Saturday, January 01, 2011

ஹிட்ஸ்.......சீரழிவினை நோக்கி......!






புது வருடம் எல்லா வளத்தையும் எல்லோருக்கும் கொடுக்கட்டும்.......நண்பர்களே....!



சந்தோசமாய் இருக்கும் நேரங்களை அனுபவிக்கும் நாம் நம்முள் இருக்குக்கும் அழுக்குகளையும் கழுவியே ஆகவேண்டும். சமீபகால பதிவுலக அழுக்கு 'ஹிட்ஸ்' என்ற மாய வார்த்தையை நோக்கி நகரும் பதிவர் கூட்டத்தின் மனோ நிலைதான்.




சமுதாய சாடல்களையும், அவலங்களையும் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில் பதிவுலகம் என்ற இல்லாத ஒரு மாயக்கட்டில் ஏற்படும் விரிசல்களையும் சரி செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பது போன்று எமக்கும் அது தலையாய கடமை. ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரோடு சமீபத்தில் தொலைபேசியில் உரையாடக் கிடைத்த வாய்ப்பின் போது யாம் எழுதி வரும் கட்டுரைகள் பற்றியும் மக்களின் விழிப்புணர்வுக்காக யாம் முன்னெடுத்து செல்லும் வழி முறைகள் பற்றியும் கூறிக்கொண்டிருந்த பொழுது அதற்கான மறுமொழியாக அவர் கூறியது எமக்கு திடுக்கிடலுடன் கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதன் விளைவுதான் இந்தக் கட்டுரை.




வலைபூக்களில் எழுதும் மனிதர்கள் நல்ல கட்டுரைகளைத் தருவித்து அதில் மக்களை வசீகரம் செய்து தம் வலைப்பக்கங்களுக்கு வருகையை அதிகரிக்க வேண்டுமே அன்றி... மக்களை மயக்கும் வித்தைகளையும், கவர்ச்சிகரமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செய்திகளையும் இட்டு...தமது பக்கங்களின் வருகையைக் கூட்ட நினைப்பது அநாகரீகத்தின் உச்சகட்டம்.




தமிழ் நாட்டின் சக்கி மிகுந்த பல்சுவை இதழ்கள் இரண்டு. ஒன்று குமுதம் மற்றொன்று ஆனந்த விகடன், இந்த இரண்டு பத்திரிக்கைகளுமே....பல்சுவை இதழ்கள். மனிதர்களின் மனம் கவர இவை வைத்திருக்கும் யுத்திகள் நின்று கவனித்து யோசிக்க வேண்டிய ஒன்று.....ஆமாம்...சினிமா பக்கங்களும் இருக்கும் அதே நேரத்தில் சிரித்து மகிழ வயிறு குலுங்கும் நகைச்சுவையும் இருக்கும், சமகால அரசியலிருக்கும், விழிப்புணர்வு சிறுகதைகள் இருக்கும், ஆழமான குடும்ப ஒட்டம் கொண்ட தொடர்கள் இருக்கும், ஆன்மீகமும் இருக்கும், கல்வி பற்றிய அறிவிப்புகளும் இருக்கும்,




முழுக்க முழுக்க சினிமாவையும், கவர்ச்சியையும் பேசும் புத்தகங்கள் அதிக அளவில் விற்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவை காலங்கள் கடந்து நின்றிருக்கின்றனவா? இல்லையே? அந்த அந்த பருவத்தில் அவை முன்னணியில் இருப்பது போல தோன்றும் ஒரு மாயவலையிலேயே அவைகள் காலப்போக்கில் அழிந்தே போகும்.




இங்கே இவர்களின் ஹிட்ஸ் பைத்தியமும் அப்படித்தான்.. அந்த அந்த சமயத்தில் வரும் மக்கள் கூட்டத்திற்காக தம்மின் படைப்புகளின் தரத்தை பார்க்காமல், தான் ஒரு படைப்பாளிதானா என்றும் உற்று நோக்காமல்.. தினம் ஒரு பதிவும் நூற்றுக்கு மேற்பட்ட மறு மொழிகளையும் எதிர்பார்த்து தம்மை முன்னிறுத்தும் முயற்சிகளுக்குப் பின்னால் தரமற்ற படைப்புகளைக் கொடுத்து எம்மக்களை முட்டாளாக்கும் பணியைத்தான் இவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள்.




திரட்டிகளின் சமீபத்திய போக்குகள் எப்போதும் நல்ல கட்டுரைகளை மக்களுக்கு தருவித்து கொடுப்பதாய் இல்லை. இவர்கள் கொடுக்கும் தரவரிசைகள் ஹிட்ஸ் என்று சொல்லக்கூடிய விசயத்தையும் பின்னூட்டங்களின் எண்ணிக்கைகையும் வைத்துதானிருக்கிறது. பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தானுக்கும், அரைகுறை ஆடையோடு ஆடும் ஆபாச நடனங்களுக்கும் கூட்டம் வரும்? ஆனால் தரமிருக்கிறதா அவற்றில்?????




இப்படிப்பட்ட ஒரு தரமற்ற தரவரிசை கொடுக்கும் திரட்டிகளை கேட்க இங்கு யார் இருக்கிறார்கள்? எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பரப்பும் மெளனம் விதைப்பது கொடுமையான விசம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.


இன்னும் ஒரு மிகப்பெரிய மனித அவலமும் இங்கே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....



தரவரிசையில் தன்னை முன்னிலைபடுத்த கிட்டத்தட்ட ஒரு மனோநிலை சிதைக்கப்பட்ட நிலையில் மனிதர்கள் யுத்திகள் செய்வதும் காலையும் மாலையும் தனது பதிவின் வருகைப்பதிவினை பொறுத்து இவர்களின் மனம் மாறுதலும், கொஞ்சம் ஹிட்ஸ் குறைந்தால் ஒரு மன உளைச்சலுக்கு ஆளாவதும் மேலும் தனது வலைப்பூவில் பின்னூட்டங்களை அதிகரிக்க பொழுதெல்லாம் பிற வலைப்பூக்களுக்குப் போய் வாசிக்காமலேயே எல்லா வலைப்பூக்களிலும் டெம்ளட் பின்னூட்டங்கள் இட்டு தங்களது வலைப்பக்கங்களுக்கு வந்து வோட்டும் பின்னூட்டமும் இடவேண்டும் என்று மறைமுக நிர்ப்பந்தங்கள் செய்வதும் என்று இங்கே நடந்து கொண்டிருக்கும் ஒரு அவலம்...........அனைவரும் அறிந்ததே........ஆனால்.........நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு அவையெல்லாம் சரி என்பது போல வாழ பழகி விட்டோம்.




எனக்குத் தெரிந்த ஒருவர்....இரவில் உறங்குவதே இல்லை.......கணிணியைவிட்டும் நகர்வதே இல்லை...எப்போதும் ஹிட்ஸ் எவ்வளவு மற்றும் கூட்டம் வரவழைக்க என்ன எழுதலாம் என்று யோசித்து யோசித்து இப்போது மன வியாதி முத்திப் போய் ஒரு பைத்தியம் பிடிக்கும் நிலையிலிருக்கிறார். இந்த சூழல் மாற வேண்டாமா?




அலெக்சா ரேங்கும், இத்தனை ஹிட்ஸ்கள் நான் வாங்கியிருக்கிறேன் என்று சொல்வதும்தான் உங்கள் தகுதியா? வலது கரம் எடுத்து உங்களின் இடப்பக்கம் உள்ள இதயத்தில் கைவைத்து சொல்லுங்கள்...?




மாறவேண்டும்...தோழர்களே...! மனிதர்கள் நல்ல எழுத்தை தேடவேண்டும்.... தேட வைக்க வேண்டும். நகைச்சுவையாய் எழுதும் தோழர்களை மொக்கைகள் என்று கிண்டல் செய்யும் நாம் இந்த ஹிட்ஸ் விரும்பிகளை என்ன செய்யப்போகிறோம்?




இந்த கட்டுரை ஒரு உச்சபட்ச ரெட் அலெர்ட், நண்பர்களே, கணவன்மார்களே, மனைவிமார்களே, பெற்றோர்களே, அல்லது பிள்ளைகளே...........உங்கள் வீட்டில் ஒருவர் இப்படி இருக்கலாம்...........




இவர்களை மீட்டெடுக்கவேண்டியது உங்கள் கடமை. தேவைப்பட்டால் மருத்துவ உதவிகள் கூடச் செய்யுங்கள்............!




ஆரோக்கியமான சூழல் எங்கும் பரவட்டும்........! ஆரோக்கியமாய் எம் மனிதம் செழிக்கட்டும்!



(கழுகு இன்னும் உயரப்பறக்கும்....)





38 comments:

சௌந்தர் said...

இப்போது இது போல நிறைய பேர் வந்து விட்டார்கள் குறிப்பாக தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள் வரிசசைகளை பதிவர்கள் பார்த்து தினம் ஒரு பதிவு அல்லது இரண்டு பதிவு என போட்டு கொண்டு இருக்கிறார்கள் மீள் பதிவும் நிறைய வருகிறது....இதே போல சில பதிவர்கள் சென்றால் நிச்சயம் அவர்கள் மனம் பாதிக்கப்படும்

Kousalya Raj said...

//எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பரப்பும் மெளனம் விதைப்பது கொடுமையான விசம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.//

உண்மைதான் மௌனம் களைய வேண்டும்,பூனைக்கு யார் மணி காட்டுவது என்ற இயலாமையை உடைத்த கழுகிற்கு என் நன்றிகள் . நம் நண்பர்களாக இருந்தாலும் இத்தகைய மன போக்கை மாற்ற வைக்க வேண்டும்...

ஹிட்ஸ் வேண்டும் என்பதற்காக சிலர் நடந்துகொள்ளும் விதம் அருவருப்பை தான் தருகிறது...
நாள் செல்ல செல்ல இது ஒரு மனோ வியாதியாக நிச்சயம் மாற கூடிய அவலம் நடந்தேறும்.

//ஹிட்ஸ் விரும்பிகளை என்ன செய்யப்போகிறோம்//

அந்த மாதிரியான பதிவுகளை படிப்பதையும் அங்கே சென்று பின்னூட்டம் இடுவதையும் தவிர்க்க வேண்டும்...அந்த மாதிரியான பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு நட்பை மட்டும் நாம் வளர்க்கவில்லை...பல நல்ல பதிவுகள் படிக்கப்படாமல் போவதிற்கு மறைமுகமாக காரணம் ஆகிவிடுகிறோம். ஏனோ தானோ என்று எழுதும் பதிவுகளை பின்னூட்டங்களால் பெருமை படுத்தி அதே போல் தொடர்ந்து எழுத வைக்க ஊக்குவிக்கிறோம்...?!

கழுகிற்கு வாழ்த்துக்கள் !!

எஸ்.கே said...

ஹிட்ஸ் கிடைக்க வேண்டுமென்பதற்காக சிலர் கையாளும் வழிமுறைகள் மோசமானதாகவே உள்ளது. எடுத்துக் கொள்ளும் டாபிக்கும் வைக்கப்படும் தலைப்புகளும் நிச்சயமாய் சரியில்லாததாகவே உள்ளது. சில சமயங்களில் ஆபாசங்களாக கூட...

ஒரு பக்கம் இதை எண்ணி எண்ணி அவர்கள் மனம் எப்போது இதையே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இணையத்தில் நீண்ட நேரம் இருப்பதாலாயே மனரீதியான பிரச்சினைகள் உருவாகக் கூடிய அபாயம் இருக்கின்றபோது, இன்னும் இதுபோன்று மனரீதியாக தங்களை தானே பாதித்துக் கொள்வது சரியா?

வாழ்வில் சாதிக்க சாதனைகள் எவ்வளவோ உள்ளன. இதையெல்லாம் பெரிதாக எண்ணி மாயையில் சிக்கி தங்களை கெடுத்துக் கொள்ள வேண்டாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்ம்ணத்தில் வாராந்திர டாப்20 வரிசை வரத்தொடங்கியதில் இருந்து தான் இந்தச் சீரழிவு வேகமாக பரவத் தொடங்கியது என்று நினைக்ககிறேன்.

பதிவர்கள், பதிவுகளைப் போட்டுவிட்டு கமென்ட்டுகளுக்கும், ஓட்டுகளுக்கும் விடிய விடியக் காத்திருப்பது, போததை அடிமைகளை நினைவுபடுத்துகிறது.
தமிழ்ம்ணம், அதிக வாசகர்கள் படிப்பது மற்றும் ஓட்டுப்போடுவதை தரமான எழுத்துக்களுக்கு அளவுகோளாக எடுத்துக் கொண்டு தரவரிசைப் படுத்துவதைத் தவறு என்று கூற முடியாது. ஆரோக்கியமான வாசகர்கள் இருக்கும் பட்சத்தில் கொஞ்ச நாளில் உண்மையிலேயே தரமான எழுத்துக்கள் மேலே வந்துவிடும்.

அதே நேரத்தில் இதைத்தவறாகப் பயன்படுத்தும் பதிவர்களை என்னதான் செய்வது? கவர்ச்சித்தலைப்புகள் வைப்பது, எழுதுவது போன்றவைகளால் ஹிட் ரேட்டைக் கூட்டும் பதிவர்கள் அவர்களாகத்தான் மாற வேண்டும்.இதுஒரு மாயை எனப்புரிந்து இதிலிருந்து விடுபட்டு வழமை போல எழுத முன்வர வேண்டும் , .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதை நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....!

பொன் மாலை பொழுது said...

உணர வேண்டிய சிந்தனைகள். அளவுக்கும் மீறி நிறைய பேர்கள் இதில் கட்டுண்டு கிடப்பது நல்லதல்ல. குறிப்பிட்ட கால அளவுகளில் மட்டும் இவைகளை ,இது போன்ற வசதிகளை பயன்படுத்தும் மனத்திண்மை வேண்டும். இல்லையேல் பின்னாளில் மன ரீதியான பாதிப்புக்கள் வர வாய்ப்புக்கள் உள்ளதை அமெரிக்க பத்திரிக்கைகள் எழுதுகின்றன.அங்கு இது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய டாக்டரிடம் போகும் வரை அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதில் அனைவரும் எச்சரிக்கையுடனும் சுய கட்டுப்பாடுடனும் செயல்படுவது நலம் பயக்கும்.

எல் கே said...

இதில் நாம் காணவேண்டியது, திரட்டிகளுக்கு ஹிட்ஸ்(அவர்கள் தள) எனவே இந்த மாதிரி ரேங்கிங் அவர்கள் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

நாம்தான் சுதாரித்து கொண்டு நல்ல பதிவுகளையும்,பதிவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

பரத் said...

இதைப்பத்தி யாருங்க எழுதுறது.. மொக்கைகளுக்கு ஒட்டு போட்டு ஊக்குவிக்கும் ஆசாமிகளா?

இது உங்களுக்கே ஓவரா தெரியல... எல்லோரும் கொஞ்சம் கண்ணாடிய பார்த்துக்கோங்க.

ச்சீ ச்சீசீ இந்த பழம் புளிக்கும்.

பரத் said...

ஒட்டு வேணும்னா அடுத்தவர் எப்படி எழுதி இருந்தாலும் சூப்பர் என்று சொல்லி... "எனக்கு நீ ஒட்டு போடு! உனக்கு நான் ஒட்டு போடுறேன்" ன்னு வாங்கிக்கலாம்.

ஆனா ஹிட்ஸ் வேணும்னா சுவாரசியமா எழுதுனால் தானே கதைக்கு ஆகும். நமக்கு கூட புரியாத கவிதை எழுதி படிக்குரவனை கொன்றால் படிப்பதற்கு என்று பிளாக் பக்கம் எவராவது வருவாரா?

போலியா ஒட்டு உருவாக்கலாம். போலியா ஹிட்ஸ் உருவாக்க ரொம்ப மெனக்கேடனுமே. :(

மற்றவருக்கு பிடிக்குற மாதிரி எழுதுபவன் தானே ஹிட்ஸ் ல அதிகமா வருவான்.

என்னமோ போங்க ... ஒட்டு போட பத்து பேர பிடிக்குற மாதிரி.. ஹிட்ஸ் உருவாக்க ஆயிரம் பேர் பிடிக்க ட்ரை பண்ணுங்க.

கழுகு said...

பரத்...@ அத்துமீறி போலி ஐடியில் வந்து கழுகில் வந்து சம்பந்தம் இல்லாத ஒரு கமெண்டினை விட்டுவிட்டு போய்விட்டால் உங்கள் தடங்கள் அறியப்படாது என்று என்று தப்புக்கணக்கு போடவேண்டாம்....

கழுகின் முந்தைய பதிவுகளை மெனக்கெட்டு படிக்க பொறூமையின்றி நீவிர் உரைத்த வார்த்தைகள் மன்னிக்கப்ப்டுகின்றன......

தொடர்ந்த்தால் உமது தடமும் ஐ.பி.முகவரியும் அறியப்படுவதில் எமக்கு சிரமங்கள் இருக்குமென இந்த அறிவியல் வளர்ந்திருக்கும் காலத்தில் நினைக்க மாட்டீர்கள் என்று கருதுகிறோம்.

ஆரோக்கியமான கருத்துபோர் செய்ய உமது திரணிகள் இடம் கொடுத்தல் உம்மின் சுயம் சொல்லி எம்மிடம் வாரும் தோழரே......!

இருப்பினும் எமது வாசல் வந்தமைக்கும் எமது நன்றிகள்....!

டிலீப் said...

// எல் கே கூறியது...
நாம்தான் சுதாரித்து கொண்டு நல்ல பதிவுகளையும்,பதிவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.//

நல்லதொரு பதிவு நண்பரே.பதிவுலகில் எவ்வளவோ நல்ல விடயங்களை சில பதிவர்கள் பிரசுரித்து வருகின்றனர்.நாம் அத் தளம் சென்று பார்த்தால் அப்பதிவுக்கான ஒட்டு ஹிட்ஸ் குறைவாகவே இருக்கும்.ஏன் அவ் நல்ல பதிவுக்கான பி;ன்னூட்டல் கூட சில வேளை இல்லாமல் இருக்கும்.இது தான் நல்ல விழிப்புணர்வு பதிவுக்கும் அல்லது நல்ல பதிவுக்கும் மொக்கை பதிவுக்கும் உள்ள வித்தியாசம்.இவ் புது ஆண்டிலாவது நாம் நல்ல பதிவுகளுக்கும் புதிய பதிவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

Madhavan Srinivasagopalan said...

// ஆரோக்கியமான சூழல் எங்கும் பரவட்டும்........! ஆரோக்கியமாய் எம் மனிதம் செழிக்கட்டும்! //

Well said.

Madhavan Srinivasagopalan said...

// ஆரோக்கியமான சூழல் எங்கும் பரவட்டும்........! ஆரோக்கியமாய் எம் மனிதம் செழிக்கட்டும்! //

Well said.

Anonymous said...

கழுகு ,
தலைவணங்குகிறேன் ..,அந்த தமிழ்மணம் ஹிட்ஸ் கவுன்ட்டர் ( அது என்ன பேர் தெரியலையா ) எங்கே பதிவுலகத்தை ஆனந்த விகடன் vs குமுதம் ,தினமலர் vs தினத்தந்தி போட்டிகளை போன்ற பதிவர்களிடையே உருவாகிவிடும் ,ஹிட்ஸ் கவுன்டரை உயர்த்துவதற்காக மிக கீழ்த்தரமான தலைப்புகளில் வெளி வரும் என்பது மட்டும் நிச்சயமாக நடக்கும் .

Anonymous said...

//// இதைப்பத்தி யாருங்க எழுதுறது.. மொக்கைகளுக்கு ஒட்டு போட்டு ஊக்குவிக்கும் ஆசாமிகளா?

இது உங்களுக்கே ஓவரா தெரியல... எல்லோரும் கொஞ்சம் கண்ணாடிய பார்த்துக்கோங்க.////

ஏலே ...யாருல நீயி ...,எதை நீ மொக்கைனு சொல்றே .., ப்ளோக்ல நாட்டு நடப்பு எழுதி வெல்லாமைய பெருக்க போறியா ,இல்ல வெங்காயம் விலையை குறைக்க போறியா ? போ போ போய் வர எலெக்ஷன் ல துட்டு வாங்காம வோட்டு போடு ..,அப்படியே எவன் எவன் இலவசம் தாரன் பார்த்து வோட்டு போடு

கழுகு said...

நல்ல பதிவுகளை வாசிக்கும் சூழலை எழுதும் எழுத்தாளர்களின் கையில் இருக்கிறது..........

ஆனால் எழுதுபவர்கள் அனைவரும் தமது சமூக பிரஞை மறந்துவிடுவதால் வரும் குழப்பம்தான் இது.....

எல்லோரும் இலக்கிய நயத்தோடும்...எப்போதும் கருத்துகளையும் தத்துவங்களையும் எழுதவேண்டிய அவசியம் இல்லை...

மக்கள் நலம்,பெண்கள் நலம், நகைச்சுவை, குடும்பச் செய்திகள்...சினிமாவினைப்பற்றிய ஆரோக்கிய கட்டுரைகள் என்று கொண்டு செல்லலாமே....

காமத்தை வரையறுப்பதற்கும் ஆபாசத்தை விற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது....

காமத்தினை பற்றிய தெளிவு இல்லாத மனிதர்களிலின் இச்சைகளை தூண்டும் விதத்தில் ஆபாசங்கள் பொதுவெளிக்கு வருவதை தடுக்க முடியாதா? நம்மால்....

காமம் எங்கு இல்லை என்று கேள்விகளையும் குரல்களையும் உயர்த்துபவர்கள்......


காமத்தின் ஆழம் அறிந்து அது பற்றிய அறிவுகளை வயது வந்தோருக்கு தெளிவாகச் சொல்லும் வலு கொண்டிருக்கிறீர்களா?

Anonymous said...

@ KAZHUGU

CLASSIC REPLY !!! YOU ROCKSSSSSS

TERROR-PANDIYAN(VAS) said...

@பரத்

//ஆனா ஹிட்ஸ் வேணும்னா சுவாரசியமா எழுதுனால் தானே கதைக்கு ஆகும். நமக்கு கூட புரியாத கவிதை எழுதி படிக்குரவனை கொன்றால் படிப்பதற்கு என்று பிளாக் பக்கம் எவராவது வருவாரா?

போலியா ஒட்டு உருவாக்கலாம். போலியா ஹிட்ஸ் உருவாக்க ரொம்ப மெனக்கேடனுமே. :( //


ஐ!! பரத் சார் நீங்க நம்ம ஏரியா வரவேண்டியவர். இடம் மாறி வந்து இருக்கிங்க. இங்க டீசண்டா பேச சொல்லி கொல்றாங்கபா... :( .

ஹிட்ஸ் வாங்கறாது ஈஸி சும்மா 18+ போட்டு உள்ள நாலு பிட்டு படம் போட்ட போதும் ஹிட்ஸ் கொட்டும். முடிஞ்சா நாங்க இதை பத்தி எழுதறோம். அங்க வச்சிகலாம் பஞ்சாயத்த... :))

பேய்வீடு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… தமிழ்ம்ணத்தில் வாராந்திர டாப்20 வரிசை வரத்தொடங்கியதில் இருந்து தான் இந்தச் சீரழிவு வேகமாக பரவத் தொடங்கியது என்று நினைக்ககிறேன்.//

பன்னி சார் நீங்க சொன்னது மிகச் சரி. இது எங்கே முடியும் என தெரியவில்லை.

பேய்வீடு said...
This comment has been removed by the author.
பேய்வீடு said...

//பரத் சொன்னது…

ஒட்டு வேணும்னா அடுத்தவர் எப்படி எழுதி இருந்தாலும் சூப்பர் என்று சொல்லி... "எனக்கு நீ ஒட்டு போடு! உனக்கு நான் ஒட்டு போடுறேன்" ன்னு வாங்கிக்கலாம்.

ஆனா ஹிட்ஸ் வேணும்னா சுவாரசியமா எழுதுனால் தானே கதைக்கு ஆகும். நமக்கு கூட புரியாத கவிதை எழுதி படிக்குரவனை கொன்றால் படிப்பதற்கு என்று பிளாக் பக்கம் எவராவது வருவாரா?///


சார் நீங்க என்ன சொல்றீங்க. வித விதமா பதிவுக்கு தலைப்பு வைக்க வேண்டியது நமிதா ஆய் போகும்போது நடந்தது என்ன 18+ , குஷ்பூ பெட்ரூமில் நடந்தது என்ன அப்டின்னு ஆபாசமா தலைப்பு வச்சு மக்களை ஏமாத்தி பதிவுக்கு வர வைத்து மொக்கை பதிவு போட வேண்டியது. பதிவுக்கு ஆபாசமா தலைப்பு வைக்கிரவன்களை பத்தி என்ன சொல்றீங்க. நாங்க யாரும் ஹிட்ஸ் க்காக எழுதுறதில்லை. விட்டா நைட் ரெண்டு மணிக்கு எந்திச்சு ஹிட்ஸ் வரலைன்னா பதிவு போடுவாங்க போல?

அருண் பிரசாத் said...

well said kazhgu!

ஹிட்ஸ் வாங்குவதற்கு ஆகா ஓஹோ என்று எல்லாம் எழுத வேண்டியது இல்லை... 2 A joke அல்லது கில்மா தலைப்பு வைத்தாலே போதும் ஹிட்ஸ் குவியும். தமிழ்மணம் செய்வது சுத்த மடத்தனம்.... இன்னும் சில நாளில் பதிவருகளுக்குள் பொறாமை ஏற்பட்டு...அடுத்தவர் பதிவுக்கு ஓட்டு போடுவதையே நிறுத்தினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை

அருண் பிரசாத் said...

@ பரத்

நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கல் என புரியவில்லை

மொக்கை பதிவு என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்???? சமூக விழிப்புணர்வு பதிவுகள் மட்டுமே நல்ல பதிவுகள் இல்லை... அடுத்தவரை வாய் விட்டு சிரிக்க வைக்கும் பதிவுகள் எல்லாம் மொக்கை பதிவுகளும் இல்லை....

கொஞ்சம் கண்மூடித்தனத்தை விட்டு வெளியே வாருங்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் கூறியது...

@ பரத்

நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கல் என புரியவில்லை

மொக்கை பதிவு என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்???? சமூக விழிப்புணர்வு பதிவுகள் மட்டுமே நல்ல பதிவுகள் இல்லை... அடுத்தவரை வாய் விட்டு சிரிக்க வைக்கும் பதிவுகள் எல்லாம் மொக்கை பதிவுகளும் இல்லை....

கொஞ்சம் கண்மூடித்தனத்தை விட்டு வெளியே வாருங்கள்....///

அருண் சரியா சொன்னீங்க. எதை வேணாலும் எழுதிட்டு போகட்டும். ஸ்கூல் பசங்க மாதிரி உன் ரேன்க் என்ன, எவ்ளோ மார்க் இதெல்லாம் தேவையா? நாம பதிவுலகுக்கு வந்து என்னைக்காவது இத பத்தி பேசிருக்கமா? அப்படியே அதுக்கு ஒரு பதிவு போட்டாலும் அது நக்கலுக்குதான தவிர பெருமைக்காக இல்லை.

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த மாதிரி ஒரு போஸ்ட் கழுகுல வந்தற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
நகைசுவை எல்லோருக்கும் வராது .....அப்படி எழுதினால் பல பேர் அதை மொக்கை என்று கூறுவது சுத்த முட்டாள் தனமானது .ஹிட்ஸ் ......ஹிட்ஸ் பாதி பேர் அலையுறாங்க கடைசில அவங்களுக்கு ஹிஸ்டீரியா தான் புடிக்கும் .அதை வைத்து என்னமோ சொந்தமா நாலு வீடு வாங்குறாங்க போல ....

கணேஷ் said...

"மாறவேண்டும்" என்று எதிர்பார்ப்பதை
விட "மாற்றவேண்டும்" என்பது நல்லா இருக்கும் என்பது அடியேனின் கருத்து...

முடியும் என நினைக்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

கழுகாரே...
உங்கள் கட்டுரை முற்றிலும் உண்மை. தமிழ்மணம்தான் இந்தப் போதையின் ஆரம்பகர்த்தா. நல்ல பதிவுகளை அடையாளம் காணாமல் ஹிட்சையும் கமெண்ட்சையும் வைத்து அவர்கள் வழங்கும் அட்டவணைப் போதையில் கும்மியும், கேவலமான தலைப்புக்களும் இடம் பெறுகின்றன என்பது வருத்தமான செய்திதான். மேலும் பதிவர்கள் அனைவரையும் தூக்கம் கெடுக்கும் ஒரு இடமாகவும் வலைப்பூ ஆகியுள்ளது. தமிழ் மணத்தில் எத்தனை ஓட்டு, தமிழிஷில் பாப்புலராயாச்சா என்று கணிப்பொறி மீது விழி வைத்து காத்திருக்கிருக்கும் காலமாகிவிட்டது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல.

நல்ல பகிர்வு....

மாணவன் said...

//மாறவேண்டும்...தோழர்களே...! மனிதர்கள் நல்ல எழுத்தை தேடவேண்டும்.... தேட வைக்க வேண்டும். நகைச்சுவையாய் எழுதும் தோழர்களை மொக்கைகள் என்று கிண்டல் செய்யும் நாம் இந்த ஹிட்ஸ் விரும்பிகளை என்ன செய்யப்போகிறோம்?

இந்த கட்டுரை ஒரு உச்சபட்ச ரெட் அலெர்ட், நண்பர்களே, கணவன்மார்களே, மனைவிமார்களே, பெற்றோர்களே, அல்லது பிள்ளைகளே...........உங்கள் வீட்டில் ஒருவர் இப்படி இருக்கலாம்...........//

சரியான நேரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் இப்படி ஒரு கட்டுரையை பதிவு செய்ததற்கு முதலில் கழுகுக்கு எனது ராயல் சல்யூட்.............

மாணவன் said...

//எனக்குத் தெரிந்த ஒருவர்....இரவில் உறங்குவதே இல்லை.......கணிணியைவிட்டும் நகர்வதே இல்லை...எப்போதும் ஹிட்ஸ் எவ்வளவு மற்றும் கூட்டம் வரவழைக்க என்ன எழுதலாம் என்று யோசித்து யோசித்து இப்போது மன வியாதி முத்திப் போய் ஒரு பைத்தியம் பிடிக்கும் நிலையிலிருக்கிறார். இந்த சூழல் மாற வேண்டாமா?//

இப்போது ஒருசில பதிவர்களுக்கு இந்த ஹிட்ஸ் பேய், பிரபல பதிவர்நோய் பிடித்து கிட்டதட்ட மன்நோயாளியாகவே மாறி வருகின்றனர் கண்டிப்பாக இந்த சூழல் மாற வேண்டும் மாற்ற வேண்டும்

மாணவன் said...

//வலைபூக்களில் எழுதும் மனிதர்கள் நல்ல கட்டுரைகளைத் தருவித்து அதில் மக்களை வசீகரம் செய்து தம் வலைப்பக்கங்களுக்கு வருகையை அதிகரிக்க வேண்டுமே அன்றி... மக்களை மயக்கும் வித்தைகளையும், கவர்ச்சிகரமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செய்திகளையும் இட்டு...தமது பக்கங்களின் வருகையைக் கூட்ட நினைப்பது அநாகரீகத்தின் உச்சகட்டம்.//

மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க, சமீபகாலமாக நெட்டீசியன் என்று சொல்லக்கூடிய வலையுலக வாசகர்கள் அதிகரித்து வருகிறார்கள் அவர்களின் பார்வைக்கு இந்த மாதிரி மக்களை மயக்கும் வித்தைகளையும், கவர்ச்சிகரமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செய்திகளையும் எழுதி தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமைந்து விடக்கூடாது என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும் பதிவர்கள்.

மாணவன் said...

//ஆரோக்கியமான சூழல் எங்கும் பரவட்டும்........! ஆரோக்கியமாய் எம் மனிதம் செழிக்கட்டும்!//

கழுகுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்...

கழுகு தொடர்ந்து மென்மேலும் பறக்கட்டும்..........

Prathap Kumar S. said...

//அலெக்சா ரேங்கும், இத்தனை ஹிட்ஸ்கள் நான் வாங்கியிருக்கிறேன் என்று சொல்வதும்தான் உங்கள் தகுதியா? வலது கரம் எடுத்து உங்களின் இடப்பக்கம் உள்ள இதயத்தில் கைவைத்து சொல்லுங்கள்...?//


ஹஹஹ ஜூப்பரப்பு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவுக்கு உங்கள் ஹிட்ஸ் ரேன்க் என்ன அப்டின்னு யாரும் போன் பண்ணி கேட்டாலும் கேப்பாங்க. கழுகு உஷாரா இருப்பு...

ஜில்தண்ணி said...

/// மக்களை மயக்கும் வித்தைகளையும், கவர்ச்சிகரமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செய்திகளையும் இட்டு...தமது பக்கங்களின் வருகையைக் கூட்ட நினைப்பது அநாகரீகத்தின் உச்சகட்டம். ///


இணையத்துல இதெல்லாம் சகஜம் தானே, ஊருக்குள்ள நாலு தியேட்டர்ல நல்ல படம் ஓடுதுன்னா ரெண்டு தியேட்டர்ல வேற மாதிரி படம் ஓட்டத்தான் செய்வாயிங்க, அது நமக்கு தேவையில்ல, நல்ல படத்துக்கு கூட்டம் வரலன்னா பரவாயில்ல நாலு நல்லவங்க ரசிச்சா போதும்

ஜில்தண்ணி said...

தனி மனித தாக்குதல்கள் பதிவுகள் பல வருகின்றனவே , அதெல்லாம் கேக்க மாட்டீங்களா ?

அன்பரசன் said...

//அலெக்சா ரேங்கும், இத்தனை ஹிட்ஸ்கள் நான் வாங்கியிருக்கிறேன் என்று சொல்வதும்தான் உங்கள் தகுதியா? //

சரியான எடுத்துரைப்பு..

Ramesh said...

Indha madhiri alungalai yellam mulumaiya purakkanichadhanga sari varum. Well said.

Vijay Periasamy said...

///எனக்குத் தெரிந்த ஒருவர்....இரவில் உறங்குவதே இல்லை.......கணிணியைவிட்டும் நகர்வதே இல்லை...எப்போதும் ஹிட்ஸ் எவ்வளவு மற்றும் கூட்டம் வரவழைக்க என்ன எழுதலாம் என்று யோசித்து யோசித்து இப்போது மன வியாதி முத்திப் போய் ஒரு பைத்தியம் பிடிக்கும் நிலையிலிருக்கிறார்////


என் நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் உள்ளது .
அறிவு உரைக்க சொன்னதற்கு நன்றிகள் பல ..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes