Saturday, July 24, 2010

விழிப்புணர்வு பதிவுகள் - ஒரு கழுகுப் பார்வை!

எமது ஒவ்வொரு சிறகடிப்பும்....எம்மக்களின் விழிப்புணர்வையும், ஏதாவது ஒரு படிப்பினையையும் கொடுக்க வேண்டும் என்பதால்...மிக கவனமாகவே வானத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். கழுகின் கண்களில் படும் நல்ல விசயங்களை ஊடுருவி...பெரும்பான்மையான மக்களிடம் கொண்டு செல்லவும் தீர்மானித்தோம்.


கடந்த வார பதிவுலகத்தை ஊடுருவிய போது..எமது கண்ணில் பட்ட இரு பதிவுகளை பற்றி கழுகின் பார்வையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

கடந்த வாரத்தின் அட்டகாச பதிவர் I - தம்பி சிரிப்பு போலிஸ்ரமேஷ்.தம்பி வெளியிட்டிருந்த ஒரு பதிவு மிகப்பெரிய திடுக்கிடலையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியது. சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்த சோபன் பாபு என்ற மாணவர் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்காக கோவை சென்ற இவரின் கனவுகள் எல்லாம் தகர்ந்து போயின..... ஏன்....? ஏன்?... ஏன்..


பெட்டிகடை வைத்து பிழைப்பு நடத்திய பெற்றோர்களின் எதிர்காலம் இப்போது வறன்டு போய் கிடக்கிறது +2வில் 1160 மார்க் எடுத்தும்....தெளிவாய் கல்லூரியில் சேர்ந்தும்....பாலாப் போன இந்த பகடிவதை (ராகிங்) கொடுமையால்....மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு நடக்க முடியத நிலையில் இருக்கும் இந்த தம்பியின் போட்டோ பார்த்தால் உங்கள் கண்களில் வரும் கண்ணீரை அடக்க முடியாது.
இந்த கொடுமையை நிகழ்த்தியது வேற்று கிரகவாசிகள் இல்லை...சக மாணவர்கள்தான்....! பெற்றோர்களே..உங்களுக்கு ஒரு வேண்டுகோள் பிள்ளைகளை வளர்க்கும் போதே அடுத்த உயிரை வதைத்தல் கேலிசெய்தல் கூடாது என்று சொல்லி சொல்லி வளருங்கள்...

பகடிவதை செய்த பையன் வேறு யாரிடம் இருந்து இந்த வலியை வாங்கி உள்ளத்தில் தேக்கிவைத்து அதை சோபன் பாபுவிடம் காட்டினானோ?.....சமுதாயத்தில் அக்கறை கொண்ட அத்துனை பேரும் தமது பிள்ளைகள், நண்பர்கள், சொந்தங்கள் என்று வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நல்ல எண்ணங்களை விதைக்க முயலுங்கள்...இது போல பல சோபன்பாபுக்களின் வாழ்க்கை பிரகாசமாகும்.


தம்பி சோபன் பாபுவிற்கு உதவி செய்ய விரும்புவோர் 0091 98436-51708 & 0091 98431-17594 என்ற எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.இந்த செய்தியை செய்தித்தாளில் படித்து விட்டு ஒரு பதிவாக வெளியிட்ட தம்பி ரமேஷ்சை கழுகு கூட்டத்தில் ஒருவர் என்று சொல்லிக்கொள்வதில் கழுகு பெருமிதம் அடைவதோடு தம்பிக்கு பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த வாரத்தின் அட்டகாச பதிவர் II - தோழி கெளசல்யாஅடுத்ததாய் நமக்குள் ஒரு வித வேகத்தைக் கொடுத்து மிகைப்பட்ட மனிதர்களை தொடர்பு கொண்டு பேசச் செய்ததோடு மட்டுமில்லாமல் ஒரு வித அதிர்ச்சியையும் கொடுத்த பதிவு...தோழி கெளசல்யா எழுதிய...மரங்களை வெட்டுங்கள் என்ற பதிவு
1960களில் இராமனாதபுரம் கண்மாய்களின் நடு நடுவே கூட நிறைய கருவேல மரங்களை நட அரசே உத்தரவிட்டதாக பல செய்திகளை சேகரித்துப் படித்தோம். கருவேல மரங்கள் நீர் ஆதாரங்களை உறிஞ்சி எடுத்து விடும், காற்றின் ஈரப்பதத்தையும் அது எடுத்துக் கொள்வதால் ஒரு விதமான வறண்ட வானிலையும் சுற்றுப்புறச் சூழலில் ஒரு வித வறட்சியையும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். அமெரிக்காவின் தாவரவியல் பூங்காவில் வளர்க்க கூடாத நச்சு மரங்களின் பட்டியலில் இந்த கருவேலமரமும் இடம் பெற்றிருக்கிறது என்றும் விளக்கமாக சொல்லியிருந்தார் தோழி கெளசல்யா.

மேலே சொன்னது எல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மரத்தினால் பயன்படு எதுவும் இல்லை என்றும் கூறியதை முழுவதுமாக ஒத்துக்கொள்ள முடியாது. அடுப்பெரிக்கும் விறகாகவும், செங்கல் சூளைகளிலும்....மிகையாக பயன்படுத்தப்படுவது கருவேல மரங்கள்தான் . மேலும் இதன் காய்களை ஆடுகளுக்கு தின்னவும் கொடுப்பார்கள். சரி...என்னதான் பயன்பாடு இருந்தாலும் அது சிறிய அளவில்தான் ஆனால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை....

மக்கள் எல்லாம் தமக்குள்ளேயே விழிப்புணர்வூட்டிக்கொள்ள வேண்டும்....மேலும் இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நிறைய பேரிடம் இந்த செய்தியை பகிரவேண்டும் என்ற வேண்டுகோளினை கழுகு வைப்பதோடு மட்டுமில்லாமல்....தோழி கெளசல்யாவையும் இது போன்று சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகளை அடிக்கடி எழுதுமாறு கேட்டு கழுகின் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது

வாசகர்களே.... நண்பர்களே... சக பதிவர்களே...... ! நீங்கள் வாசிக்கும் சிறந்த கருத்துக்கள் கொண்ட சமுதாய விழிப்புணர்வூட்டக்கூடிய.....அடுத்த மனிதருக்கு பயன் தரும் பதிவுகளின் இணைப்பினை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.... அடுத்து வரும் வாரங்களில் வெளிவரும் இருபதிவுகளை மிகைப்பட்ட மக்களிடம் சேர்ப்பிப்பதில் உங்களின் பங்களிப்பையும் இதன் மூலம் காட்டுங்கள் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம்..
எந்த மிகப்பெரிய வெற்றியும்.....தனிமனிதனைச் சென்றடைவதைவிட.... சமுதாயத்தை சென்றடைந்தால்....எல்லோரும் பயன் பெறலாம்!

(கழுகு இன்னும் உயர பறக்கும்)

11 comments:

எல் கே said...

arumai todarungalll muthal seythi manathai pathara seygirathu

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arumaiyaana pathivu..

KAZUKU innum Uyare Parakkattum...

செல்வா said...

நிச்சயம் பறப்போம் ...!!!

ஜீவன்பென்னி said...

இந்த மரங்கள சுலபமா வெட்டி வீசிட முடியாதுங்க. கிளைகளை வெட்டி வேரையும் வெட்டி நல்லா வெயிலுல காயவிட்டு எரிக்கனும். கொஞ்சமா வேர் மண்ணுக்கு அடியில இருந்தாலும் மீண்டும் வர ஆரம்பிச்சுடும். அதே ஒரு மழை பேஞ்சா போதும் ஒரே வாரத்துல மீண்டும் முழச்சிடும். வேர் அழிக்குறதும் சுலபமா முடியாது. இதுக்கு அரசாங்கம் பணத்த தனி ஒதுக்கீடு செஞ்சு செயல்படுத்தினாத்தான் முடியும்.

அமைதி அப்பா said...

//சமுதாயத்தில் அக்கறை கொண்ட அத்துனை பேரும் தமது பிள்ளைகள், நண்பர்கள், சொந்தங்கள் என்று வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் நல்ல எண்ணங்களை விதைக்க முயலுங்கள்...இது போல பல சோபன்பாபுக்களின் வாழ்க்கை பிரகாசமாகும்.//

எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியது.
நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி. நம்மளால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்வோம். தோழி கெளசல்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

jothi said...

மிகவும் விரும்பதகாத செயலால் அந்த மாணவனின் வாழ்க்கை கேள்வி குறியாகி விட்டது வருத்தத்திற்கு உரியது. முடிந்த உதவியை செய்வது நமது மனிதாபிமானம்.

இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக இருக்கவேண்டும். கேரளாவை போல் தமிழ் நாட்டிலும் அந்த மரத்தை இல்லாமல் செய்து நம் தாய் மண்ணின் மாண்பை காக்கவேண்டும். அரசாங்கம் கவனிக்குமா....??

பனித்துளி சங்கர் said...

வணக்கம் உங்களின் முதல் பதிவு பல தினங்களுக்கு முன்பே அறிந்ததே இருந்தாலும் . உங்களின் பதிவு அந்த நிகழ்விற்கு உயிர் கொடுத்து இருக்கிறது . ஆம் பிறரின் உணர்வுகளை கண்களில் கண்ணீராக கசிய செய்யும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்த பதிவில் கண்டேன் . அருமை . இரண்டாம் பதிவு தலைப்பே சற்று கோளாறாக இருப்பதாக எண்ணி வாசிக்கத் தொடங்கினேன் . கட்டி வைத்து அடித்தாற்போல் உணர்ந்துகொண்டேன் உண்மைகள் அனைத்தும் . அருமை . இன்னும் கழுகு உயரே பறக்க என் வாழ்த்துக்கள் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

ராக்கிங் மிகக் கொடுமையானது.. இப்படி செய்றவங்களுக்கு மனசாட்சியே கிடையாதா..

நல்ல பகிர்வு.. தொடருங்கள் தேவா..

Kousalya Raj said...

இந்த தகவல்களை பலரிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம், கழுகிற்கு என் நன்றியை செலுத்துகிறேன். இந்த விழிப்புணர்ச்சி பதிவுக்கு என் வாழ்த்துகள்.

pinkyrose said...

என்னையும் சேர்த்துகங்கப்பா!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes