நாழிதளாக மாற்றம் பெற்றது. அன்னிபெசன்ட் அம்மையாரின் முயற்சியால் தேசிய இதழாகச் செயல்படத் தொடங்கியது.
ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமான போது இந்துவின் விற்பனை கூடியது. அதன் சட்ட ஆலோசகராக இருந்த கஸ்தூரிரங்க அய்யங்கார் 1905 இல் இந்துவை விலைக்கு வாங்கி இன்னும் சிறப்பான முறையில் நடத்தத் தொடங்கினார்.
1868 இல் இருந்து சென்னையில் வெளிவந்து கொண்டிருந்த மற்றொரு ஆங்கில நாளிதழ் மெட்ராஸ் மெயில் ஆங்கிலேயர் சார்பிலேயே வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இந்து அன்று தொடங்கி இன்றுவரை " The National News Paper of India " என்ற முகப்பு வரிகளைத் தாங்கியே வந்துகொண்டிருக்கிறது.
முதல் தமிழ் இதழ் :
1498 இல் வாஸ்கோடகாமா சேர நாட்டில் உள்ள கள்ளிக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். 1550 -இல் அம்பலக்காட்டில் திருச்சபை அமைக்கப்பட்டது. அங்கு பயன்படுத்த இலிச்பனில் ( போர்த்துக்கல் ) கார்த்தில்யா ( சிற்றேடு ) என்ற 38 பக்கத் தமிழ் நூல் அச்சாயிற்று. தமிழ் அச்சேறிய முதல் நூல் இதுதான். ஆனால் தமிழ் எழ்த்துக்களைப் பயன்படுத்தவில்லை. அம்மா என்பதை AMMA என்ற உரோமன் எழுத்துக்களில் அச்சிட்டனர்.
இந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சைக் கண்ட தமிழ் மொழியில் அச்சேறிய முதல் இதழ் எது என்று அறிதியிட்டுக் கூற இயலவில்லை. ஏனெனில் தமிழ் இதழியல் வரலாறு முறையாக எழுதப்படாது இருப்பதே ஆகும்.
1831 இல் வெளியிடப்பட்ட தமிழ் மேகசின் என்ற இதழ்தான் தமிழில் வெளிவந்த முதல் இதழ் என்று கூறி வந்தனர். ஆனால் இதழியல் வல்லுநர் அ.மா.சாமி " முதல் தமிழ் இதழ் 1812 இல் வந்த மாசதினச் சரிதை என்பதாகும் என்கிறார்.
இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் அச்செழுத்துக்கள் வார்க்கப்பட்டன. தமிழ்நாட்டில்தான் முதல் தாள் ஆலை நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில்தான் முதல் அச்சுமை ஆலையும் அமைக்கப்பட்டது. இவ்விதம் அச்சுத்துறை முழுவதிலும் முதன்மையாக விளங்கிய தமிழ்மொழியில் " மாசதினச் சரிதை " என்ற இதழ் 1812 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய மொழியில் வந்த முதல் இதழ் இதுவே. ஞானப் பிரகாசம் என்ற தமிழர் இந்த இதழை நடத்தினார் என்பதாகவும் குறிப்பிடுகிறார்.
(அடுத்த பகுதியில் தமிழன் முதல் வார இதழ் , நாழிதழ்கள் எவை எவை என்பதைப் பார்க்கலாம். இவை அனைத்தும் புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்டவையே )
12 comments:
நல்ல அலசல்..
செல்வா, இதைப் படித்தவுடன் தமிழனாய்ப் பிறந்து, தமிழை பேசவும், படிக்கவும், எழுதவும் செய்து கொண்டிருப்பதை எண்ணி பெறுமை அடைகிறேன். அறிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
பாராட்டுக்கள்...
//இவ்விதிகளை மீறுவோர் நாடுகடத்தப்படுவர்.//
இப்படியும் விதிமுறைகளா வியப்பாக இருக்கிறது ?
//இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் அச்செழுத்துக்கள் வார்க்கப்பட்டன.//
மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஊடகம் பற்றிய இந்த தொடர் பதிவு தெரியாத பல தகவல்களின் ஆச்சரிய தொகுப்பாக இருக்கிறது. கணினியை கையாளும் நாம் ஊடகத்தின் வேர் பற்றி அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி.
பாராட்டுகிறேன் செல்வா.
நல்ல கட்டுரை தொடர் சிறப்பாக செல்கிறது! வாழ்த்துக்கள் செல்வா!
இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் அச்செழுத்துக்கள் வார்க்கப்பட்டன. தமிழ்நாட்டில்தான் முதல் தாள் ஆலை நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில்தான் முதல் அச்சுமை ஆலையும் அமைக்கப்பட்டது//
பல புதிய தகவல்கள்... நன்றி செல்வா!
USEFUL INFORMATIONS....CONGRATS TO THE COLOMNIST.I AM WAITING FOR THE NEXT PART.
அனைவருக்கும் நன்றி. இவை அனைத்தும் புத்தங்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டவையே!
பல புதிய செய்திகளை அழகுற கூறியமைக்கு நன்றிங்க
//கோமாளி செல்வா கூறியது...
அனைவருக்கும் நன்றி. இவை அனைத்தும் புத்தங்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டவையே!//
எப்படியிருந்தாலும் அதை கஷ்டப்பட்டு தொகுத்து சிறப்பாக புரியும் எழுதிய உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள்!
பல புத்தகங்களிலிருந்து தொகுத்து அளிப்பதும் சிறப்பான பணியே..ஊடகங்களில் எடிட்டர் செய்வதும் இதுதான்.தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துகள். :)
நல்ல அலசல்.
Post a Comment