ஊடகங்களின் வளர்ச்சியும் தோற்றமும் பற்றிய கட்டுரைக்கு கழுகின் வாசகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு அளப்பரியது. எப்பொதும் புதிய கட்டுரைகளையும் விழிப்புணர்வு செய்திகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் கழுகின் சிறகடிப்பிற்கு குழும நண்பர்களின் ஆதவரவு இருப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறோம்.
 முந்தய பாகத்தில் உலக அளவில் இதழ்களின் தோற்றம் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். இந்தப் பாகத்தில் இந்தியாவில் இதழ்களின் தோற்றம் மற்றும் அதான் விளைவுகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.
முந்தய இதழியலுக்கு மூலம் பேரரசர் அசோகரின் கல்வெட்டுகள். இந்திய இதழியலின் முன்னோடி அசோகரே. இவரைப் பின்பற்றி இந்திய அரசர்கள் கல்வெட்டுகள் மூலம் செய்திகளைத் தெரிவித்தனர்.
முகமதிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் செய்தித் தொடர்புகளை முறைப்படுத்தினார். செய்தி எழுத்தாளர்கள் என்ற தனிப்பிரிவினர் ஏற்பட்டனர்.இவர்களுக்கு ஔரங்கசீப் மிகவும் சுதந்திரம் அளித்திருந்தார். இவர்களைப் பற்றிய குறிப்புகள் இந்தியாவில் பணியாற்றிய பிரஞ்சு மருத்துவர் பிராங்கோ பெர்னியர் என்பவரால் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஔரங்கசீப் காலத்திலேயே பத்திரிகை இருந்ததாக நம்பப்படுகிறது.அரசாங்க அலுவலர்களின் நியமனம் , மாற்றம் மற்றும் பல செய்திகளை அப்பத்திரிக்கை வெளியிட்டதாகக் கூறுவர்.கி.பி.16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் அச்சு இயந்திரத்தை முதன்முதலாக இந்தியாவிற்குக் கொண்டுவந்தனர்.
இந்தியாவில் தோன்றிய முதல் இதழ் :
கி.பி.1780 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாள் முதல் இந்தியச் செய்தித்தாளை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் கல்கத்தாவில் இருந்து வெளியிட்டார். அதான் பெயர் " பெங்கால் கெசட் " அல்லது " கல்கத்தா பொது விளம்பரத்தாள் " என்பதாகும்.
அகஸ்டஸ் ஹிக்கி இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். ஹிக்கியின் இதழ் 12 * 8 என்ற அளவில் இரு தாள்களைக் கொண்ட ஆங்கில வார இதழாகும்.
1785 இல் ரிச்சர்ட் ஜான்ஸ்டன் கம்பெனியினரால் முதன்முதலில் சென்னையில் " மெட்ராஸ் கூரியர் " என்ற பத்திரிகை வெளிவந்தது.1789 இல் பம்பாயில் " பாம்பே ஹெரால்ட் " என்ற இதழ் தோன்றியது.
முதல் இதழின் உள்ளடக்கம் :
*.இங்கிலாந்து பத்திரிகைகள் வெளியிட்ட சில செய்திகள்.
*.விளம்பரங்கள் .
*.வாசகர் கடிதங்கள்.
*.எள்ளல் நடையில் எழுதப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலர்களின் வாழ்க்கை.
*.ஆசிரியரின் வேண்டுகோள்.
விளைவுகள் :
*.தனிப்பட்டவர்களின் வாழ்க்கைக் குறைபாடுகளையே பெரிதுபடுத்தி எழுதியதால் அந்தச் செய்திகளும் பல வேளைகளில் ஆதாரமற்றவயாகவும் ஒரு சார்புடையதாகவும் இருந்தன.
*.ஆங்கில அரசு அதிகாரிகளின் துணையுடன் நடத்திய முறையற்ற செயல்களை வெளிப்படுத்துவதிலும் கண்டிப்பதிலும் ஹிக்கி ஆர்வம் காட்டினார். எனவே அரசின் சந்தேகப் பார்வையும் அதிகாரிகளின் பகையும் பெருகியது.
*.கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரிகளை வன்மையாகக் கண்டித்து எழுதினார். இந்திய நாட்டின் நிலை பற்றியோ , எதிர்காலம் பற்றியோ எதுவும் எழுதவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டார்.
*.விரசமாக செய்திகளை வெளியிடவும் அவர் தயங்கவில்லை.
( அடுத்த திங்கள் வரும் பதிவில் தமிழ்நாட்டில் தோன்றிய இதழ்கள் பற்றி சுருக்கமாகக் காணலாம். மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் நான் படித்து அறிந்தவையே . பெரும்பாலும் எனது பாடப் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவையே. )

 Monday, March 07, 2011
Monday, March 07, 2011
 கழுகு
கழுகு
 
 Posted in:
 Posted in:   

8 comments:
ரொம்ப நல்லா போகுது தொடர்! தொடருங்கள் செல்வா!
வாழ்த்துக்கள் செல்வா தொடருங்கள்...
இன்னும் எதிர்பார்ப்புடன்...
நிறைய புதுப்புது செய்திகள். மிகவும் உபயோகமான பதிவு. நன்றிகள்.
எனக்கு தெரியாத பல தகவல்கள் இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன்
சௌந்தர், நல்ல தொடர்கள் வந்துக்கிட்டு இருக்கு, ப்ளாக்கில் பதிவுகளை pdf கோப்பாக மாற்றும் வசதி செய்யலாமே?
ரொம்ப நல்லா போகுது... தொடருங்கள்.
நல்லதொரு தொடர்.. பயனுள்ளது.. விக்கிபீடியாவிலும் கூட சேர்க்கலாம்..
Post a Comment