Tuesday, January 04, 2011

18+...........கேவலங்கள்....!

குப்பைகள் தொடர்ந்து அள்ளப்படும்....ஆச்சர்யமாய் தானிருக்கிறது சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்கத்தின் அசிங்கங்களை நினைக்கும் போது, சாதாரண பத்திரிக்கையிலிருந்து, டி.வி.விளம்பரம், சினிமா, அரசியல், வலைப்பூக்கள் என்று இலை மறைகாயாய் புரையோடிபோயிருக்கும் இந்த விஷத்தை, விஷம் என்று அறிந்தே நாம் அனுமதித்துக் கொண்டுதானிருக்கிறோம்.
பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் தமிழ் சினிமாக்களில் எல்லாம் பெண்ணை கற்பழிப்பது அவளுக்கு அளிக்கப்படும் தண்டனையாகாவேதான் காட்டப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு சினிமாவில் அந்த ஆண் தவறு இழைத்துவிட்டான் என்று அவனை வேட்டி சட்டையை அல்லது பேண்ட்டை கழட்டி துன்புறுத்தும்படியோ அல்லது பாலினம் சொல்லி அசிங்கப்படுத்தும் வார்தைகளோ வந்திருக்கின்றனவா? வராது... வரவே வராது... காலமெல்லாம் இதைத்தாதனே கற்று பொது புத்தியில் ஏற்றி வைத்திருக்கிறோம்....
மகாபாரத துச்சாதனன் கூட திரெளபதியின் துகிலைத்தான் உரிந்திருக்கிறான்.....தருமனின் வேஷ்டியை அல்ல..............
இதன் நீட்சிதான்.. பத்திரிக்கைகளின் கவர்ச்சிப்படங்கள் தொலைக்காட்சி நாடகங்களிலும் கூட்டம் கூட்டமாய் பெண்கள் அழும் காட்சிகள்......என்ன நடக்கிறது? எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்...!
சினிமா விமர்சனம் என்ற பெயரில் ஆபாசப் படங்களை விமர்சித்து.. பெண்ணை ஒரு போகப்பொருளாய் சித்தரிக்கும் படங்களை போட்டு விட்டு பகிங்கரமாய் பதின்ம வயதினரை தமது வலைப்பக்கங்களுக்கு இழுக்கும் யுத்தியாக.. விளம்பரங்கள் வேறு செய்கிறார்கள்.. அடுத்தவாரம் இதை எழுதுவேன் அதை எழுதுவேன் என்று,.... இது போன்ற போக்குகள் தனிமனிதரால் நடத்தப்படும் வலைப்பூக்கள் வரைக்கும் வந்திருப்பது...அவலத்தின் உச்சம்தானே....?
பெண்ணைப் போகப்பொருளாய் சித்தரிக்கும் வார்த்தைகளை எப்படி உங்களின் விமர்சனத்திற்குள் கொண்டு வருகிறீர்கள். போதாக்குறைக்கும் 18+ ஜோக்குகள் வேறு வலைப்பூக்களில் இடைசெருகலாய்... இதில் தவறு என்ன இருக்கிறது 18+ என்றுதான் நாங்கள் போடுகிறோமே என்று வேறு நியாயம்..கற்பித்தல் வேறு...
18+ என்று போடுவதின் நோக்கமே...சும்மா போறவன இந்தப் பக்கம் வாடா மச்சி என்று பாக்கு வெத்திலை வைத்து கூப்பிடுவது போலத்தானே...! காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை அது எப்போதும் சங்ககாலத்தில் இருந்து நமது சமுதாயத்தில் இருந்தே இருக்கிறது ஆனால் அதன் வெளிப்பாடு மிக நளினமாய் ரசனைக் குரியதாய் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட வெளிப்பாடுதான்.. நமது ஊர் கோவிலில் இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும். தேவையின் அடிப்படையில் கருத்துக்களை சொல்ல வரும் இடத்தில் சில நேரங்களில் காமம் பற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தங்கள் வரும்..ஆனால் அதன் வெளிப்பாடும் அர்த்தங்களோடு அழகாய் இருக்க வேண்டும்...
நியாயங்கள் சொல்ல நீ யார் ? இதுதானே உங்கள் கேள்வி...........சரி ஒன்று செய்யுங்கள்! உங்கள் கணிணியை அணைத்துவிட்டு.......தனியே போய் அமர்ந்து கொள்ளுங்கள். கண் மூடி யோசியுங்கள்........நான் செய்வது சரியா? ஊரும் உலகமும் உழன்று கொண்டிருக்கும் வழமைகளை எல்லாம் நாமும் திரும்பச் செய்தால் அது சரி ஆகுமா? கேளுங்கள் உங்களுக்குள்ளாகவே கேளுங்கள்... ! என்ன பதில் கிடைக்கிறதோ அதை மனசாட்சிக்கு விரோதமின்றி செய்யுங்கள்...!
கருப்பாய் இருப்பது குற்றம் என்று உங்களை சிவப்பாக்க அழகு க்ரீம் விளம்பரம் செய்கிறானே..........அதை ரசித்துப் பார்த்ததில் ஆரம்பிக்கிறது நமது முட்டாள்தனமான நம்பிக்கைகள்....!


அதுவும் பெண்களை குறி வைத்துதான்.. !உருவாக்குபவனுக்கு ஓராயிரம் வேண்டுகோள்கள் வைத்தாலும் தன்னின் பெருமை பேசும், புகழ் விரும்பு எந்த மனிதனும் தனது அசிங்கத்தை நிறுத்திவிட்டு எதார்த்த வாழ்க்கைக்கு வரப்போவதில்லை வந்ததாய் சரித்திரமும் இல்லை.....
நேர்மையான மனிதர்களே....!திரைப்பட ரசிகர்களே! வாசகர்களே..........சிந்தியுங்கள்...எந்த கருத்தை தேடி உங்கள் மனம் ஓடுகிறதோ அதில் என்ன பயன் இருக்கிறது... என்று? நீங்கள் அப்படி ஓடுவதால் நல்ல விசயங்கள் உங்கள் சந்ததியினருக்கும் கிடைக்காமல் போக மறைமுக காரணமாகிவிடுகிறீர்கள்.....
இப்போது சொல்லுங்கள் எதை போதிக்கப்போகிறீகள் உங்கள் மகன் அல்லது மகளுக்கு?
ஆபாச எழுத்துக்களையும், சினிமாக்களையும், பத்திரிக்கைகளையும் படிக்கவா...?


இல்லை......சந்தோசத்தையும், எதிர்கால வாழ்கையில் அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும் அறிவுக்களஞ்சியங்களையும், நகைச்சுவையை அதிகரிக்கவைக்கும் படைப்புகளையுமா?


நீங்கள் தீர்மானியுங்கள்........


(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)36 comments:

எல் கே said...

பதிவுகளில் மட்டுமல்ல , இன்று தொலைக்காட்சி விளம்பரத்தில் இருந்து ரோட் சைட்ல இருக்கற விளம்பர போர்டுகள் வரை இந்த ஆபாசம் அனைத்து இடங்களிலும் நிறைந்து இருக்கிறது

Madhavan Srinivasagopalan said...

எல்லாம் ஒக்கே..
ஆனால், நீங்கள் ஏன் தலைப்பின் அந்த எண்ணை போட்டீர்கள் ?

கழுகு said...

நன்றி....மாதவன்.......!

18+ போட்டு அசிங்கத்தை சொல்லும் போது நல்லதை சொல்லலாமே........

ஒரு விசயத்தை அதன் போக்கிலேயே போய் செவுட்டில் அறையும் யுத்தி இது தோழா!

ஜீவன்பென்னி said...

//எல்லாம் ஒக்கே..
ஆனால், நீங்கள் ஏன் தலைப்பின் அந்த எண்ணை போட்டீர்கள் ?// இந்த மாதிரி தலைப்ப எழுதிட்டு உள்ளார நல்ல விசயத்த எழுதுறது தப்பில்லங்க மாதவன். படிச்சு முடிச்சிட்டு பாக்குறப்போ அந்த தலைப்பு பொருத்தமா தான் இருக்கு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏன் போட்டோ போடலை. ஹிஹி . நல்ல பதிவு

சிநேகிதன் அக்பர் said...

//தேவையின் அடிப்படையில் கருத்துக்களை சொல்ல வரும் இடத்தில் சில நேரங்களில் காமம் பற்றி எழுதவேண்டிய நிர்ப்பந்தங்கள் வரும்..ஆனால் அதன் வெளிப்பாடும் அர்த்தங்களோடு அழகாய் இருக்க வேண்டும்...//

மிகச் சிறந்த வரிகள்.

நறுக்கென்ற கேள்விகளுடன் உங்களது ஆதங்கத்தை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் எழுதுவது உண்மையிலேயே கண்டனத்துக்குரியது.

கழுகு said...

சிநேகிதன் அக்பர் @ நன்றி தோழரே....

கேள்விகள் கேட்காமல் இருப்பதாலேயே..அசிங்கங்கள் அனுமதிக்கப்பட்டு விட்டதாக இறுமாந்திருப்பது...நியாயமானவர்களுக்கு நகைப்புக்குரிய விசயம்தானே.....!

Anonymous said...

பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் ஆபாச பதிவுகளோ, 18+ என்று கூவி அழைக்கும் பதிவுகளோ போட மாட்டோம் என்று கழுகு நண்பர்களாகிய நாம் இவ்விடம் உறுதி எடுத்துக் கொள்ளலாமே தேவா அண்ணா!

Anonymous said...

கழுகுடன் இணைந்து நான் இவ்விடம் உறுதி கொள்கிறேன்.

எல் கே said...

//பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் ஆபாச பதிவுகளோ, 18+ என்று கூவி அழைக்கும் பதிவுகளோ போட மாட்டோம் என்று கழுகு நண்பர்களாகிய நாம் இவ்விடம் உறுதி எடுத்துக் கொள்ளலாமே தேவா அண்ணா//

அவ்வாறு போடும் பதிவர்களை புறக்கணிக்கவும் உறுதி எடுக்க வேண்டும்

அருண் பிரசாத் said...

விற்க்காத சரக்கிற்க்குதான் இந்த மாதிரி விளம்பரங்கள் தேவை.

அப்படி 18+ எழுதுபவர்களின் பதிவுகளில் ஒன்று தரம் இருக்காது அல்லது எழுதுபவர்கள் அவர்களின் எழுத்துக்கள் மீது நம்பிக்கை இருக்காது...

அதனால்தான் இந்த விளம்பரம்

கழுகு said...

பாலாஜி சரவணா... @ சகோதாரா.........

உமது உறுதிக்கு எமது நன்றிகள்...! எமது கொள்கைகளில் அதுவுமொன்று.........எனவே தனியாக சபதமெடுத்தலை எமது சகோதரருக்காக மீண்டுமொருமுறை செய்வதில் எமக்கு சந்தோசமே....

நாம் மாற்றாமல் போகும் வாழ்க்கையை யார் மாற்றுவது தம்பி......?

கழுகு said...

சத்திய நோக்கு கொண்ட உறவுகள் எல்லாம் உறுதிகள் எடுக்கட்டும் !

அருண் பிரசாத் said...

//பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் ஆபாச பதிவுகளோ, 18+ என்று கூவி அழைக்கும் பதிவுகளோ போட மாட்டோம் என்று கழுகு நண்பர்களாகிய நாம் இவ்விடம் உறுதி எடுத்துக் கொள்ளலாமே தேவா அண்ணா//

கழுகை படிக்கு எவரும் ஆபாச பதிவுகளை போட மாட்டார்கள்.... மாறாக ஆபாச பதிவர்களை படிக்காமல் புறக்கணிப்போம்... அப்பொழுதாவது அவர்கள் திருந்துவார்களா பார்ப்போம்

கழுகு said...

அருண்...@ நமது நோக்கிலே தவறுகள் இல்லை எனில் நமது நோக்கை வெறுப்பவர்கள் எல்லாம் யாராவர்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லைதானே?

RAZIN ABDUL RAHMAN said...

சகோ ஆபாசம் குறித்த உங்களுடைய கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்..
தேவையான பதிவுதான்..

எனது கருத்துக்களையும்,இது குறித்து தனிப்பதிவாகவே வெளியிடலாம்..பின்னர் பார்ப்போம்..

தொடருங்கள்..

அன்புடன்
ரஜின்

எஸ்.கே said...

ஆபாசம் என்பது ஒரு மனிதனை கவர்ந்திழுக்கும் விசயம்தான்! சிலர் அதை தங்கள் சுயநலத்திற்காக பதிவுகளில் பயன்படுத்தியும் வருகிறார்கள். அவர்களாக உணர வேண்டும் இதை!

Prathap Kumar S. said...

என்ன கழுகாரே... பதிவுகளில் ஆபாச ஜோக்குகளை எழுதுகிறார்கள், பெண்களை ஆபாசப்பபொருளாக்குகிறார்கள் என்று வருத்தப்படும் நீங்கள்தான் இரண்டு ஒரு ஆபாச பதிவரின் பேட்டியைக்கூட வெளியிட்டீர்கள்.

கருத்து என்னவோ நல்லாத்தான் இருக்கு...அனால் ஒரே தீர்மானத்தில் இருங்கள். அதை தேவைக்கேற்ப மாற்றாதீர்கள்.

நல்லப்பதிவு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரியா சொல்லிருக்கீங்க.. எல்லோரும் ஒரு தடவை சிந்தித்து பார்க்க வேண்டியது. பகிர்வு அருமை.

கழுகு said...

//என்ன கழுகாரே... பதிவுகளில் ஆபாச ஜோக்குகளை எழுதுகிறார்கள், பெண்களை ஆபாசப்பபொருளாக்குகிறார்கள் என்று வருத்தப்படும் நீங்கள்தான் இரண்டு ஒரு ஆபாச பதிவரின் பேட்டியைக்கூட வெளியிட்டீர்கள்.//

நன்றிகள் நாஞ்சில் பிரதாப்..........@ ஆபாசப்பதிவர்கள் என்று நீங்கள் சுட்டிக்காட்டியவர்கள் யாரென்று ஆராயும் நோக்கம் கழுகிற்கு இல்லை......

இங்கே பேட்டி எடுத்தவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பெறப்பட்ட பதில்களிலும் நேர்மை இருந்ததாகவே கருதுகிறோம்....!

எதிர்வரும் காலங்களிம் எமது விழுப்பு இரட்டிப்பாகும் என்பதனையும் தங்களுக்கு கூற கடமைப் பட்டிருக்கிறோம்...!

செல்வா said...

தற்போதைய சூழ்நிலைக்குத் தேவையானதொரு கட்டுரை. நிச்சயம் நம்மால் முடிந்த அளவு அது போன்ற பதிவுகளில் நமது ஆதரவை விலக்கிகொ(ல்)வது நல்லது. நிச்சயம் மக்கள் இதை விரும்புகிறார்கள் என்பதற்கும் , மக்களை விரும்ப வைப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.!

சுபத்ரா said...

//ஒரு விசயத்தை அதன் போக்கிலேயே போய் செவுட்டில் அறையும் யுத்தி இது தோழா!//

Very Nice Strategy! Hats off to Kazhuhu for such awareness giving posts.

இம்சைஅரசன் பாபு.. said...

//காமம் இல்லாமல் வாழ்க்கை இல்லை அது எப்போதும் சங்ககாலத்தில் இருந்து நமது சமுதாயத்தில் இருந்தே இருக்கிறது ஆனால் அதன் வெளிப்பாடு மிக நளினமாய் ரசனைக் குரியதாய் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட வெளிப்பாடுதான்.//

ஆசை அறுபது நல மோகம் முப்பது நாள் என்று ஒரு பழமொழி உண்டு .அது போல் தான் இதுவும் கொஞ்ச நாள் கழித்து எழுதுவதற்கு சரக்கு இல்லாமல் அப்படியே போய் விடுவார்கள் .....ஆனால் அப்படி எழுத கூடாது என்ற கழுகின் எண்ணம் மேலோங்கியது ...வரவேற்கிறேன் ........

சௌந்தர் said...

18+ போடுவதே நிறைய பார்வையாளர்கள் வரவேண்டும் என்பதற்காக தான் போடுகிறார்கள். இது வரை நான் போட்டது இல்லை இனி மேலும் நான் எழுத மாட்டேன்...என்று சொல்கிறேன். ஆட்கள் வரவில்லை என்றால் உடனே 18+ பதிவை போட்டு விடுவார்கள் இனி இது போல மாறினால் நல்லது

பெசொவி said...

நல்ல பதிவு.
நான் கூட ஒரு 18+ பதிவு போட்டேன். ஆனால் அதன் நோக்கம் என்ன என்பதை பதிவைப் படித்தால் தெரியும். என்னுடைய பதிவில் மட்டுமல்ல, என் பின்னூட்டங்களில் கூட ஆபாசம் இருக்காது, அதை அனுமதிக்க மாட்டேன்.

சீனு said...

//ஏதாவது ஒரு சினிமாவில் அந்த ஆண் தவறு இழைத்துவிட்டான் என்று அவனை வேட்டி சட்டையை அல்லது பேண்ட்டை கழட்டி துன்புறுத்தும்படியோ அல்லது பாலினம் சொல்லி அசிங்கப்படுத்தும் வார்தைகளோ வந்திருக்கின்றனவா?//

இதென்னங்க கேள்வி? யாரு பாப்பாங்கனு இதெல்லாம் காட்டல. பாக்குறதுக்கு ஆள் இருக்குன்னா இதையும் காட்டுவாங்க.

//18+ போட்டு அசிங்கத்தை சொல்லும் போது நல்லதை சொல்லலாமே........

ஒரு விசயத்தை அதன் போக்கிலேயே போய் செவுட்டில் அறையும் யுத்தி இது தோழா!//

சூப்பர் ஜல்லி.

Unknown said...

it is 100% true.

arasan said...

தோழரே அருமையான சாட்டை அடி ,...
எங்கு சென்றாலும் நீங்கள் கூறும் இந்த அவலம் தொடர்கின்றது ...
நல்ல எண்ணங்கள் இன்னும் கழுகு உயர பறக்க வாழ்துக்கள் ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹாய் கழுகு..

சொம்பு தூக்கிட்டு வரேனு நினக்காதீங்க...

நீங்க எப்பவும் போல எழுதுங்க.. பதிவுலகையோ , மக்களையோ நாம் திருத்தமுடியாது.. பட்டு .. தக்காளிக திருந்தட்டும்.. வேற வழியில்லை...


எப்போ கை நீட்டு காசு வாங்கிட்டு ஓட்டு போடும் நிலைக்கு மக்கள் சென்றுவிட்டார்களோ.. ஊகூம்.. ஒண்ணும் பன்ணமுடியாது.. அவர்களுக்கா விழுப்புணர்வு வரனும்..
பார்ப்போம்...

வருண் said...

***18+ என்று போடுவதின் நோக்கமே...சும்மா போறவன இந்தப் பக்கம் வாடா மச்சி என்று பாக்கு வெத்திலை வைத்து கூப்பிடுவது போலத்தானே...!***

அப்படி என்றும் நீங்க சொல்லிவிட முடியாது. பலர் அதுபோல் ஈர்க்கப்பட்டாலும், கொஞ்சம் வரம்பு மீறும்போது (அப்படி உணர்ந்தால்) அதை அறிவிக்க வேண்டியது அந்த எழுத்தாளருடைய கடமைனு நம்புறேன்.

கழுகு said...

பட்டாபட்டி....@ நன்றி பட்டா...!

உங்களின் கூற்றில் உண்மையிருக்கிறது.

//நீங்க எப்பவும் போல எழுதுங்க.. பதிவுலகையோ , மக்களையோ நாம் திருத்தமுடியாது.. பட்டு .. தக்காளிக திருந்தட்டும்.. வேற வழியில்லை...//

உங்களின் கருத்தினை ஆமோதிக்கிறோம்............தோழரே!

கழுகு said...

//அப்படி என்றும் நீங்க சொல்லிவிட முடியாது. பலர் அதுபோல் ஈர்க்கப்பட்டாலும், கொஞ்சம் வரம்பு மீறும்போது (அப்படி உணர்ந்தால்) அதை அறிவிக்க வேண்டியது அந்த எழுத்தாளருடைய கடமைனு நம்புறேன்.//


வருண் @ நன்றிகள் தோழரே....

சரியான கருத்துதான்.......அறிவுப்புகளின் நோக்கமும் மறக்கப்பட்டிருக்கிறது.

அதைத்தான் கூறியிருக்கோம்.....தோழரே....!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஊதும் சங்கை ஊதிவிட்டாச்சு.. திருந்தினா திருந்தட்டும்...
அவ்வளவுதான் பாஸ்...

மாணவன் said...

ஒவ்வொரு வரியும் சரியான சாட்டையடி.....

கழுகு இன்னும் ஆழமாக கொத்தட்டும் தீய சக்திகள் அழியட்டும் எங்கும் மனிதம் ஆரோக்கியமாய் செம்மை பெறட்டும்.........

சீனிவாசன் said...

//என்ன கழுகாரே... பதிவுகளில் ஆபாச ஜோக்குகளை எழுதுகிறார்கள், பெண்களை ஆபாசப்பபொருளாக்குகிறார்கள் என்று வருத்தப்படும் நீங்கள்தான் இரண்டு ஒரு ஆபாச பதிவரின் பேட்டியைக்கூட வெளியிட்டீர்கள்.

கருத்து என்னவோ நல்லாத்தான் இருக்கு...அனால் ஒரே தீர்மானத்தில் இருங்கள். அதை தேவைக்கேற்ப மாற்றாதீர்கள்.//

வழி மொழிகிறேன்

School of Energy Sciences, MKU said...

மிக சரியான பதிவு! சரியான நேரத்தில் வெளியிட்டதற்கு எனது வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான் ஒரு ஒலக நாயகனின் ஆபாச கவிதைகள் அடங்கிய (வெண்பா ??) திரைப்பாடலை கேட்டு அதிர்ந்தேன். நல்ல வேளை... அதற்கு தாமதமாக தடை விதித்திருந்தாலும் ஒரு பக்கம் ஆறுதல் அடைந்தேன். பாமரரையும் எளிதில் சென்றடையும் திரைப்பாடல்களிலும் ஆபாசத்தையும் தாண்டி வக்கிரம் மிளிருவதை ஒருக்காலும் அனுமதிக்க கூடாது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes