Thursday, November 03, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (3.11.2011)

பஞ்ச் 1:
கொந்தளிச்சு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பாங்கன்னு பாத்தா, மறுபடி மறுபடி கடந்த ஆட்சியில செஞ்ச திட்டங்கள சீர்குலைக்கிறதும் அதுவும் பிரமாண்ட வசதிகளோட கட்டப்பட்ட கட்டிடங்களின் பயன்பாடுகளை மாற்றியமைக்கிறதுன்னு சொல்லிகிட்டு மீண்டும் தனது அல்லி தர்பாரின் கொடியினை நாட்டத் தொடங்கிவிட்டார் தமிழக முதல்வர்.

சாக்கடையில்லாத அளவுக்கு குறைஞ்ச பட்சம் நகரங்களையாவது மாத்தலாம், சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வினை கொண்டு வரலாம், அடிப்படை வாழ்வாதாரங்களையும், வசதிகளையும் மக்களுக்கு கொடுக்கலாம்..இப்படி ஓட்டுபோட்ட மக்களுக்கு, தேவையானத செய்யத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறோம் அப்படிங்கிறத முழுசா மறந்திட்டு தலைமைச் செயலகத்த மாத்துறேன், குழந்தைகள் மருத்துவமனை அமைக்கிறேன்னு சொந்தப்பகையத் தீர்க்கரதா நெனச்சிட்டு சின்னப்புள்ளத்தனமா நடந்துகிட்டா....என்ன அர்த்தம்..அஞ்சு வருசத்துக்கு ரொம்ப தூரம் இருக்குன்ற தைரியமா என்ன?


பஞ்ச் 2:

கோயம்புத்தூருக்கு அத்துவானி வருவாரு, பாலத்துக்கு கீழாப்ல குண்டு வெடிக்காம கிடக்கும். வச்சது யாருன்னு கேட்டா பகுருதீன், பாட்சா, மாலிக்கு இப்படி சொல்லுவாய்ங்க...

காலத்துக்கும் திருந்தாம இந்த காங்கிரசும், பாஜகவும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை குறி வச்சு நடத்துற இந்த தீவிரவாத நாடகங்களை இனியும் மக்கள் நம்பக் கூடாது. ஏன் குண்டை பகுருதீன் தான் வச்சு இருக்கணுமா? காங்கிரசோட களவாணித்தனமான உளவுத்துறை வச்சிருக்க கூடாதா?
என்னங்கய்யா....இது...?பஞ்ச் 3:
  
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் அடுத்த இடத்துல இருக்குறதே பெரிய தகுதியா விஜயகாந்த் சார்? நீங்க ஜெயிச்சதுக்கு மட்டும் இல்ல மேல சொன்ன ரெண்டு கட்சிகளும் இன்னமும் ஜெயிச்சுகிட்டு இருக்கறதுக்கே காரணம் மக்களோட வீக்னெஸ்தானே தவிர உங்க மேல உள்ள பெரிய அபிமானம் இல்லன்னு வெளங்கிக்கோங்க...!

முதல்ல நீங்க எதுக்கு கட்சி ஆரம்பிச்சீங்க? என்ன செய்யப் போறீங்க? உங்க கொள்கை என்னனு மக்களுக்கு வெளக்கிச் சொல்லுங்க...அப்புறம் வந்து இடம் பிடிக்கலாம்...! ஓட்டுப் போட வேற ஆளு இல்லாம ஓட்டுகளை  வாங்கிகிட்ட ஆளுக எல்லாம் இந்த நாட்ல மொதலமைச்சர் ஆகும் போது நீங்க எதிர்கட்சி தலைவரானதுல ஒரு மண்ணாங்கட்டி ஆச்சர்யமும் இல்லன்றதுதான உண்மை!பஞ்ச் 4:
  
சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் தி.நகர்ல இருக்குற கடைக்காரங்க எல்லாம் பண்ணிருக்க தவறு மன்னிக்கவே முடியாது மக்களே...! இவுங்க எல்லாம் மோடி மஸ்தான் மாதிரி இத்தனை பெரிய கட்டிடங்களை பொது வெளியில கட்டிப்புட்டு அதிகாரிங்க கண்ணுல படாத மாதிரி இம்புட்டு நாளு மறைச்சு வச்சு இருக்காங்க மக்களே...ஆமாம்....

