Friday, July 16, 2010

புரட்சி வெடிக்கட்டும்....வாருங்கள் தோழர்களே....!நீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே....


இளமை சொட்டும் 100 இளைஞர்களை தாருங்கள் அழகான இந்தியாவை உருவாக்கி தருகிறேன்,என விவேகானந்தர் கூறியதை உண்மையாக்குவோம் வாருங்கள்.


இன்னும் எத்தனை நாளுக்கு தான் போர்க்களத்திற்கு வெளியே நின்று வேய்க்கானம் பேசுவது?, போர்க்களத்தில் குதிப்போம், வெற்றியா?,தோல்வியா? என்பதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்,வெளியில் நின்று வேய்க்கானம் பேசுபவன் நானல்ல, வேங்கையாய் போரிடும் போர்வாள் நானென்று நிரூபிப்போம் வாருங்கள் முகம் தெரியா என் தோழர்களே...


100 கோடி, 200 கோடி என பல கோடிகளை தமிழுக்கு என, தனக்காக செலவு செய்யும் அரசியல்வாதியை பலி சொல்லிவிட்டு , எத்தனை நாளுக்கு தான் கையை கட்டிக்கொண்டு,வாயை பொத்திக்கொண்டு இருப்பது?..நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பட்டினிசாவு, வறுமையில் மரணம் எனும் அவலங்கள் நம் காதுகளுக்குள் மரண இடியாய் இறங்குகிறது ..


சரி என்ன செய்ய வேண்டும் நாங்கள்? என்ற கேள்வியோடு தொடருங்கள் என் தோழர்களே..இங்கே நாங்கள் எழுதிப்போடும் ஒவ்வொன்றும் கூலி வேலை செய்யும் கந்தனையோ, குப்பனையோ போய்சேராது என்று எனக்கு நன்றாக தெரியும், மாறாக நல்ல பணியில் இருக்கும் ரமேஷ், சுரேஷ், மகேஷ் போன்ற தோழர்களை சென்றடையும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை..


இந்த தோழர்களை அனைவருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கருணை குணம் நிச்சயமாய் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும், விழிப்புணர்வை பற்றி எழுதும்பொழுதே என்னை உற்சாக படுத்தியவர்கள் அனைவருக்கும், நிச்சயம் புதியதொரு நம் தேசத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை..


இப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் பட்டினிச்சாவு நடக்கிறது?,நியாயமான கேள்வி தான்?..எங்கேயோ ஒரு விளம்பரம் உதவுங்கள் என்றும்,வங்கிக்கணக்கை காட்டி இதில் உங்கள் உதவியை செய்யுங்கள் என்றும் வருகிறது?..உதவி செய்ய தோன்றுகிறது,எப்படி நம்புவது, எப்படி அனுப்புவது என்ற ஏராளமான கேள்விகள் வேகத்தை குறைத்து விடுகின்றன,கடைசியில் அடுக்கடுக்கான சுய பிரச்சனைகளில் மறந்தே விடுகிறோம் ..இது தான் உண்மை நிலை, கருணை குணம் இருக்கிறது, உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது,ஆனால் இவைகள் அழிந்துவிடுகின்றன்...


போரிடும் திறமை இருக்கிறது, தணியாத தாகம் இருக்கிறது நமக்கான சரியான களமும், சரியான ஆயுதமும் தான் இல்லை.களத்தையும், ஆயுதத்தையும் நான் காட்டுகிறேன், நாம் ஒன்றாய் போரிடுவோம்..போர் உக்தியையும் உங்களுக்கு கூறுகிறேன்..


போரிட தயார் என்று துடிக்கும் இளைஞர்களை முதலில் ஓன்று சேர்ப்போம், ஒன்று சேர்ந்த இளைஞர்களுக்கு களத்தை காட்டுவோம் ..


ஒன்று சேர்த்த இளைஞர்கள் செய்ய வேண்டியது ரொம்ப எளிதான ஒன்று


ஒன்று சேர்ந்த இளைஞர்கள் என்ன பண்ணப்போகிறோம் என்றால் எங்காவது பட்டினியால் சாகும், வாழ பாதை தேடிக்கொண்டு இருக்கும் மனிதர்களை கண்டுபிடித்து குறித்து கொள்ள வேண்டும்,(குறித்து கொள்ள வேண்டும் என்றால் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துகொண்டு போயி தேடணும்னு அவசியம் இல்லை தோழர்களே, நீங்கள் நடக்கும் பாதை, சாலையோரம்,ரயில் நிலையங்கள், அங்காடி கடையோரம் என்று உற்று நோக்கினால் போதும், அவர்களை பற்றிய விவரங்கள் அறிய வெறும் 5 நிமிடங்கள் போதுமானது).


எப்பொழுதும் ஒரு திட்டம் சரியாக அமைய வேண்டும் என்றால், நிச்சயம் இரண்டு முக்கியமானதை கவனிக்க வேண்டும்,


1).தேவைப்படுபவை

2).தடைகள் ஏற்படுத்துபவை


தேவைப்படுபவை

1).வலுவான அறிவு சார் மனிதர்கள்

2). சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் விழிப்புணர்வூட்டும் செய்திகள் பரிமாற்றம்

3).மாதம் ஒரு நாள் தான் உண்ணும் ஒர் வேளை உணவை ஒரு பசித்த ஏழைக்கு ஒதுக்கும் குணம்


தடைகள் ஏற்படுத்துபவை

1).நேரம் ஒதுக்க முடியாமை,

(குடும்பஸ்தர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(காதலர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் காதலிக்காக/காதலனுக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(பணிபுரிபவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் பணிக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


(மாணவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் படிப்புக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)


2).கருத்து வேறுபாடு

(இங்கே யாரும் தலைவனும் இல்லை, தொண்டனும் இல்லை, அனைவரும் ஒன்றே)


இது தாங்க நான் சொன்ன போர்க்களமும், போர்களும்....


ஆனால் ஒன்று மட்டும் நன்றாய் தெரியும், நாம் ஒன்று சேர்ந்தால் ஒரு பட்டினிச்சாவையும், ஒரு வறுமைச்சாவையும் தடுக்க முடியும் மாதம் ஒரு முறை...


நீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே,கண்முன் நடக்கும் சாவை கைகோர்த்து தடுப்போம்.... ....
குளிர் அறையில் அமர்ந்து இவர்களால் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கும் மூடர்களின் முகத்தில் அறைந்து சொல்வோம் நாங்களும் விவேகானந்தர் கூறிய அந்த 100 பேரில் ஒருவன் என்று.....கழுகுக்காக,

விஜய்


-----------------------------------------------------------

விழிப்புணர்வூட்டும் எமது போரில் பங்கேற்க கழுகுடன் கை கோர்த்திருக்கும் எமது தோழர் தோழிகள்....அனைவரையும் கழுகு இரு கரம் கூப்பி வரவேற்கிறது......


கே.ஆர்.பி.செந்தில் (ஆலோசகர்)

காத்திக் (L.K)

ஜெயந்தி (பாடினியார்)

சித்ரா (வெட்டிப் பேச்சு)

வெறும்பய (ஜெய்)

ஜில்தண்ணி

இராமசாமி கண்ணன்

நாஞ்சில் பிரதாப்

தமிழ் தலைமகன் (வில்சன்)

ஜீவன் பென்னி (பதிவுகள்)

அருண் பிரசாத்

கோமாளி (செல்வா)

சிரிப்பு போலிஸ் (ரமேஷ்)

கெளசல்யா

வால் பையன்

ராம்ஜி_யாஹூ (யாஹூராம்ஜி)
சிவாஜி (சிவாஜி சிறகுகள்)
Selvakumar Iniyan (Think After You Read - Awesome)
Selvan Subramanian (சுகியின் செல்வன்,The Messagism - Selvan. )
ப்ரின்ஸ்(உயிர்க்காதலன்..)

கனிமொழி(உதிர்ந்த மலர்கள்..)

வீரமணி (மனித மனங்களின் ஒரு அராய்ச்சி.. ).

தமிழ் மதுரம் (ஈழத்து முற்றம்)

ரோஸ்விக் (திசை காட்டி)
அஹமது இர்ஷாத் (அலைவரிசை)
க‌ரிச‌ல்கார‌ன் (க‌ரிச‌ல்கார‌ன்)
Karthick Chidambaram (கொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்)

சிவா (புன்னகை தேசம்)

(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)26 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்னும் உயரே பறக்கட்டும்... சிறகுகளோடு நானும் தயாராகுகிறேன்...

அருண் பிரசாத் said...

சிறகுகள் அக்னிச்சிற்குகளாக இருக்கட்டும் தோழர்களே!

Prathap Kumar S. said...

நான் எப்பவோ ரெடி....சித்தப்பு

Unknown said...

அன்புச் சகோதரா, நல்ல எண்ணங்கள் , செயல் படுத்துவோம் தொடர்ந்து

தமிழ் மதுரம் said...

நல்ல முயற்சி. மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கையை களைந்து, அறிவியல் ரீதியாக இந்தியாவைக் கட்டியெழுப்ப, மாற்றப் புறப்படும் தோழர்களே! வாழ்த்துக்கள் உங்களின் முயற்சிக்கு.

ஜில்தண்ணி said...

கழுகின் கூர்மையான கண்ணாக நானும் ரெடி...

வால்பையன் said...

நிச்சயம் செய்வோம் தோழர்!

க ரா said...

நிச்சயம் செய்வோம்.

prince said...

100 பேரில் ஒருவன்!!! with join hands

கழுகு said...

புரையோடிப் போயிருக்கிறது நமது சமுதாயம்.....! விரைவாய் நிகழ்த்த வேண்டிய அறுவைச் சிகிச்சையை செய்ய வேண்டியது வேற்றுகிரகவாசிகள் அல்ல... நாம்... நாமேதான்....! கழுகின் செயல்பாட்டுக்கு தோள் கொடுத்து கழுகோடு சேர்ந்திருக்கும் தோழர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

ஜெயந்தி said...

இணைத்ததற்கு நன்றி. செயல்படுவோம்.

Tamilselvan Subramanian said...

உங்கள் தரமான கட்டுரைகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் ஏழு நாட்களில் அதிக பேர் உங்கள் கட்டுரையை படித்திருந்தால் பணம் கொடுப்பார்கள் என்று கேள்விபட்டேன்.

Selvakumar Iniyan said...

நூறில் ஒருவனாக நன் இணைய முதலில் என்ன செய்யவேண்டும்?

என் மனதிற்குள் வெகுநாட்களாக புடம் போட்டு வைத்திருந்த புரட்சிக்கு களன் அமைத்துகொடுக்க போகும் கழுகுக்கு என் மேன்மை பொருந்திய நன்றிகள்!!!

ராம்ஜி_யாஹூ said...

தளபதி நாஞ்சில் பிரதாப் எப்பவோ ரெடி என்று அறிவித்து விட்டார். தளபதி வழியில் நாங்களும்.

கழுகு said...

வணக்கம் செல்வன் சுப்ரமணியன்.....

தங்களின் வருகைக்கு நன்றி. விழிப்புணர்வூட்டும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். பணம் ஈட்டும் போரல்ல.....! உங்களையும் இணைத்து ஆக்கமான கட்டுரைகளைத் தருவதோடு படித்த கட்டுரைகளின் கருத்து சாரத்தை வெகுஜனங்களுக்கு கொண்டு சேருங்கள்.

மீண்டும் நன்றி வருகைக்கு!

சிவாஜி சங்கர் said...

101

கழுகு said...

தம்பி செல்வகுமார் இனியன்...

கழுகு உங்களை வரவேற்கிறது kazhuhu@gmail.com மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களையும் வலைப்பூ இருந்தால் வலைப்பூவின் சுட்டியையும் அனுப்பவும். தொடர்ந்து தொடர்பில் இருங்கள் தம்பி!

கழுகு said...

வாருங்கள் ராம்ஜி...வணக்கம்!

கழுகு உங்களை வரவேற்கிறது kazhuhu@gmail.com மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களையும் வலைப்பூ இருந்தால் வலைப்பூவின் சுட்டியையும் அனுப்பவும். தொடர்ந்து தொடர்பில் இருங்கள்!

கழுகு said...

வாருங்கள் ராம்ஜி...வணக்கம்!

கழுகு உங்களை வரவேற்கிறது kazhuhu@gmail.com மின்னஞ்சலுக்கு உங்கள் விபரங்களையும் வலைப்பூ இருந்தால் வலைப்பூவின் சுட்டியையும் அனுப்பவும். தொடர்ந்து தொடர்பில் இருங்கள்!

School of Energy Sciences, MKU said...

கழுகின் உயரம் விரைவில் விண்ணை முட்டும்.

எல் கே said...

என்னை முதல் பெயராக சேர்த்ததற்கு நன்றி.. செயல்படுவோம் . ஒன்றுபடுவோம்

Unknown said...

என்னை ஆலோசகராக போட்டதால்.. இனி கருத்து கந்தசாமி நான்தான்..

Unknown said...

அனைத்து நண்பர்களிடம் இருந்தும் கிடைத்த சிறப்பான வரவேற்பு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது..

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்க‌ள்

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் கழுகு இன்னும் உயரே பறக்க..

ரோஸ்விக் said...

நானும் இணைகிறேன். எனது வலைத்தளம் திசைகாட்டி

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes