கழுகின் சிறகடிக்கும் பயணத்தில்..பல்வேறு நிலைகளை கடக்க வேண்டியுள்ளது.
இந்த வாரம் கழுகு சென்றமர்ந்த இடம் நமது அண்ணன் கேபிள் சங்கரின் வீட்டு மாடி......
தனக்கென ஒரு தனி பாணியையும் வாசகர் கூட்டத்தையும் பெற்றது...கேபிள் சங்கரின் ஸ்பெசல் என்றாலும் ஒரு மனிதானாய் மிக எதார்த்தமானவர்........எந்த ஒரு தனது தகுதியையும் தள்ளி நின்றே பார்த்து ரசிப்பவர்....
கழுகின் கேள்விகளுக்கு கேபிள் சங்கரின்- அதிரடிப் பதில்கள் இதோ......
1) கேபிள் எப்படி உங்களின் பெயரோடு சேர்ந்தது?
வெறும் சங்கர் என்பது சாதாரணமாக இருந்தது. அடிப்படையில் நான் கேபிள் டிவி தொழில் செய்து கொண்டிருப்பதால் கேபிளைக் கூட சேர்த்துக் கொண்டால் நிச்சயம் படிக்கும் மக்களின் கவனம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பெயரோடுச் சேர்த்தேன்.
2) பதிவுலகில் அடியெடுத்து வைத்த போது உங்களின் மனோ நிலை என்ன?
2006ஆம் ஆண்டே நான் பதிவெழுத ஆரம்பித்திருந்தாலும், 2008ஆம் ஆண்டுதான் என் ஆரம்ப ஆண்டு என்று சொல்ல வேண்டும். மிக சாதாரணமாக எல்லோரையும் போலத்தான் எழுதி வந்தேன். பின்பு வாசகர்கள், மற்றும் சக பதிவர்களின் உற்சாகமான ஊக்குவிப்பால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.அது இரண்டு புத்தகங்கள் வெளிவரும் வரை வந்திருக்கிறது. வரும் போது பெரியதாய் ஏதும் சாதிக்கப் போகின்ற மனநிலையில் இல்லை. ( இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது:))
3) சினிமா விமர்சனங்கள் ஒரு வாசகனை என்ன செய்துவிடும்?
சினிமா விமர்சனம் படித்து ஒரு படம் ஓடுவதோ, அல்லது வீழ்வதோ கிடையாது. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு விமர்சனங்களை பார்த்து யாரும் படம் பார்ப்பதில்லை,முதல் சில வாரங்களுக்கு. அதே போல் விமர்சனம் பார்த்தும் போவதில்லை. அதற்கான ஆடியன்ஸ் தனி.
ஆனால் சிறிய படங்கள், புதுமுக, அறிமுக இயக்குனர்கள் நடிகர்கள் நடித்த படத்துக்கான விஷயம் வேறு. எடுத்தவுடன் பெருவாரியான மக்கள் படத்தை பார்க்கப் போக மாட்டார்கள். படம் நன்றாக இருக்கிறது என்கிற ஒருமித்த விமர்சனக் கருத்து, வாசகனை போய்சேர்ந்து அப்படத்தை பார்க்க வைக்கின்றது. அவனது மவுத் பப்ளிசிட்டி மேலும் பலரை திரையரங்கிற்கு வரவழைக்கிறது. அதனால் சினிமாவுக்கும் நல்லது, பார்க்கும் வாசகனுக்கும் நல்ல சினிமாவைப் பார்த்த சந்தோஷம் இருக்கும்.
4) தமிழ் சினிமா பற்றி உங்கள் கருத்து?
தமிழ் சினிமா ஒரு வற்றாத ஜீவ நதி.. நதியில் அவ்வப்போது தண்ணீர்
வற்றிப் போவது போல கண்ணுக்குத் தெரியும், ஆனால் திடீர்,திடீரென.. கரை புரண்டும் ஓடும்.
5) ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?
முதல்ல நம்ம எழுதுறதை யார் படிப்பாங்கனே தெரியாது. இதுல புத்தகம் போடுற எண்ணத்துல வேற எழுத வந்தேனா..? அஹா.. தொடர்ந்து பதிவுலகில் கிறுக்க ஆரம்பித்த நேரத்தில், சிறுகதைகள் எழுதலாம் என்று. முதலில் நிதர்சனக் கதைகள் என்கிற தலைப்பில் தொடர்ந்து கதைகள் எழுதியபோது. பதிவர், நாகரத்னா பதிப்பக உரிமையாளர் திரு. குகன் ஒரு பத்து கதைகள் வந்த்தும் சொல்லுங்கள் உங்கள் கதைகளைப் புத்தகமாய் வெளியிடுகிறேன் என்றார். முன்பு கூறியதை ஞாபகப்படுத்தி கேட்டு வாங்கி பதிப்பிட்டார். அதே போல் சினிமா வியாபாரம் புத்தகம் ஒரு கலந்துரையாடலின் போது பத்ரி என்னிடம் ஏன் இதை ஒரு புத்தகமாய் எழுதக்கூடாது என்று கேட்க, அவரின் உந்துதலின் பேரில் எழுத ஆரம்பித்து, பதிவில் தொடராய் வந்து பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தத் தொடர்.. கிழக்கில் அது புத்தகமாய் வெளிவந்திருக்கிறது. விரைவில் அடுத்ததாய் நிலாபதிப்பகம், என்னுடய முதல் குறுநாவலையும்,பதினைந்து சிறுகதைகளையும் வெளியிட இருக்கிறார்கள்.
6) பதிவுலகின் மூத்தவர் நீங்கள்....புதிய பதிவர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
யார் சொன்னது நான் மூத்தவர் என்று.. நான் யூத்..:) புதுசா வந்தவங்களுக்கு கொஞ்ச முன்னாடி எழுதிட்டு வர்றேன்னு வேணுமின்னா சொல்லுங்க. சமீபத்தில் என்னை கவர்ந்த பதிவர்கள் நிறைய பேர் இருந்தாலும், வழக்கமான பெண்கள் பதிவுகள் போல இல்லாமல் வெரைட்டியாக பதிவுகள் எழுதும் விக்னேஷ்வரி, உடல் நலம் குறித்து மிக அருமையான பதிவுகள் எழுதும் தேவன்மயம். வெறும் கார்ட்டுன் பதிவுகளாய் போட்டு எல்லாரையும் கவர்ந்த பதிவர் சுகுமார் சுவாமிநாதன், இப்போது புத்தக விமர்சனம் எழுதும் அளவுக்கு இம்ப்ரஸிவாக இருக்கிறார். இப்படி இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
7) பதிவுலகம் என்பது சுதந்திரத்தின் உச்சமா? இல்லை கட்டுப்பாடுகல் வேண்டுமா?
நிச்சயம் சுதந்திரத்தின் உச்சமாய் தான் தெரியும் ஆரம்பகட்டங்களில், கொஞ்சம் நம்மை கவனிக்க ஆரம்பித்தவுடன் நிச்சயம், சுய கட்டுப்பாடு வந்துவிடும் அல்லது யாராவது உங்கள் மூக்குக்கடியில் வந்து நின்று, வரவழைத்துவிடுவார்கள். அந்த கட்டுப்பாடு.. அவரவர் நிலையை பொறுத்தது.. அது அவர்களின் சுதந்திரத்துக்கு உட்பட்டது.:)
8) மக்களுக்கு விழுப்புணர்ச்சி ஊட்டும் கட்டுரைகள் எழுதுவீர்களா?
அப்ப நான் இதுவரைக்கும் அது மாதிரி எழுதவேயில்லையா.. அவ்வ்வ்வ்வ்..
9) உங்கள் கண்ணோட்டத்தில்...கழுகு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
புதிதாய் பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். சமூக சிந்தனையுடன் ஒருசிறு பத்திரிக்கையைப் போல் நடத்த முயலும் முயற்சி பாராட்டுக்குரியது
10) பதிவுலகம் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற ஆளுமை கொள்பவர்களைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது?
அப்படி நினைப்பவர்களைப் பற்றி.. என்ன சொல்வது. ஒரு பழைய விஷயம் தான் ஞாபகத்துக்கு வருகின்றது.. “பூனை கண்ணை மூடிகிட்டா....” சரி விடுங்க.. அவங்க அப்படியே இருக்கட்டும்
11) திரைப்படம் விமர்சனம் எழுத அப்படத்தை முதல் நாளே பார்ப்பீர்களா?
சில சமயம் முதல் நாள், சில சமயம் வெளிவருவதற்கு சில மாதம் முன்புகூட பாத்திருக்கிறேன். நான் பார்த்து வெளிவராத படங்களே இருநூறுக்கு மேல் இருக்கும்
12) நிறைய சினிமா பார்த்திருப்பீர்கள் ஆனால் விமர்சனம் எழுத வேண்டும் என்று பார்த்த முதல் படம் எது? அந்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்....
அப்படி எழுத வேண்டும் என்று எந்தப் படத்துக்கும் போவதில்லை. நான் பார்த்த சில படங்களுக்கு எழுதாமல் கூட இருந்திருக்கிறேன்.பதிவுலகத்து க்கு வரும் முன் இதே மாதிரி என் கருத்துக்களை என் சினிமா துறை நண்பர்களீடம் சொல்லி வருவேன். இப்போது அதையே பதிவுகளாக எழுதி வருகிறேன். அவ்வளவே.. என் ஞாபகத்தில் என்னுடய முதல் விமர்சனம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போன “சோனா’வின் “பத்துக்கு பத்து” என்று நினைக்கிறேன்
13) உங்களுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறதா?
நான் இதுவரை சுமார்..150க்கும் மேற்பட்ட பிரபல சீரியல்களில் முக்கிய கேரக்டர்களிலும், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன கேரக்டர்களிலும், இரண்டு சீரியல்களூக்கு திரைக்கதையும், வசனமும், ஒரு திரைப்படத்துக்கு வசனமும், இரண்டு படத்துக்கு திரைக்கதையும், மூன்று குறும்படங்களும் இயக்கியிருக்கிறேன். விரைவில் படம் இயக்க உள்ளேன். கடந்த மூன்று வருடங்களாய் நடிப்பதில்லை.. சமீபத்தில் முந்தானை முடிச்சு சீரியலில் நடித்ததை தவிர..
19 comments:
இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேளுங்க!
கலக்கல்!
Nalla Muyarchi...
பேட்டி நல்லாயிருக்கு.
அருமையான பேட்டி
தேவா அண்ணே
கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க
கரிசல்காரன் சொன்னது…
அருமையான பேட்டி
தேவா அண்ணே
கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி பண்ணுங்க
---
ரிப்பீட்டு.
பேட்டி நல்லா இருக்கிறது... அடுத்தது யார்?
பேட்டி அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
கேபிளுக்கும், கழுகுக்கும் பாராட்டுக்கள்...
அருமையான பேட்டி
வாழ்த்துக்கள்
பேட்டி நல்லா இருக்கிறது.
யூத்து கலக்குங்க... அருமையா இருக்கு...
அருமையான பேட்டி...
வாழ்த்துக்கள் ..
தொடருங்கள் தேவா.. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தேவா அண்ணா மற்றும் கேபிள் அண்ணா
அருமை அண்ணா ...!!
அருமை கேபிள், நன்றி கழுகு.
அட நம்ம கேபிள் அண்ணே படத்தில்,நாடகத்தில் கூட நடித்திருக்கிறாரா,ம்ம்ம் தெரியாம போச்சே :)
சரியான கேள்விகள் நுணுக்கமான பதில்கள்
நன்றி
nanbar cable sankar peddi arumai. nalla arimugam. paraadugal kazhuku!-meerapriyan.blogspot.com
Post a Comment