இப்ப அம்மா ஆட்சிக்கு வந்து பூசாரிய வச்சு கோடாங்கி அடிச்சு பாத்து அம்புட்டையும் கண்டு புடிச்சு, எல்லா கட்டிடத்துக்கும் சீல் வச்சி.. அதிகாரிகளையும் கைது பண்ணி இருக்காங்க!!! இந்த மாதிரி கண்கட்டு வித்தைகளை எல்லாம் அடிச்சு ஒதைச்சு கண்டு பிடிச்சு தண்டிச்சு இருக்குற கவர்மெண்டை பாராட்டியே ஆகணும்....!

ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன் கடந்த ஒரு அஞ்சு வருசமா ஒரு போலிஸ்காரன், அரசியல்வாதி, நீதிபதி ஒருத்தர் கூடவா ரெங்கநாதன் தெரு பக்கமே போகல? இல்ல ரெங்கநாதன் தெரு என்ன காஷ்மீர் பார்டர்ல இருக்கா?பஞ்ச் 5: 
  
உலகில் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியல்னு சொல்லிட்டு ஒரு 70 பேர போர்ப்ஸ் அப்டீன்ற ஒரு மேகசீன் வெளியிட்டு இருக்கு அதுல சோனியாகாந்தி அம்மா, அப்புறம் மன்மோகன் சிங் ஐயா பேரு எல்லாம் வந்து இருக்கு. சோனியா அம்மா அவுட் ஆஃப் 70 பேர்ல 11 வது இடத்துல இருக்காங்களாம்...! முதலிடம் ஒபாமாவுக்கும் (ஒசாமா இல்ல ஓய்....ஒபாமா!!!!) இரண்டாமிடம் விளாடிமிர் புதினுக்கும் கொடுத்து இருக்காங்களாம்..!

ஆக்சுவலா இது தப்புன்னு யாருக்கும் தெரியலை. சட்டப்படி, தர்மப்படி, நியாயப்படி பாத்தா சோனியா அம்மாவுக்குத்தான் முதலிடம் கொடுத்து இருக்கணும். ஆமாங்க இலங்கையின் வடபகுதியில் தமிழர்கள் அழிக்கப்பட்டதையும், சேனல் ஃபோர்ன்ற சேனல் வெளியிட்டுள்ள வீடியோவையும் அந்த பத்திரிக்கைகாரங்க சரியா பாக்கல அப்டி பாத்து இருந்தா 

உலகின் சக்தி வாய்ந்தவர்னு முதலிடத்தை சோனியா அம்மாவுக்கும், அடுத்த இடத்தை அரக்கன் ராஜபக்சேக்கும் கொடுத்து இருப்பாங்க...!கொஞ்ச நஞ்சப் பேரையா கொன்னு இருக்காங்க....அவுங்கள போய் 11வது இடத்துக்கு தள்ளியது வன்மையாக கண்டிக்கத்தக்கது தானேங்க?


கழுகிற்காக
 தேவா (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

6 comments:

நாய் நக்ஸ் said...

Nach....!!!!!

Surya Prakash said...

வேற வழியே இல்ல 5 வருசத்துக்கு இந்த கன்றாவியெல்லாம் நாம் பாத்து தான் ஆகணும் # யார் கண்டா 5 வருசத்துக்கு அப்றம் ஒரு வேல தி.மு.க வே தேவலாம்னு யோசிக்க தோணலாம் !!!!!!!

SURYAJEEVA said...

அந்த நாலாவது பஞ்ச், அம்மா ஒன்னும் நடவடிக்கை எடுக்கல, உயர் நீதிமன்றம் காட்டு காட்டுன்னு காட்டியதால் எடுத்த நடவடிக்கை, அதுவும் டிராபிக் ராமசாமி என்ற தனி மனுஷன் அடிச்ச ஆப்பு... ஆமா அந்த தொழிலாளிங்களுக்கு சம்பளம் கிடைச்சிடுச்சா ?

பாலா said...

//அம்மா

ஓட்டு போட்டாச்சுல்ல, இனி அஞ்சு வருசத்துக்கு எங்க இன்னிங்ஸ்தான். ஒண்ணியும் பண்ண முடியாது.

//அத்வானி

ஏன் பாஜகவே வைத்திருக்க கூடாது?

//விஜயகாந்த்
இப்படி கேள்வி கேட்ட எப்படி? அதுக்கு பதில் தெரியாமதானே சுத்திக்கிட்டிருக்கேன்

//தி.நகர்

money...money....money...

//சோனியா

மக்கள் டிவி பார்த்தீர்களா? ஒரு நிகழ்ச்சியில் பொது மக்களிடம் பிரதமர் யார்னு கேட்டா எல்லோருமே சோனியான்னு தான் சொன்னாங்க

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எல்லோரும் படிக்க வேண்டும்.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

Wow! Super post!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes