Tuesday, February 01, 2011

தேர்தல் 2011: மின்னணு வாக்கு இயந்திரம்... ஒரு பார்வை..!


 தேர்தல் நெருங்கிக் கொண்டு  இருக்கிறது. சராசரி இந்திய குடிமகனுக்கு திருவிழாக்காலம் போலத்தான் தேர்தல் நேரம். ஐந்தாண்டுகள் நம்மை ஆளபோகிறவர்கள்...மன்னிக்கவும்.. ஐந்தாண்டுகள் நம்மை நிர்வாகிக்க நாம் நியமிக்கப்போகும் அரசியல் கட்சி எது என்று தீர்மானிக்கும் சக்திதான் தேர்தல் என்பது என்ற கருத்தை விட..ஏதோ ஒரு கடமை அது என்பது போல எண்னுவதால்தான்...அது பற்றி அதிக சிரத்தைகள் மக்களுக்கு இல்லை.
தேர்தல் 2011ல் கழுகின் விழுப்புணர்வூட்டம் பங்கு மிகையாகவே இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு தம்பி பாபு எழுதிய இந்த அதிரடி அரசியல் கட்டுரையை எமது வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் அடைகிறோம்....!
மின்னணு வாக்கு எந்திரம் பற்றைய இவரின் அலசல் இதோ.....


தமிழகத்தில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுத்து கொண்டு இருக்கிறது.வாக்காளர்களும் தன் ஜனநாயக கடமையாற்ற தயாராகி  வருகிறார்கள் .


தேர்தல் ஆணையம் இந்த தடவையும் இயந்திர வாக்கு  பதிவு  மூலமே தேர்தல் நடத்த போவதாக அறிவித்து விட்டார்கள் (எப்பொழுதுமே அது தானே .......!).இதில் இயந்திர வாக்கு பதிவு நம்ப தகுந்தவையா..? என்று தான் பிரச்சனை .சுப்ரீம் கோர்ட்டில் இயந்திர வாக்கு பதிவு நம்பகதன்மை அல்ல..! என்று ஒரு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அனைவரும் வாக்கு அளிக்க வேண்டும் அது ஜனநாயக கடமை என்று அரசியல் கட்சிகள் கூறும் இதே வேளையில் அந்த வழக்கை   ஏன் கடந்த ரெண்டு வருட காலமாக தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அந்த வழக்கு சம்பந்தமான தகுந்த ஆதாரங்களை நீதி மன்றத்துக்கு அளிக்க வில்லை .அந்த  வழக்கு இழுத்து  அடிக்க படுகிறது .

வாக்காளர்களாகிய நாம்  எந்த கட்சிக்கு வாக்கு போடுகிறோமோ அந்த கட்சிக்கு தான் நம்  வாக்கு போகிறது என்பது என்ன நிச்சயம் ?

இது சம்பந்தமாக பெங்களுருலிருந்து ஒருவர் இயந்திர வாக்கு பதிவில்  தில்லு  முல்லு  செய்ய முடியும் என்று நிரூபித்தார் .அது அனைத்து ஊடகங்களிலும் வந்தது .பின்னர் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் .இயந்திர வாக்கு பதிவை திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .இதன் மூலம் இயந்திர வாக்கு பதிவில் தில்லு முல்லு செய்யலாம் என்று தெரிகிறது .அதன் நம்பக தன்மையும் கேள்வி குறியாக உள்ளது .ஊடகங்களும் அதை பற்றி பிறகு கண்டு கொள்ளவில்லை ?

எதற்கு எடுத்தாலும் வளர்ந்த நாடுகளை சுட்டி காட்டும் நமது அரசியல்வாதிகளுக்கு மேலை நாடுகளில் இன்னும் ஒட்டு சீட்டு முறை தான் கையாளுகிறார்கள் என்று தெரிய  வில்லையா ?

சரி இந்திய நாட்டை பொறுத்த  வரை அவ்வாறு ஓட்டு சீட்டு முறை கொண்டு வந்தாலும் ,அதில் கள்ள ஓட்டு போடுவது மிகுதியாக ஆகும் என்றும் ...!அதற்க்கு வேலை பளு கூடுதல் ,ஓட்டு சீட்டு அச்சடிக்கும் செலவு ,ஓட்டு எண்ணிக்கையின் போது நம் அரசியல் வாதிகள் தில்லு முல்லு செய்யவும் ,கால தாமதம் போன்ற பிரச்சனைகள்  உள்ளன .அது இனி இந்திய நாட்டுக்கு சரி வராது என்று வைத்து கொள்வோம் .

இப்போதைக்கு ஒரே வழி இயந்திர வாக்கு பதிவு தான் .ஆனால்  அதன் நம்பக தன்மை முற்றிலும் கேலி கூத்தாக தான் உள்ளது .இப்பொழுது தேர்தல் ஆணையம் .எந்த கட்சிக்கு ஒட்டு போடுகிறோமோ அதற்கு ஒரு PRINT OUT வெளி வரும் நிலையை பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர் .

சரி இப்படி இன்னார்க்கு அல்லது இந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுகிறோம் என்று நகல் எடுத்து தந்தாலும் அது ஓட்டுக்கு பணம் வாங்கும் முறை இன்னும் கூடுதலாக தான் இருக்கும் என்று எண்ண தோன்றுகிறது .ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வந்து அந்த PRINT OUT ஐ காண்பித்தால் ஓட்டுக்கு 2000 ரூபாய்(ரொம்ப குறைவா தான் சொல்லி இருக்கேன் )  என்று நம் அரசியல் வாதிகள் மக்களை பணம் வாங்க வைத்து விடுவார்கள் இல்லையா...? .மேலும் பிற்காலத்தில் இவன் எனக்கு ஓட்டுபோடவில்லை என்று அவன் சார்ந்த சமுதாயம் அல்லது தனி நபர்களை வஞ்சம் தீர்க்க மாட்டார்கள..? இப்படி நடப்பதற்கு வாய்புகள் நிறைய இருக்கு  .

இப்பொழுது ரகசிய குறியீடு எண்ணாகவோ அல்லது வேறு வழியிலோ கொடுக்கலாம்  என்று தேர்தல் ஆணையம் சொல்லுகிறது .எப்படி இருந்தாலும் அதில் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அதை வைத்து விளையாடுவார்கள் இந்த சுயநலம் மிக்க அரசியல் வாதிகள் .

அமரர் எம் ஜி ஆர் ஒரு படத்தில் பாடிய பாட்டின் வரிகள்  தான் நினைவுக்கு வருகிறது ."திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "

கழுகிற்காக
 (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
 

20 comments:

செல்வா said...

//அதன் நம்பக தன்மையும் கேள்வி குறியாக உள்ளது .ஊடகங்களும் அதை பற்றி பிறகு கண்டு கொள்ளவில்லை ?//

பெரும்பாலான ஊடங்கங்கள் அரசியல் சார்புடயவாக இருப்பதும் , வருமானத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் காரணமாக இருக்கலாம்.

//.ஒருவர் ஓட்டு போட்டுவிட்டு வந்து அந்த PRINT OUT ஐ காண்பித்தால் ஓட்டுக்கு 2000 ரூபாய்(ரொம்ப குறைவா தான் சொல்லி இருக்கேன் ) என்று நம் அரசியல் வாதிகள் மக்களை பணம் வாங்க வைத்து விடுவார்கள் இல்லையா...?//

கண்டிப்பாக இருக்கலாம் .. ஆனாலும் இயந்திர ஒட்டுப்பதிவே சிறந்ததாக இருக்கும் .. ஆனால் பிரிண்ட் அவுட் முறை சற்று பெரிய எதிர்பலன்களையே கொடுக்கும் ..

MANO நாஞ்சில் மனோ said...

//சுப்ரீம் கோர்ட்டில் இயந்திர வாக்கு பதிவு நம்பகதன்மை அல்ல..! என்று ஒரு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது//

மறைந்த நம்ம எழுத்தாளர் சுஜாதா, இதன் நம்பக தன்மை பற்றி அடிக்கடி எழுதியுள்ளார் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்......

மாணவன் said...

தெளிவான பார்வையுடன்..நல்ல அலசல்..

மாணவன் said...

//இப்பொழுது ரகசிய குறியீடு எண்ணாகவோ அல்லது வேறு வழியிலோ கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்லுகிறது .எப்படி இருந்தாலும் அதில் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அதை வைத்து விளையாடுவார்கள் இந்த சுயநலம் மிக்க அரசியல் வாதிகள் .//

உண்மைதான் என்னதான் தொழிநுட்பம் வளர்ந்தாலும் அதை தவறான வழிக்கு பயன்படுத்துவதையே சிலர் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இது நீங்கள் சொவதுபோல் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "

ஜில்தண்ணி said...

it is possible to program anything n a electronic device, so it is the pure responsibility of the election commision to avoid any malpractice in voting machine :)

இயந்திரத்த மாத்தலாம் நம்ம மனுசனுங்கள மாத்த முடியுமா ?

யாரு அதிகமா காசு கொடுக்குராயிங்களளோ அவருக்கு ஓட்டு போடுறதுதான் நம்மாளுங்களுக்கு தெரியும் :( #என்ன பண்றது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தெளிவான பார்வையுடன்..நல்ல அலசல்..

எஸ்.கே said...

உண்மைதான் எப்படிப்பட்ட டெக்னாலஜி வந்தாலும் திருடுவதிலும் டெக்னாலஜி வளர்ந்து விடுகிறது. அவங்க அவங்களா திருந்தனும்!

சௌந்தர் said...

இவருக்கு தான் ஓட்டு போட்டேன் என்று PRINT OUT காட்டினால் அதை வைத்து பணம் வாங்குவர்கள்..ஏதாவது உதவி என்று அரசிடம் போய் நின்றால் நீ யாருக்கு ஓட்டு போட்டாய் அந்த ரசீது எடுத்து கொண்டுவா என்பார்கள் ஒரு வேளை அவன் எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டு இருந்தால் அவனுக்கு வழங்கபடும் சலுகைகள் மறுக்க படலாம்...நல்ல தெளிவாக சொல்லி இருக்கிறார் பாபு....வாழ்த்துக்கள்

arasan said...

சரியான பார்வை ...
கழுகின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

ஜீவன்பென்னி said...

அதனுடைய நம்பகத்தன்மைய நிருபித்தார்களென்றால் எந்த பிரச்சனையும் இல்லை.. இங்க சரியில்லன்னு கூப்பாடு போடுறவங்க(அரசியல்வாதிங்க) நாளைக்கு இந்த மெஷின வச்சு செய்ச்சு வந்தா வாய மூடிக்குவாங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விடுண்ணா.. ஓட்டு மெஷினையே எடுத்துட்டு வந்துட்டு காசு கேட்கலாம்.. ஹி..ஹி

Kousalya Raj said...

தேர்தல் வருவதற்குள் இந்த வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

பாபு இந்த மின்னணு இயந்திரம் பற்றிய உங்களின் கவலை எல்லோரின் எண்ணமாக இங்கே ஒலித்து இருக்கிறது.

சரியான நேரத்தில் நல்லதொரு பகிர்வு பாபு. நன்றி.

Madhavan Srinivasagopalan said...

எப்படியாவது பிராடு பண்ணி ஜெயிச்சு கொள்ளையடிக்குற கூட்டத்துக்கு முடிவு கட்டனும் சீக்கிரம்.. என்ன செயுரதுனுதான் புரியலை..
அட்லீஸ்ட், இந்த மாதிரி விழிப்புனர்வ மக்கள் கிட்ட பரப்பணும்... அது ஆரம்பம் மட்டுமே..

பதிவிற்கு நன்றிகள்.

NaSo said...

வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் இருந்தாலும் வாக்குசீட்டுக்கு இயந்திரமே பரவாயில்லை என்பது எனது நிலை. ஏனென்றால் வாக்குசீட்டை எளிதாக எவர் வேண்டுமானாலும் கைப்பற்றி கள்ள ஓட்டு போட முடியும். ஆனால் இயந்திரத்தை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது.

அன்பரசன் said...

//"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" //

நானும் அதையேதான் சொல்றேங்க..

Anonymous said...

இந்தியா போன்ற 80 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கும் ஒரு நாட்டில் கண்டிப்பாக ஓட்டுச் சீட்டு முறை இனி ஒத்து வராது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள பலவானே போதும் கள்ள ஓட்டு போட. ஆனால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் தவறு செய்ய வேண்டுமாயின், அகில இந்திய ரீதியில் முயன்றால் தான் தில்லு முல்லு செய்ய இயலும். அப்படி ஒரு கட்சி செய்து குற்றம் வெளியானால் பிறகு அந்த கட்சிக்கு சங்கு தான். அதனால் மின்னணு வாக்கு இயந்திரமே சரியான தேர்வு என்பது என் கருத்து.

கருடன் said...

Electronic system is good. only thing is we need to ensure the security of the machine.

கணேஷ் said...

நல்ல விசயங்கள்...

அது ஒரு இயந்திரம்..ஒரு மனிதனின் கட்டுப்பாட்டின் படி இயங்கும்..நாம் எப்படி இயக்குகிறோம் என்பதினை பொறுத்துதான் அதன் பயன்பாடு அது நன்மையோ தீமையோ...

அதுக்காக அதன் மூலம் கிடைக்கும் பலன்களை மறகக்கூடாது..இதை பற்றி சுஜாதா அவர்கள் நிறையா சொல்லி இருக்கிறார்..அவர்தான் இதை உருவாக்க வழிநடத்தியவரும் கூட...

இங்கே சொன்னது போல நாம் திருந்த வேண்டும்..அபப்டியில்லாமல் இயந்திரங்களின் மீது குறை சொல்வது அபத்தம்..
என்னதான் சக்தி மிக்க ஒரு இயந்திரம் கண்டு பிடிக்க பட்டாலும் அதன் தன்மையை மனிதனால் மற்ற முடியும் )))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் சொல்லவந்ததையே நண்பர் கொக்கரக்கோ சொல்லி இருக்கிறார். நன்றி!

தருமி said...

http://dharumi.blogspot.com/2010/09/432.html

http://dharumi.blogspot.com/2010/09/433.html

இப்பதிவுகளையும் பாருங்கள்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes