Wednesday, September 21, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (21.9.2011)

ரெங்கு வெகு நேரமாய் டீக்கடைக்கு அழைத்தும்..கனகு கணினியை தட்டிக்கொண்டே இருந்தார்.

ரெங்கு : யோவ் கனகு... நீ வர்றியா இல்லையா...??


கனகு : இரு ரெங்கு... ஒரு டிக்கெட் புக் பண்ணிட்டு வரேன். நீ போ.. இதோ வந்திடுறேன்.

ரெங்கு டீ கடை நோக்கி நடந்தார்...


அண்ணாச்சி : என்ன ரெங்கு சார்... நீங்க மட்டும் வர்றீங்க. ஒரு டீ போதுமா..??  


ரெங்கு : இருங்க அண்ணாச்சி... கனகு வந்திடுவார்.


அண்ணாச்சி : சரி.. சரி.. எங்க எனக்கு ஒரு டீ நஷ்டம் ஆயிடுச்சோன்னு பார்த்தேன். அதோ கனகு அண்ணன் வந்துட்டார்...

ரெங்கு : வா கனகு.. என்ன டிக்கெட்..?! யாருக்கு புக் பண்ணிட்டு இருந்தே..?!

கனகு : கூடங்குளம் போயி நல்லதுக்காக ஒண்ணு கூடி இருக்கற மக்களை பார்க்கணும்ன்னு ஆசையா இருக்குய்யா... நானும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப்போறேன். 

ரெங்கு : அட போய்யா...அந்த போராட்டத்திலும் அரசியல் இருக்குதாம்

கனகு : என்னய்யா சொல்ற...??

ரெங்கு : திமுக MLA தான் பின்னாடி இருந்து தூண்டி விடுறதாஆளுங்கட்சிகாரவுங்க சொல்றாங்க...



கனகு : என்னா அரசியல் போய்யா... மக்களுக்கு நல்லது நடந்தா சரி தான்... இந்த போராட்டத்துக்கு காரணமே வேற... அணு மின்நிலையத்தில் ஆபத்து நடந்தா எப்படி தப்பிக்கணும்ன்னு ஒரு மாசமா பயிற்சி கொடுத்தாங்களாம். அத பார்த்த மக்கள் ரொம்ப பயந்துட்டாங்களாம்.


ரெங்கு : அட பாருய்யா.. அப்புறம்..?!



கனகு: மீன் பிடிக்க போகணும்ன்னா அடையாள அட்டை எல்லாம் கண்டிப்பா இருக்கணுமாம். இந்த ஒரு மாசமா மீன் பிடிக்க ரொம்ப கெடுபிடியாம்.. இதெல்லாம் பார்த்த மக்கள் நமக்கு சரி வராதுன்னு முடிவு பண்ணிட்டாங்க..




ரெங்கு : ம்ம்..நான் கூட திமுக MLA தான் தூண்டிவிட்டார்ன்னு நினைச்சேன்.. இந்த திட்டத்தை நிறுத்தனும்ன்னு சொல்லி அம்மா நாளைக்கு தீர்மானம் போட போறாங்க.. மக்களும் உண்ணா விரதத்தை முடிச்சிட்டாங்க.. 




கனகு : இதான்யா அரசியல்... அப்போ நான் ஊருக்கு போக முடியாதா..?? இப்போ நீ உன் நியூஸ் சொல்லு பார்ப்போம்.


ரெங்கு : நம்ம சகாயம் கலெக்டர் சங்கடப்பட்டு போயிட்டாராம்.. அவர் நினைச்சது நடக்காம போயிருச்சு போல.. 

கனகு : என்னய்யா சொல்ற..? அந்த தயா கல்லூரி நில ஆக்கிரமிப்பு நோட்டீஸ் விவகாரம் தானே..? அதுல என்ன இருக்கு..??




ரெங்கு : தயா கல்லூரிக்கு ஒதுக்கிய நிலம் எதுவும் ஆக்கிரமிப்பு செஞ்சதில்லையாம். இதை சகாயம் கலெக்டர் நியமிச்ச குழு அறிக்கை கொடுத்து இருக்கு. அதை பார்த்த சகாயம் அடடா அவசரப்பட்டு நோட்டீஸ் அனுப்பிட்டோமேன்னு சொன்னாராம்.. 


கனகு : அட.. இங்க பாருய்யா.. என்னால நம்பவே முடியல. நான் கூட போன வாரம் நம்ம அஞ்சா நெஞ்சனை திட்டிட்டேன்... அண்ணன் ரொம்ப நல்லவர் தான் போல... 

ரெங்கு : நீ என்னய்யா அரசியல்வாதிய விட டக்குனு பல்டி அடிக்குற... சரி.. சரி.. நீ அந்தப்பக்கம் தனியா நில்லு. நான் இந்தப்பக்கம் தனியா நிக்குறேன்.. 

கனகு : என்னய்யா சொல்ற..? தனியா நிக்குறதுக்கு நான் என்ன காங்கிரஸா..??

ரெங்கு : முதல்ல காங்கிரஸ்தான் தனியா நிக்க போறோம்ன்னு  மிரட்டி அதிக சீட் வாங்கலாம்ன்னு பார்த்ததாம். ஆனா இந்த தகவல் அய்யாவுக்கு தெரியவர நம்ம அய்யா முந்திகிட்டாரு... அய்யா இப்ப தனியாவே உள்ளாட்சித்தேர்தல்ல நிக்கறோம்ன்னு சொல்லவும் எல்லாம் ஆடிப்போய்ட்டாங்களாம்.. 14 லட்சம் இளைஞர்கள் ஓட்டு இருக்குன்னு சொல்லி பெருமை பேசுற காங்கிரஸ் இப்போ என்ன பண்ணுமோ..??

கனகு: யோவ்.. போய்யா.. சும்மா காமெடி பண்ணாதே.. 14 லட்சம் வேணாம். முதல்ல ஒரு 5 லட்சம் பேரை காட்ட சொல்லுய்யா பார்ப்போம்.. இவிங்க ஒரு மேயர் சீட் வாங்கி காட்டட்டும். இவங்க பெரிய அப்பாடக்கர்ன்னு நான் ஒத்துக்குறேன்...

ரெங்கு : நீ என்னய்யா இம்புட்டு டென்சன் ஆகுற..?! நம்ம சோனியாவே டென்சன் ஆகல..வேற ஒரு நியூஸ் இருக்கு. அத கேட்டு எப்படி டென்சன் ஆகற பார்ப்போம்..  சூடா இருக்க கொஞ்சம் டீ குடி...

கனகு : என்ன நியூஸ்ய்யா அது..?! ராசா வெளிய வந்துட்டாருன்னு சொல்ல போறியா..??

ரெங்கு : இப்போ வெளிய வரல... கொஞ்ச நாள்ல வந்திடுவார் போல... 

கனகு : எப்படிய்யா சொல்ற..??

ரெங்கு :  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுல அரசுக்கு இழப்பு எதுவும் இல்லைன்னு ட்ராய் அறிக்கை தாக்கல் செஞ்சிருக்கு..இந்த ஒதுக்கீட்டு முறையில் அரசுக்கு லாபம் தான் சொல்லிருக்கு..

கனகு : யோவ்..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் பல்டி அடிச்சேன்னு சொன்ன... இங்க பார் உலக மகா பல்டி இது.. 

ரெங்கு : இப்படியெல்லாம் அறிக்கை வரலைன்னா அடுத்து நம்ம ப.சி அய்யாவை விசாரணை செய்வாங்க... அப்பறம் நம்ம பிரதமர் அய்யா...ஹி..ஹி...அதனாலதான் இப்படியெல்லாம் அறிக்கை வருது.

கனகு : என்னமோ நாடு உருப்பட்டா மாதிரிதான் போய்யா... இதையெல்லாம் கண்டிச்சு நான் உண்ணா விரதம் இருக்க போறேன் பார்...




ரெங்கு : நீ என்னய்யா உண்ணாவிரதம் இருக்குறது... தூள் படத்தில் வர்ற மாதிரி இப்போ ஒருத்தர் உண்ணாவிரதம் இருந்தார். அது உனக்கு தெரியுமா..?!




கனகு : நம்ம குஜராத் மோடிய தானே சொல்ற.. எல்லாம் நம்மள வைச்சு காமெடி பண்றாங்கய்யா. அது சரி. இவர் எதுக்குய்யா உண்ணாவிரதம் இருந்தார்..?!

ரெங்கு : சமூக நல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்தாராம்.



கனகு : என்னய்யா சொல்ற... அந்த பக்கம் எதையாவது கொளுத்தணும் எதையாவது இடிக்கணும் அப்பறம் இந்த பக்கம் உண்ணாவிரதமா..?? இந்த அரசியல்வாதிகளுக்கே இதே பொழப்பு தான் இதுக்குதாய்யா எங்க ஊர்ல பழமொழி சொல்வாங்க... சாத்தான் வேதம் ஓதுதான்னு...  சரி.. சரி.. நான் போய் உண்ணா விரதம் இருக்கேன்... 


ரெங்கு : யோவ் அப்போ டீ...


கழுகிற்காக


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 

1 comments:

ஜோசப் இஸ்ரேல் said...

அருமையாக தோலுரித்து காண்பித்தீர்கள் ....

சாக்கடையான இந்த அரசியலை பற்றி நானும் ஒரு கவிதை எழுதி உள்ளேன். முடிந்தால் பாருங்களேன்
http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post_20.html

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes