Monday, August 16, 2010

சுதந்திர தினத்தில் சீனா ஐயாவிடம் ஒரு சிறப்பு பேட்டி!

பலதர பட்ட சூழ் நிலைகள் பலவிதமான சூழ் நிலைகள் என்று கழுகு பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் விமர்சனங்களை எதிர்கொள்வது, மாற்று பெயரில்லா மின்னஞ்சல்களில் புஸ்தி பலம் காட்டி மிரட்டி என்ன செய்துவிடப் போகிறீர்கள் நீங்கள் என்று மீசை முறுக்கி வீரம் காட்டும் மனிதர்களை எதிர் கொள்வது என்ரு அவர்களின் அறியாமையும் அன்பென்ற ஆயுதத்தால் களைந்து கொண்டே ஒரு வித சீரான பயணம் மேற்கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் வாழ்க்கையில் அனுவபம் செறிந்த மனிதர்களும், அறிஞர்களும், அற்புதமான எழுத்துத் திறன் கொண்ட பதிவர்களும், சில பத்திரிக்கை நண்பர்களும் நமக்கு கொடுக்கும் ஆதரவின் பலம் எம்மை மேலும் சிலிர்த்து எழச் செய்து இருக்கிறது என்பதை இந்த தருணத்தில் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவர் பேட்டி என்ற நிகழ்விலும் ஒரு வித திருப்புமுனையை கழுகு எட்டியிருக்கிறது அப்படிப்பட்ட அனுபவத்தின் போக்கில் சீனா ஐயாவிடமும் தயங்கித் தயங்கி கேள்விகளை கேட்டோம்...பதில் கொடுப்பாரா இல்லை அவரின் வேலைப்பளுவினால் கழுகிற்கு ஒரு ஒப்பற்ற பேட்டி பறி போகுமோ என்றெண்ணி கேள்விகளை தொடுத்த போது....எம்மை வாரி இறுக அணைத்து உச்சி முகர்ந்து ஆர்வத்துடன் உடனே பதில்களை கொடுத்தார். வலைச்சரம் என்ற ஆயுதத்தால் எத்தனையோ பதிவர்களை அடையாளம் காட்டி திறமைசாலிகளை வெளிக்கொணரும் பிரம்மா..திரு. சீனா ஐயா.......வின் அற்புதமான பேட்டியை உங்களிடம் இந்த சுதந்திர தினத்தை ஒட்டி பகிர்ந்து கொள்கிறோம்




1 சீனா ஐயா...தங்களின் பெயரில் ஒளிந்திருப்பது வேற்று நாடா? இல்லை சி. நா என்ற தமிழெழுத்தா?

அன்பின் கழுகு - எனது பெயர் சிதம்பரம். எங்கள் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் என் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துகளை எடுத்துக் கொண்டு, சீனாதானா என அன்புடன் அழைக்கத் துவங்கினர். அதில் இருந்து சீனா என்ற சொல்லை புனைப் பெயராக வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான். வேற்று நாடுகளின் பெயர்களை வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.


2
வலைசரம் யோசனை எப்படி தோன்றியது?
வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால் துவங்கப்பட்டு 11.11.2006ல் முதல் இடுகை இடப்பட்டது.

http://blogintamil.blogspot.com/2007/02/blog-post.html

http://blogintamil.blogspot.com/2007/02/blog-post_26.html

வலைச்சரத்தின் முதல் ஆசிரியராக பொன்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார்.

பிறகு பணிச்சுமை காரணமாக சிந்தா நதி ஆசிரியர்கள் குழுவாக பொன்ஸையும் முத்துலெட்சுமியையும் சேர்த்துக் கொண்டார். பிறகு என்னிடம் பொறுப்பாசிரியர் பணி வந்தது.


3
இந்திய சுதந்திரம்....சரியான முறையில் போற்றப்படுகிறதா?

இன்றைய உலகில் இருக்கும் ஜனநாயக நாடுகளில் - நமது இந்தியத் திருநாடு தான் சுதந்திரத்தினைக் கட்டிக்காக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. சரியான முறையில் போற்றப்படுகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் - மக்கட்தொகை அதிகம் உள்ள நமது நாட்டில் - இயனற அளவு செயல் படுத்தப் படுகிறது.


4
மூன்று வருட பதிவுலக அனுபவம் என்ன கற்று கொடுத்தது?

நல்ல நண்பர்களை அளித்திருக்கிறது. மிகப் பெரிய நட்பு வட்டம் உள்ளது. நான் எழுதுவதை விட படிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறேன்.



5
ஒரு இந்தியனின் நாட்டு பற்று எப்படி இருக்க வேண்டும்?

ஒவ்வொரு இந்தியரும் நாட்டுப் பற்றினை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டின் மீது பக்தியும் சக இந்தியரிடம் மனித நேயமும் அன்பும் செலுத்தப் பட வேண்டும்



6
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது சுதந்திரம் தின விழா எப்படி கொண்டாபட்டது? இப்போது எப்படி கொண்டபடுகிறது?

பெரிய மாற்றம் இல்லை - அன்றைய தினம் ஒரு மகிழ்வான உணர்வு இருந்தது - தற்பொழுது ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் உள்ளது.



7
வலைச்சரம் எதிர்கால திட்டம் என்ன?

இப்பொழுது இருக்கும் துறை வாரியான அறிமுகங்களுக்குப் பதிலாக - தினம் ஒருபதிவர் என - நல்ல பதிவர்களை அறிமுகம் செய்யலாமா எனச் சிந்திக்கிறேன்.

8 வலைசரம் முதல் ஆசிரியர் யார்?

பொன்ஸ்


9 வலைப்பூக்களில் விருது வழங்கும் கலாச்சாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

தேவை யற்ற ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து. இருப்பினும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கிறது. நண்பர்களுக்குள் - ஒரு குறுகிய வட்டத்தில் - வேண்டியவர்கள் அனைவருக்கும் தாராளமாக வழங்கப்படுகின்றன. கொடுப்பவர்களும் சரி பெறுகிறவர்களும் சரி நண்பர்களாக இருக்கிறார்கள்.


10 வலைப்பூக்கள் சென்று கொண்டிருக்கும் பாதை ஆரோக்கியமாக உள்ளதா?

மிக ஆரோக்கியமாக உள்ளது. 7874 பதிவுகள் உள்ளன. சராசரியாக தினந்தோறும் 386 இடுகைகள் இடப்படுகின்றன. 1754 மறுமொழிகள் பெறப்படுகின்றன. இது தமிழ் மணக் கணக்கு.


11 வங்கி அதிகாரியாக பணி ஆற்றுவதால் இந்த கேள்வியை கேட்கிறோம். கல்விக் கடன் கொடுப்பதற்கான உங்களது வங்கியின் குறைந்த பட்ச தேவைகள் என்ன?

எல்லா வங்கிகளுமே மத்திய அரசின் ஆலோசனைகளின் படியும் விதிக்கப்படும் விதி முறைகளின் படியும் தான் கல்விக் கடன்கள் வழங்குகின்றன. கல்விக் கடன் பெற கல்லூரியில் இருந்து சேர்க்கை மற்றும் கட்டணங்கள் பற்றிய கடிதம் பெற வேண்டும். முகவரிச் சான்று, புகைப்படச் சான்று, கையெசுத்துச் சான்று என சான்றிதழ்கள் வேண்டும். இவை குறைந்த படச் தேவைகள்.


12 எந்த மாதிரியான பதிவுகள் உங்களுக்கு பிடிக்காது?

தனி மனித சுந்தந்திரம் காக்காத பதிவுகள், சாதி மதத் தாக்குதல்கள் உள்ள பதிவுகள் பிடிக்காது.


13 கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

நான் ஒரு ஆன்மீக வாதி


14 வலைசரம் ஆசிரியர்களிடம் நீங்கள் எதிர் பார்ப்பது என்ன?

புதிய பதிவர்களை, அவர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். இயன்ற வரை ஏழு நாட்களூம் இடுகைகள் இட வேண்டும்.

15 இந்த சுதந்திர தினத்தில் சொல்ல விரும்புவது என்ன?

நட்பினை வளருங்கள் - பெருக்குங்கள்
நாட்டுப் பற்றினை வளர்த்துக் கொள்ளுங்கள்
நாம் இந்தியர் என்ற உணர்வினைப் பெருக்குங்கள்



(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)


18 comments:

செல்வா said...

இயல்பான பதில்கள் ..!
அதிலும் பதிவுலகில் இவ்வளவு பிரியா போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதும் நான் ஒரு ஆன்மீக வாதி என்று கூறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது ..

ஜில்தண்ணி said...

பல புதியவர்களை அறிமுகப்படுத்தியும்,பல அற்புதமான இடுககளை பகிர்ந்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வலைசரத்தின் பொறுப்பாசிரியரி சீனா ஐயாவின் எதார்த்தமான பதில்கள் :)

/// உலகில் இருக்கும் ஜனநாயக நாடுகளில் - நமது இந்தியத் திருநாடு தான் சுதந்திரத்தினைக் கட்டிக்காக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. ///

ஆம் உண்மைதான்,மக்கள் தொகை தான் அதிகரித்துவிட்டது

பேட்டிக்கு கழுகுக்கு நன்றி :)

Unknown said...

//இப்பொழுது இருக்கும் துறை வாரியான அறிமுகங்களுக்குப் பதிலாக -தினம் ஒருபதிவர் என - நல்ல பதிவர்களை அறிமுகம் செய்யலாமாஎனச் சிந்திக்கிறேன்.//

இது நன்றாக இருக்கும்... ஒரு வார காலம் இம்மாதிரி செய்து பாருங்கள் .. சரியாக வந்தால் சில காலம் நீட்டிக்கலாம் ..

vinthaimanithan said...

கழுகின் சிறகுகள் மேலும் விரிய வாழ்த்துக்கள்.

மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைச் சரி செய்யுங்கள்

கேள்விகளைத் தயாரிப்பதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே!

இந்தப்பேட்டியின் இரண்டாம் கேள்வியில் சீனா ஐயா தனது பதிலில் வலைச்சரத்தின் முதல் பொறுப்பாசிரியர் பொன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். மீண்டும் திரும்ப அதே கேள்வியை எட்டாவதாகக் கேட்டுள்ளீர்கள். ஏன்?

குறைகள் என்னும் சுமை உதிர்த்து வானில் சிறகடிக்க வாழ்த்துக்கள்!

Chitra said...

அனுபவமும் சிந்தனையும் ஆதங்கமும் கொண்டு அருமையான பதில்களை தந்து இருக்கிறார். ... பதிவர்களை உற்சாகப் படுத்தி ஊக்கமளிக்கும் இவரின் ஆசி, பதிவர்களுக்கு என்றும் தேவை.

கழுகு said...

அன்பின்.....விந்தை மனிதன்....@

உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி.


பேட்டி என்பது நேரடியாய் உட்கார்ந்து நாம் அவரிடம் கேட்பது இல்லை ... நாங்கள் கேள்விகளை தயாரித்து மின்னஞ்சல் செய்து பதிலாய் பெறுகிறோம். இரண்டாவது கேள்வியை உற்று நொக்கினால் அது எட்டாவது கேள்வியில் இருந்து வேறுபட்டு இருப்பதை அறிவீர்கள். இரன்டாவது கேள்வியிலேயே கூடுதலாக ஐயா விபரம் கொடுத்து விட்டார்கள்....இரண்டவதின் பதில் அறியப்படும் முன்பே தொடுக்கப்பட்டதுதான் எட்டாவது கேள்வி....

பதில்கள் பெற்ற பின் தணிக்கை செய்யும் வழக்கம் நமக்கு இல்லாததால் அப்படியே போட்டுவிட்டோம்...!

கருத்துக்கு நன்றி தோழர்.

செல்வா said...

//இந்தப்பேட்டியின் இரண்டாம் கேள்வியில் சீனா ஐயா தனது பதிலில் வலைச்சரத்தின் முதல் பொறுப்பாசிரியர் பொன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். மீண்டும் திரும்ப அதே கேள்வியை எட்டாவதாகக் கேட்டுள்ளீர்கள். ஏன்?///

அது மின்னஞ்சலில் அனுப்பி கேட்கப்பட்ட கேள்விகள் ..
அதனால் அவ்வாறு வந்துள்ளது ..!!

Mohamed Faaique said...

நல்ல பதிவு.. உங்கள் சேவை எங்களுக்கு தேவை..

Jey said...

nice :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிறை குடங்கள் என்றும் தழும்புவதில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளன பதில்கள் அனைத்தும் ....

அருண் பிரசாத் said...

நிறைவான பதில்கள், அருமையான கேள்விகள்.

கழுகு இன்னும் உயர பறக்கட்டும்

'பரிவை' சே.குமார் said...

இயல்பான பதில்கள் ..!

கருடன் said...

//தேவை யற்ற ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து. இருப்பினும் ஊக்கம் ஊட்டுவதாக இருக்கிறது. நண்பர்களுக்குள் - ஒரு குறுகிய வட்டத்தில் - வேண்டியவர்கள் அனைவருக்கும் தாராளமாக வழங்கப்படுகின்றன. கொடுப்பவர்களும் சரி பெறுகிறவர்களும் சரி நண்பர்களாக இருக்கிறார்கள்.//

நல்ல கருத்து. நமது நண்பர்கள் சிந்திக்க வேண்டும்..

கருடன் said...

//மிக ஆரோக்கியமாக உள்ளது. 7874 பதிவுகள் உள்ளன. சராசரியாக தினந்தோறும் 386 இடுகைகள் இடப்படுகின்றன. 1754 மறுமொழிகள் பெறப்படுகின்றன. இது தமிழ் மணக் கணக்கு.//

இந்த கருத்தில் அவ்வளவாக உடன்பாடு இல்ல. பதிவுகளின் என்னிக்கை மட்டும் ஆரோக்கியத்தை வெளிபடுத்தாது, தரமும் கூட வேண்டும்..

ஜீவன்பென்னி said...

நல்ல தெளிவான பதில்கள். கல்விக்கடன் வாங்க தேவையென்னன்னு சொல்லியிருக்கீங்க ஆனா இத வச்சுக்கிட்டு லோன் அவ்வளோ ஈசியா தந்துடுவாங்களா ஐயா.

விஜய் said...

நமது கழுகு சரியான நேரத்தில் , சரியான ஒருவரிடம் சேர்ந்து இருந்து, பிறகு அதன் இருப்பிடத்தில் கொண்டு வந்து சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி தேவா அண்ணா , சௌந்தர் ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

சீனா அய்யாவின் பதில்கள் ரொம்ப அருமை.

Karthick Chidambaram said...

இயல்பான பதில்கள் ..!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes