Thursday, July 29, 2010

எதார்த்த உலகில் கழுகு!





கூகில் இலவச வலைப்பக்கங்களை வழங்குகிறது. ஏதோ வந்தோம் எழுதி விட்டுப் போவோம் என்ற எண்ணம் தாண்டி ஏதாவது பயனுள்ள வகையில் இந்த வலைப்பூவினை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணிதான் கழுகினைப் பறக்கவிட்டோம். கழுகின் செயல்பாடுகள் குளிர் சாதன அறைக்குள் இருந்து கொண்டு வெளி மனிதர்களை குற்றம் சொல்லும் அளவில் வாய்ச்சொல்லில் வீரர் என்ற அளவில் இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாய்த்தான் இருக்கிறோம்.

வலையுலகம் என்ற மாயை தாண்டி எதார்த்த மனிதர்களின் வாழ்க்கைப்பக்கங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்க முயன்றோம். அன்றாடம் நாம் செல்லும் வழிகளில் கையேந்தி முகங்களில் வறுமையைத் தேக்கி வைத்து கசங்கிய உடையுடன் நம்மிடம் கையேந்துகிறார்களே நமது மனிதர்கள் யார் இவர்கள்.

உயர், நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்களையும் கடந்து அதற்கும் கீழே வாழ்வாதாரங்கள் இல்லாமல் தெருவோரம் முடங்கிக்கிடக்கிறார்களே மக்கள்....இவர்களும் மானுடர்களே...! இவர்களின் ஆசை என்னாவாயிருக்கும், லட்சியம் என்னவாயிருக்கும், அன்றாட கனவுகள் என்னவாயிருக்கும்....இப்படி பலதரப்பட்ட கேள்விகள் நம் அனைவரையும் உலுக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.....

கல்லும், முள்ளும், தூசும் வெயிலும் நிறைந்த நமது பயணங்கள் சொல்லுமா? இதற்கான விடையை....என்ற எண்ணத்தோடு தம்பி விஜயிடம் பகிர்ந்த எண்ணவடிவம் செயல்வடிவாமானது...அதை வரிவடிவமாக்கி இதோ..உங்களுக்காக...

காட்சி விளக்கம்:

மாலை நேரம் ,எனது கைகடிகாரத்தின் முள் ஐந்தை தொட்டதும், எனக்கான கடமையும், என்னுள் ஓங்கி இருந்த ஆர்வமும், இதுவரை எழுத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற நான், முதன்முறையாய் செயலில் இறங்க போகிறேன் என்ற துடிப்பும் என்னை அவசரப்படுத்தியது, எனது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசியை எடுத்துகொண்டு கிளம்ப ஆரம்பித்தேன்,மதுவிலும், புகையிலும் தான் சந்தோசம் நிரம்பிக்கிடக்கிறது என்று, தன்னை மாய்க்க போராடும் நச்சுகளிடம் சிறுது சிறிதாய் தோற்று போவதுதெரியாமல் வாழும் எனது அறை நண்பனை கடந்து .

நடக்க ஆரம்பித்தேன் சைதாபேட்டை ரயில் நிலையத்தை நோக்கி, ஆம் இதுதான் நான் முதன் முறையாய் செயலில் இறங்கும் களம், வழியெங்கும் புது எதிர்பார்ப்புடன், சிந்தனைகளை என்னுள் திரும்ப திரும்ப சுற்ற வைத்துகொண்டு நடந்துகொண்டு இருக்கிறேன், எனது கால்கள் கனத்த அந்த நொடியில் களத்தை அடைந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். ஆம் இது தான் நான் நான் தினந்தோறும் அலுவலகம் செல்லும் , இயற்கையால் சீரழிக்கப்பட்ட, தன் அங்கங்கள் தவறான முறையிலும், குறைவான அறை குறை படைப்பில் வாழும் மனிதர்களை மனிதமற்று கடந்து செல்லும் ரயில் நிலையம்,

ஆம் அவர்களை சந்திக்க தான் இவ்வளவு வேகமாய் செல்கிறேன், அவர்கள் அமரும், உறங்கும், சாப்பிடும் அனைத்தும், நாம் ஒரு நிமிடம் கடந்துசெல்லவே மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சுகாதார(சுகாதாரமற்ற ) கழிப்பிடம்,அதன் அருகே தான் அவர்கள் வாழ்க்கை பயணம், ஏறக்குறைய 15 மனித உயிர்கள் தன் வாழ்கையை பயணிக்கிறார்கள்,அவர்களில் 10 க்கும் மேற்பட்டோர் இயற்கையால், கண்கள் கொடுக்க மறக்க பட்டவர்கள், 3 க்கும் மேற்பட்டோர் இயற்கையால்,சரியான , நடக்க முடிந்த தேகம் கொடுக்க மறக்க பட்டவர்கள்.இவர்களை தான் தினமும் கடந்து சென்றேன் மனிதமற்று, அவர்களுக்காய் ஒன்றும் செய்யாதவரை நானும் மனிதமற்றவன் தானே,

எப்படி வாழ்கிறார்கள், எப்படி கஷ்டபடுகிறார்கள், எவற்றை எதிர்பார்க்கிறார்கள், அரசாங்கம் இவர்களுக்காய் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளை அவர்களிடம் தொடுக்க கிளம்பிவிட்டேன், களத்தை அடைந்தும் விட்டேன், குறைந்தது ஒரு 10 பேர் வழக்கமான சுகாதாரமற்ற கழிப்பறை அருகே தான் அமர்ந்து இருந்தார்கள், எதையோ சுவாரஸ்யமாய் ,காதுகளால் கவனித்துகொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு அருகே நெருங்க ஆரம்பித்தேன், ஏதோ ஒன்று என்னை கனக்க செய்தது, முதல் முறை முகம் தெரியா மனிதர்களிடம் பேச போகிறேன் , அதுமட்டும் இல்லாது ,அலுவல வேலைக்காய் அவசரத்தில் அவர்களை கடந்து சென்றபொழுது தெரியாத வலி, இன்று நிதானமாய் அவர்களை நெருங்க நெருங்க, கலங்கிய என் கண்களில் இருந்து புரிந்தது, வார்த்தை பேச முடியுமா என்று கேட்க ஆரம்பித்தது கலங்கிய என் கண்கள், ஒருத்தரின் கண்களை மட்டும் தான் பார்த்து பேச முடியும் என்னால், அங்கு இருந்த ஒருவர் மட்டுமே கண்கள் ஊனமாகமல் என்னை கவனித்துகொண்டு இருந்தார்.மற்றவர்கள் தங்கள் காதுகளால் வானொலியில் எதோ ஒரு தொடர் நாடகத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்

நானும் அவர்களுடன் அமைதியாய் அமர்ந்தேன் அவர்கள் அருகே, என்ன வேண்டும் என்ற தோரணையாய் என்னை பார்த்தார், நானும் பேச ஆரம்பித்தேன் .

"அய்யா நான் விஜய், சொந்த ஊரு நாமக்கல், சென்னைல தான் வேலை பார்க்கிறேன், உங்களை தினமும் கடந்து போகிறேன் மனிதமற்று, இன்று உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது,அதுமட்டும் இல்லாமல் உங்களை போன்றோரின் கஷ்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்,முதலில் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லுங்கள், உங்கள் கஷ்டங்கள் என்ன?, இந்த அரசாங்கமும், இந்த மக்களும் உங்களுக்கு என்ன (உதவி) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்", என்ற கேள்விகளை முன் வைத்தேன்..

சிறிது நேரம் என்னை உற்று நோக்கியவர் கூறிய பதில், நான் சிறிதும் எதிர்பார்க்காதது, ஏன் நீங்களும் கூட தான் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்,

"யார் சொன்னது நாங்க எல்லாம் கஷ்டபடுகிறோம் என்று, நாங்க யாரு கஷ்டப்படுல" என்று கூறினார்,

கன்னத்தில் பளார் என்று அறைந்தது போன்று உணர்ந்தேன், வார்த்தை பேச முடியவில்லை , இருந்தும் கேள்விகளை தொடர்ந்தேன், ஆனாலும் அனைத்து கேளிவிகளுக்கும் அவரிடம் இருந்து வந்த ஒரே பதில் , நான் மேலே கூறியது தான், இப்பொழுது கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன் , குறைந்தது 30 நிமிடத்துளிகளாவது அவர்களின் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது, அவ்வாறே 30 நிமிடத்துளிகள் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து இருந்தேன், ஒரு புறம் சந்தோசம் மனதுக்குள் பூத்தது, அவர்களும் சந்தோசமாய் தான் இருக்கிறார்கள் என்று, மறுபுறம் இவர்கள் விரக்தியில் பேசுகிறார்களா என்று சந்தேகத்தை எழுப்பியது ?

அழகாய் முகப்பூச்சுகளை போட்டுகொண்டு அழகானதாய் , கையில் மிக பெரிய கேமெரா க்களை சுமந்து வந்து கேள்விகளையும், கஷ்டங்களையும் ஒளிப்பதிவு செய்யும் மீடியாக்கள் தான் இவர்கள் குறையை தீர்த்து வைக்கும் என நம்புகிறார்களா?, குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்யும் இவர்கள் என்ன கிழித்துவிட போகிறார்கள் என்ற எண்ணமோ என 1000 கேள்விகள் என்னுள்.
இதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்,

அவர்களை படம் எடுக்க வேண்டும் என்ற கனவு கண்ணெதிரே உடைந்துவிட்டது, சரி வருகிறேன் ஐயா, அம்மா என்று சொல்லிவிட்டு கனத்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட்டேன், இத்தோடு முடியவில்லை என் பயணம்,

இங்கே எமக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கும்வரை எமது சிறகுகள் விரித்து விண்ணில் வட்டமிட்டு எமது தேடலை தொடர்வோம்......


கழுகிற்காக
விஜய்




21 comments:

தனி காட்டு ராஜா said...

தொடரட்டும் ....

செல்வா said...

வாழ்த்துக்கள் விஜய் அண்ணா ..!!

ஜில்தண்ணி said...

முதலில் செயலில் இறங்கியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிறகுகள் விரியட்டும்,பதில்கள் கிடைக்கும்

ஜீவன்பென்னி said...

கழுகுக்காக தொடருவோம்.

vasu balaji said...

நல்ல முயற்சி. தொடரட்டும்.

எல் கே said...

todarattum

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிறகுகள் விரியட்டும்....

வாழ்த்துக்கள் விஜய்...

அருண் பிரசாத் said...

தொடரட்டும்

க ரா said...

நல்ல முயற்சி விஜய்.. இதே மாதிரி ஒரு விசயத்தை சுஜாதா ஒரு சிறுகதையில் தொட்டுப்போயிருப்பார்.. வாழ்த்துகள்

நிலாமதி said...

மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்ல முயற்சி. தொடரட்டும்

Chitra said...

அழகாய் முகப்பூச்சுகளை போட்டுகொண்டு அழகானதாய் , கையில் மிக பெரிய கேமெரா க்களை சுமந்து வந்து கேள்விகளையும், கஷ்டங்களையும் ஒளிப்பதிவு செய்யும் மீடியாக்கள் தான் இவர்கள் குறையை தீர்த்து வைக்கும் என நம்புகிறார்களா?, குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்யும் இவர்கள் என்ன கிழித்துவிட போகிறார்கள் என்ற எண்ணமோ என 1000 கேள்விகள் என்னுள்.
இதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்,


..... மீடியா மாயையா? இல்லை, மாறுதல் கொண்டு வரும் மார்க்கமா? ம்ம்ம்ம்....

Mahi_Granny said...

நல்ல முயற்சி பாராட்டை பெற்றுக் கொள்ளுங்கள் .

Unknown said...

வணக்கம் தம்பி, இங்கு எல்லோரும் தன் வாழ்வை ஏதோ ஒரு வகையில் விரும்பிதான் வாழ்கிறார்கள், சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார் ஒரு புழுவைகூட தன்னால் மாற்ற முடியாது என உணர்ந்து கொண்டேன் என்று.. மாற்றம் ஓட்டு மொத்தமாக வரவேண்டும்.. முதலில் நீங்கள் விரும்பும் மாற்றம் எதிலிருந்து என தெளிவு படுத்துங்கள்.. அதன்பின் ஊர்கூடி தேரிழுக்கலாம்...

Karthick Chidambaram said...

ஆழமான சமுதாய எண்ணத்தோடு உங்கள் எழுதுகோல் எச்சில் உமிழ்ந்து உள்ளது. காகிதத்தின் மேல் அல்ல நம் மீது.

உங்கள் அக்கறையும் நற்பணியும் தொடரட்டும்.

ஜெயந்தி said...

//வணக்கம் தம்பி, இங்கு எல்லோரும் தன் வாழ்வை ஏதோ ஒரு வகையில் விரும்பிதான் வாழ்கிறார்கள், சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார் ஒரு புழுவைகூட தன்னால் மாற்ற முடியாது என உணர்ந்து கொண்டேன் என்று.. மாற்றம் ஓட்டு மொத்தமாக வரவேண்டும்.. முதலில் நீங்கள் விரும்பும் மாற்றம் எதிலிருந்து என தெளிவு படுத்துங்கள்.. அதன்பின் ஊர்கூடி தேரிழுக்கலாம்...
//
அதேதான்.

Suresh said...

Ungal muyarchi vetri adaya vazthukkal!!! Menmulum thodarattum, vidai kidaikum varai... Neengal tharum ookathal Nangalum, ithu pondra seyalgalil idupaduthuvom nanba..

Keep going

jothi said...

நகர்வலத்தின் உள் நோக்கம்? தெரிந்தால் நன்றாக இருக்கும்.....

விஜய் said...

//jothi

எப்படி வாழ்கிறார்கள், எப்படி கஷ்டபடுகிறார்கள், எவற்றை எதிர்பார்க்கிறார்கள், அரசாங்கம் இவர்களுக்காய் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும்?..

கழுகு said...

//வணக்கம் தம்பி, இங்கு எல்லோரும் தன் வாழ்வை ஏதோ ஒரு வகையில் விரும்பிதான் வாழ்கிறார்கள், சுஜாதா ஒருமுறை சொல்லியிருப்பார் ஒரு புழுவைகூட தன்னால் மாற்ற முடியாது என உணர்ந்து கொண்டேன் என்று.. மாற்றம் ஓட்டு மொத்தமாக வரவேண்டும்.. முதலில் நீங்கள் விரும்பும் மாற்றம் எதிலிருந்து என தெளிவு படுத்துங்கள்.. அதன்பின் ஊர்கூடி தேரிழுக்கலாம்... //


கே. ஆர்.பி. செந்தில் & ஜெயந்தி @


கருத்துக்கு நன்றிகள். ஊர் கூடுவதும் தேரிழுப்பதுமே இரண்டாம் பட்சம்தான். எத்தனை கோடி மனிதன் இருக்கிறானோ அத்தனை கருத்துக்களும் சித்தாந்தங்களும் இருக்கின்றன. அதனால் யாரையும் மாற்றுவது என்பது எப்போதுமே சாத்தியப்படாத ஒன்று ....மாற்றம் நிகழ வேண்டியது ஒவ்வொரு மனிதனின் மனதில்....தீர்மானம் செய்யவேண்டியது தனி மனிதனே அன்றி...ஒருவன் சொல்வதால் ஒருவன் மாறிவிட்டன் என்பது சொற்றொடர் கூட தவறுதான்.

நாம் ஒன்றூ சொல்லி அக்கருத்துடன் ஒருவன் ஒத்துப் போனால் அவனின் உள்ளே அதற்கான ஏற்பாடுகளும் ஒத்துக்கொள்ளும் தன்மையும் ஏற்கெனவே இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

நாம் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறைகளை, மனோ நிலைகளை எல்லோர் முன்னும் சமர்ப்பிக்கிறோம்...மாறுவதும் ஒத்த கருத்துள்ளவர்கள் கூடுவதும் தனிமனதில் ஏற்படும் மாற்றங்கள்.

இதில் நாம் ஒரு அடிப்படை நிலையில்தன் இருக்கிறோம்....மாற்றம் வருவது..மனித மனங்களிதன் இருக்கிறது....!

கழுகு said...

//உயர், நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்களையும் கடந்து அதற்கும் கீழே வாழ்வாதாரங்கள் இல்லாமல் தெருவோரம் முடங்கிக்கிடக்கிறார்களே மக்கள்....இவர்களும் மானுடர்களே...! இவர்களின் ஆசை என்னாவாயிருக்கும், லட்சியம் என்னவாயிருக்கும், அன்றாட கனவுகள் என்னவாயிருக்கும்....இப்படி பலதரப்பட்ட கேள்விகள் நம் அனைவரையும் உலுக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.....//


உங்களுக்கு இங்கே....பதில் கிடைத்ததா தோழர்?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes