Wednesday, March 23, 2011

சுய தொழில் தொடங்குவோம் வாருங்கள்....!ஒரு வழிகாட்டும் தொடர்..IV

சென்ற பாகத்தைப் படித்துக் கொண்டு வந்தவர்களுக்கு, அது முடியும் தருவாயில், கோடிக்கணகில் பணம் வைத்திருப்பவர்கள் தான் இந்த டிரேடிங்வகையில் தொழில்முனைவோராக முடியுமா? என்ற ஐயம் வந்திருக்கும். அந்த ஐயம் படிப்பவர்களுக்கு (குறிப்பாக தொழில்முனைவோராகும்விருப்பத்துடன் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு) ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்திவிடும் என்பதால் தான் வெறும் 25,000/- ரூபாய் முதலீடாகவைத்திருப்பவர்கள் கூட இந்த விநியோகச் சங்கிலியின் கடைசி வளையமாக தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வரியில்எழுதியிருந்தேன். 

அது எந்தளவுக்கு சாத்தியம் என்று கூட சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். ஆனால் இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும் பொழுது, இந்தசந்தேகத்திற்கான விடை கிடைத்துவிடும். சரி இந்த விநியோகச் சங்கிலியின் முதல் வாய்ப்பில் இணைந்து கொள்ள் 30 கோடி ரூபாய் தேவைஎன்று பார்த்தோம். இதன் அடுத்தடுத்த நிலைகளையும் அதற்கு தேவைப்படும் முதலீடுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

இந்த கிளியரிங் & ஃபார்வேர்டிங் நிலைக்கு அடுத்த படியாக இருக்கும் நிலை இதான் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் எனப்படும், கிட்டத்தட்ட நேரடியாக,விற்பனைக் களத்தில் இறங்கும் தொழில் வாய்ப்பு. இப்பொழுது மார்கெட்டிங் துறையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்துமே, இந்தியசந்தையைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் தவிர்த்து) குறைந்தபட்சம் ஒரு சூப்பர் ஸ்டாக்கிஸ்டையாவதுநியமித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் இது மூன்று அல்லது நான்கு மாநிலங்களுக்கு ஒன்று என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால்இப்பொழுது சந்தை விரிவடைந்திருப்பதால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாகவோ, அல்லது சில கம்பெனிகள் ஒரே மாத்நிலத்திற்குமூன்று எஸ்.எஸ் கள் வரையிலோ நியமித்து பொருள் விநியோக நடைமுறையை மிகவும் விரைவாகச் செய்கிறார்கள்.  


ஆக இந்த பிஸ்கட் கம்பெனிக்கு இந்தியாவைப் பொருத்தவரை குறைந்தது முப்பது முதல் தொண்ணூறு வரையிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள்நியமிக்கப் படுகிறார்கள். நாம் தமிழகத்தில் இருக்கிறோம். இங்கு இந்த கம்பெனிக்கு இரண்டு எஸ்.எஸ். தேவைப்படுவாதாக் வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் ஒன்று சென்னையிலும் மற்றொன்றை மதுரை, திருச்சி அல்லது கோவையில் தான் அந்த கம்பெனி நியமிக்கும்.  

இந்த வரிசையில், தமிழகத்திற்கு கிடைக்கும் முதல் தொழில் வாய்ப்பு இந்த இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் தான். இதன் பிறகு தான்எண்ணிலடங்கா வாய்ப்புகள் வரவிருக்கின்றன. அதாவது இவர்களுக்கு கீழே, தமிழகம் முழுவதும் இந்த பொருளை விநியோகம் செய்யஒவ்வொரு நகரங்கள் வாயிலாக தனித்தனியாகவும், மாநகராட்சிகளைப் பொருத்தவரை நான்கிலிருந்து இருபது வரையிலும்டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனப்படும் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். அப்படிப் பார்த்தால் தமிழகம் முழுமைக்கும் இந்த கம்பெனிக்குகிட்டத்தட்ட 300 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.  


இந்த 300 பேரையும் தூரத்திற்கு தகுந்தாற்போல் இரண்டாகப் பிரித்து, இரண்டு சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளும் இவர்களுக்குப் பொருட்களை சப்ளைசெய்யும் பொருப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் செய்ய வேண்டிய வேலை என்ன? அதையும் கொஞ்சம் தெளிவாகப்பார்த்துவிடுவோம். 

இந்த டிஸ்ட்ரிபியூட்டர்கள் தான் ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் முதுகெலும்பே. அந்த நிறுவனத்தின் சி & எஃப் மற்றும் சூப்பர்ஸ்டாக்கிஸ்டுகள் எல்லோருடைய பணியும் பொருட்களை அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நின்று விடுகின்றது.ஆர்டர் எடுப்பது, பேமெண்ட் பற்றிய கவலை இதுவெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. ஆனால் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரோட வேலைஅப்படிப்பட்டதல்ல. கிட்டத்தட்ட End Users எனப்படும் உபயோகிப்பாளருக்கு முந்திய நிலையிலுள்ள கடைக்காரர்களிடம் பொருளைக் கொண்டுசேர்ப்பது என்ற மிக முக்கியமான பணி அவர்களுடையது. 


உதாரணத்திற்கு, விழுப்புரம் என்ற தமிழ்நாட்டின் ஒரு டிபிகல் நகரத்தை எடுத்துக் கொள்வோம். இந்த விழுப்புரத்திற்கு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர்நியமிக்கப்படுகிறார் என்றால், அவர் விழுப்புரம் நகரம் மற்றும் அதைச் சுற்றி பதினைந்திலிருந்து இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளகிராமங்களிலும் உள்ள பிஸ்கட் வைத்து விற்பனை செய்யக்கூடிய அனைத்து கடைகளுக்கும் இந்த பொருளை விற்பனை செய்து வசூல்செய்துகொள்ள வேண்டியது இவருடைய பொருப்பு. இவருக்கான இந்த ஏரியாவில் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் முதல், சிறிய பெட்டிக்கடைவரையிலான, ஏ, பி, சி, டி எனற நான்கு வகையான கடைகளையும் மொத்தமாகச் சேர்த்து 300 கடைகள் வரை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 300 கடைகளுக்கும் இவர் தான் சப்ளை செய்ய வேண்டும்.


இதில் என்ன சிரமம் இருக்கிறது? எப்படி அந்த விநியோகஸ்தர் இந்த மார்க்கெட்டிங் கம்பெனியின் முதுகெலும்பாகப் பார்க்கப் படுகிறார்? என்பதுதானே உங்கள் சந்தேகம். ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியின் சி & எஃப் சப்ளை செய்யும் எஸ்.எஸ் ஆகட்டும், அல்லது அந்த எஸ்.எஸ் கள் சப்ளைசெய்யும் நம் டிஸ்ட்ரிபியூட்டர்களாகட்டும், அனைவருமே, இந்த மார்க்கெட்டிங் கம்பெனியால் நியமிக்கப் பட்டிருப்பவர்கள். இந்தப் பொருளின்(பிஸ்கட்) விற்பனையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்த, முதலீடு செய்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்குள்ளே ஆர்டர் எடுப்பது,சப்ளை செய்வது, பணம் வாங்குவது எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் வரைமுறையோடு செயல்படும். அதில் ஓரிருவர் சரியில்லை என்றால்,அந்த மார்க்கெட்டிங் கம்பெனி அவர்களை நெறிப்படுத்திவிடும் அல்லது அவர்களை தூக்கியெரிந்துவிட்டு வேறொருவரை அந்த இடத்தில்நியமித்துவிடும். 


ஆனால் நம்முடைய விநியோகஸ்தர்கள் சப்ளை செய்யும் கடைக்காரர்கள் அதாவது அவர்களுடைய கஸ்டமர்கள் அப்படியல்ல. அவர்கள் இந்தநிறுவனம் தயார் செய்யும் பிஸ்கட்டை தன் கடையில் வைக்க வேண்டாம் என்று நினைத்தால், இதை வாங்க மாட்டார்கள். மற்ற பிராண்டுகளில்உள்ளதை வைத்துக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி விடுவார்கள். இதில் கடைக்காரர்களை கட்டுப்படுத்தவும்வழியிருக்கிறது, அதை சந்தைப்படுத்துதல் (Marketting) பற்றி எழுதும் போது விரிவாக அலசலாம். ஆனாலும் வாடிக்கையாளர்கள் தவிர்த்து,சப்ளையர்கள் அனைவருமே கடைக்காரர்களிடம் அனுசரித்துப் போக வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று தான். 


எனவே நமது விநியோகஸ்தர், தங்களது பிராண்ட் பிஸ்கட்டுகளை இந்த 300 கடைகளிலும் வைப்பதற்குள் (Placement) தாவு தீர்ந்துவிடும்.முதலில் இரண்டு மூன்று முறை அலையவிட்டு, அதன் பிறகும் விடாது கருப்பாக தொடர்ந்து வந்தால், சரி.. வைத்து விட்டுப் போங்கள்,விற்றால் காசு இல்லையென்றால் சரக்கை திரும்ப எடுத்துக்கனும் ஓக்கேவா? என்று ஒற்றை வரியில் கேள்வி வரும். இதற்காகவே தவம்கிடந்தது போன்று நம் 'விநி' யும் சரிங்ணா..! என்று பவ்யம் காட்டி சரக்கை அந்தக் கடையில் அடுக்கிவிடுவார். இப்படியே தொடர்ந்து சென்று ஒரு150 கடைகளில் பிளேஸ்மெண்ட் வாங்கிவிட்டாலே, ஓரளவிற்கு இந்த துறையில் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார் என்று தான்அர்த்தம். 


நாம் ஏற்கனவே கூறியிருந்த படி இந்த மார்க்கெட்டிங் கம்பெனி நம் பிஸ்கட்டை ஓரளவிற்கு விளம்பரங்களின் மூலம் பிரபலமாக்கி,உபயோகிப்பாளர்களில் சிலரை ஒரு முறையேனும் வாங்கி உபயோகிக்கும் மனநிலைக்கு கொண்டு வந்திருந்தும், கடைகளில் பிளேஸ்மெண்ட்வாங்க, மார்க்கெட்டிங் கம்பெனியின் விற்பனை பிரதிநிதிகளும், நம் விநியோகஸ்தரும், தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும்.  


இந்த விற்பனை செய்வதின் சிரமங்களைக் கூட, அந்த மார்க்கெட்டிங் கம்பெனியும் அதன் விற்பனை பிரதிநிதிகளும் பொறுப்பெடுத்துக் கொண்டுசெய்து கொடுப்பார்கள். அது அவர்களுடைய கடமையும் கூட. ஆனால் பொருட்களை கடைகளுக்கு கொடுத்து, அதற்கான பணத்தை வசூல்செய்து, 300 கடைகளுக்கும் தேவையான சரக்குகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருந்து... இந்த சுழற்சி விட்டுப் போகாமல் சுழலச் செய்வதுதான் நம்முடைய விநியோகஸ்தர் என்ற தொழில் முனைவோருக்கான பொருப்பு. 


ஒரு பெட்டிக் கடையில் 50 ரூபாய்க்கு பொருளை சப்ளை செய்துவிட்டு, அதை பத்து பத்து ரூபாயாக வசூல் செய்வதற்குள்.... அடுத்த 50 ரூபாய்க்கு அந்த கடைக்காரர் ஆர்டர் கொடுத்து விடுவார். சரி இவ்வளவு மோசமாக பேமெண்ட் செய்யும் இந்த கடையை விட்டு விடலாம் என்றால், அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த பிஸ்கட் கிடைக்காமல் போய்விடும். மேலும் இதேப்போன்று பிரச்சினைகள் உள்ள கடைகளை எல்லாம் தவிர்த்துவிட்டால், சேல்ஸ் பாதித்துவிடும். இப்படி பல சங்கடங்களை சமாளித்து தொழில் செய்யும் நம் விநியோகஸ்தருக்கு முதுகெலும்பு பட்டம் சரி தானே? 


தற்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும், இந்திய சந்தையில் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல் ஆகும் ஒரு பிஸ்கட் கம்பெனிக்கு, தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஆக வேண்டும் என்றால் 50 லட்சமும், அல்லது ஏதாவது ஒரு தமிழக நகரத்திற்கான விநியோக உரிமை பெற்று தொழில்முனைவோராக வேண்டும் என்றால் ரூபாய் பதினைந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தாலே போதும், அவர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு அறையை மட்டும் இதற்காக ஒதுக்கிக் கொண்டு தொழில்முனைவோராகிவிடலாம்! 

ஒரே குழப்பமாக இருக்கிறதே? இவ்வளவு குறைந்த முதலீடு தானா? அதுவும் நம்ப முடியவில்லையே?

சரி இவ்வளவு குறைவான முதலீடு என்றால் லாபம் எவ்வளவு கிடைக்கும்? அந்த லாபத்தில் குறைந்த பட்சம் ஒருவரின் மூன்று வேளை சாப்பாட்டிற்காவது மிஞ்சுமா? என்றெல்லாம் நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.!... நியாயம்தான். ஆனால் இந்த குழப்பங்களும், சந்தேகங்களும் தவிடுபொடியாகி, உற்சாகத்துடன் இந்தத் தொழிலையே செய்யலாமே என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் அடுத்த பாகத்தை படித்து முடித்தவுடன்! 


 அது வரை கொஞ்சம் பொருத்திருங்கள். சில உள் விவகாரங்களைப் பற்றி அலசியதால், இந்த பாகம் சிலருக்கு விறுவிறுப்பாக கூட இல்லாமல் போயிருந்திருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராவதற்கான சவாலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!
கழுகிற்காக(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

8 comments:

எஸ்.கே said...

தொடர் சிறப்பாக செல்கிறது. இன்னும் வியாபரக் கலைச்சொற்களை நன்கு விளக்கினால் மிகவும் புதியவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். நன்றி!

ஜீவன்பென்னி said...

அருமையான சுய முன்னேற்றத்தொடருக்கு நன்றிகள். தொடருங்கள்.

Kousalya Raj said...

அருகில் இருந்து சொல்வது போல் மிக எளிமையாக தொழில் அனுபவம் இல்லாதவர்களுக்கும் சுலபமாக புரியும் விதத்தில் எழுதி இருக்கிறீர்கள் சௌமியன்.

//உற்சாகத்துடன் இந்தத் தொழிலையே செய்யலாமே என்ற மனநிலைக்கு வந்துவிடுவீர்கள் அடுத்த பாகத்தை படித்து முடித்தவுடன்! //

ஆவலுடன் ஆர்வமாக காத்திருக்கிறேன். :))

வேலையில்லா இளைஞர்கள் - அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள ஒரு நல்ல தொடர். என் பாராட்டுகள்.

Unknown said...

விரிவான விளக்கம்... பாராட்டுக்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சேமிக்க வேண்டிய நல்ல விளக்க கட்டுரை..

பயனுள்ள தகவல்கள்..

Anonymous said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

ம்.. கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆர்வமாய்!

RAZIN ABDUL RAHMAN said...

சகோதரரே..
சுய தொழில் துவங்கும் எண்ணம் மனதில் தோன்றியவுடன் வலையில் தேடினேன்,,ஏதேனும் கட்டுரைகள் கிடைக்குமா என்று..

நல்லாவே எழுதி இருக்கிறீர்கள்..

ஆனால் அடுத்தபதிவைத்தான் ரொம்பவும் தாமதப்படுத்துகிறீர்கள்...

சரி,பதிவு எழுதுவதில் உள்ள கஷ்டம் எனக்கும் தெரியும்...இருந்தாலும்,.வாசகனாக ஆர்வப்ப்டுகிறேன்..அவ்வளவே..

சுய தொழில் தொடர்பான புத்தகங்கள் ஏதும் இருக்கிறதா???

கொஞ்சம் சொல்லுங்களேன்..

அன்புடன்
ரஜின்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes