Saturday, February 05, 2011

குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம்....!குடிப்பழக்கம் தவறு......என்பதை கழுகு வலியுறுத்தும் அதே வேளையில் குடிப்பதே தவறு என்று கூறவில்லை. அது பழக்கமாய் போனால் அங்கே விழிப்புணர்வு அழிந்து, பொருளாதாரம் சிதைந்து உடல் நலம் குழைந்து... போகும் என்று எண்ணியதின் விளைவாக இந்த கொடும் பழக்கத்தை நிறுத்த அல்லது கட்டுக்குள் கொண்டுவர ஒரு விழிப்புணர்வு கட்டுரை வேண்டும் என்ற எண்ணத்தை கழுகு குழுமத்தில் கொண்டு வைத்தோம்.....


தம்பி செல்வாவுக்கு எப்போதுமே சமூக பிரஞை அதிகம் உண்டு. கழுகின் எல்லா செயல்பாடுகளிலும் தோளோடு தோள் கொடுக்கும் செல்வா இது பற்றிய எழுதிய கட்டுரையை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.....தற்போதைய சூழ்நிலைல தமிழ்நாட்டுல இருக்குற குடும்பங்களின் தனிப்பட்ட பொருளாதார நிலைய சீரழிக்கிற விசயமா குடிப்பழக்கம் இருக்குதுன்னு சொல்லலாம். மது நாட்டுக்கு , வீட்டுக்கு , உயிருக்கு கேடு அப்படின்னு சொன்னாலும் குடிப்பழக்கத்துக்கு அதிகமாயிட்டேதான் போறாங்க. அவுங்க கஷ்டத்த மறப்பதற்கு குடிக்கிறேன்னு சொல்லிட்டு மத்தவங்களோட கஷ்டத்த அதிகப்படுத்திடறாங்க.
 குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனவங்க அதிலிருந்து மீண்டு வர்றது ரொம்ப சிரமம் அப்படின்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்ல. அதே சமயம் சமுதாய மதிப்பும் குறைஞ்சு பொருளாதார நிலையிலும் தாழ்ந்து போயிடறாங்க. சரி இது எல்லோர்க்கும் தெரிஞ்ச விசயம்தானே , இதை ஏன் இங்க சொல்லுறேன்னு பாக்குறீங்களா? காரணம் இருக்கு . விழிப்புணர்வு அப்படின்னு சொல்லிட்டு உங்களுக்கு தெரிஞ்ச அல்லது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விசயத்த சொல்ல வரலை.
 குடிப்பழக்கத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கலாம். ஆனா உங்க நண்பர்களோ இல்ல பக்கத்து வீட்டுக்காருக்கோ இந்தப் பழக்கம் இருக்கலாம். குடிப்பழக்கத்த தப்பு சரி அப்படின்னு சொல்ல வரல. அது உங்க விருப்பம். ஆனா அந்த விசயத்தை பற்றிப் பெருமையா பேசாதீங்க அப்படின்னுதான் நான் சொல்லவரேன். ஏன் பெருமையா பேச வேண்டாம் , அது என்ன பெருமையா பேசுறதுன்னு கேக்குறீங்களா ?
இப்பவெல்லாம் நொடிக்கு நூறு விசேஷங்கள் வருது , அப்பவெல்லாம் அடிக்கடி இந்த வசனத்தைக் கேட்டிருப்போம் " மச்சி சரக்கடிக்கலாம ? இது பத்தாதுன்னு LKG பசங்க தண்ணி அடிக்கிறாங்க அப்படின்னு SMS வேற அனுப்புறாங்க. அதவிட இப்ப படங்களிலும் இத தான் சொல்லுறாங்க .. தண்ணி அடிக்கலைனா அவன மனுசனே இல்லை அப்படிங்கிற அளவுக்கு இருக்கு திரைப்பட வசனங்கள். ஆனா இந்தமாதிரி உரையாடல்களை சின்னப்பசங்க முன்னாடி பேசாதீங்க. அதுதான் நான் சொல்ல வரேன். தண்ணி அடிச்சாதான் சந்தோசம் . அது ரொம்ப அவசியம் அப்படிங்கிற மாதிரி பேசவேண்டாம். 
14 , 15 வயசு இருக்குற பசங்களால எது சரி , எது தப்பு அப்படின்னு சரியா தெரிஞ்சிக்க முடியாது . அந்தப் பையன் கண்டிப்பா அவுனுக்குத் தெரிஞ்சவங்களத்தான் தனக்கு ரோல் மாடலா எடுத்துப் பழகுவான். அப்படி இருக்கும்போது உங்கமேல ஒரு மரியாதை இருக்கும். நீங்க தண்ணி அடிக்கிரதயோ , இல்ல சிகரெட் , பான்பராக் , பான்மசாலா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதையோ இல்ல அது பற்றி நீங்க பெருமையா பேசுரதையோ பார்த்தா கண்டிப்பா அவனுக்கு இத பயன்படுத்தணும் அப்படின்னுதான் தோணும். அதாவது இவ்ளோ பெரிய வேலைல ( IT, DOCTOR , ENGINEER இன்ன பிற வேலைகளில் இருப்பவர்கள் ) இருக்குரவரே இத பண்ணும்போது கண்டிப்பா தப்பு கிடையாது அப்படின்னு ஒரு எண்ணம் அவனுக்குள்ள வந்திடும்.
வேலைக்குப் போறவங்களுக்கு உடல் வலி அதனால தண்ணி அடிக்கிறேன்னு சொல்லுறாங்க. ஆனா காலேஜ் போறவங்களுக்கு என்ன வலி அப்படின்னு தெரியல. பாஸ் ஆனா பார்ட்டி பெயில் ஆனா பார்டி .. அதுல கண்டிப்பா எதாவது போதைப் பொருள். நான் இத தப்பு அப்படின்னு சொல்லுறதைக் காட்டிலும் நாமதான் அவுங்களுக்கு இந்தப்பாதைய காட்டிட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லவரேன் .. ஒரு பெரிய கம்பனில வேலைபாக்குறவர் வர்றார், அவர் என்னவெல்லாம் செய்யுறாரோ அதெல்லாம் செய்யணும்னு நினைக்கிறது அந்த பசங்களோட எண்ணம். அத குறை சொல்ல முடியாது . ஆனா அவுங்க முன்னாடி எத செய்யனும் எத செய்யக்கூடாது அப்படின்னு நாமதான் முடிவு பண்ணனும் ..
நம்ம ஊர்ல பாதி குடிகாரங்க சந்தர்ப்பம் அமைந்தா மட்டுமே குடிக்கிரவங்கலாதான் இருக்காங்க. எப்படின்னு சொன்னா பக்கத்துல கடை இருந்தா போய் குடிப்பாங்க , தூரத்துல இருந்தா வேண்டாம் அப்படின்னு விட்டுடரவங்கதான். ஆனா பாதிபேர் எங்க இருந்தாலும் போய் குடிப்பாங்க. இதுல முதல் பாதிபேரோட நன்மைக்காகத் தான் அரசாங்கமே பல இடங்களில் கடைய திற்நது சேவை பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் சொல்ல வர்றது இதுதான் சின்னப்பசங்களோட நல்ல குணங்களுக்கு நீங்க காரணமா முன்னுதரனமா இருங்க கேட்ட குணங்களுக்கு வேண்டாம். அந்தப் பையன் உங்களுக்குத் தெரியுமோ இல்ல தெரியாதோ அவுங்க முன்னாடி சில வார்த்தைகளை அதாவது குடிப்பழக்கம் ரொம்ப முக்கியம் அப்படிங்கிறமாதிரி பேசுவதை தவிருங்க. முடிஞ்ச அளவு பண்ணுங்க ..   கழுகிற்காக
செல்வா  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

17 comments:

எஸ்.கே said...

//சின்னப்பசங்களோட நல்ல குணங்களுக்கு நீங்க காரணமா முன்னுதரனமா இருங்க கேட்ட குணங்களுக்கு வேண்டாம்//

உண்மை. பெரியவர்களின் தவறான செயல்களை பார்த்து கற்றுக் கொள்ளும் சிறியவர்கள் இங்கே அதிகம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குடி குடியை கெடுக்கும்

Madhavan Srinivasagopalan said...

// குடி குடியை கெடுக்கும் //

குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் !!

@ Ramesh -- என்னப்பா. எதையுமே முழுசா செய்ய மாட்டியா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குடிப்பழக்கம் உடலுக்கும் மனதுக்கும் தீங்கானதே! மரபணு வழியாக சிலருக்கு மட்டும் குடிப்பழக்கத்திற்கு வெகு சுலபமாக ஆட்படும் தன்மை இருப்பது ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. எது எப்படி இருப்பினும் மது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே.
அரசு இப்போதைக்கு 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பதைத் தடை செய்து கண்டிப்பாக அமல்படுத்தலாம்!

இம்சைஅரசன் பாபு.. said...

குஜராத் மாதிரி தமிழ்நாட்டிலேயும் பூரண மது விலக்கு வந்தால் நல்ல இருக்கும் ..

சேலம் தேவா said...

நம் தமிழ்நாட்டில் எந்த அரசு வந்தாலும் மதுவிலக்கை மட்டும் கொண்டு வரவே மாட்டார்கள்.ஏனெனில்,அரசின் பெரும்பகுதி வருவாய் மதுவை நம்பி உள்ளது வேதனை.பல தாய்மார்கள் படும் வேதனை சொல்லி மாளாது.காந்தி பிறந்த தேசமான குஜராத்தை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.

MANO நாஞ்சில் மனோ said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...........
இது நம்ம செல்வா எழுதியதா சூப்பரா இருக்கே...!!!
அசத்து மக்கா அசத்து....

MANO நாஞ்சில் மனோ said...

//குஜராத் மாதிரி தமிழ்நாட்டிலேயும் பூரண மது விலக்கு வந்தால் நல்ல இருக்கும் //

தலைகீழா நின்னாலும் தமிழ் நாட்டுல அது நடக்காது மக்கா.....

MANO நாஞ்சில் மனோ said...

//அரசு இப்போதைக்கு 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மது விற்பதைத் தடை செய்து கண்டிப்பாக அமல்படுத்தலாம்!//

இருவது வயசுகாரன் ஒயின்ஷாப்புல போயி வாங்கிட்டு வந்து இவனுகளுக்கு குடுக்க போறான்.....
எப்பிடி தடுக்க முடியும்.....

வைகை said...

நம் நாட்டில்தான் யார் வேண்டுமானாலும் கடையில் சென்று மது வாங்கலாம்......கட்டுப்பாடு இல்லாத விற்பனை....குடும்பத்தை நினைத்தால் யாரும் அளவுக்கு மீறி குடிக்க மாட்டார்கள்.....

தினேஷ்குமார் said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை செல்வா வாழ்த்துக்கள் .....

நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பாவின் நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு வந்திருந்தார் அப்பாவும் அவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் பேச்சுவாக்கில் நான் அங்கு விளையாடிக்கொண்டிருந்தேன் தம்பி பிளேன் சிகரட் வாங்கிட்டு வாப்பான்னு சொன்னாங்க நானும் வாங்கிட்டு வந்து கொடுத்தேன் அதற்கப்புறம் நடந்ததுதான் அவர்போன பிறகு அம்மா அப்பா இருவருக்கும் சண்டை எப்படி சின்ன பையன்ன விட்டு வாங்கிட்டு வருவீங்கன்னு சொல்லி சண்டை அது முதல் இதுவரை எங்க அப்பா சிகரட் குடிப்பார் ஆனால் எங்காவது மறைந்து நின்று குடித்துவிட்டுதான் வீட்டுக்கு வருவார் இதுவரை நாங்களும் பார்த்ததில்லை அவர் சிகரட் குடிப்பதை........

சின்ன பசங்ககிட்ட சிலர் தம்பி சிகரட் வாங்கிட்டு வான்னு அனுப்புவாங்க அந்த மாதிரி வீட்டுக்கு வந்த விருந்தாலியோ யாரோ சொன்னா கண்டிப்பா கண்டியுங்கள் மங்கையர்களே அன்னையர்களே

பரதேசித் தமிழன் said...

இந்த இரவுதான் போகுதே போகுதே
பொய்யான வாழ்விலே..... மெய்யான இன்பம் இந்த போதையாலே.....

Anonymous said...

குஜராத்தில் தான் அதிகமான கள்ளச்சாராயமும், அதன் நிமித்தமான சாவுகளும் நிகழ்கின்றன. அதற்காக மதுவிலக்கு கொள்கை தவறானது என்று சொல்ல வரவில்லை. பட்டுக்கோட்டையார் சொன்னது போல் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல் மது பழக்கத்திற்கும் அதே விதி தான் என்று சொல்கிறேன்.

அன்புடன் நான் said...

சமூதாய அக்கறையுள்ளப் படைப்பு...
மிக நல்ல சிந்தனை வரவேற்கிறேன்.
பாராட்டுக்கள்.

மாணவன் said...

குடிப்பழக்கத்தபத்தி நல்ல விழிப்புணர்வு சிந்தனையுடன் எழுதியிருக்கீங்க செல்வா

வாழ்த்துக்கள்....

'பரிவை' சே.குமார் said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes