Tuesday, February 15, 2011

தேர்தல் 2011..ஒரு அலசல் !


நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பகின்று சென்றவனும் ஒரு தமிழ்ப் புலவன், தவறான விவாதத்தை முன்னெடுத்து செல்வபவன் இறைவனெனினும் ஒரு போதும் ஏற்கோம்.....! இது யாம் கற்ற தமிழ் கொடுத்த திமிர்....இது எமது மூதாதையர் விதைத்து சென்ற வித்து....! கழுகின் பார்வையும் இதனை ஒத்தது என்று யாம் விவரிக்கப் போவதில்லை....! வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பற்றிய பதிவின் தொடர்ச்சியாக எமது விழிப்புணர்வு போர் இதோ தொடர்கிறது..






கழுகின்  வாசகர்களே....தேர்தல் வருது  உஷார்....பதிவில் பொதுவாக தற்போது உள்ள கூட்டணி மற்றும் அரசியல் நிலவரங்களை பார்த்தோம்! அதன் முடிவில் சொன்னதுபோல் இந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் நமது கட்சிகளின் செயல்பாட்டை நடுநிலையோடு கழுகு பார்வையில் பார்ப்போம் என்று கூறியிருந்தோம்...அதனுடைய தொடர்ச்சிதான் இது! இந்த பதிவில்  ஆளும் கட்சியினர் சாதனைகளாக சொல்வன பற்றியும், அதில் மக்களுக்கு உள்ள சில கேள்விகள் பற்றியும் பார்ப்போம்...இதில் சொல்லப்படும் கருத்துக்களை மட்டும் வைத்து கழுகு ஆளும்கட்சிக்கு எதிரானது மட்டுமே என்று எடை போட்டுவிட வேண்டாம்! அடுத்தடுத்த பதிவுகளில் மற்ற கட்சிகளைப்பற்றியும் பார்க்கப்படும்!




கடந்த தேர்தலில் அரசியலை நன்கு கவனித்தவர்களுக்கு தெரியும்....திமுக ஆட்சிக்கு வந்தது என்பது கடைசிநேர தமிழ் சினிமா கிளைமேக்ஸ் போலதான் என்று! அவர்களின் முக்கியமான பிரமாஸ்திரமான இலவச தொலைக்காட்சியும் ஒரு ரூபாய் அரிசி திட்டமும் அவர்களை ஆட்சிக்கட்டிலில் உட்க்கார வைத்தது! அதை அவர்கள் உணர்ந்ததால்தான் என்னவோ அதை உடனே செயல் படுத்தவும் தொடங்கினர்! ஆனால் அந்த திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது எவ்வாறு மக்களிடம் சென்றடைகிறது என்று பார்த்தால் இந்த ஐந்துவருட ஆட்சியில் இவர்கள் அரைகினறுகூடதாண்டவில்லை என்பதே உண்மை! முதலாவதாக அரிசி கடத்தலை இன்னும் முழுவதுமாக தடுக்கமுடியவில்லை! இன்னும் சொல்லப்போனால் எத்தனை குடும்பங்களுக்கு இது உண்மைலே தேவைப்படுகிறது என்ற முறையான திட்டமிடல் இல்லை! இன்னும் இதை வாங்குபவர்களும் பயன்படுத்துவதைவிட வெளியில் ஐந்து ரூபாய் அதிகம் வைத்து விற்ப்பதில்தான் ஆர்வத்துடன் உள்ளனர். ஒரு நல்ல திட்டத்தை முறையாக செயல்படுத்தாதென் விளைவு இது!




அடுத்து இவர்கள் தேர்தலின் போது அறிவித்த ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் திட்டம்....ஒரு திட்டத்தை அறிவிக்கும்போதே அதன் சாத்தியங்களை முழுவதும் ஆராய்ந்து விட்டு அறிவிப்பதுதான் அழகு! அதை விட்டு சாத்தியமில்லை என்று தெரிந்தே அறிவித்து வோட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு.....இது கடந்த ஆட்சியின் அறிக்கையை வைத்து திட்டமிட்டோம் என்று சொல்வது ஒரு அரசாங்கத்தை நடத்தும் கட்சிக்கு அழகல்ல! அடுத்து இலவச தொலைக்காட்சி.. இது தமிழ் நாட்டில் இருப்பதைவிட கேரளாவில்தான் அதிகம் இருக்கின்றது...இதுவும் முறையான திட்டமிடல் மற்றும்  கணக்கெடுப்பு இல்லாமல் அள்ளித்தெளித்த கோலத்தில் வழங்கப்படுகிறது! தேர்தலில் வோட்டு வாங்க கட்சி பணத்தை செலவழிக்காமல் மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக போட்ட ஒரே கட்சி திமுக வாகத்தான் இருக்கும்! இவர்கள் குடும்ப  பிரச்சனையில் மக்களின் வரிப்பணம் ரூபாய்  450 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிளின் இன்றைய நிலை என்ன இவர்கள்தான் விளக்கவேண்டும்! அதற்காக வாங்கப்பட்ட உபகரணங்களின் இன்றைய மதிப்பு இன்னும் பல கோடிகளில்! முதல்வரிடம் கேட்டால் அடக்கமாக செயல்படுகிறது என்கிறார்! தொட்டதுக்கெல்லாம் அறிக்கை விடும் அவர் இதில் அரசின் முதலீடு எவ்வளவு?, எத்தனை பயனாளர்கள் இதுவரை? இதுவரை அரசுக்கு கிடைத்த வருமானம் என்ன? இதை அறிக்கைகளில் தெரிவிப்பாரா?




புதிய தலைமை செயலகம் கட்டியதை சாதனையாக சொல்லுகிறார்கள்...வரவேற்ப்போம்....ஆனால் கட்டுமானப்பணி முழுவதும் முடியாமலே தற்காலிக மேற்கூரைக்காக ரூபாய் 10 கோடி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து அவசரமாக திறப்புவிழா நடத்தியதன் அவசியத்தை விளக்கமுடியுமா? இலவச எரிவாயு அடுப்பு இணைப்பு கொடுத்தார்கள்....நல்ல விஷயம்...ஆனால் கூடுதல் கேஸ் சிலிண்டருக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் இப்பொழுது தட்டுப்பாடு நிலவுகிறது! அடுத்து கலைஞர் வீட்டு வசதி திட்டம்......நமது வரிப்பணத்தில் செயல்படும் திட்டத்திற்கு ஏன் இவரது பெயர் என்று பிறகு கேட்ப்போம்! இந்த திட்டம் அறிவித்த நாளில் இருந்து கட்டுமானப்பொருட்களின் விலை விண்ணை தொட்டு விட்டது! முதல்வரிடம் கேட்டால் அவர்களது திட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியரை வைத்து குறைவாக வாங்குவார்களாம்! சொந்த பணத்தில் வீடு கட்டும் நடுத்தர மக்களின் கதி?! ஆலைகளை கண்டித்து விலையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய முதல்வர், அவர்களிடமே வாங்கி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் மானிய விலையில் கிடைக்கும் என்கிறார்...இந்த மானியம் மட்டும் என்ன இவரது கட்சியா கொடுக்கின்றது? அது கூட மக்கள் பணம்தான்! இது போன்ற திட்டங்கள் ஓர் இரவில் முடிவு செய்ய இது ஒன்றும் அண்ணாவின் நாடகம் அல்ல! மக்களின் வாழ்க்கை பிரச்சனை.....சரியான திட்டமிடல் இல்லையென்றால் இதுபோலதான் மக்கள் அவதிப்பட நேரும்!




இவர்கள் இன்னும் ஒரு பெரிய சாதனையாக சொல்லுவது கலைஞர் காப்பீட்டு திட்டம்! பேரு மட்டும்தான் அவரு பேரு இந்த திட்டத்துல அவருக்கே போட்டாலும் பிரீமியம் என்னவோ மக்களின் வரிப்பணம்தான்! இதற்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 517.307 கோடி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 750 கோடி .! இந்த திட்டத்தால் அரசாங்கமே மறைமுகமாக தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்கிறது! ஒருவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாத சூழ்நிலையில் தனியாருக்கு செல்கிறான்! அரசாங்க மருத்துவமனைகளிலே தரமான சிகிச்சை பெறமுடியும் என்றால் ஏன் அவன் தனியாரை நாட வேண்டும்? ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான மருத்துவமனை கட்ட உத்தேசமாக சுமார் 100 கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்! இந்த இரண்டு வருடங்களில் இவர்கள் கட்டிய பிரீமியத்தை வைத்து பன்னிரண்டு மாவட்டங்களில் நல்ல தரமான மருத்துவ மனைகளை கட்டியிருக்கலாம்! இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து மாவட்டங்களிலும் இது நடந்திருக்கும்! ஆனால் இப்பொழுது மக்கள் சிகிச்சை பெற்றாலும் இல்லையென்றாலும் அவர்களுக்கு கட்டும் பணம் மட்டும் தொடர்ந்து கட்டப்படும்! இது உங்களுடைய சொல்லப்போனால் நம்முடைய பணம்!




கடந்த வருடம் இவர்களால் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டை சாதனையாக சொல்கிறார்கள்! தமிழுக்கென்று ஒரு விழா நடைபெற்றால் அது சந்தோசமே..ஆனால் இது நம் முதல்வருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அரசு செலவில் நடந்த இன்னுமொரு பாராட்டுவிழா அவ்வளவுதான்! எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இருக்கை இல்லாமல் தவித்தபொழுது முதல் இரண்டு வரிசைகள் முதல்வரின் குடும்பம் மட்டுமே! சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை ஆறில் கனிமொழியைப்பற்றி நாலு  கலைஞரைப்பற்றி ஒன்று! தமிழ் வாழ்க! நமது வரிப்பணம் சுமார் ரூபாய் 300 கோடியில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டால் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்தது என்ன என்பதை தெரிந்தவர்கள் விளக்கவும்!




இவர்கள் ஆட்சியில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளாக சொல்லவேண்டும் என்றால் உட்கட்டமைப்பு வசதியை பெருக்கியது! அதுகூட இவர்கள் சென்னையை மட்டுமே கவனத்தில் கொள்வதாக குறையுண்டு! தென்மாவட்டங்களின் நிலைமை இன்றும் மாறவில்லை! புதிது புதிதாக தொழிற்சாலைகளை கொண்டுவந்தது! ஆனால் தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் உள்ள கவனம் அதற்கு தேவையான மின் உற்பத்தியை பெருக்குவதில் காட்டவில்லை! ஒப்பந்தப்படி பெரிய தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக பல சிறு தொழில் செய்பவர்கள் மடியில் கைவைத்துவிட்டது இந்த அரசு! ஆட்சிக்கு வந்த புதிதில் கடந்த ஆட்சியாளர்கள் திட்டமிடவில்லை என்று குறை சொன்னார்கள்! ஆனால் ஐந்து வருடம் ஆகியும் இன்னும் அதே காரணங்களை கூறுவதில் நியாயமில்லை! மின்வெட்டின் பாதிப்பு இன்றும் தொடர்வது வேதனை!




தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்னதான் கட்டுக்குள் இருப்பதாக கூறினாலும்...ஒரு சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது! இதற்கு பல உதாரணங்கள் கூற முடியும்! சமீபத்தில் நடைபெற்ற குழந்தைகள் கடத்தல் மற்றும் கொலை! அமைச்சர் முன்பாகவே காவலரை கொன்ற பரிதாபம் அதை அமைச்சரும் வேடிக்கை பார்த்த வெட்க்கசெயல்! பேருந்து ஓட்டுனருடன் முறைத்துக்கொண்டு வார்ட் கவுன்சிலரின் மகன்கூட சென்னையின் சட்ட ஒழுங்கை கையில் எடுத்தது! அதை காவலர்கள் கைகட்டி(கட்டப்பட்டு) வேடிக்கை பார்த்தது! சமீபத்தில் நடைபெற்ற அரசியல் கொலைகள்! தினகரன் அலுவலகம் எரித்து மூன்றுபேர் கொலை சம்பவம்! இப்படி அடுக்கிகொண்டே போகலாம்! இதற்க்கெல்லாம் நமது முதல்வர் கடந்த ஆட்சியுடன் ஒப்பீடு தருகிறாரே தவிர இன்றுவரை தீர்வுகள் தரவில்லை! 




நடப்பு நிதியாண்டில் நமது(தமிழ் நாட்டின் ) கடன் தோராயமாக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது! இதைப்பற்றி சட்டசபையில் நிதி அமைச்சரை கேள்வி  கேட்டால் அவர் இதை நினைத்து பெருமைப்படுகிறார்! மக்களின் வாங்கும் சக்தி போல் இப்பொழுது அரசாங்கத்தின் வாங்கும் சக்தியும் அதிகரித்துவிட்டதாம்! அரசுக்கு வரும் வருவாய்கள் அனைத்தும் இலவசங்களுக்கு திருப்பிவிடப்படுகின்றன! மக்களின் அடிப்படை தேவைகளுக்கும் கட்டமைப்பு வசதிகளுக்கும் கடன் வாங்கி செயல்படுத்தப்படுகிறது! ஏன் என்று அரசைக்கேட்டால் அமெரிக்காவின் கடனோடு ஒப்பிடுகிறார்கள்! என்ன செய்வது இவர்கள் மக்களுக்கு செய்த வசதிகள் அனைத்தும் அமெரிக்க தரத்தில் இருக்கின்றது! 


இவ்வளவு கடனோடும் மக்களை கவர இவர்கள் அறிவித்த சில நல்ல திட்டங்கள் நிதியில்லாமல் அறிவிப்போடு இருக்கின்றது! தேர்தல் வருவதால் இனி யாரும் இதை கண்டுகொள்ளப்போவதில்லை! ஆட்சி மாற்றம் வந்தாலும் அவர்களும் இதை கவனத்தில் கொள்ளப்போவதில்லை!



அவற்றில் சில முக்கியமான திட்டங்களைப்பார்ப்போம்!



1. தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை



2. மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.



3. வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.



4.மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.



இவையெல்லாம் குறை சொல்லுவதற்காக மட்டும் கேட்க்கப்படும் கேள்விகள் அல்ல.....இதற்க்கெல்லாம் பதில் யாரிடமாவது இருந்தால்.....வாதத்திற்காக இல்லாமல் முறையான பதிலாக இருந்தால் சொல்லுங்கள் அந்த பதில்களும்  இங்கு சொல்லப்படும்! கழுகின் பார்வை கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்டது! இன்னும் உயரப்பறக்கும்! உங்களுக்காக! 


தகவல்கள் உதவி - தினமலர், தினமணி


கழுகுகுழுமத்தில் இணைய....



கழுகிற்காக
வைகை  


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

21 comments:

எஸ்.கே said...

பதில் பதில்...??? தேவைகளும் பற்றாக்குறைகளுடனே வாழ்க்கை செல்கிறது சாதாரண குடிமக்களுக்கு!

இம்சைஅரசன் பாபு.. said...

பதில் ...!பதில் ..!சர்ச்சையான கேள்விகள் ..சங்கடமான கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் கூறும் பதிலே என்னோட பதில் ..!

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் ...ஹி ..ஹி ...

செல்வா said...

ரொம்ப தெளிவான கட்டுரை அண்ணா. என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சியின் குறைகளாக நான் கருதுவது :

1. இலவசத் திட்டங்கள் :
a ) வண்ணத்தொலைக்காட்சி - இது இல்லாதவங்களுக்கு மட்டும் கொடுக்கப்படலை , குடும்ப அட்டை இருக்குற எல்லோருக்குமே கொடுத்தது. அதுலும் ஒரு வீட்டுல மூணு டிவி நாலு டிவி வரைக்கும் கொடுத்திருக்காங்க.

b) நீங்க சொன்னது மாதிரி இலவச நிலம் . பெரும்பாலும் அது யாருக்கும் தரப்படலை.

c ) அப்புறம் ஒரு ரூபாய் அரிசி. இதுல இவுங்கள மட்டும் குறை சொல்லுறத விட அந்த அரிசிய யார் கண்டுபிடிக்கிறாங்க அப்படின்னே தெரியல. அது எப்படி அவுங்களுக்கு மட்டும் அந்த அரிசில கொஞ்சம் ஒரு மாதிரி வாசனை வருதுன்னு தெரியல. அத வாங்கி விக்குறது மக்களை சொல்லணும் .. அவுங்க சொல்லுறது சரியா படலை ..

சில நல்ல விசயங்களும் நடந்திருக்கு . அதே சமயம் மின்சாரப் பற்றாக்குறை ஒரு பேரும் பிரச்சினை .. அத சரி பண்ணனும் .. வெறும் இலவசங்களே பயன்படாது ..

ஷர்புதீன் said...

i dont have the concept of politics ( in india only)

தனி காட்டு ராஜா said...

Good awareness Post..

சேலம் தேவா said...

எளிமையான கேள்விகளுடன் அருமையான அலசல் கட்டுரை..!!வாழ்த்துகள் வைகை..!!

'பரிவை' சே.குமார் said...

Nalla Alasal... Nice Post.

arasan said...

அண்ணே சரியான நேரத்தில் மிகச்சரியான நல்ல விரிவான அலசல் ...
நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது

arasan said...

சில கேள்விகள் நல்ல முறையில் கேட்டு இருக்கின்றீர்...
இந்த இலவச வண்ண தொலைக்காட்சி யார்கேட்டது ...
இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு வேணும் ...
காப்பீடு திட்டம் யார் பயனடைய....
சரி மக்கள் பயனடையதான் என்றால்
அதற்க்கு மருத்துவமனைகளும் , மருந்துகளும் , கருவிகளும் வங்கி
அரசு மருத்துவமனையை சீர் படுத்த வேண்டும் என்ற தங்களின் கேள்வி
மிகச்சரி .. இதை எதிர்த்து யாரும் மறுப்பு கூற இயலாது ...
அனைத்து திட்டங்களுக்கும் தற்புகழ்ச்சி எதற்கு ...
அண்ணா வழி வந்த தம்பி பெயரை சூட்டுவதா இல்லை
அண்ணாவின் பெயரை சூட்டுவதா நாகரிகம் ....

எதற்கு இந்த வீண் விளம்பரம் ...

arasan said...

முதலில் உள்ள படமே மிகச்சரியான முறையில்
கருத்தை உணர்த்தி விடுகின்றன ....

arasan said...

நிச்சயம் அண்ணே ஒரு மாற்றம் வேண்டும் ..
ஆட்சியில் இல்லை கட்சிகளுக்கிடையில் ..
புது இரத்தம் ஏற்ற வேண்டும் ...

arasan said...

மிகவும் ரசித்தேன் ...
சரியான விரிவான அலசல் ...
இன்னும் கழுகாரின் பார்வை உயரட்டும் ....

ராஜ நடராஜன் said...

Superb and well balanced analysis.
We should focus on constructive writtings of this sort.

Keep going!

MANO நாஞ்சில் மனோ said...

கழுகு உயரே உயரே படபடத்து பட்டொளி விட்டு சுடர் விட்டு பறக்குது பாஸ்...

மணிப்பக்கம் said...

http://tamiltv2u.com/news/politics/tamil-nadu-politics-in-thiruvilaiyadal-style/#

கவி அழகன் said...

poddu thakkidinka

Unknown said...

அரசியல் ஆய்வு நல்ல விசயம்,.. பாராட்டுக்கள்.. தொடர்ந்து தேர்தல்வரைக்கும் இந்த மாதிரி கட்டுரைகள் மிக மிக அவசியமானவை..

வெளங்காதவன்™ said...

உண்மை...........
சுடுகிறது...........

Chitra said...

மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.


......உண்மை சுடும்.... இதில் வயிறு எரிகிறது! :-(

சசிகுமார் said...

மிகத் தெளிவான விளக்கங்கள் கழுகு சார், ஆனால் பண பலத்தை மட்டுமே நம்பி இருக்கும் அரசியல் கட்சிகள் நம் ஜனங்களை விலை கொடுத்து வாங்கு கின்றனர் நாமும் அடிமாடுகளாகக்க படுகிறோம். தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை கொடுக்கவும்.

இராஜராஜேஸ்வரி said...

NO COMMENTS!!!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